Loading

எல்லாரும் இந்த எபியைக் கண்ணை மூடிக்கிட்டு வாசிப்பீங்களாம். ஓ! கண்ணை மூடினா வாசிக்க முடியாதுல்ல?🤔🤔 சரி, வாசிக்கும்போது வெட்கம் வந்தா கண்ணை மூடிக்கோங்க🫣🫣

அத்தியாயம் 38

அன்றேனோ அக்னிக்கு அவனின் நிறுவனத்தில் வேலைப் பளு அதிகமாக இருந்தது. நிரஞ்சனாவிடம், ‘இரவு வர நேரமாகும். தனக்காக விழித்திருக்க வேண்டாம்.’ என்றவன், அனுவிடமும் அதையே சொல்லியிருந்தான்.

இரவு பதினொன்றரையைத் தாண்டி வீடு திரும்புகையில், அவனுக்கு அந்த அழைப்பு வந்தது. பெரும் ஆச்சரியமும் சிறு ஆவலுமாக அழைப்பை ஏற்றான்.

“சஞ்சுத்தான், நீ என்னைப்‌ பார்க்க வர்றதுக்கு இன்னும் எவ்ளோ நாளாகும்?” என்ற மறுமுனைக் குழறியது. பின்னால் கேட்கும் சப்தங்கள் அத்தனை நல்லதாக இருக்கவில்லை.

இவனுக்குள் மெல்ல பதற்றமெழுந்தது. “சந்தனா! எங்கே இருக்கே?”

“ம்ம்… ***ல இருக்கேன்.”

“இந்நேரத்துக்கு அங்கே ஏண்டி போன?”

“வைகுந்த் அவன் மேரேஜ்க்கு ட்ரீட் வைக்கறான். எல்லாரும் என் கல்யாணம் எப்போன்னு கேட்கறாங்க சஞ்சுத்தான். நீ என்னைப் பார்க்க வருவியா? இந்த அபி நீ வரவே மாட்ட’ன்னு சொல்றா!”

அவள் சொன்ன இடம் ஐந்து நட்சத்திர அந்தஸ்திலுள்ள ரிசார்ட்டுடன் கூடிய கேளிக்கை விடுதி. அவள் பேசுவதைக் கேட்டபடி, “ஸ்டே ஆன் தி லைன்! ஐ’ம் கம்மிங்!” என சீறியவனின் கரத்திலிருந்த ஸ்டியரிங் வளைந்து திரும்பியது.

“நோ! ஐ ஹேவ் பீன் வெய்ட்டிங் ஃபார் யூ ஸோ… லா….ங்! நௌ ஐ’ம் டயர்ட் சஞ்சுத்தான்…”

“சந்தனா! நான் வந்துட்டேண்டி! உனக்குத்தான் அது புரியல.”

“வந்துட்டியா? அபி சஞ்சுத்தான் வந்துட்டான்.” என்றவளின் குரல் தேய,

“சந்தனா… சந்தனா… ப்ளீஸ் ஸ்டே ஆன் தி லைன்!” எனச் சந்தனா கவசம் படித்தான் சஞ்சய்.

“சனா, யூ ஆர் ஸோ ஹாட்! இஃப் யூ லெட் மீ, ஐ’ல் ஷோ யூ ஹெவன் டியர் (என்னை அனுமதித்தால் சொர்க்கத்தைக் காட்டுவேன்).” என்ற ஓர் ஆணின் குரலில் இவனுக்குள் சாத்தான்‌ புகுந்துகொண்டது.

“டேய்ய்… ஸ்டே அவே ஃப்ரம் ஹர்…” என்றவனின் ஆக்ரோஷத்திற்கு செவிசாய்க்காமல் மறுமுனை முடங்கிப்போனது. அவள் சொன்ன இடம் போய் சேர எப்படியும் பதினைந்து நிமிடங்கள் ஆகும். முடிந்தவரையில் காரை விரட்டினான்.

என்ன தான் 2034, பெண் சுதந்திரம் என்றெல்லாம் பேசினாலும், நம் நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது எந்நாளும் கேள்விக்குறிதான்!

