
விடியாத இருளில், கருங்காரம் கொண்ட அந்த அறையில் மேசையில் வைத்த செல் அலறி கொஞ்சம் வெளிச்சத்தை கொடுக்க, அதைத் தட்டு தடுமாறி அணைத்தவள், அருகே தன் கணவனை தேட, அவனோ அங்கில்லை.’ அதற்குள் எழுந்து விட்டானா?’ பட்டென கண் விழித்தவள் ஆடையை நெஞ்சோடு சேர்த்துக் கொண்டு அவனை அறையெங்கும் தேட , அவனோ கட்டிலில் அதிதியோடு உறங்கிக் கொண்டிருந்தான்.
‘ அடப்பாவி வேலை முடிஞ்சதும் அங்க போய் படுத்து கிட்டான். ஃபிராடு ! ‘ அவனைத் திட்டியவள், எழுந்து மாற்று உடையுடன் கீழே சென்று குளித்து விட்டு, ரவிக்கை பாவாடையுமாக அணிந்து சேலையை சுற்றிக் கொண்டு மாடியேறி கதவை திறந்து உள்ளே வந்தவள், மீண்டும் கதவை தாழிட்டு, சேலையை கட்ட ஆரம்பித்தாள்.
கதவு திறக்கும் அரவத்தில் கண்விழித்தவன்” குட் மார்னிங் பொண்டாட்டி !” என்றான் காலை உற்சாகத்துடன். அவனை ஒருதரம் பார்த்து விட்டு மீண்டும் சேலையை கட்டினாள். அவனும் மணியைப் பார்க்க, ஆறென காட்டியது, “அதுக்குள்ள ஏன் டி. எந்திரிச்ச?” எனவும்,
“லேட்டா எந்திருச்சு, அப்றம் கீழ போய் குளிச்சுட்டு மேல வரது சங்கட்டமா இருக்கும் அதான்” என்றாள் சேலையில் மடிப்பை வைத்துக் கொண்டு.
அவன் பார்வை அவள் மேல் இல்லை, வேறெதையோசித்திருந்தது. ‘ ஐயோ !! இவன வச்சுட்டு எப்படி தான் குடும்பம நடத்த போறீயா நிழலி !பார்வை நம்ம மேல இருக்கா பாரேன்’ உள்ளே கடிந்தவள், சேலை கட்டி முடித்தாள்.
அவனும் இன்னும் யோசனையில் இருக்க, கீழே இருந்த தலையணை அவன் மேல் வீசினாள்.
நினைவுக்கு வந்தவன் ” ஏன் டி?” எனவும்.
” என்ன ஏன் டி? ஏன் டா இங்க படுத்திருக்க, ஏன் கூட படுக்காம?” செல்லமாக கடிந்து கொள்ள, ” இல்லடி நடுவுல அதிதி எழுந்து நம்மள தேடினா, அதான் நான் சட்டைய மாட்டிண்டு அவள படுக்க வச்சு, அப்படியே நானும் தூங்கிட்டேன்.
“அப்போ நான் தேட மாட்டேனடா ?” எனவும், ” நீ குழந்தை பாரு போடி !” என்றவனின் பூஜத்தில் கிள்ளியவள், ” இப்ப கூட உன் முன்னாடி சேலை கட்டினேன் என்னை ரசிச்சியா டா? வேற எங்கோ பார்க்கற? போடா , நான் ஏமாந்துட்டேன். கல்யாணத்துக்கு முன்னாடி இருந்த சாகரன் வேற இந்தக் சாகரன் வேற கண்டுக்கவே மாற்றான்” என்று சலித்து கொண்டு கண்ணாடி முன் நின்று, ஈரக் கூந்தலை உலர்த்திக் கொண்டிருந்தாள். அவளை பின்னின்று அணைத்தவன், முதுகில் படர்ந்த ஈர துளிகளை, பனியை பருகும் பகலவன் போல, பருகி முத்தம் வைக்க, அவள் கைக்குள் அடங்கிய அம்மயிலவள். நெளிந்தாள்.
“குளிச்சுட்டேன் டா” அவள் வார்த்தை குழைய, ஆணவனின் கரங்கள் அவள் அங்கங்களில் அளந்தன ” டெர்டி கிஸ் குடுக்காம ஏன்டி குளிச்ச?” எனக் கேட்டு உதட்டையும் ஊர்வலம் நடத்த அவனை தன்னிடமிருந்து பிரித்தவள், “கொன்னுடுவேன் போய் குளி ” என்றாள் வெட்கத்தை மறைத்த வண்ணம்.
