
அத்தியாயம் 32
” நான் நல்லா இருக்கேன் சத்யா. ரொம்ப சந்தோஷமா இருக்கு . ஆமா சத்யா நான் ஒருவேளையா ஊருக்கு போயிருந்தேன். எனக்கு அப்பவே தெரியும் தீப்ஷீ பெரிய ஆளா வருவானு . அவளுக்கு அவ்வளவு திறமை . பத்தாதற்கு சத்யானு ஒரு பெரிய ஆள் அவளுக்கு பக்கபலமா இருக்காங்களே . ”
” மாஸ்டர் … ” என்ற சத்யா அழகாக வெட்கப்பட்டான் .
” ஆனா , நீ இன்னும் நோக்கு வர்மம் கத்துக்கலையே சத்யா ?”
” ஐயோ! மாஸ்டர் நீங்க இன்னும் அதை விடவே இல்லையா . எல்லோரும் எல்லாத்துலையும் திறமையா இருக்க மாட்டாங்க.”
” இப்படியே சொல்லி சமாளி . எனக்கு தெரியாதா உன்னால முடியுமா முடியாதானு ? உனக்கு அதுல விருப்பம் இல்லனு புரியுது அதான் நானும் விட்டுட்டேன். ”
” சரிங்க மாஸ்டர் நான் வரேன் . ஆஃபீஸ்க்கு நேராமாகுது . ”
” அடிக்கடி வா சத்யா. தீப்ஷீ வந்ததும் அவளை கூட்டிட்டு வா.”
” ஓகே மாஸ்டர் ” என்ற சத்யா காரில் ஏறினான் .
அவனின் நினைவுகளோ பின்னோக்கி சென்றது . அன்றும் இதே போல் மாஸ்டர் அவனை திட்ட அவனுக்காக வாதாடினாள் தீப்ஷீ . அவளை நினைத்தாளே அவனின் முகம் மென்மையாகிவிடும் .
‘ நினைவுகள் …
” சத்யா , வர்மக் கலை நான்கு வகைப்படும் , படுவர்மம் – ஒருவரின் உயிரையே எளிதாக எடுக்க முடியும் .
தொடுவர்மம் – மரண பயம் இல்லை , ஆனால் மிகவும் வலி நிறைந்தது .
தட்டு வர்மம் – தொடுவர்மத்தைவிட ஆபத்து குறைந்தது. எதிரிகளை தாக்க பயன்படுத்த முடியும் .
நோக்கு வர்மம் – ஒருவரை தொடாமல் பார்வையால் மற்றவரை கட்டுபடுத்தி வசப்பட வைப்பது .
இதில் படுவர்மம் யாருக்கும் இப்போ சொல்லி தருவதில்லை. தொடுவர்மம் , தட்டு வர்மம் நீ கத்துக்கிட்ட எப்போ நோக்கு வர்மம் கத்துக்க போற? ” என்றுக் கேட்டார் விமல்.
” மாஸ்டர் நானும் எவ்வளவோ முயற்சி செய்துட்டேன் . எனக்கு நோக்கு வர்மம் வரல்லை .” என்றான் ஆறடிக்கு குறைவான உயரத்தையும் , உயரத்திற்கு சரியான எடையும் , மாநிறம் , மீசை இருக்கா இல்லையானு தெரியாது அழகாக இருந்த சத்யா சொன்னான் .
” இல்ல மாஸ்டர் , அவன் பொய் சொல்கிறான் . அவனுக்கு வர்மக் கலையில் எப்போதுமே ஆர்வம் இல்லை. ” என்று சொல்லிக் கொண்டே வந்தாள் தீப்ஷீ , சத்யாவின் உயரத்திற்கு பாதிக்கு கொஞ்சம் அதிகமான உயரத்தில் இருந்தாள் .
அவளை பார்த்து சிரித்தான் சத்யா .
பின் விமல் கோபமாக , ” உன்ன விட சிறியவள் நோக்கு வர்மம் கத்துக்கிட்டா . மூன்று கலையிலும் திறமையா இருக்காள்.” என்றார் மாஸ்டர் .
