Loading

“கௌசல்யா சுப்ரஜா ராம

பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே

உத்திஷ்ட நர ஸார்தூல

கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்..”

என்று வெங்கடேச சுப்ரபாதம் பாடலுடன் வீட்டை சுற்றி வந்த சாம்பிராணி புகையிலும் தன் அறையில் தூங்கி கொண்டிருந்த பெண்ணவளோ எரிச்சலுற்று

 

“அய்யோ.. இந்த கிழவி தூங்க விடாம இம்ச பண்ணுதுதே.. சீக்கிரமே இந்த கிழவிய போட்டு தள்ளனும்..” என்று புலம்பியவாறே குப்புற படுத்து தலையணையை காதில் வைத்து அழுத்தி இழுத்து மூடி விட்ட தூக்கத்தை தொடர முயன்று தோற்று போனவளோ வெளியே வந்து “ஏய் கிழவி” என்று கோபத்துடன் கத்த,

 

அவளின் கோபத்திற்கு காரணமானவரோ அப்படி ஒரு குரல் கேட்கவேயில்லை என்ற ரீதியில் சாமிக்கு ஆரத்தி காட்டுவதையே மிகுந்த பக்தியுடன் காட்டி கொண்டிருந்தார் பெண்ணவள் கிழவி என்று அழைக்கப்படும் பட்டம்மாள்.

 

அவர் அருகிலிருந்த பெண்ணோ கோபவமாக நிற்பவளை கண்டு நடுங்கியவாறு மணியை ஆட்டிக் கொண்டே ‘என்ன நடக்க போகிறதோ’ என்ற பயத்தில் கடவுளை வழிப்பட்டாள்.

 

அவர் தன்னை அலட்சியப்படுத்தியதில் மூக்கு புடைக்க முறைத்து கொண்டே “ஏய் கிழவி.. உன் பஜனைய இப்போ நிறுத்த போறியா.. இல்லையா” என்று கூறிவிட்டு அருகிலிருந்தவளை முறைக்க, அவளோ மணி ஆட்டுவதை விட முயற்சித்தும் பயத்தில் நடுங்கிய கைகளில் மணியும் சேர்ந்து ஆட, அதைக் கண்டவளோ “உனக்கு வேற தனியா சொல்லனுமா ஆட்டுறத ஸ்டாப் பண்ணுடி”

 

‘அய்யோ.. முடிஞ்சா பண்ண மாட்டேனா.. இந்த கை வேற நேரம் காலம் தெரியாம வாரி விடுதே.. இவ வேற ஃபயர் விட்டுட்டே இருக்கா.. கன்ட்ரோல்டி சித்து’ என்று நினைத்தவாறே தன் நடுக்கத்தை அரும்பாடுப்பட்டு நிறுத்தி கொண்டிருந்திருப்பவளை கண்டு இறுக்கமான முகத்திலும் புன்னகை இழ, அப்புன்னகையை இதழ் கடித்து உள்ளுக்குள் புதைத்து கொண்டு வெளியே மிடுக்காக நின்றாள்.

 

பூஜை முடித்த முதியவரோ பெண்ணவளின் நெற்றில் குங்குமமிட செல்ல, அவரின் கையை தடுத்து பிடித்து “இங்க பாரு கிழவி.. நான் எத்தனையோ தடவ சொல்லிட்டேன்.. இந்த மாதிரி பக்தி பஜனைய கோவில்ல போய் கொட்டோ கொட்டுன்னு கொட்டு.. அப்படியில்லயா நான் வீட்டுல இல்லாத நேரம் கூட்டம் கூட்டி வச்சு கூட்டுவழிபாடு கூட பண்ணு ஐ டோண்ட் கேர்.. பட் இதான் லாஸ்ட் வார்னிங் இப்படி என்னோட ரிலாக்ஸ்ஷேசன மறுபடியும் கெடுக்குற மாதிரி டார்ச்சர் பண்ணின.. அப்புறம் உங்க சாவகாசமே வேண்டாம்ன்னு கண் காணாத இடத்துக்கு போயிடுவேன்” என்று இரு பொருள் பட கூறி, பிடித்திருந்த அவர் கைக்கு விடுதலை அளிக்க,