அவள் கையில் இருந்த துவாலையை வாங்கி அவளது தலையை துவட்டியவன் , ” உனக்கு கஷ்டமா இருக்கா நிழலி?”
“எனக்கு என்ன கஷ்டம்?”
” இல்ல பாத்ரூம் போகணும்ன்னாலும் கீழ வரைக்கும் போகணும், சீக்கிரமா எழுந்து, அதுவும் பச்சை தண்ணீல குளிக்கற? உனக்கு கஷ்டமா இல்லையா?”
“இல்லையே, இதெல்லாம்மா கஷ்டம்? எல்லாரும் இங்க அப்படிதானே இருக்காங்க நானும் அப்படி இருக்கறதுல தப்பு இல்லயே !தேவை இல்லாமல் எதையும் யோசிக்காம போய் குளிச்சுட்டு வா” ,நெற்றியில் இதழ் பதிவு விட்டு முடியை எடுத்துக் குத்திவிட்டு கீழே சென்றாள்.
பூஜை அறைக்கு சென்று கடவுளை வணங்கி விட்டு, திரும்ப அவளை ஆச்சர்யமாக பார்த்தார் கண்ணம்மா.
“என்னமா ஏன் அப்படி பார்க்கிறீங்க?”
“ஏன்டிமா அதுக்குள்ள எழுந்த? இன்னும் கொஞ்சும் தூங்கிருக்கலாம்ல “
“இல்லமா, எப்பையும் எழுந்திருக்க நேரம் தான்மா, முழிப்பு வந்திடுத்து” என்றாள் இருவரும் சமையலறையில் ஐயக்கியமானார்கள், அதன் பின் ஒவ்வொருவராக எழுந்து வந்தனர்.
வெண்ணிலா, கண்ணம்மா , நிழலி மூவருமாக சேர்ந்து சமைத்தனர், அவளை எவ்வளவு மறுத்தும் உதவி செய்வதில் குறியாக இருந்தாள்.
காலை உணவுகளை முடித்துக் கொண்டு சாகரனும் நிழலியையும் வெளியே போக சொல்ல ,அதிதியை மட்டும் அழைத்து செல்ல முடியாது என்பதால் மூன்று குழந்தைகளுடன் வெளியே சென்று வந்தனர். அன்றைய நாள் போல அடுத்தடுத்த நாட்கள் செல்ல, நிழலியும் அதிதியும் அந்த வீட்டில் பொருந்திப் போனார்கள்.
கேசவன், அதிதியை தங்கையாய் ஏற்றவன் , அந்தப் புது சொந்தத்தையும் விடவில்லை. தனக்கு ஒன்று அதிதிக்கு என கேட்டு வாங்கிக் கொண்டு கொடுப்பான்.” அதிதி அதிதி”என்று பிடித்த கையை விட மாட்டான், அவர்களது பெற்றோர்கள் ஆச்சர்ய பட்டனர். அதிதிக்கு உறவு முறையை சொல்லிக் கொடுக்க அப்படியே
அழைத்தாளும் சாகரனை’ சாகா’ என்று நிழலியை’ பேபி’என்று தான் அழைக்க மற்றவர்களுக்கு பிடித்தாலும் வரத ராஜனுக்கு அது பிடிக்கவில்லை, நிழலி , சாகரனை ‘ஐயங்கார்’ என்று அழைப்பதும் பிடிக்காது. அதிதி , நிழலி என இருவரிடமும் பேச மாட்டார்.
அதிதியும் கேசவன் விளையாடி கொண்டிருப்பார்கள், கேசவனுக்கு மட்டும் வாங்கி கொடுத்து கொஞ்சுவார், முதலில் எதிர்ப்பார்த்த அதிதி ! அவர் இப்படி தான் என்று தெரிந்து கொண்டு விட்டுவிட்டாள்.
