Loading

மழை நாள் அதுவும் வாரத்தின் இறுதியும். ஷக்திக்கு அலுவலகம் இல்லை என்றபோதும் சிவா சென்று தானே ஆகவேண்டும். 

இதோ அவள் கைக்கட்டு பிரிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் சென்றிருந்தது. மெல்லிய முறிவு என்பதால் ஒரு மாதத்திலேயே சரியாகி இருக்க, அவளின் அன்றாடப் பணிகள் சிலதை சிவாவின் துணையின்றி செய்யப் பழகியிருந்தாள் மங்கை.

இருந்தும் அவனை சார்ந்து இருக்கச் சொல்லி மனது முண்டியது! 

காதல் மனதும் அவளும் அவனை எதிர்பார்த்தனர்! 

உண்ணாமலை சென்றபின் அவளின் தவிப்பு அதிகரித்ததே தவிர குறையவில்லை. 

காலையிலேயே டாமி ஹில்ஃபைஜர் (Tommy Hilfiger) வெயிட் ஷர்ட் மற்றும் காக்கி கால்சராயில் காவல்நிலையம் சென்றிருந்தான்.

அனேகமாக சீக்கிரம் வந்துவிடுவான். மதியம் அவனுக்காக சமைக்கத் தோன்றிய போது தான் மழை வழுத்தது. 

செப்டம்பர் கடைசி, குளிரும் ஆரம்பித்திருக்க நல்ல வானிலை வேறு. சட்டென்று ஒரு உருளை வறுவலும் மிளகு ரசமும் கூட பூண்டு பொடியும் அரைத்து வைத்தால். 

அதுதான் அவனுக்கு மிகவும் பிடித்த சமையல். எளிமையில் இனிமை காண்பவன். அவன் வந்த பின்னர் அப்பளம் பொறிக்க எண்ணியவள் தனக்கு மட்டும் சூடாக ஒரு குழம்பியை போட்டுக்கொண்டு அவளின் ஆதர்ஷ திவானில் அமர்ந்துகொண்டாள்.

மழையின் அழகு சன்னல் வழி பார்த்து, முகர்ந்து, உணர்ந்து அவள் ரசிக்க அழையாமல் அவள் எண்ணம் கணவனின் வெற்று திண்ணிய மார்பை நினைவு படுத்தியது. 

உடலில் சட்டென்று ஒரு உதறல். இருபத்தி ஆறு வயது முடிவடையப் போகிறது அவளுக்கு. இருந்தும் இந்த தாம்பர்த்தியம் என்று நினைக்கும் போது இந்த உதறல் இயல்பாய் வந்துவிடுகிறது.

இளமை ஊஞ்சலாடும் வயது வேறு!

“ச்சீ.. லூசு” என்று தலையில் தட்டியவள் எண்ணத்தை மாற்றும் பொருட்டு பாடல்கள் கேட்க துவங்கினாள். அதுவோ,

பற பற பறவை ஒன்று

கர கர கர கரையில் நின்று..

என்று ஜி.வி.யின் குரலில் துவங்கி ஷ்ரேயா உடன் இணைந்து கொண்டு அவள் காதை இனிக்க செய்தது. அவளும் கூடவே பாடியபடி இருக்க,

உனது வேர்வை என் மார்புக்குள்

பிசுக்கு பிசுக்கென்று கிடக்குதே..

என்று முடிய, பாடுவதை நிறுத்திவிட்டாள் பாவை. 

அவள் அவ்வரிகளிலேயே நின்றுவிட்டாள். எண்ணம் தறிகெட்டு ஓடியது. நினைப்புகள் எல்லாம் அவளுக்கு எதிராய் சதி செய்ய, மீண்டு வருபவளுக்கு அது சோதனையாய் போய்விட்டது.

“என்ன ஷக்தி பாட்டுப் பாடிட்டு இருந்த, சட்டுனு நிறுத்திட்ட” என்றபடி திடும் என்று வந்த சிவாவை அவள் எதிர்பார்க்கவில்லை.

ஈர வேர்வைகள் தீரும்முன்

எனது உயிர்பசை காய்வதா

வானும் மண்ணும் கூடும் போது

நானும் நீயும் கூடாமல் வாழ்வது கொடுமை! 

