
ரேயன் உதவி வேணும் என்று கேட்டதில் அவரோ “எஸ் டெல் மீ”
“பெருசா ஒன்னும் இல்ல சார்.. இந்த தியாழினி கொஞ்சம் ஈகோஸ்ட் பெர்சனா இருக்காங்க.. அவங்க கண்டிப்பா இந்த கேஸ்க்காக எனக்கு சப்போட் பண்ணுவாங்கன்னு நம்பிக்கை இல்ல.. சோ ஐ வில் மேனேஜ் த கேஸ் வித் ருத்ரன்” என்று கூறி அருகில் நிற்பவளை காண, அவளோ கோவத்தில் பற்களை நற நறவென்று கடித்தவாறு நின்றாள்.
தியாவின் குணம் பற்றி நன்கு அறிந்தவரோ, அவன் கூறியதை வைத்தே வந்த முதல் நாளிலே இருவரும் முட்டிக்கொண்டார்கள் என்பதை உணர்ந்து கொண்டு தியாவின் கோவத்தை கண்டு புன்னகைத்து “நீங்க நினைக்கிற போல இல்ல.. ஷீ ஸ் ஹார்ட் வேர்கேர்.. ஆனா கொஞ்சம் பிடிவாதம் கலந்த முன்கோவக்காரி.. மத்தபடி கேஸ் விஷயத்துல கண்ணிங்கா மூவ் பண்ணுவா.. டிரஸ்ட் மீ” என்று கூறி தியாவின் புறம் திரும்பி “தியா.. அவர் உன்னவிட சீனியர்.. சோ கிவ் ரெஸ்பெக்ட் தென் மறுபடியும் உன்மேல கம்பிளைந்த் வந்துச்சு ஐ வில் பனிஷ்”
“சாரி சார்.. இனி இப்படி நடக்காது” என்று கூறி ரேயனை முறைத்தவாறே தன் எதிரே இருந்த நாட்காட்டியில், இன்றைய தேதியை பார்த்தவளின் முகமோ இறுகி போய் விட, இதழ் கடித்து சிரிப்பை அடக்கி, அவள் முகம் மாறியதை கண்ட ரேயனோ, அவள் வெறித்து கொண்டிருந்த நாட்காட்டியை யோசனையுடனே பார்த்துவிட்டு “ஓகே சார்.. மீட் சூன் தேங்க் யூ” என்று கூறியதும், இருவரும் சலுட் அடித்து விடை பெற்று வெளியே வந்தார்கள்.
வெளியே வந்தவளோ, வியர்த்த முகத்துடன் கைகள் நடுங்கியவாறு நிற்க,
அதை கண்டு “தியாழினி ஏன் இப்படி ஷிவராகுற.. என்னாச்சி உனக்கு” என்று கேட்டவன் மனதிலோ, அவளின் நிலையை நினைத்து ஒரு வித கிலி பரவ,
அதை வெளிக்காட்டி கொள்ளாமல் “ஏய் தியா.. வாட் ஹப்பென்ட்” என்று கேட்டு ஆதரவாக, அவள் கையை பற்றிய நொடி, தன் மார்பில் சரிந்தவளின் தலையை தன் கை மேல் சரித்து மறுகை கொண்டு கன்னம் தட்டி “ஏய் தியா.. கண்ண திற..” என்று எவ்வளவு அழைத்தும், அவள் கண் விழிக்கவில்லை என்றதும் வண்டியிலிருந்த தண்ணீர் குவளையை எடுத்து முகத்தில் தண்ணீர் தெளித்து
“தியா.. கண்ண திறந்து பாருடி” என்று மாறி மாறி இரு கன்னங்களையும் தட்ட, மெதுவாக கண் விழித்தவளின் கண்களில் தண்ணீர் தெளித்ததில் மங்கலாக தெரிய கண்களை மூடி மூடி திறந்தாள்.
