Loading

காதல் – 56

 

அஸ்வதி மற்றும் அவளின் வகுப்பு மாணவர்கள் அனைவரும் காஷ்மீருக்கு இன்ப சுற்றுலா வந்தனர்……

 

எப்பொழுதும் அமைதியாகவே இருக்கும் அஸ்வதி மேடம்  விஹானா மற்றும் சித்திக் அப்பாவிடம் சிரித்து நீண்ட நேரம் பேசியதை நினைத்து அந்த மாணவர்கள் குழம்பிக் கொண்டிருந்தார்கள்…….

 

அவர்கள் அனைவரும்  சித்திக் அப்பாவின் கெஸ்ட் ஹவுஸ்சிற்கு வந்தனர்…….

 

பசங்களா இதுதான் நீங்க தங்க போற கெஸ்ட் ஹவுஸ் எல்லாருக்கும் தனித்தனி ரூம் இருக்குது  இந்தாங்க உங்க  ரூம் சாவி என்று அனைத்து மாணவர்களுக்கும் தனித்தனி அறை கொடுத்தார்…….

 

அனைத்து மாணவர்களும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்று ஓய்வெடுக்க சென்றனர்……

 

அஸ்வதி சித்திக் அப்பா மற்றும் விஹானாவோடு நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தாள்……..

 

பிறகு அவள் தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்று குளித்து விட்டு விஹான் அறை இருக்கும் ஜன்னல் அருகில் வந்தாள்……

 

பிறகு ஒரு பெரிய கட்டையை எடுத்து போட்டு அதன் மேல் ஏறி நின்று திறந்திருந்த விஹானின் அறையை எட்டிப் பார்த்தாள்……

 

விஹான் அஸ்வதியின் சட்டையை நெஞ்சோடு அனைத்தப்படி கண்கள் மூடி படுத்திருந்தான்…….

 

அவன் அறையில் அவன் போட்ட மியூசிக் பிளேயரில் இருந்து பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது அதனுடைய விஹானும் பாடிக்கொண்டிருந்தான்……

 

அவன் சும்மா பொழுதுபோக்க்கிற்காக பாடவில்லை தன்னவளை நினைத்து உருகி பாடிக்கொண்டிருந்தான்…….

 

“நீ இன்றி நானும் இல்லை

என் காதல் பொய்யும் இல்லை

வழி எங்கும் உந்தன் முகம்தான்

வலி கூட இங்கே சுகம்தான்

தொடுவானம் சிவந்து போகும்

தொலை தூரம் குறைந்து போகும்

கரைகின்ற நொடிகளில்

நான் நெருங்கி வந்தேனே

இனி உன்னை பிரிய மாட்டேன்

தொலை தூரம் நகர மாட்டேன்

முகம் பார்க்க தவிக்கிறேன்

என் இனிய பூங்காற்றே

ஒ சாந்தி சாந்தி ஒ சாந்தி

என் உயிரை உயிரை நீ ஏந்தி

ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி

நான் வந்தேன் வந்தேன் உன்னை தேடி

நீ இன்றி நானும் இல்லை

என் காதல் பொய்யும் இல்லை

உன்னை காணும் நேரம் வருமா

இரு கண்கள் மோட்சம் பெறுமா

விரலோடு விழியும் வாடும்

விரைகின்ற காலும் நோகும்

இருந்தாலும் வருகிறேன்

உன் மடியில் நான் தூங்க

எனை வந்து உரசும் காற்றே

அவளோடு கனவில் நேற்றே

கைகோர்த்து நெருங்கினேன்

கண் அடித்து நீ ஏங்க”……...

 

என்று விஹான் அஸ்வதியை நினைத்து உருகி பாடிக்கொண்டிருந்தான்…….

 

பிறகு விஹான் ஜன்னலருகே வரவும் அஸ்வதி அவள் போட்ட  கட்டையில் அமர்ந்து விட்டாள்……..