அவன் அவளையும் சரி பாட்டையும் சரி கவனிக்கவே இல்லை. ஆனால் அவளுக்கு அது ஏதோ செய்தது. 

இத்தனை தூரம் கடந்த வந்து பாதை கடினமாகத் தான் இருந்தது. 

புகழேந்திரனை அவள் நம்பியது தற்செயல் தான். ஆனால் சிவாவுடனான அவள் வாழ்க்கை நிச்சயம் தற்செயல் அல்ல, அது இறைவனால் உருவாக்கப்பட்ட பிணைப்பு; ஆத்மார்த்தமான தூய பந்தம்.

அதை அவள் மனதும் ஏற்றது. அதை சிறக்க வைக்க அவள் சித்தமாய் இருக்கிறாள் தான் இருந்தும் ஒரு தயக்கம். 

தயக்கம் மட்டும் தான் தடை இல்லை. 

இதில் அவளின் நிலைப்பாட்டை மட்டுமே நாம் எடுக்க முடியாது. சிவனேஷ் என்ற மனிதனின் உணர்வுகளும் உணர்சிகளும் உள்ளடங்கியுள்ளது.

பெண்களுக்கு மட்டும் தான் இந்த உணர்வும் உணர்ச்சிகளும் சொந்தம்? நிச்சயம் அல்ல.

ஆணின் உணர்வுகளை மதித்து, அவனிற்காகக் காத்திருக்கிறாள் பெண்.

அவளிற்காக அவளின் மனநிலைக்காக என்று நினைத்து நினைத்து தன்னை பக்குவமாய் அவன் அடக்கி ஆள்வது அவளுக்கு முழுவதுமாகத் தெரியாது! 

இருந்தாலும் மனைவியாய் அவனுடன் தான் ஒன்ற வேண்டும் என்ற எண்ணச் சாரல் இப்போது பூந்தூரலாய் அவளுள் வீசுகிறது.

இந்த நீண்ட ஏழு மாதங்கள் அவள் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளால் அவள் அத்தனை பக்குவப்பட்டிருக்கிறாள். அனுபவப்பட்டிருக்கிறாள். 

அவளின் ஷிவ் பற்றிய அவளின் எண்ணங்கள் கூட சில மாற்றம் பெற்றிருக்கிறது. நண்பனாய் தாங்கியவன் அகன்று தன் கணவனாக அவனைப் பார்க்கும் போது, பார்வை ரசனையுற்றது. வெளிப்படையாக காதலுற்றது அவள் இருதயம்!

அவள் கண்கள் அவனை புதியதாய் பார்க்கும் பார்வை மாற்றம். ஷிவ்வாக இருந்தவன் அவள் கணவனாய் படிப்படியாக இந்த ஏழு மாதங்களில் முன்னேறி இருந்தான்.

அவன் செய்கையால், அன்பால், பார்வையால், அவளைத் தாங்கும் ஆண்மையால், காதலோடு காத்திருக்கும் கணவனாய்!

நிச்சயம் அவள் இவ்வளவு எளிதில் மனதளவில் மாற்றம் வந்திருக்க காரணம் மருத்தவரின் ஆலோசனையால் சிவாவின் கரிசணையால் மட்டுமே. தன்னுள் அவள் உழன்று தவித்த வரை அவளால் எந்த ஒரு முடிவையும் செயலையும் செய்ய முடிந்ததே இல்லை.

என்று அவள் மருத்துவர் ரமணி ராஜத்தை சந்தித்தாலோ அதன் பின்னான அவளின் எண்ணங்களும் அதன் பற்றிய பார்வைகளும் வேறாக ஷக்தி ஆராதனா அவளின் பழைய மனநிலை அடைய உதவியது. 

மனம் அதன் போக்கில் பறக்க, “ஆரும்மா, கோவில் போகலாமா” என்று கேட்டான் சிவா.

அவளுக்கு அவளின் நினைவுகளில் இருந்து விடபட எண்ணியவளாக ‘சரி’ என்றிருக்க, மாலைப் போல் சற்று பக்கத்தில் இருந்த அங்காளம்மன் கோவிலுக்கு செல்லலாம் என்றான் சிவா.

