
அத்தியாயம் 03
அபர்ஜித்தின் எண்ணத்தை வலுப்படுத்தும் வகையில் முகேஷோ “இவன் கல்யாணத்துக்கு முன்னாடியே ஒரு முத்தம் கூட கொடுத்ததில்லையே..
…கல்யாணத்துக்கு பிறகு முதல் ராத்திரியில என்னதான் பண்ணுவானோனு அந்த பொண்ணு இப்பவே யோசிக்க ஆரம்பிச்சு இருக்கும்.. ஏன்டா நீ இப்படி இருக்க..?
…ஆம்பளைங்க என்னதான் அக்கறையா பேசினாலும்.. பாசமா நடந்துக்கிட்டாலும்.. அவங்க ஆசையும் அக்கறையும் அந்த பொண்ணு மேல அவன் காட்டுற மோகத்துலதான் இருக்கு.. அத வச்சு தான் பொண்ணுங்க பசங்கள மதிப்பிடுவாங்க…
…என்ன பொறுத்த வரைக்கும் பார்கவி உன்ன டம்மி பீசுனுதான் நினைச்சிருப்பா…” என்று ஏடாகூடமாக பேசவும் ,
சற்று போதையில் இருந்தவனுக்கு, தான் செய்யப் போகும் காரியத்தின் வீரியம் புரியவில்லை.
உடனே தன் மொபைலை எடுத்தவன், அதில் பார்கவியின் எண்ணிற்கு மண்டபத்தின் மொட்டை மாடிக்கு குடோன் அறைக்கு வருமாறு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பியிருந்தான்.
அவளும் பதிலுக்கு (எதற்கு) என்று கேட்டு அனுப்பி இருக்க, (உன்ன தனியா சந்திச்சு ஒரு கிப்ட் தரனும்) என்று அனுப்பி இருந்தான் அபர்ஜித் .
பார்கவிக்கு கொள்ளை சந்தோஷம். எப்போதும் அவளுக்காக அவன் பார்த்து பார்த்து செய்கிறான் அல்லவா.
அதே சமயம் பார்கவியின் அறையைத் திறந்து கொண்டு உள்ளே வந்தார் சங்கரி. வந்தவர் “கவி பாட்டிக்கு உடம்பு சரியில்ல.. உன்ன பாக்கணும்னு சொல்றாங்க போல.. வாடா…” என்று கூப்பிடவும்
“என்னம்மா என்னாச்சு..? பாட்டி நல்லா தானே இருந்தாங்க…” என்று பார்கவி கேட்க “நல்லாத்தான் இருந்தாங்க.. திடீர்னு உடம்பு சில்லுனு இருக்கு.. என்ன ஆச்சுன்னு தெரியல.. தண்ணி கொடுத்தா குடிக்கல..
…பர்வி பக்கத்துல தான் இருக்கா ஆனாலும் அவர் யாரையோ தேடுற மாதிரி தெரியுது.. அதான் உன்ன தேடுறாரோன்னு கூப்பிட வந்தேன்…” என்றார் சங்கரி.
அவர் கூறியதை கேட்டு சரியென தாயுடன் பாட்டி இருந்த அறைக்கு சென்றாள் பார்கவி.
இவர்கள் குடும்பத்துடன் வரும்போது, வாகனத்தில் வள்ளியம்மாவையும் உடன் தூக்கி வந்திருந்தனர். அவரது ஆசையே பேத்தியின் திருமணத்தை கண்ணார பார்க்க வேண்டும் என்பதுதானே.
அறைக்குள் வந்த பார்கவி பாட்டியின் வலது கையை பற்றி கொண்டு “பாட்டி.. என்ன பண்ணுது…?” என்று கேட்டாள்.
பார்கவியின் குரல் கேட்டதும் அவள் கையை இறுகப்பற்றிக் கொண்டார் வள்ளியம்மா.
வைத்தியருக்கு அழைப்பு விடுத்து விட்டு உள்ளே வந்த வசந்தராஜன் “டாக்டர் இப்ப வந்துருவாரு.. கல்யாணம் நடக்கிற வரைக்கும் எதுவும் ஆகிடக் கூடாது…” என்று சங்கரியிடம் சற்று வாட்டமாகவே சொன்னார்.
சங்கரியும் அதே பயத்தில் தான் இருந்தார். அவரிடம் இருந்து பெரும் மூச்சு மட்டுமே பதிலாக வந்தது.
