Loading

யான் நீயே 40

இரு வாரங்கள் சென்றிருந்தது…

வீடே கலையிழந்து… அனைவரும் பெயருக்கு நடமாடிக் கொண்டிருந்தனர்.

தன்னால் தான் இந்த கவலையோ என நினைத்த லிங்கம், முயன்று தன்னை உற்சாகமாகக் காட்டிக்கொண்டு வலம் வரத் தொடங்கியிருந்தான்.

“எம் பேரனையே வேணாமின்னு சொல்லிட்டாளா அவள்” என்று மீனாட்சி பொருமி தீர்த்தார்.

“எம் மவராசனுக்காக ஆயிரம் பொண்ணு வரிசைகட்டி நிக்க… அவகிட்ட போயி ஆளாளுக்கு கெஞ்சிட்டு நிக்கணுமோ?” என்று அபியையும் வறுத்தெடுத்துவிட்டார்.

பாண்டியன் உட்பட.. வீரனை தவிர்த்து… அங்கையிடம் அனைவரும் கேட்டு பார்த்துவிட்டனர். அங்கையின் பதில் மௌனம் மட்டுமே.

“நீயி ஒருமுறை பேசிப்பாரு அப்பு” என்று மனம் தாங்காது அபி மூத்த மகனிடம் சொல்லியதற்குத்தான் மீனாட்சி வெகுண்டுவிட்டார்.

“பெத்த அப்பனா நான் சொல்ற பையனை அவ கட்டிக்கிட்டுதேன் ஆவணும்” என்று மருதன் ஒருபக்கம் பிடிவாதம் பிடிக்க… அங்கையிடம் பேசச்சென்ற பிரேமிடம்,

“அப்படி கைய கால கட்டி வச்சு கல்யாணம் நடந்துச்சுன்னாக்கா நான் செத்துதேன் போவேன்” என்று அங்கை சொன்னதில் பிரேம் மட்டுமல்ல மொத்த குடும்பமுமே ஆடிப்போனது.

விடயமறிந்த லிங்கம்…

“எப்போ என்னைய கட்டிக்கிட்டா செத்துப்போவேன்னு சொன்னாளோ… இனிமேட்டிக்கு அவ எனக்கு வேணாம். நான் வேணாமின்னு சொல்றதை கேட்காமல் திரும்பத் திரும்ப அவகிட்ட நீங்க கெஞ்சிட்டு நிக்கிறது என்னை அசிங்கப்படுத்தற மாறி இருக்கு” என்று வெடித்து சிதறினான் லிங்கம்.

வீரனால் கூட அன்று அவனை கட்டுப்படுத்த முடியவில்லை. கோபம் கொண்டு வெடித்தவன், சிறுப்பிள்ளையாய் வீரனின் கைகளில் புதைந்து கதறி துடித்திட்டான். அவனின் ஓலம் கேட்டு மொத்த குடும்பமும் அன்று நொறுங்கி நின்றது. லிங்கத்தின் கண்ணீரை பார்த்து மருதன் அங்கையை தன் மகளென்பதையும் மறந்து வீட்டிற்குள்ளேயே ஒதுக்கி வைத்திட்டார்.

யாரும் தன்னுடன் பேசிட விரும்பவில்லை என்பதை அறிந்து அங்கை தன்னையே தனிமைப் படுத்திக்கொண்டாள்.

அன்று அங்கை பாண்டியனின் வீட்டிற்கு வந்திருந்தாள்.

அவளை யாரும் வாவென்றும் அழைக்கவில்லை. என்னவென்றும் கேட்கவில்லை.

பாண்டியன் தான் வாம்மா என்றிருந்தார்.

மீனாள் கூட அங்கையிடம் ஏதும் காரணமிருக்குமென்று பலமுறை பேசி பார்த்திருக்க, அங்கை வெளிப்படையாகவே மீனாளை அலட்சியம் செய்திருந்தாள். அதனால் மீனாளும் தங்கையிடம் தள்ளி நின்றுகொண்டாள்.

“வீரா மாமா?”

பாண்டியனின் முகம் பார்க்காது தயங்கித்தான் கேட்டாள்.

“சீமை சித்தராங்கி என்னத்துக்கு இப்போ இங்குட்டு வந்திருக்காலாம்? இன்னும் யாரு உசுரை எடுக்கணுமாம்?” மீனாட்சி பாக்கு இடித்துக்கொண்டு எங்கோ பார்த்துக்கொண்டு வார்த்தையால் அங்கையை இடிக்க…

அங்கையின் கண்ணில் கண்ணீர் நிரம்பியதி.

“செத்த கம்மின்னு இருத்தா” என்று பாண்டியன் மீனாட்சியை அடக்கினார்.

“மேலத்தேன் இருக்கியான். நீ போம்மா” என்று பாண்டியன் அனுப்பி வைத்தார். மீனாளும், அபியும் அங்கு தான் சமையலுக்கு காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தனர். ஆனால் அவளை கண்டுகொள்ளவே இல்லை.

