Loading

அன்றைய நாள் நல்லபடியாக சென்றது….. சிவாம்மா தவிர மற்ற அனைவரும் அன்று இரவே மதுரைக்கு சென்றுவிட்டனர்… இரண்டு மூன்று நாளில் நிவேதாவிற்கு உதவிய மாணவனை அதி நிவேதா இருவரும் அவன் வீட்டிற்கே சென்று பார்த்து விட்டு வந்தனர்… அவனுக்கு நன்றி கூறி அவனிடம் இருந்து விடை பெற்றனர்…..

அதன்பிறகு நாட்கள் காற்றாய் பறந்து இருந்தது…. நிவேதாவிற்கு சிஏ பௌன்டேசன் எக்ஸாம் செப்டம்பர் மாதம் வர இருந்தது….

சாந்தாவின் சதியால் கிழிக்கபட்ட புத்தகத்தை தனக்கு தெரிந்தவர் மூலம் சிஏ படிக்கும் மற்றொருவரிடம் அந்த புத்தகத்தை வாங்கி கொடுத்துவிட்டான் அதி…. அவள் நன்றாக தயார் செய்து வைத்து இருந்தாள்….

அன்று தான் முதல் எக்ஸாம் அனைவரும் வாழ்த்து கூறினர்… அதியும் நிவேதாவிடம் “உன்னோட கனவுக்கு முதல் படி எடுத்து வைக்குற… அதுல நல்லா பண்ணனும் அம்மு…. எக்ஸாம் சென்டர்க்கு நான் வர முடியாது… நிதிஷ் வருவான்.. உன்ன கூட்டிட்டு போக நான் வரேன்” என்று கூறினான்…..

அனைத்து தேர்வுகளையும் நன் முறையில் முடித்து இருந்தாள்…. நவம்பர் மாதம் தேர்வுக்கான முடிவு வெளியாகலாம் என தெரிவித்து இருந்தது… அதே மாதம் நிவேதா மற்றும் பிரியாவிற்கு செமஸ்டர் தேர்வும் ஆரம்பித்து இருந்தது…

இருவரும் வெற்றிகரமாக அதை முடித்து இருந்தனர்…. நவம்பர் மாதம் வெளியாகும் என்று கூறிய முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியாகியது… அதில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி ஆகி இருந்தாள்….

அடுத்த செமஸ்டர் ஆரம்பித்து இருந்தது…. கல்லூரி முடித்துவிட்டு இன்டெர்ன் செய்யலாம் என முடிவு எடுத்து இருந்தாள்…. இருந்தும் கொஞ்சம் கொஞ்சம் படித்து கொண்டு தான் இருந்தாள்…..

ஜனவரி மாதம் பொங்கலுக்கு விடுமுறை இருந்தது… அதனால் அதி நிவேதா நிதிஷ் பிரியா வசும்மா அனைவரும் மதுரைக்கு புறப்பட்டு இருந்தனர்… முரளி அபர்ணா இருவரும் போகி முன் நாளே மதுரைக்கு சென்று இருந்தனர்….

அரசுவின் குடும்பம் மட்டும் இரண்டாவது நாள் மதுரை வருகிறோம் என்று கூறிவிட்டனர்.. தீப்தியும் மதுரைக்கு வந்து இருந்தாள்…. போகி இரவுக்கு தான் ஐவரும் மதுரைக்கு சென்றனர்… எனவே அனைவரும் தூங்க சென்றுவிட்டனர்…

நிவேதா வீட்டிற்குள் வருவதற்கு சிவாம்மா அவளுக்கு ஆரத்தி எடுத்து தான் உள்ளே அழைத்தார்……

அடுத்த நாள் காலை அனைவரும் சீக்கிரம் எழுந்து சூரிய பொங்கல் வைக்க ஆயத்தம் ஆகினர்…. அனைவரும் புத்தாடை அணிந்து இருந்தனர்….

நிவேதா பிஸ்தா க்ரீன் கலரும் ராயல் ப்ளூ கலந்த தாவணி பாவாடை அணிந்து இருந்தாள்…. அதியும் பிஸ்தா க்ரீன் ஷர்ட் அனைத்து வெள்ளை வேட்டி கட்டி இருந்தான்…

மற்ற அனைவரும் அவரவர் ஜோடியின் கலர் மேட்சில் அணிந்து இருந்தார்கள்… அஜயும் சிவாம்மா மற்றும் சுந்தர் அப்பா அணிந்து இருந்த நிறத்தில் அணிந்து இருந்தான்.. மற்ற குட்டிசும் அவரவர் பெற்றோர் நிறத்தில் அணிந்து இருந்தனர்…

