
அத்தியாயம் 37
” சரி , சத்யா இறந்த அன்னிக்கு உள்ள சிசிடிவி புட்டேஜ் இருக்குமா? ”
” இல்ல மேடம் , ஆறு மாசத்துக்கு ஒரு முறை டேட்டா எரேஸ் ஆகிடும். ”
” பேக்கப் காஃபீஸ் எடுத்து வைப்பீங்க தானே ? ”
” எடுத்து வைப்போம் மேடம் . ஆன அந்த முறை அங்கிருந்த எம்ப்ளாயி பேக்கப் எடுக்க மறந்துட்டான் .” என்றார் .
” இவ்வளவு பெரிய கம்பெனி நடத்துறீங்க . இவ்வளவு கேர்லஸ்ஸா பதில் சொல்றீங்க . சரி சத்யா இங்கு எங்கயாவது அவரின் ஃபோனை விட்டுட்டு போய்விட்டாரா ? ”
” இல்லை ” என்ற பரந்தாமன் முகத்தில் வியர்வை .
” சரி . என் அண்ணன் சாப்ட்வேர் கம்பெனி தான் ஆரம்பிக்க போகிறான் . நான் உங்க கம்பெனியில் உள்ள டிபார்ட்மெண்ட் , டீம் பார்த்து தெரிஞ்சிக்கலாமா அவனுக்கு உதவியா இருக்கும் .” என்று கஷ்டப்பட்டு சிரித்துக் கொண்டே தன்மையாக கேட்டாள் தீப்ஷீ .
‘ச்ச இதுக்கு தான் சத்யா கேஸ்ஸை விசாரிக்குற மாதிரி வந்து இருக்கா போல . ஒன்னுமில்லாத விஷயத்திற்கு நான் பயந்தது மட்டுமில்லாமல், அவனையும் பயமுறுத்தி விட்டேனே.’ என்று நினைத்த பரந்தாமன் அவளிடம் ,
” இட்ஸ் மை பிளஷர் . வாங்க நானே உங்களுக்கு ஆஃபிஸை சுற்றி காண்பித்து எக்ஸ்ப்ளைன் பண்றேன் . உங்க அண்ணனை கூட ஒரு நாள் வர சொல்லுங்க நான் எனக்கு தெரிந்ததை சொல்கிறேன். ” என்றார் .
” தேங்க்ஸ் .” என்று அனைத்து பல்லையும் காட்டி சிரித்தாள் தீப்ஷீ .
எல்லா இடத்தையும் காண்பித்த பரந்தாமன் கடைசியாக ரெக்ரூட்மெண்ட் டீமிடம் தீப்ஷீயை அழைத்து வந்தார் .
” மேடம் , இவங்க ரெக்ரூட்மெண்ட் டீம் . எங்க கம்பெனியில் ஆன் கேம்பஸ் இல்லை. வெறும் ஆஃப் கேம்பஸ் தான் . அதனால் இந்த டீமில் ஐந்து பேர் மட்டும் சேர்த்திருக்கிறேன். ” என்றார் .
அனைவரையும் நன்றாக பார்த்துக் கொண்டாள் தீப்ஷீ .
பின் வெளியே வந்தவள் , ” நிறைய தகவல் தந்து இருக்கீங்க ரொம்ப நன்றி . அண்ணனை அனுப்பி வைக்கிறேன் . பாய் .” என்று இரு பொருள் பட பேசியவள் வெளியே வந்தாள் .
வண்டியை எடுத்த தீப்ஷீ ஸ்டேஷன் சென்றாள் .
தன் அறைக்கு சென்ற தீப்ஷீ அங்கிருந்த சந்தியாவை எதிர்பார்க்கவில்லை .
அவளை அணைத்துக் கொண்டாள் தீப்ஷீ .
” எங்க டி போன ? எவ்வளவு நேரம் உனக்காக காத்திருக்கேன் தெரியுமா ? ” என்றுக் கேட்டாள் சந்தியா .
” முக்கியமான வேலையா வெளியே போனேன் . நானே வீக்கென்ட் உன்ன பார்க்க வரலாம் என்றிருந்தேன். ”
” மேடம் பிசியாச்சே அதான் நானே வந்தேன் . இப்போ எனக்கு நேரமாகுது . ஈவினிங் ஃப்ரியா சந்திக்கலாமா ? ”
” ஃப்ரி தான். நானே உனக்கு ஃபோன் பண்றேன். ” என்றாள் தீப்ஷீ .