 

அதில் கடுப்பானவர் “ஏய் சித்திரா.. ரொம்ப கஷ்டப்பட்டு யாரும் நமக்கு சோறு போட வேண்டிய அவசியமில்ல எனக்கு கை கால் எல்லாம் நல்லாவே இருக்கு.. நாலு வீட்டுல பத்து பாத்திரம் கழுவி போட்டுக்கூட என்னால உயிர் வாழ முடியும்.. இதுக்கு மேல இந்த மாதிரி கிறுக்கு தனமா அவ பேசுனா.. அப்புறம் நம்ம எதுக்கு இவளுக்கு பாரமா இருக்கணும்ன்னு வீட்ட விட்டு போயிட்டே இருப்பேன்.. மின்ட் இட்” என்று ஆங்கிலத்தை தப்பாக பேசிவிட்டு செல்பவரை நினைத்து உள்ளுக்குள் சிரித்தவளோ ‘கிழவிக்கு திமிரு கூடி போச்சு’ என்றவாறு அவளின் அறைக்குள் நுழைய,

 

அவர் பேசியதை கேட்டு தலையிலடித்த சித்திராவோ வேகமாக, அவர் முன்னே சென்று “ஏய் பட்டிக்காட்டு கிழவி அது மின்ட் இட் இல்ல.. மைண்ட் இட்”

 

“அடியே.. கொஞ்சம் நேரம் கூட சீரியஸா நடிக்க விட மாட்றியேடி.. நீ இப்படியே பண்ணிட்டு இரு.. கண்டிப்பா ஒருநாள் வீட்ட விட்டு துரத்த போறா”

 

“அய்யோ பாட்டி.. நான் கூட முதல நீ சீரியஸா தான் பேசுறியோன்னு நினைச்சி ஜெர்க் ஆயிட்டேன்.. ஆனா கடைசியா இங்கிலீஷ்ல கொல பண்ணிட்டு ஒரு ரியாக்ஷன் விட்ட பாரு.. அவ மட்டும் பக்கத்துல இல்லன்னு வச்சிக்கோயேன் சிரிச்சே செத்துருப்பேன்” என்று கூறி வயிற்றை பிடித்து சிரிப்பவளை கண்ட முதியவரோ

 

“ஏய் கத்தி தொலையாதடி அவ காதில விழுந்துற போகுது.. இன்னும் என் டிராமாவே முடியல..”

 

“என்னமோ பண்ணு.. ஆனா ஸ்டார்ட்டிங் எல்லாம் நல்லா தான் போகுது எண்டிங் தான் இங்கிலீஷ்ல பேசி காமெடி பண்ற.. ஆனா அவ மட்டும் எப்படி தான் சிரிக்காம கல்ல முழுங்குன போல இருக்காளோ”

 

“சிரிச்சா கெத்து போயிடுமாம்.. இவளுக்காக ஒருத்தன் பிறந்திருக்கானே.. அவனால மட்டும் தான் இவள மாத்த முடியும்.. சீக்கிரமே வருவான்”

 

“அவர் எப்போ வந்து.. இவ எப்போ மாறி.. என் ரூட் எப்போ க்ளியராகி.. என் புருஷன் கூட எப்போ ரொமான்ஸ் பண்றது.. ஷப்பா முடியல இப்போவே கண்ண கட்டுதே”

 

“ஆமா.. இப்போ மட்டும் அங்க என்ன வாழுதாம் ஜாலியா டூயட் பாடிக்கிட்டு தான இருக்க.. ஆனாலும் உங்களுக்கு தைரியம் ஜாஸ்தி தான்டி.. ஒருநாள் சிக்குவீங்கள அன்னைக்கு எல்லாருக்கும் சங்கு தான்”

 

“ஏய் கிழவி வாய கழுவு.. வெள்ளி கிழமை அதுவுமா பேசுற பேச்ச பாரு”

 

“உண்மைய உரக்க சொல்லணும்டி” என்று கூற, அதைக் கேட்டு அம்முதியவரை முறைத்தவளோ முகத்தை வெட்டிக் கொண்டு அறைக்குள் சென்று விட்டாள்.

