Loading

நவிலன் கோவத்தோடு போனை வைத்து விட. நிவேதா இரண்டு மூன்று முறை அழைத்துப் பார்த்தாள்.

 

அப்பொழுதும் அவன் போன் எடுக்கவில்லை .மெசேஜும் செய்துப் பார்த்தாள் . அவனிடமிருந்து எந்த ரிப்ளேவும் வரவில்லை.

 

கிட்டத்தட்ட ஒரு வாரம் சென்று இருந்தது. நிவேதாவிற்கு தான் இங்கு ஒரு மாதிரியாக இருந்தது.

 

‘நான் எப்போ அவன் எனக்கு உண்மையான நண்பன் இல்லை என்று சொன்னேன்’ என்று பலவாறு குழம்பினாள்.

 

ஆனால், நாம் அவனிடம் சொல்லாமல் இருந்ததும் தவறுதான். இருந்தாலும் என்று எதையோ யோசித்தாள்.

 

ஏதோ ஒரு முலையில் அவ்வபோது நவிலனை பற்றி யோசிக்க செய்தாலும், அவளை அதிக அளவு நவி பற்றி யோசித்து வாடாத அளவிற்கு இங்கு வசந்த் அவளை உள்ளங்கையில் வைத்து தாங்கினான் என்று தான் சொல்ல வேண்டும்..

 

ஏற்கனவே நிவேதா என்றால், வசந்திற்கு பிரியம்.  இப்பொழுது தனது உயிரை சுமந்து கொண்டிருக்கும் உயிரானவள் என்றால் சும்மாவா இருப்பான்..

 

மறுநாள் மாலை அவள் காலேஜ் முடிந்து வந்தவுடன் ஹாஸ்பிடல் அழைத்துச் சென்று கர்ப்பத்தை உறுதி செய்தான் ..

 

அப்படியே அன்று இரவு உணவும் வெளியே சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு வந்தார்கள்.

 

மறுநாள் வீட்டில் உள்ள அனைவரிடமும் கர்ப்பமாக இருப்பதை சொல்லிவிட்டார்கள் .

 

வீட்டில் உள்ள அனைவருக்கும் சந்தோஷம் தான். அப்பொழுது  வசந்தின் அண்ணி இளவரசி தான்,” படிப்பு முடிச்சிட்டு கூட குழந்தை பெற்றுக்கொள்ளலாம் இல்ல. படிச்சிட்டு இருக்க ..இப்போ இதனால் படிப்பு கேட்டு போச்சுன்னா ?”..

 

அவளுக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை .இவர்கள் நம் நல்லதற்காக என்று சொல்லி சொல்கிறார்களா ?இல்லை தங்களது வாழ்க்கையில் கெட்ட நோக்கத்தோடு சொல்கிறார்களா ?என ஆழ்ந்து யோசித்தாள் .

 

அவள் சாதாரணமாக ஆரம்பத்தில் இருக்கும்பொழுது சொல்லியிருந்தால் நல்ல நோக்கத்திற்காக சொல்கிறார்கள் என்றுதான் நினைத்து இருப்பாள்.

 

ஆனால், எப்பொழுது திருமணம் முடிந்த ஒரு மாதத்திலேயே அரிசி இல்லை ,பருப்பு இல்லை ,காய்கறி இல்லை என்று சொல்வது மட்டும் இல்லாமல் ,நாலு பேர் சாப்பிடுற வீட்டுல என் புருஷன் மட்டும்தான் எல்லாத்தையும் வாங்கி போடுவாங்களா ? என்று கூறியது..

 

அப்போது கூட அவளின் நோக்கம் என்னவென்று உணராதவள் .. அதன் பிறகு, கிட்டத்தட்ட இப்பொழுது தனியாக வந்த இந்த 5 மாதத்தில் நடந்த ஒவ்வொரு விஷயத்திலும் அவளுக்கு இளவரசி சொல்வதை நல்ல விதத்தில் மட்டும் எடுத்துக் கொள்ள முடியவில்லை..

