Loading

அத்தியாயம் 02

 

நாட்கள் நகர, மண்டபம் பார்த்து பத்திரிக்கையும் பிரின்ட் ஆகி வந்து, குடுக்கவும் தொடங்கி இருந்தனர் இரு வீட்டினரும்.

 

பந்தல் போடுவதில் தொடங்கி பந்தி பரிமாறுவது வரை எல்லாமே பார்த்து பார்த்து தேர்வு செய்து இருந்தனர்.

 

திருமணத்திற்கு இன்னும் பத்தே நாட்கள் இருந்த நிலையில், நண்பன் ஒருவனுக்கு பத்திரிக்கை வைத்த அபர்ஜித் காரில் ஏற போக, எதிர் திசையில் இருந்த காலேஜ் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்துக் கொண்டு இருந்த பர்விதா கண்ணில் பட்டாள்.

 

“அது பர்விதா தானே.. இந்த காலேஜ்லதான் படிக்கிறாளா..? அது சரி மச்சினிச்சி எந்த காலேஜ்ல என்ன படிக்கிறா எதுவுமே தெரியாம இருந்து இருக்கேன்…” என தலையில் தட்டியவன்

 

காரை எடுத்துக் கொண்டு அவள் அருகே நிறுத்தி, கண்ணாடியை இறக்கி “பர்விதா.. பர்விதா…” அபர்ஜித் அழைக்கவும், அவனை கண்டு கொண்டவள்

 

“மாமா..! இங்க என்ன பண்றீங்க?” என்றாள் காரை நெருங்கி “ஹா.. உன் காலேஜ்லா படிக்க வந்தேன்..”

 

“ஹி..ஹி .. அப்போ நீங்க டுபாக்கூர் லாயரா ..? ” என்றவளை

 

போலி முறைப்போடு “அடிங்க.. என்னையே கிண்டல் பண்றயா … இந்த பக்கம் என் ப்ரெண்ட்க்கு இன்வடேஷன் குடுக்க வந்தேன்.. நீ நிக்கிறத பார்த்தேன் அதான் ட்ராப் பண்ணலாம்னு வந்தேன்… வா வந்து ஏறு கொண்டு போய் விடுறேன்” என்றான்.

 

“ஐயோ மாமா உங்களுக்கு ஏன் சிரமம்.. நான் பஸ்லயே போயிக்குவேன். நீங்க கிளம்புங்க…”

 

“நீ பஸ்ல பத்ரமா போயிடுவ அது தெரியும்.. உன்ன ட்ராப் பண்ற சாக்குல உன் அக்காவ பார்க்கலாம்னா இப்டி கட்டைய போடுறயே… ” என்றான் அப்பாவி போல்.

 

முத்துப்பற்கள் தெரிய சிரித்தவள் “ஓஹோ.. இதுதான் மேட்டரா.. சரி பாக்கவும் பாவமா இருக்கீங்க உங்க கூடவே வாரேன்… ” என்றவாறு காரில் ஏறி அமர்ந்தாள்.

 

வரும் வழியில் சாதாரணமாக பேசிக்கொண்டு வந்தனர். காரை ஒரு கடையின் முன்பு நிறுத்தி விட்டு, அவன் மட்டும் உள்ளே சென்று, சிறிய பிரம்பு கூடையில் பழங்களும், இன்னொரு கையில் விலையுயர்ந்த பெரிய சாக்லேட்டுடனும் வந்தான்.

 

காரில் ஏறி அதை இயக்கிக் கொண்டு இருந்தவனிடம் “உங்கள கட்டிக்க அக்கா குடுத்து வச்சு இருக்கனும் மாமா.. ” என்றாள்.

 

மெலிதாக சிரித்தவன் “ஏனாம் …?” என்றான் “பின்ன கல்யாணத்துக்கு முன்னாடியே நீங்க இவ்ளவு சுவீட்டா இருக்கீங்க.. கல்யாணத்துக்கு பிறகு எப்டி இருப்பீங்க.. ” என்றாள் கையை தூக்கி.

 

“அப்படியா..? ” என்றான் அவன் புருவம் தூக்கி

 

“பின்ன இல்லையா.. உங்க ஆள பாக்க போறத்துக்காக தங்கச்சிய ட்ராப் பண்றீங்க.. ஆள பாக்க போகும் போது சும்மா போக கூடாதுனு அவளுக்கு பிடிச்ச சாக்லேட் வாங்கிட்டு போறீங்க… நீங்க சுவீட் தானே.. காட்டுனா உங்கள மாதிரி ஒருத்தர கட்டனும் ” என்றாள் வெகுளியாக.

