Loading

அழகியே 31

 

 

 

ஒருவழியாய் வரவேற்பு முடிய, நண்பர்களுடன் டீஜே பாட்டு ஓடி கொண்டிருக்க, தேவ் நண்பர்களில் ஒருவன், “ஹேய் கைஸ் இது நார்மலா நடக்குறதுதான. நம்ம ஒண்ணு பண்ணுவோம். இங்க நிறைய கியூட் பேர்ஸ் இருக்காங்க. இப்போ அவங்கள ஒவ்வொருத்தங்களா வந்து அவங்களுக்கு பிடிச்ச பாட்டை பாடலாம். லெட்ஸ் கோ என்ஜோய்” என்று கத்த அதுவரையுமே அவர்களின் காதை அடைக்கும் பாட்டுக்கு பதில் இதுவே நல்ல யோசனை என்று பட, ஒவ்வொருவராய் பாடி சென்றனர்.

 

 

தேவ் எழுந்தவன், “இப்போ இங்க நம்ம வேதாவும் செழியனும் பாட போறாங்க” என்று கூற, கூட்டமே ஹேய் என்று ஆரவாரமாக கத்தியது.

 

 

 

செழியனோ அவனை கண்களை விரித்து பார்த்தவன், “கொன்னுடுவேன் பாத்துக்கோ, நான்லாம் பாட மாட்டேன்” என்று கூற, வேதாவோ, “எனக்கு பாடலாம் வராது. நான் பாடுன இங்க இருக்கவங்கல்லாம் எழுந்து ஓடிருவாங்க. உனக்கு நாளைக்கு கல்யாணம் நடக்கணும்ல” என்று மிரட்டலாக கேட்டாள்.

 

 

தேவோ, “அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. மரியாதையா போய் பாடுங்க. நீங்க எப்படி பாடுவீங்கன்னு எனக்கு தெரியாதா யாருகிட்ட” என்று கூற, தன்வியோ, “ஹான் அழகி நீயும் சூப்பரா பாடுவ. எனக்கும் தெரியும் போ” என்று எழுப்பியவள் கைகளை தட்டிக்கொண்டே, “வேதா, வேதா, செழியன்” என்று கத்த, மற்றவர்களும் அவர்களுடன் இணைந்து கத்த, செழியனோ, “உங்க தலைவிதியை யாரால மாத்த முடியும். வா தங்கமே” என்று வேதாவை எழுப்பியவன் அவளை அழைத்து கொண்டு மேடைக்கு செல்ல, இசை வாசிப்பவரிடம் சென்று பாடலை கூற, அவரும் அதற்கு தகுந்தார் போல வாசிக்க,

 

 

வேதா தான் முதலில் ஆரம்பித்தாள்.

 

வானே வானே வானே

நான் உன் மேகம் தானே

வானே வானே வானே

நான் உன் மேகம் தானே

 

என் அருகிலே கண் அருகிலே நீ வேண்டுமே

மண் அடியிலும் உன் அருகிலே நான் வேண்டுமே

 

சொல்லில் அடங்காத நேசமும்

என்ன முடியாத ஆசையும்

உன்னிடத்தில் தோன்றுதே

 

நீதானே பொஞ்சாதி

நானே உன் சரிபாதி

நீதானே பொஞ்சாதி

நானே உன் சரிபாதி

 

வானே வானே வானே

நான் உன் மேகம் தானே

 

இனியவளே உனது இரு விழி முன்

பழரச துவளை விழுந்த எறும்பு நிலை

எனது நிலை விலக விருப்பம் இல்லையே பூவே

 

அதிசயனே பிறந்து பல வருடம்

 

 

அறிந்தவை மறந்தவை எனது நினைவில் இன்று

உனது முகம் தவிர எதுவும் இல்லையே அன்பே

 

 

வேறு யாரும் வாழாத பெரு வாழ்வு இது

நினைத்தாலே மனம் இங்கும் மழை தூவுது

 

மழலையின் வாசம் போதுமே

தரையினில் வானம் போதுமே

ஒரு கனமே உன்னை பிரிந்தால்

உயிர் மலர் கற்று போகுமே

 

நீதானே பொஞ்சாதி

நானே உன் சரிபாதி

நீதானே பொஞ்சாதி

நானே உன் சரிபாதி

 

வானே வானே வானே

நான் உன் மேகம் தானே

 

என் அருகிலே கண் அருகிலே நீ வேண்டுமே

மண் அடியிலும் உன் அருகிலே நான் வேண்டுமே

 

சொல்ல முடியாத காதலும்

சொல்லில் அடங்காத நேசமும்

என்ன முடியாத ஆசையும்

உன்னிடத்தில் தோன்றுதே

 

நீதானே பொஞ்சாதி

நானே உன் சரிபாதி

நீதானே பொஞ்சாதி

நானே உன் சரிபாதி

 

வானே…!

