Loading

    குலதெய்வ கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்புகையில் மாலை ஆகிப் போனது.  

    

    கெஜலட்சுமி தக்க ஏற்பாடுகளுடன் காத்திருக்க வீட்டு பெண்கள் மட்டும் அவர் அருகில் நின்றிருந்தனர். இளையவர்கள் அனைவரும் உறங்க சென்றிருக்க மகிழனும் அகிலோடு தூங்கி விட்டிருந்தான். 

    

    மணமக்கள் வந்துவிட நந்தினி இன்னும் இரண்டு பெண்கள் சேர்ந்து ஆரத்தி எடுத்தனர். 

    

    ” பெரிய நோட்டா போடணும் மாமனுகளா”என்றதில் சிரித்த அருண் “இல்லேன்னா என்ன செய்வீகளாம்”என்றான் சிரிப்புடன். 

    

    “பெறவு மொட்ட மாடியில வெட்ட வெளியிலதேன் ஒறக்கமாம் கொழுந்து”என்று அண்ணி முறைப்பெண் ஒருத்தி கிண்டல் அடிக்க அவர்களிடம் சரிக்கு சமமாக பகடி பேசினர் அருண் யுகா இருவருமே. 

    

    “ஏதேது இங்கனயே பட்றைய போட்ருவீக போலருக்கு நல்ல பட்டணத்து பகுமானமான ஆளுகனு பாத்தா ஐநூறுக்கு இத்தனை பகடியா?”என்று வாய்பிளந்து இன்னுமே கிண்டல் செய்தனர். 

    

    “பெறவு இதுக்கெல்லாம் தனியா நேரமா பாக்க முடியும் மதினி கெடைக்கிற நேரத்துல பட்றைய போட வேண்டியதுதேன்”என்ற இரு மணமகன்களும் ஆளுக்கு ஆயிரம் ரூபாயைத் தட்டில் போட்டனர். 

    

    “ஏதோ எந்தங்கச்சிய மொவத்துக்காக விடுதேன்”என்று இழுத்தவர்கள் மணமக்களை உள்ளே அனுப்பி வைத்தனர். 

    

    மீண்டும் ஒரு பால் பழம் சடங்கு நடந்தேற நால்வருக்குமே உடல் அசதி சோர்வை அளித்தது. மாலைகளை பூஜையறையில் கழற்றி வைத்து விட்டு வந்தனர்.

    

    “செரித்தேன் நாளைக்கு நேரமே ஏந்திக்கணும் ஏத்தா அரசி சட்டுபுட்டுனு அடுத்த சடங்குக்கு ஏற்பாடு பண்ணுங்க. ஏ கொமரிகளா புள்ளையளை கூட்டிப் போய் மத்ததை பாருங்க”என்ற கெஜலட்சுமி “லேய் சுதா நந்தினியோட சேர்ந்து பந்திய போடு நேரமாவுது பாரு”என்றார். 

    

    “எல்லாம் ரெடி அப்பத்தா நான் மாப்ளைகளை கூட்டி போறேன்”என்று இருவரையும் அழைத்துச் சென்றான் சுதாகரன். 

    

    “மொகத்தை கழுவிட்டு வாங்க மச்சான்களா. ரவைக்கும் வேட்டிதேன் உடுத்தனும்.”என்றவன் யுகாவின் கையைப் பிடித்துக் கொள்ள அருண் தன்னை சுத்தப்படுத்தி கொள்ள குளியலறையில் புகுந்தான்.

    

    “என்ன மாமா”என்று யுகா கேட்க 

    

    “எப்பவும் போல மச்சான்னே கூப்பிட வேண்டியது தானே”என்று சிரித்தான் சுதாகரன்.

    

    “இல்லை அப்பா இனிமே மாமானு கூப்பிட சொல்லி சொன்னார் நீ சொல்லு மாமா என்ன விஷயம்”என்று புருவம் முடிச்சிட கேட்க

    

    “பெருசா என்னத்த எல்லாம் தெரிஞ்ச சங்கதி தான்”என்றவன் சிறிது இடைவெளி விட்டு பின்னர் “தேஜூ பத்திதேன் மச்சான்”என்றான்.

    

    “அஸ்விக்கு என்ன”என்று இன்னும் குழப்பமாக கேட்க சுதாகரனுக்கு அவன் அஸ்வி என்றதிலேயே மனது நிறைந்து விட்டது.

    

    “பழைய விஷயத்தை எதுவும்”எனும் போதே “அடச்சே இதுக்கு தான் இந்த பில்டப்பா நான் கூட பயந்து போயிட்டேன் மாமா கடவுளே நீ இருக்கியே”என்ற யுகா “அது ஏதோ சின்ன வயசுல பண்ணிட்டா அதை இன்னுமா ஞாபகம் வச்சுப்பாங்க உன் தங்கச்சகயை ஆனியன் கூட கட் பண்ண விடாம பாத்துக்கிறேன் போதுமா”என்றான் கிண்டலாக.

