Loading

அழகியே என் மழலை நீ 36

 

 

வேதா இன்னுமும் கண் விழிக்காமல் இருக்க அனைவரும் வராண்டாவில் அமர்ந்து இருந்தனர்.

 

 

செழியன் மருத்துவரை பார்த்து விட்டு வந்தவனின் முகம் இறுகியிருக்க தேவ், “என்னடா ஒன்னும் ப்ராப்லம் இல்ல தானே. வேதா கண் முழிச்சுருவா இல்லை. டாக்டர் என்ன சொன்னாங்க?” என்று கேட்க, அனைவரின் பார்வையும் தவிப்புடன் அவன் மீதே பதிந்தது.

 

 

அவன் கூற வாயெடுக்கும் முன்பே அவனின் போன் அடிக்க அட்டென்ட் செய்தவனின் கண்கள் அதிர்ச்சியில் விரிய, “இல்லை.. புரியல.. இந்திரா? தெளிவா சொல்லுங்க… ஆக்சிடெண்ட் எப்படி” என்று தடுமாற்றதுடன் கேட்க அவரோ, “சார் நீங்க ஜி.எச்க்கு வர முடியுமா?” என்று எதிர் முனையில் திக்கி திணறி பேசினார் அந்த காவலர்.

 

“ரொம்ப சீரியசா? சரி ஓகே அவங்க பேமிலிக்கு இன்போர்ம் பண்ணிறேன். அவங்க வருவாங்க நீங்க ரெஸ்ட் எடுங்க, கேஸ் பாத்துக்க நான் வேற ஆள் வர சொல்றேன். நீங்க பத்திரமா இருங்க நான் அப்புறம் வந்து பாக்கறேன்”என்றவன் உடன் வேலை செய்யும் அதிகாரியிடம் விஷயத்தை கூறி விட்டு மத்த போர்மலிட்டிஸ் பாத்துக்கோங்க” என்று கூறிவிட்டு வைத்தவனின் முகம் இறுகி போனது.

 

 

செழியனின் முக அசைவை பார்த்து கொண்டு அங்கு இருந்த ஒருவனின் இதழ்கள் மட்டும் தாராளமாய் விரிந்து கொண்டது.மனம் நிறைந்து போனது அவனுக்கு…

 

அங்கிருந்த அனைவரையும் ஆழமாக பார்த்தவன், “ஸ்டேஷன் போற வழில ஆக்சிடெண்ட், ஜி.ஹெச்ல இருக்காங்க” என்றவன் லாவண்யாவிடம் வந்து, “நீங்க உங்க பேரண்ட்ஸ்க்கு இன்போர்ம் பண்ணிடுங்க. நீங்களும் போங்க இப்போ உங்க உதவி தேவை ” என்றவன் தேவ்விடம் “இந்த கேஸ்ல அவங்க ரெண்டு பேர் பேரும் வரவேணாம். க்ளோஸ் பண்ணிடு” என்றவன் இனியனை பார்த்து தலையசைக்க அவனும் இது போலொரு சமையத்தில் இப்படித்தானே முடிவெடுத்தான், செழியன் கூறுவதும் சரியாகவே பட்டது.

 

 

அவன் அப்படி கூறியதும் தேவ்க்கு கண்முன் தெரியாமல் கோபம் வந்தது. ஆத்திரத்துடன், “எதுக்குடா கேஸ் வேணாம்குற, ஓ ஆக்சிடெண்ட் ஆனதும் பாசம் வந்துடுச்சா?தாய் பாசமா? ஏதாச்சும் தப்பு பண்ணிட்டு இந்த மாதிரி அக்சிடெண்ட்ல மாட்டிட்ட விட்டிருலாமா? அவங்க பண்ணது அவளோ சாதாரண தப்பா?கோவமாக கேட்க, அவனுக்கு பதில் கூறாமல் அதிர்ந்து நின்றிருந்த அறிவழகனிடம் திரும்பியவன், “நீங்க போய் பாருங்க. தயவு செய்து சொல்றேன். கெட்ட செய்தியா இருந்தா எனக்கு சொல்லிடாதீங்க. கடைசி பிடிமண் போடக் கூட வரமாட்டேன்” என்றவன் அங்கிருந்த சேரில் அமர்ந்து விட்டான்.