 

அனைத்தையும் அசை போட்டவள்..” இருக்கட்டும் அக்கா.

அவர் படிக்க வைக்க மாட்டேன்னு சொல்லலையே ..கல்யாணம் பண்ணதுக்கு அப்புறமும் படிக்க அனுப்பிட்டு தானே இருக்காரு “என தன் கணவனை விட்டுக் கொடுக்காமல் பேசினாள்.

 

“கல்யாணத்துக்கு அப்புறம் படிக்கிறது சரி ,ஆனா குழந்தை வந்ததுக்கப்புறம் எப்படி படிப்ப ?..

மேற்கொண்டு படிக்கிலனாலும், இந்த ஒரு டிகிரி  மட்டுமாவது முழுசா முடிக்கணும் இல்ல?” என்று இளவரசி சொல்ல.

 

இளவரசியை ஒரு நிமிடம் அமைதியாகப் பார்த்துக் கொண்டு இருந்தாள்..

 

” நான் உன்னோட நல்லதுக்கு தான் சொன்னேன் நிவேதா.. அதுக்கப்புறம் உன்னோட விருப்பம்!” என்று விட ..

 

“ஒன்னும் பிரச்சனை இல்ல அக்கா. குழந்தை பிறந்தாலும் அம்மா வீட்டுக்கு தான் போவேன் .அம்மா குழந்தையை பார்த்துவாங்க நான் காலேஜ் போவேன். இந்த டிகிரியை கண்டிப்பா முடிப்பேன். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு .அவர் மேலே அதிக நம்பிக்கை இருக்கு.

 

அது மட்டும் இல்லாம இந்த குழந்தை  என்ன மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் கிடையாது . இந்த குடும்பத்தையும் அவரையும் சம்பந்தப்பட்ட விஷயம் .அவருக்கு கல்யாணமே ஏற்கனவே லேட்டா தான் நடந்திருக்கு .

 

குழந்தையும் லேட்டா பிறக்க வேண்டிய அவசியம் இல்லையே .இது எங்களோட குழந்தை .இந்த குழந்தையோட முழு பொறுப்பும் அவரை மட்டும் சார்ந்தது கிடையாது என்னையும் சார்ந்தது ..

 

இந்த குழந்தையும் பெத்துக்கிட்டு இந்த குழந்தையும் நல்லபடியா வளர்ப்பேன்.. என்னோட படிப்பையும் நான் நல்லபடியா படிப்பேன் .முடிப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு .

 

அந்த நம்பிக்கையை  எனக்கு அவர் நிறையவே கொடுத்திருக்காரு “என்றவள். வேறு எதுவும் பேசாமல் இளவரசியை ஒரு நிமிடம் திரும்பி பார்த்துவிட்டு தன்னுடைய வீட்டிற்கு சென்று விட்டாள் .

நிவேதா ..

 

இளவரசிக்கு தான் முகம் செத்து போனது .இளவரசி ஆரம்பத்தில் என்னவோ சாதாரணமாக தான் சொல்ல செய்தாள் .

 

ஆனால், இப்பொழுது நிவேதா பேசிய பேச்சில் அமைதியாகி விட்டாள் .

 

நாட்கள் அழகாக சென்றது. ஒரு வாரத்திற்கு பின்பு நவியாகவே போன் செய்திருக்க .

 

போன் அடித்து அடித்து ஓய்ந்ததே தவிர.. நிவேதா போன் எடுக்கவில்லை. அவள் வேண்டுமென்று எல்லாம் எடுக்காமல் இல்லை.

 

நிவேதாவின் போன் வீட்டிலிருந்தது. காலேஜ் முடிந்து வந்த கையோடு வசந்த் அவளை படத்திற்கு அழைத்துச் சென்றிருந்தான்.

 

அதனால், போன் எடுக்க படாமல் இருந்தது .அன்று அவர்கள் படம் முடித்துவிட்டு வீட்டிற்கு வரவே இரவு ஒன்பதரையை தொட்டிருக்க .