 

ஆம் அவன் வாங்கிய சாக்லேட் பார்கவிக்கு ரொம்ப பிடிக்கும். அதென்னவோ பர்விதாவிற்கு வைட் சாக்லேட் மட்டும் தான் பிடிக்கும்.

 

அது அபர்ஜித்க்கும் தெரியும். பார்கவி தனக்கு எது பிடிக்கும் பிடிக்காது என்று சொல்லும் போதே, தங்கைக்கு எது பிடிக்கும் பிடிக்காது என்று சேர்த்தே சொல்லி விடுவாள் இயல்பாக.

 

பர்விதா தான் வாங்கிய சாக்லேட் சாப்பிட மாட்டாள் என்பது தெரிந்தாலும், அவளுக்கு என்று தனியாக எதுவுமே வாங்கவில்லை. வாங்க தோன்றவும் இல்லை. குடும்பத்திற்கு மொத்தமாக பழங்கள் வாங்கிக் கொண்டான்.

 

பர்விதாவின் வீடும் வந்து விட்டது. இருவரும் உள்ளே நுழைய “அக்கா…” என கத்திக்கொண்டே பார்கவி அறையினுள் ஓடினாள் பர்விதா.

 

ஹாலில் இருந்த சங்கரி அபர்ஜித்தை வரவேற்று அமர வைத்தார் “வாங்க மாப்பிள்ள .. உக்காருங்க” . பழக்கூடையை அவரிடம் கொடுக்க வாங்கி கொண்டவர்,

 

“இதெல்லாம் எதுக்கு மாப்பிள்ள.. ” என்றார் சங்கரி. “இருக்கட்டும் அத்த … மாமா இல்லைங்களா?” என்றான்.

 

“அவங்க கல்யாண வேலையா வெளிய போயிருக்காங்க… ” என்றவர் பார்கவி அறைப் பக்கம் திரும்பி” பார்கவி…. பார்கவி… ” என அழைத்தார்.

 

அக்காவின் அறையினுள் சந்தோஷமாக ஓடி வந்த பர்விதா “அக்கா நான் யார் கூட வந்தேன் தெரியுமா? ”

 

“யார் கூட வந்தடி..?”

“மாமா கூட வந்தேன்.. மாமா உனக்காகத்தான் என்ன ட்ராப் பண்ண வந்தார்.. உன் ஆள் ரொம்ப தெளிவு க்கா.. மச்சினிச்சிய ட்ராப் பண்ண வந்த மாதிரி மனசுக்கு பிடிச்சவள சைட் அடிக்க வந்துட்டாரு…”

 

“சும்மா கிண்டல் பண்ணாதடி…” என்றவாறு வேகமாக ஹாலுக்கு வந்தாள் பார்கவி. சாதாரண நீல நிற சுடிதார் அணிந்திருந்தாள் அதிலேயே அப்ஷரசாக மிளிர்ந்தாள் .

 

“வாம்மா.. மாப்பிள்ள வந்திருக்காரு அவர் கூட பேசிட்டு இரு.. நான் குடிக்கிறதுக்கு ஏதாவது எடுத்துட்டு வாரேன்…” என கூறிவிட்டு சிறிய மகளை கண் ஜாடையில் அழைத்துக்கொண்டு சமையலறையினுள் நுழைந்து கொண்டார் சங்கரி.

 

தனித்து விடப்பட்ட ஜோடிகள் ஒருவரை ஒருவர் சிறிய வெட்கத்தோடு பார்த்துக் கொண்டனர்.

 

திருமணம் நிச்சயமான பின்னர் ஃபோனில் பேசிக்கொண்டாலும், இவ்வாறு தனிமையில் பார்த்துக் கொள்ள கிடைக்கவில்லை. இன்று கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் கண்களாலே ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டனர்.

 

அபர்ஜித் கையில் இருந்த சாக்லேட்டை பார்கவியிடம் நீட்டி “இது உனக்காக வாங்கிட்டு வந்தேன்…” என்று கொடுக்கவும், தனக்காக தன்னவன் வாங்கி வந்த அந்த இனிப்பை பூரிப்புடன் வாங்கிக் கொண்டாள் பார்கவி.

 

இங்கு சமையலறையில் “என்னம்மா கூட்டிட்டு வந்துட்ட.. மாமா கூட பேசிட்டு இருந்திருப்பேன்ல…” என்ற பர்விதாவின் தலையில் லேசாக தட்டிய சங்கரி

 

“அறிவு இருக்காடி உனக்கு.. கல்யாணம் பண்ணிக்க போறவங்க, அவங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் தனியா பேசிகட்டும்னு தான் விட்டுட்டு வந்தேன்.. நீ எதுக்கு நடுவுல நந்தி மாதிரி…”

 

“ஓ… இப்டி ஒரு விஷயம் இருக்கா.. சரி சரி மாமாக்கு ஜூஸ் போட்டு குடு நான் போய் கொடுத்துட்டு வரேன்…” என்றாள் பர்விதா.