 

 

ஏற்கனவே அதிர்ச்சியில் இருந்தவர் செழியன் கூறியதிலே மனைவிக்கு பெரிய பிரச்சனை என்று புரிந்துகொண்டவர், அவனின் கடைசி வார்த்தைகளில் நொந் துபோனார். எந்த தாய்க்கும் இப்படி ஒருவார்த்தை கேட்கும் நிலை வரக் கூடாது அல்லவா. அதற்கு காரணமும் அவர் தானே.

 

 

அவரின் மேல் கோவம் இருந்தாலும் 30 வருடங்கள் அவருடன் வாழ்ந்து இருக்கிறார்.அந்த வாழ்வில் எந்த குறையும் வைக்காதவர் அல்லவா. உடனே அங்கிருந்து சென்று விட்டனர். அரவிந்தனும் அகரனும் கூட அழுது கொண்டே சென்றனர்.

 

 

லாவண்யா பெற்றோருடன் தங்கையை பார்க்க செல்ல, அவளோ ஆடிய ஆட்டத்திற்கு கர்ப்பிணி பெண்ணை செய்யக் கூடாத பாவத்தை செய்தவளுக்கு இடுப்புக்கு கீழே மொத்தமாய் அடிபட்டு, தாய்மை இனி கடைசி வரை இல்லை என்ற நிலையில் வாழ்நாள் முழுவதும் சக்கர நாற்காலி தான் என்று கூறி விட, அவள் செய்த பாவத்திற்கு அதை ஏற்றுக் கொள்வதை தவிர வேறு வழியில்லாமல் போனது.

 

 

 

மீனாட்சிக்கு தலையிலும் கழுத்திலும் அடிபட்டு வோக்கல் கார்ட் சிதைந்து அதை மீண்டும் சரி செய்ய முடியாத அளவிற்கு ஆனது. வார்த்தைகளால் அனைவரையும் வதைத்தவர் தன் தேவையை கூட யாரிடமும் சொல்ல முடியாத இழி நிலைக்கு தள்ளப்பட்டார்.

 

 

 

இரண்டு நாட்களில் இத்தனையும் நடந்து முடித்திருந்தது. இனியன் வழக்கை முடித்திருந்தான். சவிதாவின் பெற்றோர் அவளை அவர்களின் சொந்த ஊருக்கே அழைத்து சென்றிருக்க, லாவண்யாவுக்கு தான் அவமானமாக இருந்தது.அதோடு வீட்டினர் முகத்தில் முழிக்கவும் அசிங்கமாக இருந்தது. என்ன சமாதானம் சொன்னாலும் மன்னிப்பு வேண்டினாலும் மன்னிக்க கூடிய தவறு இல்லை தங்கை செய்தது என்று அவளுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.

 

 

அறிவழகன் தான் மீனாட்சியுடன் இருந்தார். தேவைக்கு மட்டுமே அவரிடம் பேசினார். நன்றாகவே அவரின் ஒதுக்கம் மீனாட்சிக்கு புரிய, அனைத்தும் அவரின் பாவத்தின் பலன் தான் என்று கடைசியாய் புரிந்து கொண்டார். மகன்கள் கூட தள்ளி நின்று பார்த்துவிட்டு சென்றனர். அர்ச்சனா வெளிநாட்டில் படிக்க சென்று இருந்ததால் இது எதுவுமே அவளுக்கு தெரியப் படுத்தவில்லை.ஆதிக்கு ஒரு முறை அழைப்பு விடுக்க, அனைத்தையும் ஒன்று விடாமல் கூறி இருந்தான். அதை கேட்டவளுக்கு அன்னையை நினைத்து அவமானமாக இருந்தது. ஆதியிடம் மூச்சுக்கு முன்னூறு முறை அம்மா அம்மா அவளின் அன்னையின் அருமை பெருமைகள் என்று ஆயிரம் வசனங்கள் கூறி இருந்தாள். அவளுக்கு இதை எப்படி எடுத்து கொள்வது என்றே தெரிய வில்லை.அரவிந்தனுக்கு அழைப்பு விடுத்தவள் அவள் ஊருக்கு வருவதற்கு தேவையான ஆயுத்தங்களை செய்ய கூறினாள். அவனுக்கு அன்னையை பார்க்க தற்போது உடன் அவள் இருந்தால் நல்லது என்று நினைத்தவன் அதற்கான வேலைகளையும் துவங்கி இருந்தான்.