வள்ளியம்மா பற்றி இருந்த பார்கவியின் கையை சற்றும் தளர்த்தவில்லை. டாக்டர் வந்து பார்த்துவிட்டு “நான் ஏற்கனவே சொன்னது தான்.. அவங்க அவங்களோட கடைசி நாட்கள எண்ணிகிட்டு இருக்காங்க.. எங்களால எதுவும் பண்ண முடியாது.. ஒரு சேலைன் போட்டு விடுறேன் பாத்துக்கோங்க…” என்றவாறு கிளம்பி விட்டார் .
பாட்டியிடம் இருந்து கையை உருவ முடியாமல், அதே நேரம் பாட்டியை இந்த நிலையில் விட்டு செல்லவும் முடியாமல், அபர்ஜித் வரச் சொன்னது நினைவுக்குவர,
தங்கை பர்விதாவிடம் “பர்வி.. மாமா என்ன மொட்டை மாடில இருக்குற குடோன் அறைக்கு வர சொன்னாரு.. ஏதோ கிப்ட் தரனுமாம்.. என்னால இப்போ போக முடியாது.. நீ போய் மாமா கிட்ட இங்க உள்ள நிலவரத்த சொல்லி ஏதும் கிப்ட் தந்தார்னா வாங்கிட்டு வா..
…நான் ஏன் வரலன்னு அவர்கிட்ட சொல்லு.. மன்னிப்பு கேட்டதா சொல்லு.. என் ஃபோன் ரூம்ல இருக்கு அவர சந்திச்சிட்டு வரும்போது என் ஃபோனையும் எடுத்துட்டு வா…” என்று சொன்னாள்.
அக்காவிடம் சரி என்று கூறிவிட்டு அந்த மண்டபத்தின் மேல் தளத்திற்கு சென்றாள் பர்விதா.
மொட்டை மாடியில் குடோன் ரூமில் பார்கவிக்காக காத்துக் கொண்டிருந்தான் அபர்ஜித். அந்த அறையில் பழைய பொருட்கள் குவிந்து கிடந்தன. அங்கு வேறு ஆட்கள் யாரும் வரவேண்டிய அவசியம் இல்லை.
அதனால் தனது குறுஞ்செய்தியை பார்த்துவிட்டு பார்கவிதான் வரவேண்டும் என்பதால், அவள் வந்ததும் தான் செய்ய வேண்டியதை மனதில் அசை போட்டவாறு நின்று இருந்தான்.
பர்விதா மொட்டை மாடிக்கு வந்ததும் அங்கு விளக்குகள் அதிகமாக இல்லை. வெளிச்சம் குறைவாகவே இருந்தது. அந்த குறைந்த வெளிச்சத்தில் குடோன் ரூமை தேடி மெல்லிய கொலுசொலியுடன் நெருங்கினாள்.
பர்விதாவுடைய கொலுசொலியின் சத்தத்தில் பார்கவி வந்துவிட்டாள் என்று எண்ணி, அரையினுள் இருந்து கையை மட்டும் நீட்டி வந்தவளது கையை இழுத்து சுவரோடு அழுத்தி சாய வைத்தான் அபர்ஜித்.
மொட்டை மாடியில் இருந்த விளக்கு கூட அந்த அறையில் இல்லை. வந்தது யார் என்று கூட கவனிக்காமல், அவளது இரு கைகளையும் சுவற்றுடன் அழுத்தி பிடித்து, அவளது இதழ்களை கவ்விக்கொண்டான். அழுத்தமான ஆழமான இதழ் முத்தம்.
பெண்ணவளுக்கு அதிர்ச்சியின் உச்சம். அவளால் சத்தம் போட கூட முடியவில்லை. இருட்டில் வரிவடிவமாக தெரிந்தது அபர்ஜித் என்று கண்டு கொண்டாள்.
அக்கா என்று நினைத்து தன்னை முத்தமிடுகின்றான் என்றும் புரிந்தது. ஆனாலும் அவளது எதிர்ப்பை காட்ட முடியாத அளவிற்கு அவனது ஆளுமை இருந்தது.
அவனது மொத்த உடல் பாரத்தையும் அவள் மீது சரித்து, அவள் கைகளை சிறை பிடித்து, இதழ்களில் வன்மையாக தேன் உறிஞ்சி கொண்டு இருந்தான்.
ஏனோ அவள் உமிழ்நீரின் சுவையில் தன்னை மறந்து, கண்களை மூடி கள்ளுண்ட வண்டாக கிரங்கி நின்றான். இருவருக்குமே முதல் முத்தம்.