அவர்களை ஒருமுறை பார்த்த அங்கை பெருமூச்சோடு மாடியேறிட, பாதி படிகளில் லிங்கம் இறங்கிக் கொண்டிருந்தான்.

மேலேறிக் கொண்டிருந்த அங்கை விழி உயர்த்தி அவனைப் பார்க்க, அவனோ அவளை கிஞ்சித்திக்கும் கண்டுகொள்ளவில்லை. அவன் நிற்காது இறங்கிட, அவள் தான் சுவற்றோடு ஒண்டி அவனுக்கு வழிவிட்டாள். அப்போதும் அவன் பார்வை அவள்மீது படியவில்லை.

கன்னம் வழிந்த கண்ணீரோடு அவனின் முதுகை வெறித்தவள், அவனின் பிம்பம் மறைந்ததும் துடைத்துக்கொண்டு வீரனின் அறைக்குமுன் சென்று கதவினை தட்டினாள்.

“திறந்துதான் இருக்கு” என்ற வீரன், மடிக்கணினியில் ஆலையின் வரவுகளை குறித்துக் கொண்டிருந்தான்.

அங்கை உள்ளே நுழைந்ததும்…

“வாடே சின்னக்குட்டி” என்று அழைத்து, “ரெண்டு நிமிசம்” என்றான்.

“ம்ம்ம்” என்றவள் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாள். அறை முழுக்க யூபிஎஸ்சி தேர்வுக்கு வேண்டிய புத்தகங்கள் தான் அங்குமிங்குமாக பரந்து கிடந்தன.

மீனாளின் ஆசைக்காக அவளையே கொடுமை படுத்தும் வீரனை நினைத்து சிரிப்பு வந்தது அங்கைக்கு.

“சின்னக்குட்டி சிரிக்கலாம் செய்றாங்க… என்னவாம்?” என்ற வீரன் மடிக்கணிணியை மூடி வைத்துவிட்டு அவள் முன் சென்று அமர்ந்தான்

“நீங்களும் என்கிட்ட பேசமாட்டிங்களோன்னு நினைச்சேன்.”

“ஏனாம்?”

அங்கை என்ன சொல்வதென்று பார்க்க…

“யாரோட தனிப்பட்ட விருப்பத்துக்கும் மத்தவங்க கருத்து சொல்லிட முடியாது” என்ற வீரன், “என்ன சொல்லணும்?” எனக் கேட்டான்.

“கேட்கணும்” என்ற அங்கை,

“நான் நம்ம ஹோட்டலுக்கு வரட்டுமா?” எனக் கேட்டாள்.

“மேல படிக்க விருப்பமில்லையா?”

“விருப்பங்கிறதை விட, இப்போ முடியுமின்னு தோணல மாமா” என்றாள்.

“ஹோ” என்ற வீரன், “நீயெதுக்காக ஹோட்டல் மேனேஜ்மெண்ட் எடுத்து படிச்சன்னு தெரியுமா அங்கை?” எனக் கேட்டான்.

உடனே அமைதியாகிப்போனாள்.

“இட்ஸ் ஓகே” என்றவன், “இப்போ ஹோட்டல்ஸ் எல்லாம் முழுக்க முழுக்க லிங்கு கண்ட்ரோல் தான். நீ அவன்கிட்டதேன் கேட்கணும்” என்றான்.

“வேணுமின்னு பண்றீங்களா மாமா?”

“இதனால எனக்கென்ன லாபம் அங்கை? உன் முடிவு இதுதான்னு தெரிஞ்சப்பொறவு நான் உன்கிட்ட ஏன்னு ஒருவார்த்தை கேட்டிருப்பேனா?” என வினவினான்.

“சாரி” என்றவள், “நீங்க கேட்டு சொல்லுங்க” என்றாள்.

“அது முடியாது சின்னக்குட்டி. லிங்கு எப்படி ஆலைவ விசயத்தில் தலையிடறது இல்லையோ… அப்படி நானும் ஹோட்டலுவ விசயத்தில் தலையிடாம இருக்கணும் தானே?” என்று அவளிடமே கேள்வியை ஒப்படைத்தான்.

“அப்போ நான் பிரேம் அண்ணாகிட்ட கேட்கவா?”

“எதுக்கு இப்படி காம்ப்ளிகேட் பண்ணிக்கிற நீயி. பிரேம் பிராஞ் ஹோட்டல்ஸ் தான் லீட் பன்றான். மெயின் சைனிங் அத்தாரட்டி முழுக்க லிங்குதேன் ஹேண்டில் பன்றான். ஜாப் வேகன்சி ஃபில் பன்றதும் அவந்தேன்” என்ற வீரனுக்கு அங்கையை ஹோட்டலில் பணியில் அமர்த்துவது அத்தனை சிரமத்திற்குள்ளானது இல்லை.