 

உலகத்தின் ஏதோ ஒரு இடத்திலிருந்து நீ ரசிக்கும் நிலவை நானும் ரசிக்கிறேன் என்ற நினைப்பிலே வாழும் என் காதல் …..

 

அஸ்வதி எப்படி இருக்க ?எப்ப நா உன்ன பாப்பேன்? என்று விஹான் தனியாக நிலவோடு பேசிக் கொண்டிருந்தான் அப்பொழுது அவன் முன் திடீரென்று அஸ்வதி நின்றாள்…..

 

அஸ்வதியை அந்த இடத்தில் அந்த நேரத்தில் சற்றும் எதிர்பாராத ரீகன் விஹான் ஆச்சரியத்தில் விழி விரிய நின்றான்……..

 

அஸ்வி……!!!!!!!!!

இது கனவா?

இல்ல நிஜமா?

 

அஸ்வதி விஹானை இறுக்கமாக கட்டியணைத்துக் கொண்டாள்……

 

அவளின் ஸ்பரிசம் , அவளின் வாசனை , அது தன்னவள் என்று அவனுக்கு நீண்ட நேரம் கழித்து தான் புரிந்தது…..

 

புரிந்த மறு நொடி அப்படியே அவளை இறுக்கமாக கட்டி அணைத்து கொண்டு அவளின் முகம் முழுக்க முத்தங்களால் நிரப்பினான்…….

 

அஸ்வி…..

என்று அவன் அவளின் இதழில் தன்னுடைய இதழை பதித்தான், இத்தனை நாட்கள் இருந்த பிரிவு , சோகம் , கவலை என அனைத்தையும் அவளின் இதழில் அவன் போக்கி கொண்டு இருந்தான்…….

 

அஸ்வதியும் அவனின் இதழ் முத்தத்தில் மயங்கி அவன் மார்பினில் சாய்ந்து கொண்டு அவனுக்கு வாகாக நின்று கொண்டு இருந்தாள்…….

 

நீண்ட நேரம் நடந்த இதழ் முத்தத்தில் அஸ்வதியின் முகம் சிவந்து விட்டது……

 

அஸ்வதி விஹானின் முகம் முழுக்க முத்தங்களால் நிரப்பினாள்……அவனின் மார்பினில் முகம் புதைத்துக் கொண்டாள்……

 

விஹான் அஸ்வதியின் முகத்தை தன் இரு கைகளில் ஏந்தி கொண்டு அவளின் அழகிய முகத்தை பார்த்து கொண்டே நின்றான்……

 

அஸ்வதி விஹானின் முகத்தை பார்த்து…..

 

என்னைத்தான்

அன்பே மறந்தாயோ???

 

என்று பாடலாக கேட்க…….

 

மறப்பேன் என்றே

நினைத்தாயோ???

 

என்று அவனும் அவளின் கேள்விக்கு ஏற்பப் பாடல் பாடினான்…….

 

நீண்ட நேரம் இருவரும் கட்டி அணைத்து கொண்டு இருக்கும் போது அவர்கள் இருவரின் இடையில் இருந்த சுவரை அப்பொழுது தான் இருவரும் கவனித்தார்கள்……

 

பிறகு விஹான் அஸ்வதியை தூக்கி அவன் அறைக்குள் சென்று ஜன்னலை சாத்திவிட்டு அவளருகினில் வந்தான்……

 

அஸ்வி என்னடி இது சர்ப்ரைஸ்ஸா வந்து நிக்குற?

 

அதுக்கு பேர் தான் சர்ப்ரைஸ் மிஸ்டர் விஹான்…….

 

எப்படி இது சாத்தியம்?

 

அது வந்து எப்படின்னா என்று அவள் அவனின் தோள்களில் கை போட்டவாறு நடந்தவற்றை ஒவ்வொன்றாக கூறினாள்……..

 

அடி கள்ளி என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம்ல நா உன்ன ஏர்போர்ட் வந்து பிக் அப் பன்னிருப்பேன்ல???

