Loading

    யுகா உறங்குவதைக் கண்டவள் ‘இது எதிர்பார்த்தது தானே’என்பது போல கதவைத் தாழிட்டு வந்தாள்.

    தாழ்ப்பாள் சத்தம் கேட்டாலும் விழி திறக்கவில்லை யுகாதித்தன்.

    சொம்பில் பாதாம் பால் இருந்தது. அதனை நிதானமாக டம்ளரில் ஊற்றிக் கொண்டு மேசை மீதிருந்த புத்தகத்தையும் எடுத்துக் கொண்டவள் அங்கிருந்த மென்மெத்தையில் அமர்ந்து கொண்டாள்.

    ஒவ்வொரு மிடறாய் உறிஞ்சியபடி புத்தகத்தைத் திருப்ப அதற்கு மேல் பொறுமை இழந்தவனாய் எழுந்து அமர்ந்து விட்டான் யுகா.

    “தூங்கலையா…?தூங்கிட்டீங்கனு நினைச்சேன்”என்றாள் நிதானமாய்.

    “தூங்கிட்டு தான் இருந்தேன். கதவு சத்தத்தில் முழிப்பு வந்திடுச்சு”என்றான்.

    “அப்போ டீப் ஸ்லீப் இல்ல அப்படி தானே?. பாதாம் பால் இருக்கு வேணுமா ஊத்தித் தரவா??”என்றவளை முறைத்து விட்டு “என்னை நீ எதுவுமே கேட்க மாட்டீயா?”என்றான் அழுத்தமாக.

    “அதான் கேட்டேனே!!”

    “என்னன்னு?”மீண்டும் முறைப்பு அவனிடத்தில்.

    “பாதாம் பால் வேணுமான்னு?!”என நமட்டுச் சிரிப்புடன் சொல்லியவளை அங்கிருந்தே காற்றில் கையை உயர்த்தி குத்துவது போல சைகை காட்டினான்.

    “ஆளைப் பாரு”என்றவள் “க்ளோஸ் ரிலேஷன்ஷிப்ல மேரேஜ் பண்ணா இப்படி தான் இருக்குமோ?!”என்று வேறு கேட்க

    “எப்படி?”என்றவன் எழுந்து தனக்கு ஒரு டம்ளர் தேட, அங்கு ஒன்று தான் கொண்டு வந்திருந்தாள் தேஜா.

    “சாரி ஒரு டம்ளர் தான் தந்து விட்டாங்க”என்று சொல்ல

    “நோ இஷ்யூஸ். இப்படியே எடுத்துப்பேன்”என்று சொம்போடு வந்து அவள் அருகில் அமர்ந்து கொண்டான் .

    “அப்படியே குடிக்க முடியாது யுகா. இருங்க வேற ஏதாவது பேப்பர் கப் இருக்கான்னு பார்க்கிறேன்”என்று சுற்றி முற்றி பார்க்க

    “இங்கே எப்படி இருக்கும். ஸ்டோர் ரூமா இது?”என்றவன் சொம்பை மீண்டும் வாய்க்கருகே கொண்டு போனான்.

    “இதை வேணும் னா வாஷ் பண்ணி தரவா?”என்று குடித்த டம்ளரை கையில் வைத்துக் கொண்டு கேட்க

    “வித் ப்ளஷர் கொண்டு வா”என்று வாகாய் சாய்ந்து அமர்ந்து கொள்ள, டம்ளரைக் கழுவிக்கொண்டு வந்தாள்.

     அவன் குடித்து முடித்ததும் “ஏதாவது கேட்கணுமா இல்லை தூங்கலாமா? எனக்கு ஷோபாவே ஓகே தான். நீங்க பெட்ல தூங்குங்க. கட்டில் ரொம்ப சின்னதா இருக்கு”என்று சொல்லி விட

    “ரொம்ப தேங்க்ஸ், எங்க ஷோபாவில் படுக்க சொல்லிடுவியோனு நினைச்சேன்”என்றவன் போய் அவளுக்கான தலையணை போர்வையைக் கொண்டு வந்து கொடுத்தான்.

    “தேங்க் யூ சோ மச்”என்றவள் அப்படியே படுத்துக் கொண்டு படிக்க துவங்க, அவன் கைபேசியை துழாவினான்.

    “அச்சோ!”என்று பதறியவள் “என்ன பண்றீங்க நீங்க?”என்றாள் சத்தமாக.

    “என்ன பண்ணேன்? மொபைல் பார்க்கிறேன் அஸ்வி. இதுக்கு ஏன் இவ்வளவு சத்தம் போடுற?”என்றான் சலிப்பாக ‌

    “ஃபேஸ்புக்கா வாட்சப்பா?!”என்று கேட்க சட்டென நாக்கைக் கடித்துக் கொண்டவன் “ஆக்டீவ் ஸ்டேட்டஸ் காட்டும் ல சாரி மறந்து போயிட்டேன்”என்று கைபேசியை ஓரம் வைத்தான்.

