Loading

பூகம்பம் – 7

உணவு இடைவேளையில் காவ்யாவுடன் அமர்ந்திருந்த ஆதிரா சாப்பாட்டை அளந்தவாறு “டி என் ஆளு என்ன பண்ணிட்டு இருப்பான்.?” என்று கேட்க, ‘இன்னுமாடி நீ அதை விடல’ என்ற ரீதியில் காவ்யா அவளை பார்த்து வைத்தாள்.

“உன் வேலையை பாருனு சொன்னவன் என்ன பண்ணுனா உனக்கு என்னடி.?” – காவ்யா

“ப்ச் அப்படி சொன்னதை நினைச்சு பெருமைப்படணும்.. இது தான் சாக்குனு பொண்ணுக கூட கடலை போடாம எவ்வளவு டீசண்ட்டா சொன்னான்..” – ஆதிரா

“அடிப்பாவி” – காவ்யா

“நானே அப்பாவி.. என்னைய போய் அடப்பாவினு சொல்றீயே காவு..” என்று வராத கண்ணீரை ஆதிரா துடைக்க, அவளை அடிக்க ஏதாவது கிடைக்குமா.? என்று சுற்றியும் தேடினாள் காவ்யா முறைப்புடன்.

அப்போது அவர்களை நோக்கி ரஞ்சித் வர, “ஹலோ திரா பேபி.. உன் ஆளு கம்மிங்” என்று நமுட்டு சிரிப்புடன் காவ்யா கூறிட, பல்லை கடித்த ஆதிரா அவளை திட்ட வாயெடுக்கும் முன்பு “ஹாய்” என்றவாறு எதிர்திசையில் அமர்ந்தான் ரஞ்சித்.

“வாங்க ரஞ்சித்.. சாப்டாச்சா.?” – ஆதிரா

“உங்க கூட சேர்ந்து சாப்படலாம்னு தான் வந்தேன் திரா..” – ரஞ்சித்

“ஓஓஓஓஹோ” – காவ்யா

“இந்தாங்க திரா.. உங்களுக்கு தயிர் சாதம் ரொம்ப பிடிக்கும்னு அம்மாகிட்ட கேட்டு செஞ்சு கொண்டு வந்தேன்” என்று ஒரு டிபன் பாக்ஸை அவளிடம் நீட்டினான்.

அவனையும் டிபன் பாக்ஸையும் மாறி மாறி பார்த்த ஆதிராவின் காதருகில் காவ்யாவோ “டி தயிர் சாதம் குடுத்து உன்னைய கரெக்ட் பண்ண பார்க்கறான்.. பேசாம இவனுக்கே ஓக்கே சொல்லிருடி” என்று காதை கடித்தாள்.

அவளை எரிச்சலுடன் பார்த்து விட்டு ஆதிராவோ “நான் சாப்புட்டேன் ரஞ்சித்.. நீங்க சாப்புடுங்க” என்று கனிவுடன் மறுக்க, “எனக்காக மறுபடியும் சாப்பிட மாட்டியா திரா.?” என்று கெஞ்சலுடன் கேட்டான்.

‘நான் ஏன்டா உனக்காக சாப்படணும்.?’ என்று மனதினுள் புலம்பி வலுக்கட்டாயமாக வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் டிபன் பாக்ஸை வாங்கிய ஆதிரா உண்ணத் தொடங்கினாள்.

“சிவா வீட்டுக்கு போய்ருந்தீங்க போல.? திருவிழா எல்லாம் எப்படி.?” – ரஞ்சித்

“ம்ம்ம்ம் ஆமா ரஞ்சித்.. எப்பவும் அம்மாவும் அப்பாவும் தான் போவாங்க.. இந்த தடவை அவங்க போக முடிலனு நாங்க போனோம்..” – ஆதிரா

“நிவே என்னைய கூப்பிடவே இல்ல திரா.. நீ போவேனு தெரிஞ்சுருந்தா நானும் வந்துருப்பேன்.. சேர்ந்தே என்ஜாய் பண்ணிருக்கலாம்.. ச்சே மிஸ் ஆகிருச்சு” – ரஞ்சித்

‘இவ எனத்த என்ஜாய் பண்ணிட்டு வந்துருக்கானு எனக்கு மட்டும் தானே தெரியும்’ என்று காவ்யா முணுமுணுக்க, அது ஆதிராவுக்கும் நன்றாக கேட்டது.

இருந்தும் அவளை கண்டு கொள்ளாமல் “நெக்ஸ்ட்டு இயர் பார்த்துக்கலாம்” என்றவள் நமுட்டு சிரிப்பு சிரித்த தோழியை ரஞ்சித் அறியாத வண்ணம் நறுக்கென்று கிள்ளினாள்.

