
“அந்தி வானம் அரைக்கும் மஞ்சள், அக்கினிக் கொழுந்தில் பூத்த மஞ்சள்,தங்கத் தோடு ஜனித்த மஞ்சள்,கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள் “
என்ற பாடலே மனதிலோடியது மஞ்சள் வண்ண மென்பட்டை உடுத்திய மங்கையவளுக்கு.
இருபக்கக் காதோரம் சிறு முடி கற்றை எடுத்து குத்தியவள், மீதமிருந்த, அடர்ந்தக் காட்டை முன்னே போட்டுக் கொண்டாள். சிறு பொட்டுக்கும் ஜிமிக்கி இரண்டிற்கும் அதனதன் அரியணையை கொடுத்து விட்டு தன்னை ஒரு புறம் சரி பார்த்தவளின் நினைவில் குடிக் கொண்டவனோ, தன் பிம்பமருகே வந்து நின்று மூன்று விரல்களைக் காட்டி “அழகு” என்று கூறுவது போல மாயை தோன்ற, சட்டென திரும்பி பார்த்தாள், அங்கே அவனில்லை. தலையில் அடித்து கொண்டவள், ஏனோ உதட்டை கடித்து புதிதாக வெட்கம் கொள்ள, ” என் மருமக தேவதை ! ” என்று தென்றல் வந்து நெற்றி முறிக்க, தன் வெண்பற்கள் காட்டி சிரித்தாள்.
“நீ இதே போல சிரிச்சுட்டு இருக்கணும் டா” என்று உச்சி முகர்ந்தவர், “சாகரன், கீழ உனக்காக வெய்ட் பண்றான் வா !” என அவர் சொல்லி கீழே செல்ல, அவள் கால்கள் நகர மறுத்தன.
அவன் பேசி விட்டுச் சென்ற பின், அவளது எண்ணமும் நினைவும் அவனாகத் தான் இருந்தன. அவன் காதலை ஏற்க சொல்லி அறிவுறுத்தியது ஒரு மனம்.இன்னொரு மனமோ, அவன் வீட்டையும் அவனது தந்தையும் பற்றிய எண்ணி வேண்டாம் என்றது.
மதங்கியவள் மருகிப் போயிருந்தாள். குழப்பம் கூடி இருந்த வேளையில் தன் குடும்பத்துடன் செலவிட்டு தன்னை மீட்டு கொண்டாலும் சாகரனின் நினைவு பாடாய் படுத்தியெடுத்தன. தூக்கம் இம்மியளவு கூட கண்களில் சேர வில்லை. காலை வரை ஆட்டிப்படைத்த அவனது நினைவிற்கு இடைவேளை கிடைக்க, அதற்குள் அவன் வந்து விட ” படுத்திறீயே டா !” என்றாள் வாய் விட்டு.
சாகரன் என்றாலே, உடல் முழுவதும் செக்கரையாய் மாற, கால்களும் இரண்டும் கட்டிக் கொள்ள ஒரு இன்ப அவஸ்தையில் சிக்கிக் கொண்டாள். முன்பை போல அவனை எதிர்கொள்ள துணிவு எங்கோ போனது. அவனை நேருக்கு நேராக சந்திக்க போகும் கணத்தை எண்ண, உடல் சிலிர்த்து போனாள் அணங்கவள்.
அவன் பார்வை எதிர்கொள்ள, திடத்தை உள்ளே தேடிய படி கீழே இறங்கினாள். தனியாக அமர்ந்து தனது அலைபேசியின் தொடுத் திரையை தீண்டிக் கொண்டிருந்தவன் அவள் வருகையின் அரவம் கேட்டு விழியை மட்டும் உயர்த்திப் பார்க்க, விழிகள் நான்கும் தூரமிருந்தும் ஈர்க்கும் வேலை சரியாக நடந்தது. அவள் அருகே வந்ததும் எழுந்து நின்றான்.
‘கொல்லறாளே !’ நெஞ்சை தடவியவன்,’ செத்து கித்து போயிடாதே சாகரா ,நீ இன்னும் நிறைய அனுபவிக்கணும்’ என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டு கொண்டான்.
விழிகளை விரித்து வைத்து விழ வைக்கும் அவனது பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினாள்.
எதிரிகளை தன் விழியால் எரிப்பவளின் பார்வையில் அவனோ குளிர்காய்கிறான். விழியை அகற்றாமல் பார்த்து கொண்டிருக்க, வாதம் செய்பவளின் வாய் தம்பட்டம் கொண்டது.