    “ஏதாவது சாங்ஸ் வச்சுட்டு கேட்டுட்டே தூங்குங்க”என்றாள் மீண்டும்.

    “குட் ஐடியா. பட் எந்த சாங்ஸும் இல்லை என் கிட்ட”என்றான்.

    “ஸோ வாட் எஃப்எம்ல கேளுங்க எஸ்பிபி ஹிட்ஸ் இருக்கும் தூங்கிடலாம்”என்று ஆலோசனை கூற, சிரித்தபடியே கைபேசியை எடுத்து தமிழ் வானொலி செயலியை இயக்கியவன் பாடல்களை ஓட விட அந்த நேரத்திற்கு தகுந்தாற் போல காதல் தோல்வி பாடல்கள் வரிசையாக வரவும், சேனலை மாற்றி மாற்றி வைத்தவன் சலிப்பாய் நிறுத்தி விட்டு எழுந்து விட்டான்.

    “என்னாச்சு?”என்றவளை “ஃபுல்லா லவ் ஃபெயிலியர் சாங்ஸ்”என்றான்.

    “நல்லா தானே இருக்கும். குறிப்பா நல்லா தூக்கம் வரும்”என்றவளுக்கு கேட்காமல் ‘எனக்கு அவ ஞாபகம் வருமே அப்புறம் எங்கிருந்து தூங்க?’என்றான் முனகலாக.

    “என்ன சொல்றீங்க?”என்று கேட்க

    “ஒண்ணும் இல்லை. நீ படி இல்லாட்டா தூங்கு”என்று அங்குமிங்கும் நடந்து கொண்டே இருந்தவன் அவளருகில் வந்து அமர்ந்தான்.

    “என்ன புக் படிக்கிற?”

    “நாவல் தான்.”என்றவள் புத்தகத்தைக் காட்ட

    “இங்கே வேற புக்ஸ் எதுவும் இல்லை போல, தாத்தா அலமாரில இருந்து ஏதாவது கொண்டு வந்திருக்கலாம்”என்றவன் சிறிது நேரம் கழித்து “சேர்ந்து படிப்போமா? நிஜமா தூக்கம் வரலை. ஒரு மாதிரி டயர்டா இருக்கு பட் தூக்கம் வரலை”என்றான் அவள் முகம் பார்த்து.

    “அது அப்படி தான் இருக்கும். தூக்கம் முழிச்சா கொஞ்சம் உழட்டும்”என்றவள் “இப்படியே படிக்கலாம்”என அவனுக்கும் புத்தகத்தைக் காட்டினாள்.

    “நீ நிறைய பேஜ் போயிட்ட போலவே”என்றவன் சரியாக அமர முடியாமல் நெளிந்து கொண்டே இருக்க

    “அது பரவாயில்லை. ஆமாம் ஷோபா கம்ஃபர்டபிளா இல்லையோ?”என்று கேட்க

    “ஹ்ம்ம்”என்றவன், வேறெதுவும் பேசாமல் இருக்க “பெட்ல உட்கார்ந்து படிக்கலாம் வாங்க தூக்கம் வந்தா நான் எழுந்து இங்கே வந்திடறேன்”என்றாள்.

    இருவரும் படிக்க அமர்ந்த அரை மணி நேரத்திலேயே கண்களை கசக்கத் துவங்கி விட்டனர்.

    தேஜா படித்துக் கொண்டிருக்க, யுகா கண்கள் சொக்கி அவள் தோளிலேயே சாய்ந்து விட்டான்.

    ‘என்ன தூங்கிட்டாரு’என்றபடி எழ முயன்றவளின் சேலை தலைப்பு அவன் கையில் சிக்கி இருந்தது.

    “இந்த பழக்கம் வேற இருக்கா?”என்று சொல்லி சிரித்துக் கொண்டவள் அவனை எழுப்பி விட்டு “நல்லா படுத்து தூங்குங்க”என்றதும் “ஹ்ம்ம் மா”என்ற முனகலோடு இறங்கி அப்படியே உறங்கிப் போனான்.

    நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு பெரிதான பேச்சு வார்த்தை இருவரிடத்திலும் இல்லை என்றாலும் தன்னால் இப்போது திருமண வாழ்வை ஏற்க முடியாது தனக்கு சிறிது காலம் ஒதுக்க வேண்டும் என்று அவளிடம் கேட்டிருக்க தேஜாவும் சம்மதித்திருந்தாள்.

