
“சாகரனும் என்னை என்ன ஏமாத்திட்டான் மாமா?நான் ஏமாந்து போயிட்டேன் மாமா” எனக் கீழே விழுந்து கதறினாள்.
“என்ன மா சொல்ற? புரியற மாதிரி சொல்லுடா ” பதறி போய் கிருஷ்ணன் கேட்க, அங்கு நடந்ததை கூறினாள். “அவனுக்கு ஏற்கனவே கல்யாணம் பேசி முடிச்சுட்டாங்க மாமா ! அதை என் கிட்ட இருந்து மறச்சுட்டான். அவங்க அப்பா அடுத்த விஷேசம் அவன் கல்யாணம் தான், வந்திடுமான்னு எங்கிட்ட சொல்றாரு. என்னை ஏமாத்திட்டான் மாமா !”
“என்னடி ஏமாத்திட்டான் ஏமாத்திட்டாங்கற ? கல்யாணத்துக்கு பேசி இருக்கறத தான மறச்சான். என்னமோ கல்யாணம் பண்ணி மறச்சத மாதிரியே பேசற !அவன் ஏன் டி உன்ன ஏமாத்தனும்? நீ தான் உன்னை நீயே ஏமாத்திக்கற !” பானுமதி தன் ஆதங்கத்தை கொட்டினார்.
“அப்போ, அவன் ஏமாத்தலனு சொல்ல வர்றீயா? கல்யாணத்துக்கு பேசி முடிஞ்சிருக்காங்க, என்னை காதலிக்கிறேன், என்னை தான் கல்யாணம் பண்ணிப்பேன் சொன்னதெல்லாம் ஏமாத்தற வார்த்தைகள் தான !”
“எது டி ஏமாத்தற வார்த்தைகள், அவ மறைச்சது மட்டும் தான் உனக்கு ஏமாற்றமா இருக்கா? நீ அவனை காதலிச்சும், அதை மறச்ச, அது ஏமாத்தறது இல்லையா?”எனவும் கோபம் இன்னும் பழியாக வர,
“ஆமா, நான் அவனை காதலிச்சேன் தான். ஆனா இப்போ இல்ல , அவன் ஒரு ஏமாத்துக்காரன்”
“அவனை இன்னொரு வாட்டி ஏமாத்துகாரன் சொன்ன கழுத்தை நெறிச்சு நானே கொன்னுடுவேன். இந்த ஒரு விஷயத்தை வச்சுட்டு அவன ஏமாத்துக்காரன் சொல்வீயா?”
“உனக்கு நான் புள்ளையா, இல்ல அவன் புள்ளையா? அவனுக்கே சப்போர்ட் பண்ணிட்டு இருக்க?அவன் உன் பொண்ண ஏமாத்தனவன்”
“நிறுத்து டி, என்ன ஏமாத்தினவன்? உன் கையில் பிள்ளைய குடுத்துட்டு இது என் பிள்ளை இல்லேன்னு சொன்னான?” எனக் கேட்க , உள்ளுக்குள் சுறுக்கென்று வலித்தது.
“அக்கா, நீ அமைதியா இரு நான் அவ கிட்ட பேசுறேன்” கிருஷ்ணன் தடுக்க, ” நீ சும்மா இருடா ! நான் இன்னைக்கு பேசியே ஆகனும், சொல்லுடி என்ன ஏமாத்தினான்? அவங்க வீட்டுல அவனுக்கே தெரியாம பேசி முடிச்சுட்டாங்க. அத உன்கிட்ட சொன்னால், நீ அவன் காதலை ஏத்துக்க மாட்டேன் தான் மறச்சிருப்பான். அவன், உன்னை சின்ன வயசுல இருந்தே விரும்பினவன் டி. நீ அந்த ஆதர்ஷன விரும்பி இருந்தாலும் உன்னை விட்டு அவன் போகல உன் கூட தான் இருந்திருக்கான். அந்த நிலைமையில் உன்ன காதலிச்சுட்டு, மனசுல வேதனைய வச்சுட்டு வாழ்ந்துட்டு இருக்கான். அவனா ஏமாத்துகாரன்.பழச எல்லாம் மறந்துட்டியா? அவனுக்கு ஏன் நீ இவ்வளவு சப்போர்ட் பண்ற நீ கேக்கலாம்? அவனுக்கு இல்ல நியாயம் எங்க இருக்கோ அந்தப் பக்கம் நின்னு தான் பேசுறேன். உங்க அப்பா இருந்தால் கூட சாகரனுக்கு தான் சப்போர்ட் பண்ணிருப்பார். ஏன் பல முறை சாகரன் , தனக்கு மருமகனா வந்தால் நல்லா இருக்கும் சொல்லிருக்கார் அந்த மனுசன். பழச நினைச்சு பார்த்துட்டு, அவன் ஏமாத்துக்காரனா? இல்லையா? யோசி டி உனக்கே புரியும்”
“இவ்வளவு பேசுறீயே, அவன் என்னை காதலிக்கறத வீட்ல சொல்லாம இருக்கான், ஏன் சொல்ல வேண்டியது தான !”
