Loading

விடியும் முன்..!

 

அத்தியாயம் 25

 

நேரம் மாலை மூன்று மணி ஐம்பது நிமிடம்.

 

பையனின் அமர்த்தலான கேள்வியை உதட்டுச் சுளிப்புடன் கடந்து விட்டவளுக்கு நேரத்தை பார்க்கையில் ஏதோ ஒரு கலக்கம்.

 

இன்னும் பத்து நிமிடங்களில் ரயில் ரணதீரபுரத்தை அடைந்து விடும் என்கின்ற எண்ணமே அவளுக்கு ஒரு விதமான மனநிலையை கொடுக்க முகம் சுருங்கிற்று.

 

திருமணத்திற்கு பின் அவனை பாராது ஒரு நாளைக் கூட அவள் கடந்ததில்லை.ஏதாவது காரணத்தை பிடித்துக் கொண்டு அவன் தங்கியிருக்கும் இடத்திற்கு சென்றாவது பார்த்து விடுவாள்.ஆனால்,இம்முறை தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு பார்க்க முடியாதே.

 

காலையில் வரும் சமயமே பையனை காண முடியாது என்கின்ற வருத்தம் மேலோங்கி இருந்தாலும் வெகு பியரத்தனப்பட்டு மனதை சமப்படுத்தியவளுக்கு பையனின் இத்தனை நேரம் பயணித்த பின் அந்த பிரிவை அத்தனை எளிதாய் ஏற்க முடியவில்லை.

 

ரிஷியின் பார்வை அவளின் யோசனையான முகத்தை தொட்டு மீள அவளுக்குள் ஓடும் எண்ணங்கள் அவனுக்குப் புரிந்தன.

 

“என்ன யோசன..?” அவன் மென்மையாய் கேட்க இருந்த மனநிலையில் வாயாடும் எண்ணம் இல்லை,பெண்ணவளுக்கு.

 

“இல்ல..நீங்க ஏதோ கேஸ் விஷயமா மூணு மாசம் நார்த் சைட் போறீங்கன்னு தெர்யும்..” குனிந்த தலையுடன் அவள் சொல்ல பையனின் கை முஷ்டி கோபத்தில் இறுகிற்று.

 

“யாரு சொன்னா..?” அவன் வார்த்தைகளிலேயே அப்படி ஒரு சூடு.அறையக் கூடாது என்று கைகளை பேன்ட் பாக்கெட்டில் விட்டுக் கொண்டவனின் செய்கையில் வெளிப்பட்டது,பையனின் கோபம்.

 

“எனக்குத் தெ..தெர்யும்..”எங்கோ பார்த்த படி சொன்னவளுக்கு பயத்தில் தொண்டைக்குழி ஏறி இறங்கியது.

 

சரிக்கு சமமாய் நின்று சண்டை போட்டாலும் சில விடயங்களில் அவனின் கோபத்தை கண்டு அதீத பயம் அவளுக்கு.

 

“ஊப்ப்ப்ப்..இட்ஸ் ஃபைன்ன்ன்ன்..யாரு சொல்லி இருப்பாங்கன்னு எனக்குத் தெர்யும்..இன்னிக்கு அடிக்கடி அற வாங்கிட்ட அது தான் பேசாம கைய கட்டிட்டு நிக்கறேன்..இல்லன்னா பல்லு பேந்துருக்கும்..” என்றும் கோபம் மட்டுமே கொப்பளிக்கும் குரலில் இன்று சரி நிகராய் தீவிரமும் இழையோடுவது புரிய அவள் மனதிலும் பல்வேறு யோசனைகள்.

 

இதுவரை அவனிடம் கண்டிராத தீவிரம் இந்த நொடிகளில் அவளைத் தாக்க அமைதி காப்பது தான் உசிதம் என்று உள்மனம் உரக்கக் கத்த பதில் சொல்லாமல் வெறுமனே செவிமடுத்து நின்றாள்.

அவளின் அமைதி இன்னுமே பையனை கோபப்படுத்தியது.

 

மனதுக்குள் திரண்டு வந்த மொத்த கோபமும் அவளின் மீது தற்சமயம் திரும்பியிருக்க தன்னைக் கட்டுப்படுத்த அரும்பாடு படவேண்டியிருந்தது,பையனுக்கு.