 

*********************************

 

காலையில் எழுந்து காலை கடன்கள் மற்றும் உடற் பயிற்சி அனைத்தையும் முடித்து குளித்துவிட்டு ப்ளூ ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் சகிதம் இன் செய்து தலையை ஜெல் கொண்டு கோதிவிட்டு பிஸ்டலை முதுகில் பின்னால் சட்டையினுள் சொருகிவிட்டு சாப்பிட அமர்ந்தவனுக்கு கழுத்திற்கு வெளியே தாலி சங்கிலி தெரிய, நெற்றியில் குங்குமம் மின்ன சாப்பாடு பறியமாறியவாறே “சிஐடி ஆபீஸர்.. இன்னைக்கு டியூட்டி ஜாயின்ட் போல”

 

“ஆமாடி.. நிஷா குட்டிக்கு இடம் புதுசு அவ அழுதாலும் வேற என்ன அர்ஜன்ட்னாலும் எனக்கு கால் பண்ணு வாகி டியர்”

 

“சரிடா.. எனக்கு என்னோட பொண்ண பாத்துக்க தெரியும்.. நீ போய் உன் வேலைய பாரு”

 

“ம்..” என்றவாறு ஏதோ யோசனையில் சாப்பிட்டு கொண்டிருக்க,

 

அதை கண்டவளோ “என்னடா மலரும் நினைவுகளா” என்று கேட்டு அவனின் தோலில் கை வைத்து “விடுடா.. எல்லாம் சரி ஆயிடும்” என்று கூற,

 

அதற்கு அமைதியை மட்டும் பதிலாக வழங்கி சாப்பிட்டு எழுந்து ஹாலில் விளையாட்டு பொருகளை வைத்து விளையாடி கொண்டிருந்த பிஞ்சை தூக்கி கன்னத்தில் முத்தமிட்டவனோ “நிஷா டார்லிங்.. அப்பா வொர்க் போறேன்.. நீ மம்மி கூட சமத்தா இருக்கணும் ஓகே வா” என்று ஒன்றரை வயது பிஞ்சு குழந்தையிடம் கூற, அக்குழந்தைக்கு, இவன் பேசியது புரிந்ததோ என்னவோ தந்தைக்கு பதில் கூறும் பொருட்டு “ப்பா.. ப்பா” என்று கூறி பொக்கை வாயை திறந்து சிரிக்க,

 

தன் செல்ல மகளின் சிரிப்பை கண்டு மலர்ந்தவனோ “குட் கேர்ள்.. அப்பாக்கு கிஸ் கொடுங்க” என்று கூறி கன்னத்தை காட்ட, குழந்தையும் இதழ் முத்தம் அளித்து தந்தைக்கு விடை அளிக்க, குழந்தையை பெண்ணவள் கையில் கொடுத்தவனோ “பாய் வாகி டியர்” என்று கூறிவிட்டு பைக் சாவியை விரலில் சுற்றியவாறு நகற்பவனை “ரேயா..” என்று அழைக்க,

அவனும் திரும்பி புருவம் உயர்த்தி என்ன என்று வினவ

“ஆல் த பெஸ்ட்டா”

 

“எனக்கு டிரான்ஸ்ஃபர் ஒன்னும் புதுசு இல்லையே வாகி டியர்”

 

“நான் எதுக்கு ஆல் த பெஸ்ட் சொன்னேன்னு தெரியாதோ..” என்று வினவ

 

அதற்கு இதழ் விரித்து சிரித்தவனோ ‘தெரியாது’ என்பது போல் தோலை உலுக்கி சென்றான்.

