Loading

அழகியே என் மழலை நீ 37

 

 

 

இனியனின் முன் அமர்ந்து இருந்தான் செழியன்.அவனின் முகம் வேதனையிலும் வலியிலும் சுருங்கி இருந்தது.

 

 

இனியன் செழியனின் மேல் பயங்கர கோவத்தில் இருந்தான்.”நீ இப்போ என்ன காரியம் பண்ணி வச்சிருக்கன்னு தெரியுதா செழியன் உனக்கு. இதுக்காகவா நாலு வருசமா அவளோ கஷ்டப்பட்டு படிச்சு, ட்ரைனிங் எடுத்து வேலைக்கு சேர்ந்த நீ. இது உன்னோட எவ்ளோ வருஷ கனவுன்னு எனக்கு தெரியும். இந்த முடிவு வேணாம் செழியா. உனக்கு ஒரு பிரண்டா சொல்றேன். கண்டிப்பா நீ வேலையை விட்டுட்டன்னு வை வாழ்க்கை புல்லா உனக்கு அதுக்கு ஒரு தாங்க முடியாத வலியை குடுக்கும். நீ இந்த வேலையை எவ்ளோ நேசிக்கிறேன்னு எனக்கு தெரியும். கடைசியா இன்னொரு முறை யோசி. இது ரொம்ப தப்பானவ் முடிவு.

 

 

நீ இப்படியெல்லாம் யோசிக்கறவன் இல்லை. யாரோ உன்னை கம்பெல் பண்ணிருக்காங்க. கண்டிப்பா வேதாவ இருக்க சான்ஸ் இல்லை. உன்ன விட உன்னை பத்தி அவளுக்கு தெரியும். இத அவ செஞ்சிருக்க மாட்டா. யாரோ ஒருத்தங்களுக்காக நீ வேலையை விடறது நியாயம் இல்லை” என்று கூறினான்.

 

 

செழியனோ, “யாரோ ஒருத்தர் சொன்னாங்கனு நான் இத செய்யல இனியா. முடியல என்னால. ரெண்டு முறையும் என்னோட இந்த வேலையால தான் என் மனைவிக்கு ஆபத்து வந்துருக்கு. ஆனால் என்னால எதுவும் செய்ய முடியல. அப்படி இருக்கும் போது நான்லாம் இந்த போஸ்ட்க்கு தகுதியே இல்லாதவன். நான் டிசைட் பண்ணிட்டேன். என் வேதாவ என்கிட்ட இருந்து பிரிக்கறது எதா இருந்தாலும் எனக்கு அது வேணாம். அவளுக்கு துரோகம் பண்ணாங்கன்ற ஒரே காரணத்துக்காக என்அ ம்மா அங்க சாக கிடக்கிறாங்கன்னு தெரிஞ்சும் நான் போய் பார்க்கவே இல்லை. அவளை விட இந்த வேலை எனக்கு முக்கியம் இல்லை இனியா. இன்னொரு முறை என்னால அவளுக்கு ஆபத்து வந்தா நிஜமா அதை தாங்கிக்கற சக்தி எனக்கு இல்லை. என்னோட வலி யாருக்கு புரியுதோ இல்லையோ உனக்கு கண்டிப்பா புரியும். இத பத்தி இனிமேல் பேச வேணாம். அப்பறம் தேவ் அவன் லீவுல இருக்கான். ஊர்ல இருந்து வந்ததும் நானே அவன்கிட்ட சொல்லிக்கிறேன்.நீ எதுவும் அவன் கிட்ட சொல்ல வேண்டாம்.” என்றவன் அவன் ராஜினாமா கடிதத்தை கையெழுத்திட்டு அவனிடம் கொடுத்தவன், அவன் உட்காரும் அந்த நாற்காலியை ஒரு முறை தடவியவனின் கண்களில் நீர் கோர்த்து கொள்ள, அதை இனியனுக்கு தெரியாமல் மறைக்க முயன்றவன் வெளியே சென்று விட்டான்.