அப்பாவை பற்றி கேட்காத அந்தப் பெரிய மனுஷி இதை மட்டும் பெருசாக எடுத்துக் கொள்வளா என்ன? அவளுக்கு அவரது அன்பை விட நிறைய அன்பு கிடைக்க, அவரை டீலில் விட்டாள். மற்றவர்களுக்கு சங்கட்டமாக இருந்தாலும் நிழலி அதை பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை அவரை பற்றி தெரிந்தது தான. சாகரனும் அவளை ஏங்க விடாமல் மாலையில் சீக்கிரமாக வந்து அவளை தூக்கி கொண்டு அறைக்கு செல்லவான், அதைக் கண்ட கேசவனும் ‘ அதிதி’ என்று அவர்களுடன் செல்ல, அவர் முகம் செத்து விடும், கண்ணம்மாவிற்கு சிரிப்பு தான் வரும்.
இதற்கிடையில் வேதாவிற்கு பெண் குழந்தை பிறக்க, மூன்று மாதம் இங்க வேதாவும் குழந்தையும் இருந்தனர் . குட்டி தங்கையை இருவரும் பார்த்துக் கொண்டனர்.
” என்னமோய் மூணாவதும் பேத்தியா?” என யாரோ ஒருவர்கேட்கவும், ” ஆமாவோய், இப்போ எனக்கு மூணு பேர பசங்க” என்றார். மற்றவர்களுக்கு அது சங்கட்டமாக இருந்தது. அனைவரும் நிழலியை பார்க்கவே அவளோ சாதாரணமாக இருந்தவள் சாகரனின் கோபத்தை கட்டுப்படுத்தினாள்.
அன்று இரவு கண்ணம்மா வரதரை திட்டினார்.” அந்தக் குழந்தை என்ன பண்ணிடுத்து நீங்க பாரபட்சம் பார்க்கிறீங்க? இதெல்லாம் பார்த்தும் நிழலியும் கண்ணனும் அமைதியாக இருக்க காரணம், உங்க மேல இருக்க மரியாதை தான் அதை கெடுத்துக்காதீங்க” எனக் கடிந்தார்.
நிழலியின் மடியில் படுத்துக்கொண்ட சாகரன், அவள் முகம் பார்த்து, ” நாம தனியா போவோமா?”
” போயி?”
“இல்லடி இங்க நீ ரொம்ப சிரம்மப்படுற, இதுல அவர் அதிதிய பேத்தியா ஏத்துக்கல , சங்கடப்படுத்தார். அதான் போலாம் சொல்றேன்”
“இங்க இருந்தாவது கொஞ்சம் கொஞ்சமா அவர் மாற வாய்ப்பிருக்கு தனியா போனோ, சுத்தம் எங்களை யார்னு கேட்பார். எனக்கு எந்தச் சிரமும் இல்ல, அதிதிக்கு எல்லா சொந்தமும் கிடைக்கணும், தனிக் காட்டுல தவிக்க விட வேண்டாம்.அவர் மாறுவார் பொறுமையா இருப்போம்” என்றவளை பெருமைப் பொங்க பார்த்தவன், அவளது நெஞ்சில் முகம் புதைத்து கொண்டான்.
மாத கணக்கில் நாட்கள் செல்ல, ஊர் தலைவரும் உடன் இரண்டு பெரும் வீட்டிற்கு வர வரதராஜன் பயந்தார். பின் விஷயம் என்ன வென்று கேட்க, நிலப் பிரச்சனை அதனால் நிழலியை தேடி வந்ததாக கூற அவருக்கு ஆச்சரியம் தான். அவளும் முதலில் வரதரை பார்க்க ,அவர் சம்மதம் கொடுக்க, வீட்லே பல விஷயங்களை பேசினார்கள். ஒரே இடத்தை இருவருக்கு ஒருவன் விற்றிருக்கிறான். அது தனக்கு தான் என இருவரும் சண்டையிட்டு கொண்டிருந்தனர். விஷயத்தை கேட்டுக் கொண்டவள், இருவரிடம் இடம் வாங்கிய தேதியை கேட்டு குறித்து வைத்துகொண்டு பத்திர எண்களையும் குறித்து வைத்துக் கொண்டாள். உங்களிடம் யார் விற்றார்களோ அவர்களையும் அழைத்து வரவும் சொல்லிருந்தாள். இரண்டு நாட்களுக்கு உண்மையை கண்டறிந்தவள், ஊர் தலைவருக்கு தான் அந்த நிலம் சொந்தம், இது போலி பத்திரம் எனச் சொல்லி அவனை போலீஸ் பிடித்துக் கொடுத்து, அவனுக்கு எதிராக வாதடி தண்டனையும் ஏமாந்தவர்களுக்கு பணமும் வாங்கிக் கொடுத்தாள்.
