Loading

நிவேதா வீட்டிற்கு சென்று தனது அக்கா மகன் பிறந்த நாளை கொண்டாடியவள் .

 

இரவு நேரத்தில் நவிலனுக்கு மெசேஜ் செய்து ,”எதுக்கு டா   பஸ் ஸ்டாப் வரைக்கும் வந்து நிக்கிறீங்க ..?

 

அப்படியா என்ன யாராவது  கடத்திட்டு போயிட போறாங்க ?”என்று மெசேஜ் அனுப்பி இருந்தாள் ..

 

“நீ தான லூசு சொன்ன.. பஸ்ல போகும் போது ஒருத்தன் டார்சல் செய்றானு..  எனக்கு பயமா இருக்கு.. ஒரு நாள் துணைக்கு வரியானு கேட்ட?”  என்றான்.

 

“அது அன்னைக்கு ..”என்றாள் ..

 

“ஓ! அப்போ இன்னைக்கு மேடமுக்கு பயம் போயிடுச்சா ?” ..

 

“அப்படி சொல்ல முடியாது. மதியமே ஸ்கூல் முடிஞ்சிடுச்சே.. இப்போ சாயங்காலமா யாரும் வர மாட்டாங்க என்ற தைரியம்” என்று மெசேஜ் செய்து  இருந்தாள்.

 

“சைக்கிள்ல வந்துட்டு இருக்கும்போது ஒரு பையன் ப்ரொபோஸ் பண்ணான் டெய்லி வந்து டார்ச்சர் பன்றான்னு சொன்ன..?”

 

“ஆமா ..”

 

“அந்த பயம் இல்லையா?..”

 

” பயம் தெரியல.. ஆனா, மழை பெய்து குட்டையா தேங்கி இருந்த தண்ணியில சைக்கிள் மாட்டிட்டு ஒரு டைம் பஸ்ல வந்தப்ப.. பஸ்லயே ஒரு பையன் ப்ரொபோஸ் பண்ணான் .

 

புக்ல  லவ் லெட்டர் வச்சு.. நேம் எல்லாம் எழுதி வச்சிருந்தானே.. அதையும் சரண்யா மூலமா உன்கிட்ட கொடுத்திருந்தேன்.. அதை பார்த்துட்டு அதை விடு அமைதியா கண்டுக்காதனு சொல்லிட்ட இல்ல ..அப்புறம் என்ன ?”என்று   மலராய் சிரித்தாள் .

 

“சைக்கிள்ல போயிட்டு இருக்கும்போது, ஒரு நாள் ஒரு பையன் பின்னாடியே ஃபாலோ பண்ணிட்டு  வந்து ஒரு நாள் கையை காண்பித்து வழிமறித்து   ப்ரொபோஸ் பண்ணிட்டதா சொன்ன .?”

 

“அதுக்கு என்னடா இப்போ ..?”

 

“இல்ல நீ அன்னைக்கு பேசினதை வச்சி எங்க பயந்திடுவியோனு நெனச்சேன்..ஆனா தைரியமா இருக்க போல..

 

அவன்கிட்ட நின்னு பேசுறது மட்டும் இல்லாம.. திரும்ப இப்படி ஃபாலோ பண்ண செருப்பாலயே அடிப்பேன் என்று செருப்பை தூக்கி காமிக்கிறியே அது என்ன பழக்கம் டி !” என்றான்.

 

“பின்னடியே  வரும்போது என்ன பண்ண சொல்ற.. ? எங்க ஊர் காரங்க யாராவது பார்த்தா என்ன தான அவன் கூட தப்பா சேர்த்து வச்சு பேசுவாங்க..”

 

“அது அவங்க ஏரியா.. அந்த பையன் இன்னும் நாலஞ்சு பேர் கூட்டிட்டு வந்து உன்னை ஏதாச்சு பண்ணா என்ன பண்ணுவ டி..?”

 

“அப்படி என்னடா பண்ணிடுவாங்க ?என் கூடயே நிறைய பேர் வாரங்க தான! என்னோட ஃப்ரெண்ட்ஸ் எங்க ஊரு பசங்க..”

 

 

“அவங்க தினமும் தான் உன் கூட வந்துட்டு இருக்காங்க.. அப்படி இருந்தும் அவன் உன் பின்னாடி வரத்தானே செய்றான். ”

 

“அப்புறம் எதுக்கு சார் அன்னைக்கு ஒரு நாள் மட்டும் என்னை பாலோ பண்ணிட்டு வந்தீங்க..?”