சொல்லப்போனால் லிங்குவைவிட வீரனுக்கு அங்கு ஆற்றல் அதிகம்.

இருவரையும் எப்படி சேர்த்து வைப்பது என்று குழம்பிக்கொண்டிருந்த வீரனுக்கு அங்கையே வந்து அடிபோட, அவன் சாலை அமைத்துவிட்டான்.

“வேற வழியில்லையா?”

“ம்ஹூம்… எதுக்கு இவ்ளோ தயங்குற நீயி? லிங்கம் உன்னை எதுவும் கேட்க மாட்டான். சொல்லப்போனால் உன்கிட்ட பேசக்கூட மாட்டியான். அவன் மொத்தமா மறக்க நினைக்கிறான்” என்று அங்கையை வேண்டுமென்றே வதைத்தான்.

“ம்ம்ம்” என்ற அங்கை எழுந்து சென்றிட,

“ஹோட்டல்ல நான் டிராப் பண்ணட்டுமா?” எனக் கேட்டான்.

“வேணாம். நான் போயிக்கிறேன்” என்ற அங்கை சென்றுவிட,

“என்ன பிளான் மாமா உன்னோடது?” என்று வந்தாள் மீனாள்.

“முக்கியமான வேலையிருக்கு வந்து சொல்றேன் தங்கம்” என்ற வீரன், “லிங்கு போயாச்சா?” எனக் கேட்டான்.

“அப்போவே” என்றவளிடம் “படி” என்று சொல்லிவிட்டு வெளியேறினான்.

வேகமாக வண்டியை உயிர்ப்பித்து அங்கையை பிடித்திடும் வேகத்தில் வீரன் செல்ல அவளை கண்ணுக்கெட்டும் தூரம் வரை காணவில்லை.

“வூட்டுக்கு போயிட்டாளோ? இல்லையே வண்டியை சாலைப்பக்கம்தேன் விட்டாள்” என்று வீரன் பார்வையை கூர்மையாக்கியபடி செல்ல, கருப்பர் கோவிலுக்கு கீழிறங்கும் பாதையில் அங்கையின் வண்டி நின்றிருந்தது.

‘இந்நேரத்தில் இங்குட்டு எதுக்கு போயிருக்காள்’ என்ற யோசனையோடு வீரன் உள்ளே செல்ல…

இமைகள் மூடி சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தவளின் கண்கள் மழையென கண்ணீரை பொழிந்துக் கொண்டிருந்தது.

“கொஞ்சநாளுல எல்லாம் சரியாப்போவும் தாயீ… வெசனப்படாத” என்று பூசாரி அங்கையின் நெற்றியில் திருநீறு பூசிட…

“ஏதும் பரிகாரமில்லையா சாமி?” என்று கண்ணீரோடு கேட்டாள்.

“இருந்திருந்தாக்கா அப்போவே கருப்பன் சொல்லியிருப்பானேம்மா!” என்றார் பூசாரி.

“என் உசுரே எம் மாமாதேன். என்னால முடியல சாமி. மாமாவுக்காச்சும் ஏதும் வழி இருக்கணும். கொஞ்சம் கருப்பர்கிட்ட கேட்டு சொல்லுங்க சாமி” என்று கைக்கூப்பி மன்றாடினாள்.

“இதுல பன்றதுக்கு ஒன்னுமில்லை தாயீ” என்ற பூசாரி, “வேணுமின்னா நீயி ரெண்டாந்தாரமா உம் மாமனை கட்டிக்கிடலாம்” என்றார்.

“எப்படி சாமி இன்னொரு பொண்ணு வாழ்க்கையை கெடுத்து நான் எம் மாமாவை கட்டிக்கிடனுமா? அதுக்கு அப்படி கட்டிக்கிற பொண்ணோடவே எம் மாமா சந்தோஷமா வாழட்டுமின்னு வுட்டுக்குடுத்துப்புடுவேன்” என்றாள்.

இருவரும் பேசிக்கொள்வது நன்கு கேட்குமிடத்தில் மறைந்து நின்ற வீரனுக்கு, இந்த பூசாரியிடம் தான் ஏதோ இருக்கென்று யூகித்துவிட்டான்.

‘அங்கையே லிங்கத்தை மறுக்குமளவிற்கு அப்படியென்ன சொல்லியிருப்பாரு?’ என்று சிந்தித்த வீரன் அங்கை செல்வதற்காகக் காத்திருக்க… வேறொரு குடும்பம் வெளியூரிலிருந்து கருப்பருக்கு படையல் போட வந்திருக்க, வீரனால் பூசாரியிடம் பேச முடியாது போனது.

அங்கை வீடு நோக்கி செல்வதை பார்த்த வீரன் யோசனையோடு ஆலைக்கு சென்றுவிட்டான்.

வேலை முடித்து வீரன் இரவு வீட்டிற்கு வருவதற்கு முன்பு, பூசாரியின் வீட்டிற்கு சென்று வந்தான்.