அதிலும் இதுவரை பெண் மேனியின் வாசனையே தெரியாதவன்… முதல்முறையாக ஒரு பெண்ணை முத்தமிடுகின்றான்… அவள் உமிழ் நீரின் சுவையை உணர்கின்றான்… அவள் மூச்சுக்காற்றின் வெப்பத்தை உணர்கின்றான்… அவள் உடலின் கதகதப்பை உணர்கின்றான்…
அவனது உடலினுள் ஆயிரம் அலை மின்னல்கள். அவனது உணர்வுகள் பீறிட்டு கிளம்பின. முத்தம் ஒன்று கொடுத்துவிட்டு செல்லலாம் என்று இருந்தவன் இப்போது, அவளது இரு கைகளையும் உயர்த்தி தன் வலிய ஒரு கையில அழுத்தி பிடித்தவன், மற்ற கையினால் அவள் அங்கங்களை அழுத்தி தடவ தொடங்கினான்.
பெண்ணவளுக்கு தூக்கி வாரி போட்டது. முத்தத்தையே எப்படி நிறுத்துவது என்று புரியாமல் தவித்தவளுக்கு இது அடுத்த கட்ட சோதனை. அவளது உடல் வெடவெடுத்து நடுங்க, அதை அவனது கைகளும் உணர்ந்தன.
அவளது நடுக்கத்தை குறைக்க இடையில் அழுத்தத்தை கூட்டினான். பாவையவளோ தமைக்கையின் திருமணத்திற்காக புடவை அணிந்து இருந்தாள். அது அவனுக்கு வசதியாக போனது.
சேலையினூடு இருந்த இடைவெளியில் தன் கரங்களை நுழைத்து என்னென்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்து கொண்டு இருந்தான்.
மேலோட்டமாக தடவிய அவன் கைகள் ஜாக்கெட்டின் ஊக்கில் கையை வைக்க, இதற்கு மேலும் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை என்றால் விபரீதமாகிப் போகும் என்று அவனது உதட்டை கடித்து வைத்தாள்.
அது அவனுக்கு இன்னும் உணர்ச்சியை தூண்டியது. அவளும் தன்னை முத்தமிடுகிறாள் என்று போதையில் தவறாக எண்ணிக் கொண்டான். அவனது கைகளின் அழுத்தம் இன்னும் கூடியது. அவளது மென் தனங்கள் இரண்டும் வலியெடுக்கும் அளவிற்கு இருந்தது அவனது அழுத்தம்.
அதற்கு மேலும் தாங்க முடியாமல் தனது காலை உயர்த்தி அவனது உயிர்நாடியில் லேசாக இடித்தாள். சற்று வழி எடுக்க அவளை விட்டு விலகி வலித்த இடத்தை கைகளால் பொத்திக் கொண்டான்.
அவன் விலகவும் அந்த அறையை விட்டு வேகமாக வெளியே வந்தாள் பர்விதா. அபர்ஜித்தும் பின்னோடு வந்தான், வெளிச்சத்தில் அவளைப் பார்த்தவனுக்கு, தான் இவ்வளவு நேரமும் முத்தமிட்டு சரசமாடியது தான் தாலி கட்ட போகும் பெண்ணல்ல, அவளின் தங்கை என்று அறிந்த மறுநொடி உடலில் இருந்த வலியை விட மனது வலித்தது.
பர்விதா நின்றிருந்த கோலமே அவனை நிலைகுலைய வைத்தது. சேலை விலகி, மாராப்பு கசங்கி, கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து, கண்ணீரில் கன்னங்கள் நனைந்து இருக்க, உதடுகள் சிவந்து தடித்து இருந்தது.
என்ன காரியம் செய்துவிட்டான். போதையின் பிடியில் தான் நடந்து கொண்டது எவ்வளவு பெரிய தவறு என்பது இப்போது புரிந்தது.
பெண் மாறிவிட்டது என்பதை விட, இதே வேலையை பார்கவியிடம் செய்து இருந்தாலும் அதுவும் தவறான விடயமே. முரட்டுத்தனமாக பெண்ணவளை கையாண்டு இருக்கின்றான் என்பது புத்திக்கு உறைத்தது .
பர்விதாவோ கண்ணீரோடு அவனை ஏறிட்டுப் பார்த்தவள் எதுவும் கூறாமல் விறுவிறுவென கீழே சென்று விட்டாள். தலையைப் பிடித்துக் கொண்டு அங்கேயே அமர்ந்து விட்டான் அபர்ஜித்.
இன்னும் ஒரு நாளில் அக்காவை திருமணம் செய்ய இருக்க இன்று தங்கையிடம் தவறாக நடந்து கொண்டுள்ளான். அவனது செயலை அவனாலயே ஜீரணிக்கவே முடியவில்லை.
