
பாகம் – 39
ஆதித்யா, “அண்ணி அவளை விட்டா இப்படி தான் பேசிக்கிட்டே இருப்பா. நீங்க வாங்க நம்ப கீழே போகலாம்”.
“அம்மா உங்களை கூட்டிக் கிட்டு வர சொன்னாங்க. அதுக்கு தான் எங்க இரண்டு பேரையுமே அனுப்பி வச்சாங்க” என்றான்.
மித்ரா, “நான் ஒன்னும் ஓவரா எல்லாம் பேச மாட்டேன் கொஞ்சமா தான் பேசுவேன்” என்று ஆதித்யாவை பார்த்து முறைத்தாள்.
நிலா கைக்குள் தன் கையைக் கோர்த்துக் கொண்டு மித்ரா, “வாங்க அண்ணி இப்போ நம்ம போகலாம்” என்றாள்.
நிலா சரி என்று இவர்களுடன் சென்று படிக்கட்டில் கீழே இறங்கினால். அனைவரின் கண்களும் நிலா மேல் இருந்தது.
ஆதித்யா இவர்களுக்கு பின்னால் நடந்து வந்தான். மித்ரா ஆதித்யாவை கண்களால் கிட்டே அழைத்தால்.
ஆதித்யா, “என்ன டி” என்றான் கிசுகிசுபாக. மித்ரா, “டேய் பார்த்தியா நான் அப்போவே உன்கிட்ட என்ன சொன்னேன்”.
“நான் இன்னைக்கு ரொம்ப அழகா கிளம்பி இருக்கேன்னு சொன்னேன் இல்ல”.
“இப்போ பாரு எல்லாரும் என்னையவே பார்த்துட்டு இருக்காங்க. எப்படியோ அம்மாகிட்ட என்ன பொண்ணு கேட்பாங்க”.
“கண்டிப்பா எல்லாரும் வருவாங்க என் அழகை பார்த்துட்டு. அப்புறம் எனக்கும் சீக்கிரமே கல்யாணம் ஆகிவிடும்” என்றாள் வெட்கத்தோடு.
ஆதித்யா அனைவரையும் சுற்றிப் பார்த்தவன், “ஆமாண்டி அங்க பாரேன் நம்ப அண்ணா கூட உன்னை தான் பார்க்கிறார்” என்றான்.
மித்ரா, “அட ஆமா டா அண்ணா கூட என்னை தான் பார்க்கிறார்” என்றாள்.
ஆதித்யா, “இது சரி இல்லையே ஒரு நிமிஷம் நீ இங்க வா” என்றான்.
மித்ரா அவன் ஏதோ சொல்வதற்காக கூப்பிடுகிறான் என்று என்னி நிலாவிடம் இருந்து பிரிந்து ஒரு படி மேலே சென்றாள்.
மித்ரா, ஆதித்யா அருகில் சென்றவுடன் ஆதித்யா சத்தமாகவே சிரித்து விட்டான்.
மித்ரா, “எதுக்கு டா இப்போ சிரிக்கிற? என்ன சொல்லு?” என்றாள். ஆதித்யா, “இப்போ எல்லாரையும் பாரேன்” என்றான்.
மித்ரா அனைவரையும் திரும்பி பார்த்தாள் அனைவரின் பார்வையும் நிலா மேலேயே நிலைத்து நின்றது.
ஆதித்யா அவள் தலையில் கொட்டியவன், “பைத்தியமே எல்லாரும் உன்னை பார்க்கல பக்கத்துல இருக்க நம்ப அண்ணிய பார்த்து இருக்காங்க கண்ண நல்லா திறந்து பாரு” என்றான்.
இப்பொழுது அவள் அனைவரையும் பார்க்க அனைவரும் நிலாவை பார்ப்பது போலவே தோன்றியது.
குழப்பமாக மித்ரா, “இல்ல டா முதல்ல எல்லாரும் என்னை தான் பார்த்தாங்க. ஆனா இப்போ தான் எல்லாரும் அண்ணியை பார்க்கிற மாதிரி தெரியுது” என்றாள்.
ஆதித்யா, “நல்லா தெரியுது இப்போ உனக்கு கண்ணாடி தான் வாங்கி போடணும்” என்று அவளை நகைத்தான். விக்ரம், நிலா முகத்தையே இவ்வளவு நேரம் பார்த்தவன்.
அவளை முழுதாக பார்த்தவுடன் அந்த புடவை அவளுக்கு மிகவும் பொருத்தமாகவும் அழகாகவும் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டான்.
பிறகு அவள் கழுத்தில் இருக்கும் நகைகளை எல்லாம் பார்த்தவுடன் கண்கள் கலங்கினான்.
அவன் கண்களுக்கு இப்பொழுது நிலாவை பார்க்க அவன் அம்மா வருவது போலவே தோன்றியது.
