Loading

ருத்ரனைப் பார்த்த பாக்கியம் வாயை மூடிக் கொண்டார்.

 

தமிழ் சிரித்துக் கொண்டே தன்னுடைய ரூமுக்குச் செல்ல,

 

பின்னாடியே வந்த ருத்ரன் அவள் பாத்ரூம் சென்று விட்டு வரும் வரை அமைதியாக இருந்தான்.

 

அவள் வந்தவுடன், “தமிழ் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்” என்றான்.

 

“ரொம்ப முக்கியமா மாமா” என்றாள்.

 

“ஏன் தமிழ்?” என்று கேட்டவுடன் “இல்ல, லைட்டா தலை வலிக்கிற மாதிரி இருக்கு, அதான் டீ குடிச்சிட்டு வரலாமானு” என்று கேட்டாள்.

 

“சரி” என்றான்.

 

அவள் சமையலறைக்குச் செல்ல,

 

“நீ ஒன்னும் வேலை செய்ய வேண்டாம். ஏற்கனவே டீ போட்டு தான் வச்சிருக்கேன். நீ குடிச்சிட்டு உன் புருஷனுக்கும் கூடவே எடுத்திட்டுப் போ… அவனும் இன்னும் டீ குடிக்கல. கேட்டதற்கு நீ வரட்டும் என்று சொல்லிட்டான்” என்றவுடன் தனது அத்தையைப் பார்த்துச் சிரித்துவிட்டு,

 

வேறு எதுவும் பேசாமல் இருவருக்கும் ஆளுக்கு ஒரு கப் டீ எடுத்துக் கொண்டு தங்களது ரூமுக்குச் சென்று அவனது கையில் கொடுக்க, அவனும் எதுவும் பேசாமல் வாங்கிக் கொண்டான்.

 

“அப்படி என்ன மாமா முக்கியமான விஷயம்?” என்று கேட்டுக் கொண்டே அவனது அருகில் சிறிது இடைவெளி விட்டு உட்கார்ந்தாள்.

 

அவனுக்கு அவள் பழையபடி பேசி இருக்கிறாள் என்று எதுவும் மனதில் தோன்றவில்லை. அகிலாவின் விஷயத்தை இன்றே பேசித் தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் தோன்றியது.

 

அவன் டீ குடித்து முடியும் வரை அமைதியாக இருந்தாள். அவனது கப்பை வாங்கி ஒரு இடத்தில் வைத்துவிட்டு ருத்ரனைப் பார்க்க,

 

“தமிழ், அகிலாவைப் பத்திப் பேசணும்” என்றான்.

 

ஒரு சில நொடி அவனது கண்களைப் பார்த்துவிட்டு, “அகிலாவைப் பத்தியா? “என்று கேட்டாள்.

 

“சரி மாமா, எங்க பார்த்த? எப்படித் தெரிஞ்சுச்சு?” என்று நேரடியாகவே தமிழ் விஷயத்திற்கு வர, இன்று மாலை அவன் வேலை விட்டு வரும்போது கண்ட காட்சி அனைத்தையும் சொல்ல,

 

ஒரு சில நொடி அவனை அமைதியாகப் பார்த்தவள், “சரி மாமா சொல்லு” என்று கேட்டாள்.

 

“நீ தான் தமிழ் சொல்லணும், நீ அமைதியா இருந்திருக்கனா ஏதாச்சும் விஷயம் இருக்கும் இல்ல” என்றான்.

 

“ஆமாம்” என்று மண்டையை ஆட்டியவள் ஒரு சில நொடி எழுந்து நின்று நடக்கச் செய்தாள்.

 

ருத்ரன் அமைதியாகவே இருந்தான். சுவரில் சாய்ந்து கொண்டு அவன் பக்கம் திரும்பி கையைக் கட்டிக் கொண்டு அவனைப் பார்த்தாள்.

 

ஒரு சில நொடி ருத்ரன் தடுமாறி தான் போனான். அவள் அப்படி நின்றவுடன்.

