
கால்களை மெத்தையில் நீட்டி , நாற்காலியில் தன்னை வாகாய் பொருத்திக் கொண்டவன், தன்னவளை தன் மேல் படர விட்டு, இதயத் துடிப்பை தாலாட்டாக்கி , தலை வருடலில் தூங்க வைத்து கொண்டிருந்தான்.
மெத்தையில் அதிதி உறங்கி கொண்டிருந்தாள்.
மூவரும் குமிளி வந்திறங்கி ஒரு மணி நேரமானது. மாலை ஐந்து மணிக்கு மதுரையிலிருந்து கிளம்பியவர்கள், இரவு ஒன்பது மணிக்கு தான் வந்து சேர்ந்தனர். தமிழ்நாடு பாடர்ரில் இறங்கி கேரளாவிற்குள் நுழைந்தனர்.
அங்கே இரவு உணவை முடித்து விட்டு தனக்கு தெரிந்த நண்பர்கள் மூலம் ஹோம் ஸ்டேவில், ஐந்து நாட்களுக்கு ரூம் எடுத்து தங்கினார்கள். ஹோம் ஸ்டே என்பது வீட்டிலே பல அறைகள் போல கட்டி, வாடகை விட்டு சம்பாதிக்கும் மினி ஹோட்டல்.
வந்த அசதியில் அதிதி உறங்கிட, அதிதியை பார்த்தவாறே அமர்ந்தவளுக்கு உறக்கம் இம்மியளவும் வரவில்லை. அந்த நிகழ்வுக்கு பின் நிழலி, தூக்கத்தை மறந்து மூன்று நாட்கள் ஆனது. கண்களை மூடினால் அனுவின் முகம் குருதியோடு வர, பட்டென எழுந்து அதிதியை தான் பார்ப்பாள். அவள் அருகில் இருப்பதை கண்டதும் தான் உயிரே வரும், அவளை அணைத்து கொண்டு, கொட்ட கொட்ட முழித்தே இருப்பாள். சரியாக உறங்காததால் உடல் நிலை சரியில்லாமல் போக, மருத்துவரும் வந்து அவளை சோதனை செய்து மருந்தளித்து விட்டு, அவளுக்கு இடம் மாற்றம் தேவை என்று சொல்லிவிட்டு சென்றார். கிருஷ்ணனும் ஒருவாரத்திற்கு அதிதியையும் நிழலியையும் எங்காவது அழைத்து செல்லும் படி சாகரனிடம் கேட்க, அவனும் சரியென்று ஒத்துக் கொண்டான். தன் நண்பர் குமிளியில் இருப்பதால் அங்குப் போகச் சொன்னார்.
சாகரன், வீட்டில் கேஸ் விஷயமாக ஒருவாரம் வெளியூர் சென்று வருவதாகச் சொல்ல, வரதராஜனை தவிர யாரும் நம்பவில்லை. கண்ணம்மாவிடம் உண்மையை சொல்லிவிட்டு , அவர் நிம்மதியை பறித்து கொண்டு சென்றான்.
மூவருமாக கிளம்பி குமிளிக்கு வந்து சேர்ந்தனர். இங்கு வந்ததும் பேருக்கு உணவை கொரித்தவள், உறங்காமல் அமர்ந்திருக்க, மெத்தையில் அமராமல் நாற்காலில் அமர்ந்து, கைகளை விரித்து அவளை வாயென்று அழைக்க, தந்தையாய் எண்ணிய சாகரனின் அணைப்பு கொண்ட கதகதப்பை தனக்கென கொண்டாள்.
நிழலியை தன் மேல் போட்டுக் கொண்டவன், தலையை வருடிக் கொண்டே, ” பேபி ! இங்க வந்ததே, அந்த இன்சிடெண்ட்ல இருந்து வெளிய வரதுக்கு தான். அதயே நினைச்சிண்டு உட்கார இல்ல, முடிந்த மட்டும் அதை நினைக்காத டி ! ” என கேட்டுக் கொள்ள,
” நான் என்ன வேணும்ன்னா நினைக்கறேன் டா. கண்ண மூடினாலே, கடைசியா பார்த்த அனுவோட முகம் தான் வருது சாகரா ! மறக்க முடியல !” என வருந்தினாள்.
