
அன்று ஆசிரமம் சென்ற யாழிசைக்கு ஆடவன் பேசியது மட்டுமே எண்ணத்தில் ஓடி கொண்டிருந்தது, அதோடு வயிற்றில் கைவைத்து பார்த்தவளுக்கு, ஒரு தாயாக குழந்தையை எவ்வித தீய சுழலும் இல்லாமல் வளர்க்க வேண்டுமென்று எண்ணம் இருக்க தான் செய்தது.
அதோடு அவன் மட்டும் வரவில்லை என்றால் தான் செய்த பாவத்திற்கு தன்னோடு குழந்தையும் மண் மேல் கால் வைக்கும் முன்னே மண்ணை விட்டு போயிருக்கும் அல்லவா, நினைக்கவே திக்கென்று இருந்தது.
அவன் பேசியதை நினைத்து நினைத்து குழம்பியவள் தன்னால் இன்னொருவரின் வாழ்வும் சிறக்கும் அதோடு குழந்தையும் தன்னை போல் அனாதையாக வாழ கூடாது, யாரோ செய்த பாவத்திற்கு பிஞ்சு குழந்தை தண்டனை அனுபவிப்பதா என்று தனக்குள்ளே பல கேள்விகள் கேட்டு, ஒரு வழியாக முடிவை எடுத்தவள் பெருமூச்சு விட்டு அவனுக்கு அழைத்தாள்.
பெண்ணவளின் அழைப்பில் ஆடவனின் இதழ்கள் விரிய அழைப்பு ஏற்ற ஆர்யா “தேங்க்ஸ் யாழிசை” என்றதில் புரியாத முழித்தவள் “எதுக்கு”
“எனக்குன்னு ஒரு வாழ்க்கை கொடுக்கிறதுக்கு”
“நான் என் முடிவ சொல்லவே இல்லையே.. பின்ன எப்படி”
“ஐ னோ யாழிசை நீ ரொம்ப நல்லவ.. சரி நாளைக்கு உன் நேம்ல ஒரு லெட்டர் வரும்.. அத ஹோம்ல காட்டி ரெண்டு நாள் வெளில போகனும்ன்னு சொல்லி ரெண்டு நாள் அப்புறம் நேத்து நம்ம மீட்ட பண்ணின இடத்துக்கு வந்திரு”
“என்ன லெட்டர்”
“அது எனக்கு ஒரு பிஏ வேணும்ன்னு.. அதுக்கு இன்டர்வியூ லெட்டர் போல நானே ரெடி பண்ணி செண்ட் பண்ணுவேன்.. அத காட்டி ரெண்டு நாள்ல அங்கயிருந்து கிளம்பு”
“ஆமா.. நீங்க யாரு” என்ற கேள்வியில் சிரித்தவன் “நான் ஒரு டிராயிங் ஆர்டிஸ்ட் பெயரு ஆர்யன்..” என்றதில் வாயில் கைவைத்து வியந்தவள்
“வாட்.. இடைல டெல்லில நடந்த டிராயிங் எசிபிசன்ல கூட உங்கள பத்தி நாடே பேச்சுசே அந்த ஆர்யனா”
“ஆமா.. அந்த ஆர்யன் தான்.. அதுல உனக்கு எதுவும் பிரச்சனையா”
“என்னால நிஜமா நம்ப முடியல.. எவ்வளவு பெரிய ஆளு, நீங்க போய்..” என்றவளின் தயக்கத்தை உணர்ந்தவன் “உலகத்துக்கு பெரியாளு தான்.. ஆனா நிஜ வாழ்க்கைல நான் டம்மி தான்.. நீ மனசு வச்சா டம்மிய ரம்மியா மாத்தலாம்.. ஒரு விஷயம் சொல்லுறேன் நல்ல கேட்டுக்க நான் உனக்கு வாழ்க்க பிச்சை போடல.. நீ தான் என் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்க போற சோ தேவையில்லாம யோசிக்காத”
“ம்ம்..”
