
பாகம் – 41
விக்ரம், சக்தியை அடிக்க சென்றான். சுஜிதா யாரும் எதிர்பார்க்காத வகையில் விக்ரம் கையைப் பிடித்து தடுத்து இருந்தாள்.
விக்ரம் கோபத்தோடு சுஜிதாவை பார்த்தான். சுஜிதா, “அண்ணா ஒரு நிமிஷம் நான் சொல்வதைக் கேளுங்கள்” என்றாள்.
விக்ரம், “இதில் நீ சொல்வதற்கு என்ன இருக்கு. நிலா சொன்ன அனைத்தையும் நீயும் இப்போ கேட்டுக் கிட்டு தானே இருந்த”.
“இவன் எவ்ளோ பெரிய பொறுக்கியா இருந்திருக்கான் என்று பார்த்தியா” என்றான்.
சுஜிதா, “இல்லை அண்ணா எனக்கு என்னமோ சக்தி மேல் தப்பு இருக்கும் என்று தோன்ற வில்லை” என்றாள்.
விக்ரம், “அப்போ நிலா சொல்றது பொய்யின்னு சொல்றியா” என்றான் ஆத்திரத்தோடு.
சுஜிதா, “இல்லை அண்ணா நான் அப்படி சொல்ல வரலை. நிலா சொல்றது எல்லாம் உண்மையாக இருக்கலாம்”.
“ஆனால் சக்தி தப்பு பண்ணி இருப்பான் என்று என்னால் நம்ப முடிய வில்லை”.
“சக்தி எப்பயுமே பொய் சொல்ல மாட்டான். அவன் மேல் தப்பு இருந்தாலும் கூட தப்பை ஒத்துக் கொள்வான் எதுவாக இருந்தாலும் உண்மையை சொல்லி விடுவான்”.
“நான் அவன்கிட்ட இப்போ கேட்கிறேன் கண்டிப்பா அவன் உண்மையை சொல்லுவான்” என்று சக்தியை பார்த்தாள்.
அந்த இடத்தில் சக்தி மனம் கனத்துப் போய் நின்று இருந்தான். இவள் வாழ்க்கையை கெடுத்த என் மேல் இவள் எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறாள்.
ஆனால் நான் தான் இவ்வளவு நாளாக இவளைப் புறிந்துக் கொள்ளாமல் இருந்து விட்டேன் என்று நினைத்து வருந்தினான்.
சுஜிதா, “சக்தி இங்க பாரு உண்மைய சொல்லு அன்னைக்கு என்ன நடந்துச்சு? நீ நிலா ரூம்புக்கு போனியா?” என்றாள்.
சக்தி வேறு சிந்தனையில் இருந்ததால் சுஜிதா கூறிய எதையும் அவன் காதில் வாங்க வில்லை.
சுஜிதா, “மறுபடியும் சக்தி உங்களை தான் ஏதாச்சும் சொல்லுங்க” என்றாள்.
சக்தி, “சத்தியமா நான் அன்னைக்கு அந்த ரூமுக்கு போகவே இல்லை”.
“நிலா கிட்ட நைட்டு பேசிட்டு நான் போயிட்டேன் அதோடு மறுநாள் காலையில் தான் அவளைப் பார்க்க சென்றேன்”.
“ஆனால் அவ என்னைப் பார்த்து பயந்தா அதுக்கான காரணம் கூட தெரியாமல் தான் எனக்கு இவ்வளவு நாளாக அவள் மேல் கோவம் அதிகரித்துக் கொண்டே போனது”.
“ஆனால் இவ்ளோ சீப்பான கேரக்டர் நான் கிடையாது. இந்த மாதிரி எல்லாம் நான் நடந்துக்க மாட்டேன் யார் கிட்டயும்” என்றான்.
விக்ரம், “கோபத்தோடு பொய் சொல்லாத டா நீ கண்டிப்பா போயிருப்ப. நீ தான் ஆரம்பத்தில் இருந்து நிலா பின்னாடி சுத்திக்கிட்டு இருந்த”.
“நானே எத்தனை வாட்டி பார்த்து இருக்கேன். நீ தான் தப்பு பண்ணி இருப்ப” என்று கூறினான்.