” சரி டி பாய் .” என்றவள் வேகமாக வெளியே சென்றாள் .
சந்தியா போட்டிருந்த காலர் ஜாக்கெட் மற்றும் புடவையை பார்த்த தீப்ஷீ , ‘ இவள் எங்கு வேலை செய்கிறாள் ? ‘ என்று யோசிக்க வைத்தது .
இலக்கியாவிற்கு போன் செய்த தீப்ஷீ , ” உங்க வீடியோ எல்லாம் டெலிட் ஆகிடுச்சி. ” என்றாள் .
“ரொம்ப தேங்க்ஸ் மேடம். ” என்றாள் இலக்கியா .
” உன் வேலை முடிஞ்சதுனு இந்த விஷயத்துலிருந்து போறீயா இல்லை உன்ன போல இனி யாரும் பாதிக்ககூடாதுனு எனக்கு உதவி பண்றீயா ” என்றுக் கேட்டாள் தீப்ஷீ .
” நான் என்ன செய்யணும்னு சொல்லுங்க மேடம். ” என்றாள் இலக்கியா .
அவளின் தைரியம் தீப்ஷீக்கு பிடித்திருந்தது .
” டெக் பார்க் கம்பெனியில் உனக்கு தெரிஞ்ச நம்பிக்கையான நபர் யாராவது இருக்காங்களா ? ” என்றுக் கேட்டாள் தீப்ஷீ .
” என் தோழி வசந்தி அங்கு தான் வேலை செய்றா மேடம் . நானும் அவளும் சேர்ந்து தான் அந்த கம்பெனியில் வேலைக்கு அப்ளை செய்தோம் . அவள் செலக்ட்டாகி அங்கு வேலை செய்துக் கொண்டிருக்கா. ” என்றாள் இலக்கியா .
” அவளை நம்பலாமா ? ”
” ரொம்ப நேர்மையான பெண்ணு மேடம் . ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவள் . அவளிடம் ஃபோன் கூட இல்லை . நான் தான் அவளின் மெயிலை பார்த்து அவள் செலக்ட்டானதையே சொன்னேன். ” என்றாள் இலக்கியா .
” அப்போ சரி , ஈவினிங் நான் சொல்லும் இடத்திற்கு, ஃபோன் பண்ணும் போது அவளை கூட்டிட்டு வா. ” என்றாள் தீப்ஷீ .
” ஓகே மேடம். ” என்றாள் இலக்கியா .
அடுத்து ஶ்ரீதருக்கு ஃபோன் செய்தாள் தீப்ஷீ .
” ஹலோ ஶ்ரீதர் வீடியோ அனுப்பிய நம்பர் பற்றி ஏதாவது தகவல் கிடைச்சதா? ” என்றுக் கேட்டாள் தீப்ஷீ .
” இல்ல தீப்ஷீ , பக்காவா பிளான் செஞ்சி ஒரு முறை மட்டுமே சிம் பயன்படுத்தி வீடியோ அனுப்பிட்டு சிம்மை அழிச்சிடுறாங்க . பின் வேறு சிம் பயன்படுத்துறாங்க . அந்த சிம் எல்லாம் பொய்யான ஆதாரங்களை வைத்து வாங்கியது தான். ” என்றான் .
” சரி நான் பார்த்துக் கொள்கிறேன் . இது வரை கண்டுபிடிச்சதை எல்லாம் எனக்கு ரிப்போர்ட்டா ரெடி பண்ணி அனுப்பிவிடு. ” என்றாள் தீப்ஷீ .
” ஓகே . பாய். ” என்றான் ஶ்ரீதர் .
பேப்பரை எடுத்தாள் தீப்ஷீ , டெக் பார்க் , எம்.டி , ரெக்ரூட்மெண்ட் டீம் என்று எழுதினாள் .
” இந்த எம்.டி குற்றவாளி தான் , கண்டிப்பாக அவனுக்கு துணையா அந்த ரெக்ரூட்மெண்ட் டீமில் ஒருவன் இருப்பான் . தப்பு செய்வது பலருக்கு தெரிந்தால் அவனுக்கு சிக்கல் என்பதால் மற்றவர்களுக்கு தெரியாமல் தான் இந்த வேலையை செய்துக் கொண்டிருப்பான். ” என்றாள் தீப்ஷீ தனியாக .