அவன் வந்த நேரம் அனைவரும் உணவுக்கூடத்தில் அமர்ந்திருந்தனர்.

வரும்போதே மருதனுக்கு அழைத்து குடும்பத்தோடு வீட்டிற்கு வருமாறு அழைத்திருந்தான்.

வீரன் வந்ததும், வேகமாக அவன் முன் சென்ற மீனாள்…

“மாமா உன்கிட்ட பேசணும். வா” என்று கையை பிடித்து இழுத்தாள்.

அந்நேரம் மருதனும் அனைவருடனும் வந்திருந்தார். அங்கை உட்பட.

“பொறவு பேசிக்கலாம் தங்கம்” என்று வீரன் மீனாளின் கையை விடுவிக்க…

“அச்சோ மாமா இது ரொம்ப முக்கியம். நீயி வா.” அவள் அவனை விடுவதாக இல்லை.

“எல்லார் முன்னுக்கவும் என்ன தங்கம் அடம் இது?” என்ற வீரன் மற்றவர்களை சங்கடமாக பார்க்க…

“ரொம்ப அவசரம் மாமா” என்றாள்.

“அப்படி அவசரமின்னாக்கா நான் வர முன்னுக்கவே போன் போட்டிருக்க வேண்டியதுதேனே?” என்றான்.

“இப்போ நீயி கேப்பியா மாட்டியா மாமா?”

“அதைவிட முக்கியமான விசயம் பேசணுமாட்டிக்கு. நீயி நகரு” என்ற வீரன் அவளை முறைத்திட,

“போடா” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் விதமாக வாயசைத்து தள்ளி சென்று நின்றுகொண்டாள்.

“என்னப்பு ஏதும் உங்களுக்குள்ள சடவா?” அபி தான் சற்று முன்னர் அவர்களின் நிலை கண்டு கேட்டிருந்தார்.

“ம்க்கும் அவளோட அண்ணே சண்டை போட்டுட்டாலும். நீயி வேறம்மா” என்ற நாச்சி,

“என்னத்துக்குண்ணே எல்லாரையும் கூட்டியிருக்க?” எனக் கேட்டாள்.

“விசயம் என்னன்னு டக்குன்னு சொல்லிப்புடு அமிழ்தா. எப்போ என்னவருமோன்னு திக்குங்குது” என்றார் மருதன்.

லிங்கத்தை பார்த்த வீரன், கண்களை அழுந்த மூடித் திறந்தான்.

என் மேல் நம்பிக்கை வை எனும் வீரனின் குறிப்பை லிங்கம் உணர்ந்து அவன் என்ன சொல்லப்போகிறான் என்று கவனித்தான்.

அங்கையை நேருக்கு நேர் பார்த்த வீரன்…

“என் குடும்பமா இருந்தாக்கா, என் மேல இருக்கும் அன்பு உண்மைன்னா, நான் சொல்றதுக்கு கட்டுப்படணும்” என்றான்.

அங்கையின் தொண்டைக்குழி ஏறி இறங்கியது. வீரனின் பார்வை அவளை சில்லிட்டது.

“என்னய்யா?” மீனாட்சி கேட்டிட,

“நல்ல விசயம்தேன் அப்பத்தா” என்றான் வீரன்.

“வர வெள்ளிக்கிழமை லிங்கத்துக்கு கல்யாணம். மீனாட்சி அம்மன் கோவிலில் பதிஞ்சுட்டேன். குடும்பமெல்லாம் நமக்கு உறவுதேன். பொண்ணு யாருங்கிறது அன்னைக்கு காலையில கோயிலுல தெரியும்” என்றான்.

“எய்யா?”

அபி ஏதோ சொல்ல வர,

“யாருக்காகவோ என் தம்பி வாழ்க்கையை என்னால் பலிகொடுக்க முடியாது?” வீரன் சொல்லியதில் அனைவரும் அவனுக்கு கட்டுப்பட்டனர்.

‘நான் யாரோவா?’ அங்கை மனதால் வதை கொண்டாள்.

லிங்கம் மறுப்பானென்று அவனை பார்த்தாள். அவனோ தன் அண்ணனின் சொல் எனக்கு வேதம் எனும் நிலையில் அமைதியாக நின்றிருந்தான்.

அக்கணம், தான் தான் அவனை வேண்டாமென்று உயிரோடு கொன்றுவிட்டோமென்பதை உணர்ந்து வலி கொண்டாள். அவனின் வலியை அந்நொடி அவள் உணர்வதாய்.

“நடுவுல ரெண்டு நா’தேன் இருக்கு. ஆக வேண்டியதை பாருங்க” என்று சொல்லிவிட்டு வீரன் மேலேறிட, அவனை முறைத்துக்கொண்டே மீனாள் பின் சென்றாள்.

“இப்போ எதுக்கு நீயி உர்ருன்னு இருக்க?”

வீரனின் பின்னால் வந்த மீனாள் அரை மணி நேரமாகியும் அவனுடன் பேசாமல் இருந்தாள்.