“சரி நாளைக்கு லெட்டர் வரும் சொன்னத நினைவு வச்சிக்க.. நீ ரெண்டு நாள் கழிச்சு வரவும் நமக்கு கல்யாணம்”
“வாட் கல்யாணமா” என்று பெண்ணவள் அதிர, அதில் பெருமூச்சு விட்டவன் “ரெண்டு பேரும் நிறைய விஷயம் ஃபேஸ் பண்ண வேண்டியிருக்கும் யாழிசை.. ஒரு ஆம்பளையா எனக்கு எந்த பிராப்ளமும் வராது ஆனா உனக்கு அப்படியில்ல என்கிட்ட வந்துட்டாலே நீ முழுசா என் பொறுப்பு.. உன்ன யாரும் தப்பா ஒரு வார்த்தை பேச கூட அனுமதிக்க மாட்டேன்.. நான் ஏற்கனவே சொன்னது தான் என் சுண்டு விரல் கூட உன்மேல படாது அதோட குழந்தை பிறந்ததும் உனக்கு என்கூட இருக்க விருப்பமில்லன்னா தாராளமா என்னவிட்டு போகலாம்.. இன்னொரு கல்யாணம் கூட பண்ணிக்கலாம் நான் தடுக்கவே மாட்டேன்”
“எனக்கு பயமா இருக்கு சார்.. எல்லாம் சரியா வருமா”
“ஒரு பயமும் வேண்டாம் யாழிசை.. என்ன நீ முழுசா நம்பலாம் உனக்காக வேணும்ன்னா நம்ம மேரேஜ் ரெஜிஸ்டர் பண்ணிக்க வேண்டாம்.. ஏன் தாலி கூட நீயே உன் கழுத்துல கட்டிக்க” என்க,
அவன் சொல்வது அனைத்தும் சமுதாயத்தில் தான் தலை நிமிர்ந்து வாழ தான் என்று புரிந்தாலும் ஏதோ தயக்கம் பெண்ணவளை திணறிடிக்க, அவன் இறுதியாக தனக்காக இறங்கி வந்ததை நினைத்து கண்களை மூடி ஆழ்ந்த மூச்சு விட்டவள் “ஓகே சார் ரெண்டு நாள்ல மீட் பண்ணலாம்”
“தேங்க் யூ சோ மச்.. யாழிசை நான் உனக்கு கடமைப்பட்டிருக்கேன்”
“இல்ல சார்.. நான் தான் உங்களுக்கு கடம பட்டிருக்கேன்” என்றவள் யாரோ வரும் அரவம் கேட்டு “சரி சார்.. யாரோ வருர போல இருக்கு சீக்கிரம் பாக்கலாம்.. பாய்” என்று அழைப்பு துண்டித்துவிட்டாள்.
*****
மறுநாள் கூறியது போலவே பெண்ணவளுக்கு கடிதம் அனுப்பியிருக்க, அதை அங்கிருந்த வார்டனிடம் காட்டி சம்மதம் வாங்கிவிட்டு உடமைகளை அடுக்கி அவனை சந்திக்க போகும் நாளுக்காக காத்திருந்தாள்.
பின் ரெண்டு நாளும் கழிந்து விட, ஆசரமத்திலிருந்து விடைபெற்று அவனை அன்று சந்தித்த இடத்திற்கு வந்து குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு காத்திருக்க, அடுத்த ஐந்து நிமிடத்தில் அங்கு காரில் வந்து சேர்ந்தவன் பெண்ணவள் ஏற, முன் பக்க கதவை திறந்துவிட்டு “சாரி.. ரொம்ப நேரம் வெயிட் பண்ண வச்சிட்டேனா”
“இட்ஸ் ஓகே சார்” என்று பெண்ணவளும் காரில் ஏறி கதவை மூடிக்கொள்ள, அவனோ “கால் மீ ஆர்யன்.. நோ சார்”
“நான் எப்படி சார்.. உங்கள பெயர் சொல்லி” என்று தயங்க, அதில் தலையாட்டி புன்னகைத்தவன்
“இந்த நிமிஷத்திலயிருந்து நம்ம பயணம் தொடங்குது.. எப்போ வேணாலும் முடியலாம்.. ஆனா அதுவரை நம்ம ப்ரெண்ட்ஸா இருக்கலாம்.. சோ நீ உன் ப்ரெண்ட்கிட்ட பேசுற போல பெயர் சொல்லி ஃப்ரீயா என்கிட்ட பேசலாம்” என்றதுக்கு பெண்ணவளும் சம்மதமாக தலையாட்ட,
“தட்ஸ் குட்..” என்றவன் பயணத்தை தன் வீட்டை நோக்கி தொடங்கினான்.
