Loading

நினைவுகள் -16

அன்று…

ஒரு நிமிடம் அவனது மாய சிரிப்பில் மயங்கியிருந்த ராதிகா, பிறகு தன்னை முட்டாளாக்கியதை நினைத்துப் பார்த்தவள், தலையை உலுக்கிக் கொண்டு அனுவையும், விஸ்வரூபனையும் பார்த்து முறைத்து விட்டு வேகமாக உள்ளே சென்று விட்டாள்.

” ராது! வெயிட். ஃபைவ் மினிட்ஸ் நானும் வந்துடறேன்.” என்ற அனன்யாவின் குரலை கேட்பதற்கு அவள் அங்கு இல்லை.

விடுவிடுவென உள்ளே சென்றிருந்தாள்.

“விடு அந்துருண்டை. அவ திமிர் பிடிச்சவ. போகட்டும்.” என்றான் விஸ்வரூபன்.

” மாம்ஸ்… இதை சொல்லத்தான் இந்தியாவில இருந்து வந்திருக்கீங்களா. அவ என் ஃப்ரண்ட். அவ எப்படி இருந்தா, உங்களுக்கென்ன? அவக் கிட்ட என்ன வம்பு பண்ணீங்க.”

” அது வா. நான் எப்படி பார்த்தாலும் அவளுக்கு சீனியர் தானே. அதான் ரேகிங் பண்ணலாம்னு பார்த்தேன். ஆனால் அவ என்னை கலாய்ச்சிட்டு, என்னமோ, நான் கிண்டல் பண்ண மாதிரி முறைச்சிட்டு வேற போறா பாரேன்.” என்றவன், சற்று முன் நடந்ததைக் கூற.

அனன்யாவோ விழுந்து, விழுந்து சிரித்தாள். ” ஐயோ! மாமா! செம்ம பல்ப்பா. ஆமாம் அவ என் ஃப்ரண்ட்டுனு தெரியும்ல. அப்புறம் ஏன் வம்புக்கு போறீங்க.”

” பெரிய இவளாட்டம் நம்ம பாட்டிக் கிட்டக் கூட வீடியோ கால்ல பேச வர மாட்டேன்னு சொன்னாளே. அந்த கோபம் தான் சரி விடு.”

” அது ஏற்கனவே ஒரு தடவை பேச்சுவாக்கில் நம்ம வீட்ல உள்ளவங்களுக்கு, ஹாஸ்டலுக்கு நான் வருவதில் விருப்பம் இல்லைனு சொல்லியிருந்தேன்‌. அதிலிருந்து அவ நம்ம வீட்டு ஆளுங்க பேச்சு எடுத்தாலே ஒதுங்கி, ஒதுங்கிப் போறா. இதுல நீங்க வேற வம்பு பண்ணி வச்சிருக்கீங்க‌. உங்களை என்ன செய்யறது? நீங்க ஹாஸ்டலுக்கு வர வேண்டியது தானே.”

” அதுவா… இங்கே வந்தா தானே கலர் கலரா ஃபிகருங்களைப் பார்க்கலாம்னு வந்தேன்.” என விஸ்வரூபன் முணுமுணுக்க.

” ஹாங்! என்ன மாமா சொன்னீங்க?” என அனன்யா முறைக்க.

” அது வந்து அனு மா… ஹாஸ்டலுக்கு வந்தா, அங்கே இருக்குற ஃபிகருங்களால் எனக்குத் தொல்லைன்னு சொல்ல வந்தேன். ஆமாம் லக்கேஜெல்லாம் என் ஃபிரண்டு வீட்டுக்கு அனுப்பிட்டியா?”

” ம்… நேத்து ஷாப்பிங் முடிஞ்சு அங்க போய்க் குடுத்துட்டு வந்தோம். இப்படி வந்த கையோட ஓடுறதுக்கு, எதுக்கு வர்றீங்க மாமா.”

” உன்னைப் பார்த்து விஷ் பண்ணிட்டு போலாம்னு வந்தேன். ஆல் த பெஸ்ட் அந்துருண்டை. அப்புறம் உங்கத்தை, மாமா, அம்மா, செல்லப் பாட்டி இவங்கள்லாம் எப்படி இருக்காங்கன்னு கேட்கவே இல்லையே.”

” இந்த ஒரு வார்த்தையைக் கேட்கத்தான் வந்தீங்களா? உங்கக் கூட பேசுற நேரத்தை விட அதிகமா நான் வீடியோ கால்ல பேசிடுவேன். அப்பவே நான் நலன் விசாரிச்சுக்கிறேன். நீங்க உங்க வேலையை பாருங்க. அப்புறம் என்ன மாமா? கிளம்ப வேண்டியது தானே. எப்படியும் வரும் போதே ரிட்டன் டிக்கெட் போட்டு தான வந்துருப்பீங்க.”

