
மெல்லினம் 21:
சித்திரை மாதத்தின் வெயிலும், மார்கழி மாதத்தின் குளிரும், சேர்ந்த கலவையாக ஏற்காட்டின் காலசீதோணை இருந்தது.
மலை மீது இருந்த அந்த “ஹில்ஸ் ரெஸ்டாரண்ட்” ஹோட்டலில் தான் தங்கியிருந்தனர் கதிரின் குடும்பம்.
தங்கள் அறையின் ஜன்னல் அருகே, அமர்ந்திருந்த முல்லையின் மனம், வெகு அமைதியாக இயற்கை கொடுத்த அதிசயத்தை ரசித்து கொண்டிருந்தது.
அவர்கள் இங்கே வந்து ஒரு நாள் ஆகி விட்டது. வீட்டில் பேசிய கையோடு அன்று இரவே முல்லையையும் அத்வியையும் அழைத்து கொண்டு புறப்பட்டு விட்டான் கதிர்.
“கதிர்! கதிரழகன்” இந்த பெயரை நினைக்கும் போது எல்லாம், முல்லையின் இதழ்கள் அழகானதொரு புன்னகையை வீசி சென்றது.
‘அவளுக்குள் இவ்வளவு மாற்றமா அதுவும் திருமணம் முடித்த ஒரு வாரத்திலேய’ இன்னமும் அவளால் நம்ப முடியவில்லை.
ஆனால் நிஜம் அது தானே பிடிக்கிறதே. அவளை நிறைய நிறைய பிடிக்க வைக்கிறானே!
அவள் மனதில் அவளிற்கான இடம் இருப்பதை, நிருபிப்பதற்கு ஒரு வாழ்க்கை அவளுடன் வேண்டும் என்று கேட்டவன், அதனை அச்சு பிசகாமல் நிறைவேற்றி வருகிறான்.
அவளை பிடிக்கவும் வைக்கிறான். பித்தம் கொள்ளவும் வைக்கிறான்.
முதல் திருமண தோல்வியால் ரணப்பட்டு கிடந்த அவள் மனதை, மயிலிறகால் வருடி, ரணத்தை ஆற்றி அந்த தழும்பை கூட மறைத்து விட்டிருந்தான்.
கணவன்! என்றதால் வந்த பிடித்தமா? இல்லை, அத்வியின் மேல் அவன் காட்டும் பாசம், அதக்கறையினை கட்டு வந்த பிடித்தமா??? ஏதோ ஒன்று ஆனால் பிடித்தம் என்பதனை அவளிடம் கொண்டு வந்து விட்டான் என்பதே உண்மை.
அதிலும் அத்வி முழுதாக கதிரின் பையனாகவே மாறி விட்டான். எந்நேரமும் அவனை வால்பிடித்து கொண்டு தான் சுற்றுகிறான்.
கதிரின் பழக்கங்கள் கொஞ்ச கொஞ்சமாக அத்வியின் உள்ளும் செல்கின்றன போல. அவனை மாதிரியே நடை உடை பாவனையை காட்ட முயல்கிறான் அத்வி.
அத்வியின் காலை வேளை, கதிரின் முத்தத்தில் ஆரம்பித்து இரவிலும் கதிரின் முத்தத்திலே முடிகிறது.
திருமணத்திற்கு முன்பு வரை முல்லையை சார்ந்திருந்தவனின் வாழ்க்கை இப்போது முற்று முழுதாக கதிரை சார்ந்திற்று.
கதிரை ஒரு ஹீரோவாக தான் மனதில் வரிந்து விட்டிருந்தான் போலும்.
அவன் பிறப்பிற்கு காரணமான ஹரிஷிடம் இருந்து பழக்க வழக்கங்களில் ஒன்று கூட அத்வியிடம் இல்லை.
அப்படி இருக்கையில் சில மாதங்களே பழக்கமான கதிரின் செய்கைகள் அனைத்தும் அச்சு பிசகாமல் அத்வியிடம் இருப்பது அதிசயம் தான்.
இதோ சற்று முன்னர் வரை இருவரும் நீச்சல் குளத்தில் ஒரே ஆட்டம் தான்.
கதிர் அணிந்திருந்த நிறத்திலயே இவனிற்கும் உடை. ஆட்டம் போட்டதில் டயர்டாகி உறங்கி கொண்டிருக்கின்றனர்.
ஏதோ சில்லென்ற உணர்வு அவளிற்கு தோன்ற, திரும்பியவள் கண்டது, கட்டிலில் படுத்தவாறே அவளை பார்த்து கொண்டிருந்த கதிரை தான்! அவன் கைகள் வழக்கம் போல அத்வியின் கன்னத்தை வருடி கொண்டிருந்தன.