அந்த நேரத்திலும் பெங்களூரின் சாலைகள் வாகன நெரிசல்களால் ஒளிர்ந்து கிடக்கக் கண்டவன் அவ்வொளி கூட்டங்களை நாராசமாக சபித்தான். முடிந்த மட்டும் வேகம் கூட்டி பத்து நிமிடங்களில் அவள் சொன்ன இடத்திற்கு சென்றவன், வரவேற்பில் அவளின் நிறுவனப் பெயரைச் சொல்லி விசாரிக்க, அவர்கள் எடுத்திருந்த திறந்தவெளி கேளிக்கை பகுதிக்கு வழிகாட்டினான் அந்த சிப்பந்தி.

இவன் அங்கே போனபோது ஒருவன் சந்தனாவை வலுக்கட்டாயமாக தூக்கி நிறுத்த முயல, இவன் பாய்ந்தோடுவதற்குள் அவளே அவன் தாடையை உடைத்திருந்தாள். ஏற்கனவே அவளிடம் அறை வாங்கியிருக்கிறான் என்பது அவனின் திட்டு வார்த்தைகளில் இருந்து புரிந்தது. 

இருந்தும் இவன் பங்கிற்கு ஒரே அறையில் வாயிலிருந்து குருதியை வழிய விட்ட பின்னரே சாந்தமானான். நிற்க முடியாமல் தள்ளாடிக் கொண்டிருந்த சந்தனா பொத்தென அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து மேசையில் தலைக்கவிழ, அருகே அவளின் தோழி அபிந்தா குடை சாய்ந்து கிடந்தாள். ஏனைய மக்கள் தெளிந்தும் தெளியாமலும், சொர்க்கத்தில் மிதந்தும் நடந்துமென ஆங்காங்கே ஆடிப்பாடி திரிந்தனர்.

“சந்தனா.” என இவன் அவளை எழுப்பி நிறுத்த, 

அடிக்க வந்தவள் இவன் முகம் பார்த்துவிட்டு, “சஞ்சுத்தான்.” என தோள் சாய்ந்து கட்டிக்கொண்டாள். பின் கணநேரத்தில் விடுபட்டு, அருகேயிருந்த அபிந்தாவைப் பேய்த்தனமாக உலுக்கி எழுப்பினாள். 

அவள் பதறியடித்துக் கொண்டு விழித்துப் பார்க்க, இவள், “அபி, சஞ்சுத்தான் வந்துட்டான் பாரு!” என்று கூச்சலிட, அபிந்தாவின் போதை மொத்தமும் இறங்கி போனது.

இகத்தாளமாகச் சிரித்தாள் அவள். “எது நீ சொன்ன சின்ன வயசு கதையா? பழைய பட சீன் மாதிரி காமெடி பண்றடீ!”

அவள் சந்தனாவைப் போல் குழறவில்லை. அவளின் தெளிவான பேச்சைக் கண்டு, “யம்மா! ஸ்டெடியா இருக்கியா? இந்தா மூஞ்சியைக் கழுவு!” என இவன் தண்ணீரை நீட்ட,

வாங்கி முகத்தில் அடித்துக் கழுவிக்கொண்டவள், “நான் அரை போதைதான்! உங்க ஆளுதான் மாக்டெய்ல்ன்னு நினைச்சு காக்னாக் (சிறப்பு வகை உக்னி ப்ளாங்க் திராட்சைகளால் செய்யப்பட்ட ஒரு வகை பிராந்தி) ஃபுல்லா அடிச்சிருக்கா!” எனக் கன்னடத்தில் நக்கலடித்தாள்.

