Loading

 

அத்தியாயம் 33

 

” சார் திறந்து காண்பிங்க எதுக்கும் நாங்க ஒரு தடவை இது சத்யா தானானு பார்த்துக்குறோம்‌. ” என்றான் தேவ்.

 

திவாகர் திறந்து காண்பிக்க ,

 

அவர் சொல்லியது போல் உடல் முழுவதும் எரிந்திருக்க . அடையாளம் தெரியாத அளவில் இருந்தது சத்யாவின் முகம்.

 

இருவரும் திரும்பிக் கொள்ள , திவாகர் மீண்டும் உடல் முழுவதையும் மூடினார்.

 

‘ இன்னைக்கு காலைல நல்லா இருந்தவன் சாயங்காலம் இல்லாம போயிட்டானே. ‘ என்று நினைத்து வருந்தினான் தேவ் .

 

” இதில் கையெழுத்து போட்டு நீங்க பாடியை ஆம்புலன்சில் எடுத்துட்டு போங்க . நான் இங்கு உள்ள ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் பார்த்துக்குறேன். ” என்றான் திவாகர் .

 

” சார் , எதுக்காக பாடின்னு சொல்லுறீங்க ?” என்றான் சர்வேஷ் கோபமாக  .

 

‘ டேய் உண்மையாவே இது பாடி தான் டா .’ என்று நினைத்துக் கொண்டான் திவாகர் .

 

” சர்வேஷ் கோபப்படாதே இது மாதிரி அவங்க பல கேஸ் பார்ப்பாங்க. அதனால், இப்படி தான் பேசுவார்கள் . உடனே நீ மாமாவுக்கு போன் பண்ணி எல்லா ஏற்பாடையும் பண்ண சொல்லு .” என்றவன் திவாகரிடம் திரும்பி பேப்பரை வாங்கியவன் கையெழுத்து போட்டு தந்தான்.

 

சத்யாவின் உடலை ஆம்புலன்ஸில் ஏற்றிய தேவ் அந்த வண்டியிலே வீட்டிற்கு போனான் . சர்வேஷ் காரை ஓட்டிட்டு வந்தான் .

 

கமலா , சரண்யா இருவரும் ஆம்புலன்ஸ் அருகே ஓடி வந்தனர் .

 

சத்யாவின் உடலை வீட்டிற்குள் எடுத்து சென்றனர் . அனைவரின் கண்களும் கலங்கியது . யாரும் இல்லாதவனாக இங்கே வந்த சத்யா இறக்கும் போது தனக்காக ஒரு கூட்டத்தையே அன்பால் உருவாக்கியிருந்தான்.

 

சத்யாவிற்கு தெரிந்தவர்களுக்கும் அவனின் பெற்றோருக்கும் ஃபோனில் தகவல் சொன்னான் தேவ் .

 

” மாமா , எல்லாவற்றையும் பார்த்துக்கோங்க , நான் போய் தீப்ஷீய கூட்டிட்டு வரேன். ” என்றான் தேவ் .

 

இதுவரை கவலையில் இருந்தவர்கள் தீப்ஷீயை மறந்து போக . தேவ் கூறியதைக் கேட்டு அனைவரின் உள்ளமும் பாரமானது . தீப்ஷீ என்ன செய்வாளோ என்று பயந்தனர் . இனி அவளின் நிலை என்னவாகும் என்று யோசித்தார்கள்  .

 

விமான நிலையம் சென்ற தேவ் , கிடைத்த முதல் விமானத்திலே ஹைதராபாத் சென்றான் .

 

அங்கு மூன்று நாளுக்கு அனுமதி கேட்டு தீப்ஷீயை அழைத்து வந்தான் . அதிகாரியிடம் மட்டும் காரணத்தை கூறிய தேவ் , தீப்ஷீக்கு தகவல் தெரிய படுத்தாமலே அவளை ஹைதராபாத் விமான நிலையம் அழைத்து வந்தான் .

 

” யாருக்கு என்ன நடந்தது ? எதுக்கு என்ன அவசரமா கூட்டிட்டு போறீங்க? ” என்றுக் கேட்டாள் தீப்ஷீ .

 

” தீப்ஷீ , எதுவும் என்னக் கேட்காதே . அமைதியா வா. ” என்றான் தேவ் .

 

கண்களில் நீரோடு , ” தேவ் , சத்யா நல்லாதானே இருக்கான்? ” என்றுக் கேட்டாள் தீப்ஷீ .

