
அதி நிவேதா இருவரையும் சேர்ந்து உணவகத்தில் பார்த்த அனாமிகா கோவத்தில் உச்சியில் இருந்தாள்… நிவேதாவை அதியிடம் இருந்து பிரித்தாக வேண்டும் என நினைத்தாள்… அன்று இரவு முழுவதும் அவள் தூங்கவே இல்லை… நாளை சென்று அவளிடம் எச்சரிக்கை குடுக்கலாம் அவள் விலகவில்லை என்றால் பிறகு பார்க்கலாம் என நினைத்து அடுத்த நாள் கல்லூரிக்கு கிளம்பினாள்…
இங்கு காதல் புறாக்களோ தங்களை பிரிக்க அங்கு ஒருத்தி திட்டம் வகுக்கிறாள் என்று தெரியாமல் தங்கள் வானில் சிறகடித்து பறந்து கொண்டு இருந்தது….
அடுத்த நாள் காலை அதி நிவேதா இருவரும் எப்போதும் போல் கொஞ்சம் அரட்டை கொஞ்சம் காதல் என செய்து கொண்டு வாக்கிங்கை முடித்தனர்… சிறிது நேரத்தில் அனைவரும் அவரவர் பணிக்கும் அலுவலகத்திற்கும் கிளம்பினர்…..
பிரியா நிவேதா இருவரும் எப்பொழுதும் போல் அரட்டை அடித்து கொண்டு கல்லூரிக்கு வந்தனர்…. நிவேதா நேராக லைப்ரரி சென்று விட்டாள்…. பிரியா வகுப்பறையில் சென்ற போது அங்கு உட்காந்து இருந்தவளை பார்த்து ஆச்சர்யம் அடைந்தாள்…. வகுப்பறையில் அமர்ந்து இருந்த அனாமிகாவை உள்ளே நுழைந்த அனைவருமே ஆச்சரியமாக தான் பார்த்தனர்..
அவளுக்கு தோன்றும் நேரம் தான் கல்லூரிக்கு வருவாள்… எப்போதும் முதல் வகுப்பு பாதி முடிந்த பின் தான் வருவாள்… ஆனால் இன்றோ சீக்கிரம் கல்லூரிக்கு வந்து இருந்தாள்….
பிரியா அங்கு முதலில் வரும் மாணவன் கோபாலிடம் “ஏன்டா கோவாலு இந்த அல்ட்டி எத்தனை மணிக்கு காலேஜ்க்கு வந்தாடா??? என்று கேட்டாள்….
“அடியே பிரியாணி அவ எனக்கு முன்னாடியே வந்து உட்காந்துட்டு இருந்தா…. கிளாஸ் ஓபன் பண்ணவுடனே பிசாசு மாதிரி உட்காந்து இருக்காடி….. பயந்தே போயிட்டேன்…. வெளிய வாட்ச்மேன் கிட்ட கேட்டேன்…. எட்டு மணிக்கே காலேஜ்க்கு வந்துட்டாளாம்” என்று கூறினான் அவன்….
“அவ்ளோ சீக்கிரம் வந்து என்ன கிளாசைக் கூட்டினாளா???… அப்டி ஒன்னும் தெரியலையே கிளாஸ் குப்பையா தான் இருக்கு என்ன பண்ணி இருப்பா டா…. மூஞ்ச நீ சொன்ன மாதிரி பிசாசு மாதிரி தான் வெச்சி இருக்கா என்னவா இருக்கும்… என்ன ஏழரைய கூட்ட போறாளோ தெரியல….
வா போய் என் புருஷனை பார்த்துட்டு உன் உடன் பிறவா தங்கையை லைப்ரரில கூட்டிட்டு வரலாம்… அப்டியே எனக்கு ஒரு முட்டை பப்ஸ் வாங்கி தா… உன் உபி(உடன் பிறவா) சிஸ்டர் சொக்கி சொக்கி கேட்டா வாங்கலாம் வா….” என்று கோபாலிடம் கூறிவிட்டு அவனை அழைத்து கொண்டு இல்லை இல்லை இழுத்து கொண்டு நிதிஷை பார்க்க சென்றனர்…..
