Loading

 

KKEN-35

“ஏன் வெற்றி ஏண்டா இப்படி எல்லாம் பேசற. நான் வரேன் போதுமா? ”

உரிமையாக அன்னையின் ஸ்தானத்தில் இருந்த அக்கா தம்பியின் தோள் சாய்ந்தாள்.

“அது சரி! உன்னோட பொண்டாட்டி எங்க?” மது தான் கேட்டாள் .

” இதுக்கு மேல சைக்கோ அது ”

“மலர் வா போலாம். அவளை கூட்டிட்டு வரலாம்”

“லிப்டுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். “மேடம் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க? எத்தனை  மாசம்?”

“அடிப்பாவி! எப்படி கண்டுபுடிச்ச?”

“அதெல்லாம் அப்டித்தான் மேடம். எத்தனை  மாசம்?”வேகமாக புருவங்களை ஆட்டி ஆட்டி கேட்டாள் மலர்.

 

“மூணு”

“அர்ஜுன் சார் எங்க? நல்ல பார்த்துகறாரா?”

“ம்! டெல்லில இருக்காரு. அப்பப்ப வருவாரு”

“அப்பப்ப  வரும்போதே இப்படியா? உங்க கல்யாண நாளுக்கும் மாச கணக்குக்கும் சரியா வரலையே ?

“ஏய் இதெல்லாம் கேக்கக் கூடாது”

“ட்ரெய்லர்  போட சொன்னா படமே போட்டுடீங்களே மேடம் ?”

“ஏதோ பிரண்டு ஆகிட்ட . அதுனால சும்மா விடறேன்.” லேசாக கன்னம் கிள்ளினாள்.

“இல்லாட்டி என்ன பண்ணுவீங்களாம்? முட்டிக்கு முட்டி தட்டிடுவீங்களோ?” வேகமாக வாயை விட்டு விட்டாள். நுனி நாக்கை கடித்துக் கொண்டாள் .

“மாட்டோமா?”

“நான்தான் அர்ஜுன் சார் கிட்ட சொல்லிடுவேனே?”

“அடிங் ” செல்ல சண்டடையினூடே வர வேண்டிய தளத்திற்கு வந்து விட்டார்கள்.

“வீட்டை காட்டறீங்களா கொடி மலர் மேடம் ?”

பெல் அடித்து விட்டு காத்திருந்தார்கள்.

“ரவி உன்ன நல்ல பார்த்துகறாரா? அங்க எதுவும் பிரச்சனை இல்லையே?”

“இல்ல மேடம்! சார் தங்கம்.” அவள் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே கதவு திறந்தது. வேறு யார்? வித்யாதான். ”

“ஹாய் வித்யா! இவங்க மதுமதி மேடம். நம்ம வெற்றியோடு பிரண்டு. எஸ் ஐ யா இருக்காங்க. உன்ன பாக்கனுன்னு  சொன்னங்க. அதான்..”

மதுவின் ஒற்றை பார்வையில் கீழே  சென்று விட்டாள் மலர்.

“உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.”

“வாங்க உள்ள வாங்க ”

வழக்கமான போலீஸ் பிறவிதான். உள்ளே நுழைந்த உடனேயே வீட்டை சுற்றி ஒரு நோட்டம் விட்டாள்.

“உக்கார சொல்ல மாட்டியா?”

“வாங்க! உக்காருங்க”

“இங்க நீயும் வெற்றியும் மாலையோட இருக்கற மாதிரி ஒரு பெரிய சைஸ் போட்டோ இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும். ரைட்?

கண் சிறுத்து கூர்மையாக்கி பார்த்தாள் மது.

காவல் அதிகாரியின் பார்வையின் வீரியம் தாங்க முடியவில்லை வித்யாவுக்கு. தானே தலை கவிழ்ந்துக் கொண்டது.

“சரி விடு. சீக்கிரமா ஏற்பாடு பண்ணிடலாம். சரி நீ ஏன் இன்னும் ரெடியாகலை ? போ சீக்கிரம் ரெடி ஆகிட்டு வா. நாம சேர்ந்தே போகலாம். இன்னும் பத்து நிமிஷம் இருக்கு. ”

“இல்ல! நான் வரலை.”