 

தேவ்வின் கண்கள் கலங்க , ” தீப்ஷீ எதுவும் நம்ம கையில் இல்லை . சத்யா கார் ஆக்சிடென்டில் இறந்துட்டான். ” என்றான் .

 

” இல்ல , சத்யாவுக்கு எதுவும் நடந்திருக்காது . நீ பொய் சொல்ற . உனக்கு இன்னும் சத்யா மேல வெறுப்பு இருக்கு. அதான் இப்படி சொல்ற .” என்ற தீப்ஷீ , தேவ்வை தள்ளிவிட்டாள்.

 

அவளின்  கைகளை பிடித்து வைத்துக்கொண்டவன் , கஷ்டப்பட்டு சென்னை வீட்டிற்கு அழைத்து வந்தான் .

 

வீட்டிற்கு அருகே நிறைய பேர் நிற்க , ” இல்ல , சத்யாவுக்கு எதுவும் இல்ல . அவன் நல்லா இருக்கான் . நீ தான் பொய் சொல்ற. ” என்று பல முறைக் சொல்லிக் கொண்டே இருந்தாள் .

 

வீட்டிற்குள் வராமல் வெளியே உட்கார்ந்துக் கொண்டாள் .

 

” தீப்ஷீ , உள்ளே வா .” என்றான் தேவ் .

 

” நான் வர மாட்டேன் .” என்றாள் தீப்ஷீ .

 

” தீப்ஷீ அடம் பிடிக்காம உள்ள வா. ”

 

” சத்யா நல்லா இருக்கானு சொல்லு. நீ சொன்னது பொய்னு சொல்லு. ”  என்றாள் தீப்ஷீ.

 

” தீப்ஷீ , சும்மா வீம்பு பண்ணாத.  கடைசி நிமிஷத்த வீணாக்காதே. ” என்றான் தேவ் .

 

அமைதியாக எழுந்தவள் தேவ்வின் கையை இருக்கமாக பிடித்துக் கொண்டு உள்ளே சென்றாள் .

 

சத்யாவின் உடலிற்கு மாலை அணிவித்து , உறவினர்கள் எல்லாம் அவன் அருகே அழுதுக் கொண்டிருக்க .

 

சத்யா அருகில் தீப்ஷீயை அழைத்துச் சென்றான் தேவ் .

 

சத்யாவின் உடலை பார்த்த தீப்ஷீ , ” இது சத்யா இல்ல. ” என்றுக் கத்தி அழுதாள் .

 

” தீப்ஷீ , இது சத்யா தான். ” என்று அவளின் மனதில் பதிய வைத்தான் தேவ் . இல்லை என்றால் தீப்ஷீக்கு பின் மனரீதியாக நிறைய

பிரச்சனைகள் வரும் என்பதால்.

 

” துணியை எடுக்க சொல் தேவ் . நான் சத்யாவ கடைசியா ஒருமுறை பார்க்கணும். ” என்று தேவ்வின் சட்டையை பிடித்துக் கேட்டாள் தீப்ஷீ .

 

” முடியாது தீப்ஷீ. ”

 

” ஏன்? ”

 

” முகம் முழுவதும் எரிஞ்சிடுச்சி.” என்றான் தேவ் .

 

இதற்கு மேல் எதுவும் கேட்க தைரியம் இல்லாத தீப்ஷீ அவன் கால் அருகே அமைதியாக உட்கார்ந்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வந்துக் கொண்டிருந்தது .

 

அமைதியாக இருந்தவள் யாரையும் பார்க்கவில்லை .

 

தெரிந்தவர்கள் ஒவ்வொருவராக வந்து மாலை போட்டனர். அழுதுக் கொண்டே உள்ளே வந்தார் அருணா ( சத்யாவின் அம்மா ) .

 

” என் மகன் எங்கேயோ நல்லா இருக்கானு தான இவ்வளவு நாள் நான் நிம்மதியா இருந்தேன் . கடவுள் எனக்கு தந்த மகனை வேண்டாம்னு போனேனே பின் எனக்கு குழந்தையே தரமறுத்துட்டார் . சரி என் வாரிசு நல்லா இருக்கான் என்று இருந்தேனே . நான் நிம்மதியா இருக்கிறது இந்த கடவுளுக்கு பொறுக்கவில்லையா. ” என்று அருணா ஒப்பாரி வைக்க .

