Loading

மெல்லினம் 19 :

விடிவிளக்கின் ஒளியில் துயில் கொண்டிருந்த தேன்முல்லையை கண்ட கதிரழகனிற்கு அந்நொடி

“ஒளியிலே தெரிவது தேவதையா!”

என்ற வரிகள் தான் நினைவில் வந்தன.

அவனால் இன்னமும் நம்ப முடியவில்லை.அவனின் அறையில் அவன் கட்டிலில் அவனின் காதல். 

பல வருடங்களுக்கு முன்பு, அவன் இழந்த அவனின் காதல் நிலா, இன்று திரும்பவும் குட்டி நட்சத்திரத்துடன் சேர்த்து அவனிடமே வந்து சேர்ந்திருக்கிறது.

மூச்சை இழுத்து விட்டு வேகத்திலே தெரிந்திற்று. முல்லையின் ஆழ்ந்த உறக்கம்.

ஆரத்தி எடுத்து வீட்டினில் நுழைந்த மணமக்களுக்கு அடுத்தடுத்த சடங்குகள் நடைபெற மறுக்காது கலந்து கொண்டாள் முல்லை.

என்ன அதிசயம், இருவருக்கும் தங்களின் முந்தின திருமண சடங்குகள் ஒன்று கூட நினைவு வரவில்லை.

பூஜையறையில் விளக்கேற்றி இறைவனை வணங்கினர்.

எல்லா சடங்குகளும் முடிந்த பின்பு கதிர், அத்விதனை தூக்கி கொண்டு அவனது அறைக்கு சென்றவன் ‘முல்லையையும் அழைக்கலாமா அவளிற்கும் டயர்டாக இருக்குமே’ என நினைத்து அவன் தயங்க,

அதனை உணர்ந்து சீதா,

“கதிர் நீ போ, முல்லை கீழ படுக்கட்டும்” என்றிட சரியென்று சென்றுவிட்டான்.

“முல்லை வா, கொஞ்ச நேரம் படு நான் கொஞ்ச நேரம் கழிச்சு எழுப்புறேன்” என்று அழைத்து கொண்டு அவளை கீழிருக்கும் அறையினுள் விட்டு வர,

தூக்கம் வராது, என தெரிந்தாலும் உடம்பு அலுப்பில் சற்றே ஓய்வு கேட்க, மெல்ல கட்டிலில் வீழ்ந்தவளை, அடுத்த நொடி நித்திரை அரசன் தன் வசப்படுத்தி கொண்டான்.

தேன்முல்லையின் வீட்டினர் இங்கு வந்த சிறிது நேரத்திலேயே கிளம்பிவிட்டனர்.

மகள் மற்றும் பேரனின் பிரிவு வலித்தாலும், அவர்களுக்கு கிடைத்திருக்கும் நல்வாழ்வினை பொறுத்து, தங்களின் கண்ணீரை மறைத்து கொண்டு கிளம்பி விட்டனர்.

நல்ல தூக்கம்‌ முல்லைக்கு அத்வி வந்து எழுப்பும் வரை.

“அத்வி கண்ணா” என்றவாறு அவனை தூக்கியவள், கவனித்தது அத்விக்கு காலையில் போடப்பட்டிருந்த உடை மாற்றப்பட்டு இருந்ததை.

 வெளியே வர அனைவரும் ஹாலில் அமர்ந்திருந்தனர்.

அப்போது தான் கதிரை கவனித்தாள் வேஷ்டி சட்டையில் இருந்து மாறி‌யிருந்தான்.

இருவரும் தூக்கி எழுந்து ப்ராஷ்ஷாகி, பளிச்சனெ தெரிய குனிந்து தன் சேலையை கண்டவள், குளித்து விட்டு வேறு உடை அணியலாம் என நினைத்து சீதாவை அழைப்பதற்குள்,

“ம்ம்ம் வெளங்கிடும், வந்த மொத நாளே விளக்கு ஏத்துற நேரம் தாண்டுற வரைக்கும், தூங்கி எழுந்து வந்துருக்கா, இதுல எங்கயிருந்து மகாலட்சும் வீட்டிற்கு வர்றது. மூதேவி தான் வரும்” என காலையில் இருந்து அடக்கி வைத்த ஆத்திரத்தை எல்லாம் வார்த்தைகளில் தடவி வெளிப்படுத்தினாள் ஸ்ருதி.