அதை உணர்ந்து தன் கரம் கொண்டு அவளின் முகத்திலிருந்த தண்ணீரை துடைத்துவிட்டு தண்ணீர் குடிக்க வைத்து “தியா ஆர் யூ ஓகே?.. ஹாஸ்பிட்டல் போய் டாக்டர் பாத்துட்டு போகலாமா” என்று கெஞ்சலாக கேட்க,
அப்போது தான் அவனின் கையணைப்பில் இருக்கிறோம் என்பதை உணர்ந்து, அவனை விட்டு விலகி நின்றவளோ “சாதாரண மயக்கம் தான்.. ஹாஸ்பிட்டலாம் வேண்டாம் ஐ அம் ஓகே நவ்” என்று கூறி வண்டியில் ஏற போணவளின் கரம் பற்றியவனோ “நீ பின்னால ஏறு.. நான் வண்டி ஓட்டுறேன்” என்று கூற,
அவளும் மறுத்து பேசாமல் “தேங்க்ஸ்” என்று கூறிவிட்டு அவன் ஏறியதும் பின்னே ஏறிக் கொள்ள, அவனும் வண்டியை எடுத்தான்.
சாலையில் கவனத்தை செலுத்தினாலும் அவளின் முகத்தை கண்ணாடி வழியில் கவனித்தவாறே வந்து வண்டியை ஓரமாக நிறுத்தி “இறங்கு ஜூஸ் குடிச்சிட்டு போகலாம்” என்று கூற,
அவளோ அசையாமல் அமர்ந்திருப்பதை கண்டு குரலை உயர்த்தி “உன்ன தான் இறங்குன்னு சொன்னேன்” என்று கூறியதை கேட்டு இறங்கியவளின் கைகள் பழைய நடுக்கத்தில் தான் இருந்தது,
அதை கண்டு கொண்ட ஆடவனோ நடுக்கம் குறைக்க எண்ணி, அவள் கையை இறுக பற்றி ரெஸ்டாரன்டிற்கு உள்ளே அழைத்து சென்று, அவளை அமர வைத்து கையை பிடித்தவாறே அருகில் அமர்ந்து பணியாளிடம் “டூ காபி” என்று கூறிவிட்டு, மறுகையில் திறன்பேசியை நோண்ட தொடங்க, அவளும் அவனின் பிடியிலிருந்து தன் கையை விளக்காமல் எதை எதையோ நினைத்து கொண்டிருந்தாள்.
அவன் கேட்டதும் வந்துவிட, அவள் எடுக்காமல் இருப்பதை உணர்ந்து திறன்பேசியை பாக்கெட்டில் வைத்துவிட்டு, அவளை உலுக்கி “தியா இத குடி பெட்டரா ஃபீல் ஆகும்” என்று கூறி, அவளை குடிக்க வைத்து அவனும் குடித்தான்.
தான் இருக்கும் நிலையில் எதையும் மறுக்க முடியாமல் மந்திரித்து விட்டவள் போல், அவன் கூறியதை கேட்டு குடித்து முடிக்க, அவளின் முகம் சற்று தெளிந்ததை கண்டு, அவளுக்கு ஓய்வு தேவை என்பதை உணர்ந்து, அவள் வீட்டில் இறக்கிவிட்டவனோ “நான் ருத்ரன் கிட்ட பேசிக்குறேன்.. நீ நல்லா ரெஸ்ட் எடு டேக் கேர்.. நாளைக்கு மீட் பண்ணலாம்” என்று கூறி கிளம்பி விட,
தலையசைத்து அவனிடம் விடை கொடுத்தவளுக்கோ, தன் வீடு எப்படி இவனுக்கு தெரிந்திருக்கும் என்ற எண்ணம் கூட அவளின் அறிவில் எட்டவில்லை என்றவாறு உள்ளே நுழைந்து நேரே தன்னறைக்கு சென்று அனைத்து பொருள்களையும் தூக்கி வீசி உடைத்து தனது உணர்ச்சியை காட்டிவிட்டு “ஐ ஹேட் திஸ் டே.. எதுக்கு இந்த நாள் என் வாழ்க்கைல மறுபடியும் வருது.. ஆஆ” என்று கத்தி மண்டியிட்டு கதற, அவளின் அறையின் எழுந்த சத்தத்தில் என்னவென்று பயந்து வந்து கதவை திறந்து, அவர் அருகில் சென்ற நொடி “பாட்டி” என்றவாறு அவரை கட்டியணைத்து கொண்டாள்.