“எப்படி டி சொல்வான்? உங்க வீட்ல என்னை ஏத்துகிட்டா தான் உன்னை கல்யாணம் பண்ணிப்பேன் நீ சொன்னா எப்படி அவன் வீட்ல சொல்லுவான்? அவங்க வீட்ல ஒத்துக்கவும் மாட்டாங்க, நீயும் ஏத்துக்கவும் மாட்டா, அந்த புள்ள என்னடி பண்ணும் ? நீ உறுதியா உன்னை தான் காதலிக்கிறேன் உன்கூட எப்பையும் இருப்பேன் அவன் கிட்ட சொல்லிருந்தால் வீட்ல அவனும் தைரியமா பேசிருப்பான். ஆனா நீ அவனுக்கு தான் துணையா இல்லையே அந்தப் புள்ள என்ன பண்ணும்? சரி அவன் உன்கிட்ட சொன்னப்போ, நீ அவன காதலிக்கிறேன் சொன்னீயா? உன் காதலை சொல்லாம, அவனை ஏமாத்திட்டான் சொல்ற, நீ தாண்டி ஏமாத்துக்காரி, உன்னையும் ஏமாத்திட்டு அவனையும் ஏமாத்திட்டு, எங்களையும் ஏமாத்திட்டு அதிதயையும் ஏமாத்திட்டு இரு !வாங்க எல்லாரும் போலாம். இவளுக்காக யாரும் அனுதாபம் படாதீங்க, இந்த முட்டாளுக்கு சொன்ன புரியாது… வாங்க எல்லாரும்” என்றவர் பயந்திருந்த அதிதியை தூக்கிச் சென்றார்.
“அண்ணி சொன்னது முழுக்க முழுக்க சரி,அவன் மேல தான் தப்பு இருக்குனு கோபப்பட்டு சாகரன இழந்திடாத, அவன் உனக்கு கிடைச்ச பொக்கிஷம்…” என்று தென்றலும் அழுத்தி விட்டுச் செல்ல அப்படியே அமர்ந்து விட்டாள். அங்கே அவளது போன் மின்னி மறைய, அதை எடுத்து சுவிட்ச் ஆப் செய்து சுவிட்ச் ஆன் செய்தாள்.
அதில் நிழலி, சாகரன் , அதிதி மூவரும் இன்று காலையில் சேர்ந்து எடுத்த முதல் செல்பீயை வால்பேப்பராக வைத்திருந்தாள் அதிதி.
இன்று காலையில், தன்னை தயார் செய்து விட்டு அதிதியை அலங்கரித்தவள், அவளது அழகை ரசித்து ” அழகு பேபி !” நெற்றி முறுக்க, அவளது குண்டு கன்னத்தில் முத்தம் வைத்தாள்.
“எனக்கு முத்தம் ?” எனக் கேட்டு உள்ளே வந்தான் சாகரன். நிழலி அவனை முறைக்க, ” இல்ல அழகா இருக்கறவங்களுக்கு முத்தம் கொடுத்தா, நானும் அழகா தான இருக்கேன். எனக்கும் கொடுக்கலாமே !”எனக் குறும்புடன் கேட்க, அதற்கும் அவளிடம் முறைப்பை பெற்றான்.