வீரனும் செயல்படுத்தவிருக்கும் திட்டம் சரியாக நடைபெற வேண்டுமென அதிலே உழன்றிருக்க… அவனால் அவன் சொல்லிய யாரோ என்ற வார்த்தைக்கு சொந்தக்காரரின் குரூரமான இந்த செயலை ஏற்கவே முடியவில்லை. மனதால் இப்படியும் ஆட்களா என்று நொந்து கொண்டிருந்தவன், மீனாளை தாமதமாகத்தான் கவனித்து என்னவென்று கேட்டான்.

“ஒன்னுமில்லையே” என்று சொல்லிய பின்பும், “இப்போ இந்த அவசர முடிவு வேணாமாட்டிக்கு மாமா” என்றாள்.

“ஏன்?”

“அங்கை, லிங்கு மாமாவை வேணாமின்னு சொன்னதுக்கு காரணம் எனக்குத் தெரிஞ்சிப்போச்சு” என்றாள்.

“அப்படியென்ன காரணம்?” அவன் தான் சில மணி நேரத்திற்கு முன்பு அறிந்திருந்தானே! இருந்தபோதும் இவள் என்ன தெரிந்து வைத்திருக்கிறாள் என அறிய வினவினான்.

ஆனால் மீனாள் வீரனுக்கு முன்பு, அவன் அறிந்து கொண்டதை தெரிந்து கொண்டிருந்தாள்.

அவளால் இதனை ஜீரணிக்கவே முடியவில்லை.

ஏன்? எதற்கு? என்று அதையே நம்ப முடியாது சிந்தித்துக் கொண்டிருந்தவள், வீரனுக்கு அழைத்து சொல்ல வேண்டுமென்பதை மறந்து அறைக்குள்ளே முடங்கி இருந்தாள்.

விடயம் அறிந்தது முதல் அங்கையை கன்னம் கன்னமாக அறைய வேண்டுமென்ற கோபம் மீனாளுக்கு.

அப்போதுதான் அபி உணவு உண்ண அழைத்திருக்க கீழே வந்தவள், வீரன் வீட்டிற்குள் வரவும் சுற்றம் மறந்து அவனிடம் சொல்லிட முயன்றாள்.

ஆனால் வீரனுக்கு தன் ஏற்பாட்டை அனைவரிடமும் சொல்லிடும் முனைப்பில் அவளை விலக்கி நிறுத்தினான்.

வீரன் கேட்டதும்…

“செவ்வாய்க்கிழமை விளக்கு வச்சிட்டு வான்னு அம்மத்தா கருப்பர் கோவிலுக்கு போயிட்டு வர சொன்னாய்ங்க” என்று ஆரம்பித்த மீனாள் அங்கு தான் கண்டது, கேட்டது என எல்லாம் கூறினாள்.

வீரனிடம் அதிர்ச்சியோ சிறு பிரதிபலிப்போ எதுவுமில்லை.

“அப்போ உங்களுக்கு முன்னவே தெரியுமா?” வியப்போடு கேட்டாள்.

“ம்ம்ம்… வீட்டுக்கு வர கொஞ்சம் முன்னுக்க” என்ற வீரன், “வீட்டில் யாருக்கிட்டவும் சொல்லலையா?” எனக் கேட்டான்.

“அதிர்ச்சியில் எனக்கு உன்கிட்டவே சொல்லணும் தோணல மாமா. அங்கையைத்தான் அடிக்கணும் ஆத்திரமா வந்துச்சு” என்றாள். கோபம் சற்றும் குறையாது.

“அவள் இடத்திலிருந்து ரோசிச்சுப்பாரு தங்கம்” என்ற வீரன், “இப்படியொரு காரணம் இருந்திருந்தா நீயி என்னை கட்டியிருப்பியா?” எனக் கேட்டான்.

மெல்ல… மாட்டேன் என்று மீனாளின் தலை இருபக்கமும் ஆடியது.

“அதான் இப்போ உண்மை தெரிஞ்சிப்போச்சுதே மாமா. பொறவு எதுக்கு இந்த முடிவு? ரெண்டு பேரையும் கஷ்டப்படுத்தும்” என்றாள்.

மீனாளிடம் மட்டும் தான் நினைத்திருப்பதைக் கூறினான்.

“சூப்பர் மாமா” என்றவள் உற்சாகத்தில் அவனின் கன்னத்தில் பட்டென்று முத்தம் வைத்து விலக, மெத்தையில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தவன், அவளின் செயலில் மின்னலை உணர்ந்தவனாக மீனாளின் இடையோடு கையிட்டு அணைத்து இழுத்து தன் மடியில் அமர்த்தியிருந்தான்.

புடவை விலகிய இடையில் வீரனின் கை அழுத்தமாக பதிந்திருந்தது. இருவரின் முகமும் மிக அருகில், மூக்கோடு மூக்கு உரசி, இருவரின் அதரமும் துடிக்கும் நெருக்கத்தில் அவனின் மூச்சுக்காற்று சூடாய் அவளின் முகம் தீண்டிட, அவளுள் உணர்வு பிரவாகம்.