சில நொடிகள், அவனின் பார்வையில் கட்டுண்டு நின்றவளிற்கு, அவளிடமிருந்து பார்வையை திருப்பும் எண்ணம் இல்லை.
தன் நெஞ்சின் மீது உறங்கி கொண்டிருந்த அத்வியை, அலுக்காமல் தூக்கி கீழே வைத்தவன், முல்லையை நோக்கி காதலாக கைகளை நீட்ட,
சில நொடிகள் தடுமாறியவளுக்கு அவளின் ஆழ்மன ஆசை போக சொல்லி தூண்ட, எது பற்றியும் யோசிக்காது நகர்ந்து அவனின் கைகளை பற்றி விட்டாள்.
அடுத்து அவள் வேறு எதை பற்றியும் யோசிப்பதற்குள், அவன் நகர்ந்து படுத்து அவளை இழுத்து தன் நெஞ்சின் மீது படுக்க வைத்திருந்தான்.
அத்வி இருந்த இடத்தில் இப்போது இவள்.
அவள் உச்சியில் அழுத்தமாக முத்தமிட்டவன் “குட்மார்னிங் முல்லை” என,
அதில் சிரித்தவள் “இது குட்மார்னிங் இல்லை கதிர் குட் ஈவ்னிங்” என்க,
“இருக்கட்டுமே, நா எப்போ எழுறேனோ அப்போ அது தான் குட்மார்னிங்” என அவன் வாயாட அதற்கு மேல் அவள் பேசவில்லை கப்சிப்.
சிறுது நேரம் அவளை தன் நெஞ்சில் அழுத்தி சுகம் கண்டவன், “வேக்கப், வேக்கப் முல்லை, இப்போ கிளியூர் பாஃல்ஸ்க்கு போகணும்” என்றவாறு அவளை எழுப்ப,
“என்ன? இப்போவா இந்த நேரத்துலயா. வெளையாடுறீங்களா ஸ்வீம்மீங்பூஃல்ல போட்ட ஆட்டம் பத்தாதா??அத்விக்கு சேராது வேண்டாம்ங்க!!!!உடனே முறைக்காதீங்க உங்களுக்கும் தான் சேராது” என அத்வியை கூறியவள் அவன் முறைத்ததும் அவனையும் சேர்த்து காரணம் காட்டி வேண்டாம் என மறுத்தாள்.
“ப்ச் முல்லை குளிக்கவெல்லாம் இல்லை, ஜஸ்ட் சைட் சீயிங் மாதிரி தான். எந்த ரீசனும் சொல்லாம கிளம்பு உனக்கு அங்க ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கு” என அவளை அடக்கியவன் அத்வியை எழுப்ப,
அத்வி எழுந்தவன் நேராக முல்லையை சென்றணைத்து முத்தமிட்டு “குட்மார்னிங் மா” என கூறி குறும்பாக கதிரை பார்க்க,
“டேய்… படவா, பிச்சு.. பிச்சு…இது ஈவ்னிங் இப்போ போய் யாராச்சும் குட்மார்னிங் சொல்லுவாங்களா??” என சற்று முன் முல்லை கூறியதை இவன் கூற,
“நோ…நோ.…அத்வி இப்போ தான எந்திரிச்சான். அப்ப இப்போ தான் சொல்லுவேன்” என்க முல்லை திகைத்து தான் போய் விட்டாள்.
அதில் ஏதும் பாதிக்கப்படாதவனாக கதிர் அத்வியை தூக்கி கொண்டு குளியலறைக்குள் புகுந்து கொள்ள,
இவள் தான் திகைத்து நின்றாள். இதை…இதை தானோ அவள் கூறுவது. அத்வி கூறியது கதிர் கூறிய அதே வார்த்தைகள்! கதிர் இதனை கூறும் போதே அத்வி முழித்திருந்தால் கூட சரி, கதிர் கூறுவதை கேட்டு கூறுகிறான் என கூறலாம்.
ஆனால் இது எப்படி சாத்தியம்!!கதிரின் உணர்வுகளை எப்படி அத்வி உணருகிறான், என அவள் தலையை பிய்த்து கொள்ளாத குறையாக நிற்க,
“முல்லை, என்னாச்சு ஏன் இப்புடி நிக்குற போய் ரெடியாகு” என்றவாறே கதிர் அத்விக்கு உடம்பு துடைத்து உடை அணிவிக்க,
அவர்களை பார்த்தவாறே நின்றிருந்தாள்.
கதிர் பதில் இல்லாது போனதில் மீண்டும் அவளிடம் திரும்பி புருவம் உயர்த்த “எப்புடி? எப்புடிங்க??” என் அவள் கேட்க,
“என்ன எப்புடி எப்புடி” இவன் மறுகேள்வி கேட்க,
சற்று முன் தான் நினைத்ததை வாய் விட்டு கூறியவள் “எப்புடி இது சாத்தியம்ங்க”!!!