 

“லூசு நான் சாதாரணமா தான் வந்தேன் .”

 

“நம்பிட்டேன் நம்பிட்டேன்!” என்று அவர்களது அன்றைய உரையாடல் அப்படியே முடிந்து இருந்தது.

 

அதன் பிறகு, காலேஜ் சேர்வதற்கு நவிலன் திருச்சிக்கு சென்று விட . நிவேதா ,சரண்யா மற்றும் தனது மற்ற பெண் தோழிகளுடன் அருகில் உள்ள, வீட்டில் இருந்து செல்லும்படியான காலேஜ் இருக்க அங்கு சேர்ந்து இருந்தார்கள் .

 

நவிலன் திருச்சி காலேஜில் படித்துக் கொண்டே அங்கே தனது குடும்ப சூழ்நிலையின் காரணமாக ஒரு வேலைக்கு சென்று இருந்தான் .

 

அரை நாள் தான் காலேஜ் என்பதால் மிதி அரை நேரம் வேலைக்கு செல்வதாக முடிவு செய்து இருந்தான்.

 

அதன்படி ,அவன் வேலைக்கும் சென்று கொண்டு படிப்பிலும் கவனத்தை செலுத்தினான் . விடுமுறை நாட்களில் கூட அங்கே வேலை செய்வதால் ,இங்கே அதிகமாக (சொந்த ஊருக்கு )வரமாட்டான்.

 

அவ்வப்போது ,வரும் பொழுது சரண்யாவிடம் சொல்லி சரண்யா ஏறும் பஸ் ஸ்டாப்பில் நின்று நிவேதாவை பார்த்துக் கொள்வான்.

 

மற்றபடி மெசேஜில் பேசிக்கொள்வார்கள்.  எப்போதாவது முக்கியமாக என்றால் மட்டுமே போனில் பேசிக்கொள்வார்கள்.

 

நாட்கள் அழகாக உருண்டு ஓடியது. இரண்டாம் ஆண்டு தொடக்கத்தில் இருக்கும் பொழுதுதான் நிவேதாவிற்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து இருக்க .

 

சரண்யாவிடம் சொல்லி எப்படியாவது நிவேதாவை சரண்யா வீட்டிற்கு வர சொல்லி இருந்தான்.

 

அங்கு வந்திருந்த பொழுதுதான் நிவேதாவிடம் பேச செய்தான்.

 

நிவேதா வசந்த் தான் மாப்பிள்ளை என்று சொன்னவுடன் தனக்கு தெரிந்தவர்கள் மூலமாக வசந்தை பற்றி அனைத்தையும் ஆராய்ந்தான்.

 

அதன் பிறகு, இங்கு சொந்த ஊருக்கு வந்து வசந்த் பற்றி ஒரு அளவிற்கு தெரிந்து கொண்டு ,அதன்பிறகு தான் நிவேதாவையும் வரவைத்து அவளிடம் நேரில் பேசினான்.

 

நல்ல பையன் தான் ..நான் மாமாவை பற்றி விசாரிச்சிட்டேன். கல்யாணம் பண்ணிக்கோ! என்று சொல்லி இருந்தான்.

 

அப்பொழுதுதான் “யாரு டா மாமா ?”என்று கேட்டிருந்தாள் நிவேதா..

 

“உனக்கு பார்த்திருக்க மாப்பிள்ளை தான் டி!” என்றான். அதன் பிறகு அவளது திருமணமும் நடந்தேறியது .

 

திருமணத்திற்கு பிறகு, ஒரு முறை அவளை காலேஜ் செல்லும் பொழுது பஸ் ஸ்டாப்பில் வைத்து பார்த்திருந்தான்.

 

அப்படியே மாதங்கள் உருண்டோடி அவள் கர்ப்பம் தரித்து இருந்தாள்.

 

அப்பொழுது அவள் கர்ப்பமாக இருக்கிறாள் என்று சொல்லியிருந்த அடுத்த வாரத்தில் அவளை அதே பஸ் ஸ்டாண்டில் வந்து பார்க்க காத்து கொண்டிருந்தான் .

 

அப்பொழுது சரண்யா முதலில் பஸ்ஸில் ஏறியவள் நிவி” என்று அழைக்க..

 

“என்னடி?” என்று கேட்டாள் .

 

“கீழ நவி!” என்று மெதுவாக அவளது அருகில் வந்து சொல்லிவிட்டு அவளிடத்தில் சென்று உட்காரந்து கொள்ள.