 

பிறகு, தன் தலையை உலுக்கி விட்டுத் தமிழைப் பார்க்க,

 

“எனக்குத் தெரியும் மாமா. அவளோட நடவடிக்கையில மாற்றம் ஏற்பட்ட உடனே தெரியும். அவளா சொல்வான்னு வெயிட் பண்ணேன். இன்னொரு விஷயம் அவ அவரை விரும்ப ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே அவருக்குக் கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கு. அவர் விடோனு எனக்கும் தெரியும், அகிலாவுக்கும் தெரியும். தெரிஞ்சுதான் விரும்புறா” என்று விட்டு அமைதியானாள்.

 

ருத்ரன் ஏதாவது பேசுவான் என்று ஒரு சில நொடி ருத்ரனைப் பார்க்க,

 

தமிழ் பேசட்டும் என்று அமைதியாகவே இருந்தான்.

 

ருத்ரனைப் பார்த்துச் சிரித்தவள், “அவ லவ் பண்றதை தப்புன்னு சொல்ற உரிமை எனக்கு இல்லையே மாமா. அவ தப்பானவரா சூஸ் பண்ணி இருந்தா, நான் தப்புனு சொல்லி இருப்பேன். அவர் மத்த எல்லா விஷயத்திலும் நல்ல கேரக்டர் தான். அவர் வேணான்னு நம்ப சொல்லணும்னா, அவர் ஒரு விடோ. எனக்கு அது பெருசா தெரியல. அவங்க வைஃப் இருந்து அகிலா அவரை லவ் பண்ணா தான் தப்பு.

 

இல்லாத ஒருத்தவங்களுக்காக மகி அவர் வாழ்க்கையை வாழ வேண்டிய வயசில இழந்து நிக்க வேண்டிய அவசியமில்லை. அந்தக் குழந்தை அம்மா இல்லாம வளர வேண்டிய அவசியமும் இல்லை. அகிலா ஒரு முடிவோட தான் இருக்கா. அந்தக் குழந்தையை தன் குழந்தையா பார்க்கணும்னு முடிவுல தான் இருக்கா. அதே மாதிரி அவரை மனதார தான் விரும்பறா…

 

இதுவரைக்கும் நான் இதப்பத்தி அகிலாகிட்டப் பேசல, ஒத்துக்கிறேன். அவளா சொல்வானு வெயிட் பண்றேன். இல்ல, வீட்ல அவ கல்யாணப் பேச்சு எடுக்கிற சிட்டுவேஷன்ல அவளுக்கு ஆதரவா நிப்பேன். ஆனா இப்போதைக்கு, அகிலாகிட்ட இதப்பத்திப் பேச வேண்டிய அவசியம் எனக்கு வரல.

 

அதே மாதிரி தான், மகிசார் கிட்டப் போயிட்டு அகிலா பண்றது தப்புன்னு எனக்குச் சொல்லத் தோணல. அவர் வந்து என்கிட்ட இந்த நிமிஷம் வரைக்கும் அதைப் பத்திப் பேசல” என்று விட்டு அமைதியாகி விட,

 

“சரிடி உன்னோட அண்ணன் அகிலாவுக்கு மாப்பிள்ளை பார்க்கலாம் என்று சொல்லிட்டு இருக்கானே” என்றவுடன் அதிர்ச்சி ஆகிப் பார்க்க,

 

“என்கிட்ட மட்டும் தான் சொல்லி இருக்கான், இதுவரைக்கும் வீட்டில் இதைப் பத்திப் பேசல. ஆனா வீட்ல பேசணும்னு முடிவு பண்ணிட்டு இருக்கான்.”

 

“தப்பா எடுத்துக்காத மாமா, உனக்கு மகி சாரைப் பிடிக்கலையா?” என்று கேட்க,

 

“அவர் கிட்டப் புடிக்கலைன்னு சொல்ல எனக்கு அவரப் பார்த்துக் கொஞ்ச நேரத்துல எதுவும் இல்ல தமிழ். நல்ல பையனா தான் தெரியுது. ஓகே தான். ஆனா பெத்தவங்களா மாமா, அத்தையோட முடிவு என்னவாக இருக்கும் என்று சொல்ல முடியாது இல்லையா? நம்ம என்ன வேணாலும் முடிவு பண்ணிக்கலாம். ஆனால், பெத்தவங்களா அவங்க தன்னுடைய பொண்ணை இரண்டாம் தாரமாய் கொடுக்க யோசிக்கதான செய்வாங்க.

