
நினைவுகள் -19
” யமுனை ஆற்றிலே
ஈர காற்றிலே
கண்ணனோடு தான் ஆட
பார்வை பூத்திட
பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட……………
ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ
ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ
ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ
ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ
பாவம் ராதா…..” என்ற பாடல் கணீர் குரல் அந்த பெரிய ஹோட்டலின் கான்ப்ரன்ஸ் ஹாலில் வழிந்துக் கொண்டிருந்தது.
அந்த ஹாலில் தன் கண்ணனை காணாமல் ஏக்கம் வழிய பாடிக் கொண்டிருந்தாள் ராதிகா.
அவள் பாடும் பாவத்தில், அந்த ஹால் அவ்வளவு அமைதியாக இருந்தது.
அவளது ஏக்கம் வழியும் குரல், எல்லோரையும் மயக்கி வைத்திருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
அவ்வளவு அருமையான வாய்ஸ்.
அவள் விஸ்வரூபன் வருவான் என்று நினைத்து இருக்க. அவனையோ காணவில்லை. பார்வையால் தேட… அந்த பெரிய ஹாலில் அவனை காணவில்லை.
அவனை காணாமல் கண்கள் அலைபாய, தன்னியல்பாக, பாடிக் கொண்டிருந்தாள்.
அவள் மனது செல்லும் திசையைப் பற்றி அவளுக்கே இன்னும் புரியவில்லை. அவன் வரவேண்டும் என்று ஒரு புறம் மனம் அலைப்புற, மறுபுறமோ அவனுக்கு முன்பு எப்படி ஆடுவது என்று படபடப்புடன் இருந்தது.
ஒருவழியாக பாடி முடித்து அவள் முகத்தில் இருந்த ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு கீழே இறங்கினாள்.
ஐந்து நிமிடம் வரை இடைவிடாமல் கரகோஷம் எழுந்தது.
கீழே இறங்கி வந்தவளை, அனன்யா அணைத்து விடுவித்தவள், வேகமாக அழைத்துக் கொண்டு சென்று விட்டாள்.
அடுத்ததாக அவர்களது நடனத்திற்கான ப்ரோக்ராம் இருந்தது .அதற்கான மேக்கப் செய்ய வேண்டும்.
மேக்கப் ரூமிற்கு சென்ற ராதிகா, ஜக்கில் இருந்த தண்ணீரை எடுத்துக் குடித்தவள், ” அனு… உங்க வீட்ல இருந்து இன்னும் யாரும் வரவில்லையா?” என்று வினவ…
“ஹேய் ராது… ஃபர்ஸ்ட் ப்ரெஷ்ஷப் ஆகிட்டு வா. மேக்கப் போடணும். அப்புறம் பேசலாம்.” என்று அவளை ரெஸ்ட் ரூமிற்கு தள்ளி விட்டாள்.
அனுவிற்கு ராதிகாவின் மனது புரிந்து தான் இருந்தது. ‘ மாமா வரேன் என்று தானே சொல்லியிருந்தாரு. பட் காணோமே… தான் சென்ற வாரம் மாம்ஸ் நீங்கள்லாம் வர்றீங்க என்றதும், ராது டான்ஸ் ஆட முடியாது என்று சொன்னா, என்று கேலி பண்ணோமே… ஒரு வேளை அதான் மாமா வரலையா…’ என்று தனக்குள் நினைத்துக் கொண்டாள்.
இரு பெண்களும் அவன் வரவில்லை என்று நினைத்திருக்க…
விஸ்வரூபனோ, ரீடிங் பெட் வின் லைன்ஸ் என்பது போல் அனன்யாவின் பேச்சிலிருந்து ராதிகாவின் மனதை புரிந்து இருந்தான்.
தன்னோட வருகை, அவளது திறமையை டிஸ்டர்ப் செய்யக்கூடாது என்பதற்காக, அவளது பார்வை படாத இடத்தில் அமர்ந்திருந்தான்.