 

மிஸ்டர் சர்ப்ரைஸ யாரும் இப்படி சொல்ல மாட்டாங்க என்று அவள் அவனின் தாடியை பிடித்து ஆட்டினாள்…..

 

இந்த சர்ப்ரைஸ் எவ்வளவு நாள் இங்க இருக்கும்?

 

ஒரு பதினஞ்சு நாள் இருக்கும்…….

 

ஓஹோ அவ்வளோ நாள் இருக்குமா?

 

ஆமா என்று அவள் அவனின் மடியினில் அமர்ந்து கொண்டு நிறைய நிறைய எதேதோ பேசி கொண்டு இருந்தாள் அவன் அவளின் பேச்சை மெய் மறந்து கேட்டு கொண்டு இருந்தான்…….

 

விஹான் நா இங்க வந்தது சித்திக் அப்பா அண்ட் விஹான்னாவுக்கு மாட்டுதான் தெரியும் சோ நம்ம ரெண்டு பேரும் போய் பீவி அம்மாவ சர்ப்ரைஸ் பண்ணலாமா?

 

வா போவோம் என்று அவர்கள் இருவரும் பீவி அம்மா அறைக்கு சென்றனர்…….

 

பீவி அம்மா தலைக்கு தைலம் தேய்த்து கொண்டு இருந்தார்…….

 

டேய் விஹான்……

அடியே விஹான்னா…..

ரெண்டும் எங்க போசுங்கன்னு தெரியலையே………

 

டேய் விஹான் அந்த மூட்டு வலி தைலத்த கொஞ்சம் எடுத்து குடுங்கடா என்று அவர் கேட்க அவரின் கையில் மூட்டு வலி தைலத்தை அஸ்வதி வைத்தாள்…….

 

ஏய் விஹான்னா இவ்வளோ நேரம் நா கத்திட்டு இருக்கேன் நீ இப்போ வார என்று அவர் நிமிர்ந்து பார்க்க அங்கு அஸ்வதி சிரித்து கொண்டே நின்று கொண்டிருந்தாள்…….

 

அம்மா …..

என்று அவள் அவரை கட்டி அணைத்து கொண்டாள்……

 

ஏய் அஸ்வதி, நீதானா?

 

நானே அது நானே , விஹான் காதலியும் நானே , உங்களின் மருமகளும் நானே அது நானே என்று அவள் அவரை பார்த்து அழகாக சிரித்து கொண்டே பாடினாள்…….

 

எப்படி கண்ணா இருக்க என்று அவரும் அவளை கட்டி அணைத்து கொண்டார்…..

 

நா சூப்பரா இருக்கேன் அம்மா …..

 

எங்கடி சூப்பரா இருக்க?

இப்படி மெலிஞ்சி போயிட்ட?

 

மம்மி இனி நா இங்க ஒரு பதினஞ்சு நாள் இருப்பேன் அப்போ நீங்க என்ன நல்லா குண்டா ஆக்கி விட்டுருங்க……

 

ஏன் பதினஞ்சு நாள் மட்டும்?

 

அஸ்வதி அவள் வந்த காரணத்தை கூறினாள்…….

 

சரிடா கண்ணா, ஆமா நீ இங்க வர்ரது வேற யாருக்கெல்லாம் தெரியும்?

 

அவர் அவ்வாறு கேட்கவும் அஸ்வதி சற்று தள்ளி நின்று கொண்டு கூறினாள்……

 

ஏன்டி தள்ளி நிக்குற?

 

அது……

அம்மா….

எல்லாருக்கும் தெரியும்…..

நீங்கதான் லாஸ்ட் என்று அவள் கூறவும் பீவி அம்மா கோபத்தில் அவளை அடிக்க வந்தார் அவரிடமிருந்து தப்பித்து ஓடி வந்து விஹான் பின்னால் அவள் ஒளிந்து கொண்டாள்…..