“இதுல என்ன ஆச்சர்யம் முல்லை அத்வி என்னோட பையன் தான, அப்போ என்னை மாதிரி தான யோசிப்பான்” என அவள் அத்தனை தூரம் குழப்பி கொண்ட விஷயத்திற்கு அவன் ஒரே வரியில் பதில் கூற, அதனை ஏற்று கொள்ள தான் தடுமாறினாள்.
என்ன தான் கதிர் அத்வியை அவன் குழந்தை என்றாலும் அவளிற்கு தெரியும் அல்லவா உண்மை. ஏன் கதிருக்கும் கூட அந்த உண்மை தெரியுமே!!!
“இல்லை எனக்கு இன்னும் சந்தேகம்.” என்றவள் முடிக்க கூட இல்லை.
“தேன் முல்லை!!!!!” என அழுத்தமாக அழைத்து அவளை வாயடைக்க செய்தவன்,
“அத்வி என் பையன் தாங்கறதுல உனக்கு சந்தேகமே வர கூடாது. அத்வி என் பையன்! என் பையன் மட்டுமே” என அவன் இறுகிய குரலில் உரைக்க,
அவன் குரலில் அடுத்து பேச முடியாது வாய் மூடினாள்.
இருவரும் பேசி கொண்டதில் அத்விக்கு என்ன விளங்கியதோ?
“ஆமா முல்யை, நான் அங்கி பைய” என்க இருவருள்ளும் சந்தோஷ திடுக்கிடல்.
“பாத்தியா அவனே சொல்லிட்டான் என் பையன்னு ரொம்ப யோசிக்காம போய் கிளம்பு” என அதட்டி அவளை கிளப்பினான்.
நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழி எங்கும் முல்லை தெளிவில்லாத முகத்துடனே வர,
“ப்ச்! முல்லை,ஏன் இப்புடி??”
“இல்லை ஏதோ ஒரு யோசனை அவ்வளவு தான்”
“என்ன உனக்கு இப்போ அத்வி எப்புடி என்ன மாதிரி யோசிக்கிறான்னு தெரியணும் அப்புடி தான..
ஆனா எனக்கே இது தெரியாதே.சப்போஃஷ் எங்க உணர்வுகள் ம்ம்ம் வேஃவ் லென்த் ஒரே மாதிரி இருக்கலாம்.
இல்லை எனக்கே தெரியாம என்னோட உணர்வுகள அவனுக்கு நான் கடத்திருக்கலாம்.
என் கூடவே அவன் இருக்கிறனால அவனுக்கும் இப்புடி தோணிருக்கலாம்னு இப்புடி நிறைய சொல்லலாம்.
இப்போ ஒரு வார்த்தைக்கு சொல்லுறேன். பொறந்ததுல இருந்து நீ இங்க தான இருக்க, இப்போ வேலை விஷயமா நீ வெளிநாட்டுல போய் செட்டில் ஆகுறன்னு வச்சுக்குவோம். உனக்கு இடம், மொழி, வேலை எல்லாம் புதுசு, ஆனா நீ அங்க தான் இருக்கணும்னறது உன்னோட விருப்பம், இல்லை கட்டாயம்னு வச்சுக்குவோம் அப்போ நீ என்ன பண்ணுவ??”
“நான்! நான் என்ன பண்ணுவேன். அவுங்க மொழிய கத்துக்குவேன். வேலை செய்யும் இடத்துலே அவுங்க மனநிலைக்கே ஏற்ப என்னையும் யோசிக்கிற மாதிரி மாத்திக்குவேன்”
“எதனால அப்படி மாத்திக்குவ??”
“ஏன்னா என் வாழ்க்கை அங்க தான் முடிவாகிருச்சுன்னா மாறுறதுல தப்பே இல்லையே. அதுவும் போக அங்கே என்னை சுத்தி இருக்குறவங்க எல்லாம் வேறு நாட்டு ஆட்கள்னு போது என் மைன்ட்டும் அதாவே அதுக்கேத்த மாதிரி மாறிக்கும்” என்க,
“ஹாங்! இப்போ நீ சொன்ன விஷயம் தான் அத்வி விஷயத்துலயும் நடந்துருக்கு. அவன் இனி என் கூட தா இருக்கப் போறதாலயோ, இல்லை எந்நேரமும் என் கூடவே இருக்கறதுனாலோயோ அவன் மைன்ட் என்ன மாதிரி மாறியிருக்கலாம் இல்லை இதுவரைக்கும் உங்க வீட்டுல இருந்த வரைக்கும் அவன் உணராத ஏதோ ஒரு விஷயத்தை என்கிட்ட உணர்ந்துருக்கலாம அப்போ அவன் மூளை என்னை மாதிரி சிந்திக்க மாறியிருக்கலாம் அவ்வளவு தான் புரியுது.