அவளின் வார்த்தைகளை கேட்டு அனைவருக்குமே சட்டென மனம் வருந்தி விட்டது. நல்ல நாள் அதுவுமாக பேசும் பேச்சா என்பது போல்.

முல்லையை கேட்கவே தேவையில்லை. அதுவரை இருந்த இயல்பு நிலை மாறி உடல் இறுகிட கண்கள் கலங்கி விட்டன அவள் வார்த்தைகளில்.

இத்தனை வார்த்தைகளில் பாதிக்கப்படாமல் ஒருத்தன்‌ இருந்தான் என்றால் அவன் யாராக இருக்க முடியும். சாட்சாத் கதிரழகனே தான்.

சில விநாடிகள் சட்டென அமைதி நிலவிட,

“ஏண்டா பிரகாஷீ இனி தான் இந்த வீட்டுக்கு மூதேவி வரணும்மா என்ன? என்னைக்கு நீ கல்யாணம் பண்ணியோ, அன்னைக்கே அது அடி எடுத்து வச்சாச்சு. அது இருக்குற இடத்துலே வேற யாரும் நுழைச்சிட முடியுமா என்ன? என்றவனின் பேச்சை இடைமறித்த ஸ்ருதி,

“என்ன? என்ன? எவ்வளவு தைரியம் என்னை பாத்து மூதேவின்னு சொல்லுறியா நீ” என அவள் கத்த,

“அத திரும்புவும் எல்லாம் என் வாயால சொல்ல முடியாது” என வாரியவனை கண்டு ஆத்திரம் எழ,

“உங்க தம்பியை பேச விட்டு வேடிக்கை பாக்குறீங்களே அசிங்கமா இல்ல??” என கணவனிடம் சீற,

“உன்னை கட்டுனத விடவா அசிங்கம் வந்துடப்போகுது. நீ தான மொதல்ல வாயை விட்ட அப்போ வாங்கி கட்டிக்க” என அவன் அசட்டையாய் தோள் குலுக்க,

அதற்குள் கதிரின் கண் அசைவில் சீதா முல்லையை உள்ளே அழைத்து சென்றிருந்தாள்.

“ப்ச் முல்லை என்ன இது குழந்தையாட்டம் கலங்கிட்டு. அவுங்க பேசுனா உனக்கு வாயில்லையா, திரும்ப பேச வேண்டியது தான இப்புடியா அமைதியா இருப்ப???”

“என்னக்கா பேசுறது, வந்த நாளே இப்புடி சண்டையா??”

“க்கும் இது எல்லாம் ஒரு சண்டையா, இப்போ வெளிய அனல் பறக்க ஒரு சண்டை காட்சி நடக்கும் பாரு. நீ போசாததுக்கு சேர்த்து வச்சு உன் புருஷன் பேசுவான். அவன்கிட்ட யாராவது வாய் குடுத்தா சும்மா விட்டுடுவானா என்ன??” என சீதா சிரிக்க,

‘மழைகாலங்களில், கதிர் அவள் வீட்டில் தங்கியிருந்த நாட்களில் அவனின் பேச்சை உணர்ந்து நொந்தவளாயிற்றே அவளிற்கா தெரியாது’

“ஆமாக்கா உங்க கொழுந்தனுக்கு வாய் கொஞ்சம் இல்லை ரொம்பவே ஜாஸ்தி தான்” என முல்லையும் சிரிப்புடன் கூற,

“பார்றா இரு இதை மொதல்ல அவன்கிட்ட சொல்லுறேன். உன் பொண்டாட்டி அவார்ட் கொடுத்துடுருக்கான்னு”

“சொல்லுங்க எனக்கு என்ன பயமா” என முதலில் கெத்தாக கூறியவள் பின் அவனின் பேச்சு ஞாபகம் வர,

“அய்யோ வேண்டாம் கா, அப்புடி எல்லாம் சொல்லிடாதீங்க. ரொம்ப பேசுவாரு” என அவள் பாவமாக கூறிட,

“ஹா ஹா ஹா சரி சரி போய் குளிச்சிட்டு வா ” என்றவாறு அத்வியை வாங்கி கொண்டவள்,

“அத்வி கண்ணா வெளிய ஒரு டிஷ்யூம் டிஷ்யூம் நடக்குது போகலாம்” என்க,

சண்டை என்றதில் பயந்து விட்டவன் “நோ! நோ! பெய்யம்மா…டிஷ்யூம்…நோ..நோ” என கைகளை விரித்து அலற,

“அடேய் நீ என்னடா சண்டைக்கு இப்புடி பயப்படுற, உன் அப்பன் பேச்சுலயே வாடான்னு எல்லாரையும் சண்டைக்கு இழுப்பான்.