யாருக்கும் தெரியாமல் தன்னை சமன் செய்தவன். அனைவரும் இருக்கிறார்கள் என்பதை கூட பொருட் படுத்தாமல் நிலாவை கட்டி அணைத்தான்.
நிலா, “அச்சச்சோ எல்லாரும் பார்க்குறாங்க எல்லாரும் பாக்குறாங்க” என்றாள்.
விக்ரம் அதை எல்லாம் காதிலே வாங்க வில்லை. பிறகு நிலா, “துருவ் என்ன பண்ற எல்லாரும் நம்மளையே பார்க்கிறாங்க” என்றாள்.
துருவ் என்ற வார்த்தையில் தான் தன்னை சரி செய்து கொண்டு அவளிடம் இருந்து பிரிந்து நின்றான்.
ஆதித்யா, “அண்ணா போதும் டா. இது பப்ளிக் பப்ளிக்” என்று கிண்டல் செய்தான்.
நிலாவுக்கு ஒன்றும் புரிய வில்லை. அனைவரின் முன்பும் ஏன் இவன் இவ்வாறு நடந்துக் கொள்வத என்று நினைத்தாலும் ஒரு விஷயமாகவே அவளுக்கு தெரியவில்லை.
அவள் தான் ஏற்கனவே சக்தியை கண்டு பயத்தில் இருக்கிறாளே இதை எல்லாம் எங்கிருந்து அவள் கவனிப்பது.
ராஜலட்சுமி, “சரி சரி வாங்க ஃபங்ஷனை ஆரம்பிக்கலாம்” என்று நிலாவை அழைத்துச் சென்று அமர வைத்து பக்கத்தில் விக்ரமையும் அமர வைத்தார்.
இருவருக்கும் மஞ்சள் பூசி தாலி சரடை ராஜலட்சுமி அணிவிக்க சென்றார்.
விக்ரம், “அம்மா” என்று அழைத்தான். ராஜலட்சுமி, “என்ன?” என்றார்.
விக்ரம், “அம்மா நிலாவுக்கு நானே தாலியை போட்டு விடவா” என்றான்.
ராஜலட்சுமி இன் முகமாகவே அவனிடம் தாலியை கொடுத்துவிட்டு ஓரமாக வந்து நின்று கொண்டார்.
பிறகு அவன் நிலா கழுத்தில் தாலியை அணிவித்து அவள் நெற்றியில் முத்தத்தையும் கொடுத்தான்.
இதை பார்த்துக் கொண்டிருந்த சுஜிதா சந்தோஷமாக சிரித்தாள். தன் கணவன் என்ன செய்கிறான் என்று தெரிந்துக் கொள்ள திரும்பி சக்தியை பார்த்தாள்.
அவன் கோபமாக நிலாவை முறைத்துக் கொண்டு இருந்தான்.
சட்டென்ற நிலாவை திரும்பிப் பார்த்தவள் நிலா இவன் முறைப்பதை பார்த்து பயத்தில் விக்ரம் கையை இறுக்கிப் பற்றி கொண்டு அமர்ந்திருந்தால்.
சுஜிதா, “ஒரு நிமிஷம் என் கூட வாங்க” என்று சக்தியை வல் கட்டாயமாக இழுத்துக் கொண்டு வெளியே இருக்கும் கார்டனுக்கு சென்றாள்.
சக்தி கோவமான முகத்துடன், “இப்போ எதுக்கு டி என்னை இங்கே இழுத்துக் கிட்டு வந்த? என்ன விஷயம்?” என்றான்.
சுஜிதா, “இப்போ எதுக்கு நீங்க கோவமா இருக்கீங்க?. அதை முதலில் சொல்லுங்க” என்றாள்.
சக்தி, “அது உனக்கு தேவை இல்லாத விஷயம். நீ என் விஷயத்தில் வராதே” என்றான்.
சுஜிதா, “எது உங்க வாழ்க்கையில் நான் வரக் கூடாதா. அப்போ என் வாழ்க்கையில் மட்டும் என்னை கேட்காமல் என் கழுத்தில் நீங்க தாலி கட்டுனீங்களே உங்களுக்கு யார் அந்த உரிமை கொடுத்தது” என்றாள்.
சக்தி சட்டென்று தடுமாறி போனான், “அது அது வந்து அன்னைக்கு இருந்த சூழ்நிலையில் அப்படி நடந்துக் கிட்டேன்” என்றான்.
சுஜிதா, “போதும் நிறுத்துங்க. சும்மா எப்ப பார்த்தாலும் சூழ்நிலை ஆகிடுச்சு ஆட்டுக்குட்டி ஆகிடுச்சு அப்படின்னு சொல்லிட்டு இருக்கிங்க”.
“என்னை கேட்காமல் என் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய முடிவை நீங்க எடுக்கும் போது”.