மதியம் உண்ட மயக்கத்தில் ஷக்தியை அணைத்தபடி படுத்துவிட்டான். அது அவர்களுக்குள் இயல்பாய் இருக்க, ஷக்தியும் அவனை அணைத்துக்கொண்டே படுத்திருந்தால்.

தூங்காது இருந்தவள் சற்று நேரத்தில் எல்லாம் கிளம்ப ஆயத்தமாக ஆரம்பித்தாள். 

மனதிற்கு சற்று இலகுவாய் தோன்ற, பிங்கும் ப்ளூவும் கலந்த ஆர்கேன்ஸா புடவையை அணிந்தவள், சிவா எழுந்து கிளம்பியவுடன் கோவிலுக்கு சென்றனர்.

திவ்ய தரிசனம். கண்களும் மனதும் நிறைந்துவிட ப்ரகாரத்தைச் சுற்றி வந்தனர் இருவரும்.

“அம்மன் இன்னும் என் கண்ணுக்குள்ளையே நிற்கறாங்க ஷிவ். அத்தன சாந்தம் அவங்க முகத்தில இன்னிக்கு” அவள் முகத்திலும் அவள் பேச்சுப் பட்டு சந்தோஷம் தெறித்திருக்க, மென்மையாய் அவள் கைகளை பற்றிக்கொண்டான், சிவனேஷ்.

அவர்கள் கிளம்பும் சமயம் அம்மன் சந்நிதியில் இருந்த ஐயர் அவளை அழைக்க, சுழித்தப் புருவத்துடன் அவரை அணுகினாள்.

மறுபூஜை நடைபெற மீண்டும் அம்மனை வேண்டியவளின் கையை நிறைத்தது அம்மன் மீதான பூக்களும் எலுமிச்சை ப்ரசாதமும். 

சுவிட்ச் போட்டது போன்று ஒளிர்ந்து விட்டது ஷக்தியின் முகம். கேட்டாலும் சில சமயம் கிடைக்காதது, அவளைக் கூப்பிட்டு கொடுத்தது போன்று அமைந்துவிட, இன்னும் நிறைந்துவிட்டாள்.

“இன்னிக்கு எல்லாம் ஜஸ்ட் வாவ் தான் கோவில்ல” என்று காரில் பயணம் செய்யும் போது சொல்லியவளைக் கலைக்காது ஹோட்டலுக்கு சென்று சாப்பிடவுடன் கடைத் தெருவில் குட்டி வாக் அழைத்து சென்றே வீட்டிற்கு அழைத்து வந்தான்.

அவன் எதையும் பேசவில்லை. ஷக்தியின் வாத்சல்யத்தை சிறு புன்னகையுடன் ரசித்து நின்றான், சிவனேஷ்.

மதியம் மழை பெய்த சுவடாக ஊரே குளுமையை போர்த்தியிருக்க, வீட்டு மாடியில் நின்றிருந்தான் சிவா.

வானத்தில் நிலவு மங்கி லேசான வெளிச்சத்தை வீசியபடி இருக்க, விண்மீன்கள் அங்கிங்கு இருந்து கண்சிமிட்டியது.

“உன்ன கீழ தேடினா சொல்லாம மேல வந்து நிக்கற” என்றபடி அவனுக்கான பாலுடன் வந்தால் ஷக்தி.

இளஞ்சூடான வெல்லம் போட்ட பால். அவன் குடிக்கும் பதத்திற்கு ஏதுவாய் இருக்க, அவன் மனமும் தலும்பலாய் இருந்தது ஷக்தியிடத்தில்.

“ஆரு” என்று கையருகே இருந்தவளை பக்கவாடாக அணைத்துக்கொண்டான்.

அந்த ஏகாந்த வேளை அவர்களின் காதல் பொழுதை மொத்தமாய் கொள்ளையிட பார்த்தது.

“என்னவாம்” என்றவள் அவனை முன்பிருந்து அணைக்க, “சோதிக்காதடீ” என்றான்‌ அவள் நெற்றியோடு முட்டியபடி.

அவள் முகத்தை நிறைத்த புன்னகை அவனையும் நிறைத்தது. 

