Loading

நிமிர்ந்த  நிவேதாவின்  கண்கள் கலங்கி இருந்தது. சரண்யா மற்றும்  இன்னும் சுற்றி இருந்த அனைவரும் ஒன்று கூடி இருந்தார்கள்.

 

பஸ்ஸிலிருந்த ஸ்டாப் கூட டிரைவரை திட்டினார். “மாசமா இருக்க பிள்ளை முன்னாடி உட்கார்ந்து இருக்கு பார்த்து வண்டி ஓட்ட தெரியாதா அண்ணா?” என்றார் .

 

“இல்ல மிஸ் முன்னாடி ஒரு கார் காரன் வந்துட்டான் .இந்த பக்கம் ஸ்கூல் பிள்ளைங்க போயிட்டு இருந்துசுங்க அதனாலதான் “என்றான் அவரும் பதட்டத்துடன்

 

“சரி பார்த்து போங்க அண்ணா “என்று விட்டு ஸ்டாப் அமைதியாக விட.

 

டிரைவர் பின்னாடி திரும்பி நிவேதா பார்த்து,” சாரி மா ஒன்னும் ஆகல இல்ல?” என்றார் பதைபதைப்புடன்  .

 

தனது கண்களை துடைத்தவள்.. “ஒன்னும் இல்லை அண்ணன்”  என்று லேசாக சிரிக்க முயன்றாள்.

 

“சரி மா” என்று டிரைவர் வண்டி எடுத்தார். சரண்யா தண்ணீர் கொடுத்து “ஒன்னு இல்லடி!” என்று சொல்ல .

 

வனிதா நிவேதாவையே பார்த்துக் கொண்டிருந்தாள் .நிவி  கண்கள் முழுமையாக கலங்கியிருந்தது.

 

அவளது கை அடி வயிற்றை இறுக்கமாக பற்றி இருந்தது.

 

“என்னடி பண்ணுது வலிக்கிதா ?”என்று கேட்டார்கள்.

நிவியின் தோழிகள்.

 

“ஒன்னும் இல்ல!” என்று சொல்லி அவள் தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு அமைதியாகி விட்டாள் .

 

அவளது கவலை தன் குழந்தைக்கு எதும் ஆகியிருக்கக் கூடாது என்பதில் மட்டும் தான் இருந்தது.

 

மாலை காலேஜ் முடிந்து அனைவரும் பஸ் அருகில் கீழே நின்று பேசிக் கொண்டிருக்கும் போது நிவேதாவின் அருகில் வந்த வனிதா “இப்போ உங்களுக்கு பரவா இல்லையா கா.?” என்றாள் கேள்வியாக

 

“ஒன்னும் பிரச்சனை இல்லைல , வலி இருக்கா?” என்று கேட்டாள் .

 

வனிதாவை பார்த்த நிவி,” தேங்க்ஸ்” என்று சொல்லிவிட்டு “ஒன்னும் இல்ல இப்போ வலி எதுவும் இல்லை .அப்போ பயத்துல வலி இருக்கிற மாதிரி ஃபீல் ஆச்சு ” என்று விட்டு அமைதியாக வனிதாவை பார்த்தாள்.

 

“இல்ல நீங்க காலையில வயிற்றை பிடிச்சிட்டு அழுதுட்டு இருந்தீங்களா? அதான் ..”என்றாள்.

 

“இப்ப பரவால்ல ..அப்பதான் ஒரு மாதிரி இருந்துச்சு இப்ப நார்மலா தான் இருக்கேன்”

 

“சரி கா”  என்று விட்டு வேறு எதுவும் பேசாமல் வனிதா பஸ் ஏறி விட்டாள் .

 

“என்னடி உன்னை பார்த்தாலே முறைச்சி கிட்டு நிப்பா. இப்போ அவளா உன்ன தேடி வந்து நலம் விசாரிச்சிட்டு போற ?”என்றார்கள் சுற்றி இருந்த நிவியின் தோழிகள்.

 

“லூசு அடிபட்டு இருக்கும்னு வந்து கேட்டுட்டு போற இதுல என்ன இருக்கு?” என்று தோழிகளை முறைத்தாள் நிவி.