 

சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் அவர்களுக்கான நேரமாக சென்றிருக்க..

 

அதன்பிறகு தான் படிப்பிலும் கவனத்தை செலுத்தி இருந்தாள். நிவேதா .

 

ஆகையால் ,அவளுடைய போனை அன்று இரவு வேளையில் பார்க்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

 

மறுநாள் காலையும்  எழுந்து தன்னுடைய வேலைகளில் கவனத்தை  செலுத்தி விட்டு காலேஜ் கிளம்பவே நேரம் சரியாக இருந்தது .

 

கல்லூரியில் தனது தோழிகளிடமும் தனது கர்ப்பத்தை உறுதி செய்து இருந்தாள்.

 

வீட்டில் முடிந்த அளவிற்கு வசந்த் அவளை பார்த்துக் கொள்ள, காலேஜில் அவளுடைய தோழிகள் பார்த்துக் கொண்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

 

அதுவும் அவளுடைய தோழி அனிதாவின்  அம்மா  அவளுக்கு நேரத்திற்கு ஜூஸ் குடிக்க சொல்லி கொடுத்து விட.

 

அனிதாவின் அம்மாவை எண்ணி சந்தோஷப்பட்டு கொண்டாள்

 

வீட்டில் வந்து தனது கணவனிடமும் தனது அம்மாவிடமும் சொன்னாள் ..

 

கவிதா கூட அவர்கள் ஊரில் இருந்து செல்லும் நிவேதாவின் தோழிகளிடம் அவளுக்கு ஜூஸ் கொடுத்து விட்டிருப்பார்..

 

தனது தோழியின் அம்மா கொடுக்கும் ஜூசையும் தனது அம்மா கொடுக்கும் ஜூசையும்  குடிப்பாள்.

 

மறுநாள் மாலை காலேஜ் விட்டு வந்து விடு ,வாசல் பெருக்கிவிட்டு அதன் பிறகு தான் தனது போனை எடுத்துப் பார்த்தாள்.

 

அதில் நிறைய மிஸ்டு கால்களும் ,நிறைய மெசேஜும் வந்திருக்க..

 

அதுவும்  மூன்று மிஸ்டு கால் நவிலனிடமிருந்தும் தனது அம்மாவிடமிருந்து ஒரு மிஸ்டு காலும் வந்திருக்க..

 

நேற்று தனது அம்மாவிடம் தனது கணவனின் போனில் இருந்து பேசி இருந்ததால் ,அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் நவிலனுக்கு அழைத்தாள்.

 

அவள் மனதில் எதுவும் தோன்றவில்லை பார்த்தவுடன் நேராக அவனுக்கு போன் செய்தாள்.

 

வேகமாக எடுத்திருந்தான் .போனை எடுத்தானே ஒழிய அந்த பக்கம் இருந்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை அவன்.

 

“பேசுடா போன் மட்டும் பண்ணி இருக்க, பேச மாட்டியா ?”என்றாள் கலக்கமாக .

 

“உங்களுக்கு ஏன் மேடம் என் ஞாபகம் எல்லாம் வரப்போகுது .

உங்களுக்கு உங்களை பார்த்துக்க..உங்களை உள்ளங்கையில் வச்சு தாங்க தான் உங்களோட புருஷன் இருக்காரு ..

 

இப்போ மாசமா வேற இருக்கீங்க.. வீட்ல இருப்பவங்களும்  உங்கள தாங்கு தாங்குன்னு தாங்குவாங்க.. என்ன இருந்தாலும் அவங்க வீட்டு வாரிசு இல்லையா ?” என்றான் .

 

“லூசு மாதிரி பேசாத நவி”.

 

“நான் பேசறது எல்லாம் லூசு மாதிரி தான் இருக்கும் வேற எப்படி இருக்கும் இப்போ உங்களுக்கு?” என்றான்.

 

“நான் உன்னை கூப்பிட்டு இருந்தேன். மெசேஜ் பண்ணி இருந்தேன் டா. நீ தாண்டா ரிப்ளை பண்ணல “.