“ஏன் ? உன்னோட புருஷன் கடை திறக்கறாரு அதுக்கு நீ தானே வந்து எல்லாம் செய்ய வேணும் ”

“இல்ல! வெற்றி என்னோட புருஷன் இல்ல.”

“அப்ப வேற யாரு உன்னோட புருஷன்? ஓ! யாரு அந்த அதிபனா  உன்னோட புருஷன்?’

வித்யா அதிர்ச்சியானாள் .

“கங்கிராசுலேஷன்ஸ்! எனக்கும் அவன் புருஷன் தான். என்ன அவன் கை  வைச்சதுல ஒனக்கு முன்னாடியே நான் முந்திகிட்டேன்.அவனுக்குத் தான் உன்னை பார்த்ததும் வேற எந்த பெண்ணையும் பாக்கவே பிடிக்கலையாமே. உனக்கு அப்புறம், வித்யா ராமன் மாதிரி வாழ ஆசைபட்டானாம் . அல்பாயுசுல போய்ட்டான். வாழ வேண்டிய வயசு. எத்தனை பேரு வாழ்க்கையை கெடுத்து கொலைகள் செய்து எப்டியோ வாழ்ந்துருக்க வேண்டியவனை யாரோ போட்டு தள்ளிட்டாங்க. ”

வித்யா அமைதியாக அவள் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்ன இந்த விஷயத்தை இவ்ளோ ஈஸியா பேசறேன்னு நினைக்கிறியா? அவன் எத்தனையோ பொண்ணுங்க மேல  கை வைச்சுருக்கான். அத்தனை பேருக்கும் அவன் புருஷனாகிட முடியுமா? அவனுக்காக நீ இப்படி விதவை கோலம் போட்டுக்கிட்டு வெற்றியை நோகடிக்கறது சரியா ? ”

மூலையில் எங்கோ சுரீரென்று வலித்தது வித்யாவுக்கு.

“காதல்னா  என்ன வித்யா? காதலியோட  கண்ணீரை துடைக்கறதா ? இல்ல கண்ணீர் வர வச்சவனை ஒன்னும் இல்லாதவனா ஆக்கறதா? வெற்றி உனக்காக ரொம்ப நிறைய செய்திருக்கான் வித்யா. புரிஞ்சுக்க. ப்ளீஸ் அவனை நோகடிக்காத.”

மது கிளம்பி விட்டாள் .

கீழே வாசிக்கும் வாத்தியங்களின் சப்தம் கேட்க தொடங்கியது . இவளுக்கு இப்போது இங்கே இருக்க மனம் ஒப்பவில்லை. அதிபனுக்காக இந்த விதவைக் கோலமா ? புருஷா புருஷா என்று அவனை இவள் சுற்றி வந்தது நினைவுக்கு வந்தது. வெற்றி தான் என்னோட புருஷன். முதன் முதலில் மனதில் சொல்லிக் கொண்டாள். அத்தனை எளிதில் இது மாறி விடாது.அவளுக்குத் தெரியும். இருப்பினும் வித்யா மாற விரும்புகிறாள் .

அவசரமாக புடவை மாற்றிக் கொண்டாள் . பளிச்சென போட்டு வைத்துக் கொண்டாள் .அம்பாளுக்கு போட்டிருந்த பூவை எடுத்து வைத்துக் கொண்டாள். கண்ணாடியில் தன்னைப் பார்த்தவளுக்கு திருப்தியாக இருந்தது.

 

இதோ அவனுக்கு பிடித்த அடர் நீல சேலையில் வந்து விட்டாள் . அவன் ஆசைப்பட்ட படியே மனைவி மகளுடன் கடை திறந்து விட்டான்.

அவன் கொடுத்த பரிசுகள் மூலம் அந்த அடுக்ககக்தில் இருந்த பலரும் வந்திருந்தார்கள். நல்ல பிராண்டிங், விளம்பரம் எல்லாமே வேலை செய்தது. மெதுமெதுவாக வாழ்க்கையில் முன்னேற ஆரம்பித்தான் வெற்றி.

வித்யாவின் வீட்டிலும் வெற்றியின் வீட்டிலும் அவர்களின் திருமண போட்டோவுக்கு முன்பு குழந்தையுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட கடை திறப்பு போட்டோ வந்து விட்டது .