அதன்பின் எதுவும் பேசாமல் உணவை முடித்து விட்டு பெண்கள் இருவரும் முதலில் நகர்ந்திட, ‘உனக்கு ஒரு சர்பிரைஸ் வெச்சுருக்கேன் திரா.. இன்னும் கொஞ்ச நாள் வெய்ட் பண்ணு.. அது என்னனு உனக்கே தெரிய வரும்’ என்று செல்லும் ஆதிராவை பார்த்தபடி நினைத்தான் ரஞ்சித்.

“பாருடா மேடமுக்கும் சார் மேல அக்கறையை.? அவன் எதைய மனசுல வெச்சிட்டு பேசறானு உனக்கு புரியுதா.? இல்லையா.?” – காவ்யா

“நிவே அக்காவுக்காக தான் பார்க்கறேன்.. நான் ஏதாவது பேச போய்.. அது சிவா மாமாக்கு சங்கடத்தை குடுத்துட்டா என்ன பண்றது.?” – ஆதிரா

“புரியுது புரியுது.. பேசாம இவன்கிட்ட நான் கமிட்டுனு சொல்லிருடி.. பிரச்சனை ஓவர்” என்று கண்ணடித்து காவ்யா கூறிட, அவளை ஓரடி வைத்து “கொன்றுவேன்” என்று மிரட்டிய ஆதிரா வேலையை கவனிக்க அகன்றாள்.

நிவேதாவின் ஒன்று விட்ட மாமன் மகன் தான் ரஞ்சித். வீட்டிற்கு ஒரே மகன்.. திருமணம் ஒன்றில் தான் ஆதிராவை பார்த்து நிவேதாவின் உதவியால் அவளிடம் பேசினான் ரஞ்சித். தான் வேலை செய்யும் கம்பெனியில் தான் அவளும் வேலை செய்கிறாள் என்பதை அறிந்தவனுக்கு குஷியோ குஷி.

வேலை நேரம் தவிர மற்ற நேரங்களில் ஏதாவது கூறி அங்கு வந்து விடுவான்.. முதலில் இதை பெரியதாக எடுத்து கொள்ளாத ஆதிராவும் நாளாக நாளாக அவனின் நடவடிக்கையில் மாற்றத்தை கண்டு சற்று அவனை விட்டு விலகி நின்றாள்.

இத்தனைக்கும் அப்போது ரூபனை இவளுக்கு யாரென்றே தெரியாது. ஏனோ ரஞ்சித்தை தோழனாக மட்டும் தான் அவளால் பார்க்க முடிந்தது. எப்படியும் அவன் விரும்புவதை தன்னிடம் கூறுவான்.. அப்போது பேசி புரிய வைத்து விடலாம் என்ற நம்பிக்கையில் தான் அவனுடனான நட்பை தொடர்வது.

அவனோ வேறு ஒரு வழியில் செல்ல நினைப்பதை இவள் அறியும் போது பெண்ணவளின் மனநிலை என்னவென்பதை யாராலும் வரையறுக்க முடியாமல் போகும் என்பது தான் நிதர்சனம்.

துணிகளை மடித்து பேக்கில் அடுக்கி கொண்டிருந்த காவ்யா திடீரென்று “ஹேப்பி இன்று முதல் ஹேப்பி” என்று துள்ளி குதித்து கத்த, “வாயை மூடுடி குரங்கு” என்று சத்தம் வெளியில் கேட்காதவாறு அவளின் வாயை மூடினாள் ஆதிரா.

அவளிடம் இருந்து விலகி நின்று “ஜாலி ஜாலி உன் தொல்லைல இருந்து எனக்கு விடுதலை.. விடுதலை.. விடுதலை..” என்று மகிழ்ச்சியில் காவ்யா குதிக்க, அவளை கடுங்கோவத்தில் முறைத்த ஆதிரா “ஹலோ மேடம்.. என் வீட்டுல இருந்து ஒரு பதினைந்து நிமிட வாக்கிங் டிஸ்டன்ஸ்ல தான் நீங்களும் இருக்க போறீங்கனு அடிக்கடி மறந்தறீங்க போல.?” என்று புருவத்தை மேலேற்றி நக்கலுடன் வினவினாள்.

இதில் காவ்யாவின் முகம் போன போக்கை காண வேண்டுமே.? ஹஹஹஹஹஹ என்று சிரிப்பை சிதறவிட்டு “என்கிட்ட இருந்து உனக்கு விடுதலையே கிடைக்காது காவு.. காவு..” என்று இல்லாத சட்டை காலரை தூக்கி விட்ட ஆதிராவை உம்மென்று பார்த்த காவ்யா துணிகளை மடிக்க தொடங்கினாள்.