இவள்தான் தனக்கானவள் என்று முடிவாகிய பின்னர் கூட பார்கவியிடம் கண்ணியமாக பழகியவன். இன்றோ தான் திருமணம் செய்யப் போகும் பெண்ணின் தங்கையிடம் காட்டுமிராண்டி போல் நடந்து கொண்டு இருக்கின்றான்.
தலை வின் வின் என்று வலித்தது. மெதுவாக எழுந்தவன் தளர்ந்த நடையுடன் தனது அறையினை நோக்கி சென்றான்.
கீழே வந்த பர்விதாவிற்க்கு நிலை கொள்ளவே முடியவில்லை. தற்போது நடந்தது இருட்டில் இருவருமே எதிர்பாராத ஒன்று என்பது அவளுக்கு தெரியும். பார்கவி என்று நினைத்துதான் அபர்ஜித் அவ்வாறு நடந்து கொண்டான் என்பதும் அவளுக்கு தெரியும்.
இருந்தும் நடந்து முடிந்த சம்பவம் ஒன்றும் எளிதாக கடந்து விடக்கூடிய விஷயம் இல்லையே. பார்கவியின் அறைக்கு வந்தவள் கதவை சாத்திவிட்டு கட்டிலில் கால்களை கட்டிக்கொண்டு அமர்ந்து அழுது கரைந்தாள்.
எவ்வளவு நேரம் அழுதாள் என்பது அவளுக்கே தெரியவில்லை. இதனை யாரிடம் சொல்வது… என்ன செய்வது… எதுவுமே புரியவில்லை.
இன்னமுமே அவளது மார்பகங்கள் வலித்தன… உதடுகள் இன்னமுமே எரிச்சலை கொடுத்தது… அவள் உடல் எங்கும் அபர்ஜித்தின் கைகள் ஊர்வது போன்ற பிரம்மை ஏற்பட, உடனே எழுந்தவள் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.
சவரை திறந்து அதன் கீழ் நின்று தன் உடலை தேய்த்து கழுவினாள். நடந்தது ஒரு விபத்து என்பது அவளது மூளைக்கு தெரிந்தாலும்… ஒரு பெண்ணாக ஒரு ஆணின் முதல் ஸ்பரிசம் அவளை நிலைகுலைய வைத்திருந்தது.
அது வேறொரு ஆணாக இருந்திருந்தால் கூட பரவாயில்லை. தன் தமக்கையின் மனம் கவர்ந்தவன் என்பதே இங்கு பெரும் பிரச்சனை.
குளித்தவள் வெளியே வந்து அனார்கலி சுடிதார் ஒன்றை அணிந்து கொண்டாள். புடவை அணியும் அளவிற்கு அவளது உடல் ஒத்துழைக்கவில்லை. இன்னமுமே உடலில் மெல்லிய நடுக்கம் பரவியிருந்தது.
இதற்கு மேலும் தாய் தந்தை, தமக்கை இருக்கும் இடத்திற்கு போகவில்லை என்றால் தன்னை தேடி வருவார்கள் என்று, பார்கவியின் ஃபோனை எடுத்தவள் தளர்ந்த நடையுடன் வள்ளியம்மாவை வைத்திருந்த அறையை நோக்கி சென்றாள்.
இங்கோ அறையினுள் இரு கைகளாலும் தலையைப் பற்றி பிடித்தபடி, கண்களை மூடியபடி அமர்ந்திருந்தான் அபர்ஜித். அவன் இன்று செய்த காரியம் அவனை நிம்மதியாக இருக்க விடுமா என்றால்? இல்லை…
இதோ அந்த சம்பவம் நடந்து மூன்று மணி நேரங்கள் கடந்து விட்டன. இன்னமுமே அதன் தாக்கத்திலிருந்து அவனால் வெளியே வர முடியவில்லை.
எத்தனையோ கிரிமினல் கேஸ்களை சாதாரணமாக கையாண்ட திறமையான வழக்கறிஞன் அவன் . அவனால் தன் வாழ்வில், தான் ஏற்படுத்திய இந்த சிக்கலை எங்கனம் சரி பண்ணுவது என்பது புரியவில்லை.
அவன் ஒன்றும் வேண்டுமென்று பர்விதாவிடம் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. தெரியாமல் நடந்த ஒரு விபத்து. ஆனால் அதை அவனாலும் மிகச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. யோசித்து யோசித்து மூளை சூடானது தான் மிச்சம் அப்படியே சரிந்து கட்டிலில் படுத்துக்கொண்டான் .