 

 

அவன் வந்ததில் இருந்து அவனை மட்டுமே பார்த்து கொண்டிருந்தவனுக்கு அவனின் வலி புரியாமல் போகுமா? கடிதத்தை மடித்து தன்டேபிள் ட்ராவில் வைத்து பூட்டியவன் அவன் வேலையை பார்க்க சென்று விட்டான்” செழியன் வேதாவை பார்க்க மருத்துவமனைக்கு வந்தவன் வரும் வழியெல்லாம் மீனாட்சிக்கும் சவிதாவுக்கும் நடந்த ஆக்சிடெண்ட் தற்செயலா? அல்லது கொலை முயற்சியா? என்று யோசித்து கொண்டே வந்தான்.அதை அவனால் விபத்தாக எடுத்து கொள்ள முடிய வில்லை. இதில் ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது என்று அவனுக்கு தெளிவாய் புரிந்தது.

 

 

அந்த லாரி டிரைவரிடம் விசாரணை மேற் கொண்டதில் திடீரென தலை சுத்தியதால் தெரியாமல் இடித்து விட்டேன் என்று வாக்கு மூலம் கொடுத்திருந்தான் தெளிவாய். விபத்து நடந்த இரண்டு நாட்களுக்குள் பெரும் தொகை கொடுத்து ஜாமீனில் வெளியே வந்த தகவலும் வந்து சேர்ந்திருந்தது.அது அவனின் சந்தேகத்தை மேலும் அதிக படுத்தியது.

 

 

செழியனுக்கு அது உறுத்திக் கொண்டே இருந்தது. வேற யாராலும் மீண்டும் ஆபத்து நேருமோ என்று நெருடலாக இருந்தது. மருத்துவமனைக்கு வந்தவன் வேதாவின் அறைக்கு வர, அவள் உறங்கி கொண்டிருக்க, அவளின் மொத்த குடும்பமும் அங்கு தான் இருந்தது.

 

செழியன் வேதாவின் அருகில் செல்ல தாமரையோ, “என்ன செழியா காலைல கண் முழிச்சு ரெண்டு வார்த்தை பேசுனா, பேசிட்டு இருக்கும் போதே தூங்கிட்டா. இன்னும் தூங்கிட்டுதான் இருக்கா. சாப்பிடவும் இல்லை. காலைல கூட எதுவும் கொடுக்கல. ட்ரிப்ஸ் தான் இறங்கிட்டே இருக்கு. ஏதாவது பெரிய பிரச்சனையா இருக்குமோன்னு பயமா இருக்கு. நீ டாக்டர்கிட்ட கேட்டு பாரேன்” என்று அழுது கொண்டே பேசினார்.

 

 

அவனோ, “அது நிறைய மயக்க மருந்து குடுத்துட்டே இருந்ததால அவ இன்னும் நார்மலாக கொஞ்ச நாளாகும் அத்தை. சாப்பாடு எப்ப குடுக்கறதுனு அவங்களே சொல்வாங்க. அதுக்கு பதிலா தான் ட்ரிப்ஸ் போடறாங்க” என்று கூறினான்.

 

 

தாமரையோ, “நாசமா போறவங்க. பட்டாம் பூச்சி மாதிரி இருந்தவளை இப்படி பண்ணிட்டாங்களே. கிடைச்சதெல்லாம் பத்தாது. அந்த கடவுள் இத விட பெரிய தண்டனையை குடுக்கணும். என்னால தாங்க முடியலையே, என் பொண்ண இந்த நிலமைல பாக்குறதுக்கு” என்று அழ, அவர் பேச பேச அவனுக்கும் தொண்டை அடைத்து போனது.

 

 

அதிரனோ, “அம்மா போதும் ப்ளீஸ். பண்ணதுக்கு அவங்க அனுபவிச்சுட்டாங்க. இனிமேல் அதை பத்தி பேசாதீங்க. அவங்களை பத்தி இனிமேல் எந்த டாபிக்கும் இங்க இருக்கக் கூடாது. இப்போ நம்ம மித்துவ பத்தி மட்டும் யோசிங்க, அவளை எப்படி சரி பண்றது, எப்படி பாத்துக்குறதுன்னு, அப்புறம் உங்களுக்கு இன்னும் ரெண்டு பேர பிள்ளைங்க வர போறாங்க அதெல்லாம் யோசிக்க மாட்டிங்களா எப்போ பாத்தாலும் பொலம்பிட்டே இருக்கறது” என்று அதட்டினான்.