“மீ டூ ஸ்ட்ராங் கேர்ள் அத்தான்…”

மேனி உரச தன் கைக்குள் நின்று குழைபவளைக் கண்டு இவனுக்கு அங்கிருந்த போதை வஸ்துக்களெல்லாம் உதவாக்கரைகளாகத் தெரிந்தன. பர்கண்டி நிறத்தில் முன்னால் முட்டி வரையும், பின்னால் கணுக்கால் வரையும் நீண்டிருந்த, ஹால்டர் நெக் பார்ட்டிவேர் கௌன் அணிந்திருந்தாள். இடை இறுக்கியிருந்த பட்டி துணி முடிச்சிலிருந்து அவிழ்ந்து தொங்கியது. தலைமுடியை கர்லிங் செய்திருந்தவள், வலதுபுறம் சில முடிக்கற்றைகளில் மட்டும்‌ பர்கண்டி நிறத்தில் கலரிங் செய்திருந்தாள். காதில் உடையின் நிறத்திலேயே பெரிய ஸ்டட்! கண்களில் மையுடன் சேர்த்து மையலும் ஏற்றியிருப்பதாகத் தெரிந்தது இவனுக்கு.

மூச்சை இழுத்து விட்டுக்கொண்டான் சந்தனாவின் சஞ்சய்! அபிந்தாவிடம் கேட்டான். “சரி இவளை நான் பார்த்துக்கறேன். நீ எப்டி போகப் போற?”

“எல்லாருக்குமே வைகுந்த் வெகிகிள் அரேன்ஞ் பண்ணிருக்கான். நீங்க இவளைப் பத்திரமா வீட்டுல விட்டுடுவீங்கதானே?” என்று சந்தேகமாகக் கேட்டவளிடம்,

“நாளைக்கு ஃபேக்டரிக்கு முழுசா வருவா!” என எரிந்து விழுந்தவன் சந்தனாவை இழுத்து செல்ல,

“ஹலோ ஹேண்ட்சம்!” என்ற அபிந்தாவின் குரலில் திரும்பிப் பார்க்க, அவள் கேட்டாள். “அவ சொன்ன கதை நிஜமா? இல்ல, நைண்டீஸ் கன்னட சினிமாவோட உல்டாவா? நிஜமாவே நீங்கதான் அவ கஸினா?”

தனக்கொரு பாய் ஃப்ரெண்ட் இருக்கிறான் என்று மட்டும் சொல்லியிருந்த தோழி, சற்று முன்னர் சரக்கு உள்ளே போனதும்தான் அவன் யார், என்ன என்ற விவரத்தை கதைக்கதையாக சொன்னாள். இத்தனை நாட்கள் கேட்கும் போதெல்லாம், ‘சொல்றேன் சொல்றேன்!’ என மழுப்பிய காரணம் இதுதானா என்றெண்ணிய அபிந்தாவிற்கு, அவள் சொன்ன கதையை நம்புவதுதான் கடினமாக இருந்தது. அதனால் விழைந்த சந்தேகம் இது!

“எஸ்! ஐ’ம் ஹெர் மேன் சஞ்சு!” என்று கம்பீரமும் காதலுமாக உரைத்துவிட்டு அவனின் மாரியாத்தாவை வெளியே அழைத்து வந்து காரிலேற்றியவன், கண்களை மூடிக்கொண்டு இருக்கை பட்டியை மாட்டிவிட்டு, அவளின் கைப்பையை ஆராய்ந்தான். 

நல்லவேளையாக அவளின் வீட்டுக் கதவின் சென்ஸாருக்கான அட்டைச் சாவியும் (keycard) பிரதான வாயில் பூட்டிற்கான சாவியும் இருந்தது. இப்போது அவளிருக்கும் நிலையில் இவனுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்ல முடியாது. அதுவும் இந்த நேரத்தில் அனு இவளை இப்படி பார்த்தால் வருந்தக்கூடும். பாட்டி ஏற்கனவே இவளை ரௌடி என்று சொல்வதுண்டு. ஆக, அங்கே விடவும் விருப்பமில்லை.

சிந்தனை ஒரு புறமிருக்க, அவளது வீடு வந்திருந்தது. உடை மேலேறி, தலை சரித்து தூங்கியிருந்தாள் அவள். 

கோபமாக அழைத்தான். “சந்தனா!”

“……”

“ஏய் எழும்புடீ!” உலுக்கி எழுப்ப, மெதுவாக கண்விழித்தாள்.

பட்டியை விடுவித்துவிட்டு, அவள் கீழிறங்க உதவினான். 