    

    

    “அதுசரி பொறவெப்படி கறிச்சோறு மெல்றதாம்”என்று சிரித்தவன் “எங்களுக்கு அது போதும் மச்சான். ப்ரதி கூட ஒரு மாதிரி படபடன்னு பேசி அசால்டா சமாளிக்கும். ஆனா தேஜூ அளந்து அளந்து தான் பேசவே செய்யும். எனக்கும் செமத்தியான கோபம் அது மேல இப்புடி போய் அந்த நாய் கூட பழகிடுச்சேன்னு”என்று சொல்லும்போதே இன்னும் சுதாகரனுக்கு மூக்கு விடைத்தது கோபத்தில்.

    

    

    “அஸ்வி பத்தியும் நீங்க எல்லாம் இனி கவலைப்பட வேண்டாம். நான் பார்த்துப்பேன் இதுக்கு போய் ஃபீல் பண்ணிட்டு”என்று சமாதானம் செய்ய அதற்குள் அருண் வந்துவிட்டான்.

    

    

    அருண்”நீ போயிட்டு வா யுகா”என்றவன் “என்ன மாமு எனக்கெல்லாம் அட்வைஸ் கிடையாதா”என்றான் கிண்டலாக.

    

    “ஆமா மச்சி உனக்கு ஒரு லோடு வச்சிருக்கேன்”என்று சிரித்த சுதாகரன் “எந்தங்கச்சி அடிச்சுப்புட்டா நேரா இந்த மாமன் கிட்ட ஓடி வந்திரு எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்”என்றதில் வெடித்து சிரித்தனர் இருவரும்.

    

    “ஒரு பொம்பளை ரௌடிக்கிட்ட கோர்த்து விட்டுட்டு ஆதரவு வேற நீயெல்லாம் நல்லா வருவய்யா”என்று வம்பு செய்தவன் “நெஜமாவே எங்களை பார்த்துக்கப் போறது உன் தங்கச்சி தான்”என்றான் மனதார.

    

    “நாங்க எல்லாம் இருக்கோம்யா”என்று தோளோடு அணைத்துக் கொண்டவன் நெகிழ்வாய் நிற்க “நான் அடி வாங்கறதை பார்க்கத்தான ஆனாலும் கல்லு மனசுய்யா உங்களுக்கு”என்றான் மீண்டும் வம்பாய் 

    

    மூவரும் பேசிச் சிரிக்க அதற்குள் உணவருந்த அழைப்பு வந்து விட்டது.

    

    

    தேஜா பிரதன்யா இருவரும் எளிமையான சிஃபான் சேலையில் இருக்க இருவர் தலையிலும் ஒரு கூடை பூ வழிந்து கொண்டிருந்தது.

    

    “மதுரை பூ மார்க்கெட் ல பூவே இன்னைக்கு இருந்திருக்காது”என்றான் அருண்.

    

    “ஏன்டா”என்றதும் “அதான் எல்லாம் உன் தங்கச்சிக தலையில கொட்டி இருக்குதே”என்று சிரிக்க “சும்மா இருடா”என்றான் சுதாகரன் சிரிப்புடன்.

    

    ஒரு இட்லியை வைத்துக் கொண்டு தேஜா பரிதாபமாக விழித்தாள்.

    

   “என்னாச்சு அஸ்வி”என்று யுகா அவளருகில் கிசுகிசுக்க 

    

    “என்னால சாப்பிடவே முடியாது”என்றாள் பாவமாக.

    

    

    “சரி வச்சிடு”என்றவன் அவள் இலையில் இருந்ததை எடுத்துக் கொண்டான். அவனின் இயல்பான செய்கையே பெரியவர்களுக்கு நிறைவாய் இருக்க அனைவரும் கண்டும் காணாதது போல இருந்தனர்.

    

    “தனு கேசரி தரவா”என்று அருண் கேட்கவும் “ஒழுங்கா சாப்பிடலை அவ்வளவு தான்”என்று மிரட்டிக் கொண்டிருந்தாள் அவனை.

    

   

    இரு இணைகளுக்கும் பெரிய வீட்டில் தான் இரவு சடங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.மாலையே தங்கள் வீட்டிற்கு கிளம்புகிறேன் என்று கூறிய கந்தசாமியிடம் “இன்னைக்கு இங்க இருக்கட்டும் கந்தா நாளைக்கு போகலாம். எப்படி பார்த்தாலும் உன் பொண்டாட்டியோட அம்மா பொறந்த வீடு இது. இங்கேயே அவனுக்கு ஒரு நல்லது நடக்கட்டுமே”என்றிருந்தார் வெங்கடாசலம்.

