Loading

நினைவுகள் -29

அன்று…

” சொல்வது எளிது. ஆனால் செயல்படுத்துவது எவ்வளவு கஷ்டம்.” என்பது அனன்யாவுக்கு நன்கு புரிந்தது.

 ராதிகாவையும், ரூபனையும் தொந்தரவு செய்யாமல் ஒதுங்கிப் போக நினைக்க. அதை செயல்படுத்துவது அவ்வளவு கடினமாக இருந்தது.

ராதிகாவும், விஸ்வரூபனும் ஃபோன் மூலமாக தங்கள் காதலை வளர்த்தனர்.

 ரிசல்ட் வரும் வரை காத்திருந்த அனன்யா, ரிசல்ட் வந்த பிறகு அவர்களது ஹாஸ்பிடலிலே கொஞ்ச நாள் ஃப்ராக்டிஸ் செய்தாள்.

 பிறகு மேற்படிப்புக்கு எக்ஸாம் எழுதி காலேஜில் சேர்ந்து விட்டாள். அது வரைக்கும் தனது முகத்தில் சிறு வருத்தத்தைத் கூட வர விடாமல், தன்னை உற்சாகமாகக் காட்டிக் கொண்டாள்.

புதுசு புதுசாக எதையாவது கற்றுக் கொள்கிறேன் என்று வீட்டை ரெண்டு பண்ணிக் கொண்டிருந்தாள்.

 ருக்குமணியும் பேத்தியின் குறும்புத்தனத்தை ரசித்துக் கொண்டிருந்தாள்.

ருக்குமணி அனன்யாவை மேற்படிப்பு படிக்க தங்களது காலேஜ்ல சேரட்டும் என்றுக் கூற…

விஸ்வரூபனோ, ” பாட்டி… அதெல்லாம் சரி வராது. இங்கே இருந்தா அவளுக்கு அனுபவம் கிடைக்காது.” என்றுக் கூறியவன் வேறொரு சிறந்த காலேஜில் சேர்த்து விட்டான்.

இதற்கும் ருக்குமணி முணுமுணுக்க. அவன் அதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் இருந்தான்.

விஸ்வரூபன், ராதிகாவிடம் ஃபோனில் பேசும் போது, ” அனன்யாவை காலேஜ்ல சேர்த்துட்டோம் ராதா.” என.

” ஓ… அவ சொல்லவே இல்லையே.”

” நீயாச்சு… உன் ஃப்ரெண்டாச்சு உங்களுக்கு இடையில் நான் வரலை. என்னை ஆளை விடு. எதுவா இருந்தாலும் நீ அவக் கிட்டயே கேளு.” என்ற விஸ்வரூபன் வைத்துவிட.

 உடனே அனன்யாவிற்கு அழைத்து விட்டாள் ராதிகா.

 ” அனு! எப்படி இருக்க டி. ஒரு ஃபோன் கால் கூட இல்லை. ஆளையே காணும்.” என.

” ம்… நான் நல்லா இருக்கேன் மேடம்‌. நீங்க தான் பிசியா இருக்கீங்க.” என்று அனு கலாய்க்க.

” அது…” என்றவள் நாக்கை கடித்துக் கொண்டு அமைதியாக இருந்தாள்.

” மேடம் வேலையிலே பிஸியா இருக்கீங்க. கிடைக்கும் கொஞ்ச நேரத்திலும் கனவில் மிதக்க தான் டைம் இருக்கிறது. நான் டெய்லி அம்மா கிட்ட பேசிட்டு தான் இருக்கேன். அதுக்கூட உனக்குத் தெரியலை. காதலர்கள் வாழ்க்கைல இதெல்லாம் சகஜம் தான்னு பொறுமையா இருந்தா என்னையே கிண்டல் பண்ணுறீயா? ” என்று அனுக் கூற.

” சாரி டி அனு. அதை விடு. காலேஜ் நீ என்னோட தான் சேருவேனு நினைச்சேன். ஆனால் நீ பீ.ஜி ஜாயின் பண்ணப் போறீயா?” என…

“நீ தான் இரண்டு வருஷமாவது வொர்க் பண்ணிட்டு தான், பீ.ஜி பண்ணணும் என்று சொன்ன… அதுவுமில்லாமல், நீ எப்படியும் கார்டியாலஜி தான் படிக்கப் போற? நான் டி ஜி ஓ படிக்கப் போறேன். அதான் நான் இப்பவே சேர்ந்துட்டேன்.

