
வனிதா அமைதியாக இருந்தாள்.
“இல்லடா அது.. இன்னும் ரெண்டு நாள் கழிச்சு வளைகாப்பு இருக்குல்ல ”
“அதுக்கு என்னடி இப்போ ?அதுக்கும் நீ இப்போ இவளுக்கு கால் பண்ணதுக்கும் என்ன சம்பந்தம் .?”
“ஒன்னும் இல்லை நான் சும்மாதான் கூப்பிட்டு இருந்தேன்.”
” சரி நீ போன் வை!” என்றான்.
“ஏன் நான் இருக்கும்போது பேச முடியாதோ?” என்று வனிதா கேட்டாள்.
“இப்போ கான்ஃபரன்ஸ் போட்டது நீ சரியா?” என்றான் சீற்றத்துடன்.
“நானும் அதை தான் கேட்கிறேன்.. நான் இருக்கும்போது பேச முடியாதா ? தனியா தான் பேசுவீங்களோ ..?”என்று சொல்லும் பொழுதே நிவேதா இங்கு போன் கட் செய்து இருந்தாள்.
“போன் கட் பண்ணிட்டு போயாச்சு உன்னோட ஃப்ரண்ட் “என்று வனிதா லேசான லேசான எரிச்சலுடன் சொன்னாள்.
“அடி வாங்க போற வனிதா .. என்கிட்ட பேசும்போது என்கிட்ட மட்டும் பேசணும். உனக்கு என்ன சந்தேகம் அத என்கிட்ட பேசு.இப்படி சொல்லாம கொள்ளமா கான்ஃபரன்ஸ் போடற வேலையை பஸ்ட் நிறுத்திக்கோ .
அவ உனக்கு இப்பதான் ஃபர்ஸ்ட் டைம் கூப்பிட்டு இருக்கா .. உன்னால பேச முடிஞ்சா பேசு. இல்லையா விற்று பேச விருப்பம் இல்லன்னு நேரடியா சொல்லிட்டே வச்சுட்டு போயிட்டே இரு.
அதை விட்டு இப்ப எனக்கு கான்பிரன்ஸ் போட்டு எதுக்கு கத்துற ?” என்று சீறினான்.
“அது என்ன உனக்கும் நிறைய கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க நானும் பார்த்து இருக்கேன் .
ஸ்கூல் டேஸ்ல இருந்து ,அவங்களுக்கு எல்லாம் தர இம்பார்ட்டனை விட இவங்களுக்கு இம்போர்ட்டண்ட் ரொம்ப ஓவரா இருக்கு ..?”
“இதுக்கு எல்லாம் ஒவ்வொரு முறையும் உனக்கு விளக்கம் சொல்லிக்கிட்டே இருக்க முடியாது. எனக்கு இவ முக்கியம் தான். அதுல உனக்கு என்ன பிரச்சனை?”
“நான் அதைப் பற்றியே இப்ப பேச வரல “என்றாள் .
“வனிதா எனக்கு வேலை இருக்கு நான் அப்புறமா கூப்பிடுறேன் “என்று விட்டு வைத்தவன் .அடுத்தபடியாக நிவேதாவிற்கு போன் செய்து இருந்தான்.
நிவி லேசாக கை,கால் உதறுலுடன் போன் எடுத்திருந்தாள்.
“இப்போ எதுக்குடி அவளுக்கு போன் பண்ணி இருந்த?”
“டேய் இல்லடா .. போன வீக் ஊருக்கு நீ வந்திருந்த இல்ல .”
“அதுக்கு என்ன இப்போ..?” என்று எகிறினான் ..
“இல்ல அப்பயிலிருந்து உனக்கும் வனிதாவுக்கும் சண்டை என்ற மாதிரி சரண்யா சொன்னா.. ஏதோ என்னால தான் அப்படின்ற மாதிரி சொன்னா..அவ இன்னைக்கு தான்டா சொன்னா என் கிட்ட..அதான்”
“லூசுத்தனமா எதையாவது செய்யாத சரியா .சரி உடம்ப பாத்துக்கோ, ஒழுங்கா இரு அவளை எப்படி சமாளிக்கணும்னு எனக்கு தெரியும். அவளோட விஷயத்தை நான் பாத்துக்குவேன்! ” என்று விட்டு வைத்து விட்டான்.