என்ன தான் நிதிஷை வீட்டில் பார்த்துவிட்டு வந்தாலும் இங்கு காலேஜ் வந்து பார்ப்பது பிரியாக்கு அற்ப சந்தோசம்…. நிதிஷை பார்க்க செல்லும் போது நிவேதா லைப்ரரி சென்று விடுவாள்… எனவே இவளுக்கு துணை கோவாலு(கோபால்) தான்… பலியாடு போல் அவளுடன் சொல்லுவான்…
சொன்னதைப் போல் நிதிஷை சைட் அடித்து விட்டு கேன்டீன் சென்றனர்… பப்ஸ் கேட்ட பிரியாவை தலையில் தட்டி பிரேக்கில் வாங்கி தருவதாக கூறிவிட்டு அவனின் உபி சிஸ்க்கு மட்டும் சொக்கி சொக்கி வாங்கினான்… இருவரும் லைப்ரரி சென்று நிவேதாவை அழைத்து கொண்டு வகுப்பறைக்குச் சென்றனர்…
மூவரும் நுழையும் முன்பே நிவேதா பக்கம் பாய்ந்து வந்த அனாமிகா அவளிடம் “ஏய் நீ எதுக்கு என் அதி கூட சுத்துற…. நீ இருக்க லட்சனதுக்கு அவன் கூட சுத்தலாமா…. ஒழுங்கா அவன் கூட இனிமே பேசாம இரு…. அவன் பக்கம் உன் பார்வை போச்சி அவ்ளோ தான் நீ…. நீ ஆசை பட்டு படிக்குற படிப்பை ஒன்னும் இல்லாம பண்ணிடுவேன்” என்று கூறி எச்சரிக்கை செய்தாள்….
நிவேதா அலட்சியமாக அவளிடம் “என்ன உன் அதியா???…. அவர் என் பாவா… அவர அவன் இவன் அப்டினு மரியாதை இல்லாம என் முன்னாடி பேசுன அவ்ளோ தான்” என்று கூறி நகர முற்பட்டாள்….
ஆனால் யாரும் எதிர்பார்க்கா வகையில் நிவேதாவை அறைந்துவிட்டு “இனிமே என் அதிகூட பேசுனா அவ்ளோ தான் என்னையே எதிர்த்து பேசுறியா…. “என்று கூறி இன்னொரு அறை வைக்க முயன்றாள்….
ஆனால் கோபால் அவளின் கையை பிடித்து கொண்டு நிவேதாவை பிரியாவிடம் தள்ளி விட்டான்…..
அனாமிகாவை அங்கு படிக்கும் யாருக்கும் பிடிக்காது.. எனவே அங்கு இருக்கும் வேறு ஒரு மாணவி அனாமிகாவுக்கு தெரியாமல் அங்கு நடப்பதை வீடியோ செய்து கொண்டு இருந்தாள்… வீடியோ எடு என்று நிவேதா பிரியாவிடம் கூறினாள்…. பிரியா அந்த மாணவியிடம் செய்கையில் வீடியோ எடுக்குமாறு கூறினாள்….
அவளும் எடுத்தாள்…. அனாமிகா நிவேதாவை திட்டியது… நிவேதாவை அடித்தது வரை மட்டும் வீடியோ எடுத்தாள்… அதற்கு மேல் பிரியா அந்த மாணவியிடம் வீடியோ எடுப்பதை நிறுத்த கூறிவிட்டாள்…. அந்த மாணவியும் நிறுத்தி விட்டாள்….
நிவேதா பிரியாவிடம் “ஓகேவா” என்று கேட்டாள்… அவளும் ஆம் என தலை அசைத்தாள்…. நிவேதா திரும்பி அனாமிகாவை கன்னத்தில் சப்பென அறைந்தாள்… அனாமிகாவுக்கு ஒரு நிமிடம் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை…..