 

============================================

இங்கே ரவியின் வீட்டில் மலர் அத்தனை சந்தோசமாக இருந்தாள். அவள் உலகத்தில் நிறைய பேர் இருந்தார்கள் . ஹைடி பார்ப்பாள் குழந்தைக்கு போட்டியாக.

 

ஹைடி ஹைடி சுட்டி பெண் இவள் ஹைடி …

பாடுவாள் .

 

நாந்தான் மேப் நாந்தான் மேப் இப்படியும் பாடிக் கொண்டிருப்பாள் ..

 

இங்கே வந்திருந்த சில மாதங்களில் உடல் தேறி அழகாக இருந்தாள் . நல்ல உணவு, இருக்க நல்ல இடம், போட்டிருந்த நல்ல ஆடைகள் அனைத்தையும் விட நல்ல கவனிப்பு. ரவி மற்ற வேலை ஆட்களை பார்த்துக் கொள்வது போல இவளையும் நன்றாகவே பார்த்துக் கொண்டான். முதலில் எல்லாம் அது ஒரு நன்றி உணர்வு என்றே நினைத்திருந்தவனுக்கு பிறகு வந்த மாதங்களில்  இதன் காரணம் என்பதுத் தெளிவாகியது.

எத்தனையோ பெண்களை கடந்து வந்தவன்தான். என்ன அவர்களை கடக்கும் போது அவர்கள் எல்லாம் நின்று இவனை கவனிப்பார்கள். இவளோ அவன் நின்று பார்க்கும்போதும் பிள்ளையின் முகத்தையே பார்த்திருப்பாள் . ஒரு போதும் அவளாக இவனை பார்த்தது  இல்லை.

அப்படியா இல்லையே ! அவளாகவும் அவனது அவனிடம் பேசுவாள் .

ஒரு நாள் இவன் வேலை முடித்து திரும்பி வந்து ஹாலில் அமர்ந்துக் கொண்டான். அப்போது தான் ஷூ சாக்ஸ் எல்லாம் அவிழ்த்து விட்டு வந்திருந்தான் வீட்டுக்குள் செருப்பு ஷூ அணியும் பழக்கம் இல்லை.

இவள் குழந்தையுடன் அங்கே தான் விளைடிக் கொண்டிருந்தாள்.

“அப்பா வந்துட்டாங்களா? யாரு வந்துருக்கா? அப்பா சொல்லுங்க. அப்பா !” சொல்லிக் கொண்டே அவன் அருகில் வந்தவள் குழந்தையை அவன் மடியில் குழந்தையை அமர வைத்தாள் .

‘மீனுவும் இப்போது சிறிது வெயிட் போட்டிருந்தாள். அது பற்றி எதுவும் கொடியிடம் எதுவும் வாய் திறந்து விடக் கூடாது. அப்புறம் யார் அவளிடம் வாங்கி கட்டிக் கொள்வது.’

மடியில் குழந்தையை வைத்துக் கொண்டு இவன் கொஞ்சிக் கொண்டிருந்தான்.

பின் கால்கள் மட்டும் தொக்கி தூக்கி இவன் ஆட்டிக் கொண்டிருக்க குழந்தையோ கிளிக்கி கிளிக்கி சிரித்துக் கொண்டிருந்தாள்.

“என்ன சிரிக்கறாங்களா என்னோட ராணியம்மா ?”

உள்ளே இருந்து ரவிக்கு காபி கொண்டு வந்த உமா அக்காவும் இதைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்.

இரவில் அதை நினைத்துப் பார்த்தவனுக்கு மனதில் ஏதோ புரியாத மகிழ்ச்சி.

‘தனக்கும் திருமணம் ஆகி இருந்தால் இப்படித் தான் இருந்திருக்குமோ.’

மனதிற்குள் ஏதோ ஒரு விதமான கற்பனை வந்தது. கல்யாணம் பெண்கள் என்றால் வெறுத்து ஒதுங்கியவனுக்கு அவனுக்கேத் தெரியாமல் திருமண ஆசை வந்து விட்டது போல.

