Loading

காதல் – 32

                     அஸ்வதி மற்றும் விஹான் தங்களின் காதல்  வாழ்வில் சிறகடித்து வானம் தாண்டி பறந்து கொண்டிருந்தனர் அப்பொழுது  விஹான் தன்னவளிடம் தனக்கொரு ஆசை இருக்கிறது அதை நிறைவேற்றி வைப்பாயா?

என்று கேட்க மறு யோசனை இன்றி அவளின் தலை தானாக ஆடியது……

என்னோட ஆசைய நிறைவேத்தி வைப்பியா அஸ்வதி?

சொல்லுங்க விஹான் என்ன ஆசை அது?

இப்படி இவ்வளவு உயரத்துல இருந்து உனக்கு நான் கிஸ் கொடுக்கணும்ன்னு ஆசைப்படுறேன் , கிஸ் பண்ணிக்கிட்டும்மா ? என்று அவன் தன்னுடைய காதலியிடம் அனுமதி கேட்டு கொண்டிருந்தான்……

அவன் நினைத்திருந்தால் அவளைக் கேட்காமலே அவளை முத்தமிட்டுருக்கலாம் , அஸ்வதி அவனிடமும்,  அவனின் அருகாமையிலும் எப்பொழுதும் உருகி கரைந்து தான் இருப்பாள் அதை பயன்படுத்திக் கொண்டு அவன் அவளை முத்தமிட்டு இருக்கலாம் ஆனால் அவன் அதை செய்யவில்லை அவனின் அந்த கண்ணியமான பேச்சு அவளை கவர , அஸ்வதி விஹானின் முகத்தை தன்னுடைய  இரு கைகளில் ஏந்தி கொண்டு அவனின் இதழில் தன்னுடைய இதழை பொருத்தினாள் நீண்ட நேரம் நடந்த அந்த இதழ் முத்தத்தில் இருவரும் வானத்தில் பறந்து கொண்டிருந்தது போல காதல் வானிலும் பறந்து கொண்டிருந்தனர்……

விஹானுக்கு அந்த  இதழ் முத்தத்திலிருந்து விடுபட மனதே இல்லை ஆனால் தன்னுடைய காதலிக்கு மூச்சு விட வேண்டும் என்று எண்ணி அவளை அந்த இதழ் முத்தத்தில் இருந்து விடுவித்தான்…..

அஸ்வதிக்கு வெட்கம் மேலிட அவனின் மார்பினில் முகம் புதைத்து கொண்டாள்……

விஹான் அவளின் முகத்தை நிமிர்த்தி பார்த்தான் ஸ்ட்ராபெரி நிறத்தில் அவளின் இரு கன்னங்களும் சிவந்து போயிருந்தது…….

அஸ்வி என்று அவன் அவளின் காதோரம் காதலாகவும் மோகமாகவும் அழைக்க அதில்  அவளின் காது மடல்கள் சிவக்க அவள் அவனின் கண்களை பார்த்தாள்…..

அஸ்வதி இன்னிக்கி நான் ரொம்ப சந்தோஷமா இருக்குறேன் அதுக்கு நீ தான் காரணம் என்று அவன் அவளின் நெற்றியில் ஆழ்ந்த முத்தம் ஒன்றை பதித்தான்……

நீங்க சந்தோஷமா இருக்க நா என்ன வேணாலும் செய்வேன் விஹான்……

அவளின் பதிலைக் கேட்டு அவனுக்கு சந்தோஷம்  தாளவில்லை இருவரும் காதலாகவும் சந்தோஷமாகவும் வானில் பறந்து கொண்டிருந்தனர்……..

அஸ்வதி இப்போ அங்க தூரத்துல ஒரு மலை தெரியுதா?

ஆமா தெரியுது விஹான்…….

அந்த மலையில தான் நம்ம லேண்ட் ஆக போறோம் சோ என்ன டைட்டா பிடிச்சுக்கோ……

சரி என்று அவளும் அவனை இறுக்கமாக கட்டி அணைத்துக் கொண்டாள்……

விஹான்  ஒரு கையில் தன் காதலியை இறுக்கமாக பிடித்துக் கொண்டு மறுக்கையில் பாராச்சூட்டின் கயிற்றை இழுக்கவும் ஒரு பெரிய பலூன் போன்ற ஒன்று பறந்து இருவரையும் அந்த மலைக்கு அருகில் தரையிறங்க வைத்தது …….