ராதிகாவின் பாடல் முழுவதையும் கேட்டதோடு மட்டுமல்லாமல், தனது ஃபோனிலும் பதிவு செய்துக் கொண்டான். அப்பொழுது அவனுக்கு தெரியவில்லை. பின்னால் முழுவதும் இந்த பதிவு தான் அவனுக்கு ஆறுதல் அளிக்க போகிறது என்று…
சற்று நேரத்தில், ஸ்டேஜில் ஆஃங்கரிங் பண்ணிக் கொண்டிருந்த மாணவி, அனன்யா, ராதிகாவின் குழுவை நடனம் ஆடுவதற்காக அழைக்க…
முகத்தில் இருந்த வாட்டத்தை, மேக்கப் மறைத்திருக்க… பிங்க் நிற லெஹங்காவில் தேவதையென ஜொலித்தாள் ராதிகா. அனன்யாவும், இவர்களுடன் ஆடும் மற்ற தோழிகள் ஐவரும், லெமென் யெல்லோ லெஹங்கா அணிந்திருந்தனர். அனைவரும் மேடை ஏறினர்.
” கண்ணன் வரும் வேளை…
அந்தி மாலை காத்திருந்தேன்…” என்ற பாடல் ஒலிக்க… அவ்வளவு நளினமாக நடனமாடினார்கள். ராதிகாவின் பர்பாமென்ஸ் அவ்வளவு பொருத்தமாக இருந்தது.
‘அவளுக்கு ஆட வரும் என்பதே அவளுக்கே தெரியாமல் இருந்தது.
ஹாஸ்டலில் அவள் பிறந்தநாள் போது ஆடியதைப் பார்த்த அனன்யா தான், சீனியர்களிடம் ராதிகா நன்றாக ஆடுவாள் என்று கூறியிருந்தாள்.
அவர்களும், செலக்ட் செய்யும் போது, அவளை ஆட வைத்து பார்த்தவர்கள், அவளது திறமையைப் பார்த்து வியந்து விட்டு, க்ரூப் டான்ஸில் அவளது பெயரையும் குறித்துக் கொண்டனர்.’
இடைவிடாமல் ஒலித்த கரகோஷத்தில் நினைவுக்கு வந்தான் விஸ்வரூபன்.
வழக்கம் போல அனன்யா தான் இதையெல்லாம் விஸ்வரூபனிடம் கூறியிருந்தாள். அதை நினைத்துப் பார்த்த விஸ்வரூபன் இளம் புன்னகையுடன் அவர்கள் இருவருக்கும் முன்பு சென்று பொக்கேவை நீட்ட…
திகைத்து பார்த்த ராதிகா சற்று நகர்ந்து கொள்ள…
அனன்யா , ” ஹேய் ராது… அது உனக்கு தான்… வாங்கிக்கோ… எவ்வளவு நேரமா மாமா நீட்டிட்டு இருக்காங்க.” என்றாள்.
அவனை ஒரு முறை நிமிர்ந்துப் பார்த்தவள், பிறகு பார்வையை திருப்பிக் கொண்டு, ” அனு… அது உனக்காக வாங்கி வந்துருப்பாங்க. விளையாடத…” என்று கூறியவள், அவ்விடத்தை விட்டு நகர முயன்றாள்.
சட்டென்று கைப் பிடித்த விஸ்வரூபன், அவளது விரிந்த விழி வீச்சில் பட்டென கையை விட்டான். தன் தலையை கோதியவன், ” இது உனக்கு தான் ரா.. ராதிகா… அந்துருண்டைக்கு வாங்கிக் கொடுத்தா, அவ உண்டு இல்லை என்று பண்ணிடுவா… ” என்று தன் தடுமாற்றத்தை மறைத்துக் கொண்டு புன்னகைத்தான்.
அனன்யாவும், ” நான் தான் சொன்னேனே உனக்கு தான்…” என்று சொல்லி விட்டு அவளைப் பார்த்து புன்னகைத்தாள்.
அந்த பொக்கேயை வாங்கியவள், ” தேங்க்ஸ்…” என்று புன்னகைக்க முயன்றாள். உள்ளுக்குள்ளோ, ‘தான் அவனுக்கு யாரோ தானோ. அதான் ஃபார்மாலிட்டிஸ் பார்க்கிறான்.’ என்று வருத்தத்தோடு எண்ணினாள்.
“‘சரி வாங்க… ஸ்டேஜ்க்கு முன்னால் போகலாம்… மத்த ப்ரோக்ராம் எல்லாம் பார்க்கணும்.” என்ற அனு இருவரையும் அழைத்துக் கொண்டு சென்றாள்.