கொரானோ பரவல் காரணமாக வொர்க் ப்ரம் ஹோம் என்றானதுக்கு தான் இந்த அலப்பறை.. தினமும் அபி அபி என்று புலம்பும் ஆதிராவின் புலம்பலில் இருந்து தப்பித்து விட்டோம் என்ற சந்தோசம் தான் காவ்யாவுக்கு.. புலம்பல் மட்டுமில்லை தான் சிங்கிளாக இருக்கும் போது அவள் மட்டும் எவ்வாறு மிங்கிள் ஆகலாம் என்ற சிறுகடுப்பும் அவளுக்கு.

தன் சந்தோசத்தில் மண்ணை அள்ளி கொட்டிய தோழியை என்ன செய்யலாம்.? என்று தீவிரமாக யோசித்த காவ்யா பின்பு “உன்னால முரட்டு சிங்கிளுக்கு உண்டான மரியாதையே போய்ருச்சுடி” என்றாள் நொந்து கொண்டு.

“முரட்டு சிங்கிளுக்கு மரியாதை கிடைக்கறது இருக்கட்டும்.. இனி வீட்டுல உனக்கு மரியாதை கிடைக்குதானு பாருடி என் சிப்ஸூ” என்ற ஆதிரா கலகலவென சிரித்தாள்.

இவளிடம் பேசினால் தன் மானம் தான் கப்பலேறும் என்று காவ்யா அமைதியாகிட, “டி என் ஆளு கூட பேச ஏதாவது டிப்ஸ் சொல்லேன்” என்று ஆதிரா மறுபடியும் அப்பேச்சை ஆரம்பித்தாள்.

“என் வாய்ல நல்லா வருதுடி..” – காவ்யா

“வாவ் வாந்தியா.? வாழ்த்துக்கள் நெட்டச்சி..” – ஆதிரா

“எதே.?” – காவ்யா

“என்னைய அத்தை ஆக்குனதுக்கு தான்..” – ஆதிரா

“வேணும்னா ஆண்ட்டி ஆக்கறேன் வா கிழவி” என்று காவ்யா அவளை மொத்த, அவளிடம் இருந்து தப்பிப்பதற்காக ஆதிராவும் அறைக்குள் ஓடிட, மகிழ்ச்சியும் சிரிப்புமாக அந்நாளை கடத்திய இருவரும் அடுத்த நாள் பிரியாவிடை பெற்றனர்.

ஆதிரா வீட்டிற்கு வந்து இரண்டு வாரங்கள் கழிந்திருந்தது.. அன்று வீரசசாமியிடம் இருந்து போன் வர, பேசி முடித்த ஆதிராவின் தந்தையின் முகம் குழப்பத்தை தத்தெடுத்து இருந்தது.

“என்னங்க அண்ணன் என்னங்க சொன்னாரு.?” என்று கல்யாணி பதறிட, “ஏய் நீ எதுக்கு இப்ப பதறிட்டு இருக்க.?” என்று காண்டானார் மாணிக்கம்.

“அப்பா மாமா என்ன சொன்னாரு.?” – ஆதிரா

“அதானே.? அதைய சொல்லாம அம்மாவை திடடிட்டு இருக்கீங்க.? உங்க முகத்தை பார்த்தா எங்களுக்கே லேசா பக்குனு இருக்கு..” – துருவினி

“ஒண்ணுமில்லடா.. இவளோட அண்ணன் ஒருத்தன் கேரளாவுல இருக்கான்ல.?” – பாண்டியன்

“ம்ம்ம்ம் ஆமாபா.. அவரு பையனுக்கு கூட இப்பதானே கல்யாணம் ஆச்சு..” – ஆதிரா

“ம்ம்ம்ம் ஆமாடா.. அந்த பையனுக்கு தான் ஆக்சிடெண்ட் ஆகிருச்சு” – பாண்டியன்

“அய்யோ..” – கல்யாணி

“ப்ச் அம்மா எதுவுமாகாது.. பயப்படாத..” – ஆதிரா

“போய் ஒரு எட்டு பார்த்துட்டு வந்தரலாம்னு தான் போன் பண்ணிருக்கான் உங்க மாமன்..” – பாண்டியன்

“அப்ப போய்ட்டு வந்தரலாம்ங்க” என்று அவசர அவசரமாக கல்யாணி கூறிட, கடுப்பான மாணிக்கம் “ஏய் கூறு கெட்டவளே பொட்டப்புள்ளைகளை தனியா விட்டுட்டு போலாம்னு சொல்ற.? உன் மூளைல என்ன களிமண்ணா இருக்கு” என்று சீறினார்.

