
அத்தியாயம் 34
ஒருவருடத்திற்கு பின் ,
சென்னை விமான நிலையத்தில் , வேக நடை போட்டு கம்பீரமாக நடந்து வந்துக் கொண்டிருந்தாள் தீப்ஷீ.
இரும்பாக இறுகிய உடலும் , கடினமான முகமும் கொண்டிருந்தாள் . சிரித்துக் கொண்டே இருந்த முகம் சிரிப்பைத் தொலைத்திருந்தது .
தன் பைகளுக்காக பேக்கேஜ் கேரசல் அருகே காத்திருந்தாள் தீப்ஷீ .
” அம்மு. ”
தீப்ஷீ வேகமாக திரும்பி பார்த்தாள் .
” வேர் ஆர் யூ கோயிங்? ” என்று சொல்லியவன் தன் சேட்டைக்கார மகள் பின் ஓடினான் .
தன் வேதனையை மறைக்க வேகமாக ரேபன் சன் கிளாஸை மாட்டிக் கொண்டாள் தீப்ஷீ . கிளாஸ் அவளின் வைட் சர்ட் மற்றும் பிளாக் ஜீன்ஸ்ஸிற்கு அழகாக பொருந்தியது .
பையை எடுத்தவள் வெளியே செல்ல திரும்ப அங்கு தேவ் நின்றிருந்தான் .
அவன் அருகே சென்றவள் , ” நான் உங்கள வர சொல்லலையே? ” என்றாள் கோபமாக .
” இந்த அதிகாரத்தை எல்லாம் நாளை நீ பதவி ஏற்க போகும் போலீஸ் டிபார்ட்மெண்டோடு வெச்சுக்கோ . நான் உன் கணவன் நீ சொல்லாததையும் செய்வேன். ” என்றவன் அவள் கையில் இருந்த பையை வாங்கிக் கொண்டு முன்னே சென்றான் .
தீப்ஷீ அவனை தொடர்ந்து பின்னே சென்றாள் . வீட்டிற்கு வெளியே அவளை நிற்க வைத்து ஆரத்தி சுத்தினர் சரண்யாவும், அக்ஷிதாவும் .
” உன்ன நினைச்சா எனக்கு பெருமையாக இருக்கு . இதுவரை எல்லோரும் தினேஷின் மகள் தீப்ஷீனு சொன்னாங்க. இனி எல்லாரும் தீப்ஷீ ஐ.பி.எஸ்ஸின் அப்பா தினேஷ்னு சொல்லுவாங்க. ” என்றார் தினேஷ் .
அமைதியாகவே இருந்தாள் தீப்ஷீ . வீட்டில் உள்ள எல்லோரும் அவளை வாழ்த்தினர். ஏன் இந்திராணி நானி கூட , ” ஏதோ என் பேரன் சொன்னானேனு தான் உன்ன போலீஸ் ஆக அனுமதிச்சேன் . ஆனா, உன்னை பத்தி பெருமையா டிவியிலும், நியூஸ் பேப்பரிலும் வந்தது . அதை பார்த்து என் உறவினர்கள் எல்லோரும் மூக்கின் மேல் விரல் வெச்சி ஆச்சரியப்பட்டு உன்னப் பத்தி என்கிட்ட பெருமையா சொன்னாங்க. ” என்றார் .
” சந்தோஷம் நானி. ” என்று நிறுத்திக் கொண்டாள் தீப்ஷீ .
கமலா தீப்ஷீயை வாழ்த்தி , அணைத்துக் கொண்டார் .
” கமலாமா , அந்த வீட்டு சாவி. ” என்றுக் கேட்டாள் தீப்ஷீ .
அவர் சாவியை தர , அதை எடுத்துக்கொண்டு சத்யா வீட்டிற்கு சென்றாள் .
வீட்டில் உள்ள அனைவரின் மனமும் பாரமானது . இப்போது சத்யா இருந்திருந்தால் , இருவரும் செய்யும் அலப்பறையில் வீடே இரண்டாகி இருக்கும் .
இவ்வளவு பெரிய சாதனை செய்து வந்தவளின் முகத்தில் சிரிப்பில்லை , சிறு மகிழ்ச்சிக் கூட இல்லை .
வீட்டை திறந்து உள்ளே சென்றாள் தீப்ஷீ. வீடு சுத்தமாகவே இருந்தது. கமலா அடிக்கடி சுத்தம் செய்வதால் .
