Loading

என்னுள் நீ காதலாய் 💞

அத்தியாயம் 40

சென்சிடிவ் கன்டென்ட் தாங்க … மனதை திடப்படுத்திக் கொண்டு படிக்கவும் … 

செந்தமிழ் சித்தியோட அண்ணனுக்கு திருமண வயதில் இரண்டு ஆண் பிள்ளைகளும், பள்ளி செல்லும் ஒரு மகளும் இருக்கின்றனர். அண்ணனின் மனைவி இறந்து விட எல்லோரும் துக்க வீட்டிற்கு சென்றார்கள். அங்கு காரியங்கள் முடிந்ததும் அண்ணனை தேற்றுவதற்காக, அவரையும் அவர் பிள்ளைகளையும் வீட்டிற்கே அழைத்து வந்தார் அவளுடைய சித்தி.

தினமும் அவர்களுக்கும் சேர்த்து உணவு சமைத்து, பணிவிடைகள் செய்ய வேண்டிய கட்டாயம் செந்தமிழுக்கு. வேறு வழியின்றி எல்லாவற்றையும் அவள் செய்து கொண்டிருக்க, மெல்ல தன்னுடைய அண்ணனுக்கும் செந்தமிழுக்கும் திருமண பேச்சை ஆரம்பித்தாள் சித்தி.

“இவ்ளோ நாளும் நீ என்ன பண்ணாலும் நான் பேசாம இருந்ததுக்கு காரணம் என் பொண்ணு வாழ்க்கை நல்லா இருக்கணும்னு தான். இத்தோட இந்த பேச்சை விட்ரு. இல்ல தேவையில்லாத சச்சரவு தான்” என்று முகத்திலடித்தாற் போல சொல்லி விட்டார் செந்தமிழின் அப்பா.

பிரச்சனை அத்தோடு முடிந்து விடுமா… ‘தன் அண்ணனுக்கு பெண் தரவில்லை’ என்ற கோபத்தில் சித்தி அவள் மீது வஞ்சம் வளர்த்து கொண்டாள். இதையெல்லாம் தாண்டி ஒரு பெண்ணுக்கு நடக்கக் கூடாத அத்தனை கொடுமைகளையும் அந்த ஓர் நாளில் அவள் சந்தித்தாள்.

அன்றிரவு செந்தமிழின் தம்பி தங்கைகள் மெத்தையில் படுத்திருக்க, அவள் கீழே தரையில் பாயை விரித்து படுத்திருந்தாள். அத்தனை வேலைகள் செய்த களைப்பில் அசதியாய் அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, அவள் உடலை ஏதோ அழுத்தும் உணர்வில் திடுக்கிட்டு கண் விழித்துப் பார்த்தாள்.

சித்தியின் அண்ணன் தான் அவள் மேல் படுத்திருக்க, அவள் கண் விழித்து பார்க்க, கத்தாமல் இருக்க ஒரு கையால் அவள் வாயை பொத்தியவன், இன்னொரு கையால் வேகமாக அவள் போட்டிருந்த பாவடையை அவிழ்த்தான்.

அந்த மனித மிருகத்தின் அடியில் சிக்கி, வெளியேற முடியாமல் அவள் பலம் கொண்ட மட்டும் அவனை அடித்தும் அசைத்தும் பார்த்தாள். அதற்குள் அவள் பாவாடையை அவிழ்த்தவன், உள்ளாடைக்குள் இருந்த அவளது அந்தரங்க உறுப்பை தொட்டு காயப்படுத்த ஆரம்பித்தான்.

உடலும் உள்ளமும் நடுநடுங்கி போய், அப்படியே மூச்சை இழுத்து வலி தாங்க முடியாமல் துடித்து, கண்களில் கண்ணீரோடு வெளியே கத்த முடியாமல் உள்ளுக்குள் ‘காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. கடவுளே காப்பாத்து’ என்று கதறி கொண்டிருந்தாள் செந்தமிழ் …

அவனோ அடுத்து அவன் உடைகளை களையப் போக, அதற்குள் செந்தமிழின் தங்கைகள் விழித்து “அய்யோ.. அப்பா.. அம்மா..” என்று அலறிட, அவன் எழுந்து ஓடி விட்டான்.

வேகமாக எழுந்து தன் உடைகளை சரி செய்து கொண்டவள், பயந்து ஒடுங்கி குத்துக்காலிட்டு அமர்ந்து, முகத்தில் அறைந்து அழ ஆரம்பித்தாள்.

