Loading

அத்தியாயம் 37

முன்பே பாஸ்கரன் பிரபஞ்சனிடம் பேசி, ‘தேனிலவிற்கு பிறகு அவினாஷ் மற்றும் பிரகதியிடம் உண்மையைச் சொல்லலாமா?’ எனக் கேட்டிருந்தான். பிரபஞ்சனும் மகளின் இனிய நேரத்தைக் கலைக்க மனமற்று சரியென்றிருக்க, கிட்டத்தட்ட இரு மாதங்கள் கழித்து தேனிலவு முடித்து பெங்களூர் திரும்பியவர்களிடம், அனைவரும் இருக்கும்போது பிரபஞ்சன் வீட்டில் வைத்து உண்மை தெரிவிக்கப்பட்டது. 

அவினாஷின் கோபத்தைப் பற்றி தெரியுமாதலால் நேரே சந்தித்துவிடுவது என்று அர்ஜூன் வந்திருந்தான். சந்தனா மட்டும் வேலையின் பொருட்டு வந்திருக்கவில்லை.

விடயம் சொல்லப்பட்டதும் அவினாஷ் அக்னியைப் பார்த்து, “சஞ்சு?” என்ற கேள்வியுடன் அதிர்ந்து அழுதே விட்டான். 

எத்தனை தேடல்கள்! எத்தனை ஏமாற்றங்கள்! எத்தனை தவிப்புகள்! இவனுக்கே இப்படியென்றால் இவன் அத்தையும் மாமாவும் அனுபவித்த கொடுமைகள்தான் எத்தனை!

அவன் இயல்புக்கு திரும்பவே நேரம் பிடித்தது. பிரகதியின் நிலையும் அதுவேதான். அவளுக்கு அதிர்ச்சியில் பேச்சே எழவில்லை. வழக்கம்போல் அண்ணனைக் கட்டிக்கொண்டவள், சில நிமிடங்கள் வரை அவனை விடவேயில்லை.

அவினாஷ் அர்ஜூனிடம் எப்போது உண்மை தெரியும் என்று உலுக்க, தவறிழைத்த குழந்தையாய் ஒவ்வொன்றாக சொன்னான் அவன்.

“இவ்ளோ விஷயம் நடந்திருக்குது? எல்லாத்தையும் என்கிட்ட சொல்லாம செய்றளவுக்கு பெரிய‌ மனுஷனாகிட்டியாடா நீ?” அவனின் பெரும் கத்தலில் அந்த கூடமே நிசப்தமானது.

“ஸாரி அத்தான்… கல்யாணம்…”

“பேசாதே அர்ஜூன்! கல்யாணம் என்ன…”

அவன் மேலே எதுவும் பேசி பிரகதியின் மனம் காயப்படும் முன் இடையிட்டான் பாஸ்கரன். “அவி! நம்ம வீட்டு சுபகாரியம் நடக்கும்போது தேவையில்லாத குழப்பம் வேணாம்ன்னு நினைச்சிருக்கான். எல்லாத்துக்கும் நேரம்ன்னு ஒண்ணு இருக்குதுடா…”

“சரி, கல்யாணம் முடிஞ்சப்புறம் நீங்களாவது சொல்லிருக்கலாம்ல மாமா? இதோ நீங்க பேங்களூர் வந்து ஒரு மாசத்துக்கு மேல ஆகுது. எத்தனை வாட்டி கால் பண்ணேன்? சொல்றதுக்கென்ன உங்களுக்கு?” என்று மாமன்காரனையும் அதட்டினான். 

அவன் உயர்த்திய குரலை அடக்க நினைத்த சஞ்சய், அவன் தோள் மேல் கையிட்டு, “அங்கே உன் கூட இருந்துக்கிட்டு பிரகதி ஃபீல் பண்ணுவா’ன்னு நான்தான் சொல்ல வேணாம்ன்னு சொன்னேன்.” எனவும், பட்டென்று அவன் கையைத் தட்டிவிட்டு அவனிடமும் கோபத்தைக் காண்பித்தான் அவினாஷ்.

உண்மை தெரிந்தால் அவினாஷ் கல்யாணத்தை நிறுத்திவிடுவான் என்று அர்ஜூன் சொன்னது வெறும் மிரட்டலென நினைத்திருந்தவனுக்கு அது எத்தனை உண்மை என இப்போதுதான் முழுமையாக விளங்குகிறது.