சத்யா அறைக்குச் சென்றாள் தீப்ஷீ , அவர்கள் சிறு வயதில் எடுத்த படம் , டான்ஸ் ஆடும் போது எடுத்த படம் , இருவரும் ஊஞ்சலில் விளையாடுவதுப் போல் உள்ள படம் , இருவரும் சத்யா பைக் வாங்கிய போது எடுத்த படம் , ரிசப்ஷனில் தேவ், சத்யா தோள் மேல் கை போட்ட படம், கடைசியாக கொடைக்கானலில் தீப்ஷீ வாங்கிய மரத்தால் ஆன படம் என்று அனைத்தையும் பார்த்த தீப்ஷீ , அமைதியாக பெட்டில் படுத்துக் கொண்டாள் .
இருந்த மன வேதனையில் கொஞ்ச நேரத்திலே நன்றாக தூங்கிவிட்டாள் தீப்ஷீ .
இரண்டு மணி நேரத்திற்கு பின் தூக்கத்தில் கண் திறந்தவள் அங்கு சோபாவில் உட்கார்ந்திருந்தவனை பார்த்து , ” சத்யா …” என்று சொல்லிக் கொண்டே வேகமாக எழுந்து உட்கார்ந்தவள் , நன்றாக கண்ணை திறந்து பார்க்க அங்கு தேவ் உட்கார்ந்திருந்தான் .
உண்மை புரிய அமைதியாக பெட்டில் உட்கார்ந்தாள் தீப்ஷீ .
அவளின் வேதனையை உணர்ந்தும் எதுவும் செய்ய முடியாமல் இருக்கும் தன்னையே அதிகம் வெறுத்தான் தேவ் .
” அம்மா சாப்பிட கூப்பிட்டாங்க?” என்றான் தேவ் .
எழுந்தவள் வெளியே செல்ல , வீட்டை பூட்டிவிட்டு வந்தான் தேவ் .
அடுத்த நாள் காலையில் ஐ.பி.எஸ் யூனிஃபார்ம் அணிந்து கம்பீரமாக வெளியே வந்தாள் தீப்ஷீ .
அவளை ஆசையாக பாரத்தார் அக்ஷிதா , ” வா தீப்ஷீ , வந்து சாப்பிடு. ” என்றார் .
தீப்ஷீயின் எந்த உணர்வையும் காட்டாத சிரிப்பை இழந்த முகம் அவளின் யூனிஃபார்மிற்கு அழகாக பொருந்தியது .
சாப்பிட்டுக் கொண்டிருந்த தீப்ஷீயிடம் , ” வெளியே நிற்கிறேன் சாப்பிட்டு வா. ” என்றான் தேவ் .
” எதுக்கு? ” என்றுக் கேட்டாள் தீப்ஷீ .
” உன்ன போலீஸ் ஸ்டேஷனில் விடுறதுக்கு. ” என்றான் தேவ் .
” இல்ல வேண்டாம் , நான் சத்யா பைக்கில் போகிறேன். ” என்றாள் தீப்ஷீ .
” அதில் எப்படி போவ? ” என்றுக் கேட்டான் தேவ் .
” நான் பைக் நல்லா ஓட்டுவேன்.” என்றவள் பேச்சு முடிந்ததாக எழுந்து சென்றுவிட்டாள் .
நேற்றே சரி செய்து வைத்திருந்த பைக்கில் ஏறியவள் கெத்தாக போலீஸ் ஸ்டேஷனை நோக்கி சென்றாள்.
அவள் என்ன செய்கிறாள் என்று வெளியே வந்து பார்த்த தேவ் . அவளின் கம்பீரத்தில் அசந்து தான் போனான் . அவளின் மேல் உள்ள காதல் அதிகமாகிக் கொண்டே இருந்தது தேவ்விற்கு .
” என்று காதல் அதிகமாகி நீ வெடிக்க போகிறாய் என்று தெரியவில்லை? ” என்று தன் இதயத்திடம் பேசியவன் , உள்ளே சென்றுவிட்டான் .
பெண் சிங்கமாக ரேபன் சன் கிளாஸ் , ஐ.பி.எஸ் யூனிஃபார்ம் அணிந்து பைக்கில் செல்லும் தீப்ஷீயை மக்கள் அனைவரும் மரியாதையாக பார்த்தனர் .