 எப்படியும் நீ எங்க வீட்டுக்கு தான வரப் போறே. அப்ப உன்னை விடாமல், உன் கூடவே சுத்துறேன். போதுமா? ” என்ற அனு சிரிக்க, சிரிக்க கேலி செய்து போனை வைத்தாள்.

ராதிகாவின் மனதில் ஏதோ ஒரு நெருடல். ஆனால் அது என்ன என்று யோசிக்கவில்லை. அப்படியே விட்டுவிட்டாள்.

 காலங்கள் வேகமாக ஓட ராதிகாவிற்கு ஹாஸ்பிடலுக்கு செல்வதில் பொழுது போனது. மிச்ச சொச்ச நேரத்தை விஸ்வரூபன் விழுங்கினான்.

 அனுவும் காலேஜுக்கு செல்ல ஆரம்பித்திருந்தாள்.

  அங்கு சென்று தான் ஆகாஷின் அறிமுகம் கிடைத்தது. ஆனால் உடனே கிடைக்கவில்லை.

முதல் நாள் காலேஜில் அனன்யா நுழைய… மனமோ, ஒரு வெறுமையை சுமந்திருந்தது. ‘ இப்போ மட்டும் ராது என் கூட இந்த காலேஜிற்கு வந்திருந்தா, எவ்வளவு ரகளை பண்ணிருப்போம். முதல் நாளே இவ்வளவு இரிட்டேட்டிங்கா இருக்கு. எப்படி நான் படிச்சு, மகப்பேறு மருத்துவரா ஆகப் போறேனோ.’ என்று பெருமூச்சு விட்டுக் கொண்டு நடந்தவள், எதிரே வந்த நெடியவனின் மேல் மோதி நின்றாள்.

” ஹேய் பார்த்து…” என்றவனை நிமிர்ந்துக் கூடப் பார்க்காமல், ” சாரி…” என்று ஒரு தலையசைப்புடன் நகர்த்துச் சென்றாள்.

 பூக்குவியல் போல தன் மேல் மோதிச் சென்றவளை, ஆர்வமாக பார்த்தான் ஆகாஷ்.

இதுவரை அவன் பார்த்த பெண்கள், அவனது கவனத்தை கவரவே முயல்வார்கள்.

ஆனால் முதல் முறையாக ஒரு பெண் அவனை கல்லோ, மண்ணோ என்பது போல் ஆகாஷை பார்த்து விட்டு,அமைதியாக சென்று விட..

அவளது அமைதியே, ஆகாஷின் கவனத்தை ஈர்த்தது.

அன்றிலிருந்து, அவளைப் பார்ப்பதே ஆகாஷின் முக்கிய வேலை.

அங்கு படிக்க வந்திருந்தவர்கள், தங்களது திறமையை வெளிப்படுத்தி ஆராவாரமாக இருக்க. இவளோ, ஆர்ப்பாட்டமே இல்லாமல் கவனத்தை படிப்பில் வைத்தாள்.

அவள் கூடத் தான் ஆகாஷ் படிக்கிறான் என்பதே அவளுக்குத் தெரியவில்லை.

‘தன்னைப் போல அன்புக்கு ஏங்குகிற ஜீவன்.’ என்று நினைத்த ஆகாஷுன் மனதில் பார்த்த உடனே பதிந்தாள்.

அவனுக்கோ எப்படியாவது அவளிடம் பேசி முதலில் நட்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணினான்.

அதற்கான வாய்ப்பு உடனே கிடைக்கவில்லை. ஒரு மாதம் சென்ற பின்னே தான் கிடைத்தது.

ஒரு நாள் கிளாஸ் முடிந்து ஃப்ரீ டைம் கிடைத்ததும், வழக்கம் போல லைப்ரரிக்கு சென்றிருந்தாள்.

எப்படியும் அனன்யா லைப்ரரிக்கு தான் வருவாள். ‘இன்றாவது தன்னைக் கண்டு கொள்கிறாளா? பார்ப்போம்…’ என்று நினைத்த ஆகாஷ், அவளுக்கு முன்பே வந்திருந்தான். பேருக்கு ஒரு புக்கை கையில் எடுத்து வைத்துக் கொள்ள‌…

 லைப்ரரியில் நுழைந்த அனன்யாவோ ஒரு மெடிக்கல் சம்பந்தமான புத்தகத்தை தேடிக் கொண்டிருந்தாள்.