 

நிவேதா வேகமாக எழுந்தவள், கீழே குனிந்து பார்த்தாள் .அங்கு நவி  சிரித்த முகமாக நின்று இருந்தான்..

 

அவனை பார்த்த கணமே அவள் முகம் ஒளிர்ந்தது..

 

அமைதியாக அவனை நோக்கிக் கொண்டிருந்த வேளையில், அவன் மெதுவாகக் கண் சிமிட்டினான்.

நிவி அமைதியாக,அவள் காலேஜ் பஸ் நகரும் வரை பார்வையை அவன் மீது வைத்திருந்தாள்.

 

 

ஒரு மூன்று நிமிடம் மட்டுமே அவர்களின் பார்வை பரிமாற்றம் இருந்திருக்கும் ,..

 

“எப்ப டி ?வந்தான். சொல்லவே இல்லை.. வரேன்னு ” என்று சரண்யாவிடம் நிவே கேட்க..

 

சரண்யா  மென்னகை புரிந்து விட்டு ,”நேத்து நைட்டு தான்  கிளம்பி இருப்பான் போல. இன்னைக்கு மார்னிங் தான் வந்திருக்கான். உன்ன பாக்க தான்” என்றாள்.

 

“என்ன  பார்க்கவா ?” என்று கேட்க ..

 

“உண்மையா இவ்வளவு நாள் நீ தான் அவன் கிட்ட க்ளோசா இருக்க அப்படின்னு நினைச்சேன் .

ஆனா,ஒரு சில விஷயம் அவனும் உன்  உன்கிட்ட ரொம்ப க்ளோசா தான் இருக்கான் ,எங்க எல்லாத்தையும் விட அப்படின்னு யோசிச்சு இருக்கேன்..

 

ஆனா ,நேத்து வேலைக்கும் போயிட்டு நைட்டு தான் கிளம்பி இருக்கான். இன்னைக்கு காலைல நாலு மணிக்கு தான் வந்து இருக்கான்.. இப்போ பஸ் ஸ்டாண்டுக்கு உன்ன பாக்கறதுக்காகவே வந்து நிக்கிறான்..

 

என்ன ஃபர்ஸ்ட்ல பஸ் ஏறி உன்ன பாக்க சொல்ல சொல்லி இருந்தான். காலையில மெசேஜ் போட்டு இருந்தான். நான் பார்க்கலை என்று போன் பண்ணி இருந்தான் ,திரும்ப இங்க வந்துட்டு பஸ் வர்றதுக்கு முன்னாடியே சொல்லிட்டான் ..” என்று சிரித்தவள்..

 

“என் மூலமா தாண்டி பிரண்டான ?” என்று  குழப்பமாக வினவினாள் ..

 

“லூசு! இதே கேள்வியை எத்தன டைம் கேட்ப விடு!” என்று அமைதியாகி விட்டாள்.

 

நாட்கள் வேகமாக சென்று நிவிக்கு ஐந்தாவது மாதம்  இருக்கும்பொழுது தான் நவிலனுக்கு வனிதாவை பிடித்திருக்கிறது என்று நிவியிடம் சொன்னான்.

 

நிவேதா இவ்வளவு நேரம் பழைய நினைவுகளில் இருந்து இப்போது தான்  மீண்டாள்..

 

நவி  எப்படி பிரண்ட்  ஆனான் , இப்பொழுது எந்த அளவிற்கு தன்னுடைய வாழ்க்கையில் முக்கியமானவனாக வந்து நிற்கிறான் என்று ஒவ்வொன்றையும் நினைவு கூர்ந்து பார்த்து புன்னகையில் மலர்ந்தவள் .. இதழ்களில் உறைந்த சிரிப்புடன் தன்னுடைய சமையல் வேலையில் இறங்கி இருந்தாள்..

 

 

சமைத்து முடித்துவிட்டு  சிரித்த முகமாக இருக்க வசந்த் வந்தவன்.. “என்னடி தனியா எதையோ யோசிச்சு சிரிச்சிட்டு இருக்க?” என்று கேட்டான்..

 

“ஒன்னும் இல்லைங்க!” என்றாள்.

 

“என்னன்னு சொல்லு?” என்று வசந்த் கேட்க..

 

தனது கணவனிடம் சொல்லலாமா ?வேண்டாம என்று யோசித்தவள் ..

“இ…இல்ல அ..அது ….” என்று தயங்கினாள் தடுமாற்றத்துடன்..