 

அதும் ஒன்னும் தப்பு இல்லையே?அத நம்ப ஒன்னும் சொல்ல முடியாதே. அதே மாதிரி தான், சரவணன் என்ன யோசிப்பானு என்னால சொல்ல முடியாது. உன்னப் போல நான் அவளுக்கு ஆதரவா நிக்கலாம். ஆனால்…” என்று விட்டு அமைதியாகி விட, எதுவும் பேசாமல் தமிழ் அமைதியாக இருந்தாள்.

 

அப்பொழுது அவர்கள் ரூம் கதவு தட்டப்பட்டது. தமிழ் போய் கதவைத் திறக்க, அங்கு சரவணன் நின்று கொண்டு இருந்தான்.

 

“வா அண்ணா…” என்று விட்டு அவள் நகர்ந்து நிற்க,

 

உள்ளே இருக்கும் ருத்ரனைப் பார்த்துவிட்டு சரவணன் அமைதியாக உள்ளே வந்து நிற்க,

 

“தமிழ் கதவு தாழ்ப்பாள் போட்டு வா” என்றான்.

 

எதுவும் பேசாது தமிழ் கதவைத் தாழ்ப்பாள் போட்டுவிட்டு அமைதியாக வந்து நின்றாள்,

 

“என்னடா மச்சான், கதவை எல்லாம் தாழ்ப்பாள் போடச் சொல்ற ?”என்று ருத்ரன் கேட்க,

 

“ஏன் மச்சான், உனக்குத் தெரிஞ்ச விஷயத்தை என்கிட்ட மறைக்கணும்னு நினைக்கறியா? இல்ல என்கிட்ட ஏன் சொல்லணும்னு நினைக்கிறாயா?” என்றவுடன் தனது மச்சானை ஓங்கி அடித்திருந்தான்.

 

“எப்படி டா இப்படி யோசிக்கற?” என்று லேசாகக் கலங்கிய கண்களுடன் கேட்க,

 

“லூசு மாதிரிப் பேசினா இன்னொரு அடி வாங்க வேண்டி வரும். அதை பற்றி தான் நான் இப்போ உன் தங்கச்சிகிட்டப் பேசிட்டு இருக்கேன். முழுசா எனக்கு எந்த ஒரு விஷயமும் தெரியாம, நான் உன்கிட்ட வந்து சொல்ல முடியாது சரோ, புரிஞ்சுக்கோ.

 

இது நீயும் நானும் சம்பந்தப்பட்ட விஷயம் இல்ல. பொம்பளப் புள்ள சம்பந்தப்பட்ட விஷயம். எடுத்தோம் கவுத்தோம் என்று செய்யக்கூடாது” என்றான்.

 

தமிழ் தான், “உனக்கு எப்படி அண்ணா தெரிஞ்சுச்சு” என்றவுடன் தமிழை ஒரு சில நொடி முறைத்துப் பார்த்துவிட்டு,

 

“அகிலாவா வந்து சொன்னா… எப்படியும் இவன் வந்து சொல்லிடுவான்னு சொல்லிட்டு இன்னைக்கு அவளா வந்து சொல்லி இருக்கா.”

 

“உண்மையச் சொல்லு அண்ணா, அவளா வந்து உன்கிட்ட சொன்னாளா?” என்றாள்.

 

“ஒத்துக்கிறேன். நான் அவகிட்ட உன் கல்யாணத்தைப் பத்தி வீட்ல பேசட்டான்னு கேட்கப் போகும் போதுதான் அவளா இன்னைக்கு நடந்த விஷயத்தையும் சரி, ரெண்டு வருஷமா உங்க ஸ்கூல்ல ஒர்க் பண்ற ஒரு சாரை லவ் பண்றதையும் அவரோட சிட்டுவேஷன் என்ன என்றதையும் முழுசா சொன்னா…” என்றவுடன் இப்போது தமிழ் அமைதியாக இருந்தாள்.