 

 

அவர்கள் உணர்ந்து உருக்கமாய் பாடி முடிக்க, அனைவரும் கை தட்டி மகிழ, குடும்பத்தினரோ வியப்புடன் அவர்களை பார்த்து கொண்டிருந்தனர். இன்னும் எத்தனை பரிமாணம்தான் அவர்களில் உள்ளதோ என்று.

 

தேவ், “பாட தெரியாது தெரியாதுன்னு பாட்டுலையே வாழ்ந்துட்டிங்க போல” கிண்டல் செய்ய சிவந்து போயினர் இருவரும்.

 

 

மறுநாள் காலை சுப முஹூர்த்த வேளையில் தேவ் அனன்யாவின் கழுத்தில் தாலி கட்டி தன்னவளாய் மாற்றிக் கொண்டான்.

 

 

அனைவரும் பரிசு வழங்கி ஆசீர்வாதம் செய்து கொண்டிருக்க வேதாவின், “ஹேய் திவ்யாக்கா வாங்க வாங்க” என்று குரல் கேட்டு அதிரன் திவ்யா என்ற பெயரில் அதிர்ந்து போய் திரும்ப, அவன் யார் என எண்ணி அதிர்ந்து திரும்பினானோ அவனின் எண்ணத்தின் நாயகியே அங்கு நின்று இருந்தாள் கையில் ஐந்து வயது குழந்தையுடன்.

 

 

அவளை அழைத்து வந்தா வேதா தாமரையிடம், “அம்மா இவங்க திவ்யாக்கா என்னோட ஆபீஸ்ல ஒர்க் பன்றாங்க. அனு அக்காவோட கிளோஸ் பிரண்ட். இது இவங்களோட குட்டி பொண்ணு அதிதி” என்று அறிமுகப்படுத்த, அவளை பார்த்து முகம் மலர சிரித்த தாமரையோ, “வாம்மா நல்லாருக்கியா” என்று நலம் விசாரித்தவர் அவளின் கையில் இருந்த குழந்தையின் முகத்தை வருடினார்.

 

 

“அழகா இருக்கா என்ன வயச்சாச்சு” என்று கேட்க, அவளோ, “நாலு வயசாச்சு ஆண்ட்டி, சரி நாங்க அனுவையும் தேவ்வையும் பார்த்துட்டு வரோம்” என்று கூறிவிட்டு செல்ல, அதை பார்த்து கொண்டிருந்த மீனாட்சியோ, “என்ன சொல்றதுன்னே தெரியல. கழுத்துல தாலி இல்லை. கையில அஞ்சு வயசு குழந்தை. எப்படி வெக்கமே இல்லாம இந்தா மாதிரி பங்க்சனுக்கு வராங்கன்னு தெரியல. என்ன ஜென்மங்களோ கொடுமை” என்று தலையில் அடித்து கொண்டு கூற, அவர் பேசியதில் குடும்பத்தினர் மொத்தமும் அங்கே தான் இருக்க அனைவருமே திவ்யாவை திரும்பி பார்க்க, கழுத்தில் ஒற்றை செயின் மட்டுமே இருந்தது.

 

 

இதழ்களில் ஒரு இறுக்கம் மேடையில் இருந்து கீழே கொஞ்ச தூரம் நடந்தவள் சற்றும் எதிர்பாராமல் அதிரனை கண்டவள் கொஞ்சம் சுதாரித்து கொண்டு மகளின் கையை இறுக்கி பிடித்தவள் வேகமாக செல்ல, எதிரில் இருந்து வந்த தனுவோ, “ஹாய் திவி. ஹலோ அதி குட்டி எப்படி இருக்கீங்க. வாங்க சாப்பிட போவோம்” என்று அவளை அழைத்தாள்.

 

 

திவ்யாவோ, “இல்லடா டைம் ஆகிட்டு. பாப்பு ஸ்கூல் போகணும். எனக்கும் ஆபீஸ் இருக்கு. அனு கோச்சுப்பானு வந்தேன். இப்போவும் கிளம்பறேன்னு சொன்னதுக்கு திட்டுறா. கொஞ்ச நேரம் இங்க நின்றுந்தேன் என்னை விடவே மாட்டா” என்று கூற, செழியன் அங்கே வந்தான்.