“மறக்க வச்சிடுறேன் பேபி ! அதுக்கு தான உன்னை இங்க கூட்டிண்டு வந்திருக்கேன். இந்த ஊர்ல இயற்கை அழகை, என்னோடவும் அதிதியோடவும் ரசிச்சிண்டு, நான் குடுக்கற மருந்தை மூணு நேரமும் சாப்பிண்டு இருந்தால், எல்லாம் மறந்து பழைய ஹாப்பியான நிழலியாகிடுவ டி !” என்றான்.
“அதென்ன மருந்து?!” எனக் கேட்டு முடிப்பதற்குள் குடுத்து இருந்தான் அவன். இதழோடு இதழைப் பொருத்தி, தன் நெஞ்சோடு அவளை சேர்த்து, காதல் முத்தம், அவளுக்குள் பாய்ச்சி, அவள் மனதில் எழுந்த குற்றவுணர்வு , கவலை , சோர்வுக்கு எல்லாம் மருந்தாக அனுப்பினான். எல்லாம் மறந்து முத்தத்திலே இருவரும் லயிக்க, அந்த நிமிடம் அவள் அனைத்தையும் மறந்து தான் போனாள் . தன் நெஞ்சில் பதிந்த அவளது நெஞ்சு மூச்சுக்கு ஏங்கி, ஏறி இறங்கவே அவளை விட்டான்.
“எப்படி பேபி நம்ம மருந்து? மார்னிங் நூன் , நைட் சாப்பிட்டாலே போதும்,
இடையில் ஈவினிங் கூட சாப்பிடலாம், நமக்கு தேவை எந்த சைடு எஃபேக்ட் இல்லாம, க்யூர் ஆகனும். இந்த மருந்து எல்லா வலிக்கும் பெஸ்ட் !” மருத்துவனாகவே மாறிப்போன சாகரனை உள்ளுக்குள் வியந்த படி வெளியே பொய்யாய் கோபம் கொண்டு அவன் நெஞ்சில் குத்தினாள்.
“ஃபிராடு ஐயங்கார் நீ !”
“இல்லையே ரொமாண்டிக் ஐயன்கார் நான் !” என்று கண்ணடிக்க , வெட்கம் கொண்டு அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். ” கண்ண மூடி தூங்குடா உன் சாகரன் பக்கத்துல தான் இருக்கேன்” என்று இறுக்கி அணைக்க, அவன் கழுத்தில் முகம் புதைத்து கண்களை மூட ஆரம்பித்தவளுக்கு உறக்கமும் அணைக்க, உறங்கி போனாள்.
அவளது உறக்கத்தை கலைக்காமல் அவளை மெத்தையில் கிடத்தி போர்வையை போர்த்தியவன், கன்னத்தில் இதழ் பதித்து விட்டு அதிதி பக்கம் வந்து படுத்தவன் அவளை பார்த்து கொண்டே உறக்கத்தை தழுவினான்.
சாளரத்தின் வழியே அழற்கதிரின் கதிர்கள் மெல்ல மெல்ல நுழைய, அறை முழுவதும் விரவிக் கிடந்த குளிருக்கு அக்கதிர்கள் இதமளித்தன. விழித்திறந்தவள் எழுந்து அமர, சாகரனை அதிதி கட்டிக் கொண்டு உறங்கும் அழகான காட்சியை கண்டு புன்னகைத்தவள், அவர்கள் உறக்கத்தை களைக்காதவாறு பால்கனி கதவை திறந்தாள். குளிர் காற்று , சூரியக் கதிர்களோடு அவள் மேனியில் போட்டி போட, இவ்விரண்டிற்கும் போட்டியாய் அவள் மேனியை அணைத்து இருந்தன வலிய கரங்கள்.
“எப்போ டி எழுந்த?” எனக் கேட்டு அவள் செவியை சிவக்க வைத்தவன், அவள் தோளில் தாடையை பதிக்க, ” அதான் மூக்கு வேர்த்து வந்துட்டியே ! இப்போ தான் எழுந்தேன்” என்று அவன் புறம் திரும்பினாள்.
அவள் இதழை கண்டவன் “மருந்து சாப்பிடலாமா பேபி?அதுவும் பிரேஷ்ஷா, அன்னைக்கு பண்ணியே டெர்டி கிஸ் போல ” என நெருங்க, “சாகா !” கண்ணை கசக்கி கொண்டு அதிதி குட்டி வரவும், ” இப்ப உன் பொண்ணுக்கு மூக்கு வேர்த்திருச்சு. போ போய் அவள பாரு !” என்றாள் கேலியாக, ” பார்கிறேன் டி. பட் மார்னிங் கிஸ் கான்போர்ம் ” என்று நியாபகப்படுத்தி விட்டு அதிதியை தூக்கிக் கொண்டான்.
