Loading

அன்று,

அதிதி, மித்துவுடன்  வெளியே விளையாடிக் கொண்டிருந்தாள். மித்துவிற்கு அலைபேசியில் வழியே அழைப்பு வர, கண்களால் அவளிடம் ஒரு நிமிடம் என்று பேச சென்றுவிட்டான். அவளும் தலையை ஆட்டி விட்டு உள்ளே செல்ல எத்தனிக்க, அவர்கள் பேச்சு அவளை வாயிலில் நிற்க வைத்தது.

நிழலியும் இவர்கள் இருவரையும் தவிர ,

அனைவரும் அங்கு கூடி இருந்தனர்.

கிருஷ்ணனிடம் பானுமதி, ” எப்போ தான் டா வாசுவுக்கு  கல்யாணம் பண்றதா முடிவு பண்ணிருக்க?  காலகாலத்துல மிருக்கும் வாசுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க வேணாமா?” எனவும் கிருஷ்ணன் வாசுவை பார்த்து விட்டு பானுமதியிடம்,

” நான் எப்போக்கா கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேன் சொன்னேன். அவனுக்கு தேவைன்னா அவன் தான் என்கிட்ட வந்து கல்யாணம் பண்ணி வைங்கப்பானு  சொல்லணும். அவன் பேசாம, நான் எப்படி அவன் கல்யாணத்த  பத்தி யோசிக்க முடியும்?” என குறும்பாக கேட்டு வாசுவை மாட்டி விட,

“எதே நான் வந்து சொல்லணுமா? இத்தனை நாள் உன் கண்ணு எங்க இருந்துச்சு டாடி? நானும் அவளும் லவ் பண்றது உன் கண்ணுல விழவே இல்லேல ! இதுல நான் வந்து சொன்னாத்தான் நீ கல்யாணத்தை பத்தி யோசிப்பீயா? டூ பேட் டாடி நீ !” என அவரை முறைக்க மற்றவர்கள் சிரித்து விட்டனர்.

“சரி விடு மருமகனே ! இப்போ சொல்லு என் பொண்ணை கட்டிக்கிறீயா?” விக்ரமனும் கேட்க, அவன் மிருதுளாவை பார்த்தான். அவளோ ஜாடை காட்ட,  கண்களை மூடி திறந்தவன்,

“எனக்கு ஓகே தான் மாமா ! ஆனா…” என்றவன் இழுக்க, ” எதுக்கு டா இந்த இழுவ?” வெண்மதியும் கேட்க, ” இருத்த சொல்றேன்” என்று பானுமதி காலுக்கடியில் அமர்ந்தவன்,

” எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கறது இருக்கட்டும், எப்போ நிழலிக்கு கல்யாணம் பண்ணி வைக்க போறீங்க?” எல்லாரையும் பார்த்து  கேட்டான்.

“அவ தான் கல்யாணமே வேணாங்கறாலே டா ”  தென்றலும் சலித்து கொண்டு சொல்ல, “அதுக்கு அவளை அப்படியே விட்டுடுவீங்களா? நாம தான் அவளை கன்வீயன்ஸ் பண்ணனும் மா. சாகரன் அண்ணா,  அவளை ரொம்ப லவ் பண்றார். அவர் கண்டிப்பா நிழலியையும் அதிதியையும் நல்லா பார்த்துப்பார். அவ கிட்ட பேசி பார்போமே அத்த !” அவனும் அவரிடம் கெஞ்ச,

“வேஸ்ட் மருமகனே ! அதிதிய காரணம் காட்டி,  அவ கல்யாணத்துக்கு ஒதுக்கவே மாட்டாள் டா. ஏன் என் பேத்திய நான் பார்த்துக்க மாட்டேனா? அவள என் கிட்ட விட்டு, இவ அடுத்த வாழ்க்கைய பார்க்க கூடாதா டா ! எப்பயும் அதிதி அதிதின்னு தனக்கு கிடைக்க வேண்டிய வாழ்க்கைய  தட்டி கழிக்குறா !” என பல்லை கடித்தார்.