 

“உனக்கு முன்னாடி சீட் தரும்போது கூட இவங்களுக்கு மட்டும் ஸ்பெஷல் சீட் அப்படின்னு அன்னைக்கு கேட்டா ,அப்பவும் நீ கன்சீவா தான இருந்த ?” என்றார்கள்.

 

“லூசுங்களா விடுங்க ! அவ விளையாட்டு தனமா இருக்கா, இதுல என்ன இருக்கு?” என்று அமைதியாகி விட்டாள் .

 

வீட்டிற்கு சென்றவுடன் வனிதா செய்த முதல் வேலை நவிலனுக்கு போன் செய்தது தான் ஆனால், அவன் போன் எடுக்கவில்லை.

 

இரண்டு முறை அழைத்தும் போன் எடுக்கவில்லை என்ற உடன் அவனுக்கு வாய்ஸ் நோட் போட்டு இருந்தாள் .

 

பஸ்ஸில் நடந்த அனைத்தையும் போன் போட்டு எடுக்கவில்லை என்றவுடன் பேசி வாய்ஸ் நோட் போட்டு  இருந்தாள் .

 

‘வேலை இருக்கும் என்று தெரியும் தானே . அப்புறம் என்ன போன் பண்றா? வாய்ஸ் நோட்  வேற போடுறா ஏதாவது முக்கியமா இருக்குமோ ‘என்று விட்டு வாய்ஸ் நோட் கேட்க செய்தான் நவிலன்.

 

வாய்ஸ் நோட் கேட்டுவிட்டு நேராக வனிதாவிற்கு போன் செய்திருந்தான் .

 

“போன் பண்ணா எடுக்க மாட்டியா ? ஒண்ணுக்கு ரெண்டு முறை போன் பண்ணா ஏதாவது  இம்பார்ட்ண்ட் டா கூட  இருக்கும் யோசிக்க மாட்டியா ?” என்று எகிறிக் கொண்டு அவனை விளாசி விட்டாள்..

 

 

“சரி டி ,என்ன ஆச்சு நிவிக்கு..?”என்றான் பதட்டத்துடன்

 

“ஏன் ? எனக்கு போன் பண்றதுக்கு பதிலா உன் பிரண்டுக்கு போன் பண்ணி விசாரிச்சு இருக்க வேண்டியதுதானே?”

 

”  லூசு மாதிரி பேசாத நீ இறங்குன உடனே எனக்கு மெசேஜ் பண்ணி இருக்க. அவ இப்பதான் வீட்டுக்கு போயிருப்பா. வீட்டுக்கு போன உடனே போன கையில வச்சிருந்தா ,வீட்டில் இருப்பவங்க ஏதாச்சும்  சொல்ல மாட்டாங்களா?

 

ஹாஸ்பிடலுக்கு கூட போனாலும் போவா.. என்ன ஆச்சு அத முதல்ல நீ சொல்லு ?”என்றான்.

 

“ரொம்ப அக்கறை தான் . நான் கேட்ட அப்போ ஒன்னும் இல்லன்னு தான் சொன்னாங்க”

 

“நீ அவ கிட்ட பேசுனியா  என்ன? “என்றான்.

 

“ஏன் பேசினா என்ன ?நான் இதை மட்டும் தான் கேட்டேன் . சண்டை எல்லாம் ஒன்னும் போடல உன் பிரண்டு கிட்ட ?”என்று மூக்கை உறிஞ்சினாள்.

 

” சரி டி எனக்கு வேலை இருக்கு நைட் கூப்பிடுறேன் !”என்று வைத்து விட்டான்.

 

இரவு 8 மணி போல் நிவேதாவே அவனுக்கு மெசேஜ் செய்திருந்தாள் .

 

நடந்த அனைத்தையும், உடனே அவனிடமிருந்து,”  ஹாஸ்பிடல் போனியா டி !”என்று கேள்வி வந்து இருந்தது.

 

“ஹாஸ்பிடல் போயிட்டு இப்ப  தான் டா வந்தேன் வீட்டுக்கு..”