சுஜிதா, “அண்ணா நான் சக்திக்கு சப்போர்ட் பண்ணுகிறேன் என்று நினைக்காதீங்க”.
“ஆனால் எனக்குமே நிலா சொல்வதில் நம்பிக்கை இல்லை. சக்தி போயிருக்க வாய்ப்பே இல்லை” என்றாள்.
விக்ரம், “அது எப்படி மா நீ சொல்ற அவன் போயிருக்க மாட்டான் என்று அவன் தான் ஆரம்பத்தில் இருந்தே நிலா பின்னால் சுற்றிக் கொண்டு இருந்தானே”.
“இப்போ மட்டும் அவன் போயிருக்க மாட்டான் என்பதற்கு என்ன நிச்சயம் இருக்கு. இவன் சரியான பிராடு மா”.
“பாரு உன் விருப்பத்தை கேட்காமலே உன்னை கல்யாணம் பண்ணி உன் வாழ்க்கையவே அழிச்சிட்டு நிக்கிறான்”.
“நீ நல்லா படிச்ச பொண்ணு வேலைக்கு போய்கிட்டு இருந்த உனக்கு நல்ல மாப்பிள்ளையா பார்த்து உங்க வீட்ல கல்யாணம் பண்ணி வச்சிருப்பாங்க”.
“ஆனால் இவன் எல்லாத்தையுமே கெடுத்துட்டான் உன் கழுத்தில் தாலி கட்டி” என்றான்.
சுஜிதா, “அண்ணா இப்போ என்னோட கல்யாணம் நடந்தது முக்கியம் இல்லை. அன்னைக்கு நடந்த விஷயம் தான் முக்கியம்”.
“நம்ம முதல்ல அன்னைக்கு என்ன நடத்தது என்று மட்டும் கண்டு பிடிப்போம்”.
“அன்றைக்கு நிலா சக்தி முகத்தையே பார்க்க வில்லை. நிலாவுக்கு சக்தி தான் உள்ளே வந்தான் என்பது நூறு சதவீதம் முழுசா தெரியாது”.
“அவங்க சித்தி பேசியதை வைத்து மட்டும் தான் அந்த சின்ன வயதில் நிலா அவளாகவே யூகித்து புரிந்து கொண்டாள்”.
“இப்போ வரைக்கும் அவள் அதை முழுதாக நம்புகிறாள். சக்தியா இருக்குமோ என்ற சந்தேகம் மட்டும் தான் அவளுக்கு இருந்ததே தவிர அவ எதையுமே பார்த்து முடிவு பண்ண வில்லை” என்றாள்.
கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் விக்ரம், “இங்க பாரு சுஜி உன் புருஷன் என்பதால் நீ வக்காலத்து வாங்க வந்துட்டியா”.
“அன்னைக்கு என்கிட்ட கல்யாணத்தை நிறுத்த சொல்லி உன் பிரண்டுக்காக அவ்வளவு தூரம் சண்டை போட்டுக்கிட்டு இருந்த”
“ஆனால் இன்னைக்கு உன் பிரண்டா அல்லது புருஷனா என்று வந்ததும் புருஷன் தான் முக்கியம் என்று தோணுதா உனக்கு” என்றான்.
சுஜிதா, “அண்ணா வார்த்தைகளை விடாதீங்க. சக்தி என்னோட புருஷன் என்பதற்காக மட்டும் நான் இப்போ அவனுக்கு சப்போர்ட் பண்ண வில்லை”.
“அவன் கூட நான் ஒரு மாதம் இருந்து இருக்கேன் அந்த வீட்டில். அதை வைத்து தான் அவனுடைய கேரக்டரை நான் இப்ப ஜட்ஜ் பண்ணி சொன்னேன்”.
“கண்டிப்பா அந்த இடத்தில அவன் இருந்திருக்க மாட்டான் என்று” என்றாள்.
விக்ரம், “நீ சொல்வது நம்புகின்ற மாதிரியே இல்லையே. உன் புருஷனை காப்பாற்றுவதற்காக நீ சொல்கின்ற மாதிரி தான் எனக்கு தோன்றுது”.
“நீ மட்டும் இந்த இடத்தில் இல்லை என்றால் கண்டிப்பாக இவன் முகத்தை அடித்து அவன் பற்களை எல்லாம் பேத்து இருப்பேன்” என்றான் அவன் பற்களை கடித்த கொண்டு.
