Loading

பாகம் – 40

பிறகு சுஜிதா வீட்டிற்குள் சென்று விட்டால். சக்தி குழப்பத்துடன் அங்கேயே கார்டனில் அமர்ந்து விட்டான். 

சுஜிதா சொன்ன அனைத்தையும் மண்டைக்குள் அசை போட்டுக் கொண்டு இருந்தான் சக்தி. 

அப்போது தான் சக்திக்கு அன்றைய இரவில் நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது.  

சக்தி மனதிற்குள் நிலா என்கிட்ட அன்னைக்கு பேசும் போது கூட எனக்கு ரொம்ப பயமா இருக்கு என்னோட அம்மாவை பாக்கணும் போல் இருக்கு என்று கூறினால்.  

ஆனால் பக்கத்தில் இன்னொரு வார்த்தையும் சொல்லி பாக்கணும் போல் இருக்கு என்றும் அவள் அப்பொழுது கூறி இருந்தால்.

ஒரு வேலை இவன் பெயரை தான் கூறி இருப்பாலோ? என்று சிந்தித்தவன் இல்லை இருக்காது. 

இவன் பெயர் விக்ரம் தானே அவள் வேறு ஏதோ ஒரு பெயரை தான் அன்னைக்கு சொல்லி இருந்தால்.

இருட்டில் என் முகம் தெரியாமல் என்னை கூட முதலில் வேறு ஏதோ ஒரு பெயர் தான் சொல்ல வந்துட்டியா என்று கேட்டால்.

அதுக்கு அப்புறம் தான் நான் சக்தி என்று சொன்னேன். பிறகு அவள் எதுவும் பேசாமல் சிறிது நேரம் கழித்து எனக்கு ரொம்ப பயமா இருக்கு சக்தி மாமா என்று அழுதால்.

இதன் பிறகு தான் நான் அவளுக்கு ஆறுதல் கூறினேன். இவன் பெயரை தான் கூறி இருப்பாலோ. 

ஆனால் இவன் பெயர் விக்ரம் ஆச்சே என்று அவனே குழப்பிக் கொண்டு இருந்தான்.

வீட்டிற்குள் நிலா மற்றும் விக்ரம் சிரித்து பேசிக் கொண்டு இருந்தார்கள். 

அதை பார்த்த சுஜிதாவுக்கு இப்பொழுது சக்தியை பற்றி நிலாவிடம் கேட்டால் அவள் முகம் கண்டிப்பாக வாடி விடும். 

அவள் சந்தோஷத்தை நாம் கேட்க வேண்டுமா? என்று யோசித்தால். ஆனால் வேறு வழி இல்லையே. 

இப்போ நான் கேட்டால் தான் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கிடைக்கும் என்று யோசித்து நிலாவை நோக்கி சென்றாள்.

சுஜிதா, “நிலா உன் கிட்ட நான் கொஞ்சம் தனியா பேசணும்” என்றாள்.

விக்ரம், கிண்டலாக “என்னம்மா நான் இல்லாமல் சீக்ரெட் பேச போறீங்களா?” என்றான். 

சுஜிதா சிரித்த முகமாக, “அப்படி எல்லாம் இல்லை அண்ணா. நான் சும்மா பேசலாம் என்று தான் கூப்பிட்டேன்” என்றாள். 

பிறகு விக்ரம், “சரி சரி உங்க பிரண்ட்ஷிப் குள்ள நிறைய இருக்கும். நான் எதுலையும் தலையிட மாட்டேன் நீங்க பேசுங்க” என்று அங்கிருந்து சென்று விட்டான்.

சுஜிதா, நிலாவை அழைத்துக் கொண்டு வெளியில் இருக்கும் கார்டனுக்கு சென்றாள். 

வழியில் ஓடிவந்த மித்ரா, “அண்ணி ஒரு நிமிஷம் போட்டோஸ் எடுத்துக்கலாம்” என்று மறுபடியும் உள்ளயே அழைத்துச் சென்றாள்.

