
வானவில் – 37
இரண்டு வருடங்களுக்குப் பிறகு
“கவின் வேர் ஆர் யூ”கேட்டபடியே அறைக்குள் வந்தான் யுகாதித்தன்.
“ஃப்பூ பே”என்று பயம் காட்டியபடி எட்டிப் பார்த்தான் யுகாதித்தன் தேஜஸ்வினியின் மகன் கவின் ரிஷ்வந்த்.
“ஓஓஓஹ் அப்பா பயந்துட்டேன்”என்று முகத்தை மூடிக் கொள்ள அந்த வாண்டிற்கு அப்படி ஒரு சிரிப்பு.
“அம்மா எங்கே”என்று ஹஸ்கி குரலில் கேட்கவும்
“மம்மு பண்ண”என்றான் அவனும் அதே குரலில்.
“நீங்க தனியா என்ன செய்றீங்க சார்…”என்று தூக்கிக் கொண்டு போய் ஷோபாவில் அமர வைத்தவன் “அப்பா ரெண்டு நிமிஷத்தில் வந்திடுவேனாம்”என்று குளியலறை புகுந்திட மகன்காரன் சமத்தாக அமர்ந்து கொண்டான் அவன் வரும் வரையில்.
அவன் வந்துவிட்டது தெரிந்தாலும் தேஜா சமையலறை விட்டு வெளியே வரவில்லை. எப்படியும் இருவரும் சில நிமிடங்களில் தன்னைத் தேடி வந்து விடுவார்கள் என்று தெரியும் அவளுக்கு.
திருமணம் ஆகி நான்கு வருடங்களை கடந்து விட்டது. ஆனாலும் இருவரும் புரிந்து கொண்டு வாழத் துவங்கிய துவக்கத்தில் இருந்த அதே யுகன் தான் அவளிடத்தில். என்ன பெயர் சொல்லி அழைப்பதில் மட்டும் மாற்றம். முன்பெல்லாம் அஸ்வி என்பான். இப்போது கவின்மாவும் இணைந்து கொண்டது அந்த பட்டியலில்.
“கவின்மா நாங்க வந்துட்டோம்”என்று கோரஸ் பாடியபடி அவர்களும் சமையலறைக்குள் புகுந்தனர்.
“சார் இன்னைக்கு லேட்.”என்றதும் “வழக்கம் போல தான். லாஸ்ட் மினிட் சொதப்பல் எல்லாம் செக் செய்துட்டு வர்றேன். அருண் புலம்பிட்டே போனான். ரக்ஷி பேபி வெளியே நிக்க வச்சுடுவாளாம்”என்று சொல்லி சிரித்தான்.
அருணையும் பெங்களூருக்கே அழைத்துக் கொண்டான் யுகாதித்தன். இருவரும் ஒரே இடத்தில் தான் வேலை பார்க்கின்றனர். அகிலனையும் இங்கே வரவழைக்க முயற்சி நடக்கிறது. அருண் யுகா தங்கி இருக்கும் அதே ஃப்ளோரில் கடைசி வீட்டில் இருக்கிறான் இவர்கள் மூன்றாவது வீட்டில் இருக்கின்றனர். பெரியவர்கள் எல்லாம் சென்னையில் அருகருகே வசிக்கின்றனர். கந்தசாமி செந்தாளம்பட்டிக்கு இடம் பெயர்ந்து விட்டார். அவருக்கு சொந்த ஊர் தான் சொர்க்கம்.
“அவ ரொம்ப செல்லம் அவங்க அப்பா கிட்ட. இதோ இவரை மாதிரி”என்று மகனின் கன்னம் கிள்ளி கொஞ்சியவள் “வாங்க சாப்பிடலாம்”என பாத்திரத்துடன் வெளியே வந்தாள்.
யுகி மகனின் கையில் தட்டை கொடுக்க அழகாய் பிடித்துக் கொண்டு அவன் செயல் இவன் மற்றதை எடுத்துக் கொண்டான்.
பிள்ளையை தானே உண்ணப் பழக்கி இருக்க அவனுக்கானதை போட்டு தரவும் உண்ணத் துவங்கி விட்டான்.