 

யாரையும் பார்க்காமல் இருந்த தீப்ஷீ , வேகமாக எழுந்தாள் , ” யார் உங்களை உள்ள விட்டது . ஒழுங்கு மரியாதையா நீங்களே வெளியே போயிடுங்க . உயிரோடு இருக்கும் போது சத்யாவ பார்த்துக்க முடியலை . இப்போ எதுக்கு இங்க வந்து இருக்கீங்க? ” என்றாள் தீப்ஷீ கோபமாக .

 

வேகமாக தீப்ஷீ அருகே வந்த தேவ் , ” தீப்ஷீ , ப்ளீஸ் அமைதியா இரு. ” என்றான் .

 

” தேவ் , முதல அவங்களை வெளியே போக சொல்லு . அவங்க இங்கு இருக்குறது என் சத்யாவுக்கு பிடிக்காது . அவனுக்கு இவங்கள பார்த்தாலே கோபம் வரும் . இவங்கள போக சொல்லு. ” என்றவள் அவன் மேல் சாய்ந்து அழ .

 

அங்கிருந்த அனைவருக்கும் அவள் சொல்லியதைக் கேட்டு கண்ணீர் வர . அருணா செல்ல நினைத்து எழுந்தாள் .

 

கமலா அவரின் கையை பிடித்து தடுத்தவர் , ” நான் சொன்னா சத்யா கேட்பான் . நீங்க இருங்க.”  என்றவர் தீப்ஷீயை பார்க்க .

 

கமலா சொல்வது உண்மை என்பதால் அவரை எதிர்த்து பேச விரும்பாத தீப்ஷீ வெளியே போக நினைத்து திரும்ப அங்கு வாழ்க்கை வெறுத்து போன நிலையில் நின்றிருந்தாள் சந்தியா .

 

‘ ஐயோ ! ஊரிலிருந்து வந்ததும் கல்யாணம்னு சொன்னேனே . சத்யா காதலிப்பானா மாட்டானா என்று தெரியாத நிலையில் இருந்தவளிடம் . சத்யா கல்யாணத்திற்கு சம்மதம் தந்துவிட்டானு ஆசைய விதைத்தேனே . இனி இவளுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்? ‘  என்று நினைத்த தீப்ஷீ , ஓடி சென்று சந்தியாவை அணைத்துக் கொண்டாள் .

 

” என்ன மன்னிச்சிடு சந்தியா.” என்றாள் தீப்ஷீ .

 

” தீப்ஷீ , சத்யா… ” என்ற சந்தியாவால் அதற்கு மேல் பேச முடியவில்லை, அமைதியாக அழுதாள்  .

 

எல்லா சடங்கும் முடிய , வீடே அமைதியாக இருந்தது .

 

சத்யாவின் படத்திற்கு பூவும் பொட்டும் வைத்தார் கமலா .

 

பூவை எடுத்து , பொட்டை அழித்த தீப்ஷீ, ” சத்யா நம்மோடு தான் இருக்கான் இதையெல்லாம் வைக்காதீங்க கமலாமா. ” என்று அழுதாள் தீப்ஷீ .

 

அவளின் வேதனையை உணர்ந்தவர் , ” சரி டா . நீ அழாதே .” என்றார் கமலா .

 

ஏதோ உயிர்வாழ சாப்பிட்டுக் கொண்டு , வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் சத்யாவின் படத்திற்கு கீழே உட்கார்ந்திருந்தாள் தீப்ஷீ .

 

மற்றவர்கள் இயல்பை ஏற்றுக் கொள்ள தீப்ஷீ மட்டும் அமைதியாக தன் வலியிலிருந்து மீளாமல் இருந்தாள் .

 

இரண்டு நாள் அமைதியாக இருந்த தேவ் மூன்றாவது நாள் அவளை வெளியே பார்க் அழைத்து வந்தான் .

 

அங்கிருந்த ஊஞ்சலை பார்த்து மீண்டும் அழ ஆரம்பித்தாள் .

 

‘ இங்கு தான இருவரும் அடிக்கடி பேசிக் கொண்டிருப்பார்கள் . உனக்கு வேறு இடமே கிடைக்கலையா? ‘ என்று தேவ்வின் மனசாட்சி அவனை திட்டியது .