“மை லவ்” என்று அவள் முகத்தை தன்னோடு அழுத்திக்கொண்டவன் மனது படபடத்தது.

“என்னங்க” என்று அவன் முகத்தைப் பார்க்க, அதில் தெரிந்த உணர்வுகள் அவளை பேச்சிழக்க வைத்தது.

அவள் மீதான மொத்த காதலையும் அதில் ஒளிந்த அவன் கண்களும் முகத்தில் தொனித்த சாந்தமும், “ஷிவ்” என்று அவளை பேச வைத்தது.

“ஆரு’ம்மா.. இன்னிக்கு ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுற நீ” என்றுவிட்டான்.

“என்ன?”

“ம்ம்.. ஹூம்ம். நத்திங்” என்றவன் குரலே கட்டிக்கொடுக்க,

“டேய்” என்று அவன் கண்களை ஊடுறுவினாள்.

அவளையும் மீறி, “மை மேன்” என்றபடி அவன் அதரங்களை மென்மையாய் அவள் தீண்டியிருக்க, மொத்தமாய் கொதித்தெழுந்தான், சிவனேஷ் வீரபத்திரன்.

“என்னை என்னடி பண்ணுற” என்றவனின் அதீத நெருக்கம் அவர்கள் இருவரையுமே மயக்கியது.

நிமிடங்கள் மெதுவாகக் கடக்க, மாடியின்‌ வெற்றுத் தரையில் கணவனின்‌‌ மார்பை அணைத்துக்கொண்டு படுத்திருந்தவள் உடல் குளிர்ந்திருந்தது.

மழை பெய்து குளிர்ந்திருந்த தரை, அதன் குளுமையை அவளுக்கு ஏற்றியிருந்தது. 

அவன் கண்களோ அவளுக்கு அவனின் உணர்வுகளை காட்டிக்கொடுக்க, உள்ளூர அவளுக்கு ஏதோ தடதடப்பு. 

அதை அவள் மறைக்கவும் விரும்பவில்லை. அவனிடத்தே அதை சேர்ப்பிக்கும் வழியாக,

“எனக்கான ஸ்டார்ஸ்ஸ கவுண்ட் பண்ணுறேன்” என்றாள் அவன் கண்களில் தனக்காக ஒளிர்ந்ததைப் பார்த்துகொண்டு.

இரண்டு நாள் தாடியுடன் இருந்த அவன் கன்னத்தில் அவள் கை வைக்க, அவள் கையின் நடுக்கம் உணர்ந்து சிரித்தான் ஆணவன்.

“ஃபஸ்ட் டைம்ல” என்றாள் இழுவையாக. 

உடல் குலுங்க சிரித்தவன், “உரிமை இருந்தா இப்படி நடுங்காதே” என்றவன் அழுந்த அவளைப் பார்த்தபடி, “கை” என்றான் நமட்டு சிரிப்புடன்.

“ஷிவ்” என்றாள் மனதில் எதையோ வைத்துக்கொண்டு.

“என்னவாம்”

”இந்த கண்ணுல இப்போ நான் பார்க்கற இதே ஸ்பார்க்கில்.. எனக்கான இந்த ஸ்டார்ஸோட ஸ்பார்க்கில் (நட்சத்திர ஒளி) கடைசி வர இருக்குமா?” 

அவள் கேள்வியில் படுத்திருந்தவன் எழுந்துவிட்டான்.

அவனைப் பார்த்திருந்தவள் அவன் பதிலுக்காய் எதிர்பார்த்திருக்க,

“நான் அந்த நட்சத்திரமா மாறினா கூட என்னோட ஸ்பார்க்கில் எப்பவும் நீ தான் ஷக்தி. நான் எப்பவும் மாறமாட்டேன்டி” 

சிரித்தவள், “இதுக்கு நான் அப்படியே கசிந்துருகி உன்ன ஹக் பண்ணிக்கனுமா ஷிவ்” என்றவள் கண்களில் கனிந்த கசிவு.

“பண்ணணுமே. பண்ணா தான நானும் அன்பே ஆருயிரேன்னு உன்ன கொண்டாடுவேன்” என்று அவன் சிரித்துக்கொண்டே பதில் சொல்ல, அவள் சொன்னதை செய்தாள். அவன், அவன் சொல்லாததையும் செய்தான்.