“வீக் எண்ட் வெளியே போகலாமா அஸ்வி”என்று மெல்லிய குரலில் கேட்க
“ஹ்ம்ம் போகலாம். அவன் கிட்ட சொல்லாதீங்க. அப்புறம் தூங்க மாட்டான்”என்றவள் “அருண் கிட்ட சொல்லியாச்சா… எங்கே போகலாம்”என்று கேட்க
“சொல்லிட்டேன் கவி கங்காதரேஷ்வரர் கோவில் போயிட்டு அப்படியே ஒரு ரெசார்ட் பார்த்து இருக்கேன் அங்கே ஸ்டே பண்ணிட்டு வருவோம்.”என்று கூற
“ப்ப்ச் கோவிலுக்கு போயிட்டு வீட்டுக்கு தான் வரணும். அதனால ஒண்ணு செய்வோம் ரெசார்ட்ல ஸ்டே பண்ணிட்டு வரும் போது கோவில் பார்த்துட்டு நேரா வீட்டுக்கு வருவோம்”என்றாள்.
“ஓகே நான் அருண் கிட்ட சொல்லிடுறேன்”என்றவன் கைபேசி இசைக்க அதனை எடுத்து பார்த்தான். சாரதா தான் அழைத்திருந்தார்.
எடுத்து பேசியவன் ஹ்ம்ம் சரி சரி என்றவன் கோவிலுக்கு செல்லலாம் அதற்கு தகுந்தாற்போல் வாருங்கள் என்று கூறி இணைப்பைத் துண்டித்தான்.
“நம்ம வீட்டில் இருந்து வர்றாங்களாம். வேண்டாம் னு சொல்லலை ரெசார்ட்ல இன்னும் மூணு ரூம் புக் பண்ணனும். அருண் அப்பாவையும் வரச் சொல்வோம்”என்றான்.
“ஹ்ம்ம் ஓகே தான்.”என்றவள் “ஃபோனை வச்சுட்டு சாப்பிடுங்க பேசினா சாப்பிடறதை மறந்திடுறது”என்று அதட்டி விட்டு போக புன்னகைத்து கொண்டான்.
“டெவில் எல்லாம் கவனிச்சுடுவா”என்று முணுமுணுத்துக் கொண்டே உண்டவனின் தட்டில் மசாலா ஆம்லேட் வைக்க அப்போதும் புன்னகை தான் அவனுக்கு.
ஒரு சில நேரங்களில் அசைவம் இன்றி அவனுக்கு உணவு இறங்காது. மெதுவாய் கொறிப்பான். அதை வைத்தே அசைவத்தில் ஊறுகாயோ முட்டையோ செய்து தந்திடுவாள்.
“தேங்க் யூ”என்றவன் வேகமாய் உண்ண “நான் தான் மறந்து போயிட்டேன் கேட்டு வாங்கிக்க மாட்டீங்களா”என்று கடிந்து கொள்ள
“மறக்க மாட்ட. என்னை கவனிப்ப இதோ இப்ப மாதிரி”என கண் சிமிட்ட
“ப்பா நான் ஃபினிஷ் பண்ணிட்டேன்”என்று தட்டைக் காட்ட மகனை இறக்கி விட்டாள் தேஜா.
மகன் அந்த பக்கம் சென்றதுமே அவள் இடையை வளைத்து அதில் தலையை சாய்த்து கொண்டவன் உணவருந்தி முடிக்க தேஜாவின் முகம் பளிச்சிட்டது.
காதலித்து ஊரை விட்டு ஓடிப் போய் அவப்பெயர் வாங்கி வீட்டிலும் ஊரிலும் திட்டு வாங்கி தனக்குள் ஒடுங்கி இன்று தன்னை தனக்காக ஏற்ற ஒருவன் தன்னைக் கொண்டாடும் ஒருவன் என மகாராணி போல கவனித்து கொள்ள அதை விட ஒரு நிம்மதி வேண்டுமா. எல்லாவற்றிலும் தன்னை முன்னிலைப்படுத்தி நிற்பவனை எண்ணி என்றுமே மனதில் சந்தோஷ ஊற்று தான்.
*********
அருண் இங்கே தோப்புக்கரணம் போட்டு கொண்டிருந்தான் மகளின் முன்னால்.
“குட்டிமா நீ வேணும்னா யுகி பெரியப்பா கிட்ட கேளேன் நிஜமாவே வேலைடா”என்று மகளிடம் கெஞ்ச
“நோ பாப்பா கோபம் கோபம்”என்று முறுக்க மகிழன் வாய் பொத்தி சிரிக்க பிரதன்யாவோ “அடியேய் உலக்கை மாதிரி இருந்துட்டு அவரை எவ்வளவு கெஞ்ச வைக்கிற. அடி போட போறேன் பாரு. “என்று மிரட்ட
“டாதி”என்று தந்தையிடமே அம்மா மீது புகார் சொன்னாள் குழந்தை.