அவள் தன் தோளைச் சுற்றிய கரத்தைத் தட்டிவிட, “மாரியாத்தா! என் பொறுமையெல்லாம் ஒரு அளவுக்குதான்!” என்று பல்லைக் கடித்தவனின் முகத்தை விளக்கு வெளிச்சத்தில் கண்கள் சுருக்கி பார்த்துவிட்டு கேட்டாள் அவள்.

“சஞ்சுத்தான் வந்துட்டியா?” 

இவனுக்கு ஒரு கணம் அவளை அள்ளிக்கொள்ளச் சொல்லி புத்தி பிறழ்ந்தது. “ம்ம்! வா!”

இப்போது சுற்றி வளைத்தக் கரத்தினுள் உற்சாகமாக அடங்கிக்கொண்டாள். மனதினைக் கட்டுப்படுத்திக் கொண்டவன் குரலைச் செருமினான்.

“சஞ்சுத்தான், பீச் போகலாமா? நீ, நான், அஜூ…”

“ம்ம்.”

“நான் என் பக்கெட் அண்ட் ஷாவெல் எடுத்துட்டு வருவேன். நாம வீடு கட்டி விளையாடலாம்.”

“ம்ம், விளையாடலாம்.” என்றவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது. மானசீகமாக தலையில் தட்டிக்கொண்டான். ‘ச்ச! ரொம்ப கெட்டுப் போயிட்டடா நீ! அவ ஏதோ சின்ன வயசு ஞாபகத்துல சொல்லிட்டிருக்கா!’

பேசியபடி மேலே அவள் வீட்டிற்கு வந்திருந்தனர். பழக்கத்தில் படுக்கையறை நோக்கி நடந்தவள் திரும்பி வந்து ஹாலில் நின்றிருந்தவனை எதிர்பாராமல் அணைத்தாள். 

கழுத்திற்கு சற்று கீழே அவளின் மூச்சுக்காற்றையும் கண்ணிமைகள் திறந்து மூடும் ஸ்பரிசத்தையும் கூட உணர முடிந்தவனின் ஹார்மோன்கள் இதற்குமேல் என்னைச் சோதித்தால் நாசமாகப் போவாய் என அவனைச் சபிக்க ஆரம்பிக்க, மோகத்துகள்கள் அனல் துகள்களாக மாறி சந்தனத்தை உரசிப் பார்க்கச் சொன்னது.

“தாங்க்ஸ் சஞ்சுத்தான். ஹேவ் அ ப்ளஸண்ட் ட்ரீம்ஸ்!” என்று சொல்லி விடுவித்தவளை, விடாமல் இழுத்து அணைத்துக்கொண்டான்.

அவள் கழுத்தைப் பிடித்து தன் முகம் பார்க்க செய்தவன் மூளையில் ஓர் வெற்றிடத்தை உணர்ந்தான். 

“யூ மேக் மீ சென்ஸ்லெஸ்!” என்றவனின் இதழ்கள், இன்று அந்த ஹால்டர் நெக் உடை அவனின் ஆஸ்தான இடத்தை அபகரித்துக் கொண்ட கோபத்தை அவளிதழ்களில் காட்டியது.

அரைகுறை முத்தம்! 

அவனை நிலைகுலையச் செய்ய அது போதுமானதாக இருந்தது.

விடுவித்தபோது மையேற்றியிருந்த அவள் கண்களில் ஏற்கனவே தெரிந்த போதையுடன், ஸ்ருங்கார சிரிப்பும் சேர்ந்து இவனைப் பைத்தியமாக அடித்தது. “சந்தனா…”

‘தவறு! அவள் சித்தம் நிதானத்தில் இல்லை!’ என உள்ளுக்குள் இவன் பயின்ற பண்பு எச்சரிக்க, அவளை அணைத்திருந்தக் கரங்களை விடுவித்துக்கொண்டான்.

நிற்க முடியாமல் அவளாகவே தடுமாறியபடி போய் கட்டிலில் விழுந்தாள். கூந்தல் முகம் மறைக்கக் குப்புற விழுந்தவளைக் கண்டவன் அதற்கு மேல் அங்கே நில்லாமல் ஓடிவந்து ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்துகொண்டு, ஒரு முழு போத்தல் நீரையும் அருந்திவிட்டு மூச்சு வாங்கினான். 