 

**********************************

 

இப்போது ப்ளூ ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் இன் செய்த சகிதம் பிஸ்டலை உணவருந்தும் மேசையில் வைத்துவிட்டு சாப்பிட அமர்ந்தவளோ எதிரே பிஸ்டலை கண்டு எச்சியை விழுங்கியவாறு சாப்பிட்டு கொண்டிருந்தவளை கண்டு “ஏய்.. கிழவி சாப்பிட்டுச்சா” என்று கேட்க, திரு திருவென்று விழித்த சித்திரா “இல்ல அக்கா.. கேட்டேன் பசிக்கலன்னு சொல்லிட்டு”

 

“எத்தன தடவடி சொல்லிருக்கேன் அக்கான்னு கூப்பிடாதன்னு”

 

“நானும் எத்தன தடவ சொல்லுறேன்.. எனக்கு அக்கான்னு கூப்பிட தான் பிடிச்சிருக்குன்னு” என்று கூற,

 

அவள் தன்னை எதிர்த்து பேசியதை கண்டு தீயாய் முறைக்க,

 

தமைக்கையின் தீ பார்வையை எதிர் கொள்ள முடியாமல் ‘அய்யோ.. பொசுக்கிடுவா போலயே.. இந்த தைரியம் அப்போ அப்போ எங்கிருந்து தான் வருதுன்னு தெரியல பட்டுன்னு பேசிடுறேன்.. ஒருநாள் பொட்டுன்னு போட்டு தள்ள போறா’ என்று நினைத்துவிட்டு “ஹீ ஹீ அக்கா.. எனக்கு காலேஜ் டைம் ஆயிடுச்சு.. நான் கிளம்புறேன்” என்று கூறி தமக்கையின் கன்னத்தில் முத்தமிட்டு “ஹேப்பி வலெண்டைன்ஸ் டேக்கா” என்று கூறி அவள் கையில் சிக்காமல் பறந்து விட்டாள்.

 

தங்கையின் செயலில் மலர்ந்த முகம் எதிரே வந்த கடந்த கால நிகழ்வுகளை நினைத்து இறுகியது, இருப்பினும் தன்னிலையை மாற்றும் பொறுத்து சாப்பாடு தட்டுடன் முதியவரின் அறைக்குள் நுழைய, அவரோ இவள் வருகைக்காக காத்திருந்தவர் போல் அவள் அறைக்குள் நுழையவும் முகத்தை உர்ரென்று வைத்து கொள்ள, அவர் அருகில் அமர்ந்த பெண்ணவளோ சாப்பாடு தட்டை நீட்டி “ஏய் கிழவி.. இப்போ எதுக்கு வீம்பு புடிச்சிட்டு உக்காந்து இருக்க.. ஒழுங்கா சாப்பிட்டுட்டு மாத்திரைய போடு” என்று கூற,

 

அவரோ ‘நீ சொன்னா உடனே, நான் சாப்பிடணுமா’ என்று நினைத்து முகத்தை மறுபக்கம் திருப்பி கொள்ள

 

“இப்போ என்ன கிழவி உனக்கு.. நீ எனக்கு பிடிக்காததா பண்ணின கோபத்துல அப்படி பேசிட்டேன்.. சாரி போதுமா.. இல்ல காலுல விழுகனுமா” என்று கேட்க,

 

அவரோ விழுயென்றவாறு காலை காட்ட,

 

“கிழவி.. நீ ரொம்ப ஓவரா பண்ற.. எப்போவும் பொறுமைய இழுத்து பிடிச்சி பேசிட்டு இருக்க மாட்டேன் போட்டு தள்ளிட்டு போயிடுவேன்” என்று கூறியதை கேட்டு, அவர் மறுபடியும் முகத்தை திருப்பி கொள்ள இதழ் குவித்து ஊதியவளோ “சரி.. விழுந்து தொலைக்குறேன்..” என்று கூறி அவர் காலில் கைவைக்க,

 

“நல்லா இருடிமா.. சீக்கிரமே கல்யாணம் பண்ணிட்டு குழந்தை குட்டியோட சந்தோசமா வாழனும்” என்று அசிர்வதித்தில், அவள் கொலைவெறியுடன் முறைப்பதை சமாளிக்கும் பொருட்டு “தட்ட கொடுடி.. பசிக்குது” என்று கூறி தட்டை வாங்கி சாப்பிடுவதில் கவனத்தை செலுத்த,

 

அவரை முறைத்துவிட்டு வெளியே வந்து உணவருந்தும் மேஜையில் இருந்த பிஸ்டலை எடுத்து முதுகிற்கு பின்னால் சொருகியவளோ புலட்டியில் பறந்தாள்.