 

அவன் எதுவும் பேசவில்லை .

 

 

“நவி” .

 

அவன் ஒரு சில நிமிடம் அமைதியாகவே இருக்க…

 

“நேத்தி படத்துக்கு போயிருந்தேன் டா அவர் கூட ..போன் வீட்ல இருந்துச்சி காலேஜ் முடிஞ்சி அப்படியே படத்துக்கு போயிட்டேன்.

நைட் நான் வீட்டுக்கு வரும்போது ஒன்பதே முக்காயிடுச்சு சாப்பிட்டு படுக்கவே நேரம் சரியா இருந்துச்சு.

 

காலையில் எழுந்து தான் படிச்சேன். காலையிலையும் போன் பாக்கல .படிச்சிட்டு காலேஜ் கிளம்ப கரெக்டா இருந்துச்சு நேரம்.. உண்மையா “என்று விட்டு அமைதியாகி விட ..

 

அவள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அதுதான் உண்மை என்பதை அவனுமே அறிவான்..

 

அவள் படத்திற்குச் சென்றேன் என்பது வேண்டுமானால் அவனுக்கு புதிய செய்தியாக இருக்கலாம். ஆனால், அவள் காலேஜ் முடிந்து வந்தாள் தினமும் என்ன செய்வாள் என்று அவன் அறியாததா…?

 

 

“சரி ஓவரா பண்ணாத “என்று மென் புன்னகை புரிந்தான்.

 

“நான் என்னடா ஓவரா பண்ணுனேன்.. நீ தாண்டா கோவத்துல போனை வச்ச ”

 

“ஆமா பின்ன கோபம் வராதா ?”

 

 

“உன்கிட்ட சொல்லலன்னு சொல்லு, அது கூட தப்பு ஒத்துக்கிறேன். அதுக்காக என்னென்னமோ பேசுற.. ?”

 

“அப்புறம் நான் எப்படி எடுத்துப்பேன்” என்றான்.

 

“நீ எப்படியும் எடுத்துக்க வேணாம் என்கிட்ட ஒழுங்கா பேசு” என்று பூவாய் சிரித்தாள் ..

 

“சரி சரி! ஹாஸ்பிடல் போனியா என்ன சொன்னாங்க ?” என்றான் ஆர்வமாக..

 

 

 

“அதுலாம் வீட்ல கிட் வாங்கி செக் பண்ண மறுநாளே  ஹாஸ்பிடல் போயிட்டு வந்துட்டேன் . குழந்தை நல்லா இருக்கு ,பெருசா வெயிட்  தூக்க வேணாம்னு சொல்லி இருக்காங்க. தண்ணி அவர் எடுத்து வச்சிடுறாரு.. பிரச்சனை இல்ல .இப்போதைக்கு எனக்கு மயக்கம் ,வாந்தி எதுவும் இல்ல அதனால ஒன்னும் பெருசா தெரிஞ்சுக்கல ” என்றாள் தன்னை பற்றி..தன் உடல் நலத்தைப் பற்றி.

 

“சரி டி உடம்ப பாத்துக்கோ.. ஒழுங்கா சாப்பிடு” என்று சில பல கதைகள் பேசிவிட்டு நவி போன்  வைத்து விட்டான்.

 

நவி இடம் பேசியதை தனது கணவனிடம் சொல்லலாமா ?வேண்டாமா ?என்று யோசித்தாள்.

 

சொன்னால் எங்கு தவறாக எடுத்து விடுவானோ? என்று அஞ்சினாள்.ஆகையால் நவியிடம் பேசியதை வசந்திடம் சொல்லவில்லை .

 

ஆனால், வசந்திற்கு நவியிடம் எப்போதாவது நிவேதா போனில் பேசுவாள் என்பது தெரியும் .

 

கண்டும் காணாமல் அமைதியாக விட்டு விட்டான். நாட்கள் அழகாக வேகமாக ஓடியது.

 

இப்போது நிவேதா ஐந்தாவது மாத தொடக்கத்தில் இருந்தாள் .