“உனக்கு நான் தரேன் சாகா? ” என்றவள் இரு கன்னத்திலும் மாறி மாறி முத்தம் வைக்க, நிழலிக்கும் அந்த ஆசை எழாமல் இல்லை. அவன் கழுத்தில் கைகளை மாலையாக்கி, கன்னம் , நெற்றி , மூக்கு , உதடு என முத்தங்கள் வைக்க வேண்டும் தான். அதையெல்லாம் அடக்கிக் கொண்டவள் தன் புடவையின் மடிப்பை சரி செய்தாள். அதைக் கண்டவன், கீழே முட்டிப் போட்டு அமர்ந்து மடிப்பை சரியாக எடுத்து விட்டான்.
“சாகரா என்ன பண்றா?”
“மடிப்பை எடுக்கறன், பழசெல்லாம் மறந்துடுத்தா?” அதனை சரி செய்து விட்டு எழுந்தவன், ” என்னைக்கா இருந்தாலும் நான் தான் செய்வேன். அப்றம் ரொம்ப அழகா இருக்க, அதுக்கு ஒரு முத்தம் !” நெற்றியில் இதழ் பதித்தான். ” மூணு பேரும் செல்பீ எடுக்கலாமா?” என அதிதி கேட்க, சாகரன் இருவரையும் தன் அணைப்பில் வைத்து கொண்டு எடுத்தான்.
அதை பார்த்து பார்த்து கதறி அழுதாள்.
“லவ் யூ சாகரா லவ் யூ ஸோ மச் ! என்னை மன்னிச்சிடு சாகரா !” என செல்போனை அணைத்து அழுதாள்.
இங்க சாகரன் நிலையில்லாமல் நடந்தான். மாலை வரை அவனுக்கு அடித்தடுத்து வேலைகளை கொடுத்த படி இருந்தார் வரதராஜன். வேதிகாவை வீட்டில் அழைத்து வந்திருந்தனர். அத்தனை வேலையையும் முடிந்து அக்காடா என அனைவரும் உட்கார ,சாகரனுக்கு தான் இறுப்பு கொள்ளவில்லை அறையில் அங்குமிங்கும் நடந்தான்.
வரதராஜன், கோயிலுக்கு சென்று ஒருதரம் பார்த்துவிட்டு வருவதாக சொல்லிவிட்டு வெளியே சென்றிட, அவர் வெளியே சென்று விட்டதை உறுத்தி செய்தவன் , வண்டி சாவியை எடுத்துக் கொண்டு புறப்பட, அவனை தடுத்தார் கண்ணம்மா !
“நில்லுடா எங்க போற?”
“மா, அர்ஜண்ட்டா போகணும் மா போயிட்டு வந்து பேசுறேனே !” என்றான்.
“நீ எங்கயும் போகக் கூடாது , வீட்லே இருடா !” என்றார் கறராக, ” மா…” எனக் கெஞ்சினான்.” என்னாச்சு மா? ஏன் அவனை விட மாட்றேள்?”சங்கரன் வர,
“அவன் எங்க போறான் நோக்கு தெரியுமா? அவன் என்ன பண்றான் தெரியுமா?” அதிர்ந்து பேசாத கண்ணமாவை கோபமாக பேசவைத்தான் சாகரன்.
“சொல்லுடா நீ, என்ன பண்ணினன்னு சொல்லு உன் அண்ணன் கிட்ட சொல்லு” என்று அழுத்தமாய் சொன்னார். விஷயம் ஏதோ பெருசு என்பது போல அனைவரும் அங்கே கூட, ” சாகரா சொல்லு டா, என்ன பண்ண?”
“அண்ணா, நான் நிழலிய காதலிக்கறேன். எனக்கு அவ தான் வேணும் பொண்டாட்டின்னா அவதான் எனக்கு !” பட்டென பானை உடைப்பது சொல்ல, சங்கரன், வெண்ணிலா, ராதிகா, வேதிகா என அங்கிருந்த அனைவருக்கும் அதிர்ச்சி. அவளை பற்றியும் அவன் காதலையும் அனைத்தையும் சொல்லி முடித்தான். இதில் அவனது காதல் புரிந்தாலும், ‘சாத்தியமா?’ எனக் கேள்வியும் எழுந்தது.