சண்டைக்கு வர்றவன் கூட அவன் பேச்சை கேட்டா தெறிச்சு ஓடிடுவானுங்க.

சண்டை எல்லாம் அவனுக்கு டெய்லி குடிக்கிற எனர்ஜி டிரிங் மாதிரி, அவன் பைய சண்டைக்கு பயப்படலாமா???

மொதல்ல உன்னை டிரைன் பண்ணனும்டா” என்றாவறு அவள் வெளியே செல்ல சீதாவின் பேச்சில் அடக்கப்பட்ட புன்னகை முல்லையிடம்.

அவள் சென்ற நேரம் இன்னும் சண்டை தூள் பறந்து கொண்டிருந்தது. நேராக சென்று அத்விதனை கதிரின் மடியில் அமர வைத்தவள் அவனிடம்,

“உன் பையன் சண்டையின்னா அலறுறான் என்னன்னு கவனி” என்று விட்டு செல்ல,

“அவன் அவ அம்மா மாதிரி இல்லையாடா பட்டு” என

அவனை கொஞ்சிட,

 

அதுவரை அவனிற்கு பதிலடி கொடுக்கும் வழி தெரியாமல் திணறிய ஸ்ருதிக்கு அத்விதனை கண்டதும் காரணம் பிடிபட்டு விட,

“ஏன் அத்தை கல்யாணம் பண்ணனும்னு தான் முடிவு எடுத்தீங்களே. யாராவது விதவை , குழந்தை இல்லாத பொண்ணா பாத்துருக்க கூடாதா?? இப்புடியா பாக்கணும்??

கல்யாணத்துக்கு வந்தவங்க எல்லாம், பண்ணுற இரண்டாங் கல்யாணத்தையாவது ஒழுங்கா பண்ணா கூடாதான்னு, கேவலமா பாத்து சொல்லிட்டு போறாங்க. தலை காட்ட முடியல” என அடுத்த ஒரண்டையை இழுக்க,

‘இவள் அடங்கவே மாட்டாளா??’ என்பது தான் அனைவரின் எண்ணமும்.

“ச்சுச்சு, அடடே பல மாதங்களுக்கு முன்னாடி நடந்த அவங்க தங்கச்சி இரண்டாவது கல்யாணத்துல “இப்புடி கல்யாணமாகி குழந்தை இருக்குறவன அவன் பொண்டாட்டி பிள்ளைகிட்ட இருந்து பிரிச்சு கல்யாணம் பண்ணுறியோ ச்சீன்னு” மூஞ்சி மேல் காறி துப்புனாங்களாம்.

அதை விட என்‌ கல்யாணத்துல நடந்தது கம்மி தான்..”என நக்கலாக கதிர் உரைக்க,

“உனக்கு ரொம்ப தெரியுமா அப்புடி உன்கிட்ட வந்து சென்னாங்களா டிவோர்ஸ் வாங்கிட்டு தான் அவ கல்யாணம் பண்ணா ” என அவள் கொந்தளிக்க,

“உனக்கு மட்டும் தெரியுமாடி உன்கிட்டு வந்து சொன்னாங்களா” என பிரகாஷ் இடை புக,

“அது….அது….வந்து நான் கேட்டேன் அவுங்க பேசுனத”

“வாயை தெரிந்தாலே பொய்யி தான், நீ அங்க இருந்தது அரை மணி நேரம் கூட இல்லை. அதுலயும் ஒத்த குரங்கா தனியா தான் நின்னுட்டு இருந்த, இதுல பேசுனாங்களாம் மேடம் கேட்டாங்களாம்??” என பிரகாஷ் வார,

“ச்சு..அண்ணிகிட்ட இருக்குற புது டெலண்ட் ஒரு கிலோ மீட்டர் அங்கிட்டு யாரு என்ன பேசினாலும் தெளிவா கேட்டிடும். அடுத்தவங்க இதழ் அசைவை வச்சே என்ன பேசுறாங்கன்னு கண்டுபிடிச்சிடுவாங்கன்னு தெரியாதா உனக்கு???” என ராகேஷீம் இணைந்து கொள்ள