    “கொஞ்சம் புரிதலோட ஸ்டார்ட் பண்ணலாம் அஸ்வி. ஹ்ம்ம் வேற எதுவும் என் கிட்ட இப்போதைக்கு எதிர்பார்க்காதே”என்றவனிடம் “ஓகே தான் பட் மேரேஜ் அப்போ ஒட்டுதல் இல்லாத மாதிரி நடந்துக்க வேண்டாம். பிடிக்கறது பிடிக்காதது எல்லாம் நம்ம ரெண்டு பேருக்குள்ள இருந்தா போதும் அப்பா அம்மா முன்னாடி சொந்த பந்தம் முன்னாடி வேண்டாம் அது மட்டும் சரின்னா ஓகே”என்றவளைப் பார்த்து முறுவலித்தவன் “நிறைய யோசிச்சு இருப்ப போலவே. ஓகே தான்.நாம ரெண்டு பேரும் கசின்ஸ் ஸோ சமாளிச்சுப்போம் இப்ப பேசற மாதிரி இருந்தா போதும் தானே”என்று கேட்க அவளும் போதுமென்று சொல்லி இருந்தாள்.

 ********

    “ரெண்டு பொண்ணுங்களுக்கும் ஒரே நாளில் கல்யாணம் பண்ணி வச்சுட்டோம்.இதுக்கு மேல என்ன வேணும். சந்தோஷமா இருக்கு சுந்தரி. என்னவோ மனசுல இருந்து பெரிய பாரமே இறங்கினா மாதிரி இருக்கு”என்று பத்மநாபன் சொல்லியபடி நெஞ்சை நீவிக் கொண்டார்.

    “ஹ்ம்ம் அத்தை நாளைக்கு ரெண்டு பேருக்கும் சுத்தி போடணும் னு சொன்னாங்க”

    “பொண்ணு மாப்பிள்ளயை விட்டு நமக்கு எதுக்கு சுத்திப் போடணுமாம்”

    “ஊரே ஆச்சரியமா பாத்துச்சாம் ரெண்டு புள்ளைகளுக்கும் நெறக்க சீர் செஞ்சு கட்டி தந்தது சாதாரண விஷயமா அதுவும் எந்த குறையும் இல்லாமல் அதனால் தான் அத்தை சொன்னாங்க. நம்ம திருப்பரங்குன்றம் பெரியம்மா கூட அதையே தான் சொல்லிட்டு போனாங்க”என்ற சுந்தரி “நம்ம அகிலும் படிப்பு முடிச்சு ஒரு வேலையில் உட்கார்ந்துட்டா போதும் அவனுக்கும் ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சுட்டு சிவனேன்னு ஆன்மீக சுற்றுலா போயிடுவேன்”என்றார் சுந்தரி.

    “என்ன நீ மட்டுமா அப்போ நான் என்ன செய்றதாம்”என்று அவசரமாக கேட்ட வரைப் பார்த்து சிரித்த சுந்தரி “அதெப்படி உங்களை விட்டு போறதாம். சேர்ந்தே போவோம்”என்றார்.

    “உன் பையன் விட்டுட்டு தான் மறுவேலை பார்ப்பான்”என்று சிரித்தவர் “தூங்கலாம் சுந்தரி காலையில் விருந்து ஏற்பாடு எல்லாம் செய்யணும்”என்றபடி உறங்கிப் போக பெரிய வீட்டின் விடியல் தடபுடலான விருந்து ஏற்பாட்டோடு விடிந்தது.

    விடியற்காலையில் எல்லாம் சுதாகரன் குளித்து தயாராகி வந்து விட்டான்.

    “அப்பத்தா எல்லாரையும் வெரசா எழுப்பி கோயிலுக்கு பத்திவுடு. நான் போய் எல்லாம் ரெடியா இருக்கானு பாக்குறேன். “என்று புல்லட்டை கிளப்பினான்.

    புல்லட் போட்ட சத்தத்தில் மாடியறையில் உறங்கிக் கொண்டிருந்த புதுமணத் தம்பதிகள் விழித்து விட்டிருந்தனர்.

    “மொதல்ல இவன் கிட்ட இருந்து இந்த புல்லட்டை புடுங்கணும்”என்று புலம்பியபடி புரண்டு படுத்தான் அருண்.

    “அதுக்குள்ள விடிஞ்சிடுச்சா டேய் அகி காலங்காத்தால எதுக்கு டா கத்துற”என்று எழுந்த பிரதன்யா தன் அருகில் உறங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்ததும் திருதிருவென விழித்தாள். அவள் விழிப்பதைக் கண்டு அப்படி ஒரு சிரிப்பு அவனுக்கு.

    “அகியா”என்ற அருண் புரண்டு படுத்தவாறு “நீ இன்னும் பேச்சுலர் லைஃப் ல இருந்து வெளியே வரலையா தனு. குட் மார்னிங்”எனச் சிரித்தான்.