போலீஸ் ஸ்டேஷன் உள்ளே பூட்ஸ் சத்தம் கேட்க வேக நடையோடு தலை நிமிர்ந்து சென்றாள் தீப்ஷீ . இவளுக்கு கீழ் வேலை செய்பவர்கள் அவளுக்கு சல்யூட் அடிக்க . ஒரு தலை அசைப்போடு அதை ஏற்று உள்ளே சென்றாள் தீப்ஷீ .
தன் அறைக்கு சென்றவள் , அங்கிருந்த திருமதி . தீப்ஷீ தேவ் ஐ.பி.எஸ் பெயர் பலகையை ஒரு நிமிடம் பார்த்தாள் . கனவு நினைவான நிறைவு அவள் மனதில் .
சீட்டில் உட்கார்ந்தவளின் உள்ளம் சத்யாவின் வார்த்தையை நினைவுப்படுத்தியது . ‘ஒரு முறை விளையாட்டில் தோற்ற போது தன்னை நல்ல வழியில் செல்ல கற்றுத் தந்தானே.’ என்று நினைத்தவள் அன்றைய நாளிற்கே சென்றாள்.
‘நினைவுகள்…
அவள் தோழி அவளை தோற்றதற்காக கேலி செய்ய . அவள் கோபம் கொண்டு , ” ரெஃப் என்னோட ஃப்ரெண்ட். சோ நான் சொன்னா அவன் என்ன செகண்ட் ரவுண்ட் ரன்னிங் ரேஸ்ல சேர்த்துப்பான்.” என்றவள் நேராக வந்து நின்றது சத்யாவிடம் .
“சத்யா … என்னோட ஃபிரண்ட்ஸ் எல்லாம் நான் தோற்றதற்காக என்ன கேலி பண்றாங்க. நாளைக்கு விளையாட போற ரேஸ்க்கு என் பெயரையும் சேர்த்துக்கோ சத்யா. ” என்றாள் தீப்ஷீ .
“அம்மு, இங்க வா.” என்று ஒரு மரத்தின் அடியில் உட்கார்ந்தான் .
” தோல்வியும் நல்லது தான் அம்மு . இன்னைக்கு நீ தோற்றால் நாளைக்கு நீ வெற்றி பெறலாம் . ஆனால், குறுக்கு வழியில் சென்றால் என்னைக்குமே உன்னால ஜெயிக்க முடியாது . அதுவும் இல்லாம நீ ஒரு ஐ.பி.எஸ் ஆபீஸர் ஆக போற . நீ தப்பு செய்யலாமா . என்னைக்குமே உன் பதவியை தப்பாக பயன்படுத்தக்கூடாது. ” என்றான் .
” சாரி சத்யா . ஆமா நீ சொல்றது தான் சரி. நான் என் ஃப்ரெண்ட்ஸ் கேலி பண்ணதும், கோபத்தில் வந்துட்டேன் . இனிமே இப்படி பண்ண மாட்டேன். ” என்றாள் .
” சாரிலாம் நீ என் கிட்ட கேட்கக்கூடாது . நான் உனக்கு சொல்லி தரேன் அம்மு அடுத்த போட்டியில் நீ கண்டிப்பா ஜெயிப்ப . இப்போ எனக்கு டைமாகுது பாய் அம்மு. ” என்றான் .
அவளின் முகத்தில் மகிழ்ச்சி .
“ஓகே . பாய் சத்யா.” என்றாள் .
கடைசியாக ஃபிப்த் ஸ்டாண்டர்ட் ஸ்டூடண்ட்ஸ் வந்தார்கள் . எல்லோரையும் நிற்க வைத்தான் சத்யா .
தேவ்வின் நண்பர்கள் , “தேவ் … தேவ் … ” என்று உற்சாகப் படுத்தினர் .
சத்யாவும் ஓடுவதற்காக நின்றான் .
தேவ்வும் அவனின் நண்பர்களும் சத்யாவை ஆராய்ச்சியாக பார்த்தார்களே தவிர யாரும் கேலி செய்யவில்லை .
பி.இ.டி சாரின் விசிலிற்காக காத்திருந்த போது அவர் , “சத்யா … இங்கு வா … “என்று அழைத்தார் .
“சார்? ” என்று அவனும் சென்றான் .
” சத்யா … எனக்கு முக்கியமான வேலை வந்துடுச்சு . சோ நான் போகனும் . நேம் லிஸ்ட்டுல உன் பெயர் எழுதிக்கோ . நீ மற்றவர்களை தேர்வு செய்து நேம் எழுது.” என்றார் .