“சாகரன் ரொம்ப நல்லவர் அத்த, அவள அவ்வளவு விரும்புறார். அவளுக்காக தான் காதலை சொல்லலாம இருக்கார், சாகரன் அதிதிய ஏத்துப்பார் அத்த”

“அவன் ஏத்துப்பான் தான். ஆனா, அவங்க குடும்பம் ஏத்துக்கனும்ல, அதிதிய நம்ம பார்த்துக்கலாம் அவங்க வாழ்க்கையில  அவ எதுக்கு இடஞ்சலா ? அப்படி அவ பொண்ண பார்க்கணும்ன்னா  வந்து பார்த்துட்டு போகட்டும், அவளுக்கு செய்றத செய்யட்டும் யாரு வேணாம் சொல்றா? எல்லாம் கை கூடி வந்தாலும் இவ ஒத்துக்க மாட்டாள் டா ” என்று அவளை கடிந்து கொள்ள,

“கேஸ், முடியட்டும் அக்கா, அவ கிட்ட பேசுவோம்” என்றார் வெண்மதி. ஆனால் கிருஷ்ணனுக்கு, அதிதியையும் நிழலியையும் பிரிக்க உடன் பாடு இல்லை. அவர் பேசுவதை கேட்ட அதிதிக்கு நெஞ்சை அடைத்தது.  அதுவும் ‘எதுக்கு இடஞ்சலா?’ என்ற வார்த்தை அவளுக்கு புரியாமல் இல்லை. அந்தப் பிஞ்சு மனதில் அந்த வார்த்தை விதையாக விழுந்து வேர்விட்டது.

சரியாக, இன்று ஆதர்ஷனும் அதிதியிடம் , ” என் கூட வந்துடுறீயா டார்லிங்? உங்க அம்மா என்னை  ஏத்துக்க மாட்டா ? எனக்கு உங்கம்மா வேணாம், நீ மட்டும்  என் கூட வந்துடுறீயா ?” என நிதர்ஷனத்தை அறிந்து உள்ளத்திலிருந்து அவளிடம் கேட்க, அவனையே பார்த்து  கொண்டிருந்தவள், திடீரென்று அவனை அணைத்து, “என்னை,  உன்கூட கூட்டி போறீயப்பா !” எனக் கேட்க அவனுக்கு ஆச்சரியம் தான். ” நான் நிழலி வாழ்க்கையில் இடஞ்சலா இருக்கேன்னாம், நான் இருக்கறனால தான் அவ கல்யாணம் பண்ணிக்க மாட்டிகிறாளாம். உன் கூட  நான் வந்துட்டா, அவ சாகாவ கல்யாணம் பண்ணிப்பாள, சாகாவும்  நிழலியும் ஹாப்பியா இருப்பாங்கல்ல” என்றாள் ஏக்கத்தோடு.

இந்த முறை அவனுக்கு பொறாமை இல்லை மாறாக நிதர்சனம் புரிய ஆரம்பித்தது.

சொந்த புத்தி இல்லாம சொல் புத்தியால ஒரு வைரத்தை இழந்து விட்டோம். இனி எவ்வளவு முயன்றாலும் அது  கிடைக்க போவதில்லை. ஆனால் கையில் இருக்கும் இந்த வைரத்த விடவும் மனமில்லை, எனக்கு அதிதி போதும், நிழலி சந்தோசமா இருக்கட்டும் என்று எண்ணியவன், ” கண்டிப்பா, அவ கூட சண்டை போட்டாவது உன்னை என் கூட  வச்சுப்பேன் டார்லிங்” என்று அவளுக்கு வாக்கு கொடுத்தான். அதன் பின் நடந்தவை  தான் தெரியுமே !

அதிதியை கெட்டியாக கையில் தூக்கி கொண்டு வருவதை கண்டவர்கள் வித்தியாசமாகப் பார்த்தனர். எல்லாரும் அவள் ஜெயிச்ச சந்தோஷத்தில் இருந்தவர்கள் அதிதியையும் நிழலியையும் நிலையை கண்டு பதறிப் போனார்கள்.

நேராக நிழலி பானுமதி அருகே வந்து, ” உனக்கு நானும் என் பொண்ணும் சேர்ந்து இருக்கறது கண்ண உருத்துச்சுன்னா சொல்லு, நாங்க எங்கயாவது போயிடுறோம். அதுக்காக அதிதிய என் கிட்ட பிரிக்க நினைக்காத. அவள உன் கிட்ட கொடுத்துட்டு நான் போய் சந்தோசமா வாழ்வேன் எப்படி உனக்கு தோணுச்சு? நீயும் ஒரு அம்மா தான? பெத்த தாய் தான் பிள்ளைய இடஞ்சலா நினைப்பாளா ?நீ பேசினத கேட்டு இவ என்னை முடிவெடித்தா தெரியுமா?”  என்று நடந்ததை கூற, குடும்பமே அதிர்ந்தது.

“ஐயோ அதிதி !” என பானுமதி, அதிதியை தூக்க வர, ” தொடாத, என் பொண்ண நீ தொடாத ! ” என்று கத்தினாள்.