அண்ணனுக்கும் தங்கைக்கும் கோபம் குன்றளவிற்கு வரும் போலும் என்று இவன் முழிக்க, “இப்போவே இவ்ளோ கத்தறியே? அப்போ சொல்லியிருந்தா என்ன பண்ணிருப்ப அவி?” என்ற அனு அவினாஷை அமைதியாகப் பார்க்க,

“அத்தை!” என்றவனின் குரல் அடங்கிவிட்டதை ஆச்சரியமாகப் பார்த்தனர் பிரபஞ்சன் குடும்பத்தினர்.

“நீ அத்தைக்காக யோசிக்கற மாதிரி, நாங்களும் உங்க சந்தோஷத்தைப் பத்தி நினைக்கமாட்டோமா?”

“ச்சு போங்க! சித்திப் பாட்டி வாயைக் கூட அடக்கி வச்சிருக்கீங்க போல! எல்லாருமா சேர்ந்து என்னை ஒதுக்கி வச்சு…” என்று முகம் திருப்ப,

“அவி கண்ணா… அத்தை உன்னை ஒதுக்க நினைப்பேனாடா? என் பசங்க சந்தோஷம் எனக்கு முக்கியமில்லையா? அப்டித்தானே பிரகதி வீட்லயும் அவளைப் பத்தி யோசிப்பாங்க? உங்க லைஃப்ல நடக்கற ஒவ்வொரு ஸ்பெஷல் மொமண்ட்லயும் எங்களுக்கு அக்கறை இருக்கக் கூடாதா?” என மென்மையாகக் கேட்டாள் அனு.

குழந்தையிடம் போலவே பேசும் அம்மாவைச் சின்ன சிரிப்புடன் பார்த்திருந்தவன் தலைத் திருப்பிக்கொண்டான். அண்ணனும் தங்கையும் ‘எங்கத்தை, எங்கத்தை’ என்று சொல்லிச் சொல்லி மாய்ந்து போவதன் மர்மம் இதுதான் போலும்.

அபிராமி அனுவை வாத்ஸல்யமாகப் பார்த்தார். அவர் அனுபவத்தில் நாத்தனாரின் குழந்தைகளைத் தன் குழந்தைகளாக நினைக்கும் பெண்கள் வெகு குறைவு!  

கொஞ்சமாக மலையிறங்கி இருந்த கணவனின் கரத்தைப் பிரகதி வந்து பிடிக்க, “உனக்கு உங்கண்ணன் சொல்லலைன்னு கோவம் வரலயா ஷராரா?” எனக் கேட்டான்.

“அவனுக்கு எப்போ என்கிட்ட சொல்லணும்னு தெரியும் அஷ்ஷூ!” அவள் வழமைப் போல் அண்ணனை விட்டுக்கொடுக்காமல் பேச, அதிசயமாக அவளின் அண்ணன் பாசத்தில் இவனுக்கு பொறாமைக்கு பதில் சிரிப்பு வந்தது. நன்றாகவே புன்னகைத்தான்.

பிரபஞ்சன் குடும்பத்தினருக்கு அப்போதுதான் மூச்சே வந்தது. முதல்முறை விருந்திற்கு வந்திருக்கும் அவர்கள் வீட்டு மாப்பிள்ளை கோபம் கொண்டு இரைந்ததில் சிறிது அரண்டிருந்தனர். அபிராமி கூட அவினாஷிடம் மரியாதை நிமித்தம் அளந்துதான் பேசினார்.

“நன்றி தெய்வமே!” என்ற அர்ஜூன் தன்னைக் காப்பாற்றியதற்காக பிரகதியின் கையைப் பிடித்து கண்ணில் ஒற்றிக்கொள்ள, 

அவன் கழுத்தில் கைப்போட்டு இறுக்கிய அவினாஷ், “வர வர ஓவர் ஸ்மார்ட் ஆகிட்டு வர்றடா நீ!” எனச் சஞ்சுவைக் கண்டுபிடித்ததற்காக பாராட்ட,

“எல்லாம் உங்க ப்ளெஸிங்ஸ் அத்தான்!” என அவன் மேலும் பவ்யமாக, அதன்பின் சூழ்நிலை இலகுவானது.

அன்றிலிருந்து அக்னிக்கான அவினாஷின், ‘மச்சான்’ என்ற அழைப்பு, சஞ்சுவிற்கான ‘டேய் மச்சானாக’ மாறிப்போனது.