சுஜிதா இவ வேற நேரம் காலம் தெரியாமல் என்று நினைத்தவள் சிரித்த முகமாகவே அவளும் சென்றாள். 

பிறகு நிலா புகைப்படம் எல்லாம் எடுத்து முடித்த பின் சுஜிதா வெளியில் தோட்டத்திற்கு நிலாவை குட்டிச் சென்றாள்.

நிலா, “என்ன டி உள்ள கெஸ்ட் எல்லாம் இருக்காங்க நீ இப்படி என்னை வெளியே கூட்டிட்டு வந்து இருக்க என்ன விஷயம் சொல்லு?” என்றாள்.

சுஜிதா, “நான் உன்கிட்ட ஒன்னு கேட்பேன். நீ அப்செட் ஆக கூடாது” என்றாள். நிலா, “அப்படி என்ன டி கேட்க போற” என்றாள்.

சுஜிதா, “அது வந்து உன்னோட சின்ன வயசு கதை தான்” என்று வார்த்தைகளை ஒன்றோடு ஒன்று கோர்த்துக் கொண்டு இருந்தாள்.

நிலா, “உனக்கு தெரியாதது என்ன கதை இருக்கு. இப்போ ரொம்ப முக்கியமா சின்ன வயசு கதை இந்த நேரத்தில் எல்லாரும் இருக்கும் பொழுது” என்றாள்.

சுஜிதா, “ஆமாம் டி கொஞ்சம் முக்கியம் தான் என் வாழ்க்கைக்கு” என்றாள்.

நிலா புரியாமல் அவளைப் பார்த்து, “உன் வாழ்க்கைக்கு என்னோட கதை எப்படி டி முக்கியமாக இருக்கும்”. 

“சரி என்னமோ சொல்ற எதுவா இருந்தாலும் கேளு நான் சொல்கிறேன்” என்றாள்.

சுஜிதா, “நீ சக்தியை பார்த்து எப்போதும் ஏன் பயப்படுற?” என்றாள்.

நிலா, “அது வந்து எனக்கு அப்படியே பழகிடுச்சு டி சின்ன வயசில் இருந்து” என்றாள்.

சுஜிதா, “சும்மா கதை எல்லாம் சொல்லாத டி உண்மையை மட்டும் சொல்லு”. 

“நான் இப்போ கூட உன்னை வீட்டுக்குள்ள பார்த்தேன் சக்தி உள்ள வந்த உடனே நீ விக்ரம் அண்ணா பின்னாடி போய் ஒளிந்து கிட்ட”. 

“அப்புறம் மாடிக்கு போயிட்ட. அதுக்கு அப்புறம் நீ ஃபங்ஷனுக்கு தயாராகி கீழே வரும் போதும்”.

“விக்ரம் அண்ணா உனக்கு தாலி கட்டும் பொழுதும் சக்தி உன்னை பார்த்து முறைத்துக் கொண்டு இருந்தார்”. 

“அப்பயும் நீ பயந்து விக்ரம் அண்ணன் கையை புடிச்சுகிட்டு தான் இருந்த” என்றாள்.

நிலா, “நீ நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்லை டி”. 

“அதுக்கு எந்த கதையும் இல்லை. நான் சின்ன வயசுல இருந்தே சக்தி மாமாவை பார்த்தா கொஞ்சம் பயப்படுவேன்”. 

“அது தான் உனக்கே தெரியுமே அவங்க என் பின்னாடி சுற்றுவதால் எனக்கு அவங்களை பார்த்தால் கொஞ்சம் பயம் அவ்வளவுதான்” என்று மறுபடியும் உண்மையை கூறாமல் மழுப்பினால். 

அதில் கோபம் அடைந்த சுஜிதா, “இப்போ நீ உண்மையை சொல்ல போறியா இல்லையா. உன் கையில் தான் இருக்கு என்னோட வாழ்க்கை” என்றாள். 

நிலா மனதுக்குள் உன் புருஷனை பற்றி உன்னிடம் எப்படி நான் தப்பாக சொல்ல முடியும். நான் சொன்னால் அது உன்னோட வாழ்க்கையை தானே பாதிக்கும். 