 

 

“சரி நான் உன்னையும் பாப்பாவையும் ட்ரோப் பண்றேன் வா” என்று அழைக்க, அவளோ, “இல்லை செழியா நீ இங்கயே இரு. தேவ் உன்னை தேடுவான்” என்று கூற, “அதெல்லாம் ஒன்னும் தேடமாட்டான்” என்று கூறியவன் சுற்றிலும் பார்க்க, அவர்கள் தரை தளத்தில் இருந்தனர். அங்கே குடும்பத்தினர்கள் தவிர வேறு யாருமே இல்லை.

 

 

செழியன், “சரி திவ்யா உனக்கு ஆபீஸ் இருந்தா நீ கிளம்பு. அதி எங்களோட இருக்கட்டும். ஈவினிங் வந்து கூப்பிட்டு போ. LKGதான ஒருநாள் லீவு போட்டா ஒன்னும் ஆகாது. நான் வேணுமா ஸ்கூலுக்கு இன்போர்ம் பண்ணிடுறேன்” என்று கூற, அவளோ, “இல்ல செழியா, அதெல்லாம் சரிவராது” என்று கூறினாள்.

 

 

வேதாவோ, “ஏன் அக்கா உண்மை தெரிஞ்சிரும்னு பயப்படுறீங்களா? அப்படி தெரிஞ்சாலும் ஒன்னும் நடக்க போறதில்ல. இதைவிட எல்லா அவமானங்களையும் தாங்கிகிட்டவங்க தானே. இது உங்களை பெருசா பதிக்காதுனு எனக்கும் தெரியும். ப்ளீஸ் எல்லாத்தையும் இப்போவே பேசிடலாமே” என்று கூறினாள்.

 

 

திவ்யாவோ தன்னையே கண்களில் நீருடன் பார்த்து கொண்டிருந்த அதிரனை திரும்பி பார்த்தவள், “வேணாம் வேதா நான் கிளம்புறேன். முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும். உனக்கு இதெல்லாம் தேவை இல்லடா. நீ ஹாப்பியா இரு. கன்பியூஸ் பண்ணிக்காத” என்று கூறியவள் கிளம்ப முற்பட்டாள்.

 

வேதாவோ, “இதெல்லாம் என்னால ஆரம்பிச்சது. நான்தானே சரி பண்ணனும்” என்று கூற, திவ்யா வேதாவை திரும்பி அதிர்ச்சியுடன் பார்க்க, உணர்ச்சி வசப்பட்டு திவ்யாவையும் அதிதியையும் பார்த்து கொண்டிருந்த அதிரனின் தோள் மீது ஒரு கைப்பட, திரும்ப ஆதி தான் திவ்யாவை அடையாளம் கண்டுகொண்டான்.

 

 

தாமரை, “என்ன வேதா அந்த பொண்ணுக்குதான் லேட் ஆச்சுன்னு சொல்லுதே. நீ என்னா என்னென்னமோ பேசிட்டு இருக்க.என்னாச்சு டா உனக்கும் அந்த பொண்ணுக்கும் ஏதாச்சும் பிரச்சினையா?” என்று அவளை கேட்டவர் ஏதேர்ச்சியாய் அதிரனின் புறம் திரும்ப, அவனின் நிலை அவருக்கு ஏதோ உணர்த்த, கணவரை அழைத்து மகனை காட்ட, அவருமே அதிர்ந்து போனார் மகனின் நடவடிக்கையில்.

 

 

 

இளையமகன் மூத்தவனின் தோளை பிடித்து ஆறுதல் கூறிக்கொண்டிருக்க, மூத்தவனோ கண்ணீர் வழிய அவனின் உயிரானவர்களை பார்த்துக் கொண்டு நின்று இருந்தான்.

 

 

அரவிந்தன், “நாம வீட்டுக்கு போய் பேசலாம், இங்க வேண்டாம். அங்கங்க நிக்குறவங்க எல்லாரும் நம்மளதான் பாக்குறாங்க” என்று கூறினான். அவனுக்கு வேதா சீரியசாய் பேசும்போதே ஏதோ விசயம் இருப்பதாக தோன்றியது.

 

 

அருகில் வேதா, செழியன் வீடு இருக்க, அடுத்த பத்தாவது நிமிடம் அனைவருமே வீட்டில் இருந்தனர்.

 

 

அதிதியை அவர்கள் பேச ஆரம்பிக்கும் போதே தன்வி அழைத்து கொண்டு சென்றிருந்தாள். அனைவரும் மௌனமாக இருக்க, அதிரனுக்குள் பல கேள்விகள், போராட்டங்கள். உள்ளுக்குள் துடித்துக் கொண்டிருந்தான்.