    

    “சரிங்க மாமா”என்றவருக்கு எல்லாம் அவர்களே செய்வது போல் இருந்ததால் ஒரு தயக்கம் இருந்தது. தேவை இல்லாமல் அவர்களுக்கு பாரமாய் இருக்கிறோமோ என்று தோன்றியது கந்தசாமிக்கு. மனைவி இருந்திருந்தால் நிச்சயம் தன் வீட்டில் தன் மகனின் விசேஷம் நடந்திருக்கும் ஆனால் இப்போது என்று எண்ணியவருக்கு மனதில் ஒரு கலக்கம்.

    

    “ஒம்மனசு புரியாம இல்ல கந்தா. இந்த கெழவனுக்கு ஒரு ஆசை என் பேரன் பேத்திகளோட எல்லா விஷேஷமும் இந்த பெரிய வீட்டுல நடக்கணும் னு அதுக்கு தான் கேட்டேன்”என்று சொல்ல அதன் பின்னர் கந்தசாமி மறுப்பாரா என்ன. 

    

     இல்லாதவன் இருப்பவன் என்று எந்த பாகுபாடும் காட்டவில்லை பெரிய வீட்டினர். யுகாவிற்கு என்ன மரியாதை செய்தனரோ அதற்கு இணையாகவே அருணையும் நடத்தினர். ஒரு சிறு மாறுபாடு கூட வந்துவிடக் கூடாது என்பதில் அத்தனை கவனம் அனைவருக்கும். 

    

    அருண் திருமணம் வேண்டாம் என்று சொல்லி இருந்தாலும் செய்ய வேண்டிய கடமைகளை சிறப்பாக சரியாக செய்திருக்க வெங்கடாசலம் மெச்சுதலாய் அவனைப் பார்த்தார்.

    

    “பேரனுக ரெண்டு பேரும் தங்கம்ல்ல லட்சுமி. சபையில விட்டுக் குடுக்காம செஞ்சுட்டாங்க பாரேன்”என்று மனைவியிடம் பாராட்டினார்.

    

    

    “ஹ்ம்ம் ஆமாங்கய்யா”என்ற கெஜலட்சுமிக்கு அத்தனை நிறைவு. 

    

    

   *********** 

    

    “செரி செரி நேரமாவுது அரசி ரெண்டு பேரையும் அவக அவக அறையில விட்டு வாங்க”என்று அதட்டல் போட்டார் கெஜலட்சுமி.

    

    திரிபுரசுந்தரி மகள்களை உச்சி முகர்ந்து “நல்லபடியா இருக்கணும்”என்றார் கண்களில் நீர் ததும்ப 

    

    “கால்ல விழுந்து கும்புட்டு ரெண்டு பேரும் ரூமுக்கு போங்கத்தா நந்தினி கொண்டு போய் விடு ஏ சுஜாதா நீ போய் பிரதியை விடு”என்றார் இளவரசி. மருமகளின் காதில் ஏதேதோ கூற “நான் பார்த்துக்கிறேன் த்த”என்றாள் நந்தினி.

    

    “என்னத்த பாத்தியோ போ அங்க பாரு ஒண்ணு திருதிருனு முழிக்குது இன்னொன்னு தூங்கி வழியுது”என்று சிரித்த இளவரசி “நாலு வார்த்தை சொல்லி அனுப்பி விடுத்தா”என்றார் மருமகளிடம்.

    

    “என்ன அண்ணி”என்ற தேஜாவிடம் “ஒண்ணும் இல்லை நீ வா எல்லாம் இன்னைக்கே நடக்கணும் இவங்களுக்கு”என்று முனகியபடி “எதுவா இருந்தாலும் யுகா ண்ணா கூட பேசி முடிவு பண்ணிக்கோ தேஜ். உங்க லைஃப் எப்போ ஸ்டார்ட் பண்ண நினைக்கிறீங்களோ அப்போ பண்ணுங்க. மெச்சூர்ட் கேர்ள் உனக்கு புரியும் னு நினைக்கிறேன்”என்ற நந்தினியிடம் பலமாய் தலையாட்டினாள் தேஜஸ்வினி.

    

    

    இங்கே சுஜாதா ப்ரதன்யாவிற்கு ஏதேதோ அறிவுரை வழங்க அவளோ “அண்ணி தூக்கமா வருது நாளைக்கு கேட்கிறேன். ப்ளீஸ் அண்ணி”என்று சொல்ல “சரியா போச்சு தூங்கவா உன்னை அனுப்புறோம்.”என்றவள் மீண்டும் அறிவுரை வழங்க “ரூம் வந்திடுச்சு குட் நைட் அண்ணி”என்று அவசரமாக உள்ளே ஓடிவிட்டாள்.