“நாம எப்போ வெளிய போவோம் சாகா !” எனக் கேட்க, ” இதோ இப்ப, குளிச்சு, கிளம்பிண்டு, சாப்பிட்டதுக்கு அப்புறமா, இன்னைக்கு முழுக்க அவுட்டிங் தான் வாங்க வாங்க ” நிழலியை உள்ளே அழைத்து வந்தான். மூவரும் வெளியே கிளம்ப தயாரானார்கள். முதலில் தயாரான சாகரன் காலை உணவிற்காக கீழே சென்றான். அதற்குள் இவர்களும் குளித்து கிளம்பி தயாராகி இருக்க, உள்ள வந்த சாகரன் நிழலியை பார்த்து “வாவ்” என அருகே வந்தவன், அதிதியை தூக்கிச் சுத்த, நிழலிக்கு கோபம் வர, அவன் முதுகிலே ஒரு அடி போட்டாள்.
“என்ன பார்த்து தான வாவ்னு சொன்ன , அவளை தூக்கி சுத்துற?” என பல்லைகடித்தாள்.
“அடியே உன்னையும் தூக்கி சுத்தனும்ன்னா சொல்லு சுத்தறேன், அதுக்காக அடிக்கற வேலை எல்லாம் வச்சுக்காத!” என்று வலித்தது போல நெளிந்தான்.
“சீ பே !”
“ஓகே ஓகே மருந்து சாப்பிடனும் ” என நிழலியை நெருங்க, ” என்ன மருந்து சாகா ?!” மெத்தையில் இறக்கி விட்டிருந்த அதிதி, தன் அருகே இருப்பது அப்போது தான் நியாபகத்துக்கு வந்தது.
தலையை சொறிந்தவன், நிழலியை பார்க்க, அவளோ நாக்கை துறுத்திக்காட்டி கேலி செய்தாள். ” இரு டி இரு !” என்றவன், “அதிதி பேபி, அம்மாக்கு ஃபிவர் வந்ததுல, அப்போ டாக்டர் கொடுத்தார்ல அந்த மருந்த சொன்னேன். சாப்பிட்டு மருந்து சாப்பிடலாம். பிரேக்ஃபாஸ்ட் வர வரைக்கும், நாம் ஹைட் அண்ட் சிக் விளையாடலாமா?” என்று கேட்டான் நிழலியை பார்த்து ” எப்படி?” என்று புருவமுயர்த்தினான். அவளும் உதட்டு வளைத்தாள். ” இப்போ அதிதி ஸ்டெப்ஸ் கிட்ட போய் பிஃப்டி எண்ணுவீங்களாம், சாகா போய் ஒளிஞ்சுப்பேனாம்” என்றிட, வேகமாக படியருகே சென்று கண்ணை மூடி எண்ண ஆரம்பித்தாள் சத்தமாக, உடனே வேக வேகமாக உள்ளே வந்தவன், கண்ணடியில் தன்னை சரி செய்து கொண்டிருந்தவளை வேகமாக திருப்பி இதழை கொய்து விட்டு மருந்தை அளித்தான்.
இருவரும் அதில் லயிக்க, அதிதி, வெளியே இருந்தவாறு ,” சாகா, கெளண்ட் பண்ணிட்டேன், வரப் போறேன்” என்றிட, அவளை விடுத்து வேகமாக ஓடிச் சென்று பால்கனியில் ஒளிந்து கொண்டவனை கண்டு வாய்விட்டே சிரித்தாள் நிழலி.
அதிதி அவனை தேடி கண்டுபிடித்து “அவுட்” என்று குதித்தாள். அதற்குள் அவர்களுக்கு கீழிலிருந்து காலை உணவு வர மூவருமாக உண்டு விட்டு, வெளியே முக்கியமான இடங்களுக்கு சென்று சுத்திப் பார்த்து, போட்டோ எடுத்துக் கொண்டு மதியம் போல அறைக்கு வந்தார்கள்.
கீழே கொடுத்த மதிய உணவையும் உண்டு மெத்தையில் மூவரும் விழுந்தனர். சோர்வில் அதிதி உறங்கிவிட, நிழலியை மடியில் அமர்த்தி கதை பேசி மருந்தை கொடுத்து தன் மேலே உறங்க வைத்திருந்தான்.