ஊர் தலைவர் வீட்டிற்கு வந்து அவளை பாராட்டுவிட்டு, பணத்தை கொடுக்க, அதை வரதராஜன் கையில் கொடுக்கச் சொன்னாள். அது அவருக்கு பெருமையாக இருந்தது. அவர் சென்ற பின், அவளும் உள்ளே செல்ல இருந்தவளின், கையில் கொடுத்தவர், அப்படியே அங்கே அமர்ந்து யோசித்து சங்கரனை அழைத்தவர், “நாமாத்து சுவத்துல, மாட்டு பொண்ணு பெயரோட அட்வோகேட்னு போர் வாங்கி வந்து மாட்டிட்டுடா சங்கரா !” என்றவர் சொல்ல, அனைவரும் நமட்டுச் சிரிப்புடன் இருந்தனர். சாகரனை கண்டு ” எப்படி ?” என புருவமுயர்த்திய நிழலியை கண்டு, “சூப்பர்” என்றான். அவளும் இல்லாத காலரை தூக்கி விட்டாள். அன்றைய நாளிலிருந்து நிழலியின் மேல் ஒரு தனி மரியாதை வந்தது. அவள் வேலைக்கு கருப்பு கோட்டை எடுத்துக் கொண்டு செல்லும் போதெல்லாம் கண்ணில் கர்வம் கொண்டு பார்ப்பார்.
நாட்கள் செல்ல, அன்று தன் அலுவலகம் சென்ற ஒரு மணி நேரத்தில வீட்டிற்கு வந்து படுத்துக் கொண்டாள் நிழலி. கண்ணாம்மாவும் வெண்ணிலாவும் அறைக்கு சென்று பார்த்தனர், காய்ச்சல் இல்லை என்றதும், வயிற்று வலியா? எனக் கேட்க, வாந்தி மயக்கம் சோர்வாக இருப்பதை சொல்ல, கண்ணம்மாவிற்கும் வெண்ணிலாவிற்கும் மூளையில் மின்னல் வெட்டியது,
” நாள் தள்ளி போயிருக்கா மா” மீண்டும் கேட்டார். அவள்” ஆமாம் ” என்று அவர் மடியில் தலை வைத்தாள். அவர் அவள் நெற்றியில் முத்தம் வைத்தவர், ” சந்தோஷமா விஷயமா தான் இருக்கும், எதற்கு சாகரனை கூப்பிடுறேன், ரெண்டு பேர் ஹாஸ்பிட்டலுக்கு போயிட்டு வாங்கோ !” என்றவர், சாகரனிடம் விஷயத்தை சொல்ல, துள்ளி குதிக்காத குறையாக குதித்தவன், மெடிக்கலில் , ப்ரேக்னன்சி கிட்டையும் வாங்கி வந்து, அவளிடம் நீட்ட, போய் பரிசோதித்தாள் ரெட்டை கோட்டை தாங்கி இருக்க, அவனுக்கு அளவில்லாத சந்தோசம் அவளை தூக்கி சுத்தியவன் பல முத்தங்களையும் கொடுத்தான். கீழே சென்று அனைவருக்கும் பகிர்ந்தான், இருவருக்கும் வாழ்த்து மழை குமிய , மதியம், அவளை நெஞ்சில் போட்டுக் கொண்டு படுத்திருந்தான். ,
“சாகரா ! அதிதி இந்த விஷயத்தை எப்படி எடுத்துப்பான்னு நினைக்கற?”
” ரொம்ப சந்தோஷப்படுவா என் பொண்ணு “
“இந்தக் குழந்தையாவது மாமா ஏத்துப்பாரா சாகரா?