 

 

தாமரை அறைக்கு வெளியே அமர்ந்திருந்தவர் செழியனின் அருகில் வந்தவர், “ரொம்ப நன்றி தம்பி. நீங்க கிளம்புங்க. எங்க பொண்ண நாங்க பாத்துக்குறோம். இனிமேலும் உங்க வேலையை நம்பி என் பொண்ண உங்க கிட்ட கொடுத்துட்டு என்னால தவிக்க முடியாது. நாங்க அனுபவிச்ச வரைக்கும் போதும்.ஒவ்வொரு முறையும் அவளுக்கு ஏதாச்சும் ஆகும் போது அது உன்னால தான் நடக்குது. இதுக்கு மேல இந்த விஷயத்தை என்னால வெளிப்படையா சொல்ல முடியாது. நீயாவே போய்டு, என் பொண்ணு உயிரோடவாச்சும் இருக்கணும்னு நினைக்குறேன். ” என்று கூற, செழியன் அதிர்ந்து போய் அவரை பார்த்தான்.

 

அதிரனோ, “அம்மா என்ன காரியம் பண்றீங்க? அவனுக்கு மட்டும் வேதனை இல்லையா? இந்த நாலு மாசமும் அவனோட வேதனைய கூட இருந்து பார்த்தும் நீங்க இப்படி பேசறது கொஞ்சம் கூட நல்லா இல்லை. ஒவ்வொரு நாளும் வேதா இல்லாம நரக வேதனைய அனுபவிச்சுருக்கான். நீங்களும் ஏன் இப்படி அவனை வார்த்தையால கொல்றிங்க? பேசுறது ஈசி தான் மா. அதுக்கப்புறம் அந்த வார்த்தைகளோட வீரியம் அதிகம். உங்க கிட்ட நான் இதை எதிர்பார்க்கல” என்று அன்னையை அதட்டினான்.

 

 

அவரோ, “போதும் அதிரா, உங்கிட்டயும் தான் சொல்றேன். மரியாதையா இந்த வேலையை விட்டுட்டு ஆதிகூட சேர்ந்து கம்பெனிய பாத்துக்கோ. உனக்கும் குடும்பம் குழந்தைனு வந்தாச்சு. நீ ஒண்ணும் சின்ன குழந்தை இல்லை. இன்னும் கனவு லட்சியம்னு பேசிட்டு சுத்திட்டு இருக்கறதுக்கு, இவன் வேலையை விட்டுட்டு என் பொண்ணு கூட வாழறதா இருந்தா வாழட்டும். இல்லனா வாழ்க்கை முழுவதும் என் பொண்ணையும் அவ குழந்தைகளையும் நான் பார்த்துக்குறேன். அவளை பெத்த நாங்க உயிரோட தானே இருக்கோம்” என்று ஆங்காரமாக குரல் எடுத்து கத்தினார்.

 

அவரின் பேச்சில் திகைத்து போனவராக அன்பரசனும் மனைவியை பார்த்தார். அவருக்கு தான் தெரியுமே வேதாவையும் அவனின் வேலையையும் அவன் எவ்வளவு நேசிக்கிறான் என்று… தாமரை பேசியதை அவரால் மறுக்கவும் முடிய வில்லை. அதே நேரத்தில் செழியனுக்கு ஆதரவாகவும் அவரால் பேச முடியவில்லை.

 

 

செழியனும் ஏற்கனவே குற்ற உணர்வில் இருந்தவன் அவரை பார்த்து, “அவளை விட இந்த வேலை எனக்கு முக்கியம் இல்லை அத்தை.வேலையா வேதாவான்னு ஒரு முடிவு எடுக்கணும்னா யோசிக்காம அவ பக்கம் வந்துடுவேன்” என்றவன் கதவை திறந்து கொண்டு வேதாவின் அறைக்குள் நுழைந்திருந்தான்.