இவ்வாறே ஐந்து நாட்களுக்கு குமிளியில் அனைத்து இடங்களிலும் சுற்றி பார்த்து விட்டு, மருந்தையும் புகட்டிவிட்டு அந்த நிகழ்வை அவள் மனதில் இருந்து முற்றிலுமாக அகற்றிவிட்டான். அங்கிருந்து கிளம்பும் நேரம் வர, அதிதியோ சாகரனிடம், “சாகா, எப்போ நம்ம மூணு பேரும் ஒண்ணா இருப்போம்? நீ தான் நிழலி கிட்ட லவ் சொல்லிட்டேளே ! இன்னும் ஏன் தனியா இருக்கோம்? எப்போ ஒண்ணா இருப்போம்” என்று கேட்டிட, நிழலியும் சாகரனும் பார்த்துக் கொண்டனர், “மதுரைக்கு போனதும் அதான் வேலை. சீக்கிரமா நீ , நான் , நிழலி மூணு பெரும் ஒண்ணா இருக்கலாம் பேபி , இது என் பிராமிஸ் ” என்றான்.
“இது நடக்குமா சாகரா? உங்க வீட்ல என்னை ஏத்துப்பாங்களா?” நிழலி கவலையாக கேட்க,
“கண்டிப்பா ஏத்துப்பாங்க, ஏத்துக்க வைப்பேன். உன் ஆசை படியே அவங்க பெர்மிஷனோட கல்யாணம் பண்ணுவோம் எனக்கு நம்பிக்கை இருக்கு நிழலி” என்று அவளை தேற்றி நம்பிக்கை அளித்தான்.
மூவரும் மதுரைக்கு வந்தனர், வழமைப் போல நாட்கள் செல்ல, சாகரன், தன் தந்தையிடம் பேச வேண்டிய நாளை எதிர்பார்த்திருக்க, அந்த நாளும் வந்தது.
அன்று மாலை வேளையில் சேதுராமன் சோர்வாக வரதராஜனின் இல்லம் நுழைந்தார். அவரை வரவேற்று காபி கொடுத்து உபசரித்தார் கண்ணம்மா !
“என்ன அண்ணா, உங்க முகம் வாடி போயிருக்கு நோக்கு என்னாயிருத்து?” அவர் அக்கறையாக கேட்க, அப்போது வரதராஜனும் அங்கு வந்தார்.
“என்ன சேது, ஏன் இப்படி இருக்கே?” எனக் கேட்டு அருகே அமர்ந்தார்.
“வரதா, என்னை மன்னிச்சிடு !” அவர் கையைப் பற்றி கேட்டார். ” எதுக்கு டா மன்னிப்பு கேக்கற? என்ன பண்ணிண்டன்னு மன்னிப்பு கேக்கற?”
“என் பொண்ணு, அந்த மதுசூதனன் பையன, விரும்பி இருக்காள்.அந்தப் பையனும் என் பொண்ண விரும்பிருக்கான். அவா வீட்லே இருந்து வந்து பொண்ணு கேட்டாள். நானும் வரதனோட பிள்ளைக்கு என் பொண்ண கொடுக்க இருக்கிறதா சொன்னேன். அதுக்கு அவா புள்ளைங்க வாழ்க்கை தான முக்கியம். அவா ஒருத்தர் மேல ஒருத்தர் ஆசை பட்டுண்டா, அவா ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கறதான முறைனு சொல்றா. என் பொண்ணும் எனக்கு அந்தபையன் தான் வேணும் அழறா ! நேக்கு என்ன சொல்றதுனே தெரியல வரத, பொண்ணு அழுகைய பார்க்க முடியல !” என தயங்கியே கூறி முடிக்க,
“அதுனாலே இந்த சம்பந்தம் வேணாம், அவா பையனையே மாப்பிள்ளையா எடுத்துக்க போறேன் சொல்ல வர அதான சேது. பையனும் இன்ஜினியர் வேற, நீ ஆசைப்பட்டது போல மாப்பிள்ளை கை நிறைய சம்பாதிக்கறா, என் புள்ள, சம்பளமே இல்லாத வேலைக்கு போறா, என் புள்ளையாண்டா விட, அவா ஒசத்தினு நினைச்சு, பேசி முடிச்சண்டு வந்து விஷயத்தை சொல்ற அப்படி தான சேதுராமா ?!” எனக் கத்தவும் அனைவரும் அங்கே கூடினார்கள். சாகரனுக்கு விஷயம் புலப்பட்டது.
