Loading

நினைவுகள் -14

“அக்கா பேரு என்ன ராது? என்னாச்சு அவங்களுக்கு?”

” அவந்திகா! அது தான் அக்கா பேர். நான் டென்த் படிச்சிட்டுருந்தேன். அக்கா காலேஜ் செகண்டியர். எனக்கு லீவ் விட்டுட்டா போதும், அக்காவை கூப்பிட்டுக்கிட்டு பெரிய கோவிலுக்கு போயிடுவேன்.

அந்த கோவிலில் உள்ள இண்டு, இடுக்கு எல்லாமே அத்துப்படி. எப்ப எங்களுக்கு போரடிக்குதோ கோவிலுக்கு போயிடுவோம். அங்க இருக்கவங்களுக்கு எங்களைத் தெரியாமலே இருக்காது‌.

ஐப்பசி சதயத் திருவிழாவுக்கு போகணும்னு ப்ளான் பண்ணிட்டு இருந்தோம். ராஜராஜ சோழன்னா எங்களுக்கு அப்படி ஒரு க்ரேஸ். ஸ்கூல், காலேஜ் எல்லாம் லீவ்.

அன்னைக்கு கிளம்பும் போது, திடீரென்று எனக்கு போக முடியாத சூழ்நிலை. அவ மட்டும் கிளம்ப, அவ போகக் கூடாதுன்னு நான் அழுது ரகளைப் பண்ணேன். அக்கா கேட்கலை.

கிளம்பிப் போனவ திரும்ப வரலை. அங்கேப் போனால் நேரங்காலம் பார்க்காமல் நாங்க இருந்துட்டு தான் வருவோம்.

அன்னைக்கு அவ வர நேரம் ஆயிடுச்சு. எப்பயும் போல வந்துடுவா என்று அலட்சியமாக இருந்துட்டோம்.

 அப்புறம் பார்த்தா அவளுக்கு ஆக்சிடென்ட் ஆகியிருந்திருக்கு. பக்கத்துல இருந்த ஹாஸ்பிடல்லுக்கு கூட்டிட்டு போயிட்டாங்க.

அங்கே ஃபர்ஸ்ட் எய்ட் மட்டும் செய்துட்டு, பணம் கட்டறதுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்திருக்காங்க. எங்களுக்கு தகவல் தெரிஞ்சு நாங்க அந்த ஆஸ்பத்திரிக்கு போறதுக்குள்ள அக்காவுக்கு கிரிட்டிக்கல் ஆயிடுச்சு. கையில காசும் இல்லை. நாங்க எப்படியும் கட்டிடுவோம் என்று சொன்னதுக்கு அந்த மேனேஜ்மென்ட் ஏத்துக்கலை.

என்ன செய்யறதுன்னு தெரியாமல் அம்மாவும், அப்பாவும் தெகைச்சுப் போய் நின்னாங்க.

அம்மா தான் வீட்டிலிருக்கும் நகையை எடுத்துட்டு வரச் சொன்னாங்க.

உங்க கல்யாணத்துக்காக வாங்குன நகை இப்போ எதுக்கு பயன்படுது என்று அழுதுட்டே சொன்னாங்க.

 அப்பா தான் இப்போ வாயை மூடப் போறீயா என்னன்னு திட்டிட்டு, போய் எடுத்து வந்தார்.

பட் கடவுளுக்கு கண்ணில்லை அவளை எடுத்துக்கிட்டு, எங்களை கொஞ்சம் கொஞ்சமாக சாகடிக்கிறாரு.

அன்னைக்கு மட்டும் நான் அக்காக் கூட போயிருந்தா, இல்லை நான் போகக்கூடாது என்று அழுததற்காக அவப் போகாமல் இருந்திருந்தா, இல்லை பொண்ணை காணுமே என்று எங்க அப்பா, அம்மா ஃபோன் பண்ணியிருந்தா, இப்படி எத்தனையோ இருந்திருந்தால், அக்கா உயிரோட இருந்திருப்பான்னு தோணும்.

எனக்கே இப்படி தோணும் போது, எங்க அம்மாவை கேட்கவா வேண்டும்.

 அன்னையிலிருந்து நான் ஸ்கூலுக்கு போனாலும், எங்க போனாலும் திரும்பி வரும் வரை வாசலிலே நின்னுட்டே இருப்பாங்க. டியூஷன், எக்ஸ்ட்ரா கிளாஸ் எதுக்கு போகணும்னு சொன்னாலும் அப்பாவை தான் தொந்தரவு செய்வார்.

 அவரும் அம்மாவுடைய மனநிம்மதிக்காக‍, அவருடைய உடல் நிலையைக் கூட பொருட்படுத்தாமல் எப்போ, எங்க போகணும்னாலும் அழைச்சிட்டு போவார். அதுக்காகவே எந்த ஃப்ரெண்ட்ஸ் வீட்டுக்கும் போக மாட்டேன். அனாவசியமாக எங்கேயும் போகணும் நினைக்க மாட்டேன்.