புரிந்தவுடன் அவளை அடிக்க கையை ஓங்கினாள்… ஆனால் பக்கத்தில் நின்று இருந்த இன்னொரு மாணவி அவள் கையைப் பிடித்து கொண்டாள்…
நிவேதா அவளிடம் “ஏய் இத்தனை நாள் நீ பண்ணதுலாம் பார்த்து இவ என்ன பண்ணாலும் அமைதியா இருக்கா.. இளிச்சவாச்சி எது சொன்னாலும் பயந்துடுவானு நினைச்சியா… என் பாவா விசயத்துல யாரு உள்ள வந்தாலும் அவங்க அவ்ளோ தான்” என்று எச்சரிக்கை செய்துவிட்டு அந்த மாணவியிடம் மொபைலை வாங்கிக் கொண்டு பேராசிரியர்கள் ஓய்வு எடுக்கும் அறைக்கு பிரியா கோபால் இருவரையும் அழைத்து சென்றாள்….
அவ்வளவு நேரம் கோவமாக இருந்தவள் வகுப்பறையை விட்டு வெளியேறியதும் அப்பாவி போல் மூஞ்சை வைத்து கொண்டாள்…
கோபால் பிரியாவிடம் “பிரியாணி பாண்டாவை(நிவேதா) பாரு… உள்ள எரிமலை மாதிரி கொதிச்சிட்டு இப்ப எப்படி அப்பாவி போல இருக்கா பாத்தியா” என்று கேட்டான்…
பிரியாவோ “டேய் கோவாலு இவளை பத்தி தெரியாதா நமக்கு மட்டும் தான் தெரியும் இது கேடினு” என்று கூறினாள்….
“இப்ப ரெண்டு பேரும் வாய மூடிட்டு வரல… ரெண்டு பேரையும் கொன்றுவேன் மூடிட்டு வாங்க” என்று முகத்தை அதே அப்பாவி ரியாக்ஷனில் கூறினாள்… இருவரும் அடிப்பாவி என்று நினைத்து கொண்டு அவளை பின் தொடர்ந்தனர்….
மூவரும் பேராசிரியர்கள் ஓய்வு எடுக்கும் அறைக்கு சென்றனர்… மூவரையும் பார்த்த அங்கு இருக்கும் பேராசிரியை ஒருவர் “மூனு பேரும் இங்க என்ன பண்றிங்க… நிவேதா உன் கன்னத்துல என்ன டா காயம்… கைதடம் மாற்றி இருக்கு உன்ன யாரு அடிச்சா….??” என்று கேட்டார்….
நிவேதா சொல்வதற்குள் கோபால் அவரிடம் “மேம் அனாமிகா தான் அடிச்சா…. உங்களுக்கு தெரியும்ல நிவேதாக்கும் நம்ம சேலம் ஏஎஸ்பிக்கும் மேரேஜ் பேசி வெச்சி இருக்காங்கனு???” என்று கேட்டான்…. (இந்த பேராசிரியர் வசும்மா தோழி)
“ஆமா தெரியும் அதுக்கும் அனாமிகா நிவேதாவை அடிக்குறதுக்கும் என்ன சம்பந்தம்… ” என்று கேட்டார்…
“மேம் ஒரு வாரத்துக்கு முன்னாடி அனாமிகாவ யாரோ கடத்திட்டாங்க…. நிவேதாவோட பியான்சி தான் அவளை காப்பாத்துனாரு…. அதுல இருந்து அவளுக்கு அவரை பிடிச்சி இருக்கு போல….