 

*********************************

 

குற்ற புலனாய்வு துறை என்று பொறிக்கப்பட்டிருந்த தன் அலுவலகத்தில் நுழைந்தவளோ, திறன் பேசியை நொண்டியவாறு சிரித்து கொண்டிருந்தவனை “டேய் ருத்ரா.. என்னடா யாரையும் காணும்”

 

“அதுவா மச்சி.. எல்லாரையும் வேற ஒரு மிஷனுக்காக சார் அனுப்பிவிட்டுருக்கார் போல.. இப்போதைக்கு நம்ம ஃப்ரீ தான்”

 

“முதலயே சொல்லிருந்தா லீவ் போட்டுருப்பேன்டா..” என்றவாறு சோர்வாக சுழலும் நாற்காலியில் அமர்ந்து சுழன்றவாறே, ஏதோ சிந்தித்தவளின் நெஞ்சில் எழுந்த வலியால் முகம் வாட,

 

அதைக் கண்டு கொண்ட உயிர் நண்பணான ருத்ரா என்று அழைக்கப்படும் ருத்ரேஷ்வரன் “மச்சி.. ஆர் யூ ஓகே”

 

“ம் பைன்டா..” என்று கூற, பிளாஷ்கிலிருந்த தேநீரை ஒரு கோப்பையில் ஊற்றி, அவளின் புறம் நீட்டியவனோ “மச்சி.. இத குடி பெட்டரா இருக்கும்” என்று அவளிடம் கொடுத்துவிட்டு “அப்புறம் மச்சி.. சொல்ல மறந்துட்டேன்.. இன்னைக்கு நம்ம கூட நியூ ஆபீஸர் ஜாயின் பண்ணபோறார்.. இனி வருற எல்லாம் மிஷனும் நம்ம மூணு பேரும் சேந்து பண்ணனுமாம்.. டைரக்டர் ஆர்டர்”

 

“உன்ன மேய்க்கவே என்னால முடியல இதுல இன்னொருத்தன வேற சமாளிக்கணுமா” என்று கூறி தன் நண்பனின் தீ பார்வைக்கு ஆளாக, அதெல்லாம் கருத்தில் கொள்ளாமல் தேநீரை குடிப்பதே பெரும் வேலை என்று குடித்து கொண்டிருந்த சமயம்,

 

“யார யாரு மேய்க்க போறான்னு பாக்க தான போறீங்க மேடம்” என்றவாறு கம்பீர நடையில் நெஞ்சை நிமிர்த்தி உள்ளே வந்தவனை கண்ட பாவையோ, அவனின் ஆளுமையை கண்டு ஒரு நொடி ஸம்பித்து பின் அவனின் கம்பீர பார்வைக்கு நிகராக தன் திமிர் பார்வையை செலுத்த

 

அவளை மேலிருந்து கீழ் அளவெடுத்தவனோ “பை த பை ஐ அம் ஆத்திரேயன்” என்று பெண்ணவளுக்கு தன்னை அறிமுகம் செய்து விட்டு கரம் நீட்ட,

அலட்சிய பார்வையுடன் “ஐ அம் தியாழினி” என்று கை குலுக்கி விலக,

அவனோ “சோ ஹார்ட்” என்று விஷமத்த புன்னகையுடன் கூற,

 

“வாட்” என்று பாவையவள் சீர,

 

அதற்கு ரேயனோ “கை ஹீட்டா இருந்துச்சுமா அத தான் சொன்னேன்” என்றவாறு அவளை நக்கலாக பார்வை பார்த்தவனோ ருத்ரஷ்வரனிடம் திரும்பி கரம் நீட்ட, அவனும் பதிலுக்கு கை குலுக்கி “ஐ அம் ருதரேஷ்வரன்” என்று தன்னை அறிமுகப்படுத்த, இப்போது பாவையின் புறம் திரும்பியவனோ “கிவ் மீ சாக்லேட்”