எக்ஸ் என்று எழுதினாள் .
” ஆபீஸிக்கு வெளியே ஒருவனா அல்லது ஒரு நெட்வொர்க்கானு தெரியல்லை . அவங்க மூலம் தான் மற்ற எல்லா வேலையும் நடக்குது . ஆனால் , அவர்களை பற்றி ஒரு சின்ன க்ளு கூட கிடைக்கலை . அந்த பொறுக்கி மட்டும் மாட்டினால் இந்த கேஸ் முடிஞ்சது. ” என்றாள் தீப்ஷீ .
*****
டெக் பார்க்கில் ,
” ஹலோ. ” என்றார் பரந்தாமன் .
” என்ன நடந்தது ?”
” பயப்படும் படி இல்லை . சும்மா சத்யாவை பற்றி கேட்பதுப் போல் வந்து அவங்க அண்ணனுக்காக வந்திருக்கா . அதுவும் ஒரு பெண்ணால் நம்மை என்ன செஞ்சிட முடியும்?” என்றார் பரந்தாமன் தலைக்கனமாக .
” ஓகே.” என்றவன் போனை வைத்தான் .
தீப்ஷீயும் இதைத் தான் எதிர்பார்த்தாள் , எதிரிகளின் அலட்சியம் அவர்களை கண்டுபிடிக்க எளிதாக இருக்கும் என்று நினைத்துதான் முக்கியமான கேஸை பற்றி ஒன்னும் கேட்காமல் வந்தாள் .
*****
பெசன்ட் நகர் பீச் ,
” எங்க வேலை செய்ற சந்தியா?” என்றுக் கேட்டாள் தீப்ஷீ .
” எங்க நகை கடையில் தான் சேல்ஸ் உமனாக வேலை பாக்குறேன்.” என்றாள் சந்தியா .
” ஏன் ?”
” எடுத்ததும் உயர்ந்த பதவிக்கு போனா . அதனின் மதிப்பு புரியாதே அதான் அடி மட்டத்திலிருந்து ஆரம்பிக்கிறேன். ”
” உன்ன நினைச்சா எனக்கு பெருமையா இருக்கு . நீ இவ்வளவு தைரியமா மீண்டு வருவேன்னு நினைக்கல்லை . ”
” ஓ ! சத்யாவின் நினைவிலிருந்தா . ஆம் நான் வெளியே வந்துட்டேன் . ஆனால், நீ இன்னும் வரவில்லை போல். நான் இன்று இப்படி இருக்க யார் காரணும்னு தெரியுமா ? தேவ் அண்ணா தான். ”
அவளை கேள்வியாக பார்த்தாள் தீப்ஷீ .
” எப்படினு பார்க்கிறீயா ? நீயே கவலையில் இருக்கும்போது உன்னால எப்படி என்ன சமாதானம் பண்ண முடியும்? முதல்ல உன்ன சரி பண்ண போலீஸ் ட்ரெய்னிங் அனுப்பினார் தேவ் அண்ணா . அப்புறம் தினமும் எங்க வீட்டிக்கு வந்து என்னோடு பேசுவார் . என்ன கொஞ்சம் கொஞ்சமா இயல்பாக்கினார் . என்ன வீட்டில சும்மா இருக்கக்கூடாதுனு சொல்லி என்னோட ஆம்பிஷன் என்னனு கேட்டார் ? நான் அப்பா பிஸ்னஸை டேக் ஓவர் பண்ண போகிறேனு சொன்னேன் . என்ன ஜூவல்லரி டிசைன் கோர்ஸ் படிக்க சொன்னார் . பின் அவர் தான் என்ன அடிப்படை ஊழியர் வேலையிலிருந்து கற்றுக்கொண்டு எம்.டி பதவியை ஏற்றுக் கொள்ள சொன்னார். ” என்றாள் சந்தியா.
” என்னால நம்பவே முடியல்லை? ” என்றாள் தீப்ஷீ .
” நீங்க ஐ.பி.எஸ் ஆச்சே எல்லாத்துக்கும் சந்தேகம் தான் வரும். ” என்றாள் சந்தியா .
” இவ்வளவு செய்த உன் அண்ணன் . இன்னும் ஏன் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க முயற்சி செய்யலை?” என்றுக் கேட்டாள் தீப்ஷீ .