சுஜிதா, “ஒரு கையை நீட்டி தயவு செஞ்சு மறுபடியும் இதே போலவே சொல்லாதீங்க அண்ணா”.
“நான் ஒன்னும் சப்போர்ட் பண்ண வில்லை. சத்தியமா அவன் எந்த பொண்ணுங்க கிட்டயும் தப்பா நடந்துக்க மாட்டான்”.
“நான் எப்படி இவ்வளவு நம்பிக்கையோடு சொல்கிறேன் என்பது தானே உங்கள் சந்தேகம். அதற்கான காரணம் என்று சில நிமிடம் எதையோ யோசித்து விட்டு”.
“எங்களுக்கு கல்யாணம் ஆகி இந்த ஒரு மாசத்தில் அவரோட சுண்டி விரல் கூட என் மேல் பட்டது கிடையாது”.
“அவன் நிஜமாகவே ஒரு பொம்பள பொறுக்கியா இருந்து இருந்தால். அவன் நினைத்து இருந்தால் என்னிடம் எப்படி வேண்டும் என்றாலும் நடந்து கொண்டு இருக்கலாம்”.
“ஆனால் இந்த நிமிஷம் வரைக்கும் அவன் என்கிட்ட ஒரு செகண்ட் கூட தப்பான பார்வை பார்த்தது கிடையாது”.
“தப்பா நடந்துக்க முயற்சி பண்ணது கிடையாது. எனக்கு தெரியும் அண்ணா சக்தியை பற்றி” என்று சக்தியை பார்த்துக் கொண்டே அனைத்தையும் கூறினால்.
சக்தி அங்கு நடந்து கொண்டு இருக்கும் கலவரத்தையே மறந்து சுஜிதாவை பார்த்துக் கொண்டு இருந்தான்.
அந்த நிமிஷம் அவன் மனதில் என்ன ஓடியது என்பது அவனுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.
சுஜிதா கூறிய பதிலுக்கு விக்ரமால் எதுவும் பேச முடிய வில்லை. சுஜிதா கூறியதற்கு என்ன கூறுவது என்று தெரியாமல் விக்ரம் நின்றிருந்தான்.
நிலா ஒரு புறம் சோகமாக நின்றிருந்தாள். விக்ரம் நிலா கழுத்து வளைவில் கை போட்டு, “இனிமே நீ எதுக்கும் பயப்பட கூடாது”.
“உனக்காக நான் இருக்கிறேன்” என்று ஆறுதலாக அவளிடம் பேசினான்.
சுஜிதா, “அண்ணா இது என்ன விஷயம் என்று சக்தியோட அக்கா கிட்ட கேட்டால் மட்டும் தான் உண்மை தெரியும்”.
“இப்போ இங்க பங்க்ஷன் நடந்துக்கிட்டு இருக்கு. அதனால் இன்னைக்கு வேண்டாம். நாளைக்கு நீங்க எங்க வீட்டுக்கு வாங்க அங்க வச்சு பேசிக்கலாம்” என்றாள்.
விக்ரம், “எனக்கு அவ்ளோ பொறுமை எல்லாம் கிடையாது. எனக்கு இப்பவே தெரிந்து ஆகணும்”.
“அவன் யார் என்று கண்டுபிடித்து அவன் மொகரைய பேக்குற வரைக்கும் என் கோபம் அடங்காது” என்றான்.
சக்தியை ஜாடையாக பார்த்த படி. விக்ரம் மனதில் ஆழமாக சக்தியாக மட்டும் தான் இருக்க முடியும் என்று நம்பிக் கொண்டு இருந்தான்.
விக்ரம், “சரி நான் உன்கிட்ட ஒன்னு மட்டும் கேக்கிறேன். நீ சக்திக்காக இவ்வளவு தூரம் பேசிக்கிட்டு இருக்க”.
“ஆனால் அவன் வாயைத் திறந்து நான் அதைப் பண்ண வில்லை என்று ஒரு வார்த்தை சொன்னான்னா”.
“நீ தான் அவனுக்காக பேசிக்கிட்டு இருக்க. ஒரு வார்த்தை கூட அவன் வாயில் இருந்து வரவே இல்லை”.