 

“இடஸ் ஃபைன்ன்ன்..நா உங்கிட்ட கொஞ்சம் பேசனும்..”

 

“…………..”

 

“வாய்ல என்ன துணியா வச்சு அடச்சு இருக்கு..? ஒருத்தன் பேசி கிட்டு இருக்கான்..நீ பாட்டுக்கு தரைல பொதயல் தேட்றியா..லுக் அட் மீ..”

 

“……………”

 

“மி…த்த்த்த்த்..ர ஸ்ரீஈஈஈ” அவனின் காட்டுக்கத்தலில் அவளுக்குள் அபாய மணி ஒலிக்க விழுக்கென நிமிர்ந்து பார்த்தவளுக்கு கால் மேல் கால் போட்டு தொடையில் தாளம் தட்டிய படி பையன் அமர்ந்திருந்த தோரணையே பயத்தை கிளப்ப இருந்த தைரியம் மொத்தமும் எங்கு ஓடிப் போய் ஒளிந்து கொண்டதென்று தெரியவில்லை.

 

“நா கேக்கற கேள்விக்கு எல்லாம் உண்மயான பதில சொல்லனும்..காட் இட்..?” பேசினான் என்பதை விட கர்ஜித்தான் என்பதே பொருத்தம்.அவன் குரலில் அப்படியொரு உஷ்ணம்.

 

பையனின் கோபத்தை பொருட்டாகவே கொள்ளாதவளுக்கு இந்த அவதாரம் முற்றிலும் புதிது.

 

“சொல்லுவல..”

 

“ம்ம்ம்ம்..”

 

“நீ என்ன புடிச்சி தான் கல்யாணம் பண்ணுனியா..?” நிதானமாய் பையன் கேட்க எதிர்ப்பார்த்திருந்த கேள்வி என்றாலும் உடனடியாய் பதில் சொல்ல முடியவில்லை,அவளால்.

 

“இன்னிக்கி நீ ரொம்ப டென்ஷன் படுத்திட்டு இருக்க..பதில் சொல்லு..” அவன் கேட்க இத்தனை நேரம் தன்னுடன் வம்பிழுத்தது இவன் தானா என்கின்ற திகைப்பு அவள் மனதில்.

 

ஒரு நொடியில் மொத்தமாய் மாறி கடித்துக் குதறிக் கொண்டிருக்கிறானே.

 

“இல்ல..” அழுத்தம் திருத்தமாய் சொன்னவளுக்கு தன் தைரியத்தின் உதிப்பிடம் தெரியவில்லை.

 

“இட்ஸ் ஃபைன்ன்ன்ன்..இப்போ தான் நிம்மதியா இருக்கு..” எள்ளலாய் மொழிந்தவனின் மனவோட்டங்கள் அவனுக்கும் அந்த கடவுளுக்கும் மட்டுமெ வெளிச்சம்.

 

“எனக்கு உன்ன புடிச்சிருக்குன்னு தோணி இருக்கா..?” பக்கமாய் விரல் நுழைத்து சிகையை பின்னே தள்ளிய படி அவன் கேட்க அவள் மனதில் குழப்பம்.

 

தன் மீது அவனுக்கு இருக்கும் அக்கறையை உணர்ந்து இருக்கிறாள்.தன்னுடம் மட்டும் தான் அவன் வம்பிழுத்து சண்டை போடுவதும் அவளுக்குத் தெரியும்.அவற்றையெல்லாம் வைத்து அவனுக்குத் தன் மீது பிடித்தம் இருக்கும் என்றெல்லாம் அவளால் யோசனை செய்திட முடியாது.

 

அவள் கடந்து வந்த பாதை அப்படி.தன் மீது யாருக்கும் பிடித்தம் வராது என்கின்ற மனநிலையில் இருப்பவளுக்கு பையன் தன்னை நேசிப்பான் என்கின்ற எண்ணம் தோன்ற வாய்ப்பேயில்லை.அந்த தாழ்வு மனப்பான்மை தானே திருமணமான பின்னும் அவன் மீதான அவளின் காதலை மறைக்க மூல முதற் காரணம்.

 

பையனுக்கு அவள் மீதான பிடித்தம் புரியாத சந்தர்ப்பத்தில் அவளுக்கு அவன் மனம் புரிந்திருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது முட்டாள் தனம் அல்லவா..?