“வரதா, நான் சொல்றத கொஞ்சம் கேளேன் !” அவர் கெஞ்ச, ” போதுமோய் ! நீ உன் பொண்ணுக்கு அந்தப் பையனை கட்டிவையும் இதுக்கு மேலே உன் கூட எனக்கு சம்பந்தம் பண்ண இஷ்டமில்லை நீ போகலாம்” எனக் கையெடுத்து கும்பிட்டார்,
“வரதா !” எனவும் அவர் முகத்தை திரும்பிக் கொண்டார். அவரை சந்திக்க முடியாமல் சென்றுவிட்டார். சாகரனுக்கு இப்போது தான் உயிரை வந்தது. ” சங்கரா, நம்ம பதம்நாதன் கிட்ட சொல்லி, சாகரனுக்கு பொண்ணு பார்க்க சொல்லு” என்றார்.
“அதுக்கு அவசியம் இல்லப்பா !” என்றான் சாகரன். அவனை புரியாமல் பார்த்த வரதராஜன் “ஏன் கண்ணா அவசியம் இல்லைங்கற ?”
“கண்ணா ! போதும் நீ உள்ள போ !” பேச்சுக்கு தடைப் போட்டார் கண்ணம்மா .
“அம்மா, இது என் வாழ்க்கை மா, நான் தான் பேசணும் இதுக்கு மேலே தாமதிக்க முடியாது. நான் சொல்லிடுறது நல்லது !” என்றவன், மூச்சை இழுத்து விட்டு, “அப்பா, நான் நிழலிய விரும்பறேன் அவளை தான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். எனக்கு கல்யாணம் ஒண்ணுன்னா அவா கூட தான். இல்லேன்னா நேக்கு கல்யாணமே வேணாம்”என மடமடவென கொட்டித் தீர்த்தான்.
“சாகரா ! என்ன பேசிண்டு இருக்க நீ? அவா இந்த வீட்டுக்கு மாட்டு பொண்ணா, நான் ஒருக்காலும் சம்மதிக்க மாட்டேன். இந்த ஊர்ல நேக்குன்னு மதிப்பும் மரியாதையும் இருக்குனு நோக்கு தெரியும் தானே, அதை கெடுத்துக்க சொல்றீயா? குழந்தையோட இருக்கறவாள கல்யாணம் பண்ணிக்கணும் நினைக்கற, நோக்கு அசிங்கமா இல்ல ! உன் மனசுக்கு தப்பா படல, ஆச்சார குடும்பத்துல இப்படி ஒரு கலப்பு மணம் தேவையா? நான் அதுக்கு ஒரு போதும் சம்மதிக்க மாட்டேன்” என்றார் உறுதியாக,
“என் மனசுக்கு பிடிச்சதுனால தான்ப்பா அவாள கல்யாணம் பணிக்க நினைக்கறேன். பதினைந்து வயசுல இருந்தே அவளை தான் என் ஆம்படையாளா நினைச்சுண்டு இருக்கேன். அவா வாழ்க்கை இப்படி ஆனதுல உங்களுக்கு பங்கு உண்டு, அவசரம் அவசரமா அவகிட்ட இருந்து என்னை பிரிச்சு கேனடாக்கு அனுப்பி வச்சேள். நான் அவாளை மறந்திடுவேன் தான, என்னை அவசர படுத்தினேள். ஆனால் நான் மறக்கலப்பா, என் உயிரா கலந்தவள எப்படி மறக்க முடியும்? எனக்கு அவா தான் வேணும் அவா இல்லாத வாழ்க்கை நேக்கு வேண்டாம் பா ! புரிஞ்சுக்கோங்க என் உணர்வு , உடல் , உயிர் எல்லாத்தையும் அவா தான் ஆட்சி செய்றா ! அவ இல்லேன்னா நான் எதுவுமே இல்லப்பா ! நேக்கு நிழலி வேணும்மா ப்பா ! உங்களால அம்மா இல்லாம்மா எப்படி இருக்க முடியாதோ ! அப்படி தான் எனக்கும். என் கடைசி காலத்துல நான் சாகும் போது ஒரு நிறைவான சாவு எனக்கு கிடைக்கணும்ன்னா, அது நிழலியோட வாழ்ந்தால் மட்டும் தான் பா முடியும் .