நாங்க மூனு பேரும் லைப்ரரி போயிட்டு கிளாஸ்க்கு போறோம் அவ நிவேதாவை திட்ட ஆரம்பிச்சிட்டா…. இந்தாங்க இந்த வீடியோ பாருங்க” என்று அதை போட்டு காட்டினான்…
அதை பார்த்துவிட்டு “இந்த பொண்ணு திருந்தவே திருந்தாது போல…. எம்எல்ஏ பொண்ணு அப்டினு என்ன வேணா பண்ணுமா….. வாங்க பிரின்சிபல்ல பாக்க போலாம்…
கோபால் நீ மெடிக்கல் ரூம் போயிட்டு நான் கேட்டேனு சொல்லி மருந்து வாங்கிட்டு வா” என்று அவனை அனுப்பிவிட்டு இருவரையும் அழைத்து கொண்டு பிரின்சிபல் அறைக்கு சென்றார்…
அவரிடம் காட்டிவிட்டு “சார் அந்த எம்எல்ஏ பொண்ணோட அராஜகம் ஜாஸ்தி ஆகிட்டே போகுது…. எப்பயும் யாரையும் மதிக்காம வார்த்தையால மத்தவங்கள காயபடுத்திட்டு இருந்திச்சி இப்ப அடிக்கவும் செய்யுது…. இங்க பாருங்க எப்படி காயம் ஆகுற மாதிரி அடிச்சி இருக்கு பாருங்க….
எங்க எச்ஓடி கிட்ட சொன்னா கண்டுக்கவே மாட்டிங்குறாரு… அந்த பொண்ணு மேல கம்பளைண்ட் குடுத்து வீடியோவ நெட்ல விட ரொம்ப நேரம் ஆகாது சார்…. விட்டா எவ்ளோ பெரிய இசு ஆகும்னு தெரியும்ல சார்….
அந்த பொண்ணு ஸ்டாப் கிட்டகூட மரியாதையா நடக்க மாட்டிங்குது…. எந்த ஸ்டாப் எதோ சொன்னாலும் வா போனு மரியாதை இல்லாம தான் பேசுது… இதுலாம் நாங்க மேனேஜ்மென்ட்ல சொன்னா எவ்வளவு பெரிய ப்ரோப்லம் ஆகும் தெரியுமா சார்…
அந்த பொண்ணு மேல நீங்க ஆக்ஷன் எடுக்கிறிங்க சார்…. இல்லனா அந்த பொண்ணு அடிச்ச வீடியோவ நானே நெட்ல போடுவேன்” என அந்த நல்ல உள்ளம் கொண்ட பேராசிரியர் கிட்டதட்ட மிரட்டவே செய்து விட்டார்….
அவரின் அதிரடியில் அனாமிகா ஒரு வாரம் சஸ்பன்ட் செய்ய பட்டாள்….. எச்ஓடி வந்து கேட்டதுக்கு “யோவ் ஒழுங்கா போயிடு அந்த அம்மா எம்டியோட க்ளோஸ் ப்ரண்ட்…. அந்த அம்மா எம்டி கிட்ட சொன்னா அவளோ தான்…. கம்மனு இருந்துக்கோ” என்று கூறி அவரை வெளியே போக சொல்லிவிட்டார்…
அனாமிகா நிவேதா மேல் இன்னும் வன்மத்தை வளர்த்து கொண்டாள்…. நிவேதாவை வன்மமாக பார்த்து கொண்டே கல்லூரியை விட்டு வெளியேறினாள்….
நிதிஷ் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து கொண்டிருந்ததால் அவனுக்கு தெரியவில்லை…..
அனாமிகா நிவேதாவை அடித்தது அந்த கல்லூரி முழுவதும் பரவி விட்டது….. எப்படியோ இந்த விஷயம் அந்த கல்லூரியின் எம்டிக்கும் தெரிந்து விட்டது…. அந்த கல்லூரியின் எம்டி ஒரு பெண் ஆவார்… அவரின் பெயர் தேவி ஆகும்… இந்த விசயம் தெரிந்தவுடன் அவர் மிகுந்த கோவம் கொண்டு தன்னுடைய மகனிற்கு அழைத்தார்….