அதுவோ ஆகாஷின் கைகளில் இருந்தது.

 அதை ஒரு கணம் பார்த்த அனு,’ கேட்போமா? வேண்டாமா?’ என்று தனக்குள் யோசிக்க…

 ஆகாஷ் கண்டுக் கொண்டான். அவளுக்குத் தேவையான புத்தகம் தன் கையில் இருக்கிறது.

கடவுளுக்கு நன்றியை மனதிற்குள் கூறிக் கொண்டு, இந்த சான்ஸை மிஸ் பண்ண வேண்டாம் என்று எண்ணியவன், அவளருகே சென்று, ” ஹலோ அனன்யா… உங்களுக்கு இந்த புக் வேண்டுமா ?” என்று வினவ…

“ஆமாம்…” என்றுக் கூறியவள்,

அவன் புத்தகத்தை நீட்டவும், “இல்லை வேண்டாம்.” என்றாள்.

” பரவால்ல நீங்க படிச்சுட்டு தாங்க. நான் அப்புறமா படிக்கிறேன்.” என்று வற்புறுத்தி அவளிடம் கொடுத்துவிட்டு சென்றான்.

இப்படி ஆரம்பித்தது தான் அவர்களுக்கிடையேயான பழக்கம்.

ஒரு நாள் இருவரும் படிப்பை பற்றி சுவாரசியமாக பேசும்போது, அனு அவனை வாயே திறக்க விடாமல் கிண்டல் செய்துக் கொண்டிருந்தாள்.

 அவளுடைய வால்தனம் மீண்டும் ஆரம்பமாகிருந்தது.

 ” அனு… உன்னப் பார்த்தா அமைதியான பொண்ணுன்னு நெனச்சேன். ஆனால் சரியான அராத்தா இருக்க.” என்று அவளைப் பார்த்து புன்சிரிப்புடன் கூற‌.

” ஹலோ ஆக்ஸ்…. நான் சொன்னேனா நான் அமைதியான பொண்ணுன்னு. ஆனால் உங்களுக்கு எல்லாம் அமைதியான பொண்ணா இருந்தா தானே பிடிக்கும். எங்களை போல வஞ்சமில்லா நெஞ்சமுள்ள வஞ்சியரை யாருக்கு பிடிக்கும்?” என்று குறும்பாக அவனைப் பார்த்துக் கூறினாள் அனு.

” யார் சொன்னா? உன்னை பிடிக்காது என்று. எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். என் உயிர் மூச்சு இருக்கும் வரை உன்னோட வாழ ஆசை.

அப்புறம் ஆக்ஸ் என்று மட்டும் கூப்பிடாதே. எருமை என்று வேண்டும்னாலும் கூப்பிடு. உனக்கு ஃபுல் ரைட்ஸ் இருக்கு.” என்ற ஆகாஷ் அவளைப் பார்த்து கண்ணடித்து சிரித்தப்படியே தனது காதலை சொன்னான்.

 அதிர்ச்சியில் வாயைப் பிளந்த அனன்யா,என்ன பதில் சொல்வது என்றுத் தெரியாமல், அங்கிருந்து

ஓடி விட்டாள்.

இன்று…

” டேய் ரூபன்… ” என்ற குரல், தன் பின்னால் இருந்து ஒலிக்க…

திரும்பி பார்த்தால், கிருஷ்ணன் முறைத்துக் கொண்டு நின்றார்‌.

அவரைப் பார்த்ததும் அமைதியாக, விஸ்வரூபன் இருக்க…

அவரோ, ” என்ன நினைச்சுட்டு இருக்க ரூபன்? நான் தான் அவளை ஒன்வீக் லீவ் போட சொன்னேன். இங்க ரெண்டு டாக்டர் வீட்டில் இருக்கோம்‌. அங்க நடத்துற லெசன்ஸ நாங்க உனக்கு கவர் பண்ணிடுறோம்னு சொல்லியிருந்தேன். என்ன ஏதுன்னு தெரியாமல் நீ இப்படி பேசுறது தப்பு. முதல்ல ராதிகா கிட்ட மன்னிப்பு கேள்.” என.

