7 இமை தேடும் காதலே!

Loading

அத்தியாயம் 7

 

“ம்மா, எதுக்கும் டாக்டர கூப்பிட்டு பாப்போம்மா, நமக்கு சரியா தெரியாம இருக்கலாம்ல” என ஆறெழில் குரல் நடுங்க சொல்ல, 

திரும்பி கணவரை ஒருமுறை பார்த்துவிட்டு, கண்ணைத் துடைத்தவர், “அம்மா போன எடுத்துட்டு வா” என்க.

 

ஓடிச்சென்று எடுத்து வந்து கொடுத்தாள். ஜெயந்தியும் டாக்டர் விஜயாவுக்கு போன் பண்ணி வர சொல்ல, அடுத்த பதினைந்து நிமிடம் தாயும், மகளும் குணசீலனையே பார்த்தவாறே அமர்ந்து கொண்டனர், எழுந்திட மாட்டாரா என.

 

விஜயா வந்தார், “ஜெயந்தி, எங்க இருக்க, ஸ்கூல் கிளம்பலையா?” கேட்டுக்கொண்டே வீட்டுக்குள் வந்தவர், ஹாலில் வந்ததும் செல்லை பார்த்துக்கொண்டே “ஜெயந்தி” என மறுபடியும்அழைக்க, 

“ஆண்ட்டி அப்பா எழவே மாட்டேங்குறார் வாங்களேன்” என ஆறெழில் வந்து அழைக்கும் சத்தத்தில் தான் நிமிர்ந்து அவள் பின்னர் சென்றார்.

 

விஜயா ரூமினுள் நுழைந்ததுமே மூச்சு ஏறி இறங்காததை வைத்தே கண்டுகொண்டார். பின்னும் பல்ஸ் பார்த்து உறுதி செய்து ஜெயந்தி கையை இறுக்கிப் பிடித்து, “இல்ல ஜெயந்தி” என்க.

 

ஜெயந்தி உடைந்து அழ, அதைக்கண்டு ஆறெழில் அழ. வேறு வழியில்லாததால் விஜயா மற்றப் பொறுப்பை தானே ஏற்றுக் கொண்டார். அவர் கணவருக்கு போன் அடித்து வர சொல்லிவிட்டு, அக்கம் பக்கத்திலும் சொல்ல, கூட்டம் கூடிவிட, மற்ற சடங்குகள் மளமளவென நடந்தது.

 

அக்கம்பக்கத்தினரே, “என்னாச்சு எப்படி திடீருனு” என்றுக் கேட்க ஆரம்பித்த பின்பே, “ஆமா, எப்படி திடீர்னு இப்படி ஆகும்” என ஜெயந்தியும் யோசித்தார்.

 

பின் “போலிஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணலாமா விஜயா? போஸ்ட் மாட்டர்ம் பண்ணா ௭ன்ன பிரச்சினன்னு தெரியும்ல” ௭ன படபடக்க.

 

விஜயா முன்வந்தார், “எல்லாம் முடிஞ்சப்புறம் விளக்கலாம்னு நெனச்சேன். நா ஒரு விஷயம் சொல்லனும் ஜெயந்தி, கோபபடாம கேளு” ௭ன பீடிகையோடு ஆரம்பித்தவர், திரும்பி கணவரை ஒரு முறை பார்த்து விட்டு ஆழ மூச்சு ௭டுத்து கொண்டு பேச ஆரம்பித்தார்.

 