“போ… போலாமா, சா… சாகரா ” என்றாள் கஷ்டப்பட்டு. “போலாம் நிழலி”என்றவன் நிழலி ” என்றழைக்க, அவளும் அவனை பார்த்தாள், தன் பைக் சாவியை அவனிடம் நீட்டினான். அதைக் கண்டு ஒன்னு சொல்லாமல் வாங்கி தன் பர்சுக்குள் வைத்தாள். மீண்டும்” நிழலி” என அழைக்க, “ம்” கொட்ட, ” ரொம்ப அழகா இருக்க !” என்று அங்கே நிற்காமல் முன்னே சென்றவன், அவளுக்காக வாசலில் காத்திருக்க, கஷ்டப்பட்டு கால்களை இழுத்து கொண்டே வந்தாள்.
இருவரும் சேர்ந்தே வெளியே செல்ல, தூரமாக நின்ற பானுமதி, அவர்களை பார்த்து கண் கலங்கினார். ” இவர்கள் பிரியவே கூடாது ” என்ற வேண்டுதல் வேறு.
ட்ரைவர் அண்ணாவை வர வேண்டாம் என்றவன், காரை எடுக்க முன்னே அமர்ந்து கொண்டாள். இருவரும் தேனியை நோக்கி ஒரு அமைதிப் பயணம் கொள்ள, பாடல் இசைக்க விட்டான்.
வார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரைபாவை பார்வை மொழிப் பேசுமே !
நேற்று தேவையில்லை நாளை தேவையில்லைஇன்று இந்த நொடி போதுமே!
வேர் இன்றி விதை இன்றி வின் தூவும் மழை இன்றிஇது என்ன இவன் தோட்டம் பூ பூக்குதே
வாள் இன்றி போர் இன்றி வலிக்கின்ற யுத்தம் இன்றிஇது என்ன இவன் அன்பு எனை வெல்லுதே
இதயம் முழுதும் இருக்கும் இந்த தயக்கம் எங்கு கொண்டு நிறுத்தும்.
இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்.
பூந்தளிரே….
இருவரது மனதை படித்தது போல வரிகள் இருக்க, ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். செல்லும் வழியில் மழைச் சாரலும் வீச, கண்ணாடியில் வடியும் நீர் துளிகளின் மேல் கண் வைத்தவாறே வந்தாள்.
எந்த மேகமிது எந்தன் வாசல் வந்துஎங்கும் ஈர மழைத் தூவுதே என்ன உறவு இது எதுவும் புரியவில்லைஎன்றபோதும் இது நீளுதே
யார் என்று அறியாமல்பேர்கூட தெரியாமல் இவனோடு ஒரு சொந்தம் உறவானதேன்
ஏனென்று கேட்காமல் தடுத்தாலும் நிற்காமல்இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே
பாதை முடிந்த பிறகும்இந்த உலகில் பயணம் முடிவதில்லையேபெ : காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும்
இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையேஇது எதுவோ …
பூக்கள் பூக்கும் தருணம் ஆதவனேபார்த்ததாரும் இல்லையேபுலரும் காலைப் பொழுதைமுழு மதியும் பிரிந்து போவதில்லையே
நேற்று வரை நேரம் போகவில்லையேஉனதருகே நேரம் போதவில்லையே.
எதுவும் பேசவில்லையே இன்று ஏனோஎதுவும் தோன்றவில்லையே
என்ன புதுமை…
இரவும் விடியவில்லையே அது விடிந்தால்பகலும் முடியவில்லையே பூந்தளிரே…
வரிகளை உள்வாங்கி காதலை விழிவழியே மாற்றிக் கொள்ள மாயம் செய்தது அந்தப் பாடல். தொடர்ந்து வந்த பாடல்கள் அவர்களை பேசவிடாது மோன நிலையில் கட்டிப்போட்டு வைத்திருந்தன.
கடலூரும் வர, இருவரையும் மேளதாளத்தோடு வரவேற்றனர் அவ்வூர் மக்கள்.
“எதுக்குங்க இதெல்லாம் ? நான் என்ன செஞ்சுட்டேன் என் வேலையை தான செஞ்சேன்?” என்று கழுத்தில் போட்ட மாலையை கழட்டினாள்.