உங்களுக்கு உங்க மரியாதை மதிப்பு முக்கியம். அதே போல எனக்கு என் காதல் முக்கியம்னு சொல்றேன் பா, உங்களுக்கு உங்க மகனை விட, அது தான் முக்கியம் ன்னா சொல்லிடுங்கோ, நான் இந்த வீட்டை விட்டுப் போயிடுறேன். ஆனால் நிழலி இல்லம்மா என்னால் வாழ முடியாது ப்பா !” தன் முடிவிலும் உறுதியாக இருப்பதாக காட்டி விட்டு சென்றான். அங்கிருப்பவர்களை முறைத்து விட்டு உள்ளே சென்றார்.
மறுநாள் யாருடன் பேசாமல் விறைப்பாகவே இருந்தார், கண்ணம்மாவிற்கு கணவனா? மகனா? என்று எண்ணியே நொந்து போனார் இருந்தது. வீடே கலை இழந்து போயிருந்தது.
இரவில் தன் கணவரிடம் வந்தவர், “ஏண்ணா !” என்றார். “என்ன உன் புள்ளையாண்டாளுக்கு பரிந்து பேச வந்திருக்கீயா?”
“அதுக்கு இல்லன்னா, அவன் வாழ்க்கை அவனுக்கு புடிச்ச மாதிரி இருக்கட்டுமே, அவன், அந்தப் பொண்ண உயிருக்கு உயிரா விரும்பறான். இதுல வேற பொண்ணோட எப்படிண்ணா சந்தோசமா இருப்பான்? நேக்கு அவன் காதல் புரியறது போல நோக்கு ஏண்ணா புரியல? மத்த புள்ளைங்களோட வாழ்க்கை நல்லா அமைஞ்சது போல இவன் வாழ்க்கை அமையனும் நினைக்கறேண்ணா , அவன் முடிவுல இருந்து அவன் மாறது போல தெரியல நீங்க இறங்கி வாங்கோண்ணா !” எனக் கெஞ்ச,
“மத்த புள்ளைகளுக்கு நாம தான வாழ்க்கை அமைச்சு கொடுத்தோம். நல்லா தானே இருக்காள். இவனுக்கும் அப்படி ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுக்க மாட்டோமா ? இவனா தேடிண்டு நம்மளை ஏன் கஷ்டப்படுத்தறான்? என்னால அந்தப் பொண்ண, இந்த வீட்டு மாட்டுப்பொண்ணா ஏத்துக்க முடியாது. இன்னொருத்தன் குழந்தைக்கு இவன் தோப்பானாரா இருக்க போறானா? இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன். நாளைக்கு அந்தப் பொண்ணு வீட்டுக்கு போய் அவகிட்ட பேசுறேன். நீ என் குடும்பத்துக்கு ஒத்து வரமாட்ட, நீ எங்காட்கள் இல்ல, எங்க சம்பரதாயம் எங்க வழக்கம் நோக்கு தெரியாது. அதுனால என் புள்ளையாண்டா கிட்ட இருந்து ஒதுங்கிடுனு சொல்ல போறேன் !” என்று குண்டை தூக்கி போட்டுவிட்டு உறங்கச் செல்ல, தன் மகனை எண்ணி கலங்கி போனார் கண்ணம்மா.
அவர் சொன்னா படி , வரதராஜன் நிழலியை பார்க்க அவள் வீட்டிற்குச் சென்றார். அங்கே கிருஷ்ணனும் பானுமதியும் அவரை வரவேற்க, சோபாவில் அமர்ந்தார்.
“என்ன சாப்பிடுறீங்க? “பானுமதி கேட்க, கை நீட்டி தடுத்தவர். “நான் இங்க உறவாட வரல, உங்க பொண்ண கூப்பிடுங்கோ !” என்றதும் இருவரும் அதிர்ந்தனர். நிழலியும் அங்கு வந்தாள்.
“வாங்க ப்பா !” என்றாள். அவளை பார்க்க முடியாமல் தடுமாறியவர், ” நான் வந்த விஷயத்தை சொல்லிடுறேன். நேக்கு உன்னை, எங்க வீட்டுக்கு மாட்டு பொண்ணாக்கிக்க இஷ்டமில்லை. என் குடும்பத்துக்கு, எங்க வழக்கம் முறை தெரிந்த பொண்ணு தான் என் வீட்டுக்கு மாட்டு பொண்ணா வரனும். நாங்க வேத்தாள கட்டிக்கிறது பெரும் பாவம். அதை செய்ய நேக்கு விருப்பமில்லை. நீயே என் புள்ளையாண்டா வாழ்க்கையிலிருந்து போயிரு ! ” என்று கையெடுத்துக் கும்பிட அதிர்ந்து விட்டாள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
5
+1
+1