 

சரோ தமிழ், ருத்ரன் இருவரையும் பார்த்துக் கொண்டு நின்றான்.

 

“நீ தான் மச்சான் சொல்லணும், என்ன முடிவு பண்ணனும் இதுல என்று” என்றான் சரவணன் ருத்ரனைப் பார்த்து.

 

“நான் முடிவு பண்ண ஒன்னும் இல்லடா மச்சான்.”

 

“ஏன்டா, அப்ப உனக்கு அவ மாமா பொண்ணு இல்லையா? அவ உனக்கு ஒரு தங்கச்சி மாதிரி இல்லையா?” என்றவுடன் தன் நண்பனைக் கட்டிக் கொண்டு,

 

“அப்போ நான் சொல்றதுக்கு ஒத்துப்பியா?”என்று கேள்வி கேட்டான் ருத்ரன்.

 

“என் மேல உனக்கு அவ்ளோ தான் நம்பிக்கையாடா?”

 

“உன்மேல நம்பிக்கை இருக்கா இல்லையான்னு சொல்லல. என் பிரண்டா உன் மேல நான் ஆயிரம் நம்பிக்கை வைக்கலாம். ஆனா, உனக்கும் அகிலா வாழ்க்கையைப் பற்றிச் சில எதிர்பார்ப்புகள் இருக்கும் இல்லையா?” என்றவுடன் தனது நண்பனை நகர்த்தி விட்டு நின்று அவனை முறைத்தான் சரோ.

 

“ஒரு அண்ணனா எனக்கும் நிறைய எதிர்பார்ப்பு இருக்கலாம். அதுக்காக, என் தங்கச்சியோட ஆசையைப் புதைச்சுட்டு தான் எனக்குன்னு ஒரு எதிர்பார்ப்பு இருக்கணும்ன்ற அவசியம் கிடையாது” என்று சொல்ல,

 

தமிழ் வேகமாக வந்து சரவணனைக் கட்டிக்கொண்டு அழுதாள்.

 

“எனக்கு உண்மையாவே எங்க நீ அவ மேல இருக்கற பாசத்துல அவளோட விருப்பம் வேணாம்னு சொல்லிடுவியோ என்ற பயம் உள்ளுக்குள்ள இருந்துச்சி அண்ணா. உன்ன மட்டும் தான் சரி கட்டணும்னு நான் யோசிச்சேன்” என்று சொல்ல,

 

“உனக்கு என் மேல அவ்ளோ நம்பிக்கைல தமிழ்?” என்று கேட்டான்.

 

“நான் அப்படிச் சொல்லல அண்ணா.”

 

“அப்புறம் எப்படி தமிழ் சொல்ற” என்று அழுகையுடனே கேட்க, “அண்ணா ப்ளீஸ், உண்மையாவே இப்ப மாமா சொன்ன மாதிரி தான். அகிலாவோட அண்ணனா உனக்கு ஒரு சில எதிர்பார்ப்பு இருக்கும். அப்படின்னு இருக்கும் போது… அவ இவர விரும்பறதா வந்து நிற்கிறது எனக்குக் கொஞ்சம் உறுத்துச்சு.”

 

“அப்போ உன் பிரன்ட் பண்றது தப்புன்னு சொல்றியா?” என்றான் சிரித்துக் கொண்டே சரவணன்.

 

“அண்ணா தப்புன்னு நான் இப்ப இல்ல, எப்பயும் சொல்ல மாட்டேன். அவ தப்பான வழில போயிருந்தா அவளை அப்பவே கண்டிச்சு இருப்பேன் இல்லையா? அவ பண்றது தப்பு இல்லன்னு எப்போ தோணுச்சோ, அதான் அமைதியா இருக்கேன். அது மட்டும் காரணம் இல்லை. அது அவ வாழ்க்கை பத்தின முடிவு. முடிவு எடுக்கிற சுதந்திரம் அவளுக்கு இருக்கு இல்லையா? அதான் அதுல தலையிடக்கூடாது இல்லையா? அதனாலதான் அமைதியா இருந்தேன்”.