“கண்டிப்பா ஏத்துப்பார் டி!” என்று நம்பிக்கை ஊட்ட, “அப்போ அப்பையும் அதிதியை ஏத்துக்க மாட்டாரா? இந்தக் குழந்தைய ஏத்துக்கிட்டு அதிதிய ஏற்காம விட்டால், அவ எவ்வளவு கஷ்டப்படுவா ! அவ பீல் பண்றத வெளிய சொல்ல மாட்டா சாகரா ! ஆனால் உள்ளே வச்சிருப்பா !எனக்கு பயமா இருக்குடா, வரப் போற குழந்தைகிட்ட ஓவர் பாசம் காட்டி, அதிதிய ஏங்க விட்ருவோமோன்னு?” என சொல்ல அவனுக்கு சுர்ரென்ன கோபம் வர எழுந்து சொல்லாமலே வெளியே சென்று விட்டான்.
அவளோ தவித்து போனாள்., அவனுக்கு அழைக்க அழைக்க கட் செய்தான். , அவளும் அமர்ந்த வாக்கிலே அழுதாள். நேரம் செல்ல, அதிதியோடு இல்லம் நுழைந்தான் சாகரன்.
நேராக “பேபி” என்று அவளை அணைக்க அவளோ சாகரனை பார்த்தாள் அவனோ வேறெங்கோ பார்த்தான். “பேபி , நம்ம வீட்டுக்கு புது பேபி வர போகுதாமே ! சாகா சொன்னா, எப்போ வரும் பேபி? அந்தப் பேபி இப்போ எங்க இருக்கு பேபி?” எனக் கேட்க, அவளோ பதில் சொல்லாமல் சாகரனை பார்த்தாள்.
“அதிதி பேபி இங்க வாங்க” என்றவன், “அவளது பள்ளி சீருடையை மாற்றி விட்டு, வேறு உடையைப் போட்டவன், அவளை மடியில் அமர்த்தி, நிழலியின் வயிற்றை காட்டி, “இங்க தான் பாப்பா இருக்கு, குட்டியா இருக்கும் அப்றம் பத்து மாசத்துக்கு அப்றம் நம்ம கைக்கு வந்திடும்” என்றான்.
“நம்மா வியனிக்கா போல இருக்குமா? வேதா அத்தை போல நிழலியோட ஸ்டோமக்கும் பெருசாகுமா?” சந்தேகம் கேட்க, ஆமாம் என்றான், அப்போ கொஞ்ச நாள் என் கூட இருக்குமோ? வேதா அத்த வியனிக்காவ தூக்கிட்டு போறது போல வேற யாரும் தூக்கிட்டு போவாங்களா?” சந்தேகமாக கேட்டாள்.
“அந்தக் குழந்தை உனக்கு மட்டும் சொந்தம், யாரும் எடுத்துட்டு போக மாட்டாங்க…” என்றதும் “ஏ” என துள்ளி குதித்தவள், இருவரையும் கட்டிக் கொண்டாள். “நான் இதை கேசவன் அண்ணா கிட்ட சொல்லிட்டு வரேன்” என்று கீழே ஓட, அவனோ எழுந்து செல்ல, அவன் கையை பிடித்து, நெஞ்சில் முகம் புதைத்தவள், ” சாரிடா, ஏதோ பயத்தில தான் கேட்டேன்” என்று அழுக, “பயமா? இல்ல என் மேல் சந்தேகமா?”
“சாகரா !”என மேலும் அழ, அவள் கண்ணீரை துடைத்தவன், “எப்பையும் அதிதி தான் எனக்கு முதல்ல . அது மாறாது, இங்க யாரும் அவளை தவிர்த்து இந்தக் குழந்தைய முக்கியத்துவம் கொடுத்தால், நான் இங்க இருக்க மாட்டேன். நாம வேற ஆத்துக்கு போயிறலாம்… இதுக்கு மேலே எனக்கு சொல்ல தெரில டி” என அவனும் அழுக, “சாரிடா” என்று சொன்ன வண்ணம் இருந்தவளை, முத்தமிட்டான்.
அதன் பின் நிழலியை இரு வீட்டாரும் நன்கு கவனித்து கொண்டனர். மாதம் மாதம் அவளை செக் அழைத்து செல்வதோடு , உடனிருந்து பார்த்து கொண்டான். அதிதியும் சாகரன் இரவில் வயிற்றிலிருக்கும் குழந்தையுடன் பேசுவார்கள்.