‘தன்னால் தனது நண்பனின் வாழ்க்கையில் பிரச்சினை வருமா ?’என்று யோசித்தாள் நிவி.
அவன் போன் வைப்பதற்கு முன்பாகவே,” நீயா லூசுத்தனமா எதையாவது யோசிச்சு பேசமாட்டேன் ,போன் பண்ண மாட்டேன் ,போன் அட்டென்ட் பண்ண மாட்டேன் ,மெசேஜ் பண்ண மாட்டேன் இருந்தேன்னு வை.
ஒதுக்கம் காமிக்கிறேன், விலகனும்னு நெனச்சேன் வை என்ன செய்வேன் என்று தெரியாது .. இதுக்கு மேல பேச மாட்டேன் “என்று விட்டு வைத்திருந்தான்.
தனது நண்பனை எண்ணி முகம் மலர்ந்தவள் அமைதி ஆகிவிட்டாள்.
இங்கு, வனிதாவின் மனதில் இரு நண்பர்கள்மீதும் கோபம் கொழுந்துவிட்டெரிந்தது.
நிவேதாவின் வளைகாப்பிற்கு தேவையான அனைத்தும் நடந்திட.. வளைகாப்பும் நல்ல முறையில் நடந்து முடிந்தது.
நிவேதா தன் தாய் வீட்டிற்கு சென்று இருந்தாள்.. ஒரு வாரம் அங்கு இருந்து காலேஜ் செல்வதாக முடிவு செய்தார்கள் ,அதன் பிறகு,ஒரு வாரம் கழித்து தனது புகுந்து வீட்டிற்கு வருவதாக இருந்தது.
வளைகாப்பிற்கு முன்னாடி நாள் இரவு நவிலனுக்கு மெசேஜ் செய்து, “டேய் நான் ஒரு வாரம் அங்கிருந்து காலேஜ் போறேன் .. என்னால போன் பண்ண முடியாது ,மெசேஜும் பண்ண முடியாது” என்று கூறி இருந்தாள்.
அவனும் ,”சரி டி ஹாப்பியா இரு! என்ஜாய் பண்ணு.. உடம்ப பாத்துக்கோ!” என்று விட்டு அமைதியாகி விட்டான்.
நிவி ஒரு வாரம் தன் தாய் வீட்டில் இருந்துவிட்டு தனது கணவன் வீட்டிற்கு வந்திருந்தாள் .
அங்கிருந்து காலேஜ் செல்லவும் ஆரம்பித்து இருந்தாள் ..ஏழாவது மாத முடிந்து எட்டாவது மாத தொடக்கத்தில் நிவேதா வசந்துடன் தியேட்டருக்கு சென்றிருந்தாள்.
ஈவினிங் ஷோ சென்றிருந்தாள். படம் முடிந்து வெளியில் வரும்போது, வசந்த் வண்டி எடுக்கும்போது நைட் ஷோக்கு வந்திருந்த குடித்திருந்த ஆண்கள் ஒரு சிலர் வண்டியின் மீது மோத.
“டேய் பார்த்து வர மாட்டீங்களா ?”என்று வசந்த் கேட்டான் .
“நாங்க பார்த்து தான் வரோம். நீதான் பக்கத்தில குட்டி இருக்கிறதால குட்டியவே பாத்துட்டு வர போல!” என்றான் ஒருவன் போதையில் வக்கிரத்துடன்.
அவன் உடன் இருந்த மற்றவர்கள் சிரிக்க ..வசந்த் அவர்களை முறைத்து விட்டு நகர்ந்தான்.
இவர்கள் குடித்து இருக்கிறார்கள் இவர்களிடம் பேசுவது வீண் என்று எண்ணி வசந்த் நிவேதாவை பார்த்துவிட்டு நகர்ந்து நிக்குமாறு சொல்லிவிட்டு வண்டியை திருப்ப .
“என்னடா வீட்டுல தடவுனது பத்தலையா ? வீட்ல தடவி தடவி தான குட்டி இப்போ வயித்தை தள்ளிட்டு நிக்குது போல. இப்போ தியேட்டர் கூட்டிட்டு வந்து தடவி கூப்பிட்டு போற போல !” என்றான் இன்னொருவன்.