 

 

 

அவனின் கைக்குள்ளே அவளின் கை இருந்தது. நான்கு மாதங்களுக்கு பிறகு காணுகிறான். அவளின் முகம் வருடி, “தங்கமே நீ என்கிட்ட வந்துட்டடா, இனிமேல் நான் உன்னை விடமாட்டேன். உனக்கு எதுவும் ஆகவிடமாட்டேன். என்னால இந்தா வேலையாலதான் உனக்கு ஆபத்துன்னு உங்கம்மா சொல்ராங்க. உன்னைவிட இது எனக்கு முக்கியம் இல்லடா. நீ மட்டும் போதும் எனக்கு என் வாழ்க்கை மொத்தத்துக்கும் நீயும் நம்ம காதலோட சாட்சியா இந்த இரண்டு குட்டி தங்கங்களும் போதும். நீ என் மேல கோபமா இருப்பல்ல. அவளின் வயிற்றில் கைவைத்தவன் குட்டி தங்கங்களா நீங்களும் என் மேல கோபமா இருப்பிங்கள்ல. உங்க மூணு பேரையும் ரொம்ப தவிக்க விட்டுட்டேன். இனிமேல் என்னோட மூணு தங்கத்தையும்விட்டு நான் எங்கயும் போக அழகியே என் மழலை நீ

மாட்டேன். இந்த ஒருமுறை என்னை மன்னிச்சிடுங்க என்கிட்ட வந்துருங்கடா. நீங்க இல்லாம என்னால இருக்க முடியல” என்றவன் கதறி அழுதவன் அவளின் வயிற்றில் இதழ் பதிக்க, அவளின் கண்களில் தானாய் கண்ணீர் வடிந்தது.

 

 

 

வைஷு அப்போது வேதாவை பார்க்க வந்தவள், அவளின் அசைவை உணர்ந்து, “ஹேய் செழியா அங்க பாரு. வேதா கை அசையுது. அவளுக்கு நியாபகம் கொஞ்சம் கொஞ்சமாக வருது. கண்ல தண்ணி வருது பாரு” என்றவள் அவளை பரிசோதித்து விட்டு, “அவ்ளோ தான் ஷி இஸ் ஓகே. பாத்துக்கோ. வாழ்க்கை ஒருமுறை தான் சான்ஸ் குடுக்கும். உனக்கு ரெண்டாவது முறையும் உன் காதல் உங்கிட்ட சேர்த்துருக்கு. கேர்ஃபுல்” என்றவள் சென்றுவிட, மகிழ்வுடன் கண்களை துடைத்தவன் அவளின் நெற்றியில் முத்தமிட்டவன் வெளியே செல்ல எத்தனைக்க, அவனின் கையை யாரோ பிடிப்பது போல் தோன்ற, திரும்பியவன் உறைந்து போனான்.

 

 

வேதா தான். அவளின் நடுங்கும் கரங்களால் அவனின் கையைப்பற்றி இருக்க, அவளின் கையைப்பற்றி நெஞ்சில் வைத்தவன், “கொன்னுட்ட தங்கமே. நான் அழுதா உனக்கு ரொம்ப பிடிக்குதுல” என்று கண்ணீருடன் கேட்க, அவள் ஏதோ பேச முற்பட அதற்கு கூட தெம்பில்லை அவளுக்கு.

 

 

அவளின் குரல் கேட்காமல் போக, அவளின் அருகே காதை கொண்டு போக அவளோ “ஐ லவ் யூ” என்று கூற, நெகிழ்ந்து போனவன் அவளின் உதட்டில் இதழ் பதித்து, “லவ் யூ” என்று கூற அவளோ, “குழந்தைங்க எப்ப… எப்படி இருக்காங்க? பிரச்சனை எதுவும் இல்லை தானே” என்று நடுங்கும் குரலில் பிறக்காத குழந்தைகளின் நலனை கேட்டவளுக்கு பதில் அளித்தவன், வயிற்றில் உள்ள குழந்தைகளின் மீது இவள் கொண்டுள்ள அன்பையும் தன் தாயின் தனக்கான துரோகத்தையும் எண்ணி கொண்டவனுக்கு, மனைவியின் தாய்மையை எண்ணி பெருமிதமாக இருந்தது.

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்