“மாமா…” அவளின் குரல் காற்றாய் அவனது தொண்டைக்குள் விழுந்தது.

வீரனின் ஒரு கை மீனாளின் பின்னந்தலையில் பதிந்து அழுத்த, மற்றொரு கை அவளின் இடையில் ஊர்ந்தது.

மீனாளின் இரு கை விரல்களும் வீரனின் பிடரி கேசத்தில் அலைப்பாய்ந்தது.

தன்னவளின் இதழுக்குள் மூழ்கியிருந்தவனின் அதரம் பிரிந்து அவளின் கன்னத்தில் ஊர்வலம் செல்ல, மீனாளின் கண்கள் மெல்ல மூடிக்கொண்டது.

“மாமா…”

“இந்த வாய் தானே கீழே இருக்கும்போது போடான்னு சொல்லுச்சு” என்றவன் அழுத்தமாக முத்தம் வைத்து, பற்களால் உதட்டை மெல்லக் கடித்து விடுத்தான்.

மீனாளின் தேகம் சிலிர்த்து நடுங்கியது.

அவளது இரு கரம் முன் வந்து அவனின் மார்புச் சட்டையை இறுக்கி பிடித்தது.

முகம் செம்மை படர, நெற்றியில் வியர்வை துளியாய் அரும்பியது.

“அதுவா நடக்கும்” என்றிருந்தவனுக்குள், அவளளித்த ஒற்றை முத்தத்தில் இன்று அவள் வேண்டுமாக இருந்திட தன்னை அவளுள் ஒப்புவிக்க சித்தம் வாய்க்கப்பெற்றான்.

அவளின் இதயம் அதி வேகமாக துடித்தது. அவனின் கையில் உருகி குழைந்தாள்.

“மாமா… என்னவோ” என்றவள் அதற்கு மேல் தாளாது வீரனின் தோளில் முகம் புதைத்து, அவனுள் தன்னை மொத்தமாக அழுத்தியிருந்தாள்.

“பேச்சு மட்டும் தாண்டி உனக்கு” என்றவன், அவளின் வெற்றுத்தொளில் முத்தம் வைக்க…

“மாமா” என்று கரைந்து முகத்தை உயர்த்திட, அவளின் கழுத்துத் தொண்டையில் தன் மீசை குறுகுறுக்க முத்தம் வைத்தான்.

தன்னைப்போல் மீனாளின் கைகள் வீரனின் சட்டைக்கு விடுதலை கொடுத்திருக்க, அவளின் விரல் நகங்கள் அவனது வெற்று புஜங்களில் அழுந்த புதைந்தன.

“தங்கம்…” இப்போது வீரனின் குரல் கிறக்கமாக அவளின் செவி தீண்டிட, அவனை மேலும் ஒண்டியவளாக தன் இதழால் தன்னவனின் முகமெங்கும் முத்த ஊர்வலம் நடத்தினாள்.

வீரனின் கை தன்னைப்போல் மின்விளக்கினை அணைத்திட… சாளரம் வழி ஊடுருவிய நிலவு ஒளியில்… இருவரும் ஒருவரின் முகம் பார்த்து தவித்தனர்.

இரு ஜோடி விழிகளில் காதல் கரைந்து கரை கண்டது.

“தங்கம் உருகுதுடி…”

செவி நுழைந்த தன்னவனின் மயக்கும் குரலில் கட்டுண்டவளாக மொத்தமாய் தன்னை ஒப்புவித்து அவனுள் அடங்கினாள்.

வஸ்திரங்கள் நழுவி விலகியிருக்க…

ஈருடல் ஓருயிராய் கலந்த மணித்துளி மின்னலாய் இதயத்தில் இதம் பரப்பி, ஆத்மாவைத் தீண்டி காதலில் கசிந்துருகியது.

உச்சத்தின் பிடியிலும் மென்மையை மட்டுமே காட்டிய தன் மாமனின் காதலில் மீண்டும் மீண்டும் தொலைந்துப்போனவள். தனக்குள் தன்னவனைத் தேடித்தேடி சோர்ந்து போனாள்.

“தங்கம்…”

நெற்றியில் பூத்திருந்த வியர்வை முத்துக்களை தன் இதழ் கொண்டு ஸ்பரிசித்தவன் அழுத்தமாக முத்தம் வைத்து, தன்னவளை தன் மார்போடு இழுத்து அணைத்திருந்தான்.

ஆதி(முதல்) மட்டுமல்ல என் அந்தமும் நீயென்று அவன் உணர்த்தியிருக்க… தன்னவனை உடலாலும் விலக முடியாது தேகச்சூட்டில் இன்பத்தின் சுவைக்கூடிட அணைப்பை மேலும் மேலும் கூட்டியவளாக அவனது மார்பிலேயே தலை வைத்து உறங்கியிருந்தாள்.