அவினாஷ் தம்பதியர் ஒரு வாரம் கழித்து சென்னைப் புறப்பட்டனர். பிரபஞ்சன் வெளியே வாகனத்தைத் தயார் செய்து கொண்டிருக்க, உடமைகள் அனைத்தையும் சரிபார்த்து எடுத்து வைத்திருந்த பிரகதி ஹாலில் பாட்டியிடமும் அம்மாவிடமும் பிரியாவிடை பெற்றுக்கொண்டிருந்தாள். 

சஞ்சுவும் அவினாஷூம் அறையிலிருந்து பேசியவாறு வந்தனர். “என்னவோ உன் தங்கச்சி இனி வாழ்க்கைல பெங்களூர் மண்ணையே மிதிக்கமாட்டோம்ங்கற மாதிரி குடங்குடமா அழுதுட்டிருக்கா!” என அவினாஷ் அலுத்துக்கொள்ள,

“எங்களைப் பிரிஞ்சு இருந்ததே இல்லடா…” என்றவனுக்கும் தங்கையின் பிரிவு பாரமேற்றியிருந்தது.

இவர்கள் சரியாக ஹாலை சமீபிக்க, பிரகதி நிரஞ்சனாவிடம் பேசிக்கொண்டிருந்தது கேட்டது. “அந்த ஆன்ட்டி ரொம்ப அன்பா பழகறாங்க. நம்ம அக்னியை நம்மக்கிட்ட இருந்து பிரிச்சிட மாட்டாங்களாம்மா?”

கேட்ட மாத்திரத்தில் தன் கையை அழுத்தி நிறுத்திய சஞ்சுவைப் பட்டென்று உதறிவிட்டு, மனைவியின் முன்னே போய் கொஞ்சமும் இளக்கமற்று கம்பீரக் குரலில் இரைந்தான் அவினாஷ். “எங்கத்தையைப் பத்தி தெரியாம பேசிட்டிருக்கே பிரகதி! அத்தை சஞ்சுவை யார்க்கிட்ட இருந்தும் பிரிக்க நினைச்சதில்லை. இவ்ளோ சீக்கிரத்துல என்னால உங்கண்ணனை எங்க சஞ்சுவா ஏத்துக்க முடியறதே அதுக்கு சாட்சி!”

கணவனிடம் இதுவரை கண்டிராத ஆத்திரத்தில் அவள் மிரள,

அதைக் கண்ட அக்னிக்கும் கோபம் வந்தது. “அவினாஷ்! அவக்கிட்ட இப்டி பேசினா நான் பார்த்துட்டு சும்மா இருக்கமாட்டேண்டா!”

“அக்னி!” என அபிராமியும் நிரஞ்சனாவும் ஒரு சேர பதறினார்கள்.

எங்கே மாப்பிள்ளை, மச்சான் சண்டை வந்துவிடுமோ என்றஞ்சிய நிரஞ்சனா வேகமாக சொன்னாள். “அது அவளோட பயம்தான் மாப்பிள்ளை! நாம சொன்னா புரிஞ்சுக்குவா! இன்ஃபாக்ட் ஆரம்பத்துல எனக்குமே இந்த பயமும் பொஸஸிவ்னெஸூம் இருக்கத்தான் செஞ்சது. ஆனா இவன் விஷயத்துல அனு எல்லாத்தையும் எனக்காக விட்டுக்கொடுக்கறா! அவ பிள்ளைன்னு செல்ஃபிஷ்ஷா இருக்காம என் மனசையும் யோசிக்கற உங்கத்தையை நானும் ஹர்ட் பண்ணிட மாட்டேன் மாப்பிள்ளை.” 

அபிராமி, “ஆமா தம்பி! இவன் விஷயத்துல அனுவும் நிரஞ்சனாவைத் தான் முழுசா நம்புறா! உங்க மாமாவே கூட அனுவைப் பார்த்துக்கச் சொல்லி இவக்கிட்ட தான் சொல்லிருக்கார்.” என, அவர்கள் எங்களைத் தான் நம்புகிறார்கள் என்று மறைமுகமாகச் சொன்னார்.

அது பாஸ்கரனின் தந்திரங்களில் ஒன்று! நிரஞ்சனாவின் பொறுமையை, சகிப்புத்தன்மையை ஏறக்குறைய அவதானித்திருந்த பாஸ்கரன் பெண்களுக்கிடையே பிரிவினை வந்து விடாதபடி, அவளிடம் அனுவின் மனநிலைக் குறித்து ஆதியோடு அந்தமாக, அவள் எப்போது, எம்மாதிரி உணர்வுகளை வெளிப்படுத்துவாளென்றும், கூடுமானவரைப் பழங்கதைகளை அவள் மறப்பது நல்லது என்றும் சொல்லி, தான் இல்லாதபோது அவளைப் பார்த்துக் கொள்ளுமாறு உதவி போல் கேட்டிருந்தான்.