“ஷிவ்வ்வ்” என்று அவன் அவளுடன் இணைந்திருந்தபோது அவள் கத்த,

“என்னடீ எரும.. வாயத் தெறந்த அவ்வளவு தான்” என்றவன் மோக உடைப்பில் அவளுக்கு நிகராய் அவனும் கத்த,

“இரு.. இரு.. இரு.. பாட்டி கொடுத்த சாரீய கட்டிட்டு வரேன்” என்க,

“பைத்தியமே, உள்ளதே தேவையில்ல இதுல எதுக்குடீ இன்னொன்னு?”

“டேய்.. உங்கம்மாதான் சொன்னாங்க” 

“அவங்க சொல்லுவாங்க, நீ அமைதியா இரு”

“நோ மாத்திட்டு..”

“ஸ்ஸ்ஸ்.. இதுவும் உங்க பாட்டி வாங்கிக்கொடுத்தது தான். உன் பர்த்டே பிரசன்ட். இனி பேசாத, என் மூடே போயிடும்” என்று‌ அவளைக் கையில் ஏந்திய படியில் இறங்கியபடி சொன்னவனைப் பார்த்தவள்,

“உனக்கு மூட் எல்லாம் வருமா” என்க, அவன் முழுமையாய் ஷக்தியின் சிவாவாக மாறி அவளைக் கொள்ளையிட ஆரம்பித்திருந்தான்.

மஞ்சத்தை தேடி அவர்களின் நீண்..ட பயணம் முடிவிற்கு வந்திருக்க, அங்கு பெண்ணவள் நீரசமாக (தாமரை) மலர்ந்திருக்க அவளின் தேனை மதாமத்து (மிகுந்த மயக்கம்) வண்டாய் பருக ஆரம்பித்திருந்தான் காளையவன்.

சிணுங்களும் முணங்களும், தமிழின் உயிரெழுத்து சப்தத்துடன் அவனின் மூச்சுகளும் அவளின் மறுப்புகளும் சேர்த்து இருவரின் மெய்யும் ஒன்றியது ஒருவழியாய்! 

சிறுகச் சிறுக சேமித்த காதல் துளியை, சிந்தாது சிதராது பதமாய் அவளுக்குள் இதமாய் இருந்தபடி அவளுள் இருந்து எடுத்தவன் செயலால் மயங்கினாள் மங்கை.

ஆழம் சேர்ந்து இருவரும் தங்கள் நிலை மறந்து, காதல் கொண்டு அதீத காதலால் மோட்சம் வேண்டி நின்ற தருணம், பரிபூரண நிறைவு.

கிறங்கிக் கிறங்கி அவனின் குலாப்பின் ஒவ்வொரு பட்டு இதழையும் அவன் மெல்லிய முத்தத்தில் லேசாய் கடித்து சுவைக்க, அவள் உலகம் சுழன்று..

சரிசமமாக முடிந்த காதல் இரவில் வெற்றி கிட்டியது என்னமோ, இருவருக்குமே!

“குலாப்” என்று நிறைவான மனதுடன் அவள் உச்சியில் அச்சரம் ஒன்றை அவன் வைக்க, அவள் முகத்தில் பூரண மகிழ்வும் நிறைவும்.

“எனி பையின்” என்றவன் விசாரிப்பு கூட அத்தனை ஆதூரமாய் இருந்தது.

“இருக்கு. பட் டாலரேட் பண்ணிக்கற லெவல் தான்” என்று கண்ணைச் சிமிட்டினால் பாவை.

“ம்ம்ப்ச்.. வலிக்குதா” என்றாள் கண்களால் அவன் தோளில் இருந்த அவள் நகங்கள் செய்த ஓவியத்தைப் பார்த்தபடி.

“ம்ம்… ஹூம்ம்” என்று அவள் கழுத்து வளைவில் புதைந்தவன் அவள் கேளாததையும் சொன்னான்.

நிமிடங்கள் கடந்து, “தேங்க்ஸ் குலாப்” என்றவன் கண்கள் அப்படி மின்னியது.

“நானும் நானும்” என்றால் வாகாக அவளின் ஷிவ்விடம் ஒன்றிக்கொண்டு.