அவள் ஆசைபடி ஒன்பது மாதம் கழித்து வளைகாப்பு போட்டு பானுமதியே தன் வீட்டிற்கு அழைத்து போனார்கள். அதிதியையும் அழைத்து செல்ல இருப்பதாக சொல்ல, கேசவன் அதிதியை பிடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தான். அவள் கண்ணீரை துடைத்து விட்டு’ இங்கே இருப்பதாக’ சொன்னாள் அதிதி அவர்கள் பாசத்தை கண்டு ஆடிப்போனார் வரதர். தன் அண்ணனுடன் இருந்து கொண்டாள் அதிதி, இரவில் தன் தந்தையுடன் உறங்கினாள், அவள் நிழலியை தேடவே இல்லை.வீட்டில் அவளை தாங்கினார்கள்.
ஒருநாள், தனியாக அமர்ந்த வரதராஜனுக்கு நிக்காமல் இருமல் வர அங்கே யாருமில்லை , அழைத்தும் யாரும் வராமல் போக , அவருக்கும் விடாமல் இருமல் வர, அதிதி தான் வேகமாக சென்று அவருக்கு தண்ணீ குடுத்தவள், அவர் முதுகையும் நெஞ்சையும் நீவி விட்டாள். அந்தப் பிஞ்சு விரல்கள் அவரை தீண்ட, அந்தக் கண்ணனே தீண்டியது போல இருக்க, ” ஒன்னுல்ல தாத்தா , ஒன்னுல்ல” தடவிக் கொண்டுடே இருந்தவள், கீழ இருந்தே “கண்ணம்மா” என்று அக்குழந்தை அழைக்க, அவருக்கு சிரிப்பு வந்தது, துணியை எடுக்க சென்றவர், “என்னடி?” எனக் கேட்டார், “தாத்தா இருமிட்டே இருக்கார் என்னானு பாரு” என்று சொல்ல, “என்னாச்சுன்னா?” அவர் வேகமாக வர, இருமல் நின்றிருந்தது.”ஒன்னுமில்லடி” என்றவர், அதிதியை அழைத்து, அந்தப்
பிஞ்சு விரலை முத்தமிட்டார். அவரை ஆச்சரியமாக பார்த்தார் கண்ணம்மா.
“என்னண்ணா?”
அவர் நடந்ததை சொல்லியவர், “இந்தப் பிஞ்சு விரல் என் எண்ணத்தை மாத்திருத்துடி, இந்தக் குழந்தை ஒதுக்கி வச்சுண்டு , பெரிய பாவம் பண்ணிண்டேன். ஆனால் அதை எல்லாம் நினைக்காம எனக்குனு ஒண்ணுனதும் ஓடி வந்ததே, அந்த மனசு நேக்கு இல்ல டி” என்று வருத்தம் கொண்டார்.
“எல்லாம் அந்தக் கண்ணன் செயல் தான் அண்ணா , நீங்க வருத்தப்படாதேள்… அந்த குழந்தய நீங்க ஏத்துகிட்டதே போதும்மண்ணா ! குழந்தங்க மனசு எப்பயும் வராதுண்ணா நமக்கு? அவாள கடவுள் ஏன் சொல்றோம், சீக்கிரமா எல்லாத்தையும் மறந்திடுவா மன்னிச்சுடுவாண்ணா ! அவா மனசு இல்லேன்னாலும் அந்த எண்ணம் இருந்தால் போதும்ண்ணா !” என்றார் அதை ஆமோதித்தார் வரதராஜன். அவர் மன மாற்றம் அனைவருக்கும் நிம்மதியை தந்தது.