தூதனோ அவனின் தேவதையின் அழகில் மெய் மறந்து நின்று விட்டான்…. அவளும் அவனுக்கு சளைத்தவள் அல்ல என நிரூபித்தாள்… அவளின் பாவாவை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தாள்…

எப்போதும் அப்பத்தா தான் பொங்கல் வைப்பார்… ஆனால் இம்முறை நிவேதாவை வைக்க கூறினர்.. நிவேதா அப்பத்தாவிடம் “அம்மாச்சி எப்பயும் போல நீங்களே வைங்க….” என்று கூறினாள்

ஆனால் யாரும் கேட்கவில்லை தாத்தாவில் இருந்து அஜய் வரை நிவேதா தான் வைக்க வேண்டும் என்று கூறினர்.. தாரா பாப்பா வேறு சிவப்பு மற்றும் கோல்டன் நிற ட்ரஸில் அவளிடம் அனைவரும் கூறுவது போல் “த்த பை(வை) பை” என்று அழகாக கேட்டாள்…

நிவேதா அதியை பார்த்தாள்… அவன் சரி என்பதை போல் தலை ஆட்டினான்…. பிறகு வசும்மா நிதிஷ் பிரியாவைப் பார்த்தாள்… அவர்களும் சந்தோசமாக தலை அசைத்தார்கள்….

நிவேதா அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு பொங்கல் வைத்தாள்… பொங்கலும் கிழக்கு பார்த்து விரைவாக பொங்கியது… அனைத்தும் நல்ல படியாக முடிந்து சூரியனை வேண்டினர்…

காலை உணவை முடித்து விட்டு கருடனை( ஜல்லிக்கட்டு காளை) ஜல்லிக்கட்டிற்கு அழைத்து செல்ல ஆயத்தமாகினர்… அதி மாறன் சுந்தரப்பா அஜய் நால்வர் மட்டும் கருடனை அழைத்து கொண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டிற்குச் சென்றனர்…

சிம்பாவை (அதி வீட்டிலுள்ள சிப்பிப்பாறை நாய்) பார்க்க தாத்தாவுடன் நிவேதா சென்றாள்… வீடியோ கால் பேசும் போது அங்கிருக்கும் யாரோ ஒருவர் அவளை சிம்பா மற்றும் கருடனிடம் காட்டுவர்…

அவளும் பேசுவாள்… எனவே அவளின் குரலை நன்றாக அடையாளம் கண்டு கொண்டு இருந்தன இருவரும்… கருடன் சிம்பா இருவரும் அதியின் செல்லங்கள் வேறா.. எனவே அவன் மதுரைக்கு செல்லும் போதெல்லாம் இவளை பற்றி கூறுவான்…

அதனால் தற்போது நிவேதாவை பார்த்ததும் சிம்பா துள்ளினான்… தாத்தா அவனிடம் “சிம்பா அமைதியா இரு” என்று கூறினார்.. அவனும் அமைதியாகி விட்டான்… ஆனால் நிவேதாவிற்கு கொஞ்சம் பயமாக இருந்தது….

தாத்தா தான் அவளிடம் “நிவிகுட்டி போ அவன் ஒன்னும் பண்ண மாட்டான்” என்று கூறினார்..

அவளும் மெல்ல மெல்ல அவனிடம் சென்றாள்… அவன் ஒரே குஷியாகி விட்டான்.. அவழும் அவன் அருகில் போய் முட்டி போட்டு அமர்ந்தாள்.. சிம்பா அவளின் முகத்தை நக்கி தன் பாசத்தை உணர்த்தினான்…

கொஞ்ச நேரம் அவனிடம் விளையாடிவிட்டு வீட்டினுள் சென்று விட்டாள்…அந்த வீடு என்று சொல்வதை விட குட்டி அரண்மனை என்று சொல்லலாம்….. பழங்காலத்து அரண்மனை போல் இருந்தது..

சிம்பாவிற்கு தனியாக ஒரு குட்டி வீடு போல் இருக்கும் அதில் தான் அவன் இருப்பான்…. கருடன் மட்டும் வீட்டின் பின்புறம் தனியாக இருப்பான்… மற்ற பசுக்கள் எல்லாம் வேறு ஒரு இடத்தில கொட்டகை போட்டு வைத்து இருப்பர்….

அனைவரும் ஜல்லிக்கட்டு டிவியில் பார்க்க ஆரம்பித்தனர்…. அங்கு கருடன் வர போவதாய் அறிவித்தனர்….