இதுவே தினமும் வழக்கம் போல நடந்துக் கொண்டுதான் இருக்கிறது. அவளுக்கேத் தெரியாமல் சித்தப்பாவுக்கும் மகளுக்கும் ஏதோ ஒரு பிணைப்பை கொண்டு வைத்துக் கொண்டிருக்கிறாள். மீனு காணாமல் போன போது கூட அவனுக்கு இயற்கையான பதை பதைப்பு தான் இருந்தது. பாசம் என்றால் இருந்திருக்குமா தெரியவில்லை. ஆனால் அவனுக்கும் தெரியாம இப்போதெல்லாம் வீட்டிற்கு வந்தவுடன் அவன் தேவதையை கண்கள் தேட ஆரம்பித்து விட்டது. குட்டி தேவதை, கூடவே பெரிய தேவதையும் தான்.

வேறு ஒரு நாள் இப்படித் தான் அவன் ஏதோ லேப் டாப்பில் வேலை செய்து விட்டு சோம்பல் முறித்தான்.

“காபி வேணுமா சார்?”

“கொடேன் ”

“உமா அக்கா ரெஸ்ட் இருந்தா தொந்தரவு செய்ய வேணாம்.”

“சரிங்க சார் .” சொன்னபடியே உமா அக்கா குடும்பத்தினரிடம் போன் பேசிக் கொண்டிருக்கவும் இவளே காபி கலந்து தந்தாள் .

அப்போது எதேச்சையாக அவன் கால் விரல்களை பார்த்தவள் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தாள்

“இவள் முகத்தைப் பார்த்தவன்,

“என்ன? என்ன ஆச்சு? என் காலையே பாக்கற?

“இல்ல ஒன்னும் இல்ல.,” கூறியவள் அமைதியாக நகர்ந்துக் கொண்டாள்.

இவனும் குழந்தையைக் கொஞ்சுவதில் ஆர்வமானான் .

வேறு ஒரு நாள் அதேப் போல அவன் அறையில் அவன் இருந்தான். காலை நீட்டிக் கொண்டு கட்டிலில் அமர்ந்து ஏதோ ஒரு ஆங்கிலப் புத்தகம் படித்துக் கொண்டிருந்தான் .

கதவை தட்டி விட்டு அனுமதி கிடைத்ததும் உள்ளே நுழைந்ததும்,

“என்ன ? என்ன வேணும்?”

“அது ஒன்னும் இல்ல. நாளைக்கு போய் வெற்றியை ஒரு நடை பார்த்துட்டு வரவா ?”

“காலைல போயிட்டு சீக்கிரம் வந்துடுவேன் ”

இவள் பேசிக் கொண்டு இருக்கும்பேதே மகள் அவனிடம் தாவி இருந்தாள் .

“நீ போயிட்டு வா. அதுக்கு அவரை இங்க வர சொல்லி பார்த்துக்க வேண்டியது தானே ?”

“அது சரிதான். அவன் இப்போ ஒரு வீடு தனியா எடுத்து தங்கப் போறான். அதான் வந்து பார்க்க கூப்பிட்டான்.அதே அபார்ட்மெண்டுலதான் கடையும் பார்த்துருக்கான். அது தான் எப்படி இருக்குன்னு வந்து பாக்க சொன்னான். நீங்க வேண்டான்னு சொன்னா நான் போகல ”

“இல்ல அது பரவால்ல. நீ போயிட்டு வா. நீங்க எப்ப போகணும்?”

“மதியம் பாப்பா தூங்குவா. அந்த நேரம் போயிட்டு சட்டுனு வந்துடறேன். உமா அக்கா கிட்ட சொல்லவா?”

“இல்ல! அதெல்லாம் வேணாம். நானே வரேன்.”

“எப்படி போவ ?”

“வெற்றியே வந்து கூட்டிட்டு போவான். ”

“ஓ ! ஓகே!”

“எனக்கு அந்த போன் எடுத்து கொடு ”

“அவனைச் சுற்றி கொண்டு கட்டிலுக்கு சற்று தள்ளி இருந்த சார்ஜரில் இருந்து போனை எடுத்துக் கொடுத்தவள் அவன் காலை பார்த்தாள் . கட்டை விரல் நகத்தின் கீழே ஏதோ ஒரு சிறு புள்ளி கருப்பாக தெரியவும் உடனே தனது முந்தானையால் துடைத்து விட்டாள் . நாளைக்கு என்னென்ன பிளான்? பார்த்துக் கொண்டிருந்தவன் சட்டென அதிர்ந்து காலை இழுத்துக் கொண்டான்.

காதல் தொடரும் ..

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
7
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்