அந்த பாராசூட் தரையில் இருவரையும் இறங்க வைத்தது …

சிறிது தூரம் விஹான் அஸ்வதியை தூக்கிக்கொண்டு மெதுவாக பாராசூட்டின்  வேகம் நிற்கும் வரை ஓடினான்…….

பிறகு இருவரும் தாங்கள் வந்த  ரோப் காரில் ஏறி கீழே பயணம் செய்து கொண்டிருந்தனர்……

அஸ்வதி இந்த பேரா கிளைடிங் எப்படி இருந்தது?

விஹான் உங்க கூட இருக்குற ஒவ்வொரு நொடியும் எனக்கு ரொம்ப ரொம்ப புதுசா, சந்தோஷமா ,ஜாலியா இருக்கும் அந்த நிமிஷம் எல்லாம்  அப்படியே உறஞ்சி போயிடாதான்னு தோணும் …..

அந்த நிமிஷங்கள் எல்லாம் எனக்கு பொக்கிஷம் மாதிரி அதுவும் இந்த பேரா கிளைடிங் என்னோட வாழ்க்கையில நா மறக்கவே மாட்டேன் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் என்று அஸ்வதி அவனை இறுக்கமாக கட்டி அணைத்துக் கொண்டாள்…….

நீ சந்தோஷமா இருக்க நானும் என்ன வேணாலும் பண்ணுவேன் அஸ்வதி என்று அவனும் அவளை இறுக்கமாக கட்டி அணைத்துக் கொண்டான்…..

இருவரும் அந்த ரோப்  காரில் இருந்து கீழே இறங்கி விஹானின் பைக் அருகே சென்றனர்……..

இருவரும் வானில் பறக்க போகிறோம் என்று விஹான் தங்கள் இருவரின் போனையும் தன்னுடைய பைக் பெட்டியில் போட்டு வைத்திருந்தான் அதை இப்பொழுது எடுத்துப் பார்த்தான் அதில் தன்னுடைய குடும்பத்தினர் பலமுறை அவனுக்கு அழைத்திருந்தனர்….

அஸ்வதியும் தன்னுடைய போனை எடுத்துப் பார்த்தாள் அஸ்வதிக்கும் அவர்கள் பலமுறை அழைத்திருந்தனர்……

விஹான் நம்ம வீட்ல இருந்து நமக்கு ஏன் இவ்வளவு கால் பண்ணி இருக்குறாங்க எதுவும் அர்ஜென்ட்டா இருக்குமோ என்று அஸ்வதி விஹானாவிற்கு கால் செய்தாள்…….

ஒரே ரிங்கில் விஹானா  அஸ்வதியின் அழைப்பை எடுத்து விட்டாள்…….

ஹலோ விஹானா என்ன ஆச்சு?

ஏன் இவ்ளோ கால் பண்ணி இருக்குற? எதுவும் பிரச்சனையா?

அஸ்வதி உன்னோட அம்மாவுக்கும் தங்கச்சிக்கும் கொதிக்க கொதிக்க இருந்த சுடுதண்ணி காலுல கொட்டிடுச்சு , அதான் அவங்க ரெண்டு பேரையும் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிட்டு உட்கார்ந்து இருக்குறோம் என்று அவள் கூறவும் அஸ்வதிக்கு ஒன்றும் புரியவில்லை……

அஸ்வதியின் முக மாற்றங்களை வைத்தே ஏதோ சரி இல்லை என்று புரிந்து கொண்ட விஹான் அஸ்வதியை தன் நெஞ்சினில் சாய்த்து கொண்டு அவளின் கையில் இருந்த போனை வாங்கி அவன் பேசினான் அவனிடமும் விஹானா நடந்தவற்றை கூறினாள்……

பிறகு அஸ்வதி மற்றும் விஹான் வேகமாக மருத்துவமனைக்கு விரைந்தனர்………

அவர்கள் இருவரும் மருத்துவமனையை அடைந்து விட்டனர்…….

விஹான் அஸ்வதியின் கைகளைப் பிடித்துக் கொண்டு மருத்துவமனைக்குள் வேகமாக நடந்து கொண்டிருந்தான்……

அஸ்வதி சிறிது தூரம் நடந்து விட்டு அப்படியே நின்று விட்டாள்…..

என்னாச்சு அஸ்வதி ஏன் இங்கேயே நின்னுட்ட?