கணவனும் மனைவியும் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையில் நிரஞ்சனாவுக்கும் பெருமை! தவிர, மகன் மீதான ஆளுமையை அவள் அனுவிற்காக சிறிது தளர்த்தவும் கூடும். இவ்விதமாக பாஸ்கரனின் தந்திரம் நன்றாகவே வேலை செய்தது.

அவர்கள் சொன்னதைக் கேட்ட அவினாஷ் மனைவியை முறைத்தபடி, “அவங்களே தெளிவா இருக்காங்க. நீ எதையாவது சொல்லி யார்‌ மனசையும் கலைச்சுவிடாதே!” என்றதில் அவளுக்கு அழுகை வந்துவிட்டது. 

முன்பு கல்லூரியில் உயிருக்கு ஆபத்தான நிலையிருந்த ஒருவனுக்கு இவள் செய்யாத உதவியைச் சந்தனா, இவனிடம் சொல்லி இவன் தன்னைத் தவறாக நினைத்துவிடுவானோ என்றெல்லாம் நினைத்து மனம் சிணுங்கியவள்தானே? இப்போது உண்மையிலேயே அவன் தன்னைத் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதாக பட அழுகை வந்துவிட்டது.

அவளைப் புரிந்த அண்ணனாக அவினாஷை நெருங்கிய அக்னி மிரட்டும் தோரணையில், “அம்மாதான் சொன்னா புரிஞ்சுக்குவா’ன்னு சொல்றாங்கதானே? அப்புறம் ஏன் இன்னும் அவளை அழ வைக்கற?” என அவன் நெஞ்சில் கை வைக்க,

கொஞ்சமும் அசராமல் கையைத் தட்டிவிட்டான் அவனின் மாப்பிள்ளை. “அவளுக்கு மட்டுமில்ல; உனக்கும்தான் சொல்றேன். முதல்ல உங்கம்மாவைப் பத்தி முழுசா புரிஞ்சுக்கோ! அவங்க உங்களை நம்பற மாதிரி நீங்களும் அவங்களை நம்பணும் இல்லையா? இவங்க ரிலேஷன்ஷிப் உடையறதுக்கு அவநம்பிக்கைன்ற சின்னக் கீறல் போதும் சஞ்சு! அப்டி மட்டும் ஏதாவது ஆச்சுன்னா… எங்கத்தை தாங்கமாட்டாங்கடா… பிடுங்கி எறிஞ்ச அனிச்சம் பூ மாதிரி செத்துடுவாங்க!” ஆத்திரத்துடன் சொல்ல ஆரம்பித்தவன் ஆதங்கத்துடன் முடித்தான்.

                 **********

“சாப்பிட்டியா செல்லம்? கிருஷ்ணாவை இன்னிக்கு பிஸிபேளாபாத் செய்ய சொன்னேனே… செஞ்சு தந்தாளா?” என்ற அனு காணொளி அழைப்பில் தன் இளைய மகனுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

“கர்நாடகா போனதும் தமிழ் மண்ணை மறந்துட்டு, கன்னட ஃபுட்டா செய்ய சொல்றியாம்மா நீ?”

“அது நம்ம ஊர் சாம்பார் சாதம் தாண்டா… சரி, நீ எப்போ வந்து இங்கேயே இருக்கப் போற? அம்மா கண்ணுக்குள்ளேயே நிற்கறடா கண்ணா…”

“அதுக்கு இன்னும் டைம் எடுக்கும்மா! அங்கே ஏதோ கருகற ஸ்மெல் ஹெவியா வருது. என்னன்னு பாரு! நான் நாளைக்கு வர்றேன்.” என்றவன் அழைப்பைத் துண்டித்துவிட்டு போக,

காணொளி அழைப்பில் வாசனையெல்லாம் தெரிந்துவிடாது என்பதையும் மறந்து, “அடுப்புல நான் ஒண்ணும் வைக்கலையே…” என்றபடி எழுந்தவள், அப்போதுதான் தனக்குப் பின்னால் நின்றிருந்த மூத்த மகனைப் பார்த்தாள். அர்ஜூனின் வாய்ச் சேட்டையும் புரிந்தது.