வசந்த்திற்கு எங்கிருந்து தான் கோவம் வந்ததோ தெரியாது ..வேகமாக வண்டியை ஸ்டண்ட் போட்டு நிறுத்திவன் ,அப்படி கேட்டவனின் சட்டையை கொத்தாக பிடித்தான் .
நிவேதா பயத்துடன் ,”ஏங்க என்ன பண்றீங்க?” என்று வசந்தை பிடிக்க போனாள்.
அதேபோல் அடுத்த ஷோ படத்தை பார்க்க வந்தவர்களும் ,படம் பார்த்துவிட்டு சென்று கொண்டு இருந்தவர்களும் ,வசந்தையும் அப்படி பேசியவர்களையும் ஆளுக்கு ஒரு பக்கம் பிடித்து வைத்து ..
வசந்திடம் ,”அவங்க குடிச்சிட்டு இருக்காங்கப்பா நம்ம என்ன பேசினாலும் அவங்க புத்தியில் ஏறாது .
புள்ளதாச்சி புள்ளையை கூட்டிட்டு வந்து இருக்க. பார்த்து பத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டு போ !” என்றார்கள்.
“இவங்க கிட்ட பேசறது வேஸ்ட் .. மாசமா இருக்க புள்ள பயந்து போய் இருக்கு பாரு!” என்றார்கள்
சண்டைக்கு சென்றவன்,தன் மனைவியின் பயந்த முகத்தை பார்த்து விட்டு,” சரி” என்று வண்டி எடுத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பி விட்டான் வசந்த்.
வீட்டிற்கு வந்த பிறகும் வசந்திற்கு கோபம் குறையாமல் இருக்க ..
“எதுக்குங்க அப்படி சண்டைக்கு போறீங்க ?அவங்க கிட்ட” என்றாள் லேசான பீதியுடன் .
அவளை முதலில் முறைத்தவன். பின்பு அவளை இறுக்கி அணைத்துக் கொண்டு, “அவங்க என்ன பேச்சு பேசுறாங்க , அவங்களை அமைதி விட்டுட்டு வர சொல்றியா ? “என்றான் காட்டமாகவே.
“அவங்க நிதானமா இல்லைன்னு தெரிஞ்ச பிறகு, நம்ம அவங்க கிட்ட எதுக்கு வேஸ்ட்டா பேசிக்கிட்டு ..”
“அப்படி தாண்டி நானும் முதல்ல அமைதியா போனேன். ஆனா, அவங்க இரண்டாவது என்ன வார்த்தை பேசினாங்க ?”என்று அவளை இன்னும் இறுக்கி அணைத்துவிட்டு அவளது நெற்றியில் இதழ் பதித்தான்.
அதன் பிறகு ,அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான். இருவரும் வரும்போதே ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வந்து விட்டார்கள்.
நிவி கூட வீட்டிற்கு சென்று செய்து கொள்ளலாம் என்று சொன்னதற்கு ,இதற்கு மேல் வீட்டில் போய் செய்தாள் நல்லா இருக்காது இங்கவே சாப்பிட்டு போலாம் என்று சொன்னான்.
ஆகையால் ,வெளியிலேயே சாப்பிட்டு வீட்டிற்கு வந்திருந்ததால் ,அவளை தட்டி தூங்க வைத்தான். அவனும் தூங்கி இருந்தான்.
மறுநாள் மாலை காலேஜ் விட்டு வந்திருக்கும் போது நிவிக்கு நவியிடமிருந்து மெசேஜ் வந்திருந்தது.
“என்ன டி நேத்து தியேட்டரில் பிரச்சனை?” என்று கேட்டான்.
“உனக்கு யார் ?சொன்னா ?”என்று போன் செய்து கேட்டிருந்தாள்.
“பிரேம் தான் சொன்னான் ”
“என்ன வேவு பாக்குறியா நவி ?”என்று கேட்டாள் .
“அரஞ்சேன்னு வச்சுக்கோ.. நான் ஏண்டி உன்ன வேவு பாக்கணும். அதுவும் நீ மாமா கூட இருக்கும் போது..உன்னை நான் வேவு பாக்க வேண்டிய அவசியம் இல்ல டி .”