பிள்ளைகளின் அழுகுரல் கேட்டு செந்தமிழின் அப்பாவும் சித்தியும் அங்கு வர, “என்னாச்சு எதுக்கு கத்துறீங்க?” என்று அவர்களிடம் விசாரிக்க, “மாமா அக்கா மேல படுத்து ஏதோ பண்ணுச்சு. அக்காவை அடிச்சுச்சு” என்று அவர்களுக்கு தெரிந்ததை அழுது கொண்டே சொன்னார்கள்.

உண்மை தெரிந்தாலும், “எங்க அண்ணன் அப்படி எல்லாம் பண்ணாது. ஏய் செந்தமிழ் வாயை திறந்து சொல்லுடி எவனை வர வச்சு என்ன பண்ணிட்டு இருந்த? என்ன குடுத்து என் பிள்ளைகளை இப்படி பேச வச்ச?” என்று அவளுடைய சித்தி கோபமாகக் கத்த,

“என்னடி சொன்ன?” என்று சித்தி கன்னத்தில் ஓங்கி அறைந்த அவளுடைய அப்பா, “என் பிள்ளைய பார்த்து என்ன வார்த்தை சொல்லுற? உன் அண்ணன் என் கைல கிடச்சான் அவனை கொல்லாம விட மாட்டேன்” என்றவாறு அவனை வீட்டுக்குள் தேடியவர், “என்னைக்கு இருந்தாலும் அவனை சும்மா விட மாட்டேன். அண்ணன் நொன்னன்னு போனன்னு வையு, உன்னையும் தலைமுழுகிடுவேன்” என்று சொல்லிவிட்டு செந்தமிழுக்கு அருகில் அமர்ந்தார்.

அவள் கால்களுக்குள் முகம் புதைத்து அழுது கொண்டிருக்க, அவளுடைய கையை பிடித்து “அப்பாவை மன்னிச்சிடு டா” என்று அவர் மன்னிப்பு கேட்டிட, வேகமாக அவர் கையை தட்டி விட்டவள், தொட வேண்டாம் என்பது போல் கைகளால் சைகை காட்டி, கதறி அழுதாள்.

அவர் எழுந்து சென்று விட, நடந்த அத்தனையும் கோபமாக பார்த்திருந்த சித்தியும் அங்கிருந்து சென்றாள். அவள் உடலெல்லாம் அருவருப்பான ஏதோ உணர்வு, அந்த காயங்களின் எரிச்சல், தன் துயரமான வாழ்க்கை எல்லாவற்றையும் நினைத்து அழுது அழுது அங்கேயே சாய்ந்து படுத்து கொண்டவள் பயத்தில் எப்போது தூங்கினாளோ, காலையில் எழுந்து பார்த்தால் அருகில் யாருமில்லை.

செந்தமிழின் அப்பா, ‘தன் மகளுக்கு வீட்டில் இனி பாதுகாப்பில்லை’ என்று உணர்ந்தவர், அன்று காலை எழுந்ததும் மகளுக்கு வரன் பார்க்க தெரிந்தவர்களிடம் சொல்வதற்காகச் சென்றிருந்தார். அவளுடைய சித்தி கோபத்தில் ஏதோ முடிவு செய்தவளாய் குழந்தைகளை அவளே பள்ளிக்கு கிளப்பி அனுப்பியிருந்தாள்.

செந்தமிழ் மெல்ல எழுந்து காலைக் கடன்களை முடிக்க பாத்ரூமிற்கு செல்ல, காயத்தில் இருந்த எரிச்சலால் மீண்டும் வலி உண்டானது. வலி தாளாமல் கண்ணீர் வழிய ஆரம்பிக்க, அவளுக்கு பயமும் நடுக்கமும் இன்னும் அதிகமானது.

மெல்ல அடுப்பறைக்கு சென்றவள் தண்ணீர் எடுத்து குடித்திட, அங்கு வந்த அவளின் சித்தி அதை தட்டி விட்டவள், “ஏன் டி இல்லாததும் பொல்லாததும் சொல்லி எங்க அண்ணனை வீட்டை விட்டு விரட்டிட்டேல?” என்று கோபமாக அவளை பார்த்து கத்திட, “அவர் ஏன் என்னை அப்படி பண்ணாரு?” என்று தனக்காகத்தான் நியாயம் கேட்டே ஆக வேண்டும் எனச் செந்தமிழ் கேட்டாள்.