“எங்க ஊரையே எங்க உயிரையே எங்க வருங்காலத்தையே காப்பாற்றிருக்கீங்க மா ! அதுக்கு எவ்வளவு செஞ்சாலும் பத்தாது மா ! இன்னும் உங்களுக்கு எவ்வளவு வேணும்ன்னாலும் செஞ்சுட்டே இருக்கலாம் ” என்றார் ஊர் பெரியவர்.
“இதெல்லாம் என் கடமை ஐயா ! என்னை தேடி வரவங்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்றதுக்கு தான நான் படிச்சிருக்கேன். இதெல்லாம் அதிகம்ய்யா” என்றாள்.
பின் அவர்கள் இருவரையும் நன்றாக கவனித்தனர். சாகரனோட ஊரை சுற்றிப் பார்த்தாள். நீதிமன்ற ஆணைக்கு இணங்க குப்பை கிடங்கு சுத்த படுத்தும் பணி தீவிரமாக நடந்துக் கொண்டிருந்தது.
இருவரும்பேசிக் கொண்டே வருகையில், இருவர்கள் முன் வந்து நின்ற பாட்டி ,அவர்கள் இருவரை பார்த்து விட்டு, “ஏத்தா புருசனை மட்டும் கூட்டிட்டு வந்திருக்க? புள்ளையையும் கூட்டிட்டு வந்திருக்கலாம் ல” என பாசமாக கேட்க,
“ஐயோ பாட்டி, நாங்க …” என அவள் ஆரம்பிக்கும் முன் அவள் கையை பற்றி அழுத்தியவன்,” பாப்பா, ஸ்கூலுக்கு போயிருக்கா பாட்டி. இன்னொரு நாள் கண்டிப்பா கூட்டிட்டு வர்றோம்” என்றான்.
“சரி ராசா” என்று அவர் நகர்ந்ததும் அவள் கையை விடாமல், முன்னே நடக்க, அவளோ அவ்விடத்தை விட்டு நகரவே இல்லை. அவனோ அவள் வராமல் இருக்க,திரும்பிப் பார்த்து, “என்ன? வா” என்றான்.
அவளோ, கரங்களை காட்டினாள்’ சொ வாட்?” என்றான் பிரிக்காமலே. ” சொ வாட்டா? விடுடா கைய” என்றாள். அவன் கையிலிருந்து தன் கையை உருவாமலே.
“முடியாது, புருஷன் பொண்டாட்டின்னா கை கோர்த்து தான் நடப்பா !நோக்கு தெரியாதா நிழலி? அண்ட் இது கிராமம், பொண்டாட்டி புருசன ‘டா’ சொல்லக் கூடாது. அழகா, ஏங்க , வாங்க , போங்க தான் சொல்லனும் புரியறதா !” என்று எடுத்துச் சொல்ல, உள்ளுக்குள் அவன் பேச பேச, சிவ்வென்று இருந்தாலும் வெளியே உக்கிரமாய் இருப்பது போல காட்டிக் கொண்டாள்.
“எதுக்கு டா பொய் சொன்ன, நாம புருஷன் பொண்டாட்டினு? இதுல புள்ள ஸ்கூலுக்கு போயிருக்காம். ஃபிராடு !” என்று திட்டினாள் .
“நாங்க எங்க டி பொய் சொன்னேன்? உண்மைய தான சொன்னேன். இப்போ நம்ம புருஷன் பொண்டாட்டி இல்ல தான். விரைவில் ஆகலாம் இல்லையா?!” என்றான் அமர்த்தலாக, “எதே !” என்று அவள் இடையில் கைவைத்து கேட்க,
“ஆமாடி இப்ப புருஷன் பொண்டாட்டி இல்லேன்னு சொல்லிட்டு, அப்புறம் கல்யாணம் பண்ணிண்டு வந்து, புருஷன் பொண்டாட்டியா நின்னா, அவா என்ன நினைப்பா ? அதான் முன்னாடியே சொல்லி வச்சுண்டேன்” என்று தோளை குலுக்க , மீண்டும் அவனை முறைக்க,
“முறைக்காத டி கோவத்துலையும் அழகா இருந்து என்னை கொல்லற டி பட்டர்பண் !” என்று அவளை நெருங்கி அடிக்குரலில் சொல்லிவிட்டுச் செல்ல, அவனது நெருக்கமும் குரலும், உடம்பிலுள்ள ஒவ்வொரு செல்லை தீண்டி உணர்வு பிரளயத்தை உண்டாக்கி விட்டுச் சென்றன.
