Loading

அத்தியாயம் 42

குளுக்கோஸ் ஏறி கொண்டு இருக்க , அதை எடுத்த சத்யா எழுந்து நின்றான். தீப்ஷீயை பார்த்து சல்யூட் அடித்தான் .

 

இருவர் மனதிலும் அவர்கள் முன்பு பேசிய உரையாடல் வந்து போனது , ” நான் ஒரு நாள் ஐ.பி.எஸ் யூனிஃபார்ம் போடும் போது நீ தான் ஃபர்ஸ்ட் சல்யூட் அடிப்ப. ”

 

” சாரி அம்மு , என்னால் ஃபர்ஸ்ட் சல்யூட் அடிக்க முடியல்லை. ”

 

” சத்யா .” என்றவள் அவனை அணைத்துக் கொண்டாள் .

 

” நீ போய் வேலைய முடிச்சிட்டு வா. ”  என்றான் சத்யா .

 

” பாய் சத்யா. ” என்ற தீப்ஷீ வெளியே சென்றாள் .

 

‘ தேவ் மட்டும் வரவில்லையே. ‘ என்று அவன் மேல் கோபமாக இருந்தாள் தீப்ஷீ .

 

வெளியே வந்த போது அவளுக்கு ஃபோன் வந்தது .

 

” ஹலோ மேடம் தேவ் வந்த கார் ஆக்சிடென்ட் ஆகிடுச்சு, சுகம் ஹாஸ்பிடல்ல இருக்கோம். ” என்ற கோகுலின் போன் ஸ்விட்ச் ஆப் ஆகிவிட்டது .

 

ஏதோ தீப்ஷீ கேட்க வர , கால் கட்டாகிவிட்டது .

 

அவன் சொல்லிய மருத்துவமனை அருகில் இருந்ததால் , வேகமாக அங்கு ஓடினாள் தீப்ஷீ .

 

‘ ஒருவரின் அருமை அவர்கள் இருக்கும் போது தெரியாது என்பார்களே . தேவ் இன்னும் என் மீது உள்ள காதலை கூட சொல்லலையே . உங்களுக்கு ஒன்னும் ஆகாது . ஆகவும் விடமாட்டேன் .’ என்று அழுதுக் கொண்டே ஓடினாள் தீப்ஷீ .

 

ஹாஸ்பிடல் உள்ளே தீப்ஷீ செல்ல , அங்கிருந்த காரிடாரில் தேவ் நடந்து வந்துக் கொண்டிருந்தான் .

 

தேவ்வை பார்த்த தீப்ஷீ , ” தேவ்…”  என்றுக் கத்தியவள் அவனை ஓடி வந்து அணைத்துக் கொண்டு அழுதாள்  .

 

நல்ல வேளையாக அங்கு யாரும் இல்லை .

 

” தீப்ஷீ ஏன் அழற?”  என்றுக் கேட்டான் தேவ் .

 

” உங்களுக்கு ஆக்சிடென்ட்னு ஃபோன் வந்தது . உங்களுக்கு ஒன்னுமில்லையே?”

 

” எனக்கு ஒன்னுமில்லை தீப்ஷீ . முதல்ல நகரு . யூனிஃபார்ம் போட்டிருக்க. நாம பப்ளிக் பிளேஸ்ல இருக்கோம். ” என்றான் தேவ் .

 

வேகமாக நகர்ந்த தீப்ஷீ , யாரும் பார்த்தார்களா என்று பார்த்தவள் , யாரும் அங்கு இல்லாததால் பெருமூச்சு விட்டாள்.

 

கோகுலிடம் திரும்பி , ” எதுக்கு ஆக்சிடென்ட்னு பொய் சொன்ன? ” என்றுக் கேட்டாள் கோபமாக .

 

தேவ்வும் அவனை முறைத்தான்.

 

” மேடம் , ஆக்சிடென்ட் ஆனது உண்மை தான் . தப்பு எங்களை மோதிய வண்டி மீது தான் . அதில் வந்தவங்களுக்கு தான் அடி . நாங்க அவங்களை இங்கு சேர்க்க வந்தோம் . போலீஸ் , கேஸ்னு சொல்லவும் நான் பயந்துட்டேன். அதான் தேவ்வுக்கு தெரியாம உங்களுக்கு ஃபோன் பண்ணேன். ஃபோன்ல சார்ஜ் இல்லை. அதான் முழுசா சொல்வதற்குள் ஸ்விட்ச் ஆஃப் ஆகிடிச்சி. ” என்றான் கோகுல் .