” ஏய் வாலு… நீ சொல்றது கரெக்ட் தான். எனக்கு ப்ளைட்டுக்கு டைமாயிடுச்சு. நான் கிளம்பட்டா?” என விஸ்வரூபன் வினவ.

” ம்… சரி மாமா!” என வருத்தத்தோடு தலையாட்ட…

” சிரி அந்துருண்டை! நீ இப்படி மூஞ்ச தூக்கி வச்சுருந்தா நான் எப்படி கிளம்பறதாம்.” என்றவன், தனது இந்தா சர்ட் பாக்கெட்டிலிருந்து இரு கேட்பரீஸ் சில்க்கி சாக்லேட்டை எடுத்து நீட்ட…

 அவள் முகம் பூவாக மலர்ந்தது. அதே உற்சாகத்துடன் உள்ளே சென்றவள், ராதிகாவை சமாதானம் செய்து, அவளை மலை இறக்குவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.

‘அப்பாடா…’ என்று பெருமூச்சு விட்டுக் கொண்டாள் அனன்யா. அப்போது அவளுக்கு தெரியவில்லை.

இது ஆரம்பம் தான். இனி இவர்கள் இருவரும் பார்க்கும் போதெல்லாம் சண்டை போட்டுக் கொள்ளப் போவதையும், இருவரையும் சமாதானம் செய்வதற்குள், அவள் நொந்து நூடுல்ஸாவதையும் அப்போது அறியவில்லை.

நாட்கள் வேகமாக செல்ல, முதல் செமஸ்டர் முடிந்திருந்தது.

ஒவ்வொரு மாதமும் டெஸ்ட் நடக்கும். எல்லாமே கம்ப்யூட்டரில் அட்டண்ட் செய்வது மாதிரி தான் இருக்கும். அது போக ஃபிராக்டிகல், வைவா என்று அனாடமியில் நடக்கும். எல்லா மார்க்கையும் சேர்த்து தான் செமஸ்டருக்கு எடுத்துப்பாங்க. சோ ஒவ்வொரு மாதப்பரிட்சையும் முக்கியம்.

 ராதிகா இரவு தூங்காமல் கண் விழித்துப் படிப்பாள். அனன்யாவையும் படுத்தி தூங்கவிடாமல், படிக்க வைப்பாள்.

இப்படியே ஆரம்பத்திலிருந்து கவனமாக படித்து, வெற்றிகரமாக முதல் செமஸ்டரை முடித்து இருந்தனர்.

அடுத்த செமஸ்டர் ஆரம்பமாகி இருந்தது. ஆனால் இன்னும் டெஸ்ட்டெல்லாம் ஆரம்பிக்கவில்லை.

அனன்யா, ” ராது! படிச்சு, படிச்சு மூளையெல்லாம் சூடாயிடுச்சு. இன்னைக்கு அவுட்டிங் போய் ரெஃப்ரெஷ் செஞ்சுட்டு வரலாம்.” என்று வினவ‌.

” ஏய் அனு! வீக்கென்ட் போகலாம். ஈவினிங் எனக்கு ஒர்க் இருக்கு. ” ராதிகா கூற.

” ஈவினிங் நீ பிசினு எனக்குத் தெரியும் ராது. அதனால தான் லாஸ்ட் ஹவர் காலேஜ்ஜை கட் அடிச்சிட்டு கிளம்பலாம்.” என்றுக் கூறி விட்டு, ஆர்வமாகப் பார்க்க.

” ஏய் இங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட். தெரிஞ்சா ப்ராப்ளம் வரும். “

” ராது அதெல்லாம் ஒன்னும் பிரச்சினை வராது. ஃபே வாக் பீச். பக்கத்தில் தான் இருக்கு. ஜஸ்ட் ஃபிப்டீன் மினிட்ஸ் ட்ராவல் தான். ஜிப்னில போயிட்டு வந்துடலாம். ” என்றுக் கூற…

 இவ்வளவு நேரம் வரமாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருந்தவள், பீச் என்றவுடன் யோசிக்கலானாள்.

 அவள் யோசனை பார்த்தவுடன் பேசிப்பேசியே அவளை கரெக்ட் செய்தாள் அனன்யா.

 இருவரும் பேசியபடியே லாஸ்ட் ஹவர் க்ளாஸைக் கட்டடித்து விட்டு கிளம்பி விட்டனர்.