அவர் என்ன சொன்னாரோ தெரியவில்லை…. அவர் மகன் உடனே எம்எல்ஏயிடம் பேச அவருக்கு அழைத்துவிட்டான்… அவன் என்ன சொன்னானோ தெரியவில்லை… பாவம் மனிதர் அரண்டுவிட்டார்…. இவன் சொல்வதற்கு அனைத்திற்கும் சரி சரி என சொல்லிவிட்டு வைத்துவிட்டார்…..
அப்பொழுது தான் அனாமிகா கோவமாக வீட்டிற்குள் நுழைந்தாள்…. தன் தந்தையைப் பார்த்தவுடன் அவரிடம் கோவமாக கல்லூரியில் நடந்ததை கூற சென்றாள்… ஆனால் அவள் கூறுவதற்குள் அவளின் அப்பா அறைந்துவிட்டார்…. இதுவரை அவளை அவர் அடித்ததே இல்லை… இன்று அடிப்பதை பார்த்து அவளின் அம்மா சுகுணா ஓடி வந்துவிட்டார்…
சுகுணா தன் கணவனிடம் “என்னங்க எதுக்கு பாப்பாவை அடிக்குறிங்க… அவ என்ன சொல்லறானு கூட கேட்காம எதுக்கு அடிச்சீங்க” என்று சத்தம் போட்டார்…
“உன் பொண்ணு பண்ண வேலைக்கு கொஞ்சுவாங்களா.. தப்பு செஞ்சாலும் யாருக்கும் தெரியாம செய்யணும்…. அந்த பொண்ண அடிக்கனும்னா யாருக்கும் தெரியாம அடிக்கனும்… அத விட்டுட்டு எல்லார் முன்னாடியுமா அடிக்குறது…”
“அந்த காலேஜ் எம்டியோட பையன் எனக்கு கால் பண்ணி கட்சியில சீட் இல்லாத மாதிரி பண்ணிடுவேன் அப்டினு மிரட்டுறான்… பேரு சொல்லி கூப்டுறான்.. எல்லாம் இவளால…”
“அந்த போலீஸ்காரன பிடிச்சி இருக்குனு சொன்னால அத நான் பாத்துக்குறேன்… அவனை எப்படி நம்ம குடும்பத்துக்கு கொண்டு வரணும்னு எனக்கு தெரியும்… “
“இனிமே அந்த விசயத்துல இவ எதுவும் பண்ணக் கூடாதுனு சொல்லிடு” என்று நீளமாக கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டார்….
அனாமிகாவும் கோவமாக தன்னுடைய அறைக்கு சென்று விட்டாள்… அவளுக்கு இன்னும் நிவேதா மேல் வன்மம் தான் அதிகம் ஆனது…
அதே நேரத்தில் காலேஜில் நிதிஷுக்கும் விஷயம் தெரியவந்தது… வேகமாக நிவேதாவிடம் வந்தான்… நிவேதா பிரியா கோபால் அப்பறம் அந்த வீடியோ எடுத்த பெண் நால்வரும் கேன்டீனில் அமர்ந்து இருந்தனர்….
அந்த கேன்டீனில் இவர்களை தவிர யாரும் இல்லை…. அவன் வரும் வேகத்திலேயே கோவமாக உள்ளான் என அனைவருக்கும் தெரிந்தது…. பிரியா கோபாலிடம் கண் காட்டினாள்… அவன் வேகமாக நிதிஷ் அங்கு வருவதற்குள் அவனிடம் ஓடி அவனை வேறு பக்கம் அழைத்து சென்றுவிட்டான்…
“கோபால் என்ன விடு நான் போய் குட்டிமாவ பாக்கணும்” என்று அவன் கையில் இருந்து தன் கையை விடுவிக்க பார்த்தான்…
“பாக்க கூடாதுனு தான் இங்க கூட்டிட்டு வந்தேன்… நீங்க இங்க ப்ரோபசர் மட்டும் தான் அது நியாபகம் இருக்குல்ல சார்… விடுங்க பாண்டாக்கு ஒன்னும் இல்ல… பிரியாணியும் டோராவும் இருக்காங்க கூல் அண்ணா” என்று கூறி அமைதி படுத்தினான்….