“என்ன உனக்கு இன்ட்ரோ பண்ணதே மிஸ்டர்.குணசீலன் தானே, அவருக்கு ஹார்ட்ல போற வால்வ்ல கேன்சர் கட்டி இருந்தது தெரிய வந்தது. ஸ்கேன் செஞ்சு பார்த்தப்போ ஒரு ஹோல்னால வந்த கட்டின்னு தெரியவந்தது. ஒரு ஆபரேஷன் பண்ணி பாக்லாம்னு சொன்னேன். கொஞ்ச நாள் போகட்டும்னு விட்டுட்டார். ஆனா அடுத்த 6 மாசத்துல பெயின் வரவும் ஓடிவந்தார். கட்டி 1 இன்ச் பெருசானாலும் பெயின் இருக்கும், கோ-ஆப்ரெட் பண்ணுங்க, கொஞ்சம் தான் செலவாகும் ட்ரை பண்ணிடலாம்னு சொன்னேன். இது பெருசாகாம இருக்க மருந்து இருக்கான்னாரு அப்பயும், சரி கொஞ்சம் கொஞ்சமா ஒத்துக்க வைக்லாம்னு நானும் டேப்ளட்ஸ் கொடுத்தேன். அப்ப தான் உன்ன இன்ட்ரோ பண்ணாரு, உன்ன எனக்கு இன்ட்ரோ பண்ணப்போ இது அவளுக்கு தெரியக்கூடாது, தாங்க மாட்டா, எனக்கு முன்னே போக முடிவு எடுத்துடுவா, அப்றம் என் பொண்ணு வாழ்க்க மோசமாயிடும். என் பொண்ணுக்குன்னு நா எதுவும் சேத்து வைக்கல. அவங்க இருக்க வீடுனாலும், ௭ன் மருத்துவ செலவுக்குன்னு போகாம, யார்க்கிட்டயும் போய் நிக்காம கடைசிவர குடியிருக்க உதவட்டும்ன்னு சொல்லிட்டார். நிரந்தர தீர்வில்லாத ஆபரேஷன்றதால என்னாலயும் கம்பெல் பண்ண முடியல. இவ்வளவு நாள் மருந்துலயே இருந்ததே பெரிய விஷயம். உங்க மேல வெச்ச அன்பு தான் இவ்வளவு வருஷம் காப்பாத்திக் கொண்டு வந்திருக்கும்ன்னு  நினைக்கிறேன். கேன்சர் இருக்குன்னு தெரிஞ்சே பாதி இறந்தவங்க தான் உண்டு. இவர் இத்தன வருஷம் போராடி வந்துட்டாரு. அவர் இருந்தாலும், இல்லனாலும் உங்கள பாதிக்கக் கூடாதுன்னு ஒதுங்கி இருந்து கிடச்ச வாழ்க்கைய வாழாம போயிட்டாரு”.

 

அந்நேரம் விஜயாவின் கணவர் நீட்டிய மெடிக்கல் பைலை வாங்கி ஜெயந்தியிடம் கொடுத்தவர், “இதுதான் அவர் ரிப்போர்ட்”.

 

அதை வாங்கி பார்த்த ஜெயந்தியால் ஜீரணிக்கவே முடியவில்லை. எத்தனை முறை கேட்டிருப்பார், “என்ன பிரச்சினன்னு சொல்லுங்க, என் மேல் எதாவது கோவமா? நா என்ன மாத்திக்கிறேன். என்கிட்ட பேசுங்க”, இப்படியெல்லாம் எத்தனை முறை கெஞ்சிருப்பார்.

 

“இப்படி செய்துவிட்டாரே” என குணசீலனை அடித்து அடித்து அழுதார். இதைக் கண்டு ஆறெழிலும் ஏங்கி ஏங்கி அழ, சூழ்நிலை நிறையவே கணமாகி விட்டிருந்தது.

 

சொந்தக்காரர்களுக்கு சொல்லிவிட, எல்லோரும் வர ஆரம்பிக்க, ஜெயந்திக்கு பள்ளி பழக்கமே ஜாஸ்தி, குணசீலனுக்கு மார்க்கெட் பழக்கம் ஜாஸ்தி, இருவரும் பெண்கள் ௭ன்பதால் அவர்கள் அனைவரும் வந்து உதவினர்.  மாலை அவரை தூக்கி செல்ல வண்டி வர, கரண்ட் எரிப்பே, அதனால் ஜெயந்தியும், ஆறெழிலும் வாசலோடு அனுப்பி வைத்தனர். உடன் செல்ல வில்லை.