“மதுரை பாண்டியன் துணி மற்றும் நகை கடை மருதுபாண்டி ஐயாவோட காளை வர போகுது… இந்த காளை எந்த ஜல்லிக்கட்டிலும் தோல்வி அடைஞ்சதே இல்லை… இந்த காளைய பிடிச்சா ரெண்டு பவுன் தங்க காயின் அது மட்டும் இல்லாம அவங்க துணி கடையில பாத்தாயிரத்துக்கு இலவசமா துணி எடுத்துக்கலாம்னு அறிவிச்சி இருகாங்க…. ரொம்ப காஸ்ட்லியான காளை ப்பா பிடிங்க பரிசை அள்ளுங்க” என்று மைக்கில் ஒருவர் பேசிக் கொண்டிருந்தார்…

அதை கேட்டு அனைத்து மாடுபிடி வீரர்களும் ஆர்வமாய் இருந்தனர்… ஆனால் கருடன் அரிமாவைப் போல் உள்ளே வந்தான்…. யாராலும் அவன் அருகில் போககூட முடியவில்லை…. இந்த ஜல்லிக்கட்டிலும் கருடன் தான் வென்றான் என அறிவித்தனர்…

களத்தில் இருந்து அதி மற்றும் அஜயுடன் குழந்தை போல் சென்றான்… அனைவரும் ஆச்சரியமாய் பார்த்தனர்… கொஞ்ச நேரம் முன் அவ்வளவு ஆக்ரோஷமாய் இருந்த காளையா இது என….

வீட்டிற்கும் வந்ததும் ஆரத்தி எடுத்து அவனை அவனின் இடத்தில கட்டினர்… கருடனை பார்க்க செல்லலாம் என அதியிடம் நிவேதா கேட்டாள்.. அதற்கு அவன் மறுத்து நாளை பாக்கலாம் என கூறிவிட்டான்…. அவளும் அவனுக்கு ஒழுங்கு காண்பித்து சரி என கூறிவிட்டு சிட்டாக உள்ளே சிவாம்மா அருகில் சென்றுவிட்டாள்….

அடுத்த இரண்டு நாட்களும் பேச்சும் சிரிப்புமாய் அழகாய் சென்றது…. இரண்டு நாட்கள் களைத்து அனைவரும் அவரவர் வேலை இடத்திற்கு சென்று விட்டனர்…. நிவேதா பிரியா இருவரும் வெற்றிகரமாக கல்லூரி காலத்தை முடித்து இருந்தனர்…

நிவேதா பிரியா வினோ கோபால் நால்வரும் தேர்வு முடிந்து இரவு வரை ஒன்றாக மால் ஷாப்பிங் ரோட்டு கடை என ஒரு இடம் விடாமல் சென்றனர்…

கோபால் அடுத்து பெங்களூரில் எம்பிஏ செய்ய போகிறான்… வினோ அந்த கல்லூரியிலேயே எம்.காம் செய்ய முடிவெடுத்து உள்ளாள்… பிரியா நிதிஷுடன் சேர்ந்து கல்லூரியை பார்வை இட போகிறாள்….

நிவேதா அதியுடன் சேர்ந்து நிதிஷ் மற்றும் பிரியாவை மணாலிக்கு அனுப்ப திட்டம் தீட்டினாள்… கல்யாணம் முடிந்தது முதல் இருவரும் எங்கேயும் தனியாக செல்லவில்லை….. அதனால் இருவருக்கும் சப்ரைசாக ஏற்பாடு செய்தாள்…

இருவரையும் கிட்டத்தட்ட மிரட்டி மணாலி அனுப்பி வைத்தாள்…. போகும்முன் பிரியாவிடம் ரகசியமாக ” ஒய் அண்ணிமா வரும் போது என்னை நீ அத்தையா ப்ரொமோட் பண்ணி இருக்கனும்” என்று கூறினாள்….. அதை கேட்டு பிரியாவின் கன்னம் இரண்டும் வெட்கத்தில் சிவந்து விட்டது….

“என்ன அண்ணிம்மா கன்னம் ரெண்டும் ப்ளஷ் ஆகுது…. என் அண்ணா வேற உன்னையே பாக்குறாங்க” என்று கூறினாள்… “ச்சு போடி” என்று கூறிவிட்டு நிதிஷ் அருகில் போய் அமர்ந்துவிட்டாள்…

சிறிது நேரத்தில் விமானத்திற்கான அழைப்பு வந்ததும் நிதிஷ் பிரியா இருவரும் அதி மாற்று நிவேதாவிடம் விடைபெற்று சென்றனர்…

( அவங்க ஜாலியா ஹனிமூன் கொண்டாடிட்டு வரட்டும்…. நமக்கு அங்க என்ன வேல )

தீப்தியும் தன்னுடைய படிப்பை முடித்துவிட்டு தன்னுடைய தந்தையிடமே ஜூனியராக சேர்ந்து விட்டாள்….

