Loading

வீட்டியிலிருந்து வெளியே வந்த ரேயன், அவளுக்கு காலில் அடிப்பட்டதால் அவளுக்கு முன்னே வண்டியில் ஏறிக்கொள்ள, அவனை முறைத்துவிட்டு வேறுவழியின்றி அவன் பின்ன ஏறிக்கொண்டாள்.

 

பின் வண்டியை ஓட்டிக் கொண்டிருக்க அவனுக்கு மேல் அதிகாரியிடமிருந்து அழைப்பு வர, வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு அவரிடம் பேசி கொண்டிருக்க, அதில் எரிச்சலடைந்து இறங்கிய தியா, சற்று தள்ளி வந்து யாருக்கோ ரொம்ப நேரம் அழைத்து, இறுதி அழைப்பில் ஏற்கப்படவும் “டேய் முண்டம் எவ்வளவு நேரம் டிரை பண்றது ஃபோன் அடிச்சா எடுக்க மாட்ட”

 

“என்ன பண்றது உன்ன மாதிரி எக்ஸ் கூட ஊர சுத்திட்டாயிருக்கேன்.. ஆயிரம் வேலையிருக்கு அதுக்கு மத்தில நீயும் என்னோட தலைல வேலைய கட்டிவிட்டுருக்க எல்லாத்தையும் பாத்துக்க வேண்டாமா” என்றதில் பல்லை கடித்த தியா “பல்ல பேத்துருவேன் நாயே.. உனக்கு வாய் கொழுப்பு ஜாஸ்தியாயிடுச்சு மவன நேருல வந்தேன் வை செருப்ப கழட்டி அடிப்பேன்”

 

“உண்மைய சொன்னா கசக்க தான் செய்யுமாம் நீ உண்மைய ஒத்துக்கவா போற.. பின்ன எனக்கு எதுக்கு வம்பு தாங்கள் அழைத்த விஷயத்தை பேசவும்”

 

“ம்ம்.. நான் சொன்ன வேலை என்னாச்சு விசாரிச்சியா இல்லையா”

 

“அதெல்லாம் பக்காவா விசாரிச்சாச்சு நீ வரேன் சொன்னா அப்பாயின்ட் போட்டுற வேண்டிய தான்”

 

“ஓகேடா நான் டூ டேஸ்ல கால் பண்ணி சொல்லுறேன் கேஸ் விஷயமா பிஸியாயிருக்கேன்டா.. அதே சமயம் அந்த நரேன் வேற கூடவே சுத்துறான்.. நான் கொஞ்சம் திசை மாறினாலும் அவனுக்கு சந்தேக வந்திடும்.. சோ கேர்ஃபுல்லா ஹன்டியில் பண்ணனும்.. நீயும் ஜாக்கிரதையாயிரு உன்ன நம்பி தான் நான் நிம்மதியாயிருக்கேன்” என்றதில் அவளின் உணர்வுகளை புரிந்து கொண்டவன் “யூ டோண்ட் வொர்ரி நான் பாத்துக்குறேன்.. நீ கவலையே இல்லாம உன் எக்ஸ் கூட என்ஜாய் பண்ணு” என்றதில் கடுப்பான தியா

 

“எடு செருப்ப நீ திருந்த மாட்டல” என்று அவனை அர்ச்சித்து கொண்டிருக்க, அதை கவனிக்காதவன் “ஏய் தியா அப்புறம் பேசுறேன்” என்று அவள் பதிலை கூட கேட்காமல் அவசரமாக அழைப்பையை துண்டித்து விட்டான்.

 

இவ்வளவு நேரம் நன்றாக பேசியவனின் குரல் இறுதியாக பதற்றம் தென்ப்பட்டதை உணர்ந்து “டேய் டேய் என்னாச்சி.. ஆர்யா ஆர்யா” என்று மறுமுனையில் பதில்யில்லாததில் அழைப்பு துண்டிக்கப்பட்டதை கண்டு காலை கடுப்பில் தரையில் உதைத்த தியாவிற்கும் காரணம் தெரியாமல் பதற்றம் தொற்றிக் கொண்டது.