குறுப்பிட்ட தேதிக்கு இரண்டு நாள் முன் அதிதியோடு பானுமதி வீட்டிலே தங்கி கொண்டான் சாகரன், ” அப்பா இருந்தால் போதும் பொண்ணுக்கு அம்மா வேண்டாம், அதே போல் பொண்ணு கூட இருந்தால் போதும் பொண்டாட்டி தேவயில்ல அப்படி தான?” வாய் விட்ட அவர்கள் இருவரையும் கடிந்து கொண்டாள் நிழலி அவர்களோ, ” வேண்டாம் ” என்று ஒரு சேர சொல்ல, இவளுக்கு சட்டென கண்கள் லேசாக கலங்கின, “உள்ள இருக்க பாப்பாவ மட்டும் குடுத்துட்டு நீங்க இருந்துகோ நிழலி, நானும் ,சாகரா , பாப்பா மட்டும் அங்க போயிடுறோம் என்ன சாகரா?” எனவும் அவனும் ” எஸ் பேபி !” ஜால்ரா போட, இவளுக்கு கண்ணீர் மடமடவென்று வந்தது, “ஹாஸ்பிட்டல் போனதுக்கு அப்றம் நான் திரும்பி வர மாட்டேன், நீங்க மூணு பேரு மட்டும் இருந்துகோங்க ” என்றாள் .வழிந்த கண்ணீரை துடைந்தவாறே, அதை கேட்டதும் சட்டென நிமிர்த்து தன் மனைவியை பார்க்க தேம்பி தேம்பி அழுதவளை அணைத்து
” ஏய் பட்டர்பண் என்னடி பேச்சு இது ?” அவன் அணைப்பை தட்டிவிட்டவள், “கிட்ட வராத டா ! உனக்கு என்னை விட குழந்தைங்க தான முக்கியம் , நான் வேணாம் தான், குழந்தை பெத்து குடுத்துட்டு நான் செத்து போயிடுவேன் திரும்ப வர மாட்டேன்” மீண்டும் அதே சொல்ல, ” நானே உன்ன கொன்னுடுவன் டி, நீ இல்லம்மா எனக்கு என்ன டி வாழ்க்கை, நானும் கூட வந்திடுவேன், குழந்தை கூட விளையாட்டுக்கு சொல்றத பெருசா எடுப்பீயா? எனக்கு எப்பயும் முதல் குழந்தை நீ தான். இன்னொரு வாட்டி அப்படி சொன்ன அடிச்சே கொன்னுடுவேன், உனக்கு அப்றம் தான் எல்லாரும் எனக்கு” என்று அணைத்து கொள்ள, அதிதியும், அவளை அணைத்து கொண்டு, “பேபி, நீ இல்லமா எனக்குஇந்த பேபி வேணாம் சாரி பேபி !” என அதிதியும் அழுக, தன் இரண்டு குழந்தையும் அணைத்து கொண்டான் அந்த தாயுமானவன்.
அவனது அணைப்பிலிருந்தே அவளுக்கு வலி வர, கத்த ஆரம்பித்து விட்டாள், அதிதி மிரள , தன்னோடு வைத்துக் கொண்டே நிழலியை தாங்கி கொண்டி படியில் இறங்கினான். மருத்துவமனைக்கு விரைந்தனர், கையில் அதிதியுடன் நடந்து கொண்டே இருந்தான் , “அம்மா அம்மா ” முணங்கி விம்மலுடன் இருக்கும் அதிதியை யாரிடமும் கொடுக்கவே இல்லை . உள்ளே ஒரு போராட்டம் நடக்க, அவளது கதறல் செவியை அடைந்து இதயத்தை துளைத்தது. அதிதியை இறுக பற்றி இல்லாத கடவுளை அழைத்தான்.
குழந்தை சத்தம் கேட்க அனைவருக்கும் நிம்மதி வந்தது. ,” போத் ஆர் ஃபைன்” என்று டாக்டர் சொல்லிவிட்டு செல்ல , அடுத்த கொஞ்ச நேரத்தில் தன் உயிரின் நகலை வாங்கியவன் நாற்காலியில் தன் உயிரத்திற்கு நின்ற அதிதியிடம் காட்ட, அவள் கன்னத்தை தொட்டாள். குழந்தையின் விரல் அவளை தீண்டிச் செல்ல, அதிசயம் போல கண்டாள்.
குழந்தையுடன் உள்ளே அதிதியையும் அழைத்து கொண்டு போனான். மெல்ல சாய்ந்து தன் சக்தி எல்லாம் வடிந்து கிடந்தவளை அவனது உச்சி முத்தமும் அதிதியின் சின்ன அணைப்பும் தேற்றின. குழந்தையை அவள் கையில் குடுக்க, தந்தைக்கும் தாய்க்கும் நடுவில் அதிதி நிக்க, அந்த அழகான காட்சியை செல்போனில் பதிவு செய்து கொண்டான் வாசு.
இருவீட்டாரும் வந்து அவர்களை பார்த்தனர், வரதராஜன் தான் பேரனை தூக்கிக் கொஞ்சியவர், ” ரொம்ப நன்றி மா,பேரனையும் என் பேத்தியை குடுத்ததுக்கு” என்றார் அவரை ஆச்சர்யமாக பார்த்தவள், ” நானும் உங்களுக்குன் நன்றி சொல்லணும் மாமா, இந்த குடும்பத்துல என்னையும் ஒரு ஆளா ஏத்துகிட்டத்துக்கு” என்றாள் இருவரும் புன்னகைத்து கொண்டனர்.