 

 

ஆதி எதுவுமே பேசாமல் அமர்ந்திருந்தான்.செழியன், “அதிரன் நீங்க எல்லாரும் வீட்டுக்கு போய் குளிச்சிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க. நேத்துல இருந்து இங்கதான் இருக்கீங்க. போய்ட்டு நாளைக்கு வாங்க” என்று கூறி அவர்களை அனுப்ப பார்க்க,

 

தாமரையோ, “இல்லை நான் போ கமாட்டேன் என் பொண்ண விட்டுட்டு, நான் இனி அவ கூட தான் இருப்பேன். உனக்கு போய் ரெஸ்ட் எடுக்கணும்னா நீ போ, இல்லை யாருக்கு போகணுமா அவங்க போகட்டும். நான் இந்த இடத்தை விட்டு அசைய மாட்டேன்” என்று அடம்பிடிக்க, அதிரனுக்கு செழியன் சொன்னதே சரியாகபட்டது. செழியனின் மனவேதனையும் புரிந்தது.

 

 

தாமரையை பார்த்தவன், “அம்மா நம்ம போகலாம். இப்போ அவ தூங்கிட்டு தான் இருக்கா. நாளைக்கு நீங்க அவளுக்கு புடிச்ச மாதிரி சமைச்சு எடுத்துட்டு வந்து அவ கூடயே இருந்து பாத்துக்கோங்கமா. இப்போ போகலாம். ரெண்டு நாளா நீங்க தூங்கவே இல்லை. கொஞ்சநேரம் குளிச்சு ரெஸ்ட் எடுங்க. அப்பாவும் ரொம்ப சோர்வா இருக்கார். புரிஞ்சுக்கோங்க நம்மள விட செழியன் நல்லா பாத்துப்பான். கிளம்பலாம்” என்று அழுத்தமாக கூற, வேறு வழி இல்லாமல் அவனுடன் செழியனை தவிர அனைவரும் கிளம்பி விட்டனர்.

 

 

மறு நொடியே உறங்கி கொண்டிருந்தவளின் கைகளில் முகம் புதைத்தவன் வாய்விட்டு கதறிவிட்டான். தொலைத்து விட்டோம் என்று நினைத்த பொக்கிஷம் அல்லவா. மெது மெதுவாய் கண் விழித்தவள் கண்டது என்னவோ அவளவனின் அழுகையை தான்.

 

 

முதல் முறை அவன் அழுது பார்க்கிறாள். அவளின் கை அசைவில் நிமிர்ந்தவன் வேகமாக கண்களை துடைத்துக்கொண்டு எழுந்து அவள் படுத்திருந்த படுக்கையில் அமர்ந்தவன், அவளை தன்மேல் படுத்தவாறு அணைத்துக் கொண்டவன், “போதும் தங்கமே. என்னால உனக்கு இனிமேல் எந்த கஷ்டமும் வராது. வரவும் விடமாட்டேன். நீ சீக்கிரமா சரியாகி என்கூட நம்ம வீட்டுக்கு வந்துரு. நான் உன்னை ரொம்ப ரொம்ப மிஸ் பண்றேன்” என்று கூறினான்.

 

 

அவளோ, “ஐ லவ் யூ சோ மச். உங்களால எனக்கு எப்போவும் எதுவும் தப்பா நடக்காது மாமா. அன்னைக்கு அந்த சவிதா நீங்க வெளியே வெயிட் பண்றதா சொன்னா. நானும் உங்ககிட்ட இந்த விஷயத்தை சொல்லி சந்தோஷப் படணும்னு நினச்சுட்டே வந்துட்டு இருந்தேன். ஒரு நிமிஷம் நான் யோசிக்கவே இல்லை. அதனால தான் இப்படி ஆகிடுச்சு. அவங்கள என்ன பண்ணீங்க” என்று கேட்க, அவளின் அருகில் இன்னும் நகர்ந்தவனோ, “நான் எதுவும் செய்யல. அவங்களுக்கு கிடைக்க வேண்டிய தண்டனை கிடைச்சுருச்சு” என்று கூற, புரியாமல் பார்த்தவளிடம் அவன் அனைத்தையும் கூற, அதில் திகைத்துப் போனாள்.