 

அப்போது சற்று தூரத்தில் ப்ரகலத்தனை கண்டாள் ஆறெழில், அவனே தானா, ஆறுதல் தேடிய மனது அவனை கண்டதும் ஆசுவாசப்பட்டது. கண்ணை நன்றாக துடைத்துவிட்டு பார்த்தாள், அவனே தான். தன்னை அவன் கண்டிப்பாக நன்றாக பார்த்துக் கொள்வான். அப்பா இருந்தபோது அவரின் மூலம் கிடைக்காத சலுகைகள் எல்லாம் இவன் கொடுப்பான், அந்நேரமும் அவள் மனது சொல்ல. மறுபடியும் அவள் கண் கண்ணீரால் நிறைந்து அவன் மங்கலாகி விட்டிருந்தான்.

 

ப்ரகலத்தனும் தூரத்திலிருந்து அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் வாசலில் நின்று அழுவதை கண்டு இவனுக்கு உள்ளுக்குள் பாரமாக இருந்தது.

 

“போ அவளுக்கு ஆறுதல் சொல்” என ஒரு மனம் துரத்தியது. நெஞ்சோடு அணைத்து “அழாத, நா இருக்கேன்”  சொல்லனும்னு தோணுது, ‘ஆனா நான் யாரு/ எந்த உறவா போய் அவளுக்கு ஆறுதல் சொல்ல முடியும். நா போய் இப்ப பேசுனா அவர்களுக்கு வேறு எந்த வகையிலும் டிஸ்டர்பன்ஸா இருந்துரக்கூடாதே என்றெல்லாம் ௭ண்ணி, விழவிருந்த கண்ணீரைத் துடைத்து திரும்பி நடந்து விட்டான்.

 

முந்தய நாள் போனில் காலேஜில் வைத்து அவன் ப்ரெண்ட்ஸுடன் இருக்கும்போது அழைத்து வீட்டிற்கு வர கூறியதாலேயே அன்று அவன் வந்தான். அவள் அப்பா சொல்லியே அன்று வந்தான், அதை சொல்லியே அவர்களுக்கு ஆறுதல் அளித்துச் சென்றிருக்கலாம். ஆனால் அவன் அதை மறந்துவிட்டிருந்தான். மூளை முழுவதும் ஆறெழிலே ஆக்கிரமித்திருந்தாள். அவள் தன்னை கண்டுவிட்டு மேலும் அழுவது தெரிந்தும் திரும்பிப் பார்க்காமல் சென்றான், அவள் பேர் கெட வேண்டாம் என்றெண்ணி.

 

சிறிது நேரம் கழித்து அழுது தெளிந்தவளும் அவனைத் தேட, மறுபடியும் சொல்லாமல் சென்றவனை நினைத்து மருகி, குழம்பி வீட்டினுள் சென்றாள்.

 

‘ஏன் வந்தாங்க, எப்படி வந்தாங்க, ஏன் பேசாம போயிட்டாங்க’ என்ற குழப்பம் மட்டும் தீரவே இல்லை.

 

அடுத்து வந்த நாட்களில் தங்கள் வட்டத்தை சுருக்கிக் கொண்டனர் ஜெயந்தியும், ஆறெழிலும். இயல்புக்கு திரும்ப ஆறுமாதம் பிடித்தது. ஆறெழிலின் படிப்பை எந்த வகையிலும் பாதிக்காமல் பார்த்துக் கொண்டார் ஜெயந்தி. இப்பொழுது அவள் 12-ம் வகுப்பு என்பதால் அவர் அவளுடனே அதிக நேரத்தைச் செலவழித்தார்.

 

லட்சுவும் இப்பொழுது என்ஜினீயர் ஆக வேண்டும் என்ற ஃபாமிற்கு வந்திருந்தாள்.

 

“நான் அம்பானி ஆவேன், நான் அம்பானி ஆவேன்னு சொன்னா, அம்பானி ஆயிடுவாங்களே, அதுமாதிரி நாம இன்ஜினியராகணும் லட்சு, நாம இன்ஜினியராகணும்னு” ௭ன சொல்லி சொல்லியே அவள் வழிக்கு கொண்டு வந்திருந்தாள் ஆறு.