விருந்து தயாராக, இருவரும் அமர்ந்தனர், அவனுக்கு வெஜ் வைக்கணும் அவன் பக்கத்தில் அமர்ந்தவளுக்கு நான் வெஜ் வைக்க போக “வேணாம்” என்றவள் வெஜ்ஜை தான் சாப்பிட்டாள். அவனது காதல் பார்வையையும் கண்டும் காணாமல் உண்டாள். விருந்து முடிய அவளுக்கும் அவனுக்கும் வேட்டி , சேலை பூ பாக்கு வெத்தலை என வைத்து கொடுக்க வாங்கி கொண்டு விடைப்பெற்றனர்.
மீண்டும் இசைமொழியை இருவருக்கு இடையில் வைத்துக் கொண்டு சாலையை வெறித்தனர். ஒரு கட்டத்தில் அவள் உறங்கி விட , சத்தத்தை குறைத்து வைத்து விட்டு அவளுறங்குவதையும் அவ்வப்போது ரசித்துக் கொண்டே வந்தான்.
மதுரை அருகே வரும் வழியில் ஒரு ஹோட்டல் அருகே நிறுத்தினான். அவளும் சரியாக இமைதிறந்தாள். “காஃபி?”எனக் கேட்கவும் “வேண்டும்” என்று தலையை ஆட்டி விட்டு காரை விட்டு இறங்கினாள். இருவரும் உள்ள சென்று இருவர் அமரும் மேசையில் அமர்ந்தனர்.
அவள் கடையின் அமைப்பை பார்த்து கொண்டிருக்க, அவனோ, கன்னத்தில் கைவைத்து விட்டு அவளது முக அமைப்பை பார்த்து ரசித்து கொண்டிருந்தான்.
“எதுக்கு இப்ப திங்கற மாதிரி பார்க்கற?”
“என் பொண்டாட்டிய என் பட்டர்பண்ண நான் பார்க்கறேன் நோக்கு என்ன?”
“பொண்டாட்டியா? நான் இன்னும் உன் பிரோபசலுக்கு ஓகே சொல்லல… நியாபகம் இருக்கா?”
“நீ ஓகே சொன்னாதான் தெரியணும் இல்ல, நீ என்னை விரும்புற எனக்கு நல்லாவே தெரியும். ஆனால் ஓகே சொல்ல பொண்ணுகளுக்கே உண்டான ஸ்டாண்டர்ட் ஈகோனால சொல்ல மாட்ற, பட் ஐயம் வெயிட்டிங் !” இரு கைகளை விரிக்க, அதற்குள் அவர்கள் ஆடர் செய்த காபியும் வந்தது.
அவர் வைத்து விட்டுச் செல்ல, அவள் தன் பேச்சை தொடங்கினாள். “ஓகே சொல்லுனு ஈஸியா சொல்ற ! நாலையும் நாம யோசிக்க வேணாமா சாகரா? எப்படி நீ இத ஈஸியா எடுத்துக்கற?” என தீவிரம் காட்டினாள்.
“எந்த நால யோசிக்கனும் பேபி?” அவன் கேலி செய்ய, “பீ சீரியஸ் சாகரா !”
“ஓகே, சொல்லு” என்றான்.
“நீங்க ஒரு ஆச்சார குடும்பம், இதுல நான் எப்படி உங்க வீட்டுக்கு மருமகளா?நான் காலையில சீக்கிரமா எழமாட்டேன். குளிக்காமலே காஃபி குடிப்பேன். நான் வெஜ் சாப்பிடுவேன் நான் வெஜ் இல்லாமல் இருக்க மாட்டேன். சாஸ்த்தரம் சம்பிரதாயம் எதுவுமே எனக்கு தெரியாது. எப்படி நமக்குள்ள ஒத்துவரும் சாகரா ?”அவள் கேட்க, அவனுக்கு சிரிப்பு வர, மிடறு பருகியவன்,
ஒரு சொட்டு காபியை சிந்தினான்.
“எதுக்கு சிரிக்கற?”