உன் வாழ்க்கையை நான் எப்படி அழிக்க பார்ப்பேன். நீ சக்தி மாமாவை காதலிக்கிற என்று எனக்கு தான் தெரியுமே. 

என்னிடம் நீ அவ்வளவு ஆசையா சொன்னியே டி அவங்க மேல் இருக்க காதலை பற்றி. 

அப்படி இருக்கும் போது அந்த காதலை நான் எப்படி கெடுப்பேன் என்று நினைத்து எதுவும் கூறாமல் மௌனமாகவே குனிந்த தலையோடு நின்றிருந்தால்.

அங்கு கார்டனில் மறு புறம் அமர்ந்து பலமாக சிந்தித்துக் கொண்டு இருந்த சக்தி இவள் சொல்வதை பார்த்தால் வேறு ஏதோ இருக்கும் போலையே. 

நிஜமாகவே நிலா இந்த விக்ரமை தான் காதலிச்சாளா. நம்ப தான் தேவையில்லாம அவளை இத்தனை வருடமாக கஷ்டப் படுத்திக் கொண்டு இருந்தோமோ என்று யோசித்தான். 

சுஜிதா மற்றும் நிலா ஏதோ பேசிக் கொண்டு இருப்பதை தூரத்தில் இருந்து பார்த்த சக்தி அவர்கள் அருகில் சென்று ஒரு செடியின் பின்பு மறைந்த படி நிலா கூறுவதை கேட்டுக் கொண்டு இருந்தான். 

நிலா இப்படி மழுப்பி பேசியதில் சக்திக்கு மறுபடியும் சந்தேகத்தை தூண்டியது.

கோபத்தோடு சுஜாதா அருகில் வந்து நின்ற சக்தி, “என்ன சுஜி என்னமோ உன் தோழி நல்லவ அப்படின்னு சொன்னியே பார்த்தியா இப்போ”.

“அவ மேல் தான் தப்பு இருக்கு. அதனால் தான் அவ எந்த பதிலும் கூறாமல் இப்படி மழுப்பிக்கிட்டு இருக்கா”. 

“நான் சொன்ன மாதிரி அவ காசுக்காக மட்டும் தான் இந்த விக்ரமை கல்யாணம் பண்ணிக் கொண்டாள்”.

“என்னிடம் காசு இல்லை என்பதால் மட்டும் தான் இவள் என்னை கல்யாணம் பண்ண வில்லை” என்றான்.  

விக்ரம் இவர்களைத் தேடிக் கொண்டு வெளியே வந்தவன் சக்தி சத்தமாக கத்துவதைப் பார்த்து கோபமாக அங்கு சென்றான்.

நிலா கர்ஜனையாக, “போதும் நிறுத்துங்க. நான் ஒன்றும் காசு பணத்துக்கு ஆசைப்படுறவள் கிடையாது”.  

“நான் உண்மையாகவே என்னோட துருவ் ஐ காதலிச்சு தான் நான் கல்யாணம் பண்ணேன்” என்றவுடன் சக்தி சட்டென்று வாயை மூடி கொண்டான்.

விக்ரம், நிலா கத்தி பேசியதை பார்த்து அவர்களிடம் செல்லாமல் தூரத்தில் இருந்து அவர்கள் பேசுவதை பார்த்துக் கொண்டு இருந்தான்.

சுஜிதா, “இப்போ நீ மட்டும் இப்படி அமைதியாகவே இருந்தாள் என்னை தவிர எல்லாருமே உன்னை தான் தப்பா பேசுவாங்க. தயவு செஞ்சு உண்மையை சொல்லு டி” என்றாள்.

நிலா கண்கள் கலங்கிய வாறு சுஜிதாவை நிமிர்ந்து பார்த்து, “அன்னைக்கு நைட்டு நான் அழுதுகிட்டு இருக்கும் போது சக்தி மாமா அந்த இருட்டு அறைக்கு வந்தாங்க”. 