 தன் தந்தைக் கூறியதைக் கேட்டவன், தனது தவறை உணர்ந்து, ராதிகாவைப் பார்த்து, ” சாரி…” என்றவன் பாதி சாப்பாட்டில் எழுந்து செல்ல முயல…

 இப்பொழுது ரஞ்சிதம், ” தம்பி சாப்பாட்டை வேஸ்ட் பண்ணக் கூடாது. அது நேஷனல் வேஸ்ட்.” என்றுக் கண்டிப்புடன் கூற…

தலையசைத்தவன் ஒன்றும் கூறாமல் உண்ண ஆரம்பித்தான்.

 “எதுக்காக அண்ணா லீவு போட சொன்னாங்க என்று கேட்கலையா ரூபன்?” கௌரி எடுத்துக் கொடுத்தாள்‌‌.

விஸ்வரூபன் தன் தந்தையை பார்க்க…

” நீங்க ரெண்டு பேரும் ஹனிமூன் போறதுக்காகத் தான் லீவ் போட சொன்னேன். எங்கேயும் போகலைன்னா… நம்ம சர்க்குள்ல பெரிய இஸ்யூஸ் ஆகிடும். அதுவும் நம்ம ஸ்டேட்டஸ்காக எல்லாரும் எதிர்பார்ப்பாங்க… சோ டூ ஆர் த்ரி டேஸ் எங்கேயாவது போயிட்டு வந்துடுங்க.” என்றுக் கூறியவர் சாப்பிட அமர.

” ஆனா பாப்பா என்னை விட்டிட்டு இருக்க மாட்டா.” என்றான் விஸ்வரூபன்.

” பாப்பாவையும் கூட்டிட்டு போ… நோ ப்ராப்ளம்.” என்ற கிருஷ்ணன் தன் சாப்பிட்டில் கவனத்தை செலுத்த…

இப்பொழுது கௌரியும், ரஞ்சிதமும் தலையிட்டர்கள். ” பாப்பாவை எப்படி இவங்களால பார்த்துக்க முடியும்.” என்று வினவ.

” பின்னே நர்ஸ், கேர்டேக்கர் எல்லோரையுமா ஹனிமூனுக்கு அவங்கக் கூட அனுப்ப முடியும். எல்லாம் அவங்க பாத்துப்பாங்க‌. ஒரு குழந்தையைக் கூடப் பார்க்க முடியாதா?” என்று எல்லோரது வாயையும் அடைத்து விட்டார் கிருஷ்ணன்.

 ‘ கேர்டேக்கரை எங்கக் கூட அழைத்துச் செல்கிறோம்.’ என்று அடுத்து அதைத் தான் கேட்கலாம் என்று நினைத்திருந்தான் விஸ்வரூபன்.

அதற்கும் கிருஷ்ணன் ஆப்பு வைக்க… குழப்பத்துடனே அங்கிருந்து கிளம்பினான்.

” மாமா… விஷ்வா பேசிய முறை தப்பா இருந்தாலும், நான் படிக்கலைன்ற ஆதங்கத்துல அப்படிப் பேசிட்டார். நீங்க அதைப் பெரிசு பண்ணாதீங்க‌.” என்றாள் ராதிகா. மனதிற்குள்ளோ, ‘ நான் உன் மேல வெறுப்பா இருக்கணும்னு தான் இப்படிலாம் செய்யுற‌… ஆனா என்னைக்காவது என் கிட்ட மாட்டாமலா போவ… அன்னைக்கு வச்சு செய்யுறேன்.’ என்று திட்டிக் கொண்டிருந்தாள்.

” அதை விடு மா. டூருக்கு எங்கே போறதுன்னு பேசி முடிவெடுங்க.”

” மாமா! அவசியம் போகணுமா. எனக்கு பயமா இருக்கு.” என்றாள் ராதிகா.

” மருமகளே… நீ யாருன்னு எனக்குத் தெரியும். நீ படித்த ஸ்கூல்ல நான் தான் ஹெட்மாஸ்டர்… இல்லை, இல்லை… நீ படிக்குற காலேஜில நான் தான் டீன். அதை மறந்துட்டீயா… உன்னைப் பற்றி நல்லா தெரியும். ” என்ற கிருஷ்ணன், காலேஜில் அவரைப் பார்த்து கண்ணடித்ததை நினைத்துப் பார்த்தவர் சிரிக்க…

ராதிகாவாலும் சிரிப்பை அடக்க முடியாமல், அசடு வழிய சிரித்து வைத்தாள்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்