விஹான் நா உள்ள வரல,  எனக்கு பயமா இருக்கு அவங்கள பாக்க, அவங்க வலியில துடிக்கிறத என்னால பாக்க முடியாது நான் இங்கேயே உட்கார்ந்து இருக்குறேன் என்று அவள் அவனை கட்டி அணைத்து கொண்டு அழுதாள்……

தன்னை கொல்ல பார்த்தவர்களிடமும் கருணை காட்டும் தன் காதலியை பார்த்து விஹானுக்கு பெருமையாக இருந்தது……

அஸ்வதி இப்படி இங்க ஓரமா  உட்காரு வா என்று அந்த மருத்துவமனையில் போடப்பட்டிருந்த நாற்காலியில் இருவரும் அமர்ந்தனர்……

விஹான் அஸ்வதியின் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டான்…..

அஸ்வதி என்னை பாரு என்று அவளின் அழுத கண்களை துடைத்து விட்டு அவளின் முகத்தை பார்த்தவாறே இந்த உலகத்துல நம்ம நல்லது செஞ்சாலும் சரி கெட்டது செஞ்சாலும் சரி அது ரெண்டு மடங்கா திரும்பி நம்ம கிட்ட தான் வரும் அதனால நல்லது மட்டும் தான் நம்ம செய்யணும்…..    இப்போ ஒருத்தங்களுக்கு நல்லது செய்ய முடியலனாலும் கெட்டது செஞ்சிடவே கூடாது , நம்ம செஞ்சு கெட்டது அப்படியே திரும்பி டபுள் மடங்கா நம்ம கிட்ட தான் வரும் அதுதான் இப்போ உன்னோட அம்மாவுக்கும் தங்கச்சிக்கும் நடந்துருக்கு இதனால நீ அழுக கூடாது அவங்களுக்கு கால் சீக்கிரம் குணமாயிடும் என்று விஹான்  அஸ்வதியை தன் நெஞ்சினில் சாய்த்துக் கொண்டான்……..

விஹான் வாங்க நம்ம  அவங்கள பாத்துட்டு வருவோம் என்று அவள் அவனின் கைகளை பிடித்து கொண்டு சுலோச்சனா மற்றும் அனந்தி அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கு சென்றனர்…….

இருவரின் கால்களிலும் சுடு தண்ணீர் கொட்டி இரண்டு கால்களும் வெந்து தோல் உரிந்து பார்க்கவே பயங்கரமாக இருந்தது அவர்களின் கால்களை பார்த்து அஸ்வதி பயந்துவிட்டாள்……

அவள் பயம் கொள்ளவும் விஹான் அஸ்வதியை அந்த அறைக்கு வெளியில் அழைத்துக்கொண்டு சென்றான்……

விஹான்….

விஹான்….

விஹான்…..

அவங்க கால்….

அவங்க கால்….

அது…..

அய்யோ எப்படி இருக்கு….

என்று அவள் பயத்தில் அவனை கட்டி அணைத்து கொண்டு அழுதாள்…..

விஹான் அவங்களுக்கு கால் ரொம்ப எரியும்ல?

தோல் எல்லாம் வெளிய உறிஞ்சி இருக்கு அய்யோ என்று அவள் அவனை கட்டி அணைத்து கொண்டு அழுது கொண்டே இருந்தாள்…….

சரிடா அஸ்வி,

அவங்களுக்கு காயம் சீக்கிரம் குணம் ஆகிடும் , இப்போ நீ அழுக கூடாது என்று அவன் அவளின் கண்களை துடைத்து விட்டான்…….

நீண்ட நேரம் அழுதமையால் அஸ்வதிக்கு விசீங் வந்து விட்டது ,  விஹான் அஸ்வதியை காற்றோட்டமான   இடத்திற்கு தூக்கி கொண்டு சென்றான் ……

அவள் கைகளையும் கால்களையும் நன்றாக சூடு பறக்க தேய்த்து விட்டு அவளின் வாய் மீது வாய் வைத்து தன்னுடைய மூச்சு காற்றை அவளுக்கு கொடுத்து அவளை எழுப்பினான்……

சிறிது நேரத்தில் அவள் கண் விழித்து பார்க்கும்போது அவள் அருகில் விஹான் அவளின் கைகளை பிடித்து கொண்டே அமர்ந்து கொண்டு இருந்தான்…….

அஸ்வதி உனக்கு இப்போ பரவாயில்லையா?