****
வீட்டிற்கும் வந்து சேர்ந்தாயிற்று, உள்ளே வந்தவளோ சுற்றி முற்றி பார்த்தாள்
அவனின் உயரத்திற்கு எளிமையான வீடு போல் தான் இருந்தது, ஆனாலும் அவனின் எளிமையை கூட வியந்து பிரமிப்பாக தான் பார்த்து கொண்டே “எப்படி சார் இவ்வளவு எளிமையா இருக்கீங்க” என்றதை கேட்டு ஆடவன் முறைக்க, அதின் அர்த்தம் உணர்ந்து “ஈஈ.. சாரி ஆரி உங்க உயரத்துக்கும் இந்த வீட்டுக்கும் சம்மந்தமே இல்ல” என்றதில் விழி விரித்த ஆர்யா
“என்ன ஆரி தான கூப்பிட்ட” என்று கேட்டவனுக்கு கண்கள் கலங்கி விட, “எங்க அம்மா என்ன இப்படி தான் கூப்பிடுவாங்க.. ரொம்ப நாள் கழிச்சு இந்த வார்த்தைய கேக்குறேன்.. அப்படியே என் அம்மா கூப்பிட்ட போலவே இருந்துச்சு” என்றவன், அங்கு மாட்டப்பட்டிருந்த அன்னையின் புகைப்படத்தை வெறிக்க,
தன்னால் தானே அவன் அன்னையின் நினைவில் வருந்துகிறான் என்று பதறியவள் “சாரி.. நான் உங்க அம்மாவ நினைவுப்படுத்தி கஷ்டப்படுத்திட்டன்ல” என்று தலை கவிழ்த்து கையை பிசைந்து கொண்டிருந்தவளின் எண்ணம் உணர்ந்து “ஹேய் யாழிசை நீ ஃபீல் பண்ற அளவுலாம் இல்ல.. நீ ஆரின்னு கூப்பிட்டது என் அம்மா கூப்பிட்ட போல ஹேப்பியா தான் ஃபீல் பண்ணினேன்.. சோ இனிமே நீ என்ன ஆரின்னே கூப்பிடு பிளீஸ்” என்றதை கேட்டு, அவன் முகம் பார்த்து புன்னகைத்த யாழிசை “ஓகே ஆரி” என்று கண் சிமிட்ட, ஆடவனோ ஒரு நிமிடம் அதில் விழுந்து தொலைந்தான்.
பின் ஆர்யோ “அப்புறம் யாழிசை இங்க மூணு ரூம் இருக்கு.. அந்த ஒரு ரூம்ல தான் பெயின்டிங் வொர்க் பண்ணுவேன்.. அங்க யார் போனாலும் எனக்கு சுத்தமா பிடிக்காது.. சோ அந்த ரூம் தவிர நீ எங்கனாலும் ஃப்ரீயா போயிக்கலாம்” என்று ஒரு அறையை கைக்காட்டி கூற,
அவளும், அவன் கைகாட்டிய திசையை பார்த்து தலையாட்டி வைக்க, ஆர்யாவோ “சரி யாழிசை நீ ஃப்ரெஷ் ஆயிட்டு வா.. நம்ம ஹாஸ்பிட்டல் போயிட்டு வரலாம்”
“எதுக்கு ஆரி.. ஏற்கனவே செக்அப் பண்ணியாச்சுல இனி நெக்ஸ்ட் மந்த் செக்அப் போனா போதும்”
*இல்ல யாழிசை வேற ஹாஸ்பிட்டல்ல அப்பாயின்ட் போட்டுயிருக்கேன்.. இனி அங்கேயே ரெகுலரா காட்டிக்கலாம்” என்று தன்னுடைய பண்ட் பாக்கெட்டிலயிருந்து தாலி கயிறை நீட்டியவன் “இத கழுத்துல கட்டிக்க இனிமே இது உன் கழுத்துல தான் இருக்கணும்..” என்க, பெண்ணவளோ நொடி கூட யோசிக்காமல், அதை வாங்கி கழுத்தில் கட்டிக்கொண்டு தனக்கென்று ஒதுக்கப்பட்ட அறைக்குள் நுழைந்தாள்.