 ராதிகா இதுவரை பீச் பார்த்ததில்லை என்று அறிந்து தான் அவளை எப்படியாவது அழைத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்து இருந்தாள் அனன்யா.

 ஆனால் அடுத்து வரும் பின்விளைவுகளைப் பற்றி அவள் நினைக்கவில்லை. இவர்கள் சத்தமில்லாமல் போய் விட்டு வந்து விடலாம் என்று நினைத்து இருக்க…

நடந்ததோ வேறு… அனன்யாவின் வீட்டிற்கு தகவல் போய்விட்டது.

இரண்டொரு நாட்களில் இவர்களது ஹாஸ்டலுக்கு முதல் முறையாக வந்தான் விஸ்வரூபன்.

விஸிட்டர்ஸ் ரூமில் முகம் இறுக காத்திருந்தான்.

அனன்யா, தனியே செல்ல பயந்துக் கொண்டு, ” ராது… மாமா எதுக்கு வந்துருக்காங்கன்னு தெரியலை. மாமா வர்றதா வீட்டுலக் கூட யாரும் சொல்லவே இல்லை. எனக்கு பயமா இருக்கு டி. நாம பீச்சுக்கு போனது தெரிஞ்சிருக்குமோ?” என்று ராதிகாவின் கையை பயத்துடன் பிடிக்க.

 ” ஹேய்… எங்க ஜான்சிராணிக்கே பயம்லாம் வருமா? வார்ரே வா. நானும் வரேன்.” என்று கிண்டலடித்தவளின் மனதில் இருந்ததோ வேறு…

விஸ்வரூபன் இது வரைக்கும் ஹாஸ்டல் வந்ததில்லை. அன்று காலேஜ் ஃபர்ஸ்ட் டேக்குப் பிறகு, ராதிகா அவனை சந்திக்கவில்லை.

இன்று இங்கு வந்திருக்கிறான் என்றவுடன், மனதிற்குள் ஒரு இனிய படபடப்பு… அதை மறைத்துக் கொண்டு, அனுவை கேலி செய்ய…

” நீயெல்லாம் ஃப்ரெண்டா? துரோகி டி.” என்று திட்டிக் கொண்டே, அவளையும் அழைத்துக் கொண்டே சென்றாள்.

‘ஒரு வேளை, தன் தோழி இருப்பதால், மாமா திட்டுவதற்கு சற்று யோசிப்பார்.’ என்று நினைத்தாள் அனன்யா.

இருவரும் மனதிற்குள் ஏதேதோ நினைத்துக் கொண்டு செல்ல…

நடந்ததோ வேறு…

இருவரையும் ஒரு கணம் ஆழ்ந்து பார்த்தவன், தனது அத்தை மகளை விட்டுவிட்டு ராதிகாவிடம் திரும்பினான்.

” இங்கே பாரு. உனக்கு உண்மையான நட்புக்கு அர்த்தம் தெரியுமா? ஏதாவது அவங்க தப்பு செஞ்சா அதை தடுக்க பார்க்கணும்‌. சேர்ந்து கிட்டு, அதுக்கு துணை போகக் கூடாது. நீங்க ரெண்டு பேரும் க்ளாஸ் கட் பண்ணிட்டு வெளியே போனது மேனேஜ்மென்டுக்கு தெரிஞ்சா, எவ்ளோ பிரச்சனை வந்து இருக்கும்னு தெரியுமா?” என.

ராதிகாவோ, அவனது ஹார்ஷான பேச்சில் அதிர்ந்து நின்றாள்.

இன்று…

கிருஷ்ணனனோ, குழந்தையின் அழுகுரலில் விரைந்தோடிய மகனை ஆதுரமாகப் பார்த்துக் கொண்டே, அவன் சொன்னதை செய்தார்.

பிலிப்பைன்ஸில் இருக்கும் சேலவருக்கு அழைத்தார்.

” ஹாய் சேலவர். ஹவ் ஆர் யூ. ” என்று பார்மலாக விசாரித்து விட்டு, ” இந்தியாவுக்கு எப்ப மேன் வர்ற?” என.

” வாட்ஸ் ப்ராப்ளம் கிருஷ். நான் தான் மண்டே வரேன் என்று அல்ரெடி சொல்லியிருந்தேனே.”

“யா… நான் மறந்துவிட்டேன். ஐயம் சாரி.” என்ற கிருஷ்ணன், அடுத்து என்ன சொல்வது என்று தடுமாற…

” வாட்ஸ் ஈட்டிங் யூ. ஸ்பீக் அவுட் கிருஷ்.”