 

அதே நேரம் அம்மா என்ற கத்தல் கேட்டு, அச்சத்தம் கேட்ட எதிர் திசையில் பார்வையை திருப்பிய தியா ரத்த வெள்ளத்தில் பிரசவ வலியில் கத்தியப்படி கீழே கிடந்த பெண்ணே தெரிய, அதில் சப்த நாடியும் அடங்கி அசைய மறந்து ஆணி அடித்தாற் போல நின்றாள்.

 

வண்டியில் அமர்ந்து அதிகாரியிடம் பேசி முடித்த ரேயன், அப்போது தான் பெண்ணவள் பின்னே இல்லாததை உணர்ந்து வண்டியிலிருந்து இறங்கி கடுப்பில் காலை உதைத்து கொண்டிருந்தவளை ‘என்னாச்சி இவளுக்கு’ என்ற யோசனையுடனே அவளை நோக்கி வந்தவனும் எதிர் திசையில் கேட்ட சத்தத்தில் அதிர்ந்து பின் அடித்து பிடித்து அப்பெண்ணின் அருகில் ஓடினான்.

 

அப்பெண்ணோ பிரசவலியில் குருதி வெளியேறி கதறி கொண்டிருக்க, அவ்விடம் சென்ற ரேயன் நொடியும் தாமதிக்காமல் பெண்ணவளை கையில் ஏந்தி கொண்டு, இவ்விடம் வாகனம் எதுவும் வராததால் பிராதான சாலையை நோக்கி ஓடியவன், அங்கு வந்த ஆட்டோவை நிறுத்தி,

 

அதில் பெண்ணவளை கிடத்தி தானும் ஏறி கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்.

 

பின் மறுபடியும் அப்பெண்ணை கையில் அள்ளி கொண்டு மருத்துவரை நோக்கி ஓட, அங்கிருந்த மகப்பேறு மருத்துவரும் சூழ்நிலையை உணர்ந்து அனைத்தையும் அவசரமாக ஏற்பாடு செய்து பெண்ணவளின் வயிற்றிலிருந்த சிசுவை எடுக்கும் பணியை மேற்கொண்டனர்.

 

அதன் பின் ருத்ரனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வர கூறிவிட்டு ரேயனும் கலவரமாகவே வெளியே நின்றிருந்தான்.

*****

 

அப்பெண்ணின் சத்தம் கேட்டு திக் பிரம்மை போல் நின்று கொண்டிருந்த தியாவிற்கோ கால்கள் விலவெடத்து கண்டதை ஜீரணிக்க முடியாமல் மூச்சு வாங்க சிரமப்பட்டு கொண்டிருந்தவளின் மூளையோ தான் மறக்க நினைக்கும் இறந்த கால நிகழ்வை கண்முன் கொண்ட வர, அதில் மேலும் நடுங்கி தலையை அழுத்தி பிடித்து “நோ நோ” என்று வேகமாக ஆட்டியவளின் கண்கள் சொருக, அழுத்தம் தாங்காமல் அப்படியே மயங்கி கீழே விழுந்தாள்.

 

மருத்துவமனையிலிருந்த ரேயன், அப்பெண்ணுடன் குழந்தையும் காக்க வேண்டும் நோக்கில் விரைந்து செயல்பட்டதில் தியாவின் நிலையை கவனிக்க தவறி விட பெண்ணவள் வண்டியில் தன்னை பின் தொடர்ந்து வந்து விடுவாள் என்ற நம்பிக்கையில் சில நிமிடம் அமைதியாக இருந்தவனின் மூளைக்கு சம்பவத்தை கண்டு அவள் அதிர்ச்சியில் நிலை குழைந்து நினைவில் வர, அவள் இன்னும் வராததில் ஏதோ தவறாக தோன்றியது.