கோபால் பிரியா நிவேதா மூவரும் சிறுவயதில் இருந்தே பள்ளி தோழர்கள்… அது நட்பு இப்பொது வரை தொடர்கிறது… அந்த வீடியோ எடுத்த பெண் கோபாலுடைய காதலி அவள் கல்லூரியில் தான் இவர்களுக்கு தோழி ஆனாள்… ஆனால் கோபாலோ அவளிடம் காதலில் விழுந்து விட்டான்… பெயர் வினோதினி….
அவளுக்கும் இவனை பார்த்ததும் பிடித்துவிட்டது… இருவரும் வீட்டிலும் இவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவித்துவிட்டனர்…. மற்ற யாரோவாக இருந்தால் இவர்களின் நட்பை பிரிக்க தான் பார்த்து இருப்பர்… ஆனால் வினோ இவர்களின் நட்பில் தான் அவனின் காதலை ஏற்றாள்… தற்போது இவளும் அந்த மூவர் கூட்டத்தில் சேர்ந்து விட்டாள்….
அன்று மாலை கல்லூரி முடிந்ததும் அவரவர் வீட்டுக்கு சென்றனர்… இன்று நிவேதா கோச்சிங் கிளாஸ் செல்லவில்லை… நிவேதா வீட்டுக்கு போகும் போது அதி வீட்டில் இருக்க கூடாது என வேண்டிக் கொண்டே சென்றாள்… ஆனால் அவளின் தேவதூதன் தான் முதலில் அவளை பார்த்தது…. அவளின் கன்னத்தில் இருக்கும் காயத்தைப் பார்த்து பதறிவிட்டான்….
பிரியா அனைத்தையும் சொல்லிவிட்டாள்… அவ்வளவு தான் கோவமாக எங்கோ செல்ல முயன்றவனை எப்படியோ கெஞ்சி கொஞ்சி தடுத்துவிட்டாள் நிவேதா… இல்லையென்றால் ருத்ரதாண்டவம் ஆடி வந்து இருப்பான் அனாமிகா வீட்டில் …. அங்கு நிதிஷையம் பிரியா தான் கட்டுப்படுத்தி வைத்து இருந்தாள்…
ஒருமாதம் எந்த பிரச்னையும் இல்லாமல் சென்றது… ஆனால் அனாமிகாவின் வன்மம் கோவம் நாளுக்கு நாள் அதிகம் ஆகிக் கொண்டு தான் இருந்தது… இந்த ஒரு மாதத்தில் அதி நிவேதாவை ஜோடியாக மால் மற்றும் வேறு பொது இடங்களில் இரண்டு மூன்று முறை பார்த்து விட்டாள்… நிவேதாவை அதி வெறுக்குமாறு செய்ய வேண்டும் என நினைத்து அந்த கேவலமான ஐடியாவை யோசித்தாள்….
அன்று பிரியாவுக்கு உடல்நலம் சரியில்லை…. நிதிஷும் வேறு ஒரு காலேஜ்க்கு செமினாருக்கு சென்று விட்டான்… அதியும் ஒரு வேலையாக ஈரோடுக்கு சென்றுவிட்டான்… எனவே நிவேதா மட்டும் கல்லூரிக்கு வண்டியில் வந்தாள்… வகுப்புகள் நன்றாக தான் சென்றது…. கோபால் வினோவுடன் அரட்டை கேன்டீன் லைப்ரரி என….
மாலை புக் எடுக்க லைப்ரரி சென்றாள்.. அவள் தேடிய புத்தகம் கிடைக்கவில்லை… அங்கு இருக்கும் லைப்ரரியன் அங்கு தான் இருக்கும் தேடி பார் என கூறிவிட்டார்… லேட் ஆகும் என்பதால் கோபால் வினோவைக் கிளம்ப கூறிவிட்டாள்… அவர்களும் ஆயிரம் ஜாக்கிரதை கூறி கிளம்பினர்….