“என்னடி பண்ணார் என் அண்ணன்?” எனச் சித்தி கேட்டிட, நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவளும் நடந்ததை சொல்லிட, “நீ தாவணியை ஒழுக்கமா போடாம அங்குட்டும் இங்குட்டும் எல்லாத்தையும் காட்டிட்டு திரிஞ்சு நல்லா இருந்த மனுஷனை கெடுத்திட்டியே” அவளுடைய சித்தி நடந்ததற்கான  பழியையும் அவள் மீதே சுமத்திட, அவமானத்தில் கூனி குறுகிப் போனாள்.

‘நான் என்ன தப்பு செய்தேன்?’ என்று யோசித்தவள், “இதே உங்க பொண்ணா இருந்தா இப்படி தான் கேட்டிருப்பீங்களா?” என்று மனம் தாங்காமல் பதிலுக்கு கேட்டிட,

“ஓ.. அவ்ளோ தூரம் ஆகிடுச்சா என் பிள்ளைக்கு இதெல்லாம் நடக்கணும்னு சாபம் விடுறியா? உனக்கு ரொம்ப திமிர் கூடிப் போச்சு. அப்பனும் மகளும் என்னை வீட்டை விட்டு துரத்தலாம்னு நினைக்கிறீங்களா?” கோபத்தில் கத்திய சித்தி, அங்கிருந்த விளக்குமாற்றை எடுத்து அவளை அடிக்க ஆரம்பித்தாள்.

ஏற்கனவே பயந்து போயிருந்த செந்தமிழ், அவள் சித்தி அடித்த அடியில் அங்கேயே சுருண்டு விழுந்து விட, “நீ என்னோட அண்ணன் மேல இல்லாத பழியை போடுற. உன் அப்பன் என்னை அடிக்கிறான். என்னை மீறி உன் அப்பன் உன்னை வேற யாருக்கும் கல்யாணம் பண்ணி தந்திடுவானா?” என்றவள், அங்கு தண்ணீருக்காக வைத்திருக்கும் விறகு அடுப்பில் ஏற்கனவே சூடாக்கி வைத்திருந்த ஊதுகுழலை எடுத்து,

வேகமாக அவள் பாவடையை தூக்கி அவளுடைய அந்தரங்க உறுப்பில் சூடு வைத்து விட்டாள். இதை எதிர்பாராத செந்தமிழ், “அம்மா..” என்று அலறி முடிப்பதற்குள், அவளுடைய சித்தி அவளது இரு பக்க தொடைகளிலும் சேர்த்தே சூடு வைத்து விட, “அய்யோ அம்மா..” என்று அந்த இடத்தை தொடக்கூட முடியாமல், வலி தாங்காமல் கைகால்களை உதறியபடி கதறி அழுதாள்.

செந்தமிழின் அப்பா தன்னை அடித்த கோபத்தை, அவளிடம் மொத்தமாக மிருகத்தனமாக காட்டியபின், அந்த சித்தி என்னும் பேய் சென்று விட, அவளால் அந்த இடத்தை விட்டு நகரக்கூட முடியவில்லை. விழுந்த இடத்திலே கிடந்தாள்.

ஒருபக்கம் உடலில் எரிச்சலும் வலியும், மறுபக்கம் ‘ஏன் இன்னும் நான் சாகாமல் உயிருடன் இருக்கிறேன்?’ என்ற மன வேதனையும் சேர்ந்து கத்தி அழுதிடக் கூட தெம்பில்லாமல் “அம்மா.. அம்மா..” என்று முனகியவாறு கிடந்தாள்.

நேரம் ஆக ஆக எரிச்சல் அதிகமாகிட, இரு கால்களையும் அசைக்க முடியவில்லை. உயிர் மட்டும் தான் போகவில்லை. ஆனால் உயிர் போகும் வேதனையை அனுபவித்து “தண்ணீர்.. தண்ணீர்..” என்று முனகிக் கொண்டிருந்தாள்.

வழக்கமாய் வீட்டு வேலைகளை முடித்து பக்கத்து வீட்டு வேணியிடம் சென்று பேசி விட்டு வருவாள் செந்தமிழ். அன்று அவள் வராது போகவே, “செந்தமிழ்..  செந்தமிழ்..” என்று அழைத்தவாறு கிச்சனுக்கு அவளைத் தேடி வந்தார் வேணி.