‘ நான் வர்மக் கலை கற்க வந்ததே . இந்த வாலுக்காக தானு சொன்னால் . நீங்க என்ன ஓட ஓட விரட்டி வந்து அடிப்பீங்க. ‘ என்று மனதில் நினைத்தான் சத்யா .
என்னதான் சத்யாவை கேலி செய்ய , அவனை மாஸ்டரிடம் மாட்டிவிட நினைத்தாலும் , சத்யாவை குறைவாக பேசியதையும் அதுவும் இல்லாமல் தன்னோடு ஒப்பிட்டு பேசியதையும் தீப்ஷீ விரும்பவில்லை .
” மாஸ்டர், சத்யா டென்த் பப்ளிக் எக்ஸாம் எழுதியதால் . அவனால இங்கு பயிற்சிக்கு சரியா வர முடியலை. அதனால , தான் அவன் இன்னும் நோக்கு வர்மம் கத்துக்கலை. ” என்றாள் தீப்ஷீ .
” இந்த காரணம் எல்லாம் எனக்கு தேவையில்லை தீப்ஷீ . அவன் வராத போது நீயும் தான் வரலை.” என்றார் மாஸ்டர் .
‘ ஐயோ ! மாட்டிக்கிட்டோமே. ‘ என்ற மைண்ட் வாய்ஸ்ஸை ஓரம் தள்ளியவள் , ” மாஸ்டர் சத்யா , புரோகிராமிங் லாங்குவேஜ் நிறைய கத்துட்டிருக்கான் . அதனால, அவனுக்கு அதிக நேரம் கிடைக்கலை நோக்கு வர்மம் பயிற்சி எடுக்க. ” என்றாள் தீப்ஷீ.
” அதான நானும் பார்த்தேன் , நீயாவது சத்யாவை விட்டுக் கொடுப்பதாவது. ” என்று தீப்ஷீயை கிண்டல் செய்தார் விமல் .
ஆனால் சத்யா நோக்கு வர்மம் கற்றுக் கொள்ளாததால் அவன் எதிர்காலத்தில் சந்திக்க போகும் இன்னல்கள் பற்றி அறியாது மூவரும் சிரித்துக் கொண்டிருந்தனர் .’
#####
ஆபீஸ் வெளியே காரை நிறுத்திய சத்யா நினைவுகளில் இருந்து வெளியே வந்தவனின் மென்மை போய் கடுமை வர உள்ளே சென்றான்.
” எக்ஸ்க்யூஸ் மீ சார் ?” என்றான் சத்யா .
” எஸ் கம் இன். ” என்றார் பரந்தாமன் .
அவர் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி இனி சத்யாவை வெளியே அனுப்பிவிடலாம் என்ற எண்ணம் பரந்தாமனுக்கு.
” ப்ராஜெக்ட் முடிஞ்சதா சத்யா? ”
” எஸ் சார். ”
அவர் முகத்தில் முதலில் அதிர்ச்சி பின் சமாளித்து சிரித்தவர் , ” எனக்கு தெரியும் சத்யா நீ திறமைசாலி . சொன்ன டைம்ல சரியா வேலைய முடிச்சிடுவ என்று எனக்கு முன்னாடியே தெரியும். ” என்றார் .
” தேங்க்யூ சார். ”
” ஓகே நெக்ஸ்ட் டெஸ்டிங் டீம் செக் பண்ணட்டும் . அப்புறம் க்ளையன்ஸ் கிட்ட அனுப்பலாம்.” என்றார் பரந்தாமன் .
” ஓகே சார் .” என்ற சத்யா வெளியே வந்தான் .
பரந்தாமனுக்கு கோபம் தலைக்கேற வேகமாக அட்மினுக்கு கால் செய்தவன் , ” உடனே என் ரூமிற்கு வா. ” என்றார் .
அனுமதிப் பெற்று உள்ளே வந்தவனிடம் .
” எப்படி ப்ராஜெக்ட் சத்யா கைக்கு போனது ?” என்றுக் கேட்டார் பரந்தாமன் .
” நான் எதுவும் அனுப்பலை . எப்படி அவன் கைக்கு போனதுனு எனக்கு தெரியாது சார்? ” என்றான் அட்மின் .