“எனக்கு பயமா இருக்கு, எங்க ஆதர்ஷன் வந்து கேட்டால், என் பொண்ண தூக்கி குடுத்துடுவீயோனு  பயமா இருக்கு ” எனக் கத்தி அழ, அவருக்கோ  இடி தாக்கியது போல் இருந்தது. “இல்ல டி நான்…” ஏதோ சொல்ல வர, “

” பேசாத, பேசாத, எனக்கு அதிதி போதும். அவளை உன்கிட்ட குடுத்துட்டு கல்யாணம் பண்ணிப்பேன்ற எண்ணத்தை  உங்க மனசுல இருந்து தூக்கி எறிங்க.  இனி யாரும் என் கல்யாணம் விஷயமா பேசிறேன் வந்து  என்கிட்ட வாங்கி கட்டிக்காதீங்க ” என்று கத்தி விட்டு மாடி ஏறினாள். தன் பொண்ணுக்கு நல்லது நினைக்க , அதுவே வினையாக மாறியது.

அறைக்குள் அடைந்து கொண்டனர் இருவரும். அவளை தன் அணைப்பில் வைத்து அழுது கரைந்தாள்.

அவளது கண்ணீரை துடைத்து விட்டு, “சாரி பேபி ! இனிமே இப்படி பண்ண மாட்டேன் ? உன்னை விட்டு போக மாட்டேன் பேபி !”  மூக்கில் முத்தம் வைக்க, அவளோ அவள் முகம் எங்கும் முத்தம் வைத்தவள், “நீயும் நானும் மட்டும் இருப்போம் பேபி. நமக்குள்ள யாரும் வேணாம் பேபி “எனவும் அதற்கு மாறாக தலையை  ஆட்டிய அதிதி, “எனக்கு சாகாவும் வேணும்  ,சாகா லவ்ஸ் அஸ்(us) !நீ, நான்,  சாகா ஹாப்பி  ஃபேமிலியா இருக்கலாம் பேபி. ப்ளீஸ்” எனக் கெஞ்ச, அவள் எதுவும் சொல்லாமல் அவளை அணைத்தவாறே படுத்து கொண்டாள்.

இங்கோ விஷயம் அறிந்த அனுவும் ராக்கிவும் தன் திட்டம் தோல்வியடைந்ததில் கோபத்தில் இருந்தனர்.

அனு, அதர்ஷனிடம் “என்னாது நிழலிய பழிவாங்க போறதில்லையா? உன்னை அப்பனா நடிக்க தானடா சொன்னேன். ஒரிஜினல் அப்பனா வந்து நிக்கற? பொண்ணு பாசம் மாத்திருச்சோ !” என அனு பல்லைக் கடிக்க,

“ஆமா, மாத்திருச்சு. இத்தனை  நாள் சொந்த புத்தி இல்லாம சொல் புத்தியால எவ்வளவு பெரிய பொக்கிஷத்தை  இழந்திருக்கேன் புரியுது.   என் அம்மா பேச்சை கேட்டு என்  நிழலிய இழந்துட்டேன். அவ மட்டும் கூட  இருந்திருந்தால் என் வாழ்க்கை நல்லா இருந்திருக்கும் , நானே என் தலையில் மண்ண வாரி போட்டுகிட்டேன். போதும் இனியும் உங்க பேச்சை கேட்டு பழிவாங்குறேன்னு என் அதிதியையும் இழக்க விரும்பல. எனக்கு என் அதிதி போதும், நிழலி எப்படி வேணா வாழட்டும் அதை பத்தி கவலை இல்லை. இனி  நான் என் வாழ்க்கைய பார்த்துட்டு போக போறேன்” என்று அங்கிருந்து செல்ல,

” என்னடா இவன் இப்படி சொல்லிட்டு போறான்? இவனை வச்சி அவளை பழிவாங்க நெனச்சா, இவன்  திருந்திட்டேன்னு சொல்றான் , நிழலி எப்படி வேணா போகட்டும் சொல்றான். இப்ப என்னடா பண்றது?” தன் திட்டம் சொதபியதை  எண்ணி கோபம் கொள்ள,

” வேற ஐடியா,  இருக்குடா சொல்றேன் மச்சி” என ராக்கி அவனும் சொல்ல, கோபத்ததில்  தலையை மட்டும் அசைத்தான்.

இரண்டு நாள் யாரிடமும் பேசாமல் அறையே கதியென இருக்க, கிருஷ்ணன் தான் அவர்களை சமாதானம் செய்து சாப்பிட வைத்தார். ஆனால் இருவரும் கீழே வரவில்லை. பானுமதி ஒரு பக்கம் ஏங்க, அவரையும் ஒரு பக்கம் சமாதானம் செய்து சாப்பிட வைத்தனர். இந்த இரண்டு நாளில் அலைபேசி வழியே சாகரன் நிழலியை அழைத்தான் . அவளோ யார் அழைப்பையும்  ஏற்க வில்லை. வீட்டிற்கே வந்து விட்டான்.