அதன் பின் பெண்ணவள் தயாராகி நெற்றியில் குங்குமம் வைத்து திருமண முடிந்த மங்கையாக அழகாக வெளியே வர, அதில் நழுவும் தன் மனதை அடக்க ஆடவன் தான் திண்டாடி போனான்.
பின் அவள் அருகில் வரவும் முகத்தை இறுக்கமாக வைத்து கொண்டவன் “போலாமா”
“அந்த ஹாஸ்பிட்டல் காட்டின ஃபைல்ஸ் எடுத்து வரவா”
“இல்ல வேண்டாம்.. இப்போ தான் பிரேகணன்ஸி செக் பண்ற போல நியூவாவே போகலாம்.. பழைய ஹாஸ்பிட்டல் வேண்டாம்ன்னு சொன்னதுக்கு காரணம் கூட உன்ன பத்தின அவங்க த்ரௌட் வேற மாதிரி இருக்கலாம்.. சோ இனி பழச மறந்துரு” என்றதை கேட்டு தனக்காக, அவன் யோசிக்கும் விதத்திலே, அவள் அறியாமலே பெண்ணவளின் நெஞ்சத்தில் சிம்மாசனமிட்டு விட்டான் இந்த ஆர்யன்.
பின் இருவரும் மருத்துவமனைக்கு சென்று மருத்துவர் முன் அமர்ந்திருக்க, பெண்ணவளை பரிசோதித்த மருத்துவரும் “ப்ரெக்னன்ட் கன்பார்ம்.. வாழ்த்துக்கள் மிஸ்டர் அண்ட் மிஸ்டரஸ்”
“தேங்க்ஸ் டாக்டர்..” என்ற ஆர்யனின் வார்த்தையை கேட்டு புன்னகைத்தவர் யாழிசை அமைதியை கண்டு “என்னாச்சி.. உங்க மிஸ்டரஸ் அமைதியா இருக்காங்க” என்றதை கேட்டு நிமிர்ந்த பெண்ணவளின் கண்கள் கலங்கியிருக்க,
அவளின் உணர்வுகள் புரிந்த ஆர்யாவோ “அவ அப்படி தான் சந்தோசத்தில கொஞ்சம் நேர்வஸ் ஆயிடுவா.. நீங்க என்ன பண்ணனும் சொல்லுங்க டாக்டர்” என்றதை கேட்டு இருவரையும் ஏறிட்ட மருத்துவர் “ஓகே..” என்று சில அறிவுரைகளை கூறிவிட்டு “நீங்க ரெகுலர் இங்க செக் அப் வர ஃபார்ம் ஃபில் பண்ணனும்.. மிஸ் உங்க குழந்தையோட அப்பா அதாவது உங்க கணவர் பெயர் சொல்லுங்க” என்றதை கேட்டு பெண்ணவள் வாய் தண்டியடிக்க,
ஆர்யாவோ ‘சொதப்புறாளே’ என்று தனக்குள் நொந்து சூழ்நிலையை தன் கையில் எடுத்தவன் “சாரி டாக்டர் அவங்க சைட் யாரும் ஹஸ்பண்ட் பெயர சொல்ல மாட்டாங்க.. நானே சொல்லுறேன் ஐ அம் ஆர்யன்.. ஷீ எஸ் யாழிசை ஆர்யான்”
“ஓ இந்த காலத்துலயும் இப்படிப்பட்ட பொண்ணுங்க இருக்க தான் செய்றாங்க போல” என்று தலையாட்டி சிரித்த மருத்துவரோ மற்ற விவரங்களையும் அவனிடமே கேட்டு படிவத்தை நிரப்ப, யாழிசையோ அவனையே வியந்து பார்த்திருந்தாள்.