 

“என்ன உன் பிரண்ட் போன் பண்ணி இருந்தானா ?”என்று வசந்த் முறைத்துக் கொண்டே கேட்க .

 

அவனைப் பார்த்து பயந்தவள் .”ஆமா!” என்பது போல் தலையாட்ட ..

 

“என்னவாம்  அவனுக்கு இப்போ ?”என்றான் லேசான எரிச்சலுடன்..

 

தனது மனைவியிடம் உரிமையாக ஒரு ஆண்மகன் பேசுகின்றானே! என்ற எரிச்சல் மட்டுமே ..மற்றபடி அவன் இருவரையும் சந்தேகிக்கவில்லை..

 

“அவன் ஒரு பொண்ண லவ் பண்றானாம் ” என்றவுடன் வசந்த் தனது நெஞ்சில் கை வைக்க ..

 

 

“எதுக்கு இந்த மாதிரி பண்றீங்க ?” என்று நிவேதா கோபத்துடன்  கேட்டாள்..

 

“உண்மையா கொஞ்சம் பயம் இருந்துச்சு !”என்று பூவாய் மலர்ந்தான்..

 

அவனது நெஞ்சிலே குத்தியவள் … “அப்போ நீங்க என்ன சந்தேகப்படுறீங்களா ..?

 

நாங்க ரெண்டு பேரும் பிரண்ட்ஸ் என்று சொல்லிட்டேன் தான! அப்புறமும் என்ன உங்களுக்கு ?” என்று லேசான கோபத்துடனே கேட்டாள் .

 

“நீங்க சொல்றீங்க அதுக்கு நான் என்ன பண்றது..” என்று சிரித்தான்.

 

” உண்மையிலேயே உங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்லையா ?” என்று கண்கள் அருவியாய் பொழியக் கேட்டாள்.

 

“நம்பிக்கை இல்லாம இல்ல டி.. சும்மா சொன்னேன்.. எனக்கு உங்க மேல சந்தேகம் இல்ல.. ஆன, அதே அளவுக்கு என் பொண்டாட்டி கிட்ட ஒருத்தன் உரிமையா பேசுறத ஏத்துக்கிற அளவுக்கு அவ்வளவு நல்லவனும் இல்லை .. அதுக்காக உங்க உறவை தப்பா பேசல.. என்கிட்ட அவன பத்தி அடிக்கடி பேசாத எரிச்சல் ஆகுது.. அதே சமயம் என் முன்னாடி அவன் கிட்ட போன்லையோ ,மெசேஜ்லையோ பேச செய்யாத.. நீ வேற ..வேற ஏதாவது தப்பா புரிஞ்சுகிட்டு மனச போட்டு குழப்பிக்கிட்டு இருக்காது..அவ்ளோ தான்! உங்க பிரண்ட்ஷிப்பை மதிக்கிறேன்.. ஆனா , அதை ஏத்துக்கிற அளவுக்கு மனப்பக்குவம் இல்லை..  யார் அந்த பொண்ணு அவன்  கூட அங்க படிக்கிற பொண்ணா ?”என்றான் இறுதியாக..

 

“இல்ல அவன் ஊரு தான்.. அந்த பொண்ணு.. இப்போதான் 12 படிச்சிட்டு இருக்கு..எங்க ஸ்கூல் தான்” என்றாள்.

 

“ஓ!சரி சரி!” என்று விட்டு அமைதியாகி விட்டான். அன்றைய பொழுது அப்படியே அவர்களுக்கான நாளாக  அமைந்தது..

 

நவிலன்,நிவேதா இருவரும் இரண்டாம் ஆண்டு இறுதியில் இருக்கும் பொழுது மே மாதம் நிவேதாவிற்கு ஐந்தாவது மாதம் சாதமும் கொடுத்திருந்தார்கள்.

 

12th ரிசல்ட் வந்திருக்க. நவிலனுக்கு போன் செய்திருந்தாள் நிவேதா..

 

” டேய் வனிதா எவ்வளவு மார்க் ?” என்று கேட்டாள்.

 

“அதைக் கேட்டு நீ என்ன டி பண்ண போற?” என்று அந்த பக்கம் நவி சிரித்துக் கொண்டே கேட்க .

 

“லூசு அடி வாங்கி தொலையாத சொல்லித்தொல டா தடி மாட்டுப் பயலே .. நல்ல மார்க் எடுத்து இருக்கா இல்ல ..?”

 

“நல்ல மார்க் தான் எடுத்து இருக்கா” என்றான் அமைதியாக..

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்