வீரனுக்கோ உறக்கம் எங்கோ சென்றிருக்க… தனது தங்கப்பொண்ணு காட்டிய தேடலின் வேகத்தில் மந்தகாசமாகப் பூத்த புன்னகையை இதழில் நிரந்தரமாக தேக்கி வைத்தவன் தன் மேல் படுத்திருந்தவளை மெத்தையில் சுழற்றித் தள்ளினான். அவளின் பின்னங்கழுத்தில் முத்தம் வைத்து குறுகுறுப்பை உண்டாக்க… மெல்ல சிணுங்கி உறக்கம் கலைந்தவள் மீண்டும் உறங்கிட வெகு நேராமாகியது.

மீண்டும் மீண்டும் தன்னுள் மூழ்கியவன் காட்டிய காதலில் துவண்டு, தளர்ந்து அவனுள்ளேயே புத்துணர்வு பெற்றாள்.

‘இவனா திருமணம் முடிந்தும் விலகியிருந்தான்?’ மனதில் எழுந்த கேள்வியினை அவனிடம் கேட்கவும் செய்தாள்.

“உனக்காக.” ஒரே வார்த்தையில் தன் உலகம் மொத்தமும் நீயே! உனக்காக எதுவும் செய்வேனென்று உணர்த்தியிருந்தான்.

அவனது தோளில் தலை வைத்து படுத்திருந்தவள், எம்பி அவனது கன்னத்தில் முத்தம் வைத்திட… அங்கே மீண்டும் ஒரு காதல் ஆலாபனை அரங்கேறியது.

முன் அதிகாலையில் உறக்கத்தை தழுவியிருந்த போதும், விடியலிலே எழுந்துவிட்ட மீனாள் குளித்து, வீரனுக்கு பிடித்த நிறத்தில் புடவை அணிந்து, ஈரக்கூந்தலை முன் பக்கம் வழிய விட்டவளாக கண்ணாடி முன்னின்று உறங்கிக்கொண்டிருந்த வீரனை கண்ணாடி ஊடே பார்த்தவளாக நெற்றியில் குங்குமம் வைத்தாள்.

மெத்தைக்கு அருகில் சென்றவள்,

“மாமா” என்று அவனின் தோள் தட்டிட…

“கொஞ்ச நேரம் தங்கம்” என்றவன் நீண்டிருந்த அவளின் கையை பிடித்து மார்பிற்குள் கட்டிக்கொண்டவனாக உறக்கத்தை தொடர…

“எந்திரி மாமா” என்று கையினை உருவிய வேகத்தில் இழுத்து தன் மேல் போட்டிருந்தான்.

“அச்சோ மாமா. எந்திரி” என்று சட்டென எழுந்து நின்றாள்.

“என்னடி?” என்று எழுந்து அமர்ந்தவன், “இப்படி மயக்குற மாறி வந்து முன்னுக்க நின்னாக்கா நானென்னடி பண்ணுவேன்” என்று அவளை இழுக்க முயல… அவளோ இரண்டடி தள்ளி நின்றாள்.

“குளிச்சிட்டு வா மாமா!”

சன்னல் வழி வெளியில் பார்த்தான்.

இன்னும் இருள் பிரிந்திருக்கவில்லை.

“நைட்டு உன்னை நான் படுத்தி வச்சதுக்கு நீயி பத்து நா ஆனாலும் எழும்ப மாட்டேன்னு நெனச்சாக்கா… விடிய முன்னவே வாசமா வந்து நிக்குற?” என்று கேட்ட போதும், படுக்கையிலிருந்து எழுந்து இறங்கி நின்றான்.

“இன்னும் எம்புட்டு படுத்தினாலும் தாங்குவோம்… நீயி வெரசா வா” என்றாள்.

“சரி ராவுல காதுல நான் உறங்கினப்புறோம் என்னமோ சொன்னியே என்னது?” எனக் கேட்டான்.

“நான் ஒன்னும் சொல்லலையே!”

“பொய் சொல்லாத தங்கம். நீயி சொன்ன… தூக்கத்துல எனக்கு நெனவு இல்லை” என்றான்.

“நாந்தேன் உனக்கு முன்னமே தூங்கிட்டனே மாமா” என்றவள் “கெளம்புரியா இல்லையா?” எனக்கேட்டாள். கோபம் போல்.

“இந்நேரம் எங்கட்டுத்தா?”

“வா மாமா!” அவள் சிணுங்கிட, அவனோ அவளை நெருங்கிட, அவனது வெற்று மார்பில் சுட்டுவிரல் முட்டி தடுத்தவள், “கோவிலுக்கு போவணும் மாமா” என்றாள்.

“ஒத்த முத்தம் கூட ஆவாதாடி?” என்று கேட்டவன், அவளின் சிரிப்பில் “போடி” என்று சொல்லி குளியலறைக்குள் சென்றான்.