அடுத்து ஏதோ பேச முயன்றவளை,

“ஏய்…போதும் போடி இதுவரைக்கும் உன்னை பேச விட்டு டைம்பாஸாக்கிட்டு இருந்தோம்.இன்னைக்கு உன் கோட்டா முடிஞ்சது உன் திருவாயை சாத்திக்கிட்டு உள்ள போ இல்லையின்னா நைட்டு சிக்கன் கடிக்கிறதுக்கு பல்லு இருக்காது” என பிரகாஷ் மிரட்டிட,

எதுவும் செய்ய முடியாதா ஆத்திரத்தில் அறைக்கு சென்று விட்டாள் ஸ்ருதி.

அவள் சென்ற சிறிது நேரத்தில் எல்லாம் தேன்முல்லை வந்து விட மீண்டும் ஒருமுறை விளக்கேற்றி இறைவனை வணங்க உடன் அத்வியும் கதிரும்.

பின் ஹாலில் அமர்ந்திருந்தவர்களிடம் சிறிது நேரம் அமரந்து பேசியவளுக்கு அதற்கு மேல் முடியாமல் நெளிய‌ ஆரம்பிக்க,

“அம்மாவும், அண்ணியும் கிட்சன்ல இருக்காங்க நீ போய் ஹெல்ப் பண்ணு முல்லை” என கதிர் அவளின் நிலையறிந்து உரைக்க,

விட்டால் போதும் என ஓடிவிட்டாள் முல்லை.

ஞானமும், சீதாவும் இரவு சமையலறைக்கு தயார் செய்து கொண்டிருக்க,

“நானும் உங்க கூட்டணில ஐக்கியமாகிக்கவா ” என முல்லை கேட்டிட,

“அடடா இதுக்கு கூட்டணி தலைவிய கேட்கணுமே என்ன அத்தை சேர்த்துக்கலாமா” என சீதா ஞானத்தை கேலி பேச,

“வாயாடி அமைதியா பேசு கதிர் காதுல விழுந்துச்சு. என் பொண்டாட்டிக்கு சீட் இல்லையான்னு வந்து மேடை போட்டு பேசாத குறையா பேசுவான்”‌என்றவர்,

“இந்த காயை எல்லாம் நறுக்கி கொடு முல்லை” என அவளிடம் காய்கறிகளை கொடுத்தவர் மீண்டும் சமையலில் ஈடுபட,

அவர் பேச்சில் மற்ற இருவரும் பக்கென்று‌ சிரித்து விட ஞானத்திற்கும் சிரிப்பு வந்து விட்டது.

அதன் பின் அந்த கூட்டணியில் ஒரே சிரிப்பும் கொண்டாட்டமும் தான்.

இவர்களின் சிரிப்பு சத்தம் வெளியே இருந்த ஆண்களின் முகத்திலும் புனகையை வரவழைத்தன.

நேரம் கடந்து விட தன் பிள்ளைகளுக்கு இரவு உணவினை எடுக்க வந்த ஸ்ருதிக்கு இவர்களின்‌ கொண்டாட்டம் நாரசமாக இருந்தது.

“என்ன அத்தை இன்னும் டிபன் ரெடி பண்ணாமா பேசி சிரிச்சிட்டு இருக்கீங்க என் புள்ளைங்க பசியில கிடந்து தவிக்குதுங்க” என‌ அவள் முதலாளி போல் அதட்டலிட,

அதற்கு சிறிதும் அலட்டி கொள்ளாத ஞானம் ஒரு வார்த்தையும் பேசாது சைகையால் பாத்திரங்கள் அடுக்கி வைத்திருந்த இடத்தை காட்டிட,

‘ஓஹ் பேச கூட முடியாதாம்மா எல்லாம் கொழுப்பு புதுசா வந்துருக்காள அவ கொடுத்த திமிரு’ என ஞானத்தின் அலட்சியத்தில் மனதில் கொந்தளித்தவள்,

பாத்திரத்தை திறந்து உணவினை எடுக்க அதுவரை அவளின் பார்வை எல்லாம் முல்லை மேல் தான்…

‘தன்னை பார்ப்பாள், சிரிப்பாள், பேச முயலுவாள் அப்போது மூஞ்சியில் அடித்தாற் போல் முகத்தை திருப்பி கொள்ள வேண்டும்’ என அவள் நினைத்திருக்க ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பளிக்காது…..