 

மம்மி மம்மி நோ வயலன்ஸ்……

 

டேய் உங்க எல்லாருக்கும் அஸ்வதி வர்ரது தெரிஞ்சிருக்கு ஆனா எனக்கு மட்டும் லாஸ்ட்டா சொல்லுறீங்க போங்க உங்க கூட சண்டை என்று அவர் முகத்தை திருப்பி கொண்டார்……

 

அம்மா அப்போ எனக்கு மட்டன் பிரியாணி செஞ்சு தர மாட்டீங்களா?

 

யாரு நா செஞ்சு தர மாட்டேன்னு சொன்னாங்க?

 

அப்போ என்கிட்ட பேச மாட்டீங்களா?என்று அஸ்வதி முகத்தை பாவமாக வைத்து கொண்டு கேட்கவும் பீவி அம்மா அவளை கன்னத்தில் மெல்லமாகவும், செல்லமாகவும் தட்டினார்…….

 

அப்பா அம்மா என்ன அடிச்சிட்டாங்க என்று அவள் பொய்யாக நடிக்கவும் பீவி அம்மா சிரித்து விட்டார்…….

 

சரி சரி உன்னோட ஸ்டூடன்ட்ஸ் எல்லாரும் எங்க தங்கி இருக்காங்க?

 

நம்ம வீட்டுக்கு பக்கத்துல உள்ள கெஸ்ட் ஹவுஸ்ல தான் தங்கி இருக்காங்க……

 

சரி இப்போ நைட்டு எல்லாரையும் கூட்டிட்டு நம்ம வீட்டுக்கு வந்துரு எல்லாரும் இங்க சாப்பிடட்டும்…..

 

அம்மா என்ன சேத்து மொத்தம் அம்பது பேரு இருக்கோம் எப்படி எல்லாருக்கும் சமைப்பீங்க??

 

அத நா பாத்துக்குறேன் நீ ஒரு மணி நேரம் கழிச்சு எல்லாரையும் கூட்டிட்டு வா………

 

ஆனா அம்மா…..

 

ஆனாவும் இல்ல ஆவன்னாவும் இல்ல நா சொன்ன மாதிரியே ஒரு மணி நேரம் கழிச்சு எல்லாரையும் கூட்டிட்டு வா சரியா என்று பீவி அம்மா கிட்செனுக்கு சென்றார்……

 

ஆனா விஹான்,  அம்மா எப்படி ஒரு மணி நேரத்துக்குள்ள எல்லாருக்கும் சாப்பாடு சமைக்க முடியும்?

 

நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம் என்று கோரசாக குரல் கேட்டது…..அவர்கள் அனைவரும் திரும்பி பார்த்தார்கள் அஸ்வதியின் மாணவர்கள் அனைவரும் அங்கு நின்று கொண்டு இருந்தார்கள்…….

 

அடியே விஹான்னா கொஞ்ச நேரம் இவங்களை பாத்துக்கோன்னுதான சொன்னேன்……

 

அஸ்வா உன்னோட ஸ்டூடன்ட்ஸ் எல்லாரும் சேந்து என்ன பண்ண டார்ச்சர்ல இங்க கூட்டிட்டு வந்துட்டேன்…..

 

டேய் என்னடா டார்ச்சர் பண்ணீங்க?

 

எங்க மேடம் எங்க இருக்காங்க அப்படின்னு தான கேட்டோம் இது உங்களுக்கு டார்ச்சர் மாதிரி தெரியுதா விஹானா அக்கா?

 

அடேய் அடேய் என்னடா அங்க ஒரு மாதிரி பேசுற இங்க ஒரு மாதிரி பேசுற?

 

அஸ்வதி இந்த பேட்  பசங்க எல்லாரும் என்கிட்ட எங்களோட மேடம் கிட்ட கூட்டிட்டு போங்க இல்லன்னா உங்களை நாங்க விட மாட்டோம் அப்படின்னு என் கைய புடிச்சி இழுத்துட்டு வந்தாங்க இல்லன்னு சொல்ல சொல்லு பாப்போம்…….