 

எல்லாவற்றிலும் ஒரு விஷயத்தை மறந்தாள் ஆறெழில், அது அவள் தேவையை மட்டும் மனதில் வைத்துச் செயல்பட்டாள் ௭ன்பது.

 

ப்ரகலத்தன் வேண்டும் என்று தானாக முடிவெடுத்து அவன் பின் செல்ல முடிவெடுத்தாள். தன்னுடனே லட்சுவும் இருக்க வேண்டும் என்பதற்காக அவளை வேறு படிப்பை யோசிக்க விடாமல் இன்ஜினியரிங் படிப்பை அவள் மூளையில் பதிய வைத்தாள். ‘நா அவங்க ரெண்டு பேருக்குமே கெடுதல் நினைக்கல’ என்பது மட்டுமே அவள் கருத்தில் நின்றது.

 

ப்ரகலத்தனும் அதன் பின்பு வெளியில் எதையுமே காண்பித்துக் கொள்ளவில்லை, இயல்பாக இருப்பதாக காட்டிக் கொண்டான்.

 

ஆனால் ‘அங்கிள் என்ன சொல்ல கூப்பிட்டுருப்பார்? ஆல்ரெடி ஹெல்த் இஸ்யூ இருக்றதா சொன்னாரு, அதுதான் இப்ப திடீர் டெத்க்கு காரணமா இருக்குமோ?. ஆறெழில் நார்மலாகி இருப்பாளா?’ என்றெல்லாம் அடிக்கடி நினைப்பான்.

 

முன்னைவிட அவளை அதிகம் நினைத்தான். அந்த நாள் அவள் அப்பா இறந்த அன்று அவனைப் பார்த்தவாறு குழந்தையாய் ஆறுதலுக்கு ஏங்கி நின்றாலே அது கண் முன் தோன்றி தோன்றி அவனை மிகவும் பாதிக்கும். ‘அருகில் சென்று ஒரு வார்த்தைனாலும் பேசியிருக்கலாமோ’ என பல முறை சிந்தித்து விட்டான்.

 

நாட்கள் இருவருக்குமே காத்திருக்காமல் சென்றது. ப்ரகலத்தன் தனது இரண்டாம் வருடத்தில் இருக்க, நன்றாக படிப்பதாலும், ஸ்போர்ட்ஸில் இருப்பதாலும், ஜூனியர்ஸ் முதல் ஸ்டாப்ஸ் வரை அனைவரையும் தெரிந்து வைத்திருந்தான். அவர்களும் இவனை தெரிந்து வைத்திருந்தனர்.

 

பலன் இரண்டாம் வருடம் அவரவர் டிபார்ட்மெண்டில் நுழையவுமே டிபார்ட்மெண்ட் ரெப்பாக அறிவிக்கப்பட்டான். பைனல் இயர் சீனியர் ஒருவர் ப்ரெசிடெண்ட்டாக இருக்க, அவருக்கு கீழ் 3rd இயர்ல வைஸ்-ப்ரெசிடெண்டாக ஒருவர், அவருக்கு கீழ் 2nd இயரில் இவன் என மேலும் பேமஸாகவிட்டிருந்தான், பேன்ஸும் அதிகமாகி கொண்டிருந்தது.

 

இங்கு ஆறெழில் 12 என்பதாலும், பெண்கள் இருவர் மட்டும் தனியாக இருப்பதாலும் ஜெயந்தி பயந்து பயந்தே வாழ்க்கையை நடத்தினார். அதை முதலில் புரிந்து கொள்ள முடியாமல் திணறிய ஆறெழில் பின் புரிந்து கொள்ள ஆரம்பித்தாள். அவளுக்கு, அவள் அன்னையின் தாத்தா, பாட்டி உண்டு. ஆனால் அவர்கள் ஊரை விட்டு வந்து சென்னையில் வீட்டுக்குள் அடைந்து கிடக்க மறுத்தனர்.

 

“வயசான காலத்துல வந்து நமக்கு துணையா இருந்தா என்னம்மா?” ௭ன அம்மாவிடம் சண்டை பிடிக்க.