அடுத்த ஒரு வாரத்தில் தாத்தாவிற்கு என்பது வயது பிறந்து இருந்தது… அதனால் தாத்தா மற்றும் அப்பத்தாவிற்கு எண்பதாவது கல்யாணம் செய்யலாம் என முடிவு செய்து இருந்தனர்…

எனவே மீண்டும் அனைவரும் மதுரைக்கு வந்து இருந்தனர்… நிதிஷ் பிரியா இருவரும் மணாலியில் இருந்து நேராக மதுரை வந்து இருந்தனர்… குடும்பத்தினர் அனைவரும் மிக சந்தோசமாக இருந்தனர்….

கோலாகலமாக தாத்தா அப்பத்தாவின் எண்பதாம் கல்யாணம் நடந்து முடிந்தது… அன்று இரவே தேசிய அளவில் நடைபெற உள்ள பதினெட்டு வயதிற்கு உட்பட்டோருக்கான நீச்சல் போட்டி டெல்லியில் பங்கு பெறுவதற்காக அஜய் டெல்லி புறப்பட்டான்… அவனுடன் மாறன் தம்பதியினர் புறப்பட்டனர்….

மற்ற அனைவரும் இரண்டு மூன்று நாள் மதுரையில் தங்கிவிட்டு தான் ஊருக்கு சென்றனர்…. நிவேதா இன்டெர்ன்கான பயிற்சிக்கு இரண்டரை வருடம் சேலத்தில் உள்ள பிரபல பட்டய கணக்காளரிடம் பயிற்சிக்கு சேர்ந்து விட்டாள்…..

அஜய் நீச்சல் போட்டியில் தங்க பதக்கம் வென்று இருந்தான்… அவனுக்கு அனைவரும் அழைத்து வாழ்த்து கூறினர்…..

நீள் இரண்டரை வருடம் எப்படி சென்றது என்றே தெரியவில்லை…. அனைவருக்கும் நன்றாக சென்றது….. இரண்டரை வருடத்தில் நிவேதா இன்டெர்ன் தேர்வுகளையும் வெற்றிகரமாக முடித்து இருந்தாள்….

இந்த இரண்டரை வருத்தத்தில் நடந்தது எல்லாம் நல்ல விஷயமே…. அதி எஸ்பியாக ப்ரோமோஷன் பெற்று தற்போது மதுரை மாவட்டத்திலேயே போஸ்டிங்கில் உள்ளான்…. மணிகண்டன் ஓய்வு பெற்று இருந்தார்…. அரசு டிஎஸ்பியில் இருந்து ஏஎஸ்பியாக சேலம் மாநகரத்திலேயே இருந்தான்…..

நிதிஷ் மற்றும் பிரியாவிற்கு நிலவன் பிறந்து இருந்தான்… அவனுக்கு ஒன்பது மாதம் ஆகிறது…. அவன் முழுக்க முழுக்க அத்தையின் செல்லம்….. அவள் நீல் என அழைத்து விட்டால் போதும்… தைய தக்க என கையை ஆட்ட ஆரம்பித்து விடுவான்….

பிரியா அவள் வளைகாப்பை நினைத்து பார்த்தாள்… என்ன தான் வசும்மா நிதிஷ் நன்றாக பார்த்தாலும் பிறந்த வீடு சீர் இல்லையே என வருந்தினாள்…. அபிம்மா அந்த கவலையை போக்கி விட்டார்….

அவளுக்காக சீர் செய்து தங்களுடன் அழைத்து சென்றுவிட்டார்… நிலவன் பிறந்து மூன்று மாதம் கழித்து தான் வசும்மா வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்… பெண் பிள்ளை இல்லாத ஏக்கத்தில் பிரியாவிற்கு  அனைத்தும் செய்தனர்… 

சி பைனல் எக்ஸாம் எழுதிக் கொண்டிருந்தாள் நிவேதா நாளை தான் அவளுக்கு கடைசி தேர்வு.. ஆனால் இன்று இரவு அதியைக் காணவில்லைஇதை அவளிடம் யாரும் தெரியப்படுத்தவில்லை

நிவேதா தன் கனவில் கடைசி கட்டத்தில் உள்ளாள்.. அந்த கனவு நினைவேறுமா??? இல்லை அவளின் தேவதூதனாலேயே தடை படுமா ?????

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்