    

    உள்ளே அருணைப் பார்க்க அவனோ நெற்றி மீது வலது கையை வைத்தபடி கண்களை மூடி இருந்தான்.

    

    கதவைச் சாத்தியவள் பாலைக் கொண்டு போய் டேபிளில் வைக்க அந்த சத்தத்தில் எழுந்து அமர்ந்து விட்டான்.

    

    கண்களை கசக்கியபடி “உட்கார் தனு”என்றிட 

    

    “கால்ல விழணுமாம் இதை தரணுமாம் எழுந்திருங்க பிரசாத்”என்றாள் வேகமாக.

    

    அவளைச் சிரிப்புடன் பார்த்தவன்”இப்ப உன்னை பார்க்க எப்படி இருக்கு தெரியுமா”என்றபடி எழுந்து நின்றான்.

    

    “எப்படி இருக்கு”என்றபடி பால் சொம்பை நீட்டினாள். 

    

    “ப்பே னு இருக்க தூக்கம் வருதா”என்றவனுக்கு படபடப்பு மேலோங்கி இருந்தாலும் அதை வெளிக் காட்டவில்லை. 

    

    “ஹ்ம்ம் “என்றவள் “சீரியஸாவே தூக்கம் வருது தான்”என்றாள் பரிதாபமாக.

    

  இவர்கள் தான் பெண் மாப்பிள்ளை என்று உறுதி செய்த பிறகு இருவரும் நிறைய பேசியிருந்தனர். நிதர்சனம் எதுவோ அதை வெளிப்படையாகவே அருண் பேசியிருக்க இருவருக்கும் சகஜநிலை இயல்பாகவே வந்தது. 

    

    இதுதான் என் வாழ்க்கை என்று அவன் சொல்லி இருக்க ப்ரதன்யா அதை ஏற்றுக் கொண்டாள். மகிழனை விட்டு நம் வாழ்வு நகராது என்பதையும் தெளிவாக புரிய வைத்திருந்தான் அவன்.

    

    

    “பால் வேணுமா குடிக்கிறியா”என்று அருண் கேட்க 

    

    “அய்யோ வேணாம்ப்பா எனக்கு இதுக்கு மேல முடியாது”என்று சொல்ல 

    

    “ஓகே தென்”என்றவனிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் கையைப் பிசைந்தாள்.

    

    அருணுக்கு சிரிப்பாய் வந்தது. எத்தனை வாய் பேசினாள் இப்போது அத்தனைக்கும் அமைதியாக இருக்க அவனுக்கு இன்னும் அவளை சீண்டும் ஆவல் பிறந்தது.

    

    “ஓகே ஸ்டார்ட் பண்ணுவோமா”என்று அவன் கேட்டதில் விழிகள் தெறிக்க அவனைப் பார்த்து வைத்தாள். அவளது இந்த நிலையில் அடக்க மாட்டாமல் சிரித்தவன் “ப்ரதர் நீ ரொம்ப க்யூட்”என்று கன்னத்தை கிள்ளி தன் உதட்டில் பதிக்க “உங்களை”என்று அவன் தோளில் அடித்தாள் படபடப்பாக.

    

    “ஓகே ஓகே கூல் தனு”என்றவன் அவளை நெருங்கி அமர்ந்து இருந்தான்.

    

    

    “ஹ்ம்ம் நெக்ஸ்ட்”

    

    “நெக்ஸ்ட் என்ன”என்றவளுக்கு அவன் நெருங்க நெருங்க பதற்றம் கூடியது.

    

    “நெர்வஸ் ஆகறியா”என்றவன் “ஆக்ஸூவலி எனக்கும் நெர்வஸா தான் இருக்கு”என்றான்.

    

    “அப்போ தூங்கலாம்”என்று வேகமாய் எழுந்தவளை சிரிப்புடன் பார்த்து விட்டு “ஹ்ம்ம் தூங்கலாம்”என்றபடி அவள் கரத்தைப் பற்றியிருந்தான்.

    

    “என்ன”

    

    “என்ன என்ன நீ சினிமா எல்லாம் பார்க்க மாட்டியா”என்று கிண்டல் செய்தவனை ஏகத்திற்கும் முறைத்தாள்.

    

    “ஓகே ஓகே சரண்டர்”என்றபடி தானும் எழுந்து கொண்டு “தனு”என்று அழைக்க குரலே ஒரு மாதிரியாக இருந்தது. 

    

    அவளின் நெற்றியில் இதழ் பதித்து “குட் நைட்”என்று சொல்லி விட்டு விளக்கை அணைத்து படுத்து விட்டான்.

    

    

    *******

    

    இங்கே தேஜஸ்வினி வரும் போதே யுகாதித்தன் உறங்கியிருந்தான்.

    

    ….. தொடரும் 

    

    

    

    

    

    

    

    

    

    

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
7
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. Super super super super super super super super super ❤️