“அப்படி இருக்கும் போது அவன் பண்ணாமல் இருந்து இருப்பான் என்ற நம்பிக்கை எனக்கு எப்படி வரும்” என்றான் மறுபடியும்.
சுஜிதா, “அண்ணா அவன் எந்த தப்பும் செய்து இருக்க மாட்டான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு”.
“ஆனால் அவன் மேல் தப்பு இருந்தால் கண்டிப்பா நான் அவனுக்கு சப்போர்ட் பண்ண மாட்டேன்”.
“எனக்கு அவன் பண்ணி இருக்க மாட்டான் என்ற கான்பிடன்ட் இருக்கு அதுக்காக மட்டும் தான் அவன் பக்கம் நான் நிற்கிறேன்”.
“அவங்க அக்கா கிட்ட கேட்டுட்டு அதுக்கப்புறம் இந்த பிரச்சனை பற்றி பேசி ஒரு முடிவுக்கு வரலாம் வேற வழி இல்லை அண்ணா”.
“நீங்க வெயிட் பண்ணித் தான் ஆகணும் நாளைக்கு தான் பேச முடியும். புரிஞ்சுக்கோங்க ப்ளீஸ்” என்றாள்.
விக்ரம் கையைப் பிடித்த நிலா, “கொஞ்சம் அமைதியா இருங்க அதான் சுஜி இவ்வளவு தூரம் சொல்றா இல்ல நம்ம நாளைக்கு பேசிக்கலாம்” என்றாள்.
விக்ரம் கோபமாக நிலா முகத்தை திரும்பி பார்த்தவன் எதுவும் கூறாமல் நிலா கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்று விட்டான்.
வீட்டிற்குள் சென்ற நிலா முகத்தை கழுவி விட்டு அனைவர் முன்பும் எந்த கவலையும் முகத்தில் தெரியாத வண்ணம் சிரித்த முகமாகவே இருந்தாள்.
இவர்களை நோக்கி ஓடி வந்த ஆதித்யா, “அண்ணா வா பங்க்ஷனை என்ஜாய் பண்ணலாம்”.
“இங்க பாரு வயசானவங்க எல்லாம் மூளைக்கு மூளை உட்கார்ந்து கதை பேசிக்கிட்டு இருக்காங்க”.
“இப்படி எல்லாம் இருந்தால் பங்ஷன் மாதிரியா இருக்கு. பாட்டு போட்டு டான்ஸ் ஆடினாள் தானே ஜாலியாக இருக்கும். வா டான்ஸ் ஆடலாம்” என்று அழைத்தான்.
விக்ரம், “நீங்க போய் ஆடுங்க எனக்கு மைன்ட் இல்லை” என்றான் மெதுவான குரலில்.
ஆதித்யா மறுபடியும் விக்ரம் கையை பிடித்து இழுக்க விக்ரம் கோபமாக கையை உதறிவிட்டான்.
விக்ரம், “ஒரு வாட்டி சொன்னால் புரியாதா உனக்கு. நான் தான் வரவில்லை என்று சொல்கிறேன் இல்ல” என்றான் சத்தமாக.
அதில் அனைவரும் இவர்களை திரும்பிப் பார்க்க ஆதித்யா எதுவும் கூறாமல் அங்கிருந்து நகர்ந்து விட்டான்.
சட்டென்று விக்ரம் இப்படி அனைவர் முன்பும் பேசியதால் இந்த சூழலை எப்படி கையாள்வது என்று தெரியாமல் நிலா விழித்துக் கொண்டு இருந்தாள்.
நிலா அருகில் சென்ற மித்ரா, “அண்ணி என்ன ஆச்சு அண்ணா ஏன் கோவமா இருக்காரு? ஆபீஸ் ல ஏதாவது பிரச்சனையா” என்றாள்.
நிலா, “ஆமா அதான் கொஞ்சம் கோவமா இருக்காங்க” என்றாள்.
ராதிகா, கோவமாக விக்ரமை பார்த்து “ஆதித்யா அப்படி என்ன தப்பா கேட்டுட்டான் என்று எல்லார் முன்னாடியும் இப்படி ஆதித்யாவை அவமானப் படுத்தி இருக்க” என்றார்.