“ஹிஹி… அர்ஜூன் கிட்ட பேசிட்டிருந்தேன்.” என்றிட, தலையை இப்புறமும் அப்புறமுமாக திருப்பி அம்மாவின் கைகளைப் பார்த்தான் சஞ்சய்.

“என்ன?”

“கைல ஃபீடிங் பாட்டில் வச்சிருப்பன்னு நினைச்சேன்? இல்லையா?”

“அண்ணனும் தம்பியும் நல்லா நக்கலடிக்கிறீங்கடா!”

“நாளைக்கா வர்றான்? வேலைக்கு தமிழ்ப் பொண்ணு இருக்குதுதானே?”

“ஹாஹா… இருக்கா இருக்கா!” என்ற அனுவிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

“ஷப்பா! இவனை வளர்த்ததுக்கு உனக்கு கோவில்தான்மா கட்டணும்!” என்றபடி சோபாவில் தொப்பென விழுந்தான்.

இந்த மூன்றரை மாத காலத்தில் இதெல்லாம் இவர்களுக்கு சகஜமாகி இருந்தது. இப்போது நேரம் கிடைத்தால் அக்னி சென்னை சென்று தாத்தாவை, பிரகதியைப் பார்த்து வருவான். அதுபோல் அர்ஜூன் வாரம் ஒருமுறை பெங்களூர் வருவான். 

பாஸ்கரனுக்கும் அர்ஜூனுக்கும் பெங்களூர் கிளை அலுவலகத்தில் ஆங்கிலம் கைக்கொடுத்தது. அங்கே தமிழ் மக்களும் இருப்பதால் பெரிதாக சிரமமொன்றுமில்லை. அதனால் அனுவிற்காக வீட்டிலிருந்த நான்கு பணியாளர்களில் இருவரைத் தமிழ் தெரிந்தவர்களாகத் தான் பணிக்கு அமர்த்தியிருந்தாள் நிரஞ்சனா.

“இப்போதைக்கு ரெண்டு தமிழ் ஆளுங்க கிடைச்சிருக்காங்க அனு. கொஞ்சநாள் போகட்டும். வேற ஆளுங்க பார்க்கலாம்.” என்றிருந்தாள்.

இரு வாரங்களுக்கு முன்பு அர்ஜூன் வந்திருந்தபோது தமிழ் தெரிந்த இரு பெண்களும் விடுமுறையில் சென்றிருக்க, உள் வேலைகளிலிருக்கும் கன்னடப் பெண்மணி ஒருவர் அவனிடம் வகையாகச் சிக்கிக்கொண்டார்.

இவன் அறையின் கணினி மேசையைத் தூசு தட்ட, புசுபுசுவென்றிருக்கும் துடைக்கும் தூரிகை (cleaning brush) வேண்டுமென உள்ளங்கையை மடக்கி அசைத்தும் கையைத் தடவிக் கொடுப்பதைப் போலும் செய்கைக் காட்ட, அவர் அந்த தெருவெல்லாம் அலைந்து திரிந்து புசுபுசுவென்றிருக்கும் ஒரு பூனைக்குட்டியைத் தடவிக் கொடுத்தபடி தூக்கி வந்திருந்தார்.

தன் உடற்பயிற்சி அறையிலிருந்து முகத்தைத் துடைத்தபடி வெளிவந்த சஞ்சய் தன் காலடியில் ஓடிய பூனையைக் கண்டுவிட்டு, “யார் இதை இங்கே கொண்டு வந்தது? அம்மாவுக்கு பெட்ஸ்ன்னா பயம்ன்னு அப்பா சொன்னாரே?” என்று கேட்டபடி வர, எதிரே கைகளைக் கட்டிக்கொண்டு தலைகவிழ்ந்து நின்றிருந்த பெண், விழிகளை மட்டும் உயர்த்தி பயந்து போய் நின்றிருந்தார். 

அவர் பார்வையைத் தொடர்ந்தவன் சற்று முன்னே நகர்ந்து வந்து பார்க்க, அங்கே அர்ஜூன் நரகாசுரன் அவதாரம் எடுத்து அமர்ந்திருப்பதைக் கண்டு, என்னவென்று கேட்டு, விடயத்தைப் புரிந்துக்கொண்டு, “ஒரு இமேஜ் எடுத்துக் காட்டிருந்தா மேட்டர் ஓவர்! இதுக்குப் போய் ஏண்டா?” எனத் தம்பியை நொந்து கொண்டவனிடம், 

அந்தப் பெண், “தெருதெருவாக அலைந்து திரிந்து கொண்டு வந்திருக்கிறேன்.” என்று முகத்தைக் காட்டினார்.