சிறிது நேர தேடலுக்கு பிறகு தான் நிவேதாவுக்கு அவள் தேடிய புத்தகம் கிடைத்தது… அதை எடுத்து கொண்டு வண்டி நிறுத்துமிடம் வந்தாள்… வண்டி பார்க் செய்ய ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வேறுவேறு இடம்… அந்த மாணவர்கள் இருக்கும் இடத்தில் இரண்டொரு வண்டிகள் தான் இருந்தது…
நிவேதா வண்டியின் அருகில் வரும்போது அவள் பின் இருந்து அனாமிகா மயக்க மருந்தை வைத்து அவள் மூக்கில் அமுக்கிவிட்டாள்… நிவேதா எவ்வளவு போராடியும் அனாமிகாவிடம் இருந்து தப்பிக்க முடியவில்லை.. மெல்ல மெல்ல மயக்க நிலைக்கு சென்றுவிட்டாள்..
அனாமிகா காலேஜில் இருக்கும் ஒரு ஸ்டோர் ரூமில் அவளை இழுத்து கொண்டே சென்றாள்… அவளை அந்த ஸ்டோர் ரூமில் தள்ளினாள்… பிறகு அங்கு இருக்கும் ஒருவனிடம் உள்ளே போக சொன்னாள் …
இதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த ஒரு மாணவன் அவர்கள் முன் வந்து நின்றான்…. அனாமிகாவுடன் இருந்தவன் அந்த மாணவனை தாக்க முற்பட்டான்… அவனால் முடியவில்லை.. எனவே அனாமிகாவும் அவனை தாக்கினாள்…. அந்த மாணவனை இருவராலும் சமாளிக்க முடியவில்லை…. அப்போது அங்கு வந்த அந்த எச்ஓடி அந்த மாணவனை பின்னிருந்து தாக்கினான்…
அவன் தாக்கியதில் மயக்கமடைந்த அந்த மாணவனையும் நிவேதா இருந்த அறையில் தள்ளினாள்…. நிவேதாவின் ட்ரெஸை அங்கு அங்கு கிழித்துவிட்டு அந்த மாணவனின் சட்டையை நிவேதாவுக்கு போட்டுவிட்டாள்….
பிறகு இருவரையும் பக்கத்தில் படுக்க வைத்துவிட்டு அவளும் அந்த எச்ஓடியும் வெளியில் சென்றுவிட்டனர்… அனாமிகாவுடன் இருந்தவன் உள்பக்கமாக பூட்டிவிட்டு ஜன்னல் வழியாக வெளியே வந்துவிட்டான்….
ஒரு அரை மணி நேரம் சென்றது….. நிவேதாவும் அந்த மாணவனும் அருகருகே இருப்பதை போல் போட்டோ எடுத்து அதை அவர்களின் கிளாஸ் வாட்சப் குரூப்பில் பதிவு ஏற்றிவிட்டாள்… அடுத்த அரைமணி நேரத்தில் அந்த காலேஜ் கூட்டமாக மாறிவிட்டது…
அந்த மாணவனையும் நிவேதாவையும் இணைத்து அந்த காலேஜ் முழுவதும் பேச ஆரம்பித்துவிட்டனர்… ஹாஸ்டலில் இருக்கும் அனைத்து மாணவர்களும் கல்லூரிக்கு வந்தவிட்டனர்…
நிவேதாவின் வகுப்பு தோழி பிரியாவுக்கு அழைத்து விஷயத்தை சொல்லிவிட்டாள்…. அவளும் வசும்மாவும் காலேஜ்க்கு கிளம்பி வந்தனர்…. கோபால் வினோதினி இருவரும் வந்துவிட்டனர்…..
இனிமேல் என்ன நடக்கும் ???? அடுத்த அத்தியாயத்தில் !!!!!
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
1
+1
+1