“நீங்க ஏன் கோவமா இருக்கீங்க அப்படின்றதை நான் தெரிஞ்சுக்க கூடாதா” என்றாள் இவளும் கோபமாகவே.
சக்தி, “அது வந்து என்று இழுத்தவன் அப்படி என்கிட்ட இல்லாத குணம் என்ன அந்த விக்ரம் கிட்ட இருக்கு”.
“அந்த நிலா அவன் கூட இப்படி சந்தோஷமா வாழ்ந்துகிட்டு இருக்கா? அப்படி அவன் என்ன பண்ணிட்டான் இவளுக்காக?”.
“என்னை விட கொஞ்சம் அதிகமா காசு பணம் வச்சிருக்கான் அவ்வளவு தானே”.
“அப்போ அந்த நிலாவுக்கு காதலோ பாசமோ தேவையில்லை. காசு இருந்துட்டா போதும்”.
“இவ்வளவு சீப்பா நடந்துக்கிட்டா எனக்கு அவளை பார்த்தாலே அருவருப்பா இருக்கு அசிங்கமா இருக்கு”.
“இவள் எல்லாம் ஒரு பொண்ணா. என்கிட்ட காசு தான் வேணும்னு கேட்டு இருந்தால்”.
“நான் அப்போவே நாலு காசை தூக்கி போட்டு இருப்பேனே அவ முகத்து மேல்” என்று வாய்க்கு வந்தபடி எல்லாம் நிலாவை திட்டிக் கொண்டே இருந்தான்.
சுஜிதா, “இப்படி எல்லாம் பேசாதீங்க” என்று சொல்லிக் கொண்டே இருந்தவள்.
ஒரு கட்டத்தில் பலார் என்று சக்தியை அரைந்து விட்டால். அதை சக்தி சற்றும் எதிர்பா ர்க்காததால் அதிர்ச்சியாகி விட்டான்.
சுஜிதா ஒற்றை விரலை நீட்டி அவன் முகத்தருகே, “இன்னொரு வாட்டி நிலாவை பற்றி இப்படி பேசுற வேலை வெச்சுக்காதிங்க”.
“அவளைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு. இந்த மாதிரி எல்லாம் பேசிக் கிட்டு இருக்கீங்க. அவளைப் பற்றி ஒரு விஷயம் தெரியுமா”.
“அவ்வளவு காதலிச்சேன் பாசமா நினைச்சேன் அவளை அழு விடாமல் வாழ்க்கை ஃபுல்லா நான் சந்தோஷமா வச்சுக்கணும்னு நினைச்சேன்”.
“அப்படின்னு கதையா சொல்றீங்களே. ஆனா உங்களுக்கு அவ மேல் நிஜமாவே காதல் தான் இருந்துச்சுன்னு உங்களுக்கு தெரியுமா?”.
“அவ மேல் நீங்க பாவப்பட்டீங்க அவ்வளவுதான் அது காதல் கிடையாது”.
“அவ ஏன் உங்களைப் பார்த்து பயப்படுறான்னு என்னைக்காவது தெரிஞ்சுக்க முயற்சி பண்ணிங்களா”.
“அவ மனசுல என்ன இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா? எதுவுமே தெரியாமல் எப்படி நீங்க அவளை காதலிச்சீங்க”.
“நீங்க காதலிக்கல அவளை மிரட்டிக் கொண்டே தான் இருந்தீங்க அவ்வளவு தான்” என்றாள் இவளும் கோபமாக சண்டைக்கு போவது போல்.
சக்தி, “அதான் இப்போ தெரிஞ்சிருச்சே அவ மனசுல என்ன இருந்துச்சு என்று மனசுல காசு பணம் மட்டும் தான் இருந்திருக்கு”.
“அது விக்ரம் கிட்ட இருக்கு தெரிஞ்சதும்” என்று பேசும் போதே சுஜிதா மறுபடியும் அவன் கன்னத்தில் பளார் என்று அறைந்து இருந்தால்.
சக்தி, “என்ன டி நினைச்சுட்டு இருக்க சும்மா சும்மா அடிக்கிற” என்றான் கோவமாக.
சுஜிதா, “நீ அவளை பற்றி தப்பா பேசினால் என்ன பன்னுவேன்னு எனக்கே தெரியாது” என்றாள்.
சுஜிதா, “இந்த விக்ரம் யாரு என்று உங்களுக்கு தெரியுமா? நிலாவும் விக்ரம் அண்ணாவும் சின்ன வயசுல இருந்தே பிரண்ட்ஸ்”.
“நிலாவோட அம்மா உயிரோடு இருக்கும் போதில் இருந்தே காதலிச்சுட்டு இருக்காங்க”.