“மாரியாத்தா! ஒருத்தர் இல்ல; ரெண்டு பேர் முகத்துல முழிக்கணும்டி நானு!” என அனு, நிரஞ்சனாவைச் சொன்னவன் காரைக் கிளப்பினான்.

ஆனால் அவனின் ராத்தூக்கம், முற்றுபெறாத அந்த முத்தத்துடன் விழித்தே கிடந்தது. காலையில் எழுந்ததும் குளித்து கிளம்பி அவள் வீட்டு வாசலில்தான் வந்து நின்றான். இரவெல்லாம் தூங்காத கண்கள் கொட்டாவி இல்லாமல் பளிச்செனக் காத்திருந்தது அவளின் தரிசனத்திற்காக!

சந்தனா அப்போதுதான் புடவைக் கொசுவத்தைச் செருகிக் கொண்டிருந்தாள். விடாமல் அடிக்கும் அழைப்பு மணியில் எரிச்சலாகி யார் எனத் திரையில் பார்த்து, ‘இவனெங்கே இத்தனை சீக்கிரம் வந்திருக்கிறான்?’ எனக் குழம்பி, என்னவோ ஏதோவென மடிப்பெடுக்காத புடவைத் தலைப்பை அப்படியே தூக்கி மார்பில் போட்டுக்கொண்டு கதவைத் திறக்க, உள்ளே வந்ததும் வராததுமாக அவளை ஓங்கி அறைந்தான் அக்னிஸ்வரூபன்.

டிரையரைக் காட்டுவதற்காக விரித்து விட்டிருந்த ஈரக்கூந்தல் பக்கவாட்டில் திரும்பிய அவள் முகத்தை மறைத்துக்கொண்டது. 

அதிர்ந்து அவன் முகம் பார்க்க, அவன் சொன்னான். “குடிச்சிருந்தா அட்வைஸோட நிறுத்திருப்பேன். இது டிரெஸ் கலைஞ்சு கிடக்கறது கூட தெரியாதளவுக்கு குடிச்சதுக்கு!”

தன் தவறு புரிந்ததில்  இவளுக்கு குற்றவுணர்வும் அவன் முகம் பார்க்கவியலா சங்கடமும்! நேற்றிரவு நடந்ததில் இவளுக்கு பெரிதாக எதுவும் நினைவிலில்லை. ஆனால் காலையில் அபிந்தா அழைத்து இவளின் நலனை உறுதிப்படுத்திக் கொண்ட போதுதான், நேற்றிரவு அக்னி தன்னைப் பத்திரமாக வீடு கொண்டு வந்து சேர்த்தது சிறிதே நினைவு வந்தது.

“ஸாரி… நேத்துதான் ஃபர்ஸ்ட் டைம். இ இனி எப்பவும் குடிக்க மாட்டேன்.”

தரை நோக்கியிருந்த அவள் முகத்தை இரு கரங்களால் ஆக்ரோஷமாக நிமிர்த்தி அவசரமாக அவளிதழ்களை ஆக்ரமித்தவனின் உதடுகள், கழுத்தில் இறங்கி அவள் வாசமிழுத்து சுவாசம் நிரப்பிக்கொண்டு, வலிக்காமல் கடித்துவிட்டு, இன்னும் கீழே இறங்க எத்தனித்து, பின் அது தவறாகிப் போகும் என்ற நல்லெண்ணம்(?) உதித்ததில், தேங்கியிருந்த இடத்திலேயே மீண்டுமொரு பற்தடத்தைப் பதித்துவிட்டு நிமிர்ந்து, ஸ்ருங்கார சப்தத்தில் சொன்னது. “இது நேத்து என்னை டெம்ப்ட் பண்ணதுக்கு!”

சந்தனாவின் தேகத்தில் மெல்லிய நடுக்கம். “ஸ்வரூப்!” என்று ஆட்சேபனையுடன் விலக,

விலகவிடாமல் விரல் கோர்த்து நின்றான். “ஸ்வரூப்? நேத்தெல்லாம் சஞ்சுத்தான் சஞ்சுத்தான்னு குழைஞ்சியே?” 