 

” தீப்ஷீ , அழுதுட்டு இருந்தால் எல்லாம் சரியாகிடுமா? நீ எப்படி இருக்கணும்னு சத்யா ஆசைப்பட்டான் . நீ இப்படி அழுவது சத்யாவுக்கு பிடிக்குமா? அன்னைக்கு உன்ன ஏர்போர்ட்ல விட்டுட்டு வந்த அப்புறம் நீ பெரிய ஐ.பி.எஸ் ஆக போறனு அப்பார்ட்மெண்ட் முழுக்க சொல்லிட்டிருத்தான் . இப்படி இருந்தா உன்னால கண்டிப்பா ஐ.பி.எஸ் ஆக முடியாது. “என்று தேவ் அமைதியாக சொன்னான்.

 

நிதானமாக யோசித்தாள் தீப்ஷீ அன்று இதே இடத்தில் சத்யா சொன்னது அவளுக்கு நினைவு வந்தது , ” அம்மு , எப்போதும் ஐ.பி.எஸ்ஸை தான் முதன்மையாக நினைக்கணும் . ஒரு வருசம் எதைப் பத்தியும் யோசிக்காம நல்லா பயிற்சி எடுத்து . பயிற்சியிலும் முதல் ஆளா நீ தான் வரணும் . நீ ஐ.பி.எஸ் பதவி ஏற்கும் முன்பே உன்னப் பத்தி எல்லோரும் பெருமையா பேசும் படி நீ திறமையா இருக்கணும் சரியா.”

 

வேதனையில் கண்களை மூடி தன்னை நிலை படுத்தியவள் .

 

” நாளைக்கு நான் ஹைதராபாத் போறேன். ”  என்றாள் .

 

பெரு மூச்சு விட்டான் தேவ் .

 

‘ இனி இந்த வலியில் இருந்து இவளே மீண்டு வருவாள். ‘ என்று நினைத்தான் தேவ் .

 

வீட்டிற்கு வந்த தீப்ஷீ , எல்லாரும் இருப்பதைப் பார்த்த தீப்ஷீ , ” நாளைக்கு நான் ஹைதராபாத் போறேன். ”  என்றாள் பொதுவாக .

 

பின் கமலாவிடம் சென்றவள் , ” கமலாமா , நீங்க இனி அம்மாவோடு எங்க வீட்ல தான் இருக்கணும் .” என்றாள் தீப்ஷீ .

 

” இல்ல தீப்ஷீ , அதெல்லாம் சரிப்பட்டு வராது. ” என்றார் கமலா.

 

” தீப்ஷீ சொல்வது சரி தான் கமலாமா.  ” என்றான் தேவ் .

 

” கமலா , எங்களோடு வந்து இரு. நானும் தனியா தான இருக்கேன் இவங்க வேலைக்கு போனதும். ” என்றார் சரண்யா .

 

” கண்டிப்பா உங்களை தனியா விடமாட்டோம். ”  என்றார் தினேஷ் .

 

” கமலாமா , உங்களுக்கு கஷ்டமா இருந்தால் , நான் ட்ரெய்னிங் முடிச்சி இங்கு வரும் வரை அங்க இருங்க . நான் வந்ததும் உங்களுக்கு பிடிக்கலைணா நீங்க மறுபடியும் இதே வீட்டுக்கு வந்துடுங்க.” என்றாள் தீப்ஷீ .

 

” சரி. ” என்றார் கமலா .

 

அடுத்த நாள் காலையில் விமான நிலையத்திற்கு வந்தனர் தேவ்வும் தீப்ஷீயும் .

 

” தீப்ஷீ , நானும் உன்னோட வரட்டா?” என்றுக் கேட்டான் தேவ் .

 

” என்னால தனியா போக முடியும் . நான் சின்ன குழந்தை இல்லை.” என்றாள் தீப்ஷீ .

 

” பீ கேர் ஃபுல் தீப்ஷீ.  ” என்றான் தேவ் .

 

தலையை ஆட்டிய தீப்ஷீ தன் பையை எடுத்துக்கொண்டு சென்றாள் .

 

  • அன்று போல் இன்றும் திரும்பி பார்க்க வேதனையோடு தேவ் நின்றான் அவன் அருகே சத்யா இல்லை .

 

வரத்துடித்த கண்ணீரை கஷ்டப்பட்டு உள்ளே அனுப்பியவள் , விமானம் ஏறி சென்றுவிட்டாள் .

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்