 

“அப்போ அவ வாழ்க்கையில தலையிடுற உரிமை எனக்கு மட்டும் வந்துருச்சா? அவ தப்பான வழில போயிருந்தா நீயா இருந்தாலும், நானா இருந்தாலும் சொல்லலாம். எனக்கு அவ தப்புப் பண்றான்னு தோணல. அது அவ தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம், அவ யாரையும் விரும்பக் கூடாதுன்னு நாம சொல்ல முடியாது இல்லையா?

 

அது தான் தமிழ் நானும் சொல்றேன். அவ விருப்பப்படி இருக்கட்டும். ஆனால், வீட்ல எப்படிப் பேசுவது? எனக்குக் கொஞ்சம் பயமா இருக்கு.”

 

“அண்ணா நான் பேசுறேன். அவளுக்கும் கல்யாண வயசு தானே… அது மட்டும் இல்லாம மகி சாருக்கும் அவருடைய அம்மா, வீட்ல பொண்ணு பார்த்துட்டு தான் இருக்கிறதா கேள்விப்பட்டேன்.

 

நம்ம முதல்ல பெரியம்மா கிட்டயும், பெரியப்பா கிட்டயும் பேசிட்டு அதுக்கப்புறம், அவங்க வீட்லயும் போய் பேசலாம். ஃபர்ஸ்ட்ல மகி சார் கிட்டப் பேசுறதுக்கு முன்னாடி அவங்க அம்மாகிட்டப் பேசுறது நல்லதுன்னு தோணுது. அவருக்கு அகிலாவைப் புடிச்சிருக்கு. ஆனா ,அவளோட வாழ்க்கைன்னு யோசிக்கிறாரு.

 

அவளுக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு. அதை ஏன் தனக்காக இழந்துட்டுத் தனக்கு இரண்டாம் தாரமா வாழனும்னு யோசிக்கிறாரு”.

 

சிரித்த சரவணன், “அதுதான் சரியா வரும் தோணுது” என்றவுடன் ருத்ரன் சிரித்த முகமாக,

 

“அது தான்டா மச்சான், நானும் சொல்லணும் நினைச்சேன். ஃபர்ஸ்ட் மாமா கிட்டயும், அத்தைகிட்டயும் சொன்னா அவங்களே பெரிய மாமாகிட்ட அத்தை கிட்டயும் பேசிடுவாங்க” என்று தன் நண்பனின் தோளில் கை போட்டான்.

 

அவனது கையைத் தட்டி விட்ட சரோ, “அகிலா பேச்சுவார்த்தை தான் இதோட முடிஞ்சிருக்கு. அதுக்காக மட்டும் தான் உன்கிட்டப் பேசி இருக்கேன். ஆனா, என் தங்கச்சி கழுத்துல தாலி கட்டுனதுக்கு உன்னை இப்ப இல்ல, எப்பயும் மன்னிக்க மாட்டேன்” என்று அவனது கையைத் தட்டி விட்டு அவனை முறைத்துவிட்டுக் கதவைத் திறந்து கொண்டு வெளியில் சென்று விட்டான் சரவணன்.

 

போகும் தனது நண்பனைப் பாவமான முகத்துடன் பார்த்துக் கொண்டு நின்றான் ருத்ரன்.

 

தமிழ் தன்னை மீறிச் சிரித்து விட,

 

“உன்னால தாண்டி இப்ப அவன் என்கிட்டப் பேசாம கூடப் போறான்” என்று சொல்ல,

 

“அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது” என்று சிரித்துவிட்டுத் தமிழ் வெளியே சென்று விட்டாள்.

 

போகும் தனது நண்பனையும், தனது மனைவியையும் பாவமாகப் பார்த்துக்கொண்டு நின்றான் ருத்ரன்.

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்