‘நீயெல்லாம் ஒரு ஆளே இல்லை” என்ற ரீதியில் தான் முல்லை அவளின் முகத்தை கூட பார்க்காது அவள் இருந்த திசை பக்கம் கூட திரும்பாது அமர்ந்திருந்தாள்.

இரவு உணவிற்கு பின் அனைவரும் உறங்க சென்றிட முல்லையிடம் வந்த ஞானம்மாள் “முல்லை…உன் மனசறிச்சு தான் நாங்க உனக்கு சங்கடம் தர்ற மாதிரி எதுவும் பண்ணலை…நீங்க ரெண்டு பேரும் குழந்தைங்க இல்லை. ஒரு குழந்தைக்கே அம்மா அப்பா உங்க வாழ்க்கையில தலையிட யாருக்கும் உரிமை இல்லை…..இது உங்க வாழ்க்கை நீங்க தான் முடிவு பண்ணிக்கணும். எதையும் போட்டு குழப்பிக்காம சந்தோஷமா போ உன் மனசு கஷ்டப்பட எப்பவுமே கதிர் விடமாட்டான்” என கூறி ஆசிர்வதிக்க

ஞானத்தின் ஆறுதல் வார்த்தைகளில் தெம்பாக உணர்ந்தவள் “சரித்தை” என்றவள் மனநிம்மதியுடனே கதிரின் அறைக்கு சென்றாள்.

ஞானம் சொன்னதை போலவே‌ எந்த வித சங்கடங்களும் நேராமல் கதிர் அவளை பார்த்துக் கொள்ள நிம்மதியுடனே கண்மூடி உறங்க இதோ ஆனந்த துயிலில் இருக்கிறாள்.

முல்லைக்கு சங்கடம் கொடுக்க கூடாது என எண்ணி வேலை இருப்பது போல் லேப்டாப்பை நொண்டி கொண்டிருந்தவன் அவள் உறக்கத்தில் ஆழ்ந்ததும் அவளை பார்த்த வண்ணம் இருக்கிறான்.

சுவரோரமாய் அத்வியை விட்டு அவனை அணைத்தவாறு முல்லை உறங்கியிருக்க, அழகிய கவிதையாய் இருந்தது.

அந்த கவிதையில் அவனிற்கும் இணைய ஆவல் வர எதுவும் யோசிக்காது அவர்கள் அருகில் சென்று முல்லையின் அருகே படுத்தவன் அவளையும் அத்வியையும் சேர்த்து அணைத்து கொள்ள,

அவனின் தீண்டலில் விழிப்புற்ற முல்லை அவன் கைகள் அவளை தாண்டி அத்வியின் கன்னம் வருடுவதை கண்டு,

‘ஒருவேளை குழந்தையை தேடுகிறாரோ’ என நினைத்து,

“அத்வி கூட படுக்கணுமாங்க நான் வேணா அவனை இந்த பக்கம் படுக்க வைக்காவா??” என வினவ,

“என்னை பாத்தா அத்விய மட்டும் தேடுற மாதிரி தெரியுதா முல்லை??” என பதில் கேள்வி எழுப்ப,

“இல்லை…..” எ‌ன பேச வந்தவளை இடைமறித்தவன்,

“ப்ச், முல்லை ப்ளீஸ் பேசாத என் மனசு அத்விய மட்டும் இல்லை உன்னையும் சேர்த்து தான் தேடுது.இப்புடி நம்ம ஒரு பேமிலியா இருக்குற பீல்ல அனுபவிக்க விடேன் எனக்கு உங்க ரெண்டு பேரையுமே உணரணும் ப்ளீஸ்”என்றிட அவன் மூச்சு காற்று, தாராளமாகவே முல்லையின் முதுகை ஆக்ரமித்து கூசி சிலிர்த்ததில் தடுமாறியவள், அவனின் ப்ளீசில் அடுத்து பேசாது அவளும் அந்த சூழலை அனுபவிக்க முயன்று விழி மூடினாள்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
7
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. ஆள் மயக்கி கதிர் பேசியே மயக்கிருவான். இந்த வாய் மட்டுமில்லனா😜 உன்னோட உறவும் உணர்வுகளும் ரொம்ப அழகா இருக்கு கதிர். முல்லையோட உனக்கு இருக்கிற காதல் கதையை கேட்டே ஆகணும்.