அதனாலல்லவா அவனுக்கு அவளை முத்தமிடுமளவிற்கு துணிச்சல் வந்திருக்கிறது! இல்லையென்றால் அர்ஜூன் சொன்னதைப்‌ போல் அவளுக்கு நேரம் கொடுக்கிறேன் பேர்வழியென்று விலகி நின்றிருந்திருப்பானே! 

பக்கவாட்டில் திரும்பி கூந்தலின் துணைக்கொண்டு முகம் மறைத்துக்கொண்டாள்.

“ஹோய் மாரியாத்தா!”

இவளின் பதின்பருவத்தில் ஒருமுறை அனுவிடம், “சஞ்சுத்தான் என்னை எப்டி கூப்பிடுவான் அத்தை?” எனக் கேட்டதற்கு,

அவளும் குறும்பாக ‘மாரியாத்தா!’ என்றிருந்தாள். அன்று அத்தையிடம் கோபித்துக்கொண்டு ஓடிப்போனது நினைவு வந்தது. 

ஆனால் இன்று அந்த அழைப்பு பிடிக்கும் போலிருக்கிறதே!

“என்னப் பேச்சைக் காணோம்?” என்று அவளை இழுத்து நெஞ்சோடு சேர்த்துக்கொண்டு சுவரில் சாய்ந்து நின்றான்.

“ஹே‌ மாரியாத்தா! லுக் அட்‌ மை ஐஸ்’டீ… சும்மா சும்மா கண்ணைப் பார்த்து சைட்டடிச்சிட்டிருந்தே? இப்போ பாரேன்!”

அவளால் அக்னியின் இந்த அதிரடியைத் தாங்க முடியவில்லை. அத்தனை நெருக்கத்தில் மூச்சடைத்தது. புலன்களெல்லாம் அவனால் செயலிழிக்கப்பட்டதைப் போல் உணர்ந்தாள். “ப்ளீஸ் அக்னி… ஐ நீட் சம் டைம்… இப்போ விடுங்க!”

“நான்தான் சஞ்சுன்னு தெரியாதப்போ எத்தனை சஞ்சுத்தான் சொன்ன? இப்போ ஒரே ஒருமுறை சொல்லு! விட்டுடறேன்.”

இருபத்தாறு வருடங்களாக வெட்கம் என்றால் என்ன நிறத்திலிருக்கும் என்றே அறியாத சந்தனா, அவன் கை வளைவிற்குள் நிற்கும் இந்த கணத்தில் முழுதாக வெட்கத்தின் சாயத்தில் மூழ்கிக் கிடந்தாள். கண்கள் தாமாக மூடிக்கொண்டன. சிரம் முடியாதென இடவலமாய் அசைந்தது.

அவளின் நிலையில் இவன் கிறங்கினான். ஏன்தான் இந்தப் பெரியவர்கள் இத்தனை தாமதிக்கிறார்களோ! இவளைச் சொந்தமாக்கிக் கொள்ள உடனேயே தாலியை எடுத்து இவன் கையில் தந்தால்தான் என்னவாம்? 

“அப்போ இப்டியே என் கைக்குள்ளேயே இருக்க ஆசையாயிருக்குதா?”

விழிகள் திறந்தாள். அலைபாய்தலில் மிதந்தன கருவிழிகள். “ஸ்வரூப் ப்ளீஸ்…”

“இதுதான் உன்‌ பிரச்சினை! ஸ்வரூப்பையும் சஞ்சுவையும்  வேற வேறன்னு பிரிச்சு பார்க்காதேடீ!” அல்லாடலின் தவிப்பு அவன் குரலில்!

பலவீனமாகச் சொன்னாள். “நான்… அப்டி நினைக்கல.”

“ஆஹான்? அப்போ சரின்னு சொல்றதுல என்ன பிரச்சினை உனக்கு? யூ க்நோ வாட் சந்தனா, இப்போ சொல்ற‌ மாதிரி நேத்து நீ என்னை ஸ்வரூப்ன்னு கூப்பிட்டிருந்தா இப்போ நான் இங்கே வந்தே இருக்கமாட்டேன்.” என்றவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.