 

“சம் டைம் தோணும்..ஆனா இப்போ இல்லன்னு தோணுது..” மறுப்பாய் தலையசைத்தவாறு அவள் சொல்ல நிம்மதிப் பெருமூச்சு அவனில் இருந்து.

 

“இங்க பாரு மித்ரஸ்ரீ..நா கல்யாணம் பண்றப்போ உன் கிட்ட சொன்னேன்..என்னால உன்ன இல்ல யாரயும் லவ் பண்ண முடியாது..சாந்தவி மட்டுந்தான் என் மனசு முழுக்க இருக்கான்னு..” இப்போது சொல்லும் போதே அவனுக்குப் புரிந்தது,அவனின் வார்த்தைகளில் உண்மை இல்லை என்பது.

 

“நாம அப்போவோ டைவோர்ஸ்கு அப்ளை பண்ணிருக்கோம்னு நியாபகம் இருக்கா..?” அழுத்தமாய் கேட்க பிரிவைப் பற்றி பேசிய பொழுது அவளுக்கும் கோபம் வந்து விட்டது.

 

திருமணம் முடிந்த சமயம் யோசியாது இருவரும் எடுத்த முடிவு அது.ஆனால்,நெருங்க நெருங்க விலகும் எண்ணம் இருவருக்குமே வந்ததில்லை.ஆனால்,இப்பொழுது பையனுக்கு பேசியாக வேண்டிய கட்டாயம்.

 

“ஆமா ஞாபகம் இருக்கு..”

 

“குட்..ஸோ நாம யோசிச்சு வச்சிருந்த மாதிரி டைவோர்ஸ் வாங்கிர்லாம்..அன்ட் வன் மோர் திங்..இப்ப மட்டுல்ல அடுத்த ஜென்மம்னு ஒன்னு எடுத்தாலும் என் மனசுல உனக்கு எடம் கெடயாது..காட் இட்..நா லைஃப்ல ரொம்ப வெறுக்குற ஒருத்தின்னா அது நீ தான்..உன்னால தான் நா சாந்தவிய எழந்து நிக்கறேன்..”

 

பையனவனின் கூற்றில் நிமிர்ந்து பார்த்தவளுக்கு சடுதியாய் விழிகள் கலங்கிற்று.பல பேர் பழி சொல்லியும் வலிக்காத மனது அவனின் வார்த்தைகளில் மொத்தமாய் நொருங்கிப் போனது.

 

தன்னை மீறி நிரம்பி வழிந்த விழிநீரை துடைத்து விட்டவளுக்கு இதழின் ஓரம் உச்சமாய் ஒரு விரக்திப் புன்னகை.

 

“ஆமா..நா தா அவள கொன்னேன் போதுமா..? எல்லாத்துக்கும் நா தா காரணம்..நா மட்டுந்தான காரணம்..நீங்களாச்சும் என்ன புரிஞ்சிப்பீங்கன்னு நெனச்சேன்..ஆனா நீங்களும் மத்தவங்க மாதிரி தான் நெனச்சு இருக்கீங்கல..” அவள் கத்தி முடிக்கவும் அவளிறங்க வேண்டிய இடம் வரவும் சரியாய் இருந்தது.ரயில் தரித்தது கூட அவளின் கவனத்தை கவரவில்லை.

 

“ஆமா..நீ பண்ண தப்புக்கு என்ன பண்ணலாம்னு சொல்ற..? ஒரு உசுரு.?ஒரு உசுர கொன்னுருக்க நீ..அவ்ளோ ஈசியா விட்ருவேனா உன்ன..? ஏதோ தாலி கட்டுன பாவத்துக்கு தான் பேசாம இருந்தேன்..இல்லன்னா பர்ஸ்டு ஜெயிலுக்குப் போறது நீ தான்..இடியட்ட்ட்ட்..” கையை மடக்கி ஓங்கி இருக்கையில் குத்தியவனின் செயலில் அவள் மனம் இறுகியது.

 

இத்தனைக்கும் பையனின் வார்த்தைகளை அவளால் நம்ப முடியவில்லை.அந்த வார்த்தைகள் பொய் எனத் தோன்றிற்று.அவன் விழிகளில் பொய் இருக்கிறாதா என விழி சுழற்றி தேடியவளுக்கு உணர்வு துடைத்த பாவம் மட்டுமே காணக் கிடைப்பதாய்.