” நீ சத்யாவிற்கு அனுப்பாமல் , அவனுக்கு கிடைக்க வாய்ப்பே இல்லை. ” என்றார் பரந்தாமன் .
” சார் நிஜமா சத்யா என் கிட்ட பேசியே ஒரு வாரமாகுது . நீங்க வேணா சிசிடிவி புட்டேஜ்ஜை செக் பண்ணிக்கோங்க. ” என்றான் அட்மின் .
” சரி நீ போ. ” என்றார் பரந்தாமன் .
சத்யா லீவ் போட்ட நாள் முதல் உள்ள சிசிடிவி புட்டேஜ்ஜை பார்த்த பரந்தாமன் இரண்டு விஷயத்தில் உறுதியாக இருந்தார் .
‘ சத்யா இந்த நாட்களில் அட்மின் ரூமுக்கோ தன்னுடைய ரூமுக்கோ அனுமதியோடும் அல்லது யாருக்கும் தெரியாமலோ நுழையவில்லை. அதுபோல அட்மினும் இந்த நாட்களில் சத்யாவை பார்க்கவில்லை .’ என்பதை கண்டுபிடித்தார் .
அவரின் ஸ்மார்ட் போனில் கால் வர , அதை எடுத்து பார்த்தார் பரந்தாமன் .
‘ பிரைவேட் நம்பர் காலிங். ‘ என்று வர .
ஒரு முறை யாராவது ரூமிற்கு அருகில் நிற்கிறார்களா என்று பார்த்தவர் ரூமை தாள் போட்டு உள்ளே வந்தார் .
” ஹலோ. ” என்றார் பரந்தாமன் .
” அட்மின் வேலையா இது ? ”
” இல்ல நான் நல்லா செக் பண்ணிட்டேன் அட்மின் மேல எந்த தப்பும் இல்லை.” என்றார் பரந்தாமன் .
” சத்யா யாருக்கும் தெரியாமல் அட்மின் ரூமுக்கோ, உங்க ரூமுக்கோ வந்தானா ? ”
” இல்லை , சத்யா யார் ரூமிற்கும் வரல்லை. ” என்றார் பரந்தாமன் .
” … ”
” என்ன அமைதியா இருக்க? ” என்றார் பரந்தாமன் .
” சத்யா ஹாக் பண்ணியிருக்கான். ”
” என்னது சத்யா ஹாக் பண்ணி ப்ராஜக்ட் ரெக்கவர் செய்து இருப்பானா . அப்போ அவனுக்கு நாம செய்யும் வேலை தெரிந்திருக்க வாய்ப்பிருக்கே .” என்றார் .
” கண்டிப்பா.”
” ஆனா , அவன் வந்து என் கிட்ட சண்டை போடல்லை .” என்றார் பரந்தாமன் .
” அவனின் அமைதி தான் அவன் கண்டுபிடித்ததை உறுதிப்படுத்து. ”
” இப்போ என்ன செய்யப்போறோம்? ” என்றுக் கேட்டார் பரந்தாமன் .
” இன்னைக்கு சாயந்திரம் கார் விபத்தில் ஐடி ஊழியர் சத்யா பலி என்ற செய்தி வரும். ”
” வேறு வழியே இல்லையா? ” என்றுக் கேட்டார் பரந்தாமன் .
“இல்லை.”
” சரி பார்த்து மாட்டிக் கொள்ளாம செய் .” என்றவர் போனை வைத்தார் .
சத்யா கிட்ட ப்ராஜெக்ட் விஷயமாக நிறைய சந்தேகங்களை டெஸ்டிங் டீம் மூலம் கேட்க வைத்தார் பரந்தாமன் .
இரவு தாமதமாக கீழே கார் பார்க்கிங் சென்றான் சத்யா . கேட் திறந்திருக்க , ” எங்க செக்யூரிட்டியை காணும்? ” என்றவன் .
காரை ரிமோட் கீ மூலம் அன்லாக் செய்ய . சத்யாவை பின்னால் இருந்து ஒருவன் பிடிக்க மற்றொருவன் சத்யாவின் மூக்கில் குளோரோஃபார்ம்மில் நனைத்த கர்ச்சீப்பை வைக்க .