 

அந்நேரம் சரியாக ருத்ரனும் நுழைய “மச்சி.. நீ இங்கேயே இரு.. நான் பத்து நிமிஷம் வந்துருறேன்” என்றவனின் பதற்றத்தை கண்டு “என்னாச்சி.. தியா எங்க உன்கூட தான வந்தா”

 

“அவள கூட்டி வரேன் போறேன் வந்து சொல்லுறேன் மச்சி.. கார் கீ கொடு” என்க, அதற்கு மேல் கேள்வி கேட்காமல் சாவியை அவனும் கொடுக்க,

 

அதை வாங்கிய நொடி மின்னல் வேகத்தில் பறந்தான்.

*****

 

மருத்துவமனையிலிருந்து காரை மின்னல் வேகத்தில் கிளப்பியவன், அப்பெண்ணை கண்ட இடத்திற்கு விரைய, ஆள் அரவமற்ற சாலையில் மயங்கி கிடந்தவளை கண்டு அதிர்ந்து, காரிலிருந்த தண்ணீரை எடுத்து தெளித்து, அவள் கன்னம் தட்டிய ரேயன் “தியா தியா.. இங்க பாரு என்னடியாச்சு” என்றவனுக்கு தன் காதலின் நிலை கிலி எடுக்க, அவளை அள்ளி கொண்டு காரில் ஏறி, அவளையும் அதே மருத்துவமனையில் சேர்த்தான்.

 

அவன் தூக்கி வரும் போதே பதறிய ருத்ரன் “மச்சி மச்சி..” என்று அவன் பின்னே ஓடினான்.

 

பின் உள்ளே அவளுக்கு சிகிச்சை நடக்க, ரேயனிடம் வந்த ருத்ரன் “என்னாச்சி மச்சி.. எப்படி அன்கான்ஸ்கியஸ் ஆயிட்டா” என்க, அதை கேட்டால் தானே அவனின் மூளைக்கு யோசனைகள் கேள்வி எழுப்ப, அதிலே சித்தம் இழந்து அமர்ந்திருந்தான்.

 

தான் கேட்டும் பதில் வராததில் அவன் தோலை உலுக்கிய ருத்ரன் “உன்கிட்ட தான கேக்குறேன் ரேயா.. என்னாச்சி அவளுக்கு”

 

“தெரியல மச்சி.. நான் போகும் போது ரோட்ல மயங்கி கிடந்தா.. ஒருவேளை அங்க நடந்ததுல ஷிவராகி மயங்கிருப்பா போல” என்று நடந்ததை அவனிடம் கூறி முடிக்கவும் கையில் குழந்தையுடன் வந்த தாதியரோ “சார் அவங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு” என்று அவனிடம் காட்ட,

 

அக்குழந்தையை கையில் வாங்கி கொஞ்சிய ரேயன், அவரிடம் “அவங்க எப்படி இருக்காங்க”

 

“சாரி சார்.. இப்போவரை டிரை பண்ணிட்டு தான் இருக்கோம்.. அவங்க பிழைக்குறது கஷ்டம்” என்று கூறி கொண்டிருக்கும் போதே அவ்விடம் ஓடி வந்த வேறொரு தாதியர் “சார்.. அவங்க உங்கள பாக்க ஆசைப்படுறாங்க சோ பிளீஸ் சீக்கிரம் வாங்க” என்க,

 

அவனும் ருத்ரனிடம் கண்ணை காட்டிவிட்டு குழந்தையை கையில் ஏந்தியவாறே பெண்ணவளை காண வந்தான்.

 

மூச்சு கஷ்டப்பட்டு கொண்டிருந்த அப்பெண்ணோ, அவனை கண்டதும் இதழ் விரித்து கடினப்பட்டு கையை உயர்த்தி “நன்..றி சா..ர்* என்று வாயசைக்க, அவளின் நிலையில் கலங்கி பெண்ணவளின் கையை ஆதரவாக பற்றி கொண்டான்.