” உனக்கு புரியாத காதல் . எங்க அண்ணனுக்கு புரியுது . என் காதல் வலி புரிஞ்சு என் கிட்ட இன்னும் அதைப் பற்றி பேசலை. ” என்றாள் சந்தியா .
” ஓ! ”
” சத்யா அன்னைக்கு உன்ன கட்டாயப்படுத்தி தேவ் அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வெச்சது எனக்கு பிடிக்கவில்லை . கஷ்டமா இருந்தது . ஆனா , சத்யா அன்னிக்கே சொன்னான் நான் அம்முவுக்கு நல்லது தான் செய்வேனு . தேவ் அண்ணன் உண்மையிலே கிரேட் . நான் யார் அவருக்கு ? என்ன இரண்டு முறை பார்த்து இருப்பாரா ? நான் சத்யா இறப்பில் கஷ்டப்படுவேனு எனக்கு உதவி செய்தார் . உனக்கு தான் இன்னும் அவரின் அருமை புரியலை. ” என்றாள் சந்தியா .
பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள் தீப்ஷீ .
நேரத்தை பார்த்த சந்தியா , ” ஐயோ ! இவ்வளவு நேரம் ஆகிடுச்சா ? வா போலாம் தீப்ஷீ.” என்றாள் .
” எனக்கு வேலை இருக்கு சந்தியா . நீ பார்த்து வீட்டிக்கு போ. ”
” சரி நீயும் சீக்கிரமா வீட்டுக்கு போ .” என்ற சந்தியா சென்றுவிட .
போனை எடுத்து இலக்கியாவையும் அவள் தோழியையும் வர சொன்னவள்.
கடல் அலையை பார்த்துக் கொண்டிருந்தாள்.
தேவ்வின் நினைவே அவள் மனதில்.
” மேடம்? ” என்றாள் இலக்கியா .
தீப்ஷீ திரும்பவில்லை .
மீண்டும் சத்தமாக , ” மேடம் ?” என்றாள் இலக்கியா .
அவர்களை பார்த்த தீப்ஷீ உட்காருங்க என்பது போல் கை காண்பித்தாள் .
கேஸை பற்றி அவள் அறிந்ததை முதலில் சொல்லியவள் பின் , ” எல்லா தப்பும் டெக் பார்க்கில் தான் நடக்குது . சோ வசந்தி நீங்க ஆபீஸில் எம்.டியை யார் அடிக்கடி பார்க்க போறாங்க ? முக்கியமா ரெக்ரூட்மெண்ட் டீமில் இருந்து யார் அடிக்கடி எம்.டியை பார்க்க போறாங்கனு பார்க்கணும் ? அவர்களைப் பற்றி உன்னால் முடிஞ்ச தகவலை கண்டுபிடிச்சு சொல்லணும் . நீ அவங்களை வேவு பார்ப்பது அவங்களுக்கு தெரியாம பார்த்துக்கணும் . உன்னால முடியுமா ? ”
” கண்டிப்பா நான் பார்த்து சொல்றேன் மேடம். ” என்றாள் வசந்தி .
” கவனமா இரு . உனக்கு தெரிஞ்சதை எல்லாம் எனக்கு ஃபோனில் சொல்லிடு . அவங்களுக்கு உன்மேல் சந்தேகம் வருவது போல் தெரிஞ்சா அடுத்த நிமிஷமே அங்கிருந்து நீ வெளியே வந்துடு . இந்தா உனக்கு புது ஃபோன் . இந்த நம்பரை யாருக்கும் சொல்லாதே . என் கிட்டையும், இலக்கியா கிட்டையும் பேச மட்டும் பயன்படுத்து . இதில் உள்ள ஜிபிஎஸ் ஆன்னில் தான் இருக்கும். நீ எங்கே இருக்கேனு தகவல் எனக்கு உடனே வந்துடும் . அதனால ஃபோனை எப்பவும் உன்னோடு வெச்சுக்கோ. ”
” ஓகே மேடம். ” என்றாள் வசந்தி.
” சரி நீங்க இரண்டு பேரும் கிளம்புங்க . ஜாக்கிரதையா இருங்க. ” என்றாள் தீப்ஷீ .
தீப்ஷீ மஃப்டியில் இருந்ததால் நேராக பரந்தாமன் வீடு உள்ள ஏரியாவிற்கு சென்றாள் .