“மம்மி அதட்டினா கேட்கணும் டா பட்டு. சரி அப்பா வந்து உட்காரவா. நாளைக்கு வெளியே போவோமாம் ப்ராமிஸ்”என்று கூற துள்ளி குதித்து இறங்கி வந்தவள் “போலாம் போலாம்”என்று முத்தமிட்டாள்.
“சரியான ஆளு இவ”என்றபடி “அவ சொல்றான்னு நீங்களும் தோப்புக்கரணம் போடுறீங்க பாருங்க. போங்க போங்க குளிச்சிட்டு வாங்க”என்றதும் தன்னறை புக குழந்தைகள் இருவரையும் டிவியை போட்டு அமர வைத்தாள் பிரதன்யா.
“சமத்தா இருக்கணும். அப்பா சாப்பிட்டதும் அம்மா வருவேன். மகி தூக்கம் வந்தா தூங்கணும் கண்ணைக் கசக்க கூடாது”என்று சொல்லி விட்டு செல்ல குழந்தைகள் இருவரும் கார்டூனில் மூழ்கினர்.
அதற்குள் அருண் வந்துவிட எங்கே போகப் போகிறோம் என்று சொல்லி ஊரில் இருந்து வருவதையும் கூறினான்.
“ஓஓஓ அப்போ பசங்க அவங்க கிட்ட போயிடுங்க”என்று சொல்ல
“ஹாஹாஹா நாங்க அதை யோசிக்கலை தனு . பட் தானா அமைஞ்சிடுச்சு”என்றான் நமட்டுச் சிரிப்புடன்.
“அமையும் அமையும்”என்று அவனை தோளில் அடித்தவள் “ரொம்ப நாள் ஆகிடுச்சுல்ல வெளியே போய்”என்றாள்.
“ஹ்ம்ம்”என்றவன் “ரெண்டு பேரையும் தூங்க வை இதை எல்லாம் வாஷ் பண்ணிட்டு வர்றேன்”என்று கூற
“அதை எல்லாம் நான் பார்த்துப்பேன் பசங்க கூட கொஞ்சம் நேரம் விளையாடுங்க.”என்று சொல்லி அனுப்பி வைத்தாள்.
தான் என்றால் அதிக நேரம் குழந்தைகளோடு இருக்கிறோம் அருணுக்கு வேலை அதிகம் இருப்பதால் வீட்டில் இருப்பதே குறைவு. அதனாலேயே அவன் வீட்டிற்கு வரும் போது குழந்தைகளுடன் தான் நேரத்தை செலவிட வைப்பாள். மகிழனை விட ரக்ஷிதா அருணை அதிகம் தேடுவாள். செல்லம் கொடுத்தாலும் பிரதன்யா கண்டிக்கும் போது அதில் தலையிடவே மாட்டான். அதுவே ஒரு பழக்கம் ஆகி விடும் என்பதால் அதை மட்டும் செய்ய மாட்டான்.
மூன்று பிள்ளைகளும் பெரியவர்களிடத்தில் ஒட்டுதல் என்றாலும் அகிலன் தான் அவர்களின் ஃபேவரைட். வயது மிகுந்த விளையாட்டு தோழன்.
குழந்தைகளை தாங்கள் பார்த்து கொள்வதாக பெரியவர்கள் கேட்டும் இரு இணைகளுமே மறுத்து விட்டனர்.
“மொதல்ல எங்களை வளர்த்தாச்சு அடுத்து பிள்ளைங்களா…எப்போ தான் நீங்க உங்க லைஃப் பார்ப்பீங்க. வீக் என்ட் அது போல பார்த்துக்கோங்க”என்று யுகன் சொல்லி விட திரிபுரசுந்தரிக்கு அதில் வருத்தம் தான்.
“ஏன் தேஜு இந்த வயசுல நாங்க சோடி போட்டு எங்க போக போறோம். உங்க வீட்டுக்காரர் இருக்காரே”என்று மகளிடம் முறுக்க
“ம்மா அவருக்கு பையன் கூட இருக்கணும் அதுக்கு இப்படி சொல்றார் நீங்க கண்டுக்காதீங்க”என்று சமாதானம் செய்ய பத்மநாபனோ “மாப்பிள்ளை சொன்னா சரியா தான் இருக்கும்”என்று கிண்டல் செய்தார் மனைவியை.