 

” உன்னை …” என்ற தீப்ஷீ அவனை அடிக்க துரத்த .

 

” ஐயோ ! மீ எஸ்கேப் .” என்ற கோகுல் ஓடிவிட்டான் .

 

” தீப்ஷீ நில்லு.” என்றான் தேவ் .

 

தீப்ஷீ திரும்பி அவனை பார்த்தாள் . ” இப்போ நீ என்ன பண்ண? ” என்றுக் கேட்டான் .

 

யோசித்த தீப்ஷீயின் கன்னம் வெக்கத்தில் சிவந்து , ” எனக்கு ஞாபகம் இல்லை.” என்றாள் .

 

” எனக்கு ஞாபகம் இருக்கு. ”  என்றான் தேவ் .

 

” எனக்கு வேலை இருக்கு நான் போறேன். ” என்றாள் தீப்ஷீ .

 

” தீப்ஷீ , எப்படி சத்யா கிடைச்சான்? ”  என்றுக் கேட்டான் தேவ் .

 

” டைமில்லை . சத்யா கிட்ட கேட்டுக்கோங்க. ”

 

” நான் அவனை பார்க்க தான் வேகமா வந்தேன் . சத்யாவை தான் பார்க்க போறேன். ”

 

” பாய். ” என்ற தீப்ஷீ ஸ்டேஷன் சென்றாள் .

 

****

 

ஶ்ரீதரிடம் இருந்த மூன்று பேரையும் அழைத்து வந்தாள் தீப்ஷீ .

 

தனக்கு கிடைத்த ஆதாரம் எல்லாம் ஒன்று சேர்த்து தன் மேல் அதிகாரியிடம் தந்தாள் தீப்ஷீ .

 

” தீப்ஷீ , நீங்க துப்பாக்கியை பயன்படுத்தியது தப்பு தான் . இருந்தும் சூழ்நிலை அப்படி அமைஞ்சிடிச்சு. ஆதாரம் எல்லாம் இருப்பதால் ஒன்னும் பிரச்சனை இல்லை . குட் ஜாப். மனித உரிமை ஆணைத்தில் விசாரிப்பாங்க. எல்லாத்துக்கும் ரெடியா இருங்க . ஆதாரம் எல்லாம் உங்களுக்கு ஆதரவா இருப்பதால் கவலை இல்லை . என்னால் முடிந்த உதவியும் செய்றேன்.  ” என்றார் .

 

” தேங்க்ஸ் சார். ”  என்ற தீப்ஷீ சல்யூட் அடித்து வெளியே வந்தாள் .

 

பார்மாலிட்டிசை முடித்த தீப்ஷீ , பிரஸ் மீட் போனாள் .

 

*****

 

எல்லா டெஸ்டுகளும் எடுத்த பின் வீட்டிற்கு சென்றனர் அனைவரும் .

 

சந்தியாவின் மௌனம் முடிந்தப்பாடில்லை . வீட்டிற்கு வந்ததும் சத்யா , ” சந்தியா இங்க வா. ” என்று ரூமிற்கு சென்றான் .

 

உள்ளே வந்தாள் சந்தியா .

 

” ஏன் பேச மாட்டேங்குற? நான் உயிரோடு வந்தது பிடிக்கலையா? ” என்றுக் கேட்டான் சத்யா .

 

அவனின் வாயை மூடிய சந்தியா , ” ப்ளீஸ் இப்படி எல்லாம் பேசாதீங்க . எங்கு பேசினால் இது கனவா மாறிடுமோனு பயமா இருக்கு. ” என்றாள் .

 

அவளின் கையைக் கடித்தான் சத்யா .

 

” ஆ … ” என்று கையை எடுத்தாள் சந்தியா.

 

” கனவில்லை நிஜம் தான் .” என்றான் சத்யா .

 

“….”

 

” நான் இல்லணா வேற நல்ல பையனா கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தான ? ”

 

” நான் கல்யாணம் பண்ணிக்க மட்டும் நினைச்சிருந்த இப்போ இல்லை, நான் படிப்பு முடிஞ்ச கையோட பண்ணிருப்பேன் . விருப்பமில்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டு எவ்வளவோ பேர் சந்தோஷமா இருக்காங்க . ஆனா என்னோட வாழ்க்கைல அப்படி நடக்க வாய்ப்பில்லை ஏன்னா …” என்று அவள் கடந்த கால கசப்பான நிகழ்வை சொல்ல வர .