கொஞ்ச நேரத்தில் சத்யா மயக்கமடைய இருவர் சத்யாவை தூக்கிக் கொள்ள மூன்றாவது ஆள் கார் கதவை திறந்தான் .
சத்யாவோடு ஒருவன் ஏறிக் கொள்ள மற்றொருவன் கார் ஜன்னலினை மூடிவிட்டு , ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு காரை ஓட்டி சென்றான் .
மூன்றாவது ஆள் வேறு ஒரு காரில் இவர்களை பின் தொடர்ந்தான் .
காரை மரத்தின் மீதி மோத வைத்தான் . இருவர் இறங்கிக் கொள்ள .
சத்யாவை ஓட்டுனர் இறுக்கையில் உட்கார வைத்தனர் . பின் லைட்டர் ஃப்ளூயிட்டை கார் உள்ளே வெளியே ஊற்றியவன் கடைசியாக சத்யா முகம் மற்றும் உடல் முழுவதும் ஊற்றினான் .
உள்ளே , வெளியே எரிய வைத்தவன் சற்று தள்ளி நின்று கொண்டான் .
முதலில் நெருப்பு கார் முழுவதும் பரவி எரிந்த பின் ஃப்யூயல் டேங்க் வெடித்தது. மூவரும் அவர்களின் காரில் சென்றனர் .
” ஹலோ பாஸ் சக்சஸ். ” என்றான் ஒருவன் போனில் .
சிறிது நேரத்தில் பரந்தாமன் அவருக்கு தெரிந்த திவாகர் இன்ஸ்பெக்டரை போனில் அழைத்தவர் , ” பசங்க சொன்ன படி வேலைய முடிச்சிட்டாங்க . நீ போய் கேஸ் பெருசா ஆகாம ஆக்சிடென்ட் போல் முடிச்சிடு . போஸ்ட்மார்ட்டம் பண்ணாம எப்படியாவது பாடிய அவங்க கிட்ட தந்துடு . அவங்களுக்கு யோசிக்க டைம் தராத அப்போ தான் போஸ்மாட்டம் , கேஸ் பத்தி பேச மாட்டாங்க . அவங்களும் சோகத்துல இதை எல்லாம் யோசிக்க மாட்டாங்க. பணம் தந்தா ஹாஸ்பிடல்ல நாம சொல்லற மாதிரி பண்ணிடுவாங்க . வேலைய முடிச்சிட்டு வா நான் உன்ன கவனிச்சிக்குறேன்.” என்றார் .
” நான் ஸ்பாட்டிற்கு தான் போயிட்டு இருக்கேன் . பிரச்சனை பெருசா ஆகாம நான் பார்த்துக்கிறேன் . அவனோட அம்மா நம்பர் தாங்க.” என்றுக் கேட்டான் திவாகர் .
” அவனுக்கு அம்மா அப்பா இல்ல . கமலா என்ற காடியன் தான் இருக்காங்க . அவங்க நம்பர் உனக்கு அனுப்புறேன். ” என்றார் பரந்தாமன் .
” யாரும் இல்லாத அனாதைக்கு இவ்வளவு தைரியம் . நான் இந்த கேஸை ஒன்னும் இல்லாத கேஸா மாற்றுகிறேன்.” என்றான் திவாகர் நக்கலாக .
‘ நீ செய்ய போகும் பாவத்திற்கு உடனே இல்லை சில வருடங்களுக்கு பின் ஒரு சிங்க பெண் உனக்கான தண்டனையை வழங்க போகிறாள். ‘ என்று அவனை விட நக்கலாக சொல்லியது விதி .
கார் எரிந்த இடத்திற்கு போன திவாகர் . காரில் இருந்து சத்யாவிற்கு உயிர் இருக்கா என்று பார்த்தான் .
உயிர் இல்லை என்பதை உறுதி செய்தவன் ஆம்புலன்ஸ்ஸில் ஏற்றிவிட்டான் .
ஹாஸ்பிடலிற்கு வந்த திவாகர் கமலாவிற்கு போன் செய்தார் , ” ஹலோ சத்யா வீடா? ” என்றுக் கேட்டார் .