“அப்புறம் பிரேம் எங்க என்ன பார்த்தான்.? உனக்கு எப்படி தெரிஞ்சுச்சு ?”என்றாள் கோபத்துடனே .
“பிரேம் பசங்களோட படத்துக்கு வந்து இருக்கான் நைட் ஷோ. அப்போ தான் உங்கள பாத்து இருக்கான்.முதல்ல உன்ன பாக்க கூட இல்ல மாமாவை தான் பார்த்து இருந்திருக்கான்.
அவனுக்கு ஃபர்ஸ்ட் என்ன நடந்துச்சுன்னு எதுவும் தெரியல .
அவனுமே என்னன்னு தெரியல.. ஆனா மாமா அங்க இருந்தவங்களோட சட்டையை புடிச்சு சண்டை போட்டதா தான் சொன்னான் .
அதுக்கு அப்புறம் சுத்தி இருக்கவங்க கிட்ட கேட்டு இருக்கான்.அந்த பையனோட பொண்டாட்டியை தப்பா பேசினதால அந்த பையன் சண்டை போட்டான்னு மட்டும் சொல்லி இருக்காங்க. என்ன டி நடந்துச்சு?.
அவன் அப்பவே எனக்கு போன் பண்ணி மாமா கிட்ட வந்து பேசறதா சொன்னான் .
நான் தான் இப்போ நீ போன சரியா இருக்காது டா .விடு ,அதான் சுத்தி இருந்தவங்களே ரெண்டு பேரையும் பிரித்து விட்டுட்டாங்கன்னு சொல்றியே என்று சொல்லி இருந்தேன்.
அதான் அவனும் அமைதியா போயிட்டான்.”
“ஓ ..!”
“என்னடி ஓ..! என்ன நடந்துச்சு அத சொல்லு ? வர வர வாய் ரொம்ப நீளுது .”
நிவி சிரித்துக்கொண்டே நடந்ததை சொல்ல.
இங்கு நவிலனுக்கு கோபம் வந்தது.
“மாமா அவங்க சட்டையை புடிச்சதோட விட்டுடாரா?” என்றான் சினத்துடன் ..
“இப்போ நீ ஆரம்பிக்காத சாமி .நைட் அவர் அவங்க சட்டையை புடிச்சதிலேயே எனக்கு கை ,கால் நடுக்கம் எடுத்துச்சு. அமைதியா விட்டுடு சரியா” என்றாள்.
“ஊருக்கு வந்து வச்சுக்கிறேன் டி அவங்கள .”
“லூசு மாதிரி ஏதாவது பண்ணி தொலையாத டா !”என்று விட்டு ஃபோன் வைத்து விட்டாள்.
நிவிக்கு எட்டாவது மாத தொடக்கத்தில் இருக்கும்பொழுது ஒரு வாரம் காலேஜ் லீவ் விட்டிருந்தார்கள்.
அப்பொழுது லீவு முடிந்து ஹாஸ்டல் ஸ்டுடென்ட்ஸ் அனைவரும் வந்திருக்க, பஸ் ரொம்ப கூட்டமாக இருந்தது .
அப்பொழுது சரண்யா ஸ்டாப்பில் ஏறிய அனைத்து மாணவர்களும் நின்று கொண்டு வரும் படியாக தான் இருந்தது .
அதற்கு முன்பாக ஏறியவர்களும் நின்று கொண்டு தான் இருந்தார்கள். பஸ் கூட்டமாக இருக்க.
கடைசி ஸ்டாப் சரண்யா ஸ்டாப் என்பதால் அனைவரும் நின்று கொண்டு இருந்தார்கள். சிறிது தூரம் சென்ற பிறகு பஸ் பிரேக் போட..
முதல் சீட்டில் உட்கார்ந்து இருந்த நிவேதா டைவர் சீட்டில் போய் இடித்து இருந்திருப்பாள். வேகமாக அவளது அருகில் வந்து அவளை தாங்கி பிடித்து அவளது வயிற்றிலும் கையை வைத்து பாதுகாத்து நின்றாள் வனிதா.