இவனால் பணிப்பெண்ணிடம் பஞ்சாயத்து செய்யும் வேலையும் தன் தலையில் விழுந்ததில் கடுப்பாகிப் போனான் சஞ்சய்.

அடுத்த வாரம் பாவனாவுடன் ஊர் சுற்ற போகிறேனென்று சொல்லி இவனுக்கு நெஞ்சு வலியை வர வைத்தான். அப்படி ஏதேனும் செய்து மாட்டிக்கொண்டால், இவனின் கண்ணன் மாமா (பாவனாவின் அப்பா) இவன் மேல் வைத்திருக்கும் மரியாதை என்னத்திற்காவது?

‘ஒவ்வொரு வாரமும் இவனோடு தலை வேதனையாக இருக்கிறது. இந்த வாரம் வந்து என்ன செய்யக் காத்திருக்கிறானோ!’ என்று சிறிது மலைப்புடன்தான் இந்த வாரமும் அர்ஜூனின் வருகையை எதிர்பார்த்திருந்தான் அந்த அண்ணன்.

மறுநாள் வந்த அர்ஜூன் அனுவின் மடியில் படுத்து அழிச்சாட்டியம் செய்து, அயர்ன் செய்து வைத்த தன்னுடைய சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டதற்காக பாஸ்கரனிடம் இரு வசவுகளை வாங்கிக்கொண்டவன், தன் அண்ணன் சஞ்சுவின் உஷ்ணப் பார்வையைப் பெற்று அந்நாளை முழுமையாக்குவதற்காக, அவன் அறைக்குள் பிரவேசித்திருந்தான்.

தம்பி வந்ததைக் கண்டுவிட்டு, “இன்னிக்கென்ன பஞ்சாயத்து? மெய்ட் கூட சண்டைன்னா அப்பாவைப் பேசச் சொல்லு!” என முன்கூட்டிய எச்சரிக்கையுடன் இவன் பதிலளிக்க,

“இன்னிக்கு நீ வெளியே போயிருந்தப்போ பாட்டி இங்கே வந்தாங்க.” என்று ஆரம்பித்தான் அவன்.

“எப்பவும்தான் வருவாங்க. அதுக்கென்ன?”

“அங்கே நெத்திலி ஃப்ரை செஞ்சதா சொல்லி எடுத்துட்டு வந்துட்டு, நம்ம அம்மாவை நீ இன்னிக்கு எதுவும் சமைக்க வேணாம்ன்னு சொல்றாங்க?”

“எனக்கு ஃபிஷ் பிடிக்கும்ன்னு எடுத்துட்டு வந்திருப்பாங்க. இதுல என்ன இருக்குது?”

“பிடிக்கும்ன்னா உனக்கு மட்டும் தர்றதோட நிறுத்திக்க வேண்டியதுதானே? ஏன் அம்மாவை உனக்கு எதுவும் செய்ய வேணாம்ன்னு சொல்லணும்?”

“அர்ஜூன்!”

அவர்கள் எத்துணை நல்லவர்களாக, மேம்பட்டவர்களாக இருந்தாலும், இத்தனை வருடங்களாக தங்கள் சஞ்சுவைப் படிக்க வைத்து, வளர்த்து ஆளாக்கியிருப்பதில் உண்டான உரிமையை, தன் அம்மாவிற்காக அப்படியே விட்டு கொடுத்துவிடுவார்கள் என்பதில் அர்ஜூனுக்கு இன்னமும் நம்பிக்கை உண்டாகவில்லை. மாறாக, யாரையும் உடனடியாக நம்பிவிடும் தன் அம்மாவின்‌ சஞ்சு மீதான உரிமையை, அவர்கள் இதுபோன்ற சின்ன சின்ன விடயங்களில் தட்டிப்‌பறிப்பதாக நினைத்தான்.

“இந்த மாதிரி விஷயமெல்லாம் அம்மாவுக்கு புரியாது. ஷி’ஸ் இன்னஸென்ட்! நீதான் பாட்டி கிட்ட சொல்லணும்.”

இவனுக்கு அவினாஷே தேவலாம் என்று நினைத்தான் சஞ்சய். “ப்ச்! உனக்கு இன்னும் அவங்க மேல நம்பிக்கை வரல. அதான் அன்பா செய்றதைக் கூட புரிஞ்சிக்க மாட்டேங்கற! இன்னஸென்ட் இஸ் ப்ளிஸ்ஃபுல் அர்ஜூன்! அம்மாகிட்டேயும் இந்த மாதிரி பேசி நல்லா இருக்கவங்களைக் குழப்பிவிடாதே!”