” ஆமாங்க நீங்க யாரு ? ” என்றுக் கேட்டார் .
” சத்யா சார் ஆக்சிடென்ட்டில் இறந்துவிட்டார் . ஜி.ஹெச்சில் பாடி இருக்கு வந்து வாங்கிட்டு போங்க. ” என்றான் திவாகர் .
” என்ன சொல்லுறீங்க? ” என்று பதட்டமாக கேட்டார் கமலா .
” உடனே ஜி.ஹெச்சிற்கு வந்து சத்யா பாடியை வாங்கிட்டு போங்க .” என்றவன் ஃபோனை வைத்தான்.
அழுதுக் கொண்டே என்ன செய்வதென்று புரியாமல் வேகமாக பக்கத்து வீட்டிற்கு ஓடினார் கமலா .
இரு குடும்பத்தினரும் வெளியே நின்று பேசிக் கொண்டிருக்க , கமலா பதட்டமாக ஓடி வருவதை பார்த்தவர்கள் அவர் அருகே சென்றனர் .
” சத்யாவிற்கு கார் ஆக்சிடென்ட் , இறந்துட்டானு ஃபோன் வந்தது. ” என்றார் திக்கிக் கொண்டே .
” யார் ஃபோன் பண்ணது? ” என்றுக் கேட்டான் தேவ் .
” தெரியல்லை . ஜி.ஹெச்ல இருக்கான் என்று போனில் சொன்னார்கள் . எனக்கு ரொம்ப பயமா இருக்கு .” என்ற கமலா அழுதுக் கொண்டே கீழே உட்கார்ந்தார் .
” அம்மா , இவங்களை பார்த்துக்கோங்க . சர்வேஷ் என்னோடு வா .” என்ற தேவ் வேகமாக உள்ளே சென்று கார் சாவியை எடுத்து வந்தவன் ஜி.ஹெச்சை நோக்கி சென்றனர் .
ரிசப்ஷனில் கேட்டு வேகமாக சத்யா இருக்கும் அறையை நோக்கி சென்றனர் தேவ்வும் சர்வேஷ்ஷும் .
அந்த அறை வெளியே நின்றிருந்தான் திவாகர் .
தேவ் உள்ளே செல்ல முயற்சிக்க திவாகர் , ” நீங்க யாரு ? ” என்றான் .
” சத்யாவோட ரிலேட்டிவ்.” என்றான் தேவ் .
” சரி உள்ள வாங்க. ” என்றான் திவாகர் .
உள்ளே சத்யாவின் உடல் தலை முதல் பாதம் வரை வெள்ளை துணியால் முழுவதும் கட்டப்பட்டிருந்தது .
” சார் , இது சத்யாவா என்று எப்படி பார்ப்பது ? ” என்றுக் கேட்டான் தேவ் .
” சாரி , உடல் முழுவதும் எரிந்துவிட்டது . முகமும் அடையாளம் காண முடியாத படி ஆகிவிட்டது . ஏட்டு , அதை எடுத்துட்டு வா. ” என்றான் திவாகர் .
” இது தானா இவரின் வாட்ச் , செயின் , பிரேஸ்லெட் .” என்று ஒரு கவரில் இருந்ததை தேவ்விடம் காட்டினான் திவாகர் .
” ஆம் இது சத்யாவோடது தான்.” என்றான் தேவ் .
தன் போனை எடுத்த திவாகர் , ” இது அவரோட காரா என்று பார்த்து சொல்லுங்க? ” என்று அவன் எடுத்த போட்டோவை காண்பித்தான் .
” ஆமா. ” என்று தலை ஆட்டினான் தேவ் .
” காரை மரத்தில் மோதிவிட்டார். பின் கார் லாக் ஜாம் ஆகிடிச்சி. கார் கதவை திறக்க முடியாமல் உள்ளே மாட்டிக்கிட்டார். கொஞ்ச நேரத்தில் ஃப்யூயல் டேங்க் வெடித்துவிட்டது. ” என்றான் திவாகர் .
இதை கேட்டுக் கொண்டிருத்த இருவருக்கும் கண்ணீர் வந்தது.