“இது சரி வருமா? இன்னொருத்தன் கொழந்த உன் கொழந்த சொல்லிண்டு திரிய போறீயா? அவா யாரு ? நாம யாரு ? நிச்சயம் அப்பா இதுக்கு சம்மதிக்கவே மாட்டார் . அவளை மறந்துடு சாகரா !” ராதிகா சொல்ல, “எப்படிக்கா மறக்க சொல்ற? நோக்கும் இந்தக் குடும்பத்துக்கு எந்த சம்பந்தம் இல்ல மறந்திடு சொன்னால் உன்னால் முடியுமா? இல்ல அம்மா, அப்பாவ மறக்க சொன்னால் முடியுமா ?” என பதில் வேண்டி அவள் முகம் பார்க்க, அவளும் ஏதோ சொல்ல வர,
“அதுவும் இதுவும் ஒண்ணா கேக்காதே, எனக்கு அவளை அம்மா அப்பாக்கு சமமா பிடிக்கும் கா ” என்றான் அழுத்தமாக,
“இல்லடா அவா, கெட்டு போன பொண்ணு? அவளுக்கு ஒரு கொழந்த வேற இருக்கு. அப்படி இருக்க, அந்தப் பொண்ண கல்யாணம் பண்ணிக்கணுமா?”என வேதிகாவும் கேட்க,
“ஏன்க்கா சப்போஸ் , எனக்கு கல்யாணமாகி என் ஆம்படையாள் இறந்து போயிட்டா, நான் குழந்தையோட இருந்தால் , எனக்கு ரெண்டாவது கல்யாணம் செய்து வைப்பீங்க தான ! ஏன் பொண்ணுங்க மட்டும் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்க கூடாதா?” எனவும் வாயை முடிக் கொண்டாள்.
” கல்யாணம் பண்றதே வாழ்நாள் முழுக்க, நமக்கு கடைசி வரைக்கும் கஷ்ட நஷ்டத்துல துணையாக இருந்து அன்பையும் காதலையும் உடலையும் உணர்வையும் பகிர தான். அந்த துணை மனசுக்கு பிடிச்சவளா ஏன் இருக்க கூடாது? உணர்பு பூர்வமான உறவ, அன்பு , காதல் ,பாசம் வச்சு தேடலாம், ஜாதிய வச்சா தேடறது? எனக்கு நிழலிய பிடிச்சிருக்கு. அவ கூட என்னை வாழவிடுங்கோ ! ” என்னும் போதே உள்ளே வரதராஜன் நுழையும் அரவம் கேட்தும் சபை அப்போது முடிந்தது.
மறுநாள் விடிந்ததும் யாரிடமும் எதுவும் சொல்லாமல் நிழலியை தேடிச் சென்றான். கண்ணம்மாவிற்கு அவனையும் வரதராஜனையும் நினைக்க பக்கென்று தான் இருந்தது.
வேக வேகமாக வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்தான் சாகரன். அவனை எப்போதும் போலவே வரவேற்றது அந்தக் குடும்பம். அதிதியை பள்ளிக்கு வம்படியாக தான் கிளப்பினார் பானுமதி. நேற்றும் விடுமுறை எடுத்துக் கொண்டதால் இன்று பள்ளிக்கு அனுப்பிவைக்க, அவளுடன் போராடி தயாராக்கினார். பின் சாப்பிட அடம்பிடிக்க, சரியாக சாகரனும் நுழைந்தான், “சாகா !” எனக் காலை கட்டிக் கொண்டு விம்மி விம்மி அழுதாள்.. அவளை தூக்கி சோபாவில் அமர்ந்தியவன், “எதுக்கு இந்த அழுகை, சாகா இருக்கும் போது?” துடைத்து விட,” நிழலி… உன்னை…” என திணற, ” ஓ.. அழக் கூடாது பேபி ! இதெல்லாம் அந்நிய சக்தியோட வேலை, அதுக்கு எல்லாம் பயந்து அழலாமா? அதிதி பேபிய, அவங்க அப்பா கிட்ட இருந்து யாராலயும் பிரிக்கவே முடியாது. ஒகேவா அழாம சாப்பிடுவீங்களாம். நான் அந்நிய சக்திய ஒரு வழி பண்ணிட்டு வரு வேணாம்”என்று சண்டை போடுவது போல செய்து காட்டினான்.