பின் அனைத்தும் முடிய மருந்துகளை பரிந்துரைத்து, அதை பற்றின விளக்கத்தையும் கொடுத்து முடித்து “மிஸ்டர் ஆர்யன்.. என்ன டவுட்னாலும் எப்போ வேணாலும் எனக்கு கால் பண்ணலாம்.. இனி நெக்ஸ்ட் மந்த் கூட்டிட்டு வாங்க டேக் கேர்” என்று அனுப்பி வைக்க,
பின் அவளுடன் வெளியே வந்த ஆர்யாவோ “யாழிசை ஒரு விஷயத்த நல்ல புரிஞ்சிக்க குழந்தைக்கு நான் தான் அப்பா.. அதுல எந்த வித தயக்கமும் உனக்கு வர கூடாது.. நானே உன்ன யாரும் தப்பா பேசிட கூடாதுன்னு நினைக்கேன்.. நீயே காட்டி கொடுத்துவ போல” என்றவனின் வார்த்தைகள் கோவத்தில் கடுமையாக வர, இதழ் கடித்து தன் உணர்வுகளை அடக்கியவள் “சாரி ஆரி”
“இதான் லாஸ்ட் இதுக்கு மேல இப்படி எதாவது நடந்தா நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்.. புரியுதா” என்றதும் பெண்ணவள் சம்மதமாக தலையாட்ட, பின் மருந்து மாத்திரைகள் வாங்கி கொண்டு காரில் கிளம்ப,
ஆர்யாவோ சிறிது தூரம் தள்ளி தெரிந்த இளநீர் கடையை கண்டு இறங்கி பெண்ணவளுக்கு வாங்கி கொடுத்து தானும் குடித்து கொண்டே சுற்றி பார்வையை சுழலவிட்டவனின் கண்ணில் அவர்களை பின் தொடர்ந்த ருத்ரன் தென்ப்பட,
காலையிலிருந்து நான்கு ஐந்து முறை அவனை பார்த்திருந்ததில் ‘அய்யோ மாம்ஸ்.. நம்மளயே ஃபாலோ பண்ற போல இருக்கே.. அவர்கிட்ட மாட்டினா தியா வறுத்து எடுப்பாளே’ என்று கையிலிருந்த இளநீரை கீழே போட்டவன்,
பெண்ணவளின் கையை பற்றி இழுத்து “கார்ல ஏறு..” என்று அவளை ஏற்றிவிட்டு தானும் ஏறியவன், பின்னே வரும் ருத்ரனிடம் போக்கு காட்டி திசை திருப்பிவிட்டே வீட்டியிற்கு வந்து சேர்ந்தான்.
அவனின் பதற்றம் கண்டு யாழிசை “என்னாச்சி ஆரி.. எதுவும் பிராப்ளமா”
“அதெல்லாம் ஒன்னும் இல்ல”
“இல்லையே ஏதோ டென்ஷனா வந்த போல இருந்துச்சு.. பரவால என்ன விஷயம் சொல்லுங்க”
“நத்திங் டூ வொர்ரி யாழிசை பெர்சனல் இஸ்யூஸ் தான்.. நான் பாத்துக்கிறேன்” என்றதும் அதற்கு மேல் பெண்ணவள் அமைதியாகி விட,
ஆர்யாவோ “சரி யாழிசை கதவ லாக் பண்ணிக்க.. நான் கால் பண்ணினா மட்டும் கதவ ஓபன் பண்ணினா போதும்.. நான் மார்கெட் வர போய் தேவையானத வாங்கி வரேன்.. அப்புறம் எக்காரணத்துக்கு கொண்டும் அந்த ரூம் பக்கம் போகாத” என்று அங்கிருந்து காரில் ஏறி ஆடவன் சென்று விட,
அவன் சென்றதும் “ஓவர் பில்டப்பா இருக்கே.. அப்படி என்ன இருக்கும் ரூம்ல, சரி இங்க தான இருக்க போறோம் மெல்ல தெரிஞ்சிப்போம்” என்று அவ்வறையை பார்த்துவிட்டு தன் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
****
காரில் வந்து வாங்க வேண்டியவை அனைத்தையும் வாங்கிவிட்டு காரை இயக்கியவன், இப்போதும் தன்னை தொடரும் ருத்ரனை கண்டு ‘அய்யோ இந்த மாம்ஸ் விடாது போலயே.. என் தங்கச்சிய சுத்த வேண்டிய நேரத்துல விவஸ்தையே இல்லாம என் பின்னாடி சுத்துது.. ஒருவேளை ரே மாம்ஸ்க்கு நம்ம விஷயம் தெரிஞ்சுருக்குமோ அதான் ருத் மாம்ஸ ஃபாலோ பண்ண விட்டுயிருப்பாரோ’ என்று நொந்து அவனுக்கு போக்கு காட்டி திசை திருப்ப எத்தனிக்க,
ஆனால் அது இம்முறை ருத்ரனிடம் செல்லுப்படியாகமல் போக ‘எப்படியும் இப்போ வீட்டுக்கு போக முடியாது.. யோசி ஆர்யா’ என்று சிந்தித்தவன் யாழிசை வருவதற்கு முன் தான் இருந்த வீட்டு முன் காரை நிறுத்தினான்.