“நான் சொன்னா இவங்க கேட்பார்களா?” கேட்டான் .
“நான் சொல்றேன் நீ வா .” என்று அவனை அங்கு அழைத்துச் சென்றார் .
“ஸ்டூடண்ட்ஸ் எனக்கு வேலை இருக்கு . சோ சத்யா தான் இப்போ உங்களை தேர்ந்து எடுக்கப்போறான் . அவன் சொல்பவர்கள் தான் நாளைக்கு காலைல விளையாட முடியும். இதில் எந்த மாற்றமும் இல்லை . யாரும் அவனிடம் சண்டை போடக்கூடாது .” என்றவர் சென்றுவிட .
சத்யா தேவ்வை பார்த்து நக்கலாக சிரித்துக் கொண்டே ” கெட் பொசிஷன் ஃப்ரெண்ட்ஸ் .” என்றவன் விசில் ஊதினான் .
வழக்கம் போல் தேவ்வே முதலில் வந்தான் . சத்யா எதுவும் சொல்லாமல் ஒவ்வொரு பெயரையும் கேட்டு எழுதிக் கொண்டான்.
பி.இ.டி சார் வந்துவிட அவரிடம் நேம் லிஸ்ட்டை தந்தான் . ஒவ்வொரு பெயராக வாசித்தார். இங்கு தேவ் மற்றும் அவனின் நண்பர்களின் அனல் பார்வை சத்யாவை சுட்டெரித்தது. கடைசியாக சத்யா என்ற பெயரில் முடித்தார் .
தேவ் தன் கோபத்தை , கையால் காற்றில் அடித்து கட்டுப்படுத்தினான் .
” சத்யா … என்ன உன் பெயரை லாஸ்ட்ல போட்டுருக்க.” என்று வினவ.
” சார் … ரேஸ்ல ஃபர்ஸ்ட் வந்தவங்களை வரிசையா எழுதியிருக்கிறேன். சோ லாஸ்ட்டா என்னோட பேர்.” என்ற சத்யா புன்னகைத்தான்.
” குட்… யார் இன்னைக்கு ஃபர்ஸ்ட் வந்தது.”
” தேவ்.” என்றான் சத்யா.
” ஓ… வெரிகுட் தேவ்.” என்று தேவ்வை பாராட்டிய பி.இ.டி சார், சத்யாவைப் பார்த்து, ” நேம் லிஸ்ட்ல தேவ் பேர் இல்லையே.” என்று வினவ.
“ஃபர்ஸ்ட் பேஜ்ல இருந்து ஃபிப்த் ஸ்டாண்டர்டு ஸ்டார்ட் ஆகுது சார். “என்றான்.
“ஹோ … ஓகே ஸ்டூடண்ட்ஸ் போட்டிக்கு நாளைக்கு எல்லோரும் ரெடியா இருங்க. “என்று சொல்லியவர் சென்றுவிட்டார்.
தேவ் மற்றும் அவன் நண்பர்கள் பெரும் மூச்சு விட சத்யா அவர்களை பார்த்து சிரித்துவிட்டுச் சென்றான் .
” நாம இவனை கேலி செய்தாலும் நம்மை தூசியாக கூட மதிக்கமாட்டேங்கிறான் . ஆனால் அவன் ஒன்னுமே செய்யாமல் நம்மை கதி கலங்க வைக்கிறான். “என்றான் சர்வேஷ் .
” ஆமா ” என்றனர் அனைவரும் .
” எதுக்கும் இவனிடம் நாம ஜாக்கிரதையா இருக்கணும்.” என்றான் தேவ் . ‘
#####
பழைய நினைவுகளிலிருந்து மீண்டவளோ, ” எனக்கு எல்லா நல்லது, கெட்டது சொல்லிக் கொடுத்து, என்னை நல்வழிப்படுத்தி இந்த பொஸிஷனுக்கு நான் வர காரணமே நீ தான் சத்யா. ஆனா, இன்னைக்கு நீ என் கூட இல்லையே.” என்று
முணுமுணுத்தவள், ‘ முதல்ல சத்யாவின் கேஸ் ஃபைலை பார்க்கணும் . ‘ என்று எண்ணினாள்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


Nejamaave sathya illaya🥺. I can’t believe it. pls ethavathu panni sathyava thirumba kondu vaanga