 

“இட்ஸ் ஃபைன்ன்ன்..எங்கப்பா சொன்ன ஒரே ஒரு காரணத்துக்காக தான் உன் கழுத்துல தாலி கட்டுனேன்..அந்த எடத்துல வேறெந்த பொண்ணு இருந்தாலும் அதத் தான் பண்ணி இருப்பேன்..ஸோ உங்ங வீட்ல ஏற்பாடு பண்ணி இருக்கற நிச்சயத்த கேன்சல் பண்ணு..டைவோர்ஸ் பண்ணப் போறவங்களுக்கு எதுக்கு நிச்சயம்..?” அவன் பேச பயம் மறைந்து கோபம் வந்து விட்டது,அவளுக்கு.கண் மண் தெரியாத கோபம்.இல்லாத தைரியத்தையும் கொண்டு சேர்க்கும் கோபம்.

 

“ஆமா அதுன்னா சரி தான்..ஆனா என் எடத்துல வேற யாரு இருந்தாலும் நீங்க கட்ற தாலிய வாய மூடிட்டு வாங்கி இருக்க மாட்டா..நா தா உங்க மூஞ்ச பாத்து வாங்கி கிட்டேன்..அப்போவே தாலி கட்ட வந்த கைய முறிச்சு அடுப்புல போட்டு இருக்கனும்..”

 

“அடுப்புல போடனுமா..? இட்ஸ் ஃபைன்ன்ன்ன்ன்..”

 

“ஸ்பீக்கர் அவுட் இல்ல தான..அடுப்புல தா போடனும்..கை கால மொத்தமா முறிச்சு போடனும்..”

 

“இட்ஸ் ஃபைன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்..”

 

“ஆ ஊன்னா..இட்ஸ் ஃபைன்..எய்ட் நைன்னு…கெத்தா சொல்றதுன்னு நெனச்சிகிட்டு இருக்கீங்களா..கருமாந்துரமான டயலாக்..கேக்கவே சகிக்கல..கொஞ்சம் மாத்தி ட்ரை பண்ணுங்க..பெட்டரா இருக்கும்..” எந்த குருட்டு தைரியத்தில் வாயாடுகிறாள் என்று அவளுக்கே தெரியாது இருக்கும்.

 

“ஓவரா பேசாவ மித்ரஸ்ரீ..அடுத்தது என்ன பண்ணுவேன்னு சொல்லிட்டு இருக்க மாட்டேன்..”

 

“இப்ப மட்டும் எல்லாத்தயும் சொல்லிட்டு தான் பண்ணி கிழிக்கறீங்க..சப்பு சப்புன்னு அறைறதும்..காதத் திருகுறதும்..ஒரு கிறுக்கு மாதிரி நடந்துகிறீங்க..” அவள் கத்த சட்டைக் காலரை மடித்து விட்டு அவளை நெருங்கிட குஷியாகியது அவளுக்கு.

 

அதற்கு தானே இத்தனை பேச்சும்.அவளருகே நெருங்கி வந்து அவளின் முகம் பார்க்க மொத்த கோபத்தையும் திரட்டி ஓங்கி ஒரு அறை அவனின் கன்னத்தில்.

பையன் சுதாரிக்கும் முன்னமே அடுத்த அறை.

 

ஒரு நொடி அவனின் அதிர அதற்குள் பைகளை எடுத்துக் கொண்டு அவள் ஓடியிருக்க அவளைத் துரத்தத் தோன்றாது தளர்ந்து அமர்ந்தான்,பையனவன்.

 

●●●●●●●

 

அர்ஜுனின் கேள்வியின் பின் நீண்டதொரு மௌனம் அவ்விடத்தில்.

 

அவனின் மன எண்ணம் யாருக்கும் புரிவதாய் இல்லை.இறுக்கமாய் இருந்த அவனின் முகம் அந்த நொடிகளில் பல்வேறு விதமான உணர்வுகளை பிரதிபலித்துக் கொண்டிருந்தது.

 

அர்ஜுனுக்கு மனம் ஒருநிலையில் இல்லை.என்னவென்றாலும் அவன் நேசித்த பெண் ஆயிற்றே,இந்த பவித்ரா.

 

ஆழப்பதிந்த முதல் காதல்.மறக்க முடியாத ஒரு தலைக் காதல்.அதன் வடுக்கள் மனதில் தேங்கி மனம் இன்னும் வலித்தது.