 

அவளை சொல்ல விடாமல் அவள் வாயை முடிமயவன் ,” சரி , வேற யாரையாவது லவ் பண்ண வேண்டியது தான ? ”

 

” அந்த பாழா போன லவ் எனக்கு உங்க மேல மட்டும் தான் வருது. வேற யார் மேலையும் வரலை. ” என்றாள் சத்யாவின் கண்களை பார்த்துக் கொண்டே .

 

” நான் உன்ன கல்யாணம் பண்ணிக்க ரெடி. பட் எனக்கு இன்னும் உன் மேல் காதல் வரலை. ”

 

கண்கள் கலங்க , ” நான் தான் முன்னாடியே சொன்னேனே . உங்களுக்கு லவ் வரவரைக்கும் நான் வெயிட் பண்ணுறேன் . ஒருவேளை வரலைன்னா நான் உங்களை தொந்தரவு பண்ண மாட்டேன். ” என்ற சந்தியா பேச்சு முடிந்ததாக திரும்பி செல்ல .

 

அவளை இழுத்து அணைத்தவன் . அவளின் உதட்டில் முத்தம் பதித்தான் .

 

பயத்தில் அவளுக்கு உடல் நடுங்க. அவளின் முதுகை ஆதரவாக தட்டி அவளின் நடுக்கத்தை குறைத்தான் . மெல்ல நடுக்கம் குறைய . அவளை தன் அணைப்பிலிருந்து விட்டான் சத்யா .

 

சத்யா அவளை ஆர்வமாக பார்க்க . சந்தியாவின் முகத்தில் வெட்கத்திற்கு பதில் பயம் தான் இருந்தது . மனம் முழுவதும் சத்யாவை காதலிப்பவளால் இதை ஏற்க்க முடியாமல் போனது விதியின் சதியோ ?

 

அவளின் கையை இழுத்து தன் பக்கத்தில் உட்கார வைத்த சத்யா , ” சாரி டா . நீ சோகமா போறத பார்க்க முடியாம இப்படி பண்ணிட்டேன் . என் காதலை உணர்த்தவும் தான் இப்படி செஞ்சேன் .”

 

” ப்ளீஸ் சாரி கேட்காதீங்க . என் தலை எழுத்து உங்களை உயிர்க்குயிரா நேசிச்சும், என்னால் … ” என்றவளால் முழுவதும் சொல்ல முடியாமல் வெட்கத்தில் தலைகுனிய.

 

சிரித்துக் கொண்டே பெட்டிலிருந்து கீழே இறங்கியவன் , அவளின் காலை மடியில் வைத்தவன் அவளின் கண்களை பார்த்துக் கொண்டே , ” செக்ஸ் இஸ் எ பார்ட் ஆப் லவ் பட்  இட் இஸ் நாட் மஸ்ட் ஃபார் லவ் (sex is a part of love but it is not must for love). புரியுதா?”

 

” புரியுது சத்யா . நாம எப்ப கல்யாணம் பண்ணிக்க போறோம் ? ”

 

” நாளைக்கு கல்யாணம்னாலும் எனக்கு ஓகே தான் சந்தியா . இந்த உயிரை கஷ்டப்பட்டு பிடிச்சி வெச்சதே அம்முவிற்காகவும் , உனக்காகவும் தான் . ஐ லவ் யூ சந்தியா . எனக்கு தெரியும் நீ எனக்காக காத்திருப்பேனு.” என்றான் சத்யா .

 

” ஐ லவ் யூ டூ . சரி வாங்க வெளிய போலாம் .” என்றாள் சந்தியா .

 

” அப்பா , எங்களுக்கு உடனே கல்யாணம் பண்ணுங்க.” என்றாள் சந்தியா .

 

” ஒரு வாரம் டைம் கொடு சந்தியா . உன் கல்யாணத்தை கிராண்டா பண்ணணும். ” என்றார் ராஜன் .

 

அனைவருக்கும் மகிழ்ச்சியே .

 

சந்தியா குடும்பம் சென்றுவிட்டனர் .

 

” கமலாமா உங்களுக்கு சம்மதமா ?” என்றுக் கேட்டான் சத்யா .