“ஸ்வரூப்ன்னு ஸேவ் பண்ணி வச்சிருக்க நம்பர்க்கு கால் பண்ணி ஏன் சஞ்சுத்தான்னு கூப்பிட்ட? போதைல மூளை மழுங்கிப் போய் கிடக்கும்போது கூட என் பேரைப் பார்த்ததும், நான்தான் இத்தனை நாளா நீ புருஷனா நினைக்கற சஞ்சுன்னு உன் மனசு ஏத்துக்குது. தயவுசெஞ்சு உன் ஓவர்ஃப்ளோ அறிவால அதை‌ மறைச்சு‌ தொலைக்காதேடீ!”

“நான்…” என காற்றுக் குரலில் ஆரம்பிக்க,

“அத்தனை போதைலயும் வேற ஒருத்தன் கை மேல பட்டதும் அவன் வாயை உடைச்ச நீ, நான் தொட்டதும் என் முகம் பார்த்து, சஞ்சுன்னு கன்ஃபர்ம் பண்ணிட்டு அலோவ் பண்ணியே… ஏன்?” எனக் கேட்டான்.

அவன் கேள்வியில் நெஞ்சம் படபடப்பது அவளின் வேக மூச்சுக்களில் தெரிந்தது. அவன் கைக்குள்ளேயே நெளிந்தாள். ‘அலோவ் பண்ணேனா? நேத்து எதுவும் செஞ்சுட்டானா என்ன?’

திருதிருத்தாள். மார்பிலிருந்து நழுவப் பார்த்தப் புடவையை அவள் இழுத்துப் பிடிக்கும்‌முன்னர், அவன் பிடித்து போர்த்தினாற் போல் அவள் தோளைச் சுற்றிக் கொண்டுவந்து இடையில் செருகிவிட்டான். “ஒண்ணும் செய்யல. என் அம்மாக்கள் என்னை நல்லவன்னு நம்பிட்டிருக்காங்க. அதுக்காகவாவது நான் இன்னும் கொஞ்ச நாளைக்கு நல்லவனா இருக்கணும்னு நினைக்கறேன்.” என்றதற்கு விரோதமாக, நான் கடைந்தெடுத்த மோசக்காரன் என்றன இடையை விட்டு நகராத விரல்கள்.

விரல்களை விலக்கி விட்டவள் அவனுக்கு தேவையான பதிலைக் கொடுக்க முற்படாமல் மௌனத் தோழியின் தோள் சாய்ந்துகொண்டாள்.

“ஆல்ரைட்! நீ எதுவும் சொல்ல தேவையில்லை. ஊர்ல எல்லார்க்கிட்டேயும் சஞ்சு பொண்டாட்டின்னு தானே சொல்லிட்டு திரியுற? ஆஸ் அ ஹஸ்பண்ட், ஐ ஹாவ் மை ரைட்ஸ்!” என்றவனின் விரல்கள் அவள் கூந்தலுக்குள் வழி தேடி அலைய, இதழ்கள் சேருமிடம் சேர்ந்த திருப்தியில் பெரூமூச்செறிந்தது.  

‘ஏன் இதையெல்லாம் ஏற்கிறேன்? இந்நேரம் அவன் கன்னம் பழுக்க நான்கு அறைகளை விட்டிருக்க வேண்டாமா?’ என்றெண்ண இயலாதபடி அவள் மூளை நேற்றைப் போலவே தற்சமயமும் மழுங்கிக் கிடந்தது.

நேற்றுதான் சரக்கின் உபயத்தில் போதையிலிருந்தாள். இன்று என்னவாம்?

நெருங்காதே நெருங்காதே…

என் பெண்மை தாங்காதே…

திறக்காதே திறக்காதே…

என் மனதைத் திறக்காதே…

இசைக்கும்🎵🎶…

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
6
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. ரொம்ப நாளா இந்த பச்சைக்கிளி மொமண்ட் காக தான் வெயிட்டிங். வழக்கம் போல கவித்துவமான வர்ணனைகளோட ஒரு ரொமான்ஸ் சீன். அருமை.