 

சரி என சங்கரி பிரிட்ஜில் இருந்து ஆப்பிள்களை எடுத்து, பிரஷ் ஜூஸ் போட்டு இளைய மகளிடம் கொடுத்தார்.

 

ஹாலில் இருந்த இளம் ஜோடிகள் இன்னும் பத்தே நாட்களில் நாம் கணவன் மனைவி ஆகி விடுவோம் என்று சிலாகித்து பேசிக்கொண்டு இருந்தனர்.

 

ஹாலுக்கு கையில் ட்ரேயுடன் வந்த பர்விதாவின் கண்களுக்கு அவர்கள் இருவரினதும் பிரகாசமான முகமே அவர்களது அன்பின் வெளிப்பாட்டை உணர்த்தியது.

 

அதிலும் பார்கவின் முகத்தில் தான் எத்தனை எத்தனை பாவனைகள்…. எத்தனை எத்தனை பிரதிபலிப்புகள்…. அவளது முகம் தங்கச் சூரியன் போல் பிரகாசித்துக் கொண்டே இருந்தது.

 

இருவரின் அருகில் வந்தவள் கையில் இருந்த குளிர்பானத்தை இருவருக்கும் கொடுத்தாள். ஜூஸை கையில் எடுத்த அபர்ஜித் கண்களால் குடிக்குமாறு பார்கவியிடம் சைகை செய்தான்.

 

அதை கண்டு கொண்ட பர்விதா “பாருடா உங்க ஆளு குடிச்சா தான் நீங்க குடிப்பீங்களா..?” என்று கிண்டல் செய்தாள்.

 

தங்கை தன்னவனை கிண்டல் செய்யவும் “ஏன்டி சும்மா சும்மா அவர சீண்டிகிட்டே இருக்க… போ போய் அம்மா கூட இரு…” என்றாள் பார்கவி .

 

“என்ன அக்கா நாசுக்கா என்ன இங்கிருந்து விரட்ட பாக்குறியோ..! அதெல்லாம் போக முடியாது.. உங்களுக்கான டைம் முடிஞ்சு போச்சு.. பேசின வரைக்கும் போதும் இனி கல்யாணத்தப்போ பேசுங்க…” என்றாள் துடுக்காக .

 

“அடியே! இம்சடி நீ..” என்றாள் பார்கவி தங்கையை செல்லமாக கடிந்து கொண்டு. அதேநேரம் அபர்ஜித் சொன்னது போலவே அவள் ஜூஸை குடிக்கவும், அதன் பின் அவன் ஜூஸை அருந்தினான்.

 

இதை பார்த்த பர்விதா “ம்க்கும்.. ரொம்பத்தான்…” என முகத்தை திருப்பிக் கொண்டு சற்று தள்ளிச் செல்லவும்

 

“ஹேய் பர்விதா.. நீ ஜூஸ் குடிக்கலயா…?” என்று அக்கரையாக கேட்டான் அபர்ஜித். “இல்ல மாமா.. எனக்கு வேணாம் நீங்க குடிங்க…” என்று விட்டு தாயைத் தேடி போக எத்தனிக்க, சங்கரியே அங்கே வந்தார்.

 

அவர் வரவும் தான் குடித்த ஜூஸ் கிளாஸை டீ பாய்ல் வைத்தவன், எழுந்து “சரி அத்த நான் கிளம்புறேன்.. மாமா வந்தா கேட்டேன்னு சொல்லுங்க…” என்று விட்டு பார்கவியிடம் “வரட்டுமா…” என்று கேட்க அவளும் சரி என்ற வகையில் தலையை ஆட்டினாள்.

 

அப்படியே பர்விதாவிடம் திரும்பி லேசாக தலையை ஆட்டிவிட்டு புறப்பட்டான்.

 

பார்கவியால் சந்தோஷம் தாங்க முடியவில்லை. தன்னை காண்பதற்காக தங்கையை வீட்டில் விடுவதற்கு வந்தது மட்டுமல்லாமல், தனக்கு பிடித்த சாக்லைட்டை வாங்கி வந்தவன் மீது இன்னும் பித்தாகிப் போனாள் அம்மாது.

 

*******

இடையில் இருந்த அந்த ஏழு நாட்களும் ஓடிவிட, இதோ பூக்களாலும், பலூன்களாலும், வர்ணவர்ண காகிதங்களாலும் மண்டபம் அலங்காரம் செய்யப்பட்டு கொண்டிருக்கின்றது.