அன்னைக்கு ஆதரவாக ஆதிராவும் “அப்பா நாங்க என்ன சின்ன புள்ளைகளா.? அதான் ரெண்டு பேரு இருக்கோமே.. அதெல்லாம் நாங்க இருந்துப்போம்.. நீங்க பயப்படாம போய்ட்டு வாங்க” என்றாள் சாந்தமாக.

இருந்தும் மாணிக்கத்திற்கு இவர்களை தனியே விட மனமின்றி சிவாவிற்கு அழைத்து பேசினார். “நான் சிவா கிட்ட பேசிட்டேன்.. வர்றது வீரச்சாமியும் கல்யாணியும் தான்.. நீங்க ரெண்டு பேரும் அங்க போய்ருங்க.. நாங்க வந்ததும் வந்துக்கலாம்” என்று கட்டளை இட்டார்.

மறுத்து பேச வந்த ஆதிராவை கையமர்த்தி தடுத்த மாணிக்கம் “அங்க நிலைமை என்னனு தெரியாது.. போய்ட்டு எப்ப வருவோம்னு சொல்ல முடியாது.. இதுல உங்களைய தனியா விட்டுட்டு போக முடியுமா.? பொண்ணை பெத்தவங்க எந்நேரமும் மடில நெருப்பை கட்டிட்டு தான் அழுகணும்.. நீங்க அங்க போங்கடா.. எங்களுக்கும் கொஞ்சம் நிம்மதியா இருக்கும்” என்றார் மெலிந்த குரலில்.

மனைவிக்கு இவர் எப்படியோ ஆனால் இரு மகள்களுக்கும் நல்ல தகப்பன் தான்.. பாசத்தையும் அதட்டலாக காட்ட கூடியவர்.. தப்பு என்றால் மட்டுமே சற்று குரலை உயர்த்தி கண்டிப்பவர்.. அவர்களின் நியாயமான ஆசைகளுக்கு என்றும் முட்டுக்கட்டை இட்டது இல்லை..

பெற்றவர்களுக்கு முன்பு இவர்கள் கிராமத்திற்கு கிளம்பிட, ஆதிராவை இம்சித்தது மனதை நனைக்கும் சாரலொன்று.!! அவனும் இருப்பானோ.? என்று தன்னை தானே கேட்டு கொண்டவளுக்கு அது சாத்தியமில்லை என்று அறிந்தாலும் அவனை பார்க்கும் ஆர்வம் பீறிட்டு எழுந்தது.

படபடக்கும் மனதில் கையை பிசைந்து அமர்ந்திருந்த தமக்கையை கண்ட துருவினி “ஹே ஆதிரா ஆர் யூ ஓக்கே.?” என்று சந்தேகத்துடன் வினவ, “எஸ்டி ஐம் ஆல்ரைட்” என்று ஆதிராவும் புன்னகைத்தாள்.

அவளை விசித்திரமாக பார்த்து “நீ சரியில்ல ஆதிரா.. வீட்டுக்கு போனதும் உனக்கு மந்திரிச்சு விடணும்.. பேய் ஏதாவது பிடிச்சுருச்சுனு நினைக்கறேன்.. ” என்று துருவினி கிண்டல் செய்ய, “ஆமாடி காதல் பேய் பிடிச்சிருச்சு” என்று தன்னை மீறி கூறி விட்டாள்.

“இப்ப என்னடி சொன்ன.?” – துருவினி

“எனக்கு காஞ்சனா பேய் பிடிச்சிருச்சுனு சொன்னேன்..” – ஆதிரா

“இல்லயே.. வேற என்னமோ சொன்னீயே.?” – துருவினி

“தெய்வமே என் தெய்வமே.. நீயே எதையும் கற்பனை பண்ணிக்காம அமைதியா தான் இரேன்டி” என்று துருவினியை சமாளித்து ஜன்னலின் வெளியே பார்வையை பதித்தாள்.

‘அவனும் வந்தா எப்படி இருக்கும்.?’ என்று பெண்ணவளின் எண்ண அலைகள் தறிக்கெட்டோடிட, ‘அய்யோ அபி நீ என்னைய ரொம்ப இம்சை பண்றடா..’ என்று தன்னவனை செல்லமாக கடிந்தும் கொண்டாள் மனதினுள்.!!!

உன்னை காணும்

நொடிக்காக ஏங்கி

தவிக்கும் நேரத்தில்

என்னை ஆக்கிரமி

க்கும்

நான் அறியாத

இம்சையையும்

புரியாத உணர்வையும்

எப்போதடா நீ உணர்ந்து

கொள்வாய் என்

இதய கள்வனே.!!

அழகிய பூகம்பம் தொடரும்..

Click on a star to rate it!

Rating 4 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்