இவளின் நிலை கண்டு பதறியவரோ “ஏய்.. என்னாச்சி இப்போ எதுக்கு கண்ண கசக்குற”
“பிளீஸ் பாட்டி என்கிட்ட எதுவும் கேட்காத” என்று கூறி அவரின் மடியில் சாய்ந்தவளோ “வேண்டாம்ன்னு மறக்க நினைக்கிறது எல்லாம் என் முன்னாடி திரும்ப திரும்ப வந்து என்ன சாகடிக்குது.. முடியல பாட்டி இந்த நிமிஷம் எதுக்கு உயிரோட இருக்கேன்னு கூட தெரியல.. என்னால யாருக்குமே சந்தோசம் இல்ல”
“தியா.. என்ன பேச்சு இதெல்லாம் ஒரு போலீஸா இருந்துட்டு நீ இப்படி பேசலாமா.. ரொம்ப தப்புமா.. ஒன்னு புரிஞ்சுக்க வாழ்க்கைல கஷ்டம் தோல்வி இது ரெண்டு மட்டும் தான் நம்மள தீட்டி வாழ்க்கைய உணர்த்தும் அத புரிஞ்சிகிட்டு அந்நேரத்தில உன்ன ஆதரவா புடிக்கிற கைகள புடிச்சிட்டு மேல வருரது பத்தி மட்டும் தான் யோசிக்கணும்.. என்ன சொன்ன உன்னால யாரும் சந்தோசமா இல்லையா.. நீ ஏன் அப்படி நினைக்கிற உனக்கே தெரியாம நீ எல்லாரையும் சந்தோசப்படுத்துற அத நீ உணர்ந்தா உன் கஷ்டலாம் பெருசாவே தெரியாது” என்று கூறி தலையை வருடினார்.
அம்முதியவர் ‘ஆதரவா புடிக்கிற கை’ என்று கூறியதுமே தியாவிற்கு இன்று ரேயன் கைபிடித்தது நினைவிற்கு வர, தன் உள்ளங்கையை பார்த்தவாறு அவனின் நினைவுகளுடனே உறங்கி போனாள்.
அவள் உறங்கியை கண்டு உச்சந்தலையில் இதழ் பதித்து மெதுவாக அவளிடமிருந்து விலகியவரின் கண்ணில் பட்டது என்னவோ, அவள் தூக்கி வீசும் போது கையில் கண்ணாடி கீரியதில் வந்த ரத்தம் தான் உடனே அவளுக்கு கட்டிட்டுவிட்டு, அவள் நிலையை நினைத்து வருந்தியவாறே வெளியே சென்றார்.
அவளை வீட்டில் விட்டு நேராக அலுவலகம் சென்றவனோ, ருத்ரனிடம் மேல் அதிகாரி கூறிய விஷயத்தை மேலோட்டமாக கூறிவிட்டு, அவளுக்கு தலைவலி என்பதால் வீட்டில் இறக்கிவிட்டு வந்ததாக கூறி, தனக்கும் உடல் அலுப்பாக இருக்கிறது நாளை வழக்கை பற்றி விசாரிக்க ஆரம்பிக்கலாம் என்று அவனும் வீட்டிற்கு வந்து குழந்தையை கொஞ்சிவிட்டு வாகியுடன் இணைந்து சாப்பிட்டுவிட்டு குழந்தையுடன் அறைக்குள் நுழைந்து, குழந்தையை தட்டி கொடுத்தவாறே அவள் நாட்காட்டி பார்த்ததிலிருந்து, அவள் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை பற்றியே பல யோசனைகளுடன் சிந்தித்து குழப்பத்துடனே உறங்கி போனான்.
*******************************************
தியா இருந்த அழுத்தத்தில் நன்றாக உறங்கிவிட, அவளை சாப்பிட அழைத்து தொந்தரவு செய்ய மனமில்லாமலாத முதியவரோ அப்படியே உறங்கட்டும் என்று எண்ணி அறையை மட்டும் சுத்தம் செய்து வெளியே வந்துவிட்டார்.
மறுநாள் காலையில் எழுந்தவளுக்கோ நேற்று தான் செய்த அனைத்தும் நினைவிற்கு வந்ததில் அறையை சுற்றி முற்றி பார்த்துவிட்டு தன்னால் வயதான காலத்தில் அவருக்கும் கஷ்டம் என்று வருந்திவிட்டு, காலை கடன்களை முடித்து குளித்துவிட்டு அலுவலகம் செல்ல தயாராகி வெளியே வந்தவளோ, நேற்று அப்படி ஒரு நிகழ்வு நடந்தது நினைவில் இல்லாதவாறு சாப்பிட அமர, முதியவரும் அவளிடம் எதுவும் கேட்காமல் வழக்கம் போல் பேசியபடி உணவு பரிமாறினார்.