அதிதி சிரிக்க, அவளுக்கு முத்தம் வைத்தவன், ” போய் சாப்பிடு பேபி !” பானுமதியிடம் கண்ணைக் காட்ட, “பாவம் மருமகனே நீ ! இந்த ரெண்டு பேரையும் வச்சுட்டு எப்படி சமாளிக்க போறீயோ !” என பானுமதி சிரிக்க, நெற்றியில் கோடு கிளித்தவன், மேலே சென்று கதவை திறக்க, திறந்து தான் இருந்தது. உள்ளே வந்தவன் கதவை தாழிட்டு அவளை தேட, அவள் மெத்தையில் இல்லாமல் தரையில் ஓரமாய் கூனிக் குறுகி படுத்து இருந்தாள். அவளை எண்ணி தலையில் அடித்தவன், ‘பேருக்கு தான் வளர்ந்திருக்கா, இன்னும் குழந்த தான்’ என எண்ணிக் கொண்டவன், அவளை தூக்கி மெத்தையில் படுக்கவைத்தான். நெற்று அணிந்த பட்டு சேலையுடன் முகமெல்லாம் உப்பு நீர் காய்ந்த தடமிருக்க, கேசம் களைந்த குழந்தை போல இருந்தாள். அவளை அருகினில் படுக்க கொண்டு நெற்றியில் இதழ் பதிக்க, மெல்ல விழி திறந்தவளுக்கு, அவனது சிரித்த வதனமே காலை காட்சியாக அமைந்தது.
“ஏன்டா என்னை ஏமாத்துன?” சட்டையை பிடித்து கேட்டாள். நான் உன்னை ஏமாத்தனும் நினைக்கல டி, எனக்கு அந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்ல, ஏன் அந்தப் பொண்ணுக்கும் கூட விருப்பம் இல்ல, அவ ஒரு பைன காதலிக்கறா ! அவ படிச்சு முடிச்சதும் பேசி கல்யாணம் பண்ணி வைக்கறேன் சொல்லிருக்கேன். அவ சின்ன பொண்ணு டி அவளுக்கும் எனக்கும் ச்ச… இந்த கல்யாணப் பேச்சு அர்த்தமற்றது, அதான் நான் எதுவும் உன்கிட்ட சொல்லல, அண்ட் உன் முடிவு தெரிஞ்சதும் என் அப்பாகிட்ட பேசலாம் தான் டி இருந்தேன். எங்க வீட்ல என் தோப்பனார் தவிர எல்லார் கிட்டையும் சொல்லிட்டேன். நான் உன்னை ஏமாத்தல , இப்பவாது என்னை நம்புவீயா? உன்னை மட்டும்தான் டி நான் கல்யாணம் பண்ணிப்பேன். இந்த ஜென்மதத்தில நீ மட்டும் தான் என் பொண்டாட்டி. என்னை நம்பு” என்றான் உணர்ச்சி வசத்தோடு.
அவன் விழிகளை நேருக்கு நேராக பார்த்தவள், “ஐ லவ் யூ ஐயங்கார் !” என்று அவள் எதிர்பாரா நேரத்தில் அவன் சட்டையை இழுத்து அவனிதழலில் முத்தம் வைத்தாள். பெரிதாய் கண்களை விரித்தவன், கனவா? நிஜமா ? என தனக்குள் கேட்டுக் கொண்டு தனது கையை கிள்ளி பார்க்க, சுருக்கென்று வலிக்க நிஜம் என்றதும், சேலைக்குள் கையை விட்டு அவளது இடையை பற்றி இன்னும் அருகே இழுத்தான். இருவரும் இதழ்கள் என்னும் வாளை வீசி முத்தச் சண்டையிட்டனர் . அவன் விரல்கள் தேக ஊர்வலம் செல்ல, அவள் விரல்கள் கேசத்தை அளந்தன. மொத்தத்தில் இருவரும் முத்ததத்தில் பித்தாக கிடந்தனர். ‘மார்னிங் பெட் கிஸ்’ இருவரும் சுவைக்க, நிழலியின் போன் அலற அலற, “பச்…” இருவரும் சலித்து கொள்ள, அவனை தன்னிடமிருந்து பிரித்தவள், போனை எடுத்து அட்டண்ட் செய்து ” ஹலோ ” என்றாள். அங்கு என்ன சொல்ல பட்டதோ “அதிதி” என செல்லை நழுவ விட்டாள்.