அதோடு யாழிசைக்காக தான் ரெண்டு நாட்கள் முன் வேறொரு வீட்டை பார்த்து அங்கு குடியேறினான்.
ஆனால், சில பொருட்கள் இன்னமும் பெண்ணவள் அறியா வேண்டாமென்று பழைய வீட்டியிலே மறைத்திருக்க, இப்போது புது வீட்டிற்கு சென்றால் மொத்தமாக மாட்டிக் கொள்வோம் என்றும் ருத்ரனுக்கு வேறு எந்த ரகசியமும் தெரிந்து விட கூடாதென்று அவ்வீட்டிற்குள் அவன் பின் தொடர்வது அறியாத போல் நுழைய, அதற்குள் ருத்ரன் வந்ததால் அவனை பிடித்து கொண்டு உள்ளே சென்று நாற்காலியில் அமர வைத்து கட்டினான்.
அவனை தடுக்காத ஆர்யாவோ “ருத் மாம்ஸ்.. என்ன பண்றீங்க என்றதில் அதிர்ந்தவன் யாருடா நீ..”
“மாம்ஸ் என்ன விஷயம் சொல்லுங்க பேசிக்கலாம்.. இப்படி கட்டி போட்டா என்ன அர்த்தம்”
“அடேய் மாமான்னு கூப்பிட்டா பல உடைச்சுடுவேன் ராஸ்கல்”
“ருத் மாம்ஸ்.. உங்களுக்கு தான் என்ன தெரியாது எனக்கு உங்கள நல்லாவே தெரியும்.. முதல ஃபோன் போட்டு தியாவையும் ரே மாம்ஸையும் வர சொல்லுங்க மாம்ஸ்” என்றதும் பல்லை கடித்தவன்,
அவர்கள் இருவருக்கும் அழைத்து வர கூற, அவர்கள் வரும் வரை ஆயிரம் முறை “மாம்ஸ்..” என்று அவன் கடுப்படித்ததால் வாயில் துணியை திணித்த ருத்ரன் “அவங்க வருரவர வாய் திறந்த கொன்றுவேன்டா” என்க, அதற்கு மேல் பேசாத ஆர்யாவோ அப்படியே உறங்கி விட்டான்.
அதன் பின் நிகழ்ந்தது தான் ரேயன் மற்றும் தியா அங்கு வந்து சேர்ந்தது. இப்படியே அந்நிகழ்வை மாறி மாறி சிந்தித்து கொண்டிருந்தவனை களைத்ததே, அவன் தோல் மீது கை போட்ட தியாவின் குரல் தான்.
தொடரும்..
– ஆனந்த மீரா 😍😍
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


Very interesting.. சீக்கிரம் ஒவ்வொரு சஸ்பென்ஸ் -ம் க்ளியர் பண்ணுங்க.. ஆர்வம் தாங்கல 😊
Thank you sis 😍😍 adutha adutha epi continue aa padinga