சாப்பிட்டுவிட்டு அலுவலகம் செல்ல வெளியே வந்தவள் எதிரே இருப்பவனை கண்டு விழி விரித்து நின்றாள்.
நேற்று அவளிடம் கடுமையாக நடந்து கொண்டது இவன் தான் என்று சூடம் அடித்து சத்தியம் செய்தால் கூட யாரும் நம்பமாட்டார்கள், அந்தளவிற்கு எதுவுமே நடக்காதது போல் சாதரணமாக அவளின் புல்லட்டில் கையில் தலைகவசத்துடன் புன்னகை முகமாக அமர்ந்திருந்தவனோ “ஹாய் மிஸ் தியாழினி.. ஹவ் ஸ் யூ?”
“நீ எதுக்கு இங்க வந்த”
“வேற எதுக்கு பிக்அப் பண்ண தான்” என்று கூறி குறும்பாய் இதழ் விரிக்க,
“வாட்”
“ஹே.. பைக்ல பிக்அப் பண்ண வந்தத சொன்னேன்”
“இங்க பாருங்க மிஸ்டர் ரெண்டு பேரும் ஒன்னா வொர்க் பண்றோம்ன்னு ஓவரா அட்வாந்தேஜ் எடுக்குற வேலைலாம் வேண்டாம்.. உங்க லிமிட் எதுவோ அதுக்குள்ளயே இருந்துக்கோங்க இல்லன்னா நடக்கிறதே வேற” என்று கடுகடுக்க,
“வெயிட் வெயிட்.. இப்போ நான் என்ன அடவாந்தேஜ் எடுத்துகிட்டேன்னு மூச்சி விடாம டயலாக் பேசுற.. உதவி பண்ண வந்தது குத்தமா” என்று கூறியதை கேட்டு முறைப்பவளை கண்டு “நேத்து சார் வீட்டுக்கு உன்னோட பைக்ல தான் ரெண்டு பேரும் போனோம் ஞாயபகம் இருக்கா? அப்படியே அங்கிருந்து வீட்டுக்கு உன்ன ட்ராப் பண்ணிட்டு உன்னோட பைக் எடுத்துட்டு நான் போயிட்டேன்.. பின்ன எப்படி உன்னால வர முடியும்.. அதான் மார்னிங் பிக்அப் பண்ணலாம்ன்னு வந்தேன்” என்று கூறி தலைகவசத்தை அவளிடம் நீட்டி பின்னால் தள்ளி அமர்ந்தான்.
அதை கையில் வாங்கியவளுக்கு, அப்போது தான் நேத்து அவனுடன் சென்றது நினைவில் வர ‘ச்ச.. இவன பாத்ததும் எப்படி தான் எல்லாத்தையும் மறைந்து தொலைக்குறனோ’ என்று தனக்குள் நொந்து “தேங்க்ஸ்” என்று கூறி தலை கவசமணிந்து வண்டியில் அமர்ந்தவளிடம் “நீ ஓகே தான இல்லன்னா வீட்டுல இன்னைக்கு ரெஸ்ட் எடு.. நானும் ருத்ரனும் பாத்துக்குறோம்”
“ஐ அம் ஓகே..” என்று கூறியவளுக்கு தன் வீடு எப்படி அவனுக்கு தெரியும் என்று கேட்கும் அளவிற்கு மதி வேலை செய்யமலே அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தாள்.
இப்போது ஆத்திரேயனுடன் உள்ளே நுழைந்தவளோ, நேற்று ஒரு வேலையாக செல்லப்பட்டிருந்தவர்கள் இன்று வந்ததை கண்டு அவர்களிடம் பேசிவிட்டு தன்னை ஆராய்ந்து கொண்டிருந்த நண்பனின் அருகில் செல்ல,
அவனோ “ஏய் மச்சி இப்போ நீ ஓகே வா.. வீட்டுல ரெஸ்ட் எடுக்கலாம்ல ஏன்டி தினமும் வேலை வேலைன்னு உடம்ப ஸ்ட்ரெஸ் பண்ணிக்கிற”
“டேய் டேய் போதும்டா.. உன் சென்டிமென்ட நிறுத்திட்டு நியூ கேஸ் பைல் எடுத்துட்டு டிஸ்கஷன் ரூமுக்கு வா” என்று கூறி ரேயனுடன் கலந்துரையாடல் அறைக்குள் நுழைய, அவனும் கோப்புவை எடுத்து கொண்டு அவர்களின் பின் சென்றான்.