அதற்கு பிறகு நடந்து முடிந்த கலைநிகழ்ச்சியையோ, விளையாட்டுப் போட்டிக்கு பரிசுகள் கொடுத்ததையோ, எதையும் கவனத்தில் கொள்ளவில்லை ராதிகா.
அவளது பெயர் அழைக்கப்பட்டப் போது அனு தான், ” ஹேய் ராது… கூப்பிடுறாங்க…” என்று உலுக்கினாள்.
ராதிகா செஸ் சாம்பியன்… அதற்கான பரிசு வழங்க தான் கூப்பிட்டார்கள்.
ஒரு வழியாக எல்லா செலிபிரேஷனும் முடிந்தது. மதிய உணவு அங்கே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பஃபே சிஸ்டம். அவர்களுக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு மூவரும் ஒரு டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
“அனு…” என்ற குரலில் திரும்பிப் பார்த்த அனன்யா, அங்கே வேற ஒரு தோழி அழைக்க…
” ஹாய் …” என்று கையசைத்தவள், ராதிகா, விஸ்வரூபன் இருவரையும் பார்த்து “யூ கேரி ஆன்…” என்று விட்டு, அவளை அழைத்த தோழியை நோக்கிச் சென்றாள்.
ஏற்கனவே குழப்பத்தில் இருந்த ராதிகா, அனன்யாவை மனதிற்குள் திட்டிக் கொண்டே , சாப்பாட்டில் கவனத்தை செலுத்தினாள்.
விஸ்வரூபனோ, வந்ததிலிருந்து அவளது உணர்வுகளைத் தான் அவதானித்துக் கொண்டிருந்தான். அவளது கோபத்தையும் உணர்ந்து தான் இருந்தான்.
மனதிற்குள் திட்டிக் கொண்டிருந்தான். ‘ லூசு… உனக்காக ஸ்பெஷலா ரெட் கலர் பொக்கே வாங்கிட்டு வந்தா, அதைப் பார்த்து சந்தோஷம் படாமல், அனன்யாவோட கம்பேர் பண்ணிட்டு இருக்கீயே… இப்போதைக்கு என்னுடைய காதலை சொல்ல முடியாமல் உன்னுடைய படிப்பும், வயதும் தடை செய்கிறதே… ‘ என்று நினைத்தவன் பெருமூச்சு விட்டுக் கொண்டு,’ சரி தான் இவ்வளவு தூரம் வந்ததற்கு வம்பாவது இழுப்போம்.’ என்று நினைத்தவன் மெல்லிய புன்னகையை முகத்தில் படர விட்டான்.
” அப்புறம் ராதிகா… யாரைத் தேடுன?”
” ஹான்…”
” ஸ்டேஜ்ல பாடும் போது யாரையோ ரொம்ப தேடுன மாதிரி இருந்தது. அதான் கேட்டேன்.” விஸ்வரூபன் அவளை ஆழ்ந்துப் பார்க்க…
” அதெல்லாம் ஒன்னும் இல்லையே. நான் யாரையும் தேடலை.” என படபடப்புடன் பதிலளித்தாள் ராதிகா.
” ஓ… இட்ஸ் ஓகே. தென் டான்ஸ்க்கு பாட்டு செலக்சன் நீ தானே… அனு சொன்னா… யார் இந்த ராதிகாவோட கண்ணன் ?” என்று புருவத்தை உயர்த்தி வினவ.
” அது வெறும் பாட்டு அவ்வளவு தான். எதுக்கு இப்போ தேவையில்லாதது எல்லாம் பேசறீங்க. ” என்று கோபமாக வினவியவள், ‘ இந்த அனு எங்கே போய்ட்டா? வரட்டும் இருக்கு அவளுக்கு… எல்லாத்தையும் அவங்க மாமா கிட்ட ஒப்பிச்சிடணுமா?’ என்று மனதிற்குள் வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள்.
ராதிகாவோ, விஸ்வரூபன் தான் அவளது கண்ணன் என்று வெளிப்படையாகக் கூற முடியாமல், அவர்களுக்கு இடையே இருக்கும் ஸ்டேட்டஸ் தடையாக இருந்ததை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள்.