 

” சம்மதம் சத்யா . நானே உங்களுக்கு உடனே கல்யாணம் பண்ணணும்னு இருந்தேன். ”

 

” சரண்யாமா , அப்பா , உங்களுக்கு சம்மதமா ?” என்றுக் கேட்டான் சத்யா .

 

” எங்களுக்கும் முழு சம்மதம் . நாளையிலிருந்து எல்லா வேலையும் செய்ய ஆரம்பிக்கணும். ” என்றார் தினேஷ் .

 

தீப்ஷீ , வேலை முடித்து வீட்டிற்கு வரவே இரவாகிவிட்டது .

 

வீட்டிற்கு வந்தவள் நேராக சென்றது சத்யாவை பார்க்க தான் .

 

” சத்யா…. ” என்றுக் கத்திக் கொண்டே வந்தாள் தீப்ஷீ .

 

” அம்மு …”

 

” சத்யா , நல்லா இருக்கியா ? எதுவும் செய்தா? ”

 

” நான் நல்லாதான் இருக்கேன். நீ தான் டயர்டா இருக்க? ” .

 

” ஆமா சத்யா. ”  என்ற தீப்ஷீ அவன் மடியில் படுத்துவிட்டாள் .

 

” கமலாமா , பழம் எடுத்துட்டு வாங்க. ” என்றான் சத்யா .

 

அவர் தந்ததை வாங்கிய சத்யா அதை தீப்ஷீக்கு ஊட்டிவிட்டான்.

 

வழக்கம் போல் அவர்களின் நட்பை வியப்பாக பார்த்தார் கமலா .

 

கொஞ்சம் சாப்பிட்ட தீப்ஷீ , ” நீயும் சாப்பிடு சத்யா ‌.” என்று அவனுக்கு ஊட்டிவிட்டாள் .

 

இருவரின் கண்களிலும் கண்ணீர் .

 

தீப்ஷீ கண்களை துடைத்த சத்யா , ” எல்லாம் முடிந்துவிட்டது அம்மு . இனி நாம அழக்கூடாது. ”

 

” அம்மு , சந்தியாவை கல்யாணம் பண்ண சம்மதம் சொல்லிட்டான் . அடுத்த வாரமே கல்யாணம் . உனக்கு ஓகே தான அம்மு. ”

 

” இப்போவது சம்மதம் சொன்னியே ரொம்ப சந்தோஷம் . சரி நீ தூங்கு சத்யா . நாளைக்கு காலைல பார்க்கலாம். ” என்ற தீப்ஷீ தன் வீட்டிற்கு சென்றாள் .

 

வீட்டின் உள்ளே வந்தாள் தீப்ஷீ . அப்போது தான் அவளின் கை கட்டை பார்த்தான் தேவ் .

 

” தீப்ஷீ , எப்படி அடிபட்டது? ”  என்றுக் கேட்டான் தேவ் .

 

” கேஸ் விஷயமா போன இடத்தில் அடிப்பட்டிச்சு? ”

 

” கவனமா இருக்க மாட்டாயா. ”

 

” என்னோட வேலையில் இதெல்லாம் சாதாரணம். ”

 

தேவ் மீண்டும் ஏதோ கேட்க வர .

 

” டேய் விடுடா அவளே இப்போ தான் டயர்டா வர்றா . அவ கிட்ட என்ன கேள்வி கேட்டுட்டிருக்க . நீ வந்து உட்காருமா. ”  என்றார் அமர் .

 

தேவ் கோபமாக ரூம் உள்ளே சென்றுவிட்டான் .

 

சாப்பிட்டு, வேலை எல்லாம் முடித்த தீப்ஷீ , ரூம் உள்ளே சென்றாள் .

 

ஜன்னல் அருகே கோபமாக நின்றுக் கொண்டிருந்தான் தேவ் .

 

அவனை பின் பக்கமாக அணைத்துக் கொண்டாள் தீப்ஷீ.

 

அவளின் கையை தள்ளிவிட்டான் தேவ் .

 

” ஆ … ” என்றாள் தீப்ஷீ .

 

” நடிக்காத டி . உனக்கு அடிப்பட்டது இடது கையில் . நான் தள்ளிவிட்டது வலது கை .”

 

” தெளிவா தான் இருக்கீங்க .” என்ற தீப்ஷீ மீண்டும் அவனை அணைத்தவள் அவன் காதில் , ” ஐ லவ் யூ.” என்றாள் .

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்