மூவரும் அருகருகே அமர்ந்து கோப்புகளில் உள்ள ஒவ்வொன்றையும் நோட்டமிட்டு கொண்டிருக்க, ரேயனோ அதிலிருந்த கடிதத்தை அவர்களின் முன் நீட்டி “இந்த லெட்டர முத ரெண்டு பேரும் படிச்சி பாருங்க” என்று கூற,
அதை கையில் வாங்கி இருவரும் கண்களால் படிக்க தொடங்கினர்.
இப்போது ருத்ரன் “இந்த லெட்டர் வச்சி பாக்கும் போது.. அந்த ஆசிரமத்துல வொர்க் பண்றவங்களா இருக்கும்ன்னு தான் தோணுது.. அதே சமயம் இந்த கடத்தல் பத்தி இவங்களுக்கு நிறைய விஷயம் தெரிஞ்சிருக்கணும்.. இதுனால தன் உயிருக்கு ஆபத்து வரும்ன்னு பயந்து தான் யாருன்னு காட்டிக்க கூடாதுன்னும் பொண்ணுங்கள காப்பாத்தியே ஆகனுங்குற நல்ல எண்ணத்துலயும் பெயரே இல்லாம போட்டிருக்காங்க” என்று கூற, அடுத்ததாக ரேயன் ஏதோ கூற வர,
அதுக்கு முன் தியாவோ “நீ சொல்லுற எல்லாமே கரெக்ட் தான் ருத்ரா.. பட் என்னோட கெஸ் அவங்க இந்த அன்பு ஆசிரமத்துல வொர்க் பண்ணல”
“என்னடி சொல்லுற.. அங்க வொர்க் பண்ணாம எப்படி இந்த டீட்டெல்ஸ்லாம் கொடுக்க முடியும்”
“என்னால உறுதியா சொல்ல முடியும் ருத்ரா.. அவங்க இந்த ஹோம்ல இல்ல.. அதோட இந்த கடத்தல் இன்னும் ஒரு ஹோம்லயும் நடக்குதுன்னு அவங்க மென்ஷன் பண்ணியிருந்தாங்க.. அத நீ கவனிச்சுயா”
“ஆமா மச்சி.. ஆனா அந்த ஹோம் நேம் தெரியலன்னு எழுதியிருக்காங்களே..”
“அது தான் இல்ல.. அவங்களுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கு அதோட அவங்க சொன்ன இன்னொரு ஆசிரமத்தல ஏதோ ஒன்னுல வொர்க் பண்ணலாம்” என்று நிறுத்தி தாடையை தடவியவள் “மே பீ இந்த ரெண்டு ஆசரமத்துலயும் கூட அவங்க இல்லாம இருக்கலாம்”
“ஒருவேளை எப்படியும் போலீஸ் தன்ன தேடி வர வாய்ப்பிருக்குன்னும் தனக்கு எல்லாம் தெரிஞ்சும் தெரியலன்னு மறச்சது மட்டுமில்லாம தான்.. இங்க வேலை செய்றோம்ன்னு நம்மள நம்ப வைக்குறதுக்காகவும் இந்த ஹோமொட பைல்ஸ் மட்டும் அனுப்பிருக்காங்க.. அப்படி தான சொல்ல வர”
“எக்ஸட்லிடா.. போலீஸுக்கு மட்டுமில்ல கிட்டனப்பர்ஸ்கு கூட.. எந்த விதத்துலயும் தன்ன வெளிக்காட்டிக்க கூடாதுன்னு பிளான் பண்ணி தான் எல்லாம் பண்ணியிருக்காங்க”
“சரி தான் மச்சி.. ஒன்னுமே தெரியாம இந்த டீட்டெல்ஸ் மட்டும் வச்சி எப்படி கேஸ் ஸ்டார்ட் பண்றது”
“அத என்கிட்ட கேட்டா? சீனியர் சார் தான் சொல்லணும்” என்று கூறி ரேயனின் மீது பார்வையை செலுத்தி “என்ன சீனியர் சார்.. இப்படி கைக்கட்டி வேடிக்க பாத்தா என்ன அர்த்தம்.. அடுத்து என்ன பண்ணனும்ன்னு ஒரு சீனியரா நீங்க தான் எங்கள வழி நடத்தனும்” என்று நக்கலடிக்க,
அவள் ருத்ரனிடம் கூறிய விளக்கத்தை கேட்டவன் தான் கூற நினைத்ததையே அவள் கூறியதில் இருவரின் கணிப்பும் ஒன்று போல் இருப்பதிலேயும், அவள் மீதிருந்த தன் விழிகளை இமைக்காமல் கைகட்டி நின்று மெச்சுதல் கலந்த பார்வையுடன் வருடியவன், இறுதியில் அவள் தன்னை நக்கலடித்ததையும் ரசித்து தொலைத்த மனதை அடக்க அரும்பாடு பட்டு அடக்கி, அவள் மீதிருந்த பார்வையை முறைப்பாக மாற்றினான்.