“அவங்கக்கிட்ட நான் சொல்லல. அந்தளவுக்கு எனக்கு அறிவு இருக்குது.”

“ஃபைன்!” என்றவன், திடுமென வறட்டு புன்னகை சிந்தினான். “உனக்கு என் மேல இருக்கற பொஸஸிவ்னெஸ்ல கொஞ்சமாவது உன் பெஸ்டீக்கு இருந்தாலாவது எனக்கு ஏதாவது நல்லது நடக்கும்டா.”

“ஹாஹா… நான் செஞ்ச தப்புக்கு கால்ல விழாத குறையா கெஞ்சவிட்டு, மூணு மாசம் கழிச்சு என்கிட்டயே போன வாரம்தான் ஒழுங்கா பேசினா! உன்னை அவ்ளோ சீக்கிரத்துல ஏத்துக்குவான்னு எனக்கு நம்பிக்கை இல்லை.” என்று உதடு பிதுக்க, 

எட்டி கையில் கிடைத்த ஹேர் ஜெல் டப்பாவைத் தம்பி மேல் தூக்கியெறிந்தவன் பல்லைக் கடித்தான். “அன்னிக்கே சொன்னேன், இதெல்லாம் வேணாம்டான்னு! பேசு பேசுன்னு உயிரை வாங்கி அவளோட அனுப்பி வச்சிட்டு இப்போ நீ எவ்ளோ கூலா பேசற?”

“சரி சரி… அழாதே! நாம வேற ப்ளான் பண்ணுவோம்.” என்று தாடையைத் தடவினான் அர்ஜூன்.

“நீ ப்ளான் ஏதாவது போட்ட… செருப்பு பிஞ்சிடும் அர்ஜூன்!”

“ச்சில் வ்ரோ! யூ ஸெட் பொஸஸிவ்? எஸ்! நாம ஏன் உனக்கு வேற பொண்ணு பார்க்கறோம்ன்னு சொல்லி அவளுக்கு உன்‌ மேல பொஸஸிவ் வர வைக்கக்கூடாது?” எனத் தீவிர முகபாவத்துடன் கேட்க,

“இனி அக்னின்றவன் தலைவலி விட்டதுன்னு ஈஸியா என் சேப்டர் க்ளோஸ் பண்ணிட்டு, என் கல்யாணத்துக்கு நல்ல கிஃப்ட்டா வாங்கி தந்து விஷ் பண்ணிட்டு, அவ வாழ்க்கை முழுக்க சஞ்சுவை நினைச்சு சிங்கிளாவே இருப்பா!” என்றவனிடம் ஏக்கப் பெருமூச்சு!

சர்வ சத்தியமாக, தான் இப்படி ஒரு பெண்ணின் காதலுக்காக ஏங்கித் தவிப்போமென எண்ணியிருக்கவே இல்லை.

“ம்ம்! அப்டித்தான் செய்வா!” 

சஞ்சய் தலைக் கோதிக்கொள்ள, “நெக்ஸ்ட் வீக் அவளோட பர்த்டே வருது. நீ அன்னிக்கு புதுசா ஏதாவது டிரைப் பண்ணேன்!” என்றான் அர்ஜூன்.

“பர்த்டே? எப்போ?” எனக் கேட்டவனின் கண்கள் மின்னியது.

“கம்மிங் ஃப்ரைடே!”

பிறந்தநாள் என்றதும் பரிசைப் பற்றி சிந்தித்தான் இவன். “அன்னிக்கு அவ ஃபேவரிட்ஸ் சொன்னதானே? டார்க் ரூம், மியூஸிக், நைட் ரெய்ன்…”

“ம்ம்…ஹூம்! நீ தேறமாட்ட!”

“ஏண்டா?”

“கிஃப்ட் கொடுத்து, ‘விளக்கேற்ற வருவாயா?’ன்னு கேட்டு கரெக்ட் பண்ண போறியா? வேஸ்டட்!”

“நான் ஏதோ பண்றேன். உனக்கென்ன?”

“ஸீ ப்ரோ… சிறகை அசைச்சா தான் பறக்க ஆரம்பிக்க முடியும். நீ கொஞ்சமாவது பேசினாதான் அவளும் யோசிப்பா! அவளுக்கு ஸ்பேஸ் கொடுக்கறேன்னு விலகியே இருந்தா எப்டி? டெய்லி கால் பண்ணி பேசு!” என்றவன், வெளியே சொல்லி அடிவாங்க தெம்பில்லாததால் மனதிற்குள் சொல்லிக்கொண்டான். ‘நான் பாவனாவை அப்டித்தான் கரெக்ட் பண்ணேன்.’