ரொம்ப நாள் வரை பெரிய கோவிலுக்கு போகவில்லை. அங்கப் போனா அக்கா நியாபகம் வந்துடும். அப்புறம் வீட்டிலேயே இருக்கிறது, ரொம்ப இரிட்டேட்டிங்கா இருக்க, அதுக்கப்புறம் கோவிலுக்கு போக ஆரம்பிச்சேன்.

நானும், எங்கப்பாவும் அம்மா போக்குக்கே போயிட்டு இருப்போம். நான் இரண்டு விஷயத்துக்காக தான் அவங்களை எதிர்த்துப் பேசியிருக்கேன்.

ஒன்னு கோவிலுக்கு போகறது, இன்னொன்னு என்னுடைய கனவை நிறைவேற்றுவதற்காக இங்க வந்தது.

கனவுன்னா சின்ன வயசிலருந்து டாக்டராகணும்னு இல்லை.

 எங்க அக்காவுக்கு ஆக்சிடென்ட் ஆனதிலிருந்து தான் ஒரு வெறி. எப்படியாவது டாக்டராகணும். நம்மாலான உதவிகளை தேவைப்படுற மக்களுக்கு செய்யணும்‌. அப்படின்னு நினைச்சிட்டு, அந்த உத்வேகத்தில் இவ்வளவு தூரம் வந்துட்டேன்.

 ஆனா அங்க இருந்துட்டும் எங்க அம்மா புரோடெக்ட் பண்ணும் போது, என்னுடைய இயல்பு ரொம்ப பாதிக்கப்படுது. ஆனால் அதைத் தடுக்கவும் முடியாது.

எனக்குள்ளே வச்சிக்கிட்டு மூச்சு முட்டுது. இப்போ உன் கிட்ட சொன்னதும் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கு. ‘என்று அவளது கதையை ராதிகாக் கூறி முடிக்க.

” என்ன சொல்றதுன்னே தெரியலை ராது. அம்மாவ நினைச்சாலும் பாவமா தான் இருக்கு. அவங்க மனசுல குற்ற உணர்ச்சி இருக்கும். அவங்களை நீங்க சரியா கவனிக்கலையோ தோணுது. இப்படியே விட்டா டிஃப்ரஷன்ல கொண்டு போய் விட்டுடும். சைக்யாட்ரிஸ்ட்டுக் கிட்டே கவுன்சிலிங் போனால் ஃபீல் பெட்டர்.

“நான் சொல்லிப் பார்த்துட்டேன் கேட்கலை.” என்று ராதிகா பெருமூச்சு விட.

” ஓகே ராது. நீ கவலைப்படாதே. நான் அம்மாக்கிட்ட பேசுறேன். ” என்று அனன்யா ஆறுதல் அளித்தாள்.

அவளது ஆறுதலான பேச்சில் நிம்மதியானாள் ராதிகா.

” நான் பார்த்துக் கொள்கிறேன்.” என்று அனன்யா வாய் வார்த்தையாக சொல்லவில்லை. அவள் சொன்ன மாதிரியே ஹாஸ்டலுக்கு சென்றவுடன், சுந்தரிக்கு அழைத்து விட்டாள்.

” ஆன்ட்டி.” என அழைத்தாள்.

இந்த கொஞ்ச நாளில் அனன்யா, சுந்தரியுடன் நன்கு பழகி விட்டிருந்தாள்…

அவரும் ,” எப்படிடா இருக்க அனுமா? ஒன்னும் பிரச்சினை இல்லையே. நல்லாதான இருக்கீங்க?” என பதறி விட்டார்.

” நாங்க நல்லா இருக்கோம். வீட்டுக்கு வந்தாச்சு. உங்கக் கிட்ட பேசணும். நீங்க ஃப்ரீயா இருக்கீங்களா ஆன்ட்டி.”

” சொல்லுமா…” என்றவர் யோசனையோடு தன் மகளை தேட…

” அவ கேண்டீன் போயிருக்கா ஆன்ட்டி.”

” சரி சொல்லு மா. எதுக்கு ஃபோன் போட்ட…”

” அது வந்து ஆன்ட்டி. நான் சொல்றதைக் கேட்டு எதுவும் தப்பா நினைச்சுக்காதீங்க. நீங்க இப்படி ரெஸ்ட்லஸ்ஸா இருக்கிறதைப் பார்த்து, ராதிகாவும், அங்கிளும் கவலைப்படறாங்க. என்ன உங்க பொண்ணா நெனச்சுக்கோங்க. ராதிகா அக்கா, நம்மக் கூட தான் இருக்காங்கன்னு நினைச்சுக்கோங்க. நம்ம கையில எதுவும் கிடையாது. சாவு வரணும் இருந்தா, வீட்ல இருந்தாக் கூட வரும். நீங்க வருத்தப்பட்டு, அவங்களையும் ஹர்ட் பண்ணுறீங்க.” என.