” அது… ” என்று இழுத்தவர் பிறகு நடந்த அனைத்தையும் கூறிவிட்டார்.

” யூ டோண்ட் வொர்ரி. நான் ராதுக்கிட்ட பேசுறேன்.” என்றார் சேலவர்.

சொன்ன மாதிரியே இந்தியா வந்தவர், ராதிகாவை சந்தித்தார்.

” ஹாய் ராது டியர்.”

” ஹாய் டாக். ப்ளசன்ட் சர்ப்ரைஸ். ஹொவ் ஆர் யூ அண்ட் மை ஸ்வீட் ஏஞ்சல் எப்படி இருக்காங்க.”

” யா போத் ஆர் ஃபைன் டியர். அப்புறம் நீ சொல்லு? நியூ காலேஜ் எப்படி போகுது. ஹாஸ்பிடல்ல வொர்க் எல்லாம் எப்படி போகுது? ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் செட் ஆகி விட்டார்களா? காலேஜ் லைஃப் ஜாலியா போகுதா?” என்று கேள்வி மேல் கேள்வியாக வினவ.

“டாக்… ஒரு ரகசியம் சொல்லட்டா? உங்க அளவுக்கு இங்கு யாரும் நல்லா நடத்தல. ஐ மிஸ் யுவர் டீச்சிங்.”என்றுக் கூறி கண் சிமிட்டி சிரிக்க.

” யூ நாட்டி. இரு என் ஃப்ரெண்ட் கிருஷ் கிட்ட சொல்றேன்.”

” சொல்லுங்க டாக் … அவர் கேட்டா, நீங்க நல்லா தான் சார் நடத்துறீங்க‌. பட் உங்களைப் பார்த்தா, நீங்க மட்டும் தான் கண்ணுக்குத் தெரியுறீங்க. நீங்க நடத்தறது எல்லாம் என் மைண்ட்ல ஏறவே மாட்டேங்குது. யுவார் ஹாண்ட்சம் சார்‌” என்று அவர் கிட்டே சொல்லிடுவேன் என்றவள், கலகலவென நகைக்க…

” அதுவும் சரி தான்… அப்புறம் உன் ஃப்ரெண்ட் ஆதவன் எப்படி இருக்கான்? அடிக்கடி அவுட்டிங் போறீங்களா? உனக்கு இந்த ஸ்டடீஸ் எவ்வளவு முக்கியம் எனக்கு தெரியும் ராது. ப்ளீஸ் அவாய்ட் சம் ஃப்ராப்ளம்ஸ்.” என்றுக் கூற

” டாக்… ஆதவன் என்னோட ஃப்ரெண்டுனு உங்கக் கிட்ட சொன்னதா ஞாபகம் இல்லையே. அண்ட் அவனோட பேசினா என்ன ஃப்ராப்ளம் வரும் என்று நினைக்கிறீங்க? தென் ஆதவனை உங்களுக்கு தெரியுமா?” எனக் கேட்க…

” இல்லை…” என்று உதட்டைப் பிதுக்கியவர், ” நான் ஃபேஸ்புக் அண்ட் வாட்ஸ்அப்ல வந்த வீடியோவைப் பார்த்தேன். உன்னால காலேஜ்ஜிக்கோ, ஹாஸ்பிடலுக்கோ கெட்ட பெயர் வருவதை நான் விரும்பவில்லை.” என்றார் சேலவர்.

” டாக்‌… உங்க கிட்ட இதை நான் எதிர்பார்க்கலை. இந்தியாவுல உள்ளவங்க தான் ரொம்ப சென்சிடிவா இருப்பாங்க. நீங்கள் பிலிப்பைன்ஸில் தானே இருக்கீங்க. உங்களுக்கு தெரியாதா? அதுவும் என்னை பற்றி உங்களுக்கு நன்கு தெரியும் தானே? ஜஸ்ட் ஆதவன் என் ஃப்ரெண்ட். அப்புறம் இந்த வீடியோவெல்லாம் ரப்பிஷ். ” என்றாள் ராதிகா.

” ஓகே டா ராது. கூல்…” என்று சமாதானம் படுத்திய சேலவர் வேலையைக் கவனிக்க சென்று விட்டார்.

தனது தோளைத் குலுக்கிய ராதிகா, அன்றைய அலுவல் என்ன என்பதை விசாரிக்கச் சென்றாள். அப்போது அவள் அறியவில்லை. இதே போல ஒரு வீடியோ அவளது வாழ்க்கையை மாற்ற போவதையும், அதை ரப்பிஷ் என அவளால் சொல்ல முடியாமல் நிற்க போவதையும் அறியவில்லை.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்