இருக்குற இடத்துக்கு தகுந்த மாதிரி நம்ம மனமும் மூளையும் அடாப்ட் ஆகிக்கும். அத்விக்கும் அப்புடி தான் நடந்துருக்கு, இதுல நீ கன்பியூஷ் ஆகுறதுக்கு ஒன்னுமே இல்லை” என விம் போட்டு விளக்காத குறையாக கூற,
அதில் அவள் முகம் தெளிந்திட இவனுக்கு ஹப்பாடா என்றது! இருந்தும் சின்ன சின்ன விஷயத்திற்கு எல்லாம் இப்படி அலட்டி கொள்கிறாளே, என கவலையாகவும் இருக்க, அதே சமயம் இவனின் குட்டு உடைந்தால் என்ன ஆகுமோ என்ற சிறு பயமும் இருந்தது அவனிடம்.
அவர்கள் நீர்வீழ்ச்சியினை அடைந்த சமயம் நன்றாக இருட்டி விட்டிருந்தது. இரவு குளிப்பதற்கு அனுமதி இல்லை என்றாலும் பாதுகாப்புடன் தடுப்பு வரை சென்று பார்க்க அனுமதி இருந்ததால் ஏற்கனவே கதிர் வாங்கி வைத்திருந்த பாஷை காட்டியவன் உள்ளே சென்றான்..
சில அடிகளிலேய வெள்ளி நீரின் அபாயகரமான சத்தமும் மெல்லிய சாரலும் இவர்கள் முகத்தில் வந்து மோதிட ஆர்வமாக முன்னேறினர்.
இவர்களை போல இன்னும் ஆட்கள் அங்கே இருந்ததால் பயமில்லை.
கருமை சூழ்ந்த இடத்தில் பௌர்ணமி வெளிச்சத்தினை போல் நுரை ததும்ப ஆர்பட்டமாய் வெள்ளி நீர் வீழ்ந்து கொண்டிருந்த அருவியினை பார்க்க பார்க்க தெகிட்டவில்லை
அத்வியோ கை தட்டி ஆர்ப்பரித்து தன் மகிழ்ச்சியினை தெரியப்படுத்த. முல்லையோ கதிரின் கைகளை பற்றி கொள்ள வேண்டி திரும்பியவள் அங்கே இருவரையும் காணததில் அதிர்ந்து போய் விட்டாள்.
சற்று முன்னர் தான் அத்வியின் குரல் அவளிற்கு கேட்டது.
‘எங்கே சென்றிருப்பார்கள்’ என பார்வையை சுழல விட்டவளிற்கு இப்போது சற்று பயம் வந்து ஒட்டி கொண்டது.
“முல்லை” என அவள் காதில் பனி சாரலாய் உரசி சென்ற கதிரின் குரலில் வேகமாக திரும்பியவள் கண்டது தன் முன் மண்டியிட்டு கையில் ஐஸ்கீரம் கேக்குடன் வசீகர சிரிப்புடன் கதிர் இருக்க அவனிற்கு அருகே வெள்ளை நிற மலர்களை கையில் ஏந்தியவாறு குறும்பு சிரிப்புடன் மண்டியிட்டு அமர்ந்திருந்த அத்வியையும் தான்.
இருவரையும் அவள் புரியாது விழியகலாத பாவனையில் பார்த்திருக்க, கதிரும் அத்வியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டவர்கள், பின் “ஹாப்பி பர்த்டே தேன்முல்லை” என இருவரும் சத்தமாக சிரிப்புடன் கத்த,
அக்காட்சியினை இரு ஜோடி கண்கள் வெறித்து நோக்கி கொண்டிருந்தது. வேறு யாராக இருக்கும் ஹரிஷூம் சுரபியும் தான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
48
+1
2
+1
1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


எனக்கும் கதிரழகன் பேரை நினைச்சாலே மனசுக்குள்ள ஒரு புன்னகை🥰 முல்லைக்கு சூப்பர் பர்த்டே செலிபிரேஷன்.
எங்க கதிர் விம் மட்டுமில்ல பிரில், சபீனா எல்லாம் போட்டு விளக்குவான். என்ன காதுல ரத்தம் வரும் அவ்ளோதான்🤣🤣
ஹையோ இந்த ஹரிஷ் சுரபிக்கு வேற வேலையே இல்லையா.இவங்க பின்னாடியே சுத்துறாங்க. வயிறு எரியுமே இவங்களுக்கு.