விஸ்வரூபனோ, இப்போதைக்கு தனது காதலை சொல்ல வேண்டாம் என்று முடிவு எடுத்திருந்ததால், அவளைப் பார்க்கும் போதெல்லாம் கேலி செய்தான்.
அதன் விளைவு அடிக்கடி இருவரும் முட்டிக் கொண்டிருந்தனர்.
இன்று…
கிருஷ்ணன் அதிர்ந்து விழித்ததெல்லாம் ஒரு நொடி தான்.
பிறகு துள்ளிக் குதித்து செல்லும் ராதிகாவைப் பார்த்தவர், ‘ நாட்டி கேர்ள்! அப்படியே அவளுடைய ஃப்ரெண்டு மாதிரியே இருக்கா… வாலு ஒன்னு தான் இல்லை. மத்த எல்லாமே குரங்கு சேட்டை.’ என்று எண்ணி பெருமூச்சு விட்டுக் கொண்டவர், ஹாஸ்பிடலுக்கு கிளம்பினார்.
ராதிகாவிடம் பேச வேண்டும் என்பதற்காகவே காத்திருந்தார். இல்லையென்றால் இந்த நேரம் ஹாஸ்பிடலுக்கு கிளம்பி இருப்பார்.
ராதிகாவோ ஹாஸ்டலுக்கு சென்றவள், டாக்டர் சேலவருக்கு அழைத்திருந்தாள். “ஹாய் டாக்…” என…
” என்ன ராது டியர். இரண்டு நாள் தானே ஆச்சு… என்னைப் பார்த்து… அதுக்குள்ள என்ன ரொம்ப மிஸ் பண்றியா?” என்று கிண்டல் பண்ண…
” ஐயோ! டாக்… ஏஞ்சல் பக்கத்துல இல்லைன்ற தைரியத்துல பேசுறீங்களா… நான் எல்லாவற்றையும் ஏஞ்சல் கிட்ட சொல்லிடுவேன் டாக்…” என்று அவளும் கிண்டலடிக்க…
” விட்டது தொல்லைன்னு தான் என் டார்லிங் நினைப்பா… சரி ராது எதுக்கு கால் பண்ண?”
” நான் முக்கியமான விஷயத்துக்காகத் தான் கால் பண்ணேன். நானும், ஆதியும் இருக்கிற வீடியோவை பத்தி உங்கக் கிட்ட யார் சொன்னா? பேஸ்புக்ல, வாட்ஸ்அப்ல பார்த்தேன் என்று மட்டும் சொல்லிடாதீங்க. அதுல டெலிட் பண்ணிட்டாங்க. நானே அதைப் பார்க்கலை. நீங்க எவ்வளவு பிஸி என்று எனக்கு தெரியும். ” என்று வினவினாள்.
அவள் மனதிற்குள் ஒரு தவிப்பு, ‘அனன்யா எதுவும் சொல்லி இருப்பாளோ.’ என்று…
அதைத் தெரிந்துக் கொள்வதற்காகத் தான் அவருக்கு அழைத்திருந்தாள்.
டாக்டர் சேலவரும், “என்னுடைய ஃப்ரெண்ட் கிருஷ் தான் சொன்னான்.” என்று கூறி அவளது எதிர்பார்ப்பில் வென்னீரை ஊற்றி இருந்தார்.
அவளுக்கு அப்போது தெரியவில்லை. அவளது உயிர் தோழியின் உடலிருந்து உயிர் பிரிந்து இரண்டு மாதங்கள் ஆகியிருந்தது என்று…
***************
ராதிகா சென்னையில் வந்து மேற்படிப்பு படிக்க தொடங்கி கிட்டத்தட்ட ஒரு வருடம் நிறைவை நோக்கி சென்றது.
இந்த ஒரு வருட காலத்தில், ஆதியுடனான நட்பு இறுகியது.
காலேஜில் கலாட்டாவும் துள்ளலுடன் இருந்தாள் ராதிகா.
அவளது சேட்டையை டாக்டர் கிருஷ்ணனால் சமாளிக்க முடியவில்லை.
எந்த அளவுக்கு அவள் விளையாட்டுப் பிள்ளையாக இருக்கிறாளோ, அதே அளவுக்கு பொறுப்பாக மருத்துவமனையில் இருப்பாள்.
கிருஷ்ணனுக்கு வலது கையாக இருந்தாள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
1
+1
+1