 

அதில், அவன் கையை தன் கைகளுக்குள் அடக்கியவள் “என்.. குழந்..தைய பத்..திர..மா பாத்துக்..கோங்க.. சார்.. என் குழந்..தைய சுத்..தி ஆபத்..து இரு..க்கு.. அவளு..க்கு யாரும் இ..ல்ல உங்க..ள நம்..பி தான் நிம்ம..தியா போ..க போ..றேன்..” என்று கூறி ஆசையாக தன் மகளை வருடி,

 

அவளின் பிஞ்சு முகத்தை இறுதியாக கண்ணில் நிறப்பி ரேயனை பார்த்தவளின் பார்வை அப்படியே நின்று விட, அவனிற்கும் நம்பிக்கையில் நிம்மதியாக கண்களை மொத்தமாக மூடினாள்.

 

அவ்வளவு நேரம் அமைதியாக, அவன் கையில் உறங்கி கொண்டிருந்த குழந்தை அன்னை இழைப்பை உணர்ந்ததோ என்னவோ வீரிட்டு அழ தொடங்க, பிஞ்சை நெஞ்சோடு அழுத்தி பிடித்து அவளின் தாயை பார்த்து பெருமூச்சுவிட்டு விட்டு வெளியே வந்தவன், நண்பனின் அருகில் அமர்ந்து குழந்தையை முதுகில் போட்டு “ஒன்னும் இல்லடா” என்று தட்டி கொடுத்து கொண்டே ருத்ரனை பார்க்க,

 

அவனின் பார்வை அர்த்தம் உணர்ந்து “ஸ்ட்ரெஸ் அதிகமாகி மயங்கிட்டாலாம் இனி ஓவர் ஸ்ட்ரெஸ் ஆகாம டாக்டர் பாத்துக்க சொன்னாங்க.. அதோட இன்னும் அவளுக்கு கான்ஸ்சியஸ் வரல திரிப்ஸ் போயிட்டுருக்கு” என்றதை கேட்டு கொண்டவன் குழந்தையை சமாதானம் படுத்தும் பணியை செய்து கொண்டிருந்தான்.

 

அதனை கண்டு ருத்ரன் “ரேயா குழந்தைய என்கிட்ட கொடுடா” என்றதில் ஒரு மாதிரி பார்த்து வைத்த ரேயன் “நீ சின்ன பையன் மச்சி.. உனக்கு இதெல்லாம் அனுபவம் பத்தாதது” என்று அவனை வாரியவனுக்கு ஏற்கனவே அவனின் பெண்குழந்தை நிஷாவை பார்த்து கொண்டிருந்ததின் அனுபவம் நிறையவே இருக்க, அழகாகவே குழந்தையை சமாளித்தான்.

 

அவன் பேச்சில் முறைத்து தோலில் அடிபோட்ட ருத்ரன் “உனக்கு அனுபவம் இருக்கு தான் யார் இல்லன்னு சொன்னா.. இப்படி ரத்த கரையோட பேபி வச்சிருந்தா குட்டிக்கு இன்ஃபெக்ஷன் ஆயிடும்.. கார்ல என்னோட ஷர்ட் இருக்கும் சேஞ்ச் பண்ணிட்டு வா” என்று குழந்தையை வாங்க கை நீட்ட, அவன் கூற்று சரியென உணர்ந்து குழந்தையை கொடுத்து அவன் எழும்பிய மறுநொடி குழந்தை மறுபடியும் வீரிட்டு அழுததில் மருத்துவமனையே ரெண்டாகி விடும் போலிருக்க, ருத்ரன் தான் விழி பிதுங்கி விட்டான்.

 

நண்பனின் பாவனையில் சிரித்த ரேயன் “நான் தான் சொன்னேன்ல இதுக்குலாம் நீ சரிப்பட்டு வர மாட்ட.. குட்டிய என்கிட்ட கொடுத்துட்டு போய் நீயே கார்லயிருந்து ஷர்ட் எடுத்துட்டு வா” என்று குழந்தையை வாங்க முயல, அதற்குள் அவனை தள்ளிவிட்டு இரு கரம் அக்குழந்தையை வாங்கிவிட்டது.