 

“நம்ம தேவைய மட்டும் யோசிச்சு பேசக்கூடாது எழில். இது ௭ன்ன பழக்கம் படிக்கிற. வயசானவங்க அமைதியான, இயற்கையான சூழல எதிர்பாப்பாங்க. நமக்கு கஷ்டமா இருக்குனா, நாம தான் அவங்க கூட போய் இருக்கணும், தாத்தா பாட்டி கஷ்டபடுறாங்க அங்க போய் 1 மாச லீவ்க்கு இருந்துட்டு வான்னு சொன்னதுக்கு, நீ போனியா? அந்த க்ளாஸ் போறேன் இந்த க்ளாஸ் போறேன்டு, மறுத்துட்டல்ல” என்றார் ஜெயந்தி.

 

அப்பொழுதுதான் அவளுக்கு அந்த விஷயம் உறைத்தது, “மத்தவங்கள பத்தி நாம யோசிக்கிறதில்லயோ?” என.

 

மறுநாள் பள்ளிக்கு சென்றதும் முதல் வேலையாக லட்சுவிடம் மன்னிப்பு கேட்டாள், “ரெம்ப சாரிடி, எவ்வளவு செல்ப்ஃபிஷா இருந்திருக்கேன், உனக்கு என்ன குரூப் படிக்க பிடிக்கும்னு யோசிக்காமலேயே கட்டாயப்படுத்தி, ச்ச உன் லைப்பையே வேஸ்ட் பண்ணிட்டேன்ல?” ௭ன்க.

 

“என்ன திடீர் ஞானோதயம், லவ்வ ட்ராப் பண்ணிடலாம்னு முடிவு பண்ணிட்டியா?” ௭ன்றால் லட்சு, 

“இல்ல, உன் விஷயத்துல நா பண்ணது தப்பு, அதான் சாரி”.

 

“இதுக்கு பதில் நம்ம ரிசல்ட் வரவும் சொல்றேன்” என முடித்தாள் லட்சு.

 

இருவரும் அந்த ஆண்டு பரீட்சை நன்றாகவே எழுதினர். நல்ல ஸ்கோர் எடுத்து கவுன்சிலிங்கில் சென்னை அண்ணா யுனிவர்சிட்டி தேர்ந்தெடுத்தனர்.

 

“ஏண்டி உனக்கு என்ன தோணுதோ அதையே படிக்கலாமே?”.

 

“இப்பவும் எனக்கு பிடிச்சதத் தான் படிக்க போறேன் ஆறு. நீ சொன்னதாலதான் நல்ல ஸ்கோர் எடுத்து, என் அம்மா, அப்பாவ பெருமப்படுத்திருக்கேன். அதனால நீ என் விஷயத்துல பண்ணது தப்பில்ல”.

 

“ஒருவேள மார்க் குறஞ்சிருந்தா என்னதான சொல்லியிருப்ப?”.

 

“கண்டிப்பா, மத்தவங்க லைப்ல நாம எப்பயும் டிசிஷன் ௭டுக்க கூடாது ஆறு. ஒரு ப்ரண்டாதான் நா சொல்றேன். நீ பண்ணது சரியா போக போய் எனக்கு பிரச்சினையில்ல, இல்லன்னா? ஒரு வேள நா சரியா படிக்காம விட்ருந்தா”.

 

“கரெக்ட் தான்டி” ௭ன ஆறு ஒத்துக்கொண்டாள்.

 

ஆறுவின் முகம் சுருங்கவும், “ம் சரி அத விடு, நெக்ஸ்ட் சேந்து ஸாப்பிங் பண்றோம், காலேஜ் ஜாயின் பண்றோம், ப்ரகலத்தன் அண்ணாவ வழிக்கு கொண்டு வர்றோம்” எனக் கட்டிக்கொண்டாள் லட்சு.

 

ப்ரகலத்தனை சந்திக்கப் போகும் நாளுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தாள் ஆறெழில்.

 

 

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 67

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
68
+1
5
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்