 

டேய் விஹான்னா சொல்றது உன்மையா என்று அஸ்வதி  சற்று கடுமையான குரலில் கேட்கவும் அனைத்து மாணவர்களும் தலைகுனிந்தபடி நின்றனர்……..

 

சரி சரி அஸ்வதி பசங்க பக்கம் சோகமாயிடுச்சு பாரு விடு போதும் , நீங்க வாங்க பசங்களா நம்ம எல்லாரும் சேர்ந்து நைட் டின்னர் ரெடி பண்ணலாம் என்று விஹானா அனைத்து மாணவர்களையும் கிச்சனுக்கு அழைத்து சென்றாள்………

 

கிச்சனில் சமையல்காரர்கள் சமைத்துக் கொண்டு இருக்க அங்கு இருந்த மாணவர்களும் விஹானாவும் பீவி அம்மாவும் கதை அளந்து கொண்டிருந்தனர்…….

 

ஹலோ இங்க என்ன நடக்குது?என்று அங்கு அஸ்வதி வந்தாள்…….

 

அஸ்வதியை அங்கு பார்த்ததும் அனைத்து மாணவர்களும் பயந்து போய் எழுந்து நிற்க………

 

மேம் அது…..

வந்து…..

 

என்று அனைத்து மாணவர்களும் அஸ்வதியை பார்த்து பயப்படுவதை பார்த்த விஹானுக்கு சிரிப்பு தாங்கவில்லை……

 

அவன் சத்தகமாகவே சிரித்து விட்டான்…..

 

இப்போ எதுக்கு விஹான் சிரிக்குறீங்க?

 

ஒன்னுமில்ல ஒன்னுமில்ல நீங்க வேலைய கண்டினியூ பண்ணுங்க நாங்க வாரோம் எண்ணிட்டு என்றிட்டு விஹான் அஸ்வதியை அழைத்துக்கொண்டு அவன் அறைக்கு சென்றான்……..

 

அவர்கள் இருவரும் சென்றுவிட அங்கிருந்த மாணவர்கள் அனைவரும் பீவி அம்மாவோடு சிரித்து பேச ஆரம்பித்தனர்……

 

அம்மா உங்ககிட்ட ஒன்னு கேக்கட்டுமா?

 

கேளுடா விக்னேஷ்……

 

எங்க அஸ்வதி மேடம் காலேஜ்ல யார்கிட்டயும் அவ்வளவா பேசவே மாட்டாங்க, அவங்க உண்டு அவங்க வேலை உண்டுன்னு இருப்பாங்க கிளாசுக்கு வந்தா எங்க கூட கொஞ்ச நேரம் பேசுவாங்க அவ்வளவுதான் ஆனா இங்க உங்க கூட  நல்லா சிரிச்சு பேசுறாங்க அது எப்படி?

 

அஸ்வதி என்னோட குழந்தை மாதிரி என்கிட்ட மட்டும் தான் ஆஸ்வதி ரொம்ப நல்லா பேசுவா என்று அவர் கூறினார்…..

 

அது ஏன்?

 

அஸ்வதி சின்ன வயசுல இருந்தே யார்கிட்டயும் அவ்வளவா பேச மாட்டா இங்க எங்க கிட்ட மட்டும் தான் கொஞ்சம் நல்லா பேசுவா அதான் உனக்கு எப்படி தெரியுது இன்னும் போக போக அஸ்வதி உன்கிட்ட நல்லா பேச ஆரம்பிப்பா பாரு……..

 

அந்த மாணவர்களும் பீவி அம்மாவும்,  விஹானா என அனைவரும் நல்ல நண்பர்களாகி போனார்கள்……

 

அஸ்வதி மற்றும் விஹான் பணியில் நனையும் நிலவை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தனர்………

 

தொடரும் ………..

 

உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்………..

 

💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்