 

“என்ன டி சொன்னாங்க ஸ்கேன் எதும் எடுத்தீங்களா ?”

 

” ஸ்கேன் பண்ணோம். பயப்படும் படியா  எதும் இல்லன்னு சொல்லிட்டாங்க .”

 

“சரி நீ எப்ப இருந்து லீவ் போடறதா இருக்க ”

 

” இப்பவே லீவு போட சொல்லி வீட்ல சொல்லிட்டு இருக்காங்க .

இன்னைக்கு நடந்ததுல வீட்ல எல்லாரும் பயந்துட்டாங்க  டா. எக்ஸாம் வேற நெருங்குது இல்லையா ? அதான் யோசனையா இருக்கு ..”என்றாள்.

 

“எக்ஸாம் நெருங்குவதற்கும் உனக்கும் என்ன வந்துச்சு?  நீ இப்போ எக்ஸாம் எழுதாம நெக்ஸ்ட் டைம் எழுதினாலும் பரவாயில்லை .லீவ் போட்டு  வீட்டில் இருந்து உன்னையும் குழந்தையும் பார்க்கிற வேலையை பாரு !.

 

“பார்த்து இரு டி . பயந்து இருப்ப சீக்கிரம் சாப்பிட்டு தூங்கு சரி டி!” என்று விட்டு நவி வைத்து விட்டான் .

 

அதன் பிறகு ,ஒரு வாரம் நிவேதா காலேஜ் என்று வந்தாள். அதன் பிறகு வீட்டில் இருப்பவர்களும் காலேஜ் போக வேண்டாம் என்று சொல்லிவிட .

 

இவளுக்குமே உடல் ஒத்துழைக்கவில்லை . படி ஏறும் நிலைமையில் இல்லாததால் லீவு எடுத்துக் கொண்டாள் .மூன்று மாடி ஏறி தான் அவள் வகுப்பறை செல்ல வேண்டும்..

 

டாக்டர் கொடுத்து இருந்த தேதிக்கு 10 நாட்களுக்கு முன்பு தன் பிறந்த வீட்டிற்கு சென்று இருந்தாள்.

 

வசந்த் தினமும் சென்று பார்த்துவிட்டு வந்தான்.. நிவிக்கு டாக்டர் கொடுத்த தேதிக்கு 6 நாட்களுக்கு முன்பே இரவு வேளையில் வலி ஏற்பட்டு இருந்தது..

 

அவளுக்கு வயதும் குறைவு , இதுதான் முதல் பிரசவம் என்பதால்  பிரசவ வலி எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே தெரியாத காரணத்தினாலும் இது சாதாரண வலி போல அதான் விட்டு விட்டு வலிக்கிறது ..முக்குவது போல் பாத்ரூம் வருவது போல் தோன்றுகிறது என்று எண்ணிக் கொண்டு இரவு முழுதும் நடந்து கொண்டே இருந்தாள்.

 

அன்று  இரவு என்று பார்த்து கவிதாவும் நல்ல தூக்கத்தில் இருந்து விட்டார். நிவி இரவு முழுவதும் வலி என்று தெரியாமலே பாதி ராத்திரிக்கு மேல் வீட்டிலேயே நடக்க செய்தாள் .

 

அப்பொழுது அவளுடைய தம்பி தான்,” என்னடி பண்ற ?”என்று கேட்டான் .

 

“ஒன்னும் இல்ல டா ஒரு மாதிரி இருக்கு அதான் நடந்துட்டு இருக்கேன் “என்றாள்.

 

விடியற்காலை மூன்று மணி போல் தனது தாயை எழுப்பிய நிவியின் தம்பி மணிகண்டன்..” மா அவ ரொம்ப நேரமா நடந்துட்டு இருக்கா ,நீ தூங்கிட்டே இருக்க .

அவள என்னன்னு  பாரு முதல்ல” என்றான்.

 

வேகமாக எழுந்த கவிதா ,”என்ன டி பண்ணுது என்ன எழுப்பி இருக்க  வேண்டியதுதானே?” என்றார்.

 

” நீயே இன்னைக்கு தான் அசந்து தூங்குற அதான்..”