சில அர்த்தமற்ற பேச்சுக்களும், எல்லையற்ற சீண்டல்களும், முற்றுப்பெறாத வாக்கியங்களும் என்று அவர்களின் நேரம் தொடர,

அவள் மடல் கவ்வியவன், “என்ன இப்போ நீ நினச்சுப் பார்த்தது சரியா இருக்கா” என்றான் அவள் முகம் நிமிர்த்தி அவள் நெற்றியில் முட்டியபடி.

“என்ன நினச்சேன்” என்றாள் யோசித்தபடி.

அவள் கன்னத்தை மெல்ல ஊதிக் கடித்தவன், “உனது வேர்வை என் மார்புக்குள்

பிசுக்கு பிசுக்கென்று கிடக்குதே” என்று மதியம் அவள் கேட்ட பாடலை அவன் மெல்லிய குரலில் பாடிக்காட்ட, மொத்தமாய் சிவந்துவிட்டாள் பெண்ணவள்.

கண்ணை மூடிக்கொண்டு, “எப்ப வந்த ஷிவ் நீ?” என்றபடி அவன் மார்புக்குள் கிட்டத்தட்ட புதைந்துகொண்டாள் பெண்ணவள்.

அதில் அப்படி ஒரு சிரிப்பு அவனிற்கு. 

“உன்ன நீயே லூசுன்னு திட்டிக்கும் போதே வந்துட்டேன். சரி எதுக்கு இத சொல்லி என் மனைவிய சங்கடப்படுத்தன்னு பார்த்தா”

“எனக்கே சங்கடம் ஆகிருச்சே இப்போ” என்று மேலும் முண்டினாள்.

“குலாப்”

“ம்ம்”

“ஹே குலாப்”

“என்னடா”

“இல்ல.. திரும்பவும் நட்சத்திரத்த கவுண்ட் பண்ணுறியா” என்றவன் கேட்டது முதலில் புரியாது விழித்தவள் பின் அவன் விழிகளை பார்த்தவுடன் புரிந்துகொண்டாள் அந்த துணை ஆட்சியர்.

அடுத்து அடுத்து என்று நடைபெற்ற அனைத்திற்கும் துணை ஆட்சியரும் இன்ஸ்பெக்டருமே அங்கு பெறுப்பேற்று நிகழ்வை பதிவு செய்தனர்!

அதிகாலையில் அந்தி வானத்திற்கு நிகரான சிவப்பில் மின்னிய மனைவியின் முகத்தைப் பார்த்தபடி படுத்திருந்தான், சிவனேஷ்.

அவள் பருவம் ஏய்தும் முன்பிருந்தே பார்த்தவன். அவளுடனே அவனும் கிட்டத்தட்ட வாழ்க்கையின் ஒவ்வொரு பரிணாமத்திலும் வளர்ந்தவன் தான். என்றபோதும் இதோ இப்போது, அவன் கையணைப்பில் அவன் கொடுத்த அத்தனை சுக வலிகளைத் தாங்கிக்கொண்டு அவனுக்கே அவனுக்காய் இருந்த ஷக்தி பெண்ணை, அவன் குலாப்பை அத்தனை பிடித்தது, பித்தம் கொள்ளும் வகையில்.

சிறியதாய் வாய் பிளந்து தூங்கியவளின் மூக்கின் நுனியில் அழுத்தமாய் முத்தமிட்டான் என்ன முயன்று தன்னை அடக்க முடியாது ஆழ முத்தமிட்டிருந்தான் அவன் ஆரு’மாவை. 

அதில் கலையா உறக்கத்துடன் கண்கள் சுருங்கிப் பார்த்தவளிடம்,

“ஒரு கவித சொல்லவாடி” என்றான் அவள் செவி மடலை நீவியபடி.

“ம்ம்” ஊக்கினாள் தூக்கத்தில் பெண்ணவள்.

“காமம் அடங்கிய பின்னும்

ஆசை தீர்ந்த பின்னும்

உன்மேல் கொண்ட காதல் தீராதடீ, குலாப்” என்றான் கண்களில் அத்தனை போதையுடன். 

அது, அவனின் குலாப் போதை!

***

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
9
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment