
நவிலன் பின்னாடி திரும்பி பார்த்து வனிதாவை முறைத்துக் கொண்டே,’ டியூஷன்ல உன்னை வச்சுக்கிறேன் டி ‘என்று எண்ணி விட்டு நிவேதாவுடன் சென்று விட்டான்.
அன்று மாலையே வனிதா விடம் வந்து,” என்ன நெனச்சிட்டு இருக்க. ?அவள பத்தி உனக்கு என்ன தெரியும். நீயாவே எத வேணாலும் பேச வேண்டியதா..?”என்று எகிறினான் ஆத்திரம் தாங்கமால்,
“ஆமாம்.. எனக்கு அவங்கள பத்தி எதுவும் தெரிய வேண்டியது இல்லை .எல்லாரும் இருக்காங்க என்ற கூச்சம் கூட இல்லாம ஒரு ஆம்பள தோளில் சாஞ்சு படுத்திருப்பாங்க. கேட்ட நாங்க பிரண்ட்ஸ் என்று சொல்லுவீங்க. நீங்க லவ்வர்ஸா இருங்க, இல்ல பிரண்ட்ஸ்ஸா இருங்க எங்களுக்கு என்ன வந்துச்சு..
மத்தவங்க முன்னாடி இப்படி இருக்க கூடாது என்று கூட உங்களுக்கு தெரியாதா ?”என்றாள் அவளும் சரிக்கு சமமாக.
அவளை கண்களில் அனல் பறக்க எரித்து விடுவது போல் பார்த்தவன்..”அவ்வளவுதான் உனக்கு மரியாதை சரியா ?..
அவளே இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா பயத்தை விட்டு வெளியே வந்து, ஒழுங்கா பேச செஞ்சிட்டு இருக்கா, எங்களோட நட்ப பத்தி உன்கிட்ட இல்ல, யாருக்கும் நாங்க புரிய வைக்க வேண்டிய அவசியம் கிடையாது.”என
நவி சண்டைக்கு செல்ல ,
பிரேம் தான் அவனை தடுத்து,’ டேய் கொஞ்ச நேரம் கம்முனு இருடா.. அப்புறம் இதுவும் நிவேக்கு தெரிஞ்சா அவ தான் கஷ்டப்படுவா “என்றான்.
“ஆமாம் இப்பதான் சொன்னீங்க பிரண்டுன்னு …” என்றாள் எகதாளமாக
பிரேம் வனிதாவை முறைத்துவிட்டு,” எம்மா அவங்க இப்ப இல்ல ,இன்னும் நீ எத்தனை வருஷம் கழிச்சு பார்த்தாலும் அவங்க பிரண்டா மட்டும்தான் இருப்பாங்க சரியா?அவங்களுக்குள்ள தப்பான எந்த எண்ணமும் கிடையாது .”
“நீங்க பிரண்டா இருங்க, லவ்வரா இருங்க எனக்கு என்ன வந்துச்சு .?
இன்னும் கொஞ்ச நாள் போச்சுன்னா ரெண்டு பேரும் லவ்வர்ஸ்னு வந்து நிக்க போறாங்க . இல்ல, மாலையும் கழுத்துமா வந்து நிக்க போறாங்க அப்ப தெரியப்போகுது ..
நீங்க யாருக்கும் விளக்கமும் தரத் தேவையில்லை. எனக்கு அதை தெரிஞ்சுக்க வேண்டிய அவசியமில்லை “என்று விட்டு வனிதா வாயை கோனித்து காண்பித்து விட்டு ,’தனக்கு இது தேவையே இல்லை ‘என்பது போல் நான் நகர்ந்து விட்டாள்.
ஒரு வாரம் ஆதம் ஸ்கூலில் அவர்களது கோச்சிங் நல்லபடியாக முடிந்தது.
ஒரு வாரமும் வனிதா நிவேதா, நவிலன் இருவரையும் முறைத்துக் கொண்டே இருக்க..
“நீ ஏன் டி அவளையே பாத்துட்டு இருக்க .அவ எப்படியோ நினைச்சா நினைச்சுட்டு போகட்டும் பரவாயில்ல விட்டுப்போ ..ஒவ்வொருத்தவங்களுக்கும் விளக்கம் கொடுத்துட்டு இருக்க முடியாது” என்றான்.
“நான் விளக்கமே தர சொல்லல.. அவ கிட்ட நம்ம சண்டைக்கும் போக வேண்டாம் அவ்வளவுதான் விடு!” என்றாள் நிவே..
பன்னிரண்டாம் வகுப்பு பரிட்சை ஆரம்பம் ஆகும் நிலையில் இருந்தது.
இறுதித் தேர்வு ஆரம்பம் ஆவதற்கு முன்பு நிவேதா சரண்யா வீட்டிற்கு வந்து இருந்தாள் .
நிவேதா வந்தவள் சரண்யா போனிலிருந்து நவிலனுக்கு அழைத்திருந்தாள்.
எடுத்தவன்,” சொல்லு சரண்யா ?”என்றான்
.
“டேய் வீட்டுக்கு வாடா!” என்று நிவேதா சொல்ல.
“என்ன மேடம் உனக்கு அவ வீட்ல வேலை.. அவ போன்ல இருந்து பேசுற ?”என்றான்.
“நீ வர முடியுமா? முடியாதா?” என்று அதிகாரமாக கேட்டாள்.
“எனக்கு முக்கியமான வேலை இருக்கு, என்னால் வர முடியாது. ” என்றான் திமிராக..
“என்னடா அப்படி வெட்டிக் முறிக்கிற வேலை உனக்கு ?”என்று சண்டைக்குப் போக ..
“வெட்டி முறிக்கிற வேலை தான் மா உனக்கு என்ன.. ? உங்க வீட்ல உட்கார வைத்து சோறு போடுவாங்க .. நான் வேலைக்கு போனா தானே எனக்கு சாப்பாடு” என்றான் ‘ உச்’ கொட்டி நக்கலாக.
“ஓவரா பண்ணாதடா நீ வேலைக்கு போன தான் சாப்பாடு சரி ..இப்போ நீ என்ன வேலைக்கு போய் இருக்க .. ஸ்கூல் இருக்கும்போது ?” என்றாள் இவளும் விடாமல்,.
“பின்ன எனக்கு லீவு இல்லையா ?இன்னைக்கு..”
“ஏன் உங்களை இன்னைக்கு ஸ்கூல்ல வரத்தானே சொல்லி இருக்காங்க?” என்றாள்.
“இருந்தாலும், கொஞ்சம் வேலை இருக்கு டி “என்றான்.
“விளையாடாத நவி! இப்ப உன்னால வர முடியுமா ?முடியாதா ?..”
“முடியாதுன்னா முடியாது .. தன்..ஏன் ?என்ன பார்த்து என்ன பண்ண போறீங்க மேடம் ?” என்றான் மென் புன்னகையுடன்.
“நவி இன்னும் பத்து நிமிஷத்துல நீ இங்க இருக்கனும்!” என்று அவள் சொல்லிக் கொண்டு இருக்க..
“முடியாது வர முடியாது” என்று சொல்லிக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்திருந்தான் நவிலன்.
வேகமாக போனை சரண்யா கையில் திணித்தவள் ..அவனது முதுகிலே நாலு அடி போட்டாள் நிவேதா.
“லூசு இங்க தான் வரேன்னு சொல்றதுக்கு என்ன ..?எத்தனை முறை வரமாட்டேன்னு சொல்லி என்ன கத்த வைப்ப?” என்று கத்தினாள் ..
சிரித்து விட்டு,” சும்மாதான் சொன்னேன் பக்கி.. எனக்கு தெரியாதா உனக்கு இன்னைக்கு பர்த்டேனு” என்று சொல்லி அவளது தலையில் கை வைத்து ஆட்ட ..
“தெரிந்திருந்தாலும் வேணும்னா கத்த வைக்கிற இல்ல ?” என்றாள் பூவாய் சிரித்துக் கொண்டே..
“சும்மாதான் எருமை! நான் தான் உன்னை இன்னைக்கு சரண்யா கிட்ட சொல்லி இங்க கூட்டிட்டு வர சொன்னேன்” என்று புன்னகை பூத்தான்.
நிவேதா ஒரு டிபன் பாக்ஸ் எடுத்து சாக்லேட் நீட்ட.. இன்னொரு டிபன் பாக்ஸில் கேசரி எடுத்து நீட்டினாள்..
“இந்த ஒத்த ரூபா சாக்லேட் தரவா டி அவனை வர சொல்லி கத்திட்டு இருக்க ?”என்று சரண்யா கேலியாக சிரிக்க..
நவிலனும் சிரித்தான்..
“போடா தடிமாடு! அப்புறம் உனக்கு என்ன தருவாங்க என்று நெனச்ச ?”என்றாள் முகத்தை உர் என வைத்துக் கொண்டு.
“எனக்கு எதுவும் வேணாம்” என ஒரு சாக்லேட் எடுத்துக் கொண்டவன் ..
தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து அவளிடம் டைரி மில்க் எடுத்துக் கொடுத்தான்.
மெல்லிய சிரிப்புடன் வாங்கிக் கொண்டாள்.
சரண்யா தான்,” ஆனாலும் நீ கேடி டி ..ஒரு ரூபாய் சாக்லேட் கொடுத்து ,அவன் கிட்ட இருந்து 50 ரூபாய் சாக்லேட் வாங்கிட்ட இல்ல ?” என்று மலராய் சிரித்தாள் .
“ஆமா!” என்றாள் இதழ்களில் உறைந்த புன்னகையுடன் …
அதன் பிறகு, சிறிது நேரம் பேசிவிட்டு சரண்யாவுடன் நிவேதா ஸ்கூலுக்கு கிளம்பி விட்டாள் .
நாட்கள் அழகாக சென்று இறுதி தேர்வும் முடித்திருந்தார்கள் .
பப்ளிக் எக்ஸாம் முடிந்து இறுதி நாள் சரண்யா ஏற்கனவே நிவேதாவின் அம்மா கவிதாவிற்கு போன் செய்து அம்மா நிவேதா சாயங்காலம் தான் வருவா ..
இன்னைக்கு லாஸ்ட் டே என்பதால் எல்லாரும் ஜூஸ் வேர்ல்ட் போறோம் என்று சொல்லி இருந்தாள் .
அதன்படி அனைவரும் ஜூஸ் வேர்ல்ட் சென்று இருந்தார்கள் , ஜூஸ் குடித்துவிட்டு தங்களுக்கு தேவையானதை சாப்பிட்டுவிட்டு இரண்டு மணி போல் சரண்யாவின் வீட்டிற்கு வந்திருந்தார்கள்.
இரண்டு மணியில் இருந்து கிட்டத்தட்ட மாலை 4:00 மணி வரை பிரேம், நவிலன் ,சரண்யா, நிவேதா இன்னும் அவர்களுடன் மற்ற தோழிகள் அனைவரும் சந்தோஷமாக பேசிக்கொண்டு இருந்தார்கள்.
அப்பொழுது நவிலன் நிவேதா தோளில் சாய்ந்திருக்க.. சுற்றி இருந்த ஒரு சில தோழிகள் தான் நவி “ஆனா, நீ நிவேகிட்ட மட்டும் ரொம்ப க்ளோசா இருக்குற மாதிரி தெரியுது எங்களுக்கு ?”என்று கேட்டார்கள்.
நிவேதாவை பார்த்து சிரித்தவன். “அப்படியா எனக்கு ஒன்னும் அப்படி தெரியலையே ?”என்றான் ஒன்னும் அறியதவனாக.
“இல்லடா நீ எங்க கிட்ட பேசுறதுக்கும் ,அவ கிட்ட பேசுறதுக்கும் நிறைய டிஃபரன்ஸ் இருக்கே..? இவளை விட உனக்கு எங்களை தானஃபர்ஸ்ட் தெரியும். ?”
” ஆமாம்! உங்க மூலமாக தான் இவளை எனக்கு தெரியும்.
ஒன்றரை வருஷமா தான் தெரியும் .அதுக்கு என்ன இப்போ ?”என்றான்.
நிவேதா தனது தோழிகளை பார்த்துக் கொண்டு நகர்ந்து உட்கார ..அவள் அருகில் உட்கார்ந்து அவளது தோளில் கை வைத்து சாய்ந்து கொண்டு , “உங்க கிட்ட எல்லாம் கிடைக்காத ஏதோ ஒரு கம்ஃபோர்ட் சூன் எனக்கு இவகிட்ட கிடைச்சிருக்கு அவ்வளவுதான் ..! அவளோட வெகுளி தனம்..குழந்தை தனம்.. அக்கறை எல்லாம் வேற..அதை நான் இதை வரை வேற யார்கிட்டேயும் ஃபீல் பண்ணினது இல்ல!” என்றான் சிலாகித்து,
“அது தான்டா ஏன் ?”
“என்ன எப்படி இதெல்லாம் எனக்கு தெரியாது.. நான் உங்க கிட்ட பேசுற மாதிரி தான் இவ கிட்டயும் பேசுறேன் .. இவ கிட்ட மட்டும் தனியா அப்படின்னு எதுவும் பேசல.. இப்போ கொஞ்சம் க்ளோஸ் ஆயிட்டேன் .
உங்களை எல்லாம் தினமுமே பார்க்க செய்றேன்.. இவளை எப்பவாது ஒரு முறை தான் பார்க்க கூட செய்றேன்” என்றான்..
அப்போது பிரேமும் ,சரண்யாவும் “கொஞ்சம் இல்லடா நிறையவே கிளோஸ் ஆகி இருக்கீங்க ரெண்டு பேரும் “என்று சிரித்தார்கள்..
“சரி இருக்கட்டும் அதுக்கு என்ன ?” என்றான் முத்து பற்கள் தெரிய சிரித்தபடி..
“சரி நேரம் ஆகுது நான் வீட்டுக்கு கிளம்பறேன்” என்று நிவே எழுந்துங்கொள்ள .
“சரி கிளம்பு 4 மணிக்கு மேல ஆச்சு” என்று சொல்லிவிட்டு நவிலன் பிரேமிடம் ,”எங்கடா அது ?”என்று கேட்க ..
பிரேம் எடுத்துக்கொண்டு வந்தவுடன் நவிலன் நிவேதாவின் கையில் ஒரு பொம்மை கொடுக்க..
“எவ்ளோ டா காசு ?”என்று கேட்டாள்.
“அதெல்லாம் ஒன்னும் வேணாம். அக்கா பையன் பர்த்டே தானே எடுத்துட்டு போ ! என் கிப்ட்டா ” என்றான் மெல்லிய சிரிப்புடன்..
“அவன் என்னோட அக்கா பையன்.. நான் கிப்ட் வாங்கணும்னு ஆசைப்பட்டேன் “என்றாள் விடாமல் .
” ஏன் அவன் எனக்கும் அக்கா பையன் இல்லையா ?”என்று முறைத்தான்..
” நீ சொல்லுடா காசு கொடுத்துடறேன்!” என்றாள் மீண்டும்.
“அடிங்க! பிச்சு எடுத்துடுவேன் உன் கிட்ட இப்போ காசு கேட்டாங்களா? லூசு உனக்கு அக்கா பையனா எனக்கும் அக்கா பையன் தானே ..”
“ஃபர்ஸ்ட் அவன் சின்ன பையன் டா எருமை! உனக்கு மட்டும் காசு மரத்தில இருந்தா கிடைக்குது ?” என்றாள்.
” மேடம் என் பிரண்டுக்காக 200 ரூபாய் கூட செலவு பண்ண மாட்டேனா ? அது கூட எனக்கு வக்கு இல்லையா? இல்ல ,உரிமை இல்லையா ?”என்றான் கேள்வியாக புருவம் உயர்த்தி.
அவன் வாயிலிருந்தே அமௌன்ட் சொல்லி இருக்க.. 200 ரூபாய் எடுத்து அவனிடம் நீட்ட..
முறைத்தவன். “இப்ப இத நான் வாங்கிட்டனா இந்த நிமிஷத்துல இருந்து உனக்கும் எனக்கும் எதுவும் கிடையாது பரவாயில்லையா? வாங்கி கட்ட ?” என்றான் உக்கிரத்துடன்.
அவனிடம் பணத்தை நீட்டியவள்.. ஒரு சிறு நொடி அவனது கண்களை பார்த்துவிட்டு ,எதுவும் பேசாமல் தனது ஸ்கூல் பேகில் பணத்தை எடுத்து வைத்துக் கொண்டு” சரி நான் வரேன்!” என்று கிளம்பினாள்..
“சரி டி” என்று விட்டு கேக் வெட்டி கொண்டாடி இருந்தார்கள் .அதில் சிறிது கேக் எடுத்து அவளிடம் கொடுக்க ..
“வீட்டுக்கு போனா அக்கா எனக்கு தனியா எடுத்து வெச்சி இருப்ப டா அதுவே இருக்கும்.”
“இருக்கட்டும் இதையும் சேர்த்து திண்ணு .. கேக் கொடுத்தால் சாப்பிடாமலா விட்டுடுவ?” என கேலியாக சிரித்தான்..
“சரி” என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டாள்.. பஸ் ஸ்டாண்ட் சென்று பஸ்ஸில் உட்கார்ந்து இருக்க ..
பிரேமும் ,நவிலனும் கீழே நின்று கொண்டிருந்தார்கள் .
தனக்குள்ளே முனைவி கொண்டாள்..: எங்க ஊர் பஸ்ஸில் தான் உட்கார்ந்து இருக்கேன்..
சேஃப்டி யா தான் வீட்டிற்கு போவேன்.. இருந்தாலும், இவன் அலும்புக்கு அளவே இல்லை ‘ என்று நினைத்து மலராய் சிரித்தாள் .