 

 

“அச்சோ பாவம்ல” என்று கூறியவளை செழியன் முறைத்து பார்த்தவாறே எழுந்து நிற்க, அப்போது உள்ளே நுழைந்த தேவ், அகரன், அரவிந்தன் அவளின் பேச்சை கேட்டு அதிர்ந்து நின்றனர். வேதாவின் பார்வை நிலைக் குத்தி ஓரிடத்தில் வெறிக்க, அங்கே மீனாட்சியும் அறிவழகனும் நின்றிருந்தனர் அவர்கள் பேசிய அனைத்தையும் கேட்டு.

 

 

செழியன் கோபமாக பேச வாயெடுக்க, அதற்குள், “வாம்மா பர தேவதை. மூணு நாளுல பட்ட கஷ்டம் எல்லாம் மறந்து போயிருச்சா உனக்கு. பாவமாம்ல பாவம். இந்த நாலு மாசமும் நாங்க துடிச்ச துடிப்பு எங்களுக்கு தான் தெரியும். இதோ உன் பக்கத்துல ஒருத்தன் நிக்குறான் பாரு. அவன் தூங்கி, சாப்பிட்டு எத்தனை நாளாச்சு தெரியுமா உனக்கு. எவ்ளோ வேதனை பட்டான் தெரியுமா? அப்போ தான் வந்து படுத்திருப்போம். திரும்பி பார்த்தால் இருக்கமாட்டான். ஏதாச்சும் க்ளு கிடைக்குமா உன்னை கண்டு பிடிச்சிர மாட்டோமான்னு நடுராத்திரி எல்லாம் பைத்தியக்காரன் மாதிரி அந்த ரவுடி வீட்டு வாசலையே சுத்தி சுத்தி வந்தான் தெரியுமா?

 

 

உனக்கென்ன நாலுமாசம் மயக்கத்துல இருந்த. வயித்துல குழந்தைகளை வச்சுட்டு எப்படி கஷ்டப்படுறியோன்னு துடிச்சது நாங்கதானே. நீ சொல்லுவ அவங்க பாவம்னு” என்று ஒரே மூச்சில் தேவ் கத்தி முடிக்க, அவளோ கண்ணீருடன் செழியனையே பார்த்து கொண்டு இருந்தாள்.

 

 

அவளின் கண்களில் கண்ணீரை பார்த்தவனோ, “டேய் சும்மாருக்கமாட்ட நீ, இப்போ எதுக்கு அவளை அழுக வைக்குற” என்று அவனை திட்டிவிட்டு அவளை அணைத்துக் கொண்டான்.

 

 

அரவிந்தனோ, “எதுக்காக அவனை தடுக்குற செழியா நீ? அவன் பேசட்டும். எங்களைவிட உன்னோட வலியும் வேதனையையும் கூடவே இருந்து பார்த்தவன் அப்போவாச்சும் இவளுக்கு புரியுதான்னு பார்க்கலாம்” என்றவன் அவளிடம் திரும்பி, “வேதாமா நல்லா கேட்டுக்கோ நாம ஒருத்தங்களை பார்த்து பாவப்படணும்னா அதுக்குகூட அவங்களுக்கு தகுதி வேணும்டா, அதை புரிஞ்சுக்கோ” என்று கூறினான்.

 

 

அகரனோ, “வேதா சத்தியமா உன் இடத்துல வேற யாராச்சும் இருந்தா இப்படி சொல்லிருப்பாங்களா எனக்கு தெரியல. ஆனா அவங்களுக்காக நீ வேதனை பட கொஞ்சம் கூட அவங்களுக்கு தகுதி இல்லை. எங்களால செழியன் மாதிரி அவங்களை டக்குனு தூக்கிபோட முடியல. அதுக்காக நீ எங்களை மன்னிச்சிருடா” என்றான்.

 

 

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்