வழக்கு பற்றிய குழப்பத்திலிருந்த ருத்துரனும் கூட, அவள் கூறியதில் அவனை கண்டு சிரித்து வைக்க, பின் அவன் முறைப்பில் அடங்கியவன் “இந்த லெட்டர் பாக்கும் போது.. உங்களோட கெஸ் என்ன ரேயன்”
“தியாவோட கெஸ் கரெக்ட் தான்.. அட் த சேம் டைம் நம்ம என்ன தான் சீக்ரெட்டா கேஸ் கொண்டு போனாலும்.. நம்ம ஏதோ ஒரு மூவ்னால நம்ம அவங்கள பண்ற டார்கேட் கிட்னாபெர்ஸ் கண்ணுக்கு எப்படியாவது தெரிய வரும் இதுனால தங்களுக்கு எதிரா.. இந்த டீட்டெடைல்ஸ் கொடுத்தவங்களும் சிக்கி அவங்களுக்கு ஆபத்து வர கூட வாய்ப்பிருக்கு.. சோ எவ்வளவு சீக்கிரம் இவங்கள கண்டுபிடிக்கிறோமோ அவ்வளவு சீக்கிரம் பாதி கேஸ் முடிச்சி, அவங்க உயிரையும் காப்பாத்தலாம்”
“ஓகே.. நம்மளோட ஃபர்ஸ்ட் மூவ்வே இந்த டீட்டெல்ஸ் அனுப்பினவங்கள தேடுறது தானா” என்று கேட்க, ரேயன் பதில் கூறும் முன்னே தியாவோ
“அதான் இல்ல.. நம்ம டார்கெட் கிட்னப்பெர்ஸ கண்டுபிடிக்கிறது தான் இந்த பெர்சன் ஆப்ஷன் இவங்க கிடைச்சா கேஸ் ஈஸியா பின்னிஷ் ஆயிடும்.. அதோட இவங்க உயிரையும் சேப் பண்ணலாம்.. அதுக்காக இந்த பேர்சன் மேல மட்டும் கன்செண்டரேஷன் பண்ணி கடத்தப்பட்ட பொண்ணுங்க உயிரையும் இனி நடக்க போற கிட்னாப்சையும் கோட்ட விட்டுட கூடாது.. கரெக்ட் தான மிஸ்டர் ரேயன்”
“கரெக்ட் தான்.. அதோட இப்போ ரெண்டு ஹோம்ல ஒன் ஹோமோட நேம் அங்க இருக்குறவங்க கவுண்ட்ஸ் அண்ட் இதுவர கடத்தப்பட்ட பொண்ணுங்க எண்ணிக்கை இவ்வளவு தான் நம்ம கைலயிருக்கு.. இன்னொரு விஷயம் அந்த லெட்டர்ல என்ன மென்சன் பண்ணியிருந்துச்சுனா மிஸ்ஸான பொண்ணுங்க அங்க இருந்த தடம் கூட இல்லாத மாதிரி மிஸ்ஸிங் நடக்கு..” என்று முடித்துவிட்டு நெற்றியை தேய்த்த ரேயன் “ருத்ரா.. நீ அந்த அன்பு ஹோமோட ப்ளூ பிரிண்ட்ஸ் கிடைக்குதான்னு பாரு.. அதோட ஹோம் பக்கத்துல என்னன்ன பிளேஸஸ் இருக்குன்னு நோட் பண்ணு.. பீ குயிக்” என்று கூற, தனக்கு கொடுத்த பணியை காண செல்பவனை தடுத்து “ஒரு நிமிஷம் ருத்ரா” என்ற தியாழினியை அவன் என்னவென்று நோக்க,
அவளோ அக்கடிதத்ததை தன் திறன்பேசியில் புகைப்படம் எடுத்துவிட்டு, அவனிடம் கொடுத்து “ருத்ரா இத பாரன்சிக் லேப்ல கொடுத்துட்டு.. இத எழுதுனவங்களோட க்ளூ கலெக்ட் பண்ணு” என்க, தலையாட்டிய ருத்ரனும் தனக்கு கொடுத்த கடமையை காண சென்றான்.