பானுமதி சாகரனிடம் மன்னிப்பு கோரி அழுக, அவனும் நிழலியிடம் பேசுவதாக சொல்லி மாடி ஏறினான்.

அதிதி, வண்ணம் தீட்டிக் கொண்டிருக்க, நிழலியோ எங்கோ வெறித்து கொண்டிருந்தாள்.

” அதிதி” என சாகரன் அழைக்க, நிழலியும் உணர்வு  பெற்றாள்.

“சாகா” மெத்தையில் நின்று குதித்தவள், அருகே வந்ததும் தாவ, ஒரு சுத்து சுத்தியவன் அவளை கொஞ்ச ஆரம்பித்தான். இருவரும் மாறி மாறி முத்தமிட்டு கொள்ள, இருவரையும் கண்ட நிழலிக்கு அந்தக் கள்ளமில்லாத அன்பு விளங்க தான் செய்தது. தன்னையும் தன் தந்தையைப் போல அவர்களை எண்ணிப் பார்த்தாள்.

மெத்தை விளிம்பில் அமர்ந்தவன், “அதிதி பேபி என்ன பண்றீங்க?” எனக் கேட்க,  தான் வரைந்ததை தூக்கி காட்டினாள். அதில் தாய்,  தந்தை மகளுடன் ஒரு சின்ன குடும்பம் இருப்பது போல வரைந்திருக்க, அதை கண்டவனுக்கு கண்களில் நீர் துளிர்ந்தன. அவளை   மடியில் அமர்த்தி அவள் வரைந்ததை நிழலியிடம் காட்டினான். அவளது கண்களும் கலங்கின.

“இப்பயும் சொல்றேன், அதிதி இல்லம்மா  உன்னை நான் ஏத்துக்க போறதில்ல நிழலி. அதிதிய அக்னி சாட்சியா வச்சுண்டு தான் உன் கழுத்துல தாலி கட்டுவேன். முழு காதலோட நீ என்னை ஏத்துக்கிட்டதுக்கு அப்றம் தான் நம்ம கல்யாணம்” என்றவனை கலங்கிய விழிகளோடு பார்த்தாள்.

“என்ன பார்க்கற,  நான் உண்மைதான் சொல்றேன். என் மேல நோக்கு நம்பிக்கையும் முழுக்காதலும் வருதோ அப்ப தான் உன்னை கல்யாணம் பண்ணுவேன். அது எந்த வயசா இருந்தாலும். நமக்கு அதிதி போதும். இல்ல எனக்கு  இன்னொரு குழந்தை வேணும்ன்னாலும் அது உன் இஷ்டம்” என்று தோளை குலுக்கினான். அவள், அவனை காணாமல் எங்கோ வெறித்தாள்.

“அப்றம், ஆன்ட்டி உன் மேல இருக்க அக்கறையில தான்  அப்படி சொல்லிருப்பாங்களே தவிர , உன்னையும் அதிதியையும் பிரிக்க நினைச்சு இருக்க மாட்டாங்க. அவங்க கிட்ட பேசு, வீண் கோபத்தால நல்ல உறவுகளை இழந்திடாதே !

அப்றம்  நாளைக்கு ரெடியா இரு. தேனி போகணும். அவங்க, நம்மள விருந்துக்கு கூப்பிட்டு இருக்காங்க, கண்டிப்பா போகணும் நான் வரேன்  !” என்று அதிதிக்கு முத்தம் வைத்து விட்டு செல்ல, அவள் சென்ற இடத்தை ஏக்கத்தோடு வெறித்தாள்.

மறுநாள்,

“நிழலி” என அப்பெயருக்கு வலிக்கக் கூடாது என்பது போல  மென்மையாக காதல் கிறக்கத்தில் அவனழைக்க, சட்டென முன்னே சென்றவள் திரும்ப, அவளை சுவரோடு சாய்த்து  அவளது இரண்டு கைகளில் தன்கைகளை விலங்காக்கி, அவள் இதழை முத்தமென்னும் தண்டனையில் தன் இதழால் சிறைச் செய்தான், அந்தக் காவக்காரன், இந்த இதயத் திருடியை.

அந்தச் சக்கரகட்டியை சுவைக்க சுவைக்க அவனிதழ்பட்டு அவனுக்குள் கரைய தொடங்கினாள் பாவையவள்..

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
7
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்