“ச்ச! சும்மா இருடா!” 

அவளுக்கான நேரத்தைக் கொடுப்பதே அவள் உணர்வுகளுக்கு இவன் செய்யும் மரியாதையல்லவா? அவளுக்கு தன்னைப் பிடிக்காமலில்லை. தன்னை சஞ்சுவாக ஏற்கவியலாமல் திணறுகிறாள். அக்னி மட்டுமல்ல சஞ்சுவின் பெயர் சொல்லி எவன் வந்து நின்றிருந்தாலும் அவளால் மனதளவில் ஒப்புக் கொண்டிருக்க முடியாது என்பதே நிதர்சனம்! அதனால் இன்னும் சற்று பொறுத்திருக்கலாம் என்றெண்ணினான் இவன்.

“பிடிச்ச பொண்ணுகிட்ட ஃப்ளர்ட் பண்றதுக்கு இவ்ளோ யோசிக்கற? நீயெல்லாம் ட்டூ கே கிட்ஸ் ஆணினத்துக்கே அவமானம் ப்ரோ!” என்ற அர்ஜூன், அண்ணன்காரன் அடிப்பதற்கு எதையோ எடுப்பதைக் கண்டு, அந்நாளை முழுமையாக்கிய திருப்தியில் ஓடிப்போனான்.

உன் உதட்டுக்குள் இருக்கும் ஒரு வார்த்தை…

அதை சொல்லிவிட்டால் தொடங்கும் என் வாழ்க்கை…

உன் மௌனத்தில் இருக்கும் என்ன வலிகள்

காதல் என்றால் மெல்ல 

சாதல் என்று சொல்லு…

இசைக்கும்🎵🎶…

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
9
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

  1. அவியல் என்ன ரொம்ப பொங்குது. வயசானவங்க தான் புரிஞ்சுக்காம நடந்துப்பாங்க அப்படின்னு பார்த்தா இந்த பசங்க ஏன் இப்படி பண்றாங்க. அபிராமி அனு நிரஞ்சனா எல்லாரும் தெளிவா இருக்காங்க. இவனுங்க குழப்பி அக்னியை அழ விடாம இருந்தா சரி.

    1. Author

      இங்கே நம்பிக்கை தான் மெய்ன் மேட்டர் சிஸ். அந்த நம்பிக்கையின் பிடிமானத்தோட இந்த உறவுல எங்கேயும் விரிசல் வந்துடக் கூடாதுன்னு பெரியவங்க ரொம்ப கவனமா நடந்துக்கணும்னு நினைக்கறாங்க. சின்னவங்க நம்பிக்கை இல்லாம சந்தேக கண்ணோடேயே அப்ரோச் பண்றாங்க😊😊 இனி குழப்பம் செஞ்சு காரியம் சாதிக்கறதெல்லாம் அக்னிதான்😅😅 மிக்க நன்றி சிஸ் 🪶🪻

  2. அனு மீதான அவினாஷ் மற்றும் அர்ஜுனின் அன்பு அலாதியானது.

    அவளுக்காக அவளே யோசிக்காதவற்றையும் யோசிக்கின்றனர்.

    அனு மனம் வேதனை அடைய கூடாது என எதுவும் நடக்கும் முன்னரே நடந்து விடுமோ என்று எத்தனை பயம்.

    “மச்சான் டேய் மச்சான் ஆகிற்று”

    ✨✨ உணர்வுகளின் பரிணாமத்தை உணர்த்தும் வகை அருமை. 💛

    ஷாரா 🤣
    அவினாஷ் sir அவ உண்மையான பெயர் உங்களுக்கு ஞாபகம் இருக்கா? இல்லையா?

    குழந்தையிடம் பேசும் மென்மை இப்பொழுதும். 😍

    அர்ஜுன் வாரா வாரம் வந்து வம்பை இழுத்து விட்டு வேடிக்கை பார்ப்பார் போல்.

    “பாவனா அப்படி தான் correct ஆனா” 🤭

    அண்ணன் தம்பி உரையாடல் அழகு.

    1. Author

      வெகுவாக ரசிக்கறேன் உங்கள் கருத்துக்களை! 🍂🍁 மிக்க நன்றி சிஸ் 🍬🍭