“நிலா நீ பயப்படாத பக்கத்து அறையில் தான் நான் இருக்கேன் என்று சொல்லிட்டு போனாங்க”. 

“அந்த நாள் வரைக்கும் சக்தி மாமா என்னை ரொம்ப வேலை வாங்குவாங்க. மிரட்டுவாங்களே தவிர என் மேல் தப்பா கை வச்சது கிடையாது”. 

“ஆனா அன்னைக்கு ராத்திரி என்கிட்ட நல்லவன் மாதிரி பேசிட்டு போற மாதிரி போயிட்டு திரும்ப அஞ்சு நிமிஷத்துல அந்த ரூமுக்கு வந்தாங்க”. 

“என்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணாங்க என் டிரஸ் எல்லாம் கிழிச்சிட்டாங்க”. 

“நான் கத்தி அழும்போது என் வாயில் கை வச்சு அழுத்தினாங்க கத்த விடாமல்”.

“ஆனால் கடவுள் புண்ணியத்துல அந்த இடத்துக்கு ஜெயா சித்தி வந்தாங்க”. 

“அப்போ ஜெயா சித்தி டேய் என்னடா பண்ணிட்டு இருக்க? அப்படின்னு குரல் கொடுத்தாங்க”. 

“அந்த குரலிலே நான் கண்டுபிடிச்சிட்டேன் அது ஜெயா சித்தி தான் என்று அதற்கு அப்புறம் தான் எனக்கு கொஞ்சம் தைரியமே வந்துச்சு” என்றாள். 

சுஜிதா, “சரி அது எல்லாம் இருட்டு அறையில் தானே நடந்துச்சு நீ எப்படி கண்டுபிடிச்ச அது சக்தி தான் சொல்லிட்டு” என்று கேள்வி எழுப்பினாள்.

நிலா, “எனக்கும் முகம் தெரிய வில்லை ஃபுல் இருட்டில் தான் இருந்தேன்”. 

“ஆனால் ஜெயா சித்தி பேசியதை வைத்து தான் சக்தி மாமாவா இருக்கும் என்று நான் கண்டுபிடித்தேன்” என்றாள்.

சுஜிதா, “உன் சித்தி என்ன சொன்னாங்க? தெளிவா சொல்லு டி” என்றாள் பதட்டமாக.

நிலா, “ஜெயா சித்தி டேய் எத்தனை வாட்டி நான் சொல்லி இருக்கேன் அவ பின்னாடி சுத்தாத என்று மரியாதையா இங்க இருந்து போயிடு”. 

“இல்லை என்றால் உன்னை இங்க இருந்து அனுப்பி விட்டுடுவேன்” என்று சொன்னாங்க”.

“சக்தி மாமா தான் ஊரில் இருந்து அங்க வந்திருந்தாங்க. அப்போ சக்தி மாமாவை தான் கண்டிப்பா சித்தி சொல்லி இருக்கணும்”. 

“அதை வைத்து தான் சக்தி மாமா தான் என்று சொல்லி நான் கன்ஃபார்ம் பண்ணிக்கிட்டேன்” என்றாள்.

சுஜிதா, சக்தியை திரும்பிப் பார்த்தாள். சக்தி புதிதாக கேட்பது போல் கேட்டுக் கொண்டு புரியாத பார்வை பார்த்தான்.

விக்ரம் கோபத்தோடு சக்தியை அடிக்க கை ஓங்கிக் கொண்டு அங்கு வந்தான்.

யாரும் எதிர்பார்க்காத வண்ணம் விக்ரம், சக்தி காலரை பிடித்து “எவ்வளவு தைரியம் இருந்தால் என் நிலா கிட்ட தப்பா நடந்துக் பார்த்து இருப்ப” என்று அவன் கன்னத்தில் அடிக்க சென்றான். 

அதே சமயம் சக்திக்கு பின்னால் நின்று இருந்த சுஜிதா சட்டென்று விக்ரம் கையை எட்டிப் பிடித்தாள் அடிக்க விடாமல்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்