 

ஐந்தாவது மாதம் கவிதா வந்து அவளுக்கு  ஐந்தாவது மாதம் சாதம் கொடுத்து வளையல் போட்டு அவளை தன் வீட்டிற்கு அழைத்து  சென்று இருந்தார் .

 

இரண்டு நாட்கள் தன் வீட்டில் இருக்கட்டும் அதன் பிறகு வீட்டிற்கு அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லியே அழைத்துச் சென்றார்.

 

வசந்துக்கு அவள் இல்லாமல் இருக்க முடியாமல் இருக்க.. நேராக நிவேதாவின் தாய் வீடு சென்று இருந்தான்.

 

“ரெண்டு நாள்ல வந்துருவேன் .ரெண்டு நாள் தானே நீங்க இங்க இருக்க சொன்னீங்க அப்புறம் என்ன”என்று அவனை நெருங்கி நின்று சந்தோஷ புன்னகையுடன் கேட்டாள் பாவை.

 

பகல் முழு நேரமும் அவள் காலேஜ் சென்றிருக்க .மாலை வேலையில் தான் வீட்டிற்கு வந்திருந்தாள் .

 

இரவு 7 மணி போல் வசந்த் அங்கு வந்து நின்றான்.

 

“சொல்லாமல் கொள்ளாமல் வந்து நிக்கிறீங்க ?”என்று நிவேதா கேட்க .

 

“உனக்கு என்னடி நான் இல்லாமல் ஜாலியா இருப்ப. உங்க அம்மா இருக்காங்க, தம்பி இருக்கான் ” ..

 

“நான் எப்போ அப்படி சொன்னேன்” என்று  அவனது அருகில் வந்து நெருங்கி நின்றாள்..

 

கவிதா தொண்டையை கனைத்து கொண்டு வந்து நின்றார் .

 

நெருங்கி நின்று  இருவரும் பேசிக் கொண்டிருக்க கவிதா தொண்டையை கனைத்த உடன் வசந்த் நகர்ந்து நின்று விட்டான் .

 

இரவு சாப்பிட்டுவிட்டு இருவரும் ரூமுக்குள் சென்று விட..

 

“படிச்சிட்டியா டி ?”என்று கேட்டான்.

 

“நான் எப்ப படிச்சேன்.. நைட் படிச்சுக்கலாம்னு இருந்தேன் “.

 

“படித்தே ஆகணுமா இல்ல, காலையில படிக்கிறியா?” என்றான்.

 

வசந்தை  பார்த்து மலர்போல் சிரித்தாள்.அவனது மடியில் தலை வைத்துப் படுத்துக்கொண்டாள்.

 

“வேதா நான் உன்ன நல்லா பார்த்துக்கிறேனா டி “என்று அவளது தலையை கோதி கொண்டே கேட்டான்.

 

அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு “இது என்னங்க கேள்வி?” என்றாள்.

 

“உண்மையை சொல்லுடி?” என்று வசந்த் கேட்க.

 

“ஏன் என்னா நல்லா தான் பாத்துக்குறீங்க ..அதுல என்ன உங்களுக்கு இவ்வளவு நாள் கழிச்சு டவுட் ?”.

 

“இ..இல்ல அ..அது “என்றான் தடுமாற ..

 

“புரியல புரியிற மாதிரி பேசுங்க” ..

 

“இ..இல்ல “என்று தயங்கினான்..

 

எழுந்து உட்கார்ந்தவள். வசந்த் கண்ணையே பார்த்துக் கொண்டிருந்தாள் ..

 

“நீங்க சாதாரணமா

கேக்குறீங்கன்னு நினைச்சேன் .ஆனா எதோ விஷயம் இருக்கு என்னனு சொல்லுங்க .யாராவது ஏதாவது சொன்னாங்களா ?வீட்டில் அத்தை ஏதாவது சொன்னாங்களா ?”என்று கேட்டாள்.

 

“ஆமாம்” என்று லேசாக தலையாட்டினான் வசந்த் விழிகள் பனிக்க..

 

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்