“என்னாச்சு ?” என்று பதறியவன், போனை காதில் வைத்தான். ” ஹலோ ” எனவும், ” என்னையும் அம்மாவை அடிச்சு போட்டு பாப்பாவ தூக்கிடு போயிட்டாங்க தம்பி… ” என அவர் அழுக, ” அண்ணா , முடிஞ்சா, ஆன்டிய கூட்டிட்டு பக்கத்தில் இருக்க ஹாஸ்பிட்டலுக்கு போங்க. நாங்க வந்திடுறோம், வண்டி நம்பரை நோட் பண்ணிங்களா ? ” எனக் கேட்க அவரும் சொல்லவும் போனை வைத்தான். நிழலி” அதிதி” என சொல்லிய படியே அழுக, ” அழறதுக்கான நேரம் இது இல்ல போய் வேகமாக ஃபிரேஷ் அப் ஆயிட்டுவா, நம்ம பொண்ண தேடுவோம்” என்று அவளை துரித்த படுத்த வேகமாக உள்ளே ஓடினாள். அதற்குள் தனக்கு தெரிந்த போலீஸ் நண்பரை அழைத்து விஷயத்தை சொல்லி, கார் நம்பரை சொல்ல தேடச் சொன்னான்.
அவள் வந்ததும் இருவரும் வேகமாக கீழே இறங்கினார்கள், “மாமா, அதிதிய யாரோ கடத்திட்டாங்க” என்று ஓட்டுநர் சொன்னதை சொல்லி அழுதாள்.
“அப்பா, நீங்க உங்க ஆட்கள் விட்டு ******** இந்தக் கார் நம்பரை வச்சி அதிதிய தேட சொல்லுங்க, வாசு , மித்து, நீங்களும் உன் ஃபிரண்ட்ஸ் கிட்ட சொல்லி
அதித, போட்டோ அனுப்பி தேட சொல்லுங்க .அம்மா, நீங்க ஆன்டி கூட ஹாஸ்பிடல் இருங்க,” என்றவன் நிக்காமல் நிழலியை அழைத்துக் கொண்டு வெளியே சென்றான்.
“இது நிச்சயம் ஆதர்ஷன் வேலையா இருக்கும். அவன் வீட்டுக்கு போலாம் ” என்றாள். அவனும் வண்டியை ஆதர்ஷன் வீட்டில் விட்டான். உள்ளே சென்றவள் “ஆதர்ஷா …!” எனக் கத்த, வினோதினியும் சங்கரும் வெளியே வந்தனர்.
“எங்க உங்க புள்ள ? என் பொண்ணை கடத்தி என்னை பழிவாங்க நினைக்கறானா? அவனை நானே என் கையால் அழிச்சிடுவேன். எங்க அவன்? எங்க என் பொண்ணு?” என நிழலி ஆர்ப்பாட்டம் பண்ண, அவர்கள் முகத்தில் வலி அப்பட்டமாக தெரிந்தது.
“என் புள்ளைய ரெண்டு நாளா காணோம்? நாங்களே இன்னைக்கு போலீஸ் கம்பளைண்ட் கொடுக்கலாம் இருக்கோம்மா, அவன் கடத்திருக்க மாட்டான் மா?” என அவர்களும் அழுதனர்.
“அவன் மட்டும் என் பொண்ணை கடத்தி இருக்கட்டும் , அப்ப இருக்கு அவனுக்கு” என்று மிரட்டி விட்டு சென்றனர்.
மெத்தையில் அந்தப் பிஞ்சு, மருந்து வீரியத்தில் மயங்கிக் கிடக்க, கைகால்கள் கட்டிய நிலையில் கண்ணாடி வழியே தன் மகளை எழுப்ப முயன்று தோற்று கதறி கண்ணீர் வடித்தான். ஆனால் அது அவள் செவிகளுக்கு எட்டவில்லை. அனுவின் கைகள் குழந்தையின் தேகத்தில் அத்து மீறின. ஆதர்ஷனோ, ” டேய் என் பொண்ண விடுங்கடா, என் குழந்தைய விடுங்க டா…” என அழுது கரைய, அனுவோ அவனைப் பாவம் போல பார்த்து விட்டு அதிதியின் மேல் படர ஆரம்பித்தான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
7
+1
+1