****

 

மருந்து உடலில் செலுத்தப்பட்டதின் பயனால் மெல்ல கண் விழித்த தியாவிற்கு, அப்பெண் நிலையே கண் முன்னே வர, அதிலே தன் கடந்த கால நிகழ்வில் மறுபடியும் உடல் உதறல் எடுத்து கைகள் நடுங்க, தலையை பிடித்து அமர்ந்திருந்தவளுக்கு அக்குழந்தையின் அழுகை காதில் எட்டியது.

 

அதில் எண்ணத்தை மறந்து கையில் உள்ளதை பிச்சி எரிந்துவிட்டு அறையை விட்டு வெளியே ஓடி வந்து குழந்தையை கைகளில் அள்ளி “ஒன்னும் இல்லடா பட்டு குட்டி.. ஏன் அழுறீங்க.. என் பட்டுல அழ கூடாதுடா தங்கம்..” என்று குழந்தை கொஞ்சி ஆட்டி கொடுக்க, குழந்தையோ அவளிடம் அன்னையின் அரவணைப்பை உணர்ந்ததோ என்னவோ அழுகை நிறுத்தி கண்கள் சிமிட்டி அவளையே பார்த்து கொண்டிருந்தது.

 

அதன் அழகில் கவலை மறந்து “கியூட் செல்லம்டா நீங்க.. மம்மு குடிக்கலாமா” என்று தாதியரை நிறுத்தி “சிஸ்டர்.. குழந்தைக்கு பால்” என்க, தாதியரும் குழந்தைக்காக புட்டி பாலை கரைத்து எடுத்து வந்து பெண்ணவளிடம் கொடுத்துவிட்டு செல்ல, மென்புன்னகையுடன் “தேங்க்ஸ் சிஸ்டர்” என்று கூறியவள் அதனை மிகவும் மென்மையாக தாய்மையும் சேர்த்து குழந்தைக்கு புகட்டினாள்.

 

தோழியை தனக்கு தெரிந்தவரை இறுக்கமாகவே பார்த்து, அவளின் அன்னை அவதாரத்தை ருத்ரன் எட்டாவது அதிசயம் பார்ப்பது போல் வியந்து பார்க்க,

 

பெண்ணவள் தள்ளிவிட்டதில் சுவரில் மோதயிருந்த ரேயன் தன்னை சுதாரித்து கையை சுவரில் ஊன்றி அடிப்படாமல் தடுத்து திரும்பியவன், ஏற்கனவே கடந்த காலத்தில் காதலியாக இருந்தவளின் மென்மை குணத்தை அறிந்திருந்ததால் எந்த வியப்பும் இல்லாமல், அந்நொடி அவள் மேலிருந்த கோவம் மறந்து அவளின் தாய்மையை ரசித்தான்.

 

குழந்தை தூங்கும் வரை தான் இருக்கும் இடம் மறந்து அருகிலிருந்தவர்களை கண்டு கொள்ளாமல் இருந்தவள், அதன் பின் தான் தன்னை அவர்கள் பார்க்காததை பார்ப்பது போல் பார்த்ததை உணர்ந்து நொடியில் முகத்தை இறுக்கமாக மாற்றி கொண்டு “நான் அழகுன்னு எனக்கு தெரியும்டா.. அதுக்காக இப்படி என்ன சைட் அடிச்சா மத்த வேலைலாம் யாரு பாக்குறது.. மிஸ்டர் மச்சி உங்களுக்கு கொடுத்த வேலை என்னாச்சி போய் அத பாருங்க” என்றவளின் முகம் இறுக்கமாகவே இருந்தாலும் வார்த்தை கேலியாகவே ஒலிக்க,

 

ருத்ரனோ ‘முகத்தை கூட இறுக்கமா வச்சிட்டு கவுண்டர் அடிக்க இவளால தான் முடியும்’ என்று எண்ணி இருவரையும் முறைத்துவிட்டு எழுந்தவனுக்கு தோழியிடம் இந்தளவு மாற்றம் வந்ததே சற்று நிம்மதியாக இருக்க, தலையாட்டி பெருமூச்சு விட்டு கொண்டு தான் பாதியில் விட்டு வந்த பணியை காண சென்றான்.