ருத்ரன் சென்றதும் ஆத்திரேயன் “தியா.. சார் வீட்டுக்கு போய்.. இந்த கொரியர் யாரு கொடுத்தா எப்படி வந்துச்சுன்னு விசாரிச்சு.. சிசிடிவி செக் பண்ணு.. எப்படியும் கொரியர் பாய் ஆர் நம்ம தேடுற அந்த பேர்சன் கூட வந்துருக்கலாம்.. அதுல எதாவது க்ளூ கிடைக்கான்னு பாக்கலாம்” என்று கூற, அவளும் அத்தகவலை கண்டறிய சென்று விட, ரேயனோ கணினி முன் அமர்ந்து அந்த ஆசிரமம் பத்திய விவரங்களை வலைதளங்களில் தேடி சில குறிப்புகள் எழுதி கொண்டான்.
இப்படியே ஒரு மணி நேரம் கழிய,
அப்போது உள்ளே வந்த தியாழினியை கண்டு “என்னடி அதுக்குள்ள வந்துட்ட”
“அதுக்குன்னு விருந்து சாப்பிட்டுட்டா வர முடியும்”
“இந்த பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல.. நான் சொன்ன வேலை என்னாச்சு எதாவது க்ளூ கிடைச்சிதா”
“இல்ல.. இந்த கொரியர் சார் கைல கிடைச்ச முந்தின நாள் சிசிடிவி பாத்தேன் யாரோ ஹேக் பண்ணியிருக்காங்க.. இங்க வொர்க் பண்ற ஒருத்தி இந்த மாதிரி விஷயத்துல ரொம்ப எக்ஸ்பர்ட் சோ அவகிட்ட சொல்லி திரும்ப பூட்டேஜ் கைக்கு கிடைக்க ஏற்பாடு பண்ணியிருக்கேன்..” என்றதில் தாடையை தடவியவன்
“சரி ஓகே.. சாப்பிடணும்ன்னா சாப்பிட்டுட்டு வீட்டுக்கு போய் தேவையான திங்க்ஸ் எல்லாம் எடுத்துட்டு வந்துடு நைட் ஒரு முக்கியமான வேலையிருக்கு”
“என்ன வேலை”
“ருத்ரன் வரட்டும்.. சேத்து சொல்லுறேன்” என்று கூறி நிறுத்தியவன் “தியா.. ஒரு காபி எடுத்துட்டு வாயேன்” என்று கூற,
அதில் கடுப்பானவள் “நான் என்ன உனக்கு பொண்டாட்டியா காபி எடுத்துட்டு வான்னு ஆர்டர் போடுற.. வேணும்ன்னா.. போய் நீயே எடுத்துக்கோ” என்று கூறியதை விழி உயர்த்தியவனின் விழியில் என்ன கண்டளோ தெரியவில்லை “சரி எடுத்து வந்து தொலைக்குறேன்” என்று தலையிலடித்து கொண்டே, அவனுக்காக தேநீர் கொண்டு வந்து கொடுத்தவள் மறுபடியும் எதாவது வேலை சொல்லி விடுவானோ என்று அஞ்சி வெளியே சென்று விட, தேனீரை பருகி முடித்தவன் விட்ட பணியை தொடர்ந்தான்.
தொடரும்..
ஆனந்த மீரா 😍😍