 

“சரி  என்ன பண்ணுது ?”என்றார்.

 

“எனக்கு  ஒரு மாதிரி முக்கணும் போல இருக்கு, பாத்ரூம் வர மாதிரி இருக்கு “என்றாள் .

 

“அதை என்கிட்ட சொன்னா என்ன டி? வலி இப்படித்தான் இருக்கும் என்று கூட வா தெரியாதா ?”என்று திட்டினார் .

 

“நீ ஏற்கனவே சொல்லலையே!” என்று நிவி அழுதாள்.

 

அப்பொழுது அவளுடைய தம்பி தான் தன்  தாயை திட்டியவன் .

 

“இப்போ இது  ரொம்ப முக்கியம் . அவளே வலியில அழுவுறா இப்பதான் கேள்வி கேட்டுட்டு இருக்க” என்றான் எரிச்சலுடன்.

 

”  சரி” என்றவர் சுடுதண்ணீர் வைத்தார். “பாத்ரூம் போயிட்டு வா!” என்று அவளை அனுப்பி வைத்தார்.

 

பாத்ரூம் சென்ற நிவிக்கு ரத்த குறி பட்டு இருக்க..

 

“அம்மா எனக்கு ப்ளீடிங் ஆகுது.. பீரியட் ஆகுற மாதிரி கொஞ்சமா “என்று பயத்துடன் நிவேதா சொல்ல.

 

வேகமாக தனது மருமகனுக்கு  போன் செய்து நிவேதாவிற்கு வலி வந்திருப்பதை சொல்லி இருந்தார்.

 

வசந்த் ” சரி” என்று  உடனே கிளம்பி தனது மாமியார் வீட்டிற்கு வந்திருந்தான்.. அடுத்த அரை மணி நேரத்தில்.

 

நிவேதாவை குளிக்க வைத்து தலை சீவிக்கொண்டு இருந்தார் வசந்த் வரும் போது கவிதா.

 

அப்போது நிவேதாவின் தம்பி தான் ,”ஏன் மா அவளே வலியில அழுதுட்டு இருக்கா.. அவளை குளிக்க சொல்ற ..தலை சீவி விட்டுட்டு இருக்கு ?”என்று கேட்டான்.

 

“டேய் கொஞ்ச நேரம் கம்முனு இருடா. குழந்தை பொறந்த உடனே குளிக்கவே முடியாது.. ஒரு ரெண்டு மூணு நாலு ஆகும்” என்று தனது மகனை திட்டியவர் .

 

தனது மகளை ஐந்து மணி போல் தனது மருமகன் பைக்கிலேயே ஹாஸ்பிடல் அனுப்பி வைத்து விட்டு , அவர் ஒரு ஆட்டோ பிடித்து பின்னாடியே சென்று இருந்தார் .

 

அங்கு சென்ற உடன் நிவிக்கு அதிகமாக வலி வருவதற்கு ஊசி போட்டு, இனிமா கொடுத்திருந்தார்கள்.

 

அதிக வலி ஏற்பட்ட உடன் குழந்தை தலை திரும்பியவுடன் அவளை பிரசவ வார்ட்க்கு அழைத்து சென்றிருந்தார்கள்.

 

நிவேதா இங்கு வலியில் கத்த வெளியில் நின்று கொண்டு இருந்த வசந்த்  அழுது கொண்டு  இருந்தான் .

 

தனது மருமகனின் அழுகையை பார்த்த கவிதாவிற்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.

 

“குழந்தை வெயிட் அதிகமாக இருப்பதால் , குழந்தை தலை சீக்கிரம் வெளியில் வரவில்லை முக்க சொல்லி கேட்டுக் கொண்டிருக்கிறோம்” என்று நர்ஸ் வந்து சொல்லிவிட்டு சென்றார் .

 

“அந்த பொண்ணுக்கு வயசும் கம்மி , குழந்தை வெயிட்டும் மூன்றரை கிலோ இருக்கு  “என்று சொன்னார்.

 

வசந்திற்க்கு தான் குற்ற உணர்ச்சி மேலோங்கியது .

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்