நீங்க என்கூட இருக்குற வரை எனக்கு ஒன்னும் ஆகாது என்று அவள் அவனை கட்டி அணைத்து கொண்டாள்…….

செல்லம்மா அழுகாதடா உன்னோட கண்ணீர் விலைமதிப்பற்றது அந்த விலைமதிப்பற்ற கண்ணீருக்கு அவங்க எல்லாம் தகுதியானவங்களே இல்லை உன்னோட கண்ணீர அவர்களுக்காக வேஸ்ட் பண்ணாதம்மா என்று  விஹான் அஸ்வதியை தன்  நெஞ்சினில் சாய்த்து கொண்டு இறுக்கமாக அணைத்துக் கொண்டான்……

விஹான் எனக்கு இங்க இருக்க பிடிக்கல என்ன வீட்டுக்கு கூட்டிட்டு போங்க என்று அவள் கூற…..

விஹான் தன் பெற்றோர், தங்கை மற்றும் அஸ்வதியின் அப்பா தேவரஜ்ஜிடமும் கூறி விட்டு அவளை வீட்டுக்கு அழைத்து சென்றான்…..

இருவரும் பைக்கில் பயணித்தவாறு தங்களின் வீட்டை அடைந்தனர்…….

இருவரும் தங்களின் வீட்டிற்குள் சென்றனர்……

அஸ்வதி சோகமாக ஹாலில் அமர்ந்து விட்டாள்…..

விஹான் அவள் அருகில் அமர்ந்தான் , அஸ்வதி  என்று மென்மையாக அவளை அழைத்தான்…..

அஸ்வதி அவனை நிமிர்ந்து பார்த்தாள்….

நா அன்னைக்கு உன்கிட்ட என்ன சொன்னேன்னு ஞாபகம் இருக்கா?

என்ன சொன்னீங்க விஹான்?

அஸ்வதி அவ்வாறு அப்பாவியாக கேட்கவும் விஹான் சிரித்து விட்டான்…..

என்னோட செல்லக்குட்டிக்கு எல்லாம் மறந்து போச்சா என்று அவளின் நெற்றியில் மென்மையாக முட்டினான்….

அன்னைக்கு நா உன்கிட்ட சுலோச்சனா அனந்தி ரெண்டு பேர நினைச்சு நீ அழுக கூடாதுன்னு சொன்னேன்ல அது மறந்து போச்சா?

மறந்து போகலையே அது எல்லாம் நல்லா ஞாபகம் இருக்கே?

அப்புறம் ஏன் அழுகுற?

தெரியல விஹான்…..

எனக்கு தெரியுமே…..

என்ன தெரியும் உங்களுக்கு சொல்லுங்க பாப்போம் என்று அவள் அவனின் தோள்களில் சாய்ந்து கொண்டே கேட்டாள்……

என்னோட அஸ்வதிக்கு யாரையும் காயப்படுத்த தெரியாது அப்படி யாராவது காயப்பட்டாலும் அவங்கள பாத்து  வருத்தப்படுவா என்னோட செல்ல காதலி என்று அவன் அவளின் கன்னத்தில் முத்தமிட்டான்……

அவன் கூறியதைக் கேட்டு அஸ்வதி சிரித்து விட்டாள்…….

விஹான் பசிக்குது…..

அச்சோ என்னோட செல்ல குட்டிக்கு பசிக்குதா ?

வா  உனக்கு நா ஏதாவது சாப்பிட செஞ்சு தரேன் என்று அவன் அவளை அழைத்து கொண்டு கிச்சனுக்கு சென்றான்……

அஸ்வதியை தூக்கி கிச்சன் மேடையில் அமர வைத்துவிட்டு……

இன்னைக்கு உனக்கு நான் காஷ்மீர் ஃபேமஸ் ஃபுட்ஸ் செஞ்சு தரப் போறேன்….

என்று அவன் காஷ்மீரின் பிரபலமான உணவுகளை தன் காதலிக்காக தயார் செய்து கொண்டு இருந்தான்……

அவன் சமைப்பதை அஸ்வதி வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தாள், பிறகு அவள் விஹானை பின்னால் இருந்து கட்டி அணைத்து கொண்டு அவன் சமைப்பதை பார்த்து கொண்டு இருந்தாள்……

அவர்களின் காதல் காட்சிகள் தொடருமா?

பொறுத்திருந்து பார்ப்போம்……

தொடரும்…..

உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்……….

❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்