அவளை வீட்டிற்கு அழைத்து வந்தனர் முப்பது முடிந்ததும் , யாகம் வளர்த்து தீட்டை கழித்து விட்டு,அன்றே “அநிரன் ” என்று பேரை வைத்து விட்டு வீட்டிற்கு அழைத்து சென்றனர் சாகரனின் குடும்பம்.
ஆறு மாதத்திற்கு பிறகு, அந்த மண்டபம்
முழுவதும் சொந்தங்கள் கூடி இருக்க, அப்போது தான் தாலி கட்டி மிருவை தன் மனைவியாக மாற்றி இருந்தான் வாசுதேவ கிருஷ்ணன்.
மேடையில் மணமக்கள் ஜொலித்து கொண்டிருக்க, வந்தவர்களை ஆசிர்வதித்து விட்டுச் சென்றனர். பானுமதிக்கு தன் இரு மகள்களை கண்டு நிறைவாக இருந்தது.
கல்யாணம் வேண்டாம் என்றவள், இன்று இரு பிள்ளைகளை வைத்துக் கொண்டு கணவனோடு சிவன் பார்வதியை போல தங்க விக்ரகமாய் ஜொலிப்பவளை கண்டு போதவில்லை அவரது கண்கள் .
மாலையில் அவர்கள் இதர சடங்குகள் முடிக்க, இரவு உணவிற்கு பின் மணமக்கள் அறையை சாகரன் நிழலி தயார் செய்ய ,அவர்களது நினைவு அவர்களது முதலிரவுக்கு சென்றன. நிழலி தான் சாகரனை கேலி செய்து சிரித்தாள்.பின் மணமக்களை அறையில் விட்டுவிட்டு,தங்கள் அறைக்குள் தஞ்சம் அடைந்தனர். சுவர் ஓரமாக அதிதியை போட்டுக் கொண்டு, சேலை தொட்டிலில் அநிரனை தூங்க வைத்து விட்டு இருவரும் நடுவில் படுத்துக் கொண்டனர்.
“சாகரா, நவ் ஐ அம் கம்பீளிட் உமன், நீ இல்லாமல் இது சாத்தியம் இல்லடா ! லவ் யூ சோ மச் ஐயங்கார் ! இதே லவ் சப்போர்ட் , ஒரு பொண்ணுக்கு கிடைச்சா, அந்தப் பொண்ணு எந்த உயரத்துக்கும் போவா, நீ இல்லாது நான் இல்லை சாகரா, இந்தக் காத்தையும் முடிஞ்சு வச்சுகிட்ட” என்றாள்.
“பின்ன, இந்தக் காற்று எனக்கு எனக்கு மட்டுமே சொந்தமானதாச்சே ! என்னை தேடி வந்த என் மூச்சு காற்றாச்சே !எனக்கு ஒண்ணுன்னா புயலா மாற காற்றாச்சே ! என் வீட்ல வீசற தென்றல் காற்றாச்சே ! எனக்குள்ள அடங்காத என் காதல் காற்றாச்சே !
நீ சொன்னது போல், புருசனோட கஷ்ட நஷ்டத்திலையும் வெற்றி தோல்வியும் கூட இருக்கற பொண்டாட்டி கிடைச்சா மனுஷன் சாதிக்காம இருப்பானா? லவ் யூ பட்டர்பண், என் வாழ்க்கையில எல்லா சந்தோசத்தையும் குடுத்து, கூட இருக்கிறேத்துக்கு அதிதி & அநிரனுக்கு , புதுசா ஸ்டார்ட் பண்ண போற கம்பெனிக்கு நிம்மதியான உறக்கத்திற்கு இன்னும் சொல்லிட்டே போலாம்..
“போலாம் போலாம் , இப்ப தூங்கப் போலாம்” என்றவளின் இதழை மென்மையாய் முத்தமிட்டு, நெஞ்சில் போட்டு கண்ணை மூட, சுகமாக உறக்கத்தை இருவரும் தழுவினார்கள்.
முற்றும்
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
11
+1
+1