****

ருத்ரன் எழும்பவும் தானும் எழும்பி அவனோடு சென்றவன், அவனிடம் காரிலிருந்த சட்டை வாங்கி மாற்றி கொண்டே உள்ளே வந்திருக்க,

 

அப்போது தான் இருந்த அறைக்குள் குழந்தையுடன் சென்ற தியா, அதனை கையில் வைத்து பார்த்து கொண்டிருக்க, அதனை உணர்ந்து தாதியாரிடம் கேட்டு குழந்தைக்காக மருத்துவமனையிலிருக்கும் தொட்டிலை எடுத்து கொண்டு பெண்ணவளின் அறைக்குள் நுழைந்து அதனை அவளருகில் வைத்தவன் “தியா.. குட்டிய இதுல வைக்கலாம்”

 

“இல்ல என்கிட்ட இருக்கட்டுமே” என்றவளின் குரல் மிகவும் மென்மையாக ஒலிக்க, அதில் தன்னையும் மீறி ரகசியமாக, அவனின் இதழ் விரிய “சொல்லுறேன்ல கொடு” என்று தானே அவளிடமிருந்து வாங்கும் போது பெண்ணவளோ “ஆ..” என்று கத்த,

 

புருவம் சுருக்கி பார்த்தவாறே குழந்தையை வாங்கி தொட்டியில் கிடைத்தியவன் “எதுக்கு கத்துன”

 

“ஒன்னும் இல்ல” என்று பெண்ணவள் கையை மறைக்க முயல, அவளின் செயலில் வித்தியாசத்தை உணர்ந்து அருகில் அவளுக்கு ஏற்றப்பட்டிருந்த மருந்து அறுந்து கீழே அது சொட்டு சொட்டாக வடிவதை பார்த்து முறைத்துவிட்டு, அவள் கையை இழுத்து “என்னடி இது கொஞ்சம் கூட சென்ஸ் இல்ல.. இப்படி தான் கழட்டி எரிஞ்சிட்டு வருவியா கைய பாரு பிளட் வந்து உரைஞ்சி வீங்கியிருக்கு”

 

“குழந்தை அழவும்..” என்றவளை தடுத்தவன் “வாய திறந்த அடிச்சிடுவேன்.. இரு வரேன்” என்று வெளியே சென்று தாதியரிடம் விஷயத்த கூறி அழைத்து வர, அவரும் அவளை ரெண்டு வார்த்தை திட்டிவிட்டே அம்மருந்தை மறுகையில் மாற்றிவிட்டு செல்ல, இன்னும் பெண்ணவளை முறைப்பதை நிறுத்தாத ரேயன் அவளின் அருகில் கையை இழுக்க, வலியில் முகம் சுருக்கியவள் “எதுக்கு ஹார்ஷா நடந்துக்குற நரேன்.. கை வலிக்குது”

 

“அத பிடுங்கி எரியும் போது தெரியலயோ” என்று கடுகடுத்துவிட்டு பெண்ணவளின் கை காயத்தில் மருந்திட, தியாவோ அவனை இமைக்காமல் பார்த்திருந்தவள், நொடியில் அதற்கு உரிமையில்லை என்பதை உணர்ந்து மாற்ற எண்ணி “பேபியோட அம்மா எப்படி இருக்காங்க.. நான் பாக்கலாமா”

 

“பாக்க முடியாதா தூரத்துக்கு போயிட்டா அந்த பொண்ணு” என்றவன் கையிலிட்ட மருந்து பெண்ணவளுக்கு எரிச்சல் உண்டு பண்ண கூடாதென்று தன் வாயில் காற்றால் ஊதி விட, அதில் உண்டாகும் சிலிர்ப்பால் கையை விலக்கியவள் “யூ மீன் உயிரோட இல்லையா” என்றதுக்கு “இல்ல” என்று அவனும் தலையாட்ட, அவ்வளவு தான் இவ்வளவு நேரம் இருந்த இதம் நீங்கி முகம் இறுகிவிட்டாள்.

*****

தொடரும்..

– ஆனந்த மீரா 😍😍

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்