“ஆமாமா உங்க மூஞ்சியவே எவ்வளவு நாளைக்கு பாக்குறதுனு கேட்டா மருமகன் இப்படி சொல்லிட்டார்”என்று வருத்தம் போல சொல்ல சிரித்தார் பத்மநாபன்.
அனைவரும் யுகா புக் செய்திருந்த ரெஸார்ட்டிற்கு கிளம்பி விட்டனர்.
அகிலனுக்கும் கந்தசாமிக்கும் ஒரு அறை கொடுத்து விட்டு மற்றவர்கள் எல்லாம் கணவன் மனைவியாக தங்கிக் கொள்ள மகிழன் அகிலுடன் தான் இருப்பேன் என்று விட ரக்ஷிதா பத்மநாபனை கட்டிக் கொண்டு வர மறுத்தாள்.
கவினோ “அப்பா நான் பாட்டி கூட தூங்கவா”என்று தந்தையிடம் அனுமதி வேண்ட
“அடேய் பேராண்டி ரொம்ப ஓவருடா. உன் அப்பன் சொன்னா தான் வருவியா நீ. உதை வாங்குவ படவா”என்று கவினை சாரதா தூக்கிக் கொண்டார்.
அப்போதும் கவின் தந்தையைப் பார்க்க கிருஷ்ணன் வியப்பாய் “பாரேன் இவனை எல்லாத்துக்கும் அப்பா அப்பானு”என்று புன்னகைத்தார்.
யுகா போய்வா என்றதும் தான் சாரதாவை கழுத்தோடு கட்டிக் கொண்டான் கவின்.
“சரி போய் ரெஸ்ட் எடுத்துட்டு ஈவ்னிங் போல ஸ்விம்மிங் வருவோம் அருண்”என்றதும் அவரவர் அறைக்குச் சென்றனர்.
அறைக்குள் சென்றதுமே மனைவியை அணைத்துக் கொண்டவன் “சோடா புட்டி கொஞ்சமா கொஞ்சிக்கவா”என்று அவள் கழுத்தெலும்பில் முத்தம் வைக்க
“ஆமாமா இத்தனை நாளும் சார் விரதம் இருந்த மாதிரி தான்”என்றாள் அவனின் அருகில் இணங்கி நின்று.
“ஹ்ம்ம் இல்லையா பின்ன…முழுசா”என்று அவன் சொல்லும் முன்பே அவனின் வாயைப் பொத்தி “அடி வாங்குவ ஆதி”என்றாள் படபடப்பாக.
“க்யூட்டிஃபை”என்று செல்லம் கொஞ்சியவன் அதன் பிறகு அவளை தனித்து விடவில்லை.
குழந்தையை கவனம் வைத்து தான் அவர்களின் இணக்கமும் எப்போதும் இருக்கும். இது போலான தனிமையில் தான் மனைவியை தன் மனம் போல் நாடுவான்.
கூடல் முடிந்து இளைப்பாறிய வேளையில் தன் நெஞ்சோடு சாய்த்துக் கொண்டவன் “அஸ்வி”என்று அழைக்க
“ஹ்ம்ம்”என்றவள் அவனை இறுக்கி அணைத்திருந்தாள்.
“நான் உனக்கு பர்ஃபெக்ட் ஹஸ் தானா”என்று வினவ தேஜாவிற்கு முகமெங்கும் புன்னகை படர்ந்தது.
“என்ன சொல்றது நான்”
“உண்மையை சொல்லுடி.”என்றான் தலைகோதியபடி.
“உண்மைன்னா பர்ஃபெக்ட் னு சொல்ல மாட்டேன்.பட் நீ என் ஆதி முழுசா என்னோட ஆதி.”என்றிட யுகனுக்கு மனமெல்லாம் வானவில் பூத்தது.
“எப்போதும் என்னையே கேட்கிற தானே இன்னைக்கு நீ சொல்லு நான் பர்ஃபெக்ட் வொய்ஃபா”என்றாள் அவனை நிமிர்ந்து பார்த்து.
….. தொடரும்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
7
+1
1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.

தொடரும் என்று போட்டிருக்கீங்க.. ஆனால் முடிவடைந்த கதைகள் லிஸ்டில் இந்த கதை இருக்கிறது… ஏன்??