சிறிது நேரத்தில் வெளியில் வந்தவன்,
துண்டினை மட்டும் இடையில் கட்டியிருக்க… அவனை ஆச்சரியமாக பார்த்தாள் சன்னல் திண்டில் அமர்ந்து அவனுக்காகக் காத்திருந்த மீனாள்.

அவன் எப்போதும் அவள் முன் இப்படி வந்து நின்றதில்லை. நேற்றைய இரவுக்கு பின் அனைத்தும் அவனிடம் மாற்றம் பெற்றிருந்தது.

“இனி நீயி பார்க்க என்ன இருக்காம்? கண்ணை சுருக்கலாம்” என்று அவளை பாராது ஆடை மாற்றத் துவங்கினான்.

அவனது மார்பில் அவளின் பல் தடம். சன்னமாக நெஞ்சத்தை நீவி சிரித்துக் கொண்டான்.

சில நொடிகளில் விழிகள் விரிந்த அவளின் பார்வை ரசனையாக மாறியிருந்தது.

அவள் தான் சட்டை எடுத்து வைத்திருந்தாள்.

“புதுசு போல இருக்கு!”

“வேட்டி, சட்டையில நீயி அம்சமோ அம்சம் மாமா” என்றவள் அவனுக்கு பறக்கும் முத்தம் ஒன்றை அனுப்பி வைத்தாள்.

“புதுசாவா உடுக்கேன்?”

“எப்பவுந்தேன்” என்றவளின் ரசனை மட்டும் மாறவில்லை.

“கண்ணாலே முழுங்காதடி” என்று தயாராகி அவளருகில் வந்தவன், கன்னத்தை கிள்ளினான்.

அவளோ கிள்ளிய இடத்தை அவன் பக்கம் காண்பித்தாள். முத்தம் வைக்குமாறு.

“கோவிலுக்கு போவனும் சொன்ன?”

“முத்தமெல்லாம் குடுக்கலாம்!”

“உனக்கேத்தமாறி ரூல்ஸ் மாத்திப்பியாடி?” எனக் கேட்டவன் அவள் கேட்டதை கொடுத்த பின்னரே கீழே வந்தனர்.

மீனாட்சியும் அபியும் மட்டும் காலை நேர வேலையில் ஈடுபட்டிருந்தனர்.

இருவரும் வரும் தோற்றம் கண்களை நிறைக்க… விசயம் என்னவென்று தெரியவில்லை என்றாலும் பல நாட்களுக்குப் பின்னர் இருவரின் அகமும் சந்தோஷத்தால் நிறைந்தது.

“ராசு…”

“அப்பு…”

இருவரும் ஒரு சேர விளிக்க…

“கோவிலுக்கு போயிட்டு வர்றோம் அம்மத்தா” என்ற மீனாள், வீரனின் கை பிடித்து சாமி அறைக்குள் சென்றாள்.

ஏற்கனவே அபி பூக்கள் வைத்து அலங்காரம் செய்து வைத்திருக்க… விளக்கேற்றி வணங்கியவள், கண்மூடி கரம் குவித்து நின்றிருந்த வீரனின் நெற்றியில் குங்குமம் வைத்தவளாக,

“பிறந்தநாள் வாழ்த்துகள் மாமா. நீயி எப்பவும் சந்தோஷமா இருக்கணும்” என்றாள்.

விழிகள் திறந்தவனின் பார்வை முகம் முழுக்க மகிழ்ச்சியில் விகசித்து இருந்த தன்னவளின் பொலிவை உள்வாங்கியது. அவனது மனதில் கூடுதல் ஒளி.

இருவருக்கும் இந்த மகிழ்வு நிரந்தரமல்ல. பெரும் துன்பம் ஒன்று கை சேர காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 38

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
34
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

    1. Author

      எல்லாம் சீக்கிரம் கதை முடியத்தான் sis

  1. அங்கையின் ஒதுக்கத்தின் காரணம் அறிய விழைந்த இருக்கவருக்கும் ஒரே நேரத்தினில் பதில் கிடைத்திருக்கின்றது.

    “மொத்தமா மறக்க நினைக்கிறான்” எப்படி கேட்டாலும் அங்கையிடம் மட்டும் பதில் இல்லை.

    “யாரோட தனிப்பட்ட விருப்பத்துக்கும் நம்ப கருத்து சொல்ல முடியாது” 👌🏼

    அங்கை தனக்கு தானே போட்டுக்கொண்டுள்ள கோட்டை அழித்து விட்டு வெளி வர வீரன் ஏதோ செய்கின்றான்.

    அவளே வேண்டாம் என்று ஒதுக்கி வைத்து விட்டு இன்று லிங்கம் பதிலை எதிர்பார்த்து நிற்கின்றாள்.

    அவளுக்காகவும் வேண்டாம் அடுத்தவருக்கும் போய்விட வேண்டாம் என்றால் எப்படி?

    வீரன் மீனாள் ❤️ உனக்காக