 

அவளோ புரியாமல் காரப்பார்வை வீச,

 

ரேயனோ “மிஸ் தியாழினி சில்.. ஜஸ்ட் ஒன் சாக்லேட் கேட்டதுக்கு எதுக்கு பிபிய இன்கிரீஸ் பண்ணிக்குறீங்க” என்று கூறி தன் பாக்கெட்டிலிருந்து சாக்லேட்டை கையில் எடுத்தவனோ, அவளின் சட்டையின் நிறமும் தன்னுடைய சட்டையின் நிறமும் ஒன்றாக இருப்பதை கையில் வைத்திருந்த சாக்லேட்டை வைத்து ஆட்டி புரிய வைத்தவனோ “இப்போ புரியுதா எதுக்கு சாக்லேட் கேட்டேன்னு.. டேக் இட்” என்று கூற,

 

பக்கத்திலிருந்த ருத்ரனோ ‘வந்ததுமே வேலைய காட்டுறான்.. ரெண்டு பேருமே ஒருத்தருக்கு ஒருத்தர் சலைச்சவங்க இல்ல போலயே.. அப்போ இனி நமக்கு என்டர்டெயின்மென்ட் தான்’ என்று நினைத்து கொண்டிருக்க,

 

“தேங்க் யூ மிஸ்டர் ஆத்திரேயன்..” என்று கூறி அவன் கொடுத்ததை கையில் வாங்கியவளோ, அருகிலிருந்த குப்பை தொட்டியில் வீசிவிட்டு “லூக் மிஸ்டர்.. என்ன பொறுத்த வர.. இந்த சாக்லேட் போல.. உங்க பேச்சும் குப்பைக்கு சமம் தான்.. சோ யூ ஷுட் நாட் கிராஸ் த லிமிட்.. அது தான் உங்களுக்கும் மரியாதை” என்று விரல் நீட்டி எச்சரித்துவிட்டு வெளியே செல்ல, போகும் அவளையே ஆடவர் இருவரும் பார்த்துவிட்டு ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள, அந்த நேரம் வெளியே சென்றவளோ போன வேகத்தில் உள்ளே வந்து தன் நார்காழியில் கால் மேல் கால் போட்டவாறு கெத்தாக அமர்ந்து கோப்புகளை புரட்டி கொண்டிருக்க, அப்போது தன் திறன்பேசியில் வந்த குறுஞ்செய்தியை கண்ட ருத்ரனோ “ஏய் மச்சி.. மம்மி காலிங்டி.. நீ எதாவது இம்பார்ட்டன்ட்ன்னா கால் பண்ணு வந்துடுறேன்” என்று கூறியவன், அவள் கூற வருவதை கேட்கும் முன்னே பறந்துவிட்டான்.

 

அவள் சென்றதும் தன்னதிரேயிருந்த நாற்காலியில் கால் மேல் கால் போட்டு மிடுக்காக அமர்ந்திருப்பவனை பார்த்து ‘வந்த அன்னைக்கே யார்கிட்ட வால் ஆட்டுற.. நான் தியாழினிடா என்கிட்ட உன் ஆட்டம் எல்லாம் பலிக்காது மேன்’ என்றவாறு அவனை நக்கலாக ஏறிட, அவனோ ‘காட்டேரி என்கிட்டயே திமிர் தனம் காட்டுறா.. இருக்குடி உனக்கு’ என்று நினைத்தவாறு அவள் மேல் எரிச்சல் பார்வையை வீச, அதைக் கண்டு கொள்ளாமல் திரும்பியவளின் கண்கள் தன் அருகிலிருந்த குப்பை தொட்டியில் பதிய அந்த சாக்லேட்டை கண்டவளுக்கோ பழைய நினைவுகள் வந்து முகத்தை இறுக்கமாக்கியது.

தொடரும்..

 

ஆனந்த மீரா 😍

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
8
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்