“பின்ன சிரிக்காம என்னடி பண்ண சொல்ற? எனக்கு உன்னை பிடிக்கல , உன் மேல காதல் வரல, எனக்கு கல்யாண வாழ்க்கையில இன்டெர்ஸ்ட் இல்ல எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா !இப்படி எதாவது சொல்லுவனு எக்ஸ்பேக்ட் பண்ணா, நீ சில்லி ரீசன சொல்லற, சிரிக்க மாட்டாங்களா? அண்ட் ஓன் மோர் திங். என்னை கல்யாணம் பண்ணிண்டா இப்படி எல்லாம் இருக்கனும் நீ ஒரு நிமிஷம் நீ யோசித்தேல, என் மேல காதல் இல்லாமையா அந்த ஒரு நிமிஷம் என்னை புருஷனா நினைச்ச?” எனக் கேட்க, புதருக்குள் என் அப்பன் இல்லை என்ற கதையானது. அவன் அவ்வாறு கேட்டதும் அவனை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை அவளால்.
” என் மேல், உனக்கு காதல் இருக்கு ரைட். பட் என் அட்மோஸ்பியர் பத்தி பயப்படற ! முதல் நானும் பயந்தேன் தான். ஆனால் இப்ப இல்ல, எனக்கு நீ வேணும். வீட்ல என்னால் முடிஞ்சளவு கன்வீயன்ஸ் பண்ணுவேன். என் தோப்பனார் ஒத்துக்கலேன்னா, வீட்டை விட்டு வெளியே வந்துடுவேன். எனக்கு உன் விருப்பம் தான் முக்கியம். அது மட்டும் கிடைச்சா போதும். வீட்ல ஒத்துக்கலனு ஃபீல் பண்ண மாட்டேன். ஒரு வீட்டை பார்த்து, நீ , நான், அதிதினு ஹாப்பியா லைஃப் வாழலாம் . அங்க உன் இஷ்டப்படி இருக்கலாம் , மார்னிங் எழலாம் , எதுவேணா சாப்பிடலாம் எல்லாமே உன் விஷ் தான். நான் உங்கள் அடிமைப் போல உன் ஆசைய அதிதி ஆசையெல்லாம் நிறைவேத்துவன்” என்றிட, அவளோ வாயடைத்து போனாள்.
“எனக்கு குடும்பம் முக்கியம் தான் . அதை விட நீ எனக்கு முக்கியம். உன்னை இழந்து வலியோட சாகறதுக்கு, அவங்களை ஒரு ஏக்கத்தோட பார்த்துண்டு உன் கூட சந்தோசமா இருப்பேன் பேபி. எதையாவது இழந்து தான் ஒன்னு கிடைக்கனும்ன்னா. அது என் குடும்பமா இருக்கட்டும். உன்னை இழந்துட்டு நான் உயிரோட இருக்கறதும் இல்லாம இருக்கறதும் ஒன்னு தான் டி”என்றான்.
“எதுக்கு டா இந்தப் பிடிவாதம். நான் உனக்கு சரியானவள் இல்ல சாகரா,உன் நல்ல மனசுக்கு நல்ல பொண்ணா கிடைப்பா, அவளை கல்யாணம் பண்ணிட்டு, குடும்பத்தோட சந்தோசமா இரு !” என்றாள் உள்ளே எழுந்த வேதனையை மறைத்து.
“ம்ம்..கரெட் தான் என் மனசுக்கு நல்ல பொண்ணு கிடைப்பா தான். ஆனா, என் மனசு விரும்புற பொண்ணு கிடக்கனுமே கிடைக்குமா ? ஒருத்தி கூட வாழ்ந்துட்டு இன்னொருத்தி கூட எப்படி வாழ நிழலி? அது அவாளுக்கு நான் செய்ற துரோகம் இல்லையா ? சொல்லு டி,துரோகம் இல்லையா? குடும்பதோட இருக்கறேன் ஆனால் நீ இல்லாமல் என்னால சந்தோசமா இருக்க முடியாது.என் சந்தோசம், இந்த பெரிய அதிதி கிட்டையும் அந்த சின்ன நிழலி கிட்டையும் தான் இருக்கு, அதை பறிக்க நினைக்காத டி” என்றவன்,
அவள் பதிலை எதிர்பாராமல் பணத்தை கொடுத்துவிட்டு,வெளியே காருக்கு அருகில் செல்ல, அவளோ அதிலிருந்து மீண்டும் வரவே, தாமதமாகவே வந்தாள். மீண்டுமொரு அமைதி பயணம் வீடு வரைக்கும்.