 

மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டார் அனைவரும் மண்டபத்திற்கு வந்து சேர்ந்திருந்தனர். நாளை நிச்சயதார்த்தம், நாளை மறுநாள் காலை பிரம்ம முகூர்த்தத்தில் திருமணமும் நடைபெற இருந்தது.

 

இன்று பெண்கள் அனைவரும் மெஹந்தி பங்க்ஷன் இருப்பதால் மண்டபத்தில் கூடியிருந்தனர்.

 

மாப்பிள்ளை அபர்ஜித், அவனின் ஆண் நண்பர்கள் அனைவரும் பேச்சுலர் பார்ட்டில் இருந்தனர்.

 

தனது நண்பர்களோடு பேசி சிரித்துக்கொண்டு, தனது பேச்சுலர் பார்ட்டியை சிறப்பித்துக் கொண்டு இருந்தான் அபர்ஜித்.

 

அவன் நண்பர்களில் ஒருவனான வினோதன் “என்னடா மச்சான்.. எத்தன கிஸ் அடிச்சி இருப்ப…” என்று கேட்டான்.

 

“என்னடா லூசா? அத பத்திலாம் நான் பேசினது கூட இல்ல.. நாங்க இதுவரைக்கும் கண்ணியமா தான் பழகிட்டு இருக்கோம்…”

 

“யாருடா இவன்.. பொண்ணு பாத்து நிச்சயமானாலே மேட்டர் முடிச்சுட்டு அப்புறமாதான் கல்யாணம் பண்ணிக்கிறாங்க.. இவன் என்னடானா கிஸ்ஸ பத்தி பேசுனது கூட இல்லன்னு சொல்றான்… மச்சான் எல்லாம் சரியா தானே வேலை செய்யுது…” என்றான் வினோதன் கிண்டலாக

 

“அடிங்க.. என்னையவே கலாய்க்கிறீயா.. அதெல்லாம் நல்லாத்தான் இருக்கு.. ஏன்டா ஒரு பொண்ண புடிச்சிருந்தா உடனே கிஸ் பண்ணனும், மேட்டர் பண்ணனும், இதுதான் தோணுமா?

 

…அவ எனக்கு முதல்ல நல்ல தோழி.. அதுக்கு பிறகு கல்யாணமாகினா மனைவி.. அதுக்கு பிறகு தான் மத்தது எல்லாம்…”

 

“இவன் என்னடா 90ஸ் கிட்ஸ்ஸாவே பேசுறான்..” என்றான் இன்னொரு நண்பன் முகேஷ்.

 

“டேய் எப்பா.. நான் 90ஸ் கிட்ஸ் ஆவே இருந்துட்டு போறேன்.. ஆள விடுங்க…” என்றான் அபர்ஜித் கையில் இருந்த பியர் டின்னை கீழே வைத்து இரு கைகளையும் கூப்பியவாறு

 

“டேய் அதுக்கு சொல்லலடா.. பொண்ணுங்களுக்கு ரொமான்டிக் பசங்கள தான் ரொம்ப பிடிக்கும்.. நீ என்னதான் பிரண்ட்லியா பழகுனாலும் இத்தன நாள்ல நீ ஒரு முத்தமாவது தர மாட்டியான்னு அந்த பொண்ணு நினைச்சி இருக்கும் …

 

…இனி நீ கல்யாணமான பிறகு என்னதான் அவளுக்கு முத்தம்மா கொடுத்தாலும்.. கல்யாணத்துக்கு முன்னாடி திருட்டுத்தனமா கொடுத்துக்கிற முத்தமே தனி கிக்குதான்.. அத நீ மிஸ் பண்ணிட்ட மச்சான்…

 

…எப்பவுமே நம்ம தோட்டத்து மாங்காய விட திருட்டு மாங்காய் ருசி அதிகம்.. நாளைக்கு அவ உனக்கு மனைவி உனக்கு முழு உரிமையும் இருக்கு.. அப்போ கொடுத்துக்கிற முத்தத்துல எந்த டேஸ்ட்டும் இருக்காது…

 

…அதுவே கல்யாணத்துக்கு முன்னாடி அவள தனியா கூப்பிட்டு ஒரு முத்தம் கொடுத்து பாரு.. வாழ்க்கை பூராவும் நீ அத மறக்க மாட்ட…” என ஏத்தி விட்டான் வினோதன்.

 

அபர்ஜித்தும் சற்று போதையில் இருந்ததால் நண்பர்கள் கூறியது அவனுள் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தியது. அதுதான் நாளை மறுநாள் அவள் தன்னுடையவள் ஆகிவிடுவாளே அதற்கு முன் ஒரு முத்த அச்சாரத்தை இட்டால் என்ன என்று தான் அவனுக்கு தோன்றியது, போதையிலும், நண்பர்களின் போதனைகளிலும்.

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
4
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்