 

கண்களை மூடிக் கொண்டு இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டவனுக்கு பவித்ராவின் குறும்புகளும் அவளின் புன்னகை முகமும் வந்து போனது,அனுமதி கேளாமலே.

 

கடினப்பட்டு நினைவுகளை ஒதுக்கித் தள்ளியவன் விழிகளை திறக்க தோன்றியிருந்த சிவப்பு சொன்னது,அவனின் கோபத்தின் அளவை.

 

அப்படியே எழுந்து கதிரையை இழுத்து எடுத்துக் கொண்டு வினோத்தின் அருகில் வர அவனுக்கெ சர்வமும் ஆட்டம் கண்டது.

 

அவன் முன்னே வந்து நின்ற ஆழ்ந்ததோர் பார்வையை முன்னிருப்பவனின் முகத்தில் படரவிட அந்த பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள்.

 

கதிரையில் மேல் விளிம்பில் தாளம் தட்டிய படி நின்றிருந்தாலும் பார்வை வினோத்தை விட்டு நகரவில்லை.

 

என்ன கேட்கப் போகிறானோ..?

என்ன செய்யப் போகிறானோ..?

எக்கச்சக்கமாய் பயத்தின் விதைகள் மனதில் விழுந்து முளைக்க கலக்கமாய் நிமிர்ந்து பார்க்க குரலைச் செருமினான்,அர்ஜுன்.

 

“பவித்ரா எப்டி எறந்தா..?”

 

“தெரில..”

 

“ஓஹ்..தெரியாது உனக்கு..?”

 

“ம்ஹும் தெரியாது..”

 

“நம்பறேன்..நம்பறேன் நீ சொல்றத நம்பறேன்..” சாந்தமாக அவன் சொல்ல அவனை விழி விரித்து நோக்கினான்,வினோத்.

 

வார்த்தைகளில் மட்டுமே கோபம்.முகத்தொனியிலும் விழிமொழியிலும் கொலைவெறி.

 

“ம்ம்..பவித்ரா தற்கொல பண்ணிகிட்டதா உனக்கு யாரு சொன்னாங்க..?”

 

“வாசு சார்..”

 

“ம்ம்..வாசுக்கு எப்டி தெர்யும்..?”

 

“அது எனக்கு தெரியாதே..” கூறியவனோ கையை விரிக்க விரிந்த விரல்களை பற்றி மென்மையாய் தடவினான்,அர்ஜுன்.

 

அவன் செய்கையை பயத்துடன் பார்த்திருந்தவனைக் கண்டு இதழ் பிரியாமல் புன்னகைத்தவனோ வெறி கொண்டவன் போல் விரல்களை பின்னே வளைக்க வலியில் உயிர் போனது,வினோத்துக்கு.

 

“விடுங்க சார்..”

 

“……………….”

 

“விடுங்க வலிக்கிது..”

 

“…………..”

 

“ப்ளீஸ் சார் விடுங்க..சத்தியமா எனக்கு பவித்ரா ஆஆஆஆ..பவித்ரா கொலய பத்தி எதுவும் தெரியாது..” அவனின் அலறலின் அரவத்தில் செவிப்பறை அதிர்ந்தாலும் அசராதிருந்தான்,அர்ஜுன்.

 

வினோத்தின் வலியை இரசித்திருந்தான்.ஒரு ஜீவனின் வலியை இரசிக்கும் அளவு அவனின் மனதை மாற்றி இருந்தான்,வாசுதேவன்.

 

வினோத் இன்னும் பதில் சொல்லாதிருக்க தன் பிடியை விடுவிக்காது இருந்த அர்ஜுனின் கோபம் எல்லை கடந்தது.

 

அமர்ந்திருந்தவனின் வயிற்றில் எட்டி உதைக்க வலியில் அவனைப் பார்த்திட அர்ஜுனின் முகத்தில் தனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லாதது போல ஒரு பாவனை.

அந்த நொடி அடி வாங்கியவனுக்கு புரிந்தது,உண்மையை அறிந்து கொள்ளாமல் விட மாட்டான் என்பது.

 

“இப்போவாவது உண்மய சொல்றியா..?” புருவமுயர்த்தி அவன் கேட்க ஆமோதிப்பாய் அசைந்தது,வினோத்தின் சிரசு.