அவர்களை வரவேற்க, அங்கே யாருமில்லை ,வேலை செய்யும் அக்கா மட்டும் இருக்க, அவர் மூலம் அனைவரும் கோயிலுக்கு சென்றது தெரிய வந்தது. அவன் அவளை பார்க்க, அவளும் அவனை தான் பார்த்தாள். இன்னும் இங்கே இருந்தால் தன் வசம் இழந்திடுவோமோ என்று பயந்து வேகமாக “நான் கிளம்புறேன்” என்று சென்று விட, அவனது பயத்தைக் கண்டு உள்ளுக்குள் சிரித்து கொண்டவள் தன் அறைக்குச் சென்றாள்.
மெத்தையில் பர்சை எறிந்தவள், அசதியாக இருக்க, குளிப்பதற்காக சேலையில் மாட்டி இருந்த ஊக்கைக் கழட்டி மொத்தமாக அள்ளிப்போட்டு இடையில் முந்தியை சொருகியவள் கூந்தலை அள்ளி முடித்தாள்.
அவனது பைக் சாவி நிழலியின் பர்சில் இருப்பதால், அதை வாங்க, அவளறைக்கு வந்தவன் இக்காட்சி கண்டு முன்னேறி, “நிழலி”என அப்பெயருக்கு வலிக்காதவாறு அழைக்க சட்டென அவள் திரும்ப, அவளை சுவரில் சாய்ந்தவன், தன் இரண்டு கைகளை அவள் கைகளுக்கு விலங்காக்க, அவனது எதிர்பாராத தாக்குதலில், ஆடிப்போனவள், மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, ஏறி இறங்கியது அவளது நெஞ்சம்.
சிறிதும் இடைவெளியை இன்றி துடைத்து எடுத்தது போல நெருங்கி நின்றவன், “சாரி நிழலி, சீக்கிரமா நம்ம கல்யாணத்துக்கு ஓகே சொல்லு டி, நம்ம இளமை போயிட்டு இருக்கு, அதை அனுபவிக்க வேணாமா? அழகாக்க வேணாமா? உன் ஒரு வார்த்தையில தான் இருக்கு சீக்கிரம் சொல்லு டி” எனகெஞ்சியவன், துடிக்கும் அவள் உதடுகளை பார்க்க, அவள் உதடுகளோ, “சா…க.. ரா…” என மொழிய, அந்த கிறக்கத்தில் அதைச் சிறை செய்தான். அந்தக் காவக்காரன், இந்த இதய திருடியின் இதழை.
அந்தச் சக்கரகட்டி, அவன் இதழ் பட்டதும் கரைய துடைங்கியது. அவள் இரண்டு கைகளை அவன் கழுத்தில் மாலையாக்கி விட்டு, அவள் இடையை வலக்கரத்தால் அளந்து கொண்டு இருந்தான்.
இதழ் பட்டு குழலின் துளைகளில் மாட்டீய வளியும் இசையாவது போல, இவன் இதழிலில் மாட்டிக் கொண்ட வளியவளோ, இசைந்து கொடுக்க, முத்த சத்தமும் இசையாய் ஒலித்தது அறையெங்கும்.
அவனுள் அடங்கி போனவள் திமிர மறந்தாள், மூச்சு விடவும் மறந்தாள். அவளை எண்ணிப் பாவம் பார்த்து, தன் இதழை பிரித்து கொள்ள, அவன் முத்தம் தந்த இதமதில் லயித்து இருந்தாள்.
தன் பின்னந்தலையை கோதி கொண்டவன் மெத்தையில் கிடந்த பர்சில் தன் பைக் சாவியை எடுத்துக் கொண்டு, மீண்டும் அவளைப் பார்க்க, கண்கள் சொக்கிய நிலையை சுவரில் சாய்ந்து இருந்தாள், அவளை எண்ணி சிரித்தவன், “நிழலி, நாளை மறுநாள், அக்காக்கு வளைகாப்பு, நானே வந்து கூட்டிட்டு போறேன். அதிதியும் நீயும் ரெடியா இருங்க” அவள் சம்மத்தை கேட்காமல் வெளியே சென்று விட்டான். அவள் சுவரில் சாய்ந்த வண்ணமே நின்றாள்.
வளையல் அணிந்த மென்கரங்களை பற்றியவன், “முதல் குழந்தைக்கு வளைகாப்பு போடலேன்னா என்ன இரண்டாவது குழந்தைக்கு போடுவோம்” என்று குறும்பாக கூறி கண்ணடிக்க, அவளுக்கோ வெட்கம் பிடுங்கி தின்ன, இருவர்கள் இருவரையும் அவன் பேசியத்தையும் கண்டு கொண்டார் கண்ணம்மா ..
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
8
+1
+1