    “குட் மார்னிங். அது வந்து கொஞ்சம் ஸ்லிப் ஆகிட்டேன்”என்றவள் “மணி எத்தனை? யார் கத்தினது?”என கூந்தலை அள்ளி எடுத்து கொண்டை போட்டாள்.

    சட்டென கண்களை மூடிக் கொண்டவன் அவளுக்கு முதுகு காட்டி படுக்க”மணியை கேட்டா திரும்பி தூங்குறீங்க”என்று எழுந்து கொண்டாள்.

    “மணி அஞ்சேகால்”என்றவனின் கண்களுக்குள் அவளின் நலுங்கிய கோலம் தான் விரவிக் கிடந்தது .

    அவன் ஏன் திரும்பி கொண்டான் என்றதை உணர்ந்தவள் சட்டென்று அவனை வம்பு செய்யும் எண்ணம் பிறக்க “பிரசாத் அவ்வளவு நல்லவரா நீங்க”என்று கிண்டல் செய்தாள்.

    “கொழுப்பா”என்றவன் “ஓடிடு இல்லை”என்றான் விரல் நீட்டி

    “என்ன செய்வீங்களாம்”வேண்டுமென்றே வம்பு செய்தவளை இழுத்து தன் மீது போட்டுக் கொள்ள “அச்சோ விடுங்க”என எழ முயன்றாள்.

    “எவ்வளவு நல்ல பையன்னு காட்ட வேண்டாமா தனு”என்று கேலியாய் சிரிக்கவும்

    “ஒண்ணும் தேவை இல்லை நீங்க ரொம்பப நல்லவர் தான் விடுங்க”என்றவளை விழியகற்றாமல் பார்க்க அவன் நெஞ்சிலேயே சாய்ந்து விட்டாள்.

    “நேத்து ரொம்ப டயர்ட்”என்றான் அவளைப் பிடித்தபடி

    “ஸோ”

    “அதனால் ஒண்ணும் இல்லை சும்மா சொன்னேன்”என்றவனை நிமிர்ந்து பார்த்ததும் உதடு குவித்து முத்தம் தந்தவனின் உணர்வுகள் கிளர்ந்திருந்தது.

    “தனு.”என்றவனின் அழைப்பில் கிறங்கியவளோ அவன் முகம் நோக்கி முன்னேற கதவு தட்டும் ஓசையில் திடுக்கிட்டு விலகினாள்.

    “ப்ப்ச்… ஸ்ஸ்ப்பா கரடீஸ்”என்று முனகியவனைக் கண்டு இதழ் வளைக்க “போய் பாரு”என்று மீண்டும் பழையபடி போர்வையை போர்த்திக் கொண்டான்.

    வெளியே நந்தினி தான் நின்று கொண்டிருந்தாள்.

    “அண்ணி”என்று சோம்பல் முறித்தவள் “இந்த கஞ்சியை குடிப்பீங்களாம் பிரதி. ஆறு மணி வாக்குல எழுந்து குளிச்சிட்டு வாங்க. நான் போய் தேஜாவை எழுப்பி விடுறேன்”என்று புன்னகைக்க சரியென்று தலையாட்டியபடி கதவை சாத்த மீண்டும் கதவைத் தட்டும் ஓசை கேட்க

    “என்ன அண்ணி”என்றதும் “குளிச்சிட்டு குடிக்கணும் பிரதி சமுக்காளத்தை அலசி போடு”என்று சொல்லி விட்டு சென்றாள் நந்தினி.

    “இவ்வளவு பெரிய பெட்சிட் அலசினா என் இடுப்பு ஒடிஞ்சிருமே”என்று பரிதாபமாக முனக

    “ரெண்டு பேரும் சேர்ந்து பண்ணுவோம் தனு ஏன் இவ்வளவு சலிப்பு”என்றவன் “கையில் என்ன ஆவி பறக்குது”

    “ஏதோ கஞ்சி மாதிரி இருக்கு ஐ திங்க் உளுந்த கஞ்சியா இருக்கலாம் நந்தினி அண்ணிக்கு அதுதான் தந்தாக அன்னைக்கு”என்றவள் “ஒரு அரை மணி நேரம் தூங்குவோமா”என்றாள்.

    “தாராளமா “என்றவன் “இங்கே வந்து தூங்கணும்”என்றான் படுக்கையை தட்டிக் காட்டி

    “அப்போ தூங்கின மாதிரி தான்”என்று சொல்லி கொண்டே கழிவறை சென்று வந்தவள் படுத்ததுமே தன் இரும்பு கரங்களால் வளைத்திருந்தான் அருண் பிரசாத்.

    ….. தொடரும்

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
7
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. Super super super super super super super super ❤️