” நானும் மறக்கணும் தான் நினைக்கிறேன் அனுமா. ஆனால் என்னால முடியல.” என்று சுந்தரி அழ.

“ஆன்ட்டி! ப்ளீஸ் அழாதீங்க. நான் சொல்றது உங்க நல்லதுக்காகத் தான் ஆன்ட்டி. எங்க அங்கிள் கிட்ட சொல்லி, தஞ்சாவூர் நல்ல சைக்கியாட்ரிஸ்ட் யாருன்னு விசாரிக்க சொல்லுறேன். நீங்க ஒரு ரெண்டு, மூணு கவுன்சிலிங் மட்டும் போங்க. சீக்கிரம் உங்களுக்கு க்யூர் ஆகிவிடும். நீங்க அதுக்கு அப்புறம் வேற விஷயத்தில் கவனம் செலுத்துங்க. உங்களுக்கு எதுல இன்ட்ரஸ்ட் இருக்கோ, அதுல கான்சென்ட்ரேஷன் செலுத்துங்க. அப்புறம் எல்லாமே சரியாயிடும். இந்த ஒரு முறை எங்களுக்காக ஒத்துழைப்புக் கொடுங்க. என்னை உங்க மகளா நினைச்சுக்கோங்க.” என.

அனன்யாவின் பேச்சால், அவரது மகள் அவந்திகாவின் முகம் கண்ணுக்குள் வந்து போக. இதுநாள் வரை ராதிகா சொன்னதற்கெல்லாம், மறுத்தவர் அனன்யாவின் பேச்சைக் கேட்டு தலையசைத்தார்.

அனன்யா இங்கிருந்துக் கொண்டே, அவளது மாமாவின் மூலம் தஞ்சாவூரின் சிறந்த சைக்கியாட்ரிஸ்ட்டிடம் அப்பாயின்மென்ட் வாங்கினாள்.

சுந்தரியும் ஒழுங்காகக் கவுன்சிலிங்குக்குச் சென்றாள். கொஞ்சம் கொஞ்சமாக அந்த பயம் மறைய ஆரம்பித்தது.

 அதே நேரத்தில் அவர்கள் வீட்டு மாடியில் குடியிருந்த ஸ்வேதா, மாசமாக இருக்க. அவளை சுந்தரி தாயாக இருந்து கவனித்துக் கொண்டார்.

அனன்யா, ராதிகாவின் அம்மாவை மட்டும் மாற்றவில்லை. ராதிகாவையும் தான் மாற்றினாள். ராதிகாவும், அவளது தயக்கம், தடுமாற்றம் எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக விட்டாள். அவளது இயல்பு அனன்யாவால் மீண்டும், மீட்டெடுக்கப்பட்டது.

காலம் வேகமாக ஓட… அவர்கள் பிலிப்பைன்ஸ் வந்து ஒரு வருடம் முடிந்து இருந்தது.

  ஒருமுறை அனன்யா இந்தியாவிற்கு சென்று வந்தாள். அவர்கள் வீட்டிலிருந்து இரண்டு, மூன்று முறை எல்லோரும் வந்து, அவள் ஏற்கனவே தங்கியிருந்த அந்த ப்ளாட்டுக்கு அவளை வர வைத்து பார்த்துச் சென்றனர்.

நாளையிலிருந்து அடுத்த வருடம் படிப்பு ஸ்டார்ட்டாகுது. இந்தியாவிலிருந்து அனன்யா ஃபேமிலி வருவதாக சொல்லியிருக்க. இருவரும் இன்று ஷாப்பிங்குக்கு வந்திருந்தனர்.

டேவோ சிட்டி.

பிலிப்பைன்ஸ்

ஜீ மால்… ஃபிப்த் ஃப்ளோர் ரூப் கார்டன்.

 அந்த மாலையே ஒரு கலக்கு கலக்கி விட்டு, அக்கடா என்று அனன்யாவும், ராதிகாவும் அமர்ந்து இருந்தனர்.

” ஏய் அனு! அவ்வளவு தானே . பர்ச்சேஸ் ஓவர் தானே. ஐயம் வெரி டயர்ட் .” என்று கூறியவாறே தனக்கு முன்னால் இருந்த மேங்கோ ஃப்ளோட்டை அருந்தினாள் ராதிகா.