“அப்போத்தில் இருந்து இவன் எங்க இருக்கான் எங்க போனான் என்று எதுவுமே தெரியாமல். அவனை மட்டுமே நினைச்சு இத்தனை வருஷமாக இருந்தால்”.
“அதேபோல் அந்த விக்ரமும் ஃபாரின்க்கு போயிட்டு இவளையே நினைத்துக் கொண்டு இருந்தான்”.
“நிலாவும் கண்டிப்பா தன்னை தான் நினைத்துக் கொண்டு இருப்பாள் என்ற நம்பிக்கையோடு அவனும் வாழ்ந்துகிட்டு இருந்தான்”.
“அது தாண்டா உன்மையான காதல் உனக்கு வந்தது காதலே கிடையாது” என்றாள் ஆத்திரத்தோடு.
சக்திக்கு ஒன்றுமே புரியவில்லை, “என்ன சொல்ற நீ. நிலா காதலிச்சாலா? எப்போ?”.
“அதுவும் இந்த விக்கிரம்மை எப்படி அவளுக்கு தெரியும்?” என்றான் கேள்வியாக. பிறகு சுஜிதா, நிலா காதல் கதையை மொத்தமாக கூறினால்.
சக்தி அவள் கூறிய பின் அனைத்தையும் புரிந்து கொண்டான். ஆனாலும் அவனுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது.
சக்தி, “சரி நீ சொல்ற மாதிரி எனக்கு அவள் மேல் காதல் இல்லை எல்லாத்தையும் நான் ஒத்துக்குறேன்”.
“ஆனால் என்கிட்ட பிரண்டா நல்லா பேசிட்டு இருந்த நிலா எதுக்காக திடீர்னு என்னை பார்த்து பயப்படணும் என்ன பார்த்தா அவளுக்கு எப்படி தெரிஞ்சது”.
“அப்போ அந்த இடத்துல என் மனசு எவ்வளவு கஷ்டப்பட்டுச்சு தெரியுமா உனக்கு? நான் எத்தனை வாட்டி அவளை சுற்றி சுற்றி வந்தேன் தெரியுமா? அவளிடம் பேசுவதற்கு”.
“ஆனா அவ ஒரு இடத்தில் கூட என்னை பார்த்து சிரிக்க கூட இல்லை”.
“அவளுக்கு கல்யாணம் ஆகி வெளியில் போற வரைக்கும் என்னை பார்த்தாலே யார் பின்னாடியாவது ஒளிஞ்சிக்குவா” என்றவுடன் தான் சுஜிதாவுக்கும் நினைவு வந்தது.
இவர்கள் காலேஜ் நேரத்தில் சக்தி நிலாவை பார்க்க காலேஜுக்கு வந்தாலே நிலா பதற்றம் அடைவாள்.
எப்பொழுதும் சுஜிதா கையை பிடித்துக் கொண்டு அவள் பின்னாடி தான் நிற்பாள். என்பதை யோசித்து சுஜிதா அமைதியாக இருந்தால்.
பிறகு சுஜிதா, “அதற்கான காரணத்தை இந்த வீட்டை விட்டு நம்ப கிளம்புவதற்குள் உன் முன்னாடியே நிலா சொல்லுவா” என்று அவனுக்கு வாக்கு கொடுத்தாள்.
பிறகு சுஜிதா வீட்டிற்குள் சென்று விட்டாள். சக்தி அங்கேயே டேபிள் மேல் அமர்ந்து விட்டான்.
சுஜிதா சொன்ன அனைத்தையும் யோசித்துக் கொண்டே இருந்தான். அபொழுது தான் அவனுக்கு ஒன்று நினைவில் வந்தது.
அன்னைக்கு நைட்டு அவள் தன்னிடம் பேசும் போது கூட எனக்கு ரொம்ப பயமா இருக்கு என்னோட அம்மாவை பாக்கணும் போல இருக்கு என்று அழுதாள்.
அப்புறம் பக்கத்தில் இன்னொரு பெயரை சொல்லி பாக்கணும் போல் இருக்கு என்று அவள் அப்பொழுது கூறினால்.
ஒரு வேலை இவன் பெயரை தான் கூறி இருப்பாலோ என்று சிந்தித்தவன் இல்லை இருக்காது.
இவன் பெயர் விக்ரம் தானே அவ வேறு ஏதோ ஒரு பெயரை அன்னைக்கு சொல்லிக்கிட்டு இருந்தால்.
இருடில் என் முகம் தெரியாமல் என்னை கூட முதலில் வேறு ஏதோ ஒரு பெயர் தான் சொல்லி வந்துட்டியா என்று கேட்டாள்.
அதற்கு அப்புறம் தானே நான் சக்தி சொன்னதும் அவள் எதுவுமே பேசாமல் எனக்கு ரொம்ப பயமா இருக்கு சக்தி அப்படின்னு சொன்னா.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
2
+1
+1