 

 

திவ்யாதான், “போதுமே வேதா விட்ரலாம். உனக்கு தெரிஞ்ச உண்மை அப்படியே போகட்டும் மறந்துரு. நான் கிளம்புறேன்” என்று கிளம்ப அவளோ, “அப்போ வாழ்க்கை முழுசும் உங்க ரெண்டு பேர் பிரிவுக்கு காரணம் நான்தான்கிற குற்ற உணர்ச்சியிலேயே வாழனும் அப்படிதானே” என்ற குரலில் முன்னேறியவள் அப்படியே நிற்க, அனைவரும் அதிர்ந்து போய் வேதாவை பார்த்தவர்களுக்கு அதிரனை காண அனைத்துமே புரிந்து போனது.

 

திவ்யாவோ, “வேணாம் வேதா. உனக்கு எதுக்கு குற்றவுணர்ச்சி. இது நானும் தீரன்.. சாரி அதிரனும் சேர்ந்து எடுத்த முடிவு. இதுக்கு நீ எந்த விதத்திலும் காரணம் இல்லடா. எங்களோட பிரிவு நாங்க விருப்பப்பட்டு நடந்தது. அதுல நீ உன்னை பிளேம் பண்ணிக்க வேண்டாம்” என்று கூறினாள்.

 

அவளோ, “அப்போ உங்களோட பிரிவுக்கு காரணம் என்ன சொல்லுங்க? உங்க பக்கம் எந்த எதிர்ப்புமே இல்லை. எங்க அப்பா அம்மாக்கு அண்ணாக்கு இப்படி ஒரு காதல் இருந்ததே தெரியாது. உங்க காதல் தெரிஞ்ச ஒரே ஆள் ஆதி மட்டும்தான்” என்று கூற, அன்பரசனின் பார்வை ஆதியை பார்க்க, அவனோ தமையனை ஆறுதல்படுத்துவதிலே குறியாக இருந்தானே தவிர யாரையும் கவனிக்கவில்லை.

 

 

 

தாமரை, “நீ என்ன வேதா சொல்லுற.. அப்போ இந்த பொண்ணும் அதிரனும்” என்று கேட்க, அவளோ, “இவங்களும் அதிரனும் காலேஜ்ல ஒண்ணா படிச்சவங்க மா. அவங்க பேமிலிக்கும் அவங்க லவ் தெரியும். கரெக்டா காலேஜ் லாஸ்ட்டே அன்னைக்கு இவங்களோட பேரண்ட்ஸ்கு ஆக்சிடெண்ட் ஆகிடுச்சு. இவங்க அம்மா அந்த ஆக்சிடெண்ட்ல இறந்துட்டாங்க. இவங்க அப்பா கடைசி ஆசையா அதி அண்ணாவை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்ருக்கார். அவரோட கடைசி நிமிடத்துல அவர் கண்ணு முன்னாடி ரெண்டு பேரும் கல்யாணமும் பண்ணிக்கிட்டாங்க. அன்னிக்கே அவர் இறந்தும் போய்ட்டார்.

 

 

அப்போதான் காலேஜ் முடிச்சிட்டு உடனே கல்யாணம் பண்ணிட்டேன்னு உங்க கிட்ட சொல்ல முடியாம அந்த விஷயத்தை தள்ளி போட்ருக்காங்க. அப்புறம் நம்ம ஆபீஸ்ல ஜாயின் பண்ணி ஒர்க் நல்லா போய்ட்டு இருந்தப்போதான் உங்ககிட்ட இவங்களை பத்தி சொல்ல நினச்சு வீட்டுக்கு வந்தப்போ நான் அந்த ஆக்சிடெண்ட்ல இறந்துட்டேனு நியூஸ் வந்துருக்கு. அப்போ உங்களையும் ஹாண்ட்ல் பண்ண முடியாம இவங்களையும் சரியாம பாத்துக்க முடியாம போனதால இவங்ககிட்ட ரெண்டு பேரும் இப்போதைக்கு பிரிஞ்சிருவோம் எனக்கு என்னோட குடும்பம்தான் முக்கியம்னு சொல்லிட்டு அண்ணா அங்க இருந்து உங்களோட வந்துட்டான்” என்று அவள் கூறி முடிக்க, அன்பரசனுக்கும் தாமரைக்கும் மகன் தங்களுக்கு தெரியாமல் திருமணம் செய்துகொண்டான் என்ற கோவம் இருந்தாலும் தங்களுக்காக மனைவியையே பிரிந்து வருமளவிற்கு தங்களை நேசித்துள்ளானே என்று தோன்றியது.

 

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்