 

“நீங்க ஜெயில்ல இருந்தப்போ நா இங்க இருக்கல்ல..வாசு சார் தான் ஏதோன்னு அன்னிக்கு உங்கள பத்தி சொன்னாரு..”

 

“ம்ம்ம்ம்..”

 

“நீங்க ஜெயில்ல இருந்தப்போ பவித்ரா தான் உங்கள வெளில எடுக்க போராடுனதாவும் சொன்னாரு..அப்றம் ரிஷி சார் உங்களுக்கு ஹெல்ப் பண்ணதாவும் பவித்ரா உங்கள பாக்க வந்ததாவும் சொன்னாரு..”

 

அவனுக்கும் நினைவில் இருக்கிறது.அன்று ஏதோ ஒரு முக்கியமான விடயத்தை சொல்ல பவித்ரா அவனைப் பார்க்க வந்ததும் அதன் பின் சொல்லாமல் கிளம்பிச் சென்றதும்.

 

“ம்ம் அப்றம்..”

 

“அப்றம் என்னாச்சுன்னு வாசு சார் சொல்லல..ஆனா பவித்ரா அப்பாவுக்கும் வாசு சார்கும் ஏதோ டீலிங் இருந்தது மட்டும் எனக்குத் தெர்யும்..” என்க யோசனையானது,அர்ஜுனின் முகம்.

 

●●●●●●●●●

 

தாய் இன்னும் கிளம்பாதிருக்க எட்டிப் பார்த்து விட்டு வந்த காவேரிக்கு தர்ஷினியின் சிந்தனை முகம் சிரிப்பைத் தந்தது.

 

இந்து தோழி ஆர்வமாய் இருப்பதாய் சொல்லியொருந்தாலும் இந்த அளவு ஆர்வத்தை அவள் தர்ஷினியிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.

 

“காவேரி..”

 

“அந்த வரம் கெடச்சவங்கள கண்டுபிடிக்கிறதுக்கு ஸ்பெஸிக்கா எந்த க்ளூவும் கெடயாதா..?”

 

“அப்டின்னு எதுவும் இல்ல தர்ஷினி..தேடித் தான் கண்டு புடிக்கனும்..”

 

“இந்த வரத்த பத்தி கண்டுபுடிக்கறதுக்குள்ள நமக்கு நெஞ்சு வலி வந்துரும் போல இருக்கே..”

 

“அதுன்னா உண்ம தான்..வடிவுக்கரசி அம்மா கிட்ட போய் கேட்டா எல்லாம் சரியாய்டும்..”

 

“அதுக்கு சான்ஸ் கெடச்சுதுன்னா கால்ல விழுந்தாவது நா கேட்ருவேன்..க்யூரியாசி்டி தாங்கல..ஆனா தேடத் தேட ரொம்ப கொழப்பமாவும் இருக்கு..அந்த கோயில்குள்ள போனாலாச்சும் ஏதாச்சும் தெரிய வரும்..ஆமா அந்த கோயில இவ்ளோ பெருசாவா ஆரம்பத்துல இருந்துச்சு..?”

 

“முன்னவெல்லாம் சினனக் கோயில் தானாம்..எங்கம்மா கல்யாணம் ஆகி வந்த புதுசுல தான் பெருசா கட்டி முடிச்சாங்களாம்..”

 

“ஊர் ஆளுங்க எல்லாரும் சேந்து பண்ணாங்களா..?”

 

“நெறய பேர் டொனேட் பண்ணி ஹெல்ப் பண்ணி இருக்காங்களாம்..மெய்னா ஹெல்ப் பண்ணது வடிவுக்கரசி அம்மாவோட பர்ஸ்ட் ஹஸ்பன்ட்..”

 

“அப்போ இப்போ அவங்க வேற கல்யாணம் பண்ணி இருக்காங்களா..?”

 

“ம்ம்..அவங்க அத்தப் பையன தான் ரீ மேரேஜ் பண்ணி இருக்காங்களாம்..அம்மா தான் சொன்னாங்க..”

 

“அவங்க பர்ஸ்ட் ஹஸ்பன்ட் பேர் என்னது..?”

 

“உங்க பேர் தான்..தர்ஷன்..”

 

“வாட் தர்ஷனா..?”

 

“ம்ம்..சிவதர்ஷன்..”

 

தொடரும்.

 

🖋️அதி..!

2024.04.21

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்