” ராது செல்லோ… இன்னும் கொஞ்சம் பர்சேஸ் பண்ணணும். ஹாஃப்னர்ல கிளம்பிடலாம். உனக்கு நல்ல இந்தியன் ரெஸ்ட்ரான்ட்ல லஞ்ச் வாங்கித் தரேன்” என்று அனன்யா டீல் பேசினாள்.

” ஹேய் அனு! என்னால எல்லாம் முடியாது.நான் ஹாஸ்டல்லயே பார்த்துக்கிறேன். அங்கேயும் இந்தியன் ஃபுட் தான். அதனால நீ ஒன்னும் வாங்கித் தர தேவையில்லை.”

” ப்ளீச் செல்லோ. வேணும்னா நான் உனக்கு ஈவினிங் பானிபூரி வாங்கித் தரேன். “ என்றவளோ மனதிற்குள்,’பானிப்பூரியை லஞ்சமா கொடுத்து இவ ஒருத்தியைத் தான் கரெக்ட் பண்ண முடியும். எல்லாம் என் நேரம்.’என்று புலம்பினாள் அனன்யா.

இன்று…

ஆதியோ விஸ்வரூபன் அடித்ததைக் கூட பெரியதாக நினைக்கவில்லை. அவனை கோபப்படுத்தியே அவனுக்கு வெற்றியை தர புன்னகையுடன் நகர்ந்தான்.

விஸ்வரூபனோ டென்ஷனோடு காரை ஓட்டிக் கொண்டிருந்தான். ஏற்கனவே ஹாஸ்பிடலில் ஒரு கடினமான ஆஃப்ரேஷன். அதை முடித்து விட்டு வந்தவன், ரிலாக்ஸிற்காக, பக்கத்திலுள்ள காஃபி ஷாப்பிற்கு வந்திருந்தான்.

 அங்கு வந்தவனுக்கு இன்னும் பிபி ஏறியது தான் மிச்சம்.வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று நினைத்தாலே மனம் நிலையில்லாமல் தவித்தது. சரி தான் என்று பீச்சிற்கு சென்றவன் கடலை வெறித்துக் கொண்டு இருந்தான்.

கண்களை மூடினால், ஆதியை தாங்கிப் பிடித்த ராதிகாவே கண்முன்னே வந்து சென்றாள். சும்மாவே பீச்சிற்கு வந்தால் அவளது நியாபகம் தான் அலைமோதும்.

அவளோடு இந்த பீச்சில் டைம் ஸ்பென்ட் பண்ணது தான் ஞாபகத்திற்கு வந்தது.

பழசையெல்லாம் அசைப்போட்டவன், மணியைப் பார்க்க பத்தை தாண்டியிருந்தது‌.

அங்கிருந்து கிளம்பினவன்,வீட்டிற்கு வர… வீட்டில் அனைவரும் அவனுக்காகக் காத்திருந்தனர்.

 எல்லோரும் உறங்கி இருப்பார்கள் என்று எண்ணியிருந்தான்.

சோஃபாவில் ஆளுக்கொரு மூலையில் அமர்ந்து இருந்தனர்.

 எல்லோரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு தன்போக்கில் மாடிக்கு ஏற, கிருஷ்ணன் தான் பேச்சை ஆரம்பித்தார்.

” ஏன் தம்பி. நான் தான் இந்த பிரச்சினையைப் பார்த்துக்கிறேன் என்று சொன்னேனே. அப்புறம் ஏன் அவன் கூட பொது இடத்தில் சண்டை போட்டுட்டு இருக்க. இப்ப பாரு உன்னால அந்தப் பொண்ணோட பேரையும் இழுத்து விட்டுருக்காங்க.”என.

இதுவரை தந்தை பேசியதைக் கேட்டு, ஒன்னும் கவலைப்படாமல், அலட்சியமாக இருந்தவன், கடைசியாக அவர் கூறியதைக் கேட்டு,” என்னப்பா சொல்றீங்க புரியல. ஃபர்ஸ்ட் நான் அவனை அடிச்சது உங்களுக்கு எப்படி தெரியும்.” என்று வினவ.

” இங்கே பாரு. நீ அங்க சண்டை போட்டு இருக்கிறது யாரோ வீடியோ எடுத்து, பேஸ்புக்ல, அப்புறம் நம்ம காலேஜ் வாட்ஸ்அப் குரூப்ல எல்லாம் ஷேர் பண்ணியிருக்காங்க‌. அதுவும் சும்மா ஒன்னும் பண்ணலை. ஒரு பொண்ணுக்காக காலேஜ் ஸ்டூடண்டும், ஒரு டாக்டரும் சண்டை என்று காஃப்ஷெனோட ஷேர் பண்ணியிருக்காங்க.” என கிருஷ்ணமூர்த்தி கூற…

அந்த வீடியோவைப் பார்த்தவன் திகைத்து நின்றான்.

 தொடரும்…

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்