செந்தமிழ் தரையில் அப்படியே துவண்டு போய் விழுந்து கிடக்க, “ஏய் என்னடி? என்னாச்சு?” என்று அவர் பதட்டத்தோடு அவளைத் தூக்கிட, மெல்ல கண்களை திறந்து பார்த்தவள், “அத்தை வலிக்குது.. வலிக்குது..” என்று கத்தினாள். “எங்கடி வலிக்குது?” என்று அவர் கேட்க, வலியில் பெருமூச்சாக விட்டுக் கொண்டிருந்தவள் சூடு போட்ட காயங்களைக் காட்ட வேணி அப்படியே துடித்துப் போனார்.

“அடிப்பாவி என்னாடி இப்படி பண்ணி வச்சிருக்கா அந்த திருட்டு ……….., அவளை என்ன பண்றேன் பாரு..” என்றவாறு கோபமாக எழுந்திருக்க, “அத்தை ரொம்ப வலிக்குது.. என்னை காப்பாத்துங்க. வலி தாங்க முடியல” என்று கதறினாள் அவள்.

“சரி வா நாம முதல்ல ஆஸ்பத்திரிக்கு போகலாம்” என்று அவர் மெதுவாக அவளை தூக்க, காலை ஊன்ற முடியாமல் துடித்த பின் கஷ்டப்பட்டு ஊன்றி எழுந்தாள். “அத்தை.. தண்ணி வேணும்” என்று அவள் பரிதாபமாகக் கேட்க, அவளைத் தாங்கியவாறு, அவர் தண்ணீரை குடத்தில் மொண்டு அவளை குடிக்க வைத்தார்.

செந்தமிழ் தண்ணீரை குடித்ததும், அவர் கைத்தாங்கலாக அவளை வெளியே அழைத்துச் சென்றிட, அங்கு வந்த அவளுடைய சித்தி, “இப்போ அவளை எங்க கூப்பிட்டு போற?” என்று கேட்டிட, “இரு டி உன்னை வந்து வச்சிக்கிறேன். பிள்ளைய எப்படி பண்ணி வச்சிருக்க? உன்னை போலீஸ்ல பிடிச்சு குடுத்துட்டு தான் டி எனக்கு மறுவேலை” என்று சித்தியை பார்த்து ஆக்ரோஷமாக கத்திய வேணி, அவளை ஹாஸ்பிடலில் சேர்த்தார்.

செந்தமிழை கவர்மெண்ட் ஹாஸ்பிடலில் சேர்த்தவர், கையோடு அங்கிருந்து அவள் சித்தியின் பெயரில் கம்பிளையன்ட்டும் பதிவு செய்தார். செந்தமிழுக்கு சூடு போட்ட இடங்களில் எல்லாம் சிவந்து பெரிதாக கொப்பளித்து விட, அதை துடைத்து மருந்து போடுவதற்குள் அவள் மீண்டும் ஒருமுறை செத்துப் பிழைத்தாள்.

செந்தமிழின் சித்தி பெரிதாக அங்கு சூடு வைத்ததால் அதற்கு முன் சித்தியின் அண்ணன் செய்த காயங்கள் வெளியே தெரியாமல் போனது. ஆனால் அவளுக்கோ ஏற்கனவே காயத்தின் மேல் சூடும் இருக்க வலியில், தவணை முறையில் உயிர் போய் வந்து கொண்டிருந்தது. குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருக்க அரை மயக்கத்தில் கிடந்தாள்.

வேணி அவளின் அப்பாவிற்கு போன் செய்து தகவலை சொல்ல, ஹாஸ்பிடலுக்கு வந்தவர் தலையில் அடித்துக் கொண்டு கதறி அழ ஆரம்பித்தார். அவர் அழுகை சத்தம் கேட்டு செந்தமிழ் நன்றாக கண்களை திறந்து பார்த்தவள், “அப்பா..” என்றழைத்தாள்.

காதலாய் வருவாள்💞 

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
8
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. குடும்பத்திருக்குள்ளேயே தவறிழைப்பவர்கள் இருந்தால் என்ன செய்ய. பாதுகாக்க வேண்டிய உறவுகளே கீழ்த்தரமாக நடந்து கொள்கின்றன.

    தனக்கு நடந்த கொடுமை தனது தங்கைகளுக்கும் நடந்து விட கூடாது என்று எண்ணி இருக்கின்றாள்.

    1. Author

      இவையெல்லாம